பழசிராஜா - விமர்சனம்
இன்னைக்கு காலையில் 11 மணி வரைக்கும் நான் பழசிராஜா படத்துக்கு போகணும்னு நினைக்கில,காரணம் வூட்லண்ட்ஸ் தியேட்டரில் பழசிராஜா மலையாளத்தில் திரையிட்டு இருக்கிறார்கள். நமக்கு தான் மலையாளத்தில் நல்ல படம் பார்த்து பழக்கம் இல்லையே என்று யோசித்தேன்.அப்புறம் தான் தெரிந்தது தியாகராஜாவில் நான்கு ஷோ பழசிராஜா போட்டு இருக்கிறார்கள்
என்று.காலையில் நான் தியேட்டரில் பார்த்த போது ஆதவன் போஸ்டர் தான் ஒட்டி இருந்தார்கள் தீடிர்னு பழசிராஜா வந்துட்டாரு சரின்னு நானும் போய்ட்டு பார்த்து வந்துட்டேன்.
கேரளாவில் வயநாடு தான் பழசிராஜாவின் கோட்டை அங்கு
ஆக்கரமிக்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்த மன்னனின்
கதை தான் பழசிராஜா.படம் கிட்டதட்ட மூணு மணி நேரம்,
இவங்க உஷாரா முதல் ஒரு மணி நேரத்தில் இன்டெர்வல் விட்டுட்டு
அடுத்து ரெண்டு மணி நேரம் நம்மை உட்கார வைக்கிறார்கள்.
மம்மூட்டி பழசிராஜாவாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.போர் படை தலைவராக வரும் நம்ம சரத்குமார்க்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லைனாலும் அவரின் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மனோஜ் ஜெயன் அருமையாக நடித்து இருக்கிறார்.சுமன் ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக வருகிறார்
சரத்குமாரின் கையால் உயிர்விடுகிறார்.
மற்றபடி கனிகா அவர்கள் நன்றாக திறமையை வெளிபடித்தி
உள்ளார், நான் நடிப்பு திறமையை பற்றி சொல்லவில்லை என்று
நீங்கள் டி.வி.யில் பாடல் காட்சி வந்தால் அறிவீர்கள்.பத்மப்ரியா
ஏதோ வர்றார் போறார் அவ்வளவுதானு இல்லாம ஆண்களுக்கு
நிகர போர் சண்டை போடுறாங்க.
வாழ்க்கை வரலாறு படம் என்றாலே மெதுவாகத்தான் போக
வேண்டுமா?? இல்லை படத்தின் நீளம் அதிகமாகத்தான் இருக்க
வேண்டுமா??.
பொதுவாகவே எனக்கு வரலாறு சம்பந்தப்பட்ட அனைத்து புத்தகங்கள் மற்றும் படங்களும் பிடிக்கும்.இந்த வார விகடனில் வந்த "இந்த சிறுமி இப்போது" என்ற தலைப்பில் வந்த அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரை மற்றும் அந்த பேட்டியை தான் முதலில் படித்தேன். எனக்கு அந்த அளவுக்கு வரலாறு மேல காதல்.
ரைட் பழசிராஜாவுக்கு வருவோம், படத்தில் கொட்டாவி வர
வைக்கும் காட்சிகள் இருக்கு.ஒரு வேளை அது டப்பிங் என்ற
காரணத்தால் கூட இருக்கலாம் அல்லது பக்கத்துக்கு மாநில
என்ற வாசனையாக கூட இருக்கலாம்.ஒரு காட்சியில்
மம்மூட்டியை கைது செய்து அழைத்து செல்ல ரெடிஆக
இருப்பார்கள் அப்பொழுது கனிகா தண்ணி கொண்டு வரும்
காட்சி மிக அருமை(யாரு கனிகாவா??அது இல்லங்க அதுக்கு
அப்புறம் வர்ற காட்சி).
பழசிராஜா, ஒருவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர்தந்திரத்தை
அறிந்த கொள்ள நல்ல படம்.ரெண்டு குத்து பாட்டு மற்றும் மூணு சண்டை காட்சிகள் எதிர் பார்ப்பவர்களுக்கு இந்த பழம் புளிக்கும்.
போனஸ் செய்தி :
இடைவெளியின் போது டைட்டானிக் புகழ் இயக்குனர் ஜேம்ஸ்
கமேரூன் இயக்கிய அவதார் என்ற படத்தின் ட்ரைலர் செம
அட்டகாசம்.உலகம் முழுவதும் அடுத்த மாதம் 18 தேதி
ரிலீஸ் ஆகிறது. வேட்டைகாரனுக்கு போட்டியாக அவதார் இருக்கும்.
