Monday, November 9, 2009

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புதிர்.-சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

"டேய் நாதாரி கார்ல வந்தா நீ பெரிய புடிங்கியாட" என்று என் பின்னாலிருந்து குரல் வந்ததும் நான் சட்டென்று திரும்பி பார்த்தேன்.

பைக்கில் வந்த சிகப்பு சட்டை ஆசாமி காரில் வந்த ஒரு உள்ளூர்
அரசியல் பிரமுகரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தான்.

"நான் புடிங்கிதாண்ட ..த்தா என்னடா பண்ணுவே" பதிலுக்கு எகிறினார் அரசியல் பிரமுகர்.

நான் இருவரின் அருகிலும் சென்றேன், பைக்கின் வலது பக்கத்துக்கு இண்டிகேட்டர் உடைந்திருந்தது.

அரசியல் பிரமுகர் என்னை பார்த்தவுடன், நான் அவருக்கு வணக்கம் வைத்தேன் "யோவ் உன்னாலதான் இப்படி ஆச்சு, சும்மா காலங்காத்தால டென்ஷன் ஆக்குரிங்க". நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.

பின்னாடி வேறு ஹோர்ன் சத்தம் காதை பிளந்தது. "உன் டிரைவர் மேலதான் தப்பு , என் இண்டிகேட்டர்க்கு காசு கொடுத்தா தான் வண்டியை உடுவேன்" எகிறினான் அந்த சிகப்பு சட்டை ஆசாமி.

"யப்பா நீ அவனை இங்க இருந்து கிளப்பி விடு. சும்மா அவனா வந்து வண்டியில் விழுந்துட்டு பேசுறான் பாரு" என்று என்னிடம் கூறினார் அந்த அரசியல் பிரமுகர்.


நான் பைக் ஆசாமியