தேவியும் நானும் பின்னே ஒரு செட் பூரியும்.....
நண்பர்களே நீங்க பாட்டுக்கு தலைப்பை பார்த்து தப்பா பீல் பண்ணாதிங்க.நான் சொல்ல வந்தது எனக்கும் தேவி தியேட்டருக்கும் ஆன பிணைப்பு பற்றி.எனக்கு நினைவு தெரிஞ்சு தேவியில் நான் பார்த்த முதல் படம் உயிரே, ஏன் அவ்ளோ லேட்ஆ அங்கே படம் பார்த்தேன் என்றால்
என்னை சுற்றி எங்கள் ஏரியாவில் நான்கு தியேட்டர்கள் உள்ளன. அதனால் முக்காவாசி படங்கள் எங்கள் ஏரியாவில் ரிலீஸ் ஆகிவிடும்.அதுவும் இல்லாமல் அறியா வயசில் அவ்ளோ தூரம் சென்று படம் பார்ப்பது ரொம்ப கஷ்டம்.
ஆனால் ஒன்று நான் மொக்கை படங்கள் பார்ப்பது இன்று நேற்றல்லா என் சிறு வயது முதல் நான் மொக்கை படங்களையும் பார்த்து வளர்ந்து இருக்கிறேன் என்பது மட்டும் உண்மை.
கொசுவர்த்தி சுருள்(அதாங்க பிளாஷ்பேக்):
அடிக்கடி தேவி தியேட்டர் போக ஆரம்பித்தது நான் இளநிலை
பட்டபடிப்பு படித்த??போது தான்.அப்போது எனக்கும் சித்து மற்றும்
நட்டுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை.விவேக்கும் வடிவேலும்
கலக்கிய மனதை திருடி விட்டாய் என்ற படம் தான் நான்
கல்லூரியில் சேர்ந்த போது பார்த்த படம்.அந்த படம் தேவி
கலாவில் ஓடியது.நானும் என் சில நண்பர்களும் சென்றோம் அங்கே
பார்த்தால் சித்துவின் குழு எங்களுக்கு முன்னவே செம
ரகளை செய்து கொண்டிரிந்தனர்.தியேட்டர் புல்லா கல்லூரி
மாணவர்கள் தான் செம அட்டகாசம் செய்தோம்.
http://www.orkut.co.in/Main#Community?cmm=93414598
உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
கமெண்ட் போட்டால் மேலும் சந்தோசம்.
அன்புடன்
ஜெட்லி சரண்.
உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஒட்டு போடுங்க..
கமெண்ட் போட்டால் மேலும் சந்தோசம்.
அன்புடன்
ஜெட்லி சரண்.
தேவி என்னை போன்ற சினிமா ரசிகர்களுக்கு இன்னொரு
வீடு என்றே சொல்ல வேண்டும்,ஏன் என்றால் அங்கே
முக்காவாசி படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.நான் கடைசியாக
அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன்,
நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள்
இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால்
எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்.
நேபாளி மற்றும் கற்றது தமிழ் படம் பார்க்கும் போது காலுக்கு
அடியில் பெருச்சாளி ஓடியது இன்றும் என் நினைவில் உள்ளது.
பிளாஷ்பேக் ஓவர்.இனி:
திங்கள் அன்று நான் தேவிக்கு சென்ற போது தற்காலிக வண்டி நிறுத்தும் இடத்தில் வண்டியை நிறுத்தி டிக்கெட் எடுக்க சென்றேன்,
ஒன்றும் கூட்டமில்லை ஆனால் முன்பதிவு முன்பே நடைபெற்று
இருந்ததால் நான் M வரிசை டிக்கெட்டை கேட்டு வாங்கினேன்.
அங்கே வேலை செய்யும் பெண் பாதுகாவலரிடம் எப்போது உள்ளே
அனுமதிப்பிர்கள் என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் 2.45 மணிக்கு
உள்ளே அனுமதிப்போம் என்றாள்.
சரி ரைட் அப்படின்னு சொல்லி சாந்தி தியேட்டர் அருகே சப்வேயில்
இறங்கி அந்த பக்கம் இருக்கும் பிளாட்பாரம் புத்தக கடைக்கு
(நோட் பண்ணுங்க நல்ல புத்தக கடை நீங்க பாட்டுக்கு சரோஜாதேவி இல்ல கில்மா என்று நினைக்க வேண்டாம்) சென்று ஏதாவது வாங்குற மாதிரி இருக்கான்னு பார்த்தேன்.பார்த்தவுடன் திரும்பி தேவிக்கு சென்றுவிட்டேன். ஏன் என்றால் அந்த புத்தக கடையில் ஒரு புத்தகத்தை நன்றாக பார்வையில் தெரியும் படி வைத்திருந்தனர், அது நீயா நானா புகழ் கோபிநாத் எழுதிய "ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க"!!.பெரிய நாட்டமை அவரே சொல்லிட்டார் அப்புறம் போய் என்னத்த வாங்கிட்டு,படிச்சிட்டு....
தேவி என்றாலே பெரிய திரையும் சவுண்டும் தான் சூப்பர்.
