நான் : ஹலோ, சங்கர்
அவள் : நானதான் பேசறேன்,
நான் : சொல்லுங்க,
அவள் : உங்க கூட கொஞ்சம் பேசணும்,
நான் : பேசலாமே, இப்போ நான் Free (வெட்டி) தான்,
அவள் : போன்ல இல்லை, நேர்ல பேசணும்,
நான் : சரி, நீங்க என் இடத்துக்கு வாங்க,
அவள் : ஆபிஸ் விஷயம் இல்லை, கொஞ்சம் பர்சனலா பேசணும், வெளியில எங்கேயாவது பேசலாம்,
நான் : சரி, எங்கே பார்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க,
அவள் : பக்கத்து பில்டிங்ல இருக்கிற சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) பார்க்கலாம்,
நான் : ஆமா, என்ன விஷயம்னு சொல்லவே இல்லியே,
அவள் : இப்போதான் கேக்கணும்னு தோணிச்சா?
நான் : நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன் (நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க),
அவள் : நேர்லயே சொல்றேன்,
டொக் (ஒருகாலத்துல, நாங்கல்லாம் ராஜேஷ்குமார் விசிறிகள்)
மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,
நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,
அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?
நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,
அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க
நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,
அவள் : என்ன யூகங்கள்?
நான் : "நீங்க தானே பிரபல (!!!) பதிவர் சங்கர், உங்க பதிவுகள் (மொத்தமே பத்து தான்) எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உங்க விசிறி," அப்படின்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்,
அவள் : இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? அடுத்து என்ன.
நான் : "நேத்து நீங்க ஒரு புத்தகம் வச்சிருந்தீங்களே, அதை எனக்கு தர முடியுமா, ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை,"
அவள் : நீங்க நேத்து ஆபிஸ் வந்தீங்களா இல்லையான்னே எனக்கு தெரியாது, இதுல புத்தகத்த வேற கேக்குறாங்களா? அடுத்து,
நான் : "உங்க சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தானே, எங்க ஊரும் அதுதான், எங்க அப்பாவுக்கு உங்க அப்பாவ நல்ல தெரியுமாம், உங்கள வீட்டுக்கு கூட்டிவர சொன்னார்"
அவள் : எங்க அப்பா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னையில்தான் இதுல இதுவேறயா, அப்புறம்,
நான் : வேறென்ன, "உங்க நடை (!) உடை (!!) பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க மத்தவங்களோட பழகற விதம் என்ன உங்கள நோக்கி ஈர்க்குது (!!!), நீங்க ரொம்ப அழகா (!!) வேற இருக்கீங்க, மொத்ததுல உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
அவள் : இப்படீல்லாம் வேற நினைப்பிருக்கா, அப்புறம்,
நான் : வேற ஒண்ணும் இல்லீங்க, நீங்களே சொல்லிடுங்க, இதுல ஏதாவது ஒண்ணுதானே?
அவள் : ஒரு புண்ணாக்கும் இல்லை, ஒருவாரமா பதிவு எழுத விஷயம் கிடைக்காம மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கியே, அதுதான் இப்படி பேசணும்னு கூப்பிட்டா அதையே பில்ட்-அப் பண்ணி ஒரு பதிவா எழுதிரமாட்ட, அதுக்குதான்.
நன்றி
சங்கர்
டிஸ்கி
- இது கதை மாதிரி இல்லையே, நடந்த விஷயம் மாதிரி இருக்கேன்னு கேட்பவர்களுக்காக "கதை" என்ற லேபிளும், எனக்கு நடந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியபடரவங்களுக்காக "சம்பவம்" என்ற லேபிளும் தரப்பட்டுள்ளது,
- பேர் போடாம அவள் அவள்னே சொன்னதுனால எனக்கு தைரியமில்லைன்னு நினைச்சிடாதீங்க, ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் கண்ணுல வடபடறாங்க (தென்படும்போது, வடபடக்கூடாதா? (நன்றி கசீ சிவகுமார்)) அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.
புகைப்படம் நன்றி : Sulekha.com
26 comments:
//உங்க கூட கொஞ்சம் பேசணும்//
பாவம் என்ன கஷ்டமோ என்னமோன்னு வந்தா....................................................... இதான் நல்லவிங்களா இருக்கப்டாதுன்னு சொல்லுறது... :-|...
நல்ல flow..... ரசிக்கத்தக்க நகைச்சுவை கற்பனை/கதை/சம்பவம்.
யோவ்..கலக்கல்யா...
ஆஹா... சூப்பர் பில்டப்ங்க சங்கர்...
கதையா இருந்தாலும் சரி, உண்மைச் சம்பவமா இருந்தாலும் சரி... ரொம்ப நல்லா இருக்கு
வடபடுதா??? வதைபடுது!!!
//சாப்பாட்டு நீதிமன்றத்துல//
ஆஹா... தமிழ் துள்ளி விளையாடுது....
//அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.//
உங்க கொள்கை ரொம்ப நல்லாருக்கு.
சூப்பரா எழுதி இருக்கீங்க.
ச்சான்ஸே இல்லை.... கலக்கல்... அருமை சங்கர். எதிர்பாராத ட்விஸ்ட். நிஜமாய் நல்ல முன்னேற்றம் உங்கள் எழுத்தில். நிறைய எழுதுங்க பாஸ்....
வசக்கம்போல ஓட்டுக்கள போட்டுட்டேன், இன்னிக்கு ரொம்ப குஷியா...
பிரபாகர்...
என்னமா யோசிக்கிறீங்க சங்கர்...நல்ல நகைச்சுவை..
அருமை
என்னால முடியல தல.. கலக்கல்
நல்லாத்தான் யோசிக்கிராய்ங்க....
நம்மள எந்த பொண்ணும் ஒருவாரமா கூப்பிடலயே.....
ரசித்தேன்....
சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) //
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல.
எப்படி தான் உங்களுக்கெல்லாம் இப்படி பதிவு கிடைக்குதோ.
ரொம்ப நல்லாருக்கு.
மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,
நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,
அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?
நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,
அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க
நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,
அவள் : என்ன யூகங்கள்?
நான் : இன்னிக்கு சிகரெட்டுக்கே வழியில்ல.கடனா நூறு ரூபா வேணுமின்னு கேட்டா என்ன பண்ணுறது.
மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,
நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,
அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?
நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,
அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க
நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,
அவள் : என்ன யூகங்கள்?
நான் : கட்டு பீடிக்கே வழியில்லாத இன்னிக்கு கடனா நூறு ரூபா வேணுமின்னா என்ன பண்ணுறது?.
ரொம்ப நல்லாயிருக்கு சங்கர்.எதிர்பாராத திருப்பம்...
//இராகவன் நைஜிரியா said...
ஆஹா... சூப்பர் பில்டப்ங்க சங்கர்...
கதையா இருந்தாலும் சரி, உண்மைச் சம்பவமா இருந்தாலும் சரி... ரொம்ப நல்லா இருக்கு//
நன்றிங்க ஐயா,
உண்மை சம்பவமா இருந்தா நான் எழுதியிருக்கவே மாட்டேனே
//சுசி said...
வடபடுதா??? வதைபடுது!!!//
தமிழை வளர்க்க விடமாட்டீங்களே,
ம்ம்ம்ம்... :)
நீ கலக்கு சித்தப்பு...
வாங்க பிரபா, நன்றி
நன்றி வசந்த்,
//Chitra said...
நல்ல flow..... ரசிக்கத்தக்க நகைச்சுவை கற்பனை/கதை/சம்பவம்.//
விஞ்ஞான சிறுகதைன்னு கூட லேபிள் கொடுக்கலாம்னு இருந்தேன், சுஜாதா திட்டுவார்ன்னு விட்டுட்டேன்
//கலகலப்ரியா said...
பாவம் என்ன கஷ்டமோ என்னமோன்னு வந்தா....................................................... இதான் நல்லவிங்களா இருக்கப்டாதுன்னு சொல்லுறது... :-|...//
ரொம்ப நன்றி பிரியா,
எனக்கு உதவணும்னு வந்துட்டதிலேயே உங்க நல்ல மனசு புரியுது, வந்தது வந்துட்டீங்க, ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துட்டு போங்க
@புலவன் புலிகேசி
@தியாவின் பேனா
@யோ வொய்ஸ் (யோகா)
எல்லாருக்கும் நன்றி
//விக்னேஷ்வரி said...
// சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) //
இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல.
எப்படி தான் உங்களுக்கெல்லாம் இப்படி பதிவு கிடைக்குதோ.
ரொம்ப நல்லாருக்கு.
//
ஏதோ என்னால் முடிந்த தமிழ் சேவை, நன்றி
//க.பாலாசி said...
நல்லாத்தான் யோசிக்கிராய்ங்க....
நம்மள எந்த பொண்ணும் ஒருவாரமா கூப்பிடலயே.....
ரசித்தேன்....//
நன்றிங்க, அப்படி ஏதும் நடந்தால் என் உதவி பெற தயங்க வேண்டாம்
@ கடைக்குட்டி
@ Siva
எல்லாருக்கும் நன்றி
ஆனா, எனக்கு உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு!
(பதிவு போடறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சுகிட்டு இருந்தேன், தாங்க்ஸ்)
//புகைப்படம் நன்றி : Sulekha.com//
இந்த போடோவுக்கு ஒரு தலைப்பு யோசிச்சு வச்சேன், நல்லா இருக்கா, பாருங்க!
ஒரு பார்ட்டியும், பின்னே பாட்டியும், நடுவில் ஞானும்
Post a Comment