இந்த விமர்சனம் பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க முக்கியமா கமெண்ட் போடுங்க.
உங்கள்
ஜெட்லி சரண்
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்துருப்பாங்க போல
ஆனா
வேட்டைக்காரனுக்கு போட்டின்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவரு...
பார்க்கவா? வேண்டாமா?
sariyaana vimarsanam. enakku pidiththa anugumurai......
வஸந்த் நான் அவதார் படத்தை
பற்றி சொன்னேன்....கண்டிப்பா
அந்த படத்துக்கு நல்ல ஒபெநிங் இருக்கும்
@தண்டோரா அண்ணன்
நல்ல கேள்வி ...
டைம் பாஸ் ஆகலேன்னா
கண்டிப்பா இந்த படத்தை பார்க்கலாம் அண்ணே
@ சித்ரா
என்ன உங்க அணுகுமுறை??
ஓ.கே இந்த ஞாயிறு பொழுது போயிரும் :)
அதுக்குள்ள படத்தை பார்த்தாச்சா ஜெட்லி?நான் பார்க்க மாட்டேன் இந்த படத்தை ஏன்னா எனக்கு வாழ்க்கை வரலாறு படம்லாம் பிடிக்காது.
வசனம் எப்படி?
@ அப்துல்லா
கண்டிப்பா அண்ணே
@ மேனகா
ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்...
சும்மா ரிலாக்ஸ் பண்ண போனேன்..
@ சரவணகுமரன்
ஒன்றிரண்டு இடங்களில் வசனம்
சூப்பர் மற்றபடி சொல்வதற்கு ஒன்னும் இல்லை நண்பா
ஆளாளுக்கு பஞ்ச டயலாக், பில்டப், அல்லக்கைங்களோடு காமெடி ன்னு சொதப்புற இந்த சமயத்துல இது மாதிரி படத்த பார்க்கலாம் சரண்... விமர்சித்த விதம் அருமை.
இசை? எந்த ஒரு தகவலும் இல்லை?
பிரபாகர்.
@ பிரபாகர்
ஒன்னும் பெரிசா இல்லை அண்ணே
அது தவிர எனக்கு சங்கீத ஞானம் கம்மி...
பாடல்களில் மலையாள வாசனை தான்
படம் பார்க்கனும்...பார்த்துட்டு சொல்றேன்
”பழசிராஜா” அப்டீன்னு ட்ரைலர்ல ஃப்ரீஸ் பண்ணும் போது சரத் குமார் முகம் நிக்குது... என்ன கொடும இது..
இந்த மாதிரி படங்கள் இப்டிதான் தல இருக்கும்.. இத வேற ஆங்கிள்ல எடுத்தா .. “ஒரு சிறு சம்பவத்த மட்டும் என்லார்ஜ் பண்ணி எடுத்தா.. நீங்க எதிர்பாக்குற சுவாரஸ்யம் என்னும் வாசம் கிடைக்கலாம்..
ஹிடல்ரோட புல் லைஃப் ஹிஸ்டரி விட.. சில சம்பவங்கள கோர்த்த படங்கள் சுவாரஸ்யமாக இருப்பதே உதாரணம்... :-)
வாராவாரம் பதிவு போடுறெனோ இல்லயோ உங்களுக்கு பின்னூட்டம் போட்டே நேரத்த ஓட்டுறேன்.. இந்தப் பின்னூட்டங்கள நெக்ஸ்ட் வீக் பதிவா ரிலீஸ் பண்றேன் பாருங்க.. :-)
@ புலிகேசி
பார்த்துட்டு சொல்லுங்க
@ கடைக்குட்டி
உன் பின்னூட்டம் சூப்பர் ,, நீ சொல்வது
உண்மை தான்,ஏதாவது ஒரு சம்பவத்தை
வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும்
உன் அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.
indha padatha naan DVD la than paaka poren.. :)
apram vimarsanam nalla irundhudu.. Aana ilayaraja-va pathi oru varatha kooda sollaliye???
Avatar naanum edhir paathutu irukken...
vettaikaranum than.. aana reason vera.. :)
அப்ப படம் ஹிட்ன்னு சொல்லுங்க ...
@ கனகு
படத்தை பார்த்த சரி...
@ ஸ்டார்ஜன்
அப்படி சொல்ல முடியாது....
நம் ஊரில் போதிய வரவேற்ப்பு இல்லை தலைவரே..
நல்ல விமர்சனம்
Post a Comment