இப்போது புது பொலிவுடன் இருக்கும் தேவி நன்றாகவே
உள்ளது.புதுபிக்கப்பட்ட தேவியை பற்றி என் அபிப்ராயங்கள்
சில
தங்களின் போட்டியாளராக நினைக்கும் தியேட்டர் அளவுக்கு
தேவி தியேட்டர் இல்லாதது வருத்தமே!!.நான் சொல்வது உள்கட்டமைப்பில் அல்ல,பார்வையாளர்களை திருப்திப்படுத்தும்
வகையில்.தேவி தியேட்டர் பாதுகாவலர்களுக்கு இன்னும் பயிற்சி
வேண்டும் என்பது என் கருத்து, முக்கியமாய் பார்வையாளர்களை
அவர்கள் நடத்தும் முறை சரியில்லை.போக போக எல்லாம்
சரியாகும் என்று நினைக்கிறேன்.2012 படம் பார்க்கும் போது
சில காட்சிகளில் அவ்வளவு தெளிவில்லை.
மற்றபடி தேவி தேவிதான்.ரசிகர்களுடன் உற்சாகமாக படம்
பார்க்க நம்ம தேவியை விட்டா வேற யாரு இருக்கா.....
போனஸ் செய்தி:
ஹோ ! பூரி பத்தி சொல்லவே இல்லைல, சாந்தி தியேட்டர்
பக்கத்தில் ஒரு டாஸ்மாக் இருக்கும் அங்கே போகாதிங்க!!
அதுக்கு பக்கத்தில் ஒரு டீ கடையில் சுட சுட பூரி போட்டு
தருவாங்க,அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படத்தில் இருக்கிற மாதிரி எல்லாம் இருக்காது
பக்கா லோக்கல்ஆக இருக்கும்.
ஆர்குட்டில் தேவி குழுமத்தில் சேர இந்த லிங்கை சொடுக்கவும்..
12 comments:
சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.
பிரபாகர்.
நல்ல இடுகை, கொசுவத்தி நல்ல சுத்தி இருக்கீங்க. தேவிக்கும் சாந்திக்கும் இடையில் சற்று உயரமாக உள்ள நார்த் இந்தியனா அல்லது மலையாளி கடைதான. பஸ் ஸ்டாப் நேர் பின்னால இருக்கும். நானும் சாப்பிட்டுள்ளேன். நன்றி ஜெட்லி.
கல்லூரி நண்பர்களுடன் மனதைத் திருடி விட்டாய் படம் நல்ல சாய்ஸ் தான்.
எனக்கு தேவி தியேட்டர் தெரியாதுங்கோ. சோ அதைப் பற்றி நோ கமெண்ட்ஸ்.
//நான் இளநிலை
பட்டபடிப்பு படித்த??//
நீங்க ரொம்ப நல்லவருங்க....
சூப்பரா எழுதி இருக்கீங்க.
//சக்கரக்கட்டி, நேபாளி... எப்படிப்பா பாத்தீங்க... நினைக்கும் போதே டெரரா இருக்கு.// ரிப்பிட்ட்ட்ட்
மற்றபடி தேவி தேவிதான்.ரசிகர்களுடன் உற்சாகமாக படம்
பார்க்க நம்ம தேவியை விட்டா வேற யாரு இருக்கா.....
//
ஆமா ஜெட்லி!! அனுபவம் புதுமை!!
அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன்,
நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள்
இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால்
எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்."
ha,ha,ha,ha,.....
@ பிரபாகர்
அப்போ பார்த்த எனக்கு எப்படி இருக்கும்...
@ பித்தனின் வாக்கு
எனக்கு எதுக்குஞா நன்றி..பூரி சுட்டவர்கிட்ட சொல்லுங்க...
பூரி எப்போ சாப்பிடுவிங்க, சரக்குக்கு பின் தானே ?
@ சுசி
மிக்க நன்றி
@ மேனகா
எனக்கு சகிப்பு தன்மை அதிகம்ங்க...
@ தேவன்மயம்
நன்றி டாக்டர் சார்
@ சித்ரா
தங்கள் சிரிப்புக்கு நன்றி
தேவி ஊழியர்களுக்கு கண்டிப்பாக பயிற்சி தேவை.. இன்னும் “அய்யே ஒத்துமே..” கேஸாத்தான் இருக்காங்க..
ஆதவன் அங்கதான் பாத்தேன்.. தியேட்டர பெருக்கி சுத்தம் பண்ண ஆள் வரலன்னு அரை மணி நேரம் கழிச்சு படம் போட்டாங்க..
தியேட்டர் நல்லா இருக்கு.. ஊழியர்கள் கையும் சேர்ந்தால் களைகட்டும்...
பூரி மேட்டர் சூப்பர்.. நாங்க அங்கந்தான் சாப்டுவோம்..
//பெண் பாதுகாவலரிடம் எப்போது உள்ளே
அனுமதிப்பிர்கள் என்று கேட்டேன் அதற்கு அந்த பெண் 2.45 மணிக்கு
உள்ளே அனுமதிப்போம் என்றாள்.
//
இவ்ளோ அலம்பல் ஏன்?? சாதாரண விஷயத்த பேச்சுத் தமிழ்லயே சொல்லாமே :-)
(பத்த வெச்சுட்டியே பரட்ட.... :-)
பத்த வெச்சுட்டியே கடைக்குட்டி...
//இவ்ளோ அலம்பல் ஏன்?? //
சும்மா தான்பா ட்ரை பண்ணேன்,
நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத
Post a Comment