Monday, November 9, 2009

கொட்டும் மழை - என்ன காரணம் - ஆராய்ச்சி முடிவுகள்

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து, கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது, ஒரு தொலைக்காட்சி சானலில், எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மக்கள் நீரில் தத்தளிக்கிறார்கள், அரசும் அதிகாரிகளும் எட்டியே பார்க்கவில்லை, மின்சாரம் தாக்கியும் வீடு இடிந்து விழுந்தும் இதுவரை பலர் இறந்து விட்டனர், இன்னும் பல நூறு பேர் சாகக் கிடக்கிறார்கள், மீட்பு படை வாகனங்களின் சக்கரங்களில் காற்று இல்லை, பன்றி காய்ச்சல் வந்துகொண்டே இருக்கிறது, மற்றொரு சானலிலோ, மக்கள் பத்திரமாக இருக்கிறார்கள், அரசு இயந்திரம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது (ஒரு சந்தேகம், மழையில் நனைந்து துருப்பிடித்துவிடாதா?), அமைச்சர்களே கைப்பட உணவு பொட்டலங்கள் கொடுக்கிறார்கள், அதிகாரிகளோ ஒருபடி மேலே போய் அவரவர் வீட்டிலிருந்தே கைப்பட சமைத்து கொண்டுவந்து வினியோகிக்கிறார்கள், மழை பெய்ய துவங்கிய உடனேயே மின்சாரம் நிறுத்தப்பட்டு விட்டது (அதற்கு முன் மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்ககூடாது)





இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், சமீபகாலமாய் தமிழகத்தில் பெய்யும் மழைக்கும் வானிலை மையத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது, அதாவது 'ரமணன் தொலைக்கட்சியில் வந்து இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என பேட்டியளித்தால் மறுநாள் வெயில் கொளுத்தும், புயல் திசை மாறிவிட்டது, மழை குறையும் என்றால், வீட்டை விட்டு கிளம்ப முடியாத அளவு மழை கொட்டும்' , ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ரமணன் சொல்வது அப்படியே பலிக்கிறது, இந்த திடீர் மாற்றம் ஆர்வத்தை கிளப்பிவிட்டதால், இதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து நமது கம்பேனி சார்பில் ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.




இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு புதிய உண்மை கண்டறியப்பட்டுள்ளது, அதாவது ரமணன் முழுக்கை சட்டை அணிந்து பேட்டி அளித்தால் மேலே சொன்ன நம்பிக்கை நிஜமாகிறதென்றும், அவர் அரைக்கை சட்டையோ, டீ-ஷர்டோ அணிந்து காட்சியளித்தால், அவர் சொன்னபடி நடக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இறுதி அறிக்கையும் பெற விரும்புவோர், ஓட்டு போட்டு, பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கலாம்

இந்த கட்டுரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 'மழைக்கும் பள்ளி விடுமுறைக்கும் உள்ள தொடர்பு' மற்றும் 'சென்னை மழை ஒரு பின் நவீனத்துவ பார்வை' ஆகிய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படும் என்பதை கம்பேனி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்

16 comments:

பிரபாகர் said...

நல்ல ஆராய்ச்சி. இணைச்சி ஓட்டுக்களையும் போட்டாச்சி.

பிரபாகர்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்க ஆராய்ச்சி..,

புலவன் புலிகேசி said...

என்னே உங்கள் ஆராய்ச்சி...நீங்களும் மக்களை ஏமாற்றும் ஜோசியக்காரர்களுடன் சேர்ந்து விட்டீரோ? நல்லா இருக்கு....

வரதராஜலு .பூ said...

நல்லா செய்றாங்கப்பா ஆராய்ச்சி

யூர்கன் க்ருகியர் said...

:)

ramalingam said...

மன்னார் அன் கம்பெனியா!

சித்து said...

ஹா ஹா ஹா சூபர் மச்சி

Bala De BOSS said...

"""""இந்த கட்டுரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, 'மழைக்கும் பள்ளி விடுமுறைக்கும் உள்ள தொடர்பு' மற்றும் 'சென்னை மழை ஒரு பின் நவீனத்துவ பார்வை' ஆகிய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்படும் என்பதை கம்பேனி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்"""""""">>>>

>>>>> வோட்டு போடலனா மட்டும் அந்த கருமத்தை, மன்னிக்கவும் அந்த கட்டுரைகளை எழுதாம விட்டுடவா போறீங்க??

சங்கர் said...

//நல்ல ஆராய்ச்சி. இணைச்சி ஓட்டுக்களையும் போட்டாச்சி.

பிரபாகர். //

எப்பவும் போல முதல் ஆள், நன்றி பிரபா

சங்கர் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வாழ்க ஆராய்ச்சி.., //

நன்றி டாக்டர், ஏதோ உங்கள மாதிரி பெரியவங்க வாழ்த்தினா இன்னும் பல ஆராய்ச்சிகள் பண்ணலாம்

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
என்னே உங்கள் ஆராய்ச்சி...நீங்களும் மக்களை ஏமாற்றும் ஜோசியக்காரர்களுடன் சேர்ந்து விட்டீரோ? நல்லா இருக்கு.... //

நன்றி புலவரே , மக்களை விழிப்படைய செய்யும் இது போன்ற ஆராய்ச்சிகளை செய்ய வேறு கூட்டணியே தேவை இல்லை

Sanjai Gandhi said...

//

இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரு புதிய உண்மை கண்டறியப்பட்டுள்ளது, அதாவது ரமணன் முழுக்கை சட்டை அணிந்து பேட்டி அளித்தால் மேலே சொன்ன நம்பிக்கை நிஜமாகிறதென்றும், அவர் அரைக்கை சட்டையோ, டீ-ஷர்டோ அணிந்து காட்சியளித்தால், அவர் சொன்னபடி நடக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இறுதி அறிக்கையும் பெற விரும்புவோர், ஓட்டு போட்டு, பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கலாம்//

அடப்பாவிகளா.. :))

Codetiger said...

yeppadiyellam yosikkuranga...

விக்னேஷ்வரி said...

இதை விட சிறந்த ஆராய்ச்சி என்னவாக இருக்க முடியும்...
அசத்துறீங்க போங்க.

angel said...

hi

அதற்கு முன் மட்டும் என்ன வாழ்ந்தது என்று கேட்ககூடாது)

this is good

டவுசர் பாண்டி said...

ஹா ஹா ஹா ஹா சூப்பர் !!
கண்டு பிடிப்பு !! வாழ்த்துக்கள் !!
நீங்களே இனி மேட்டு வானிலை பத்தி
சொல்லலாம்ல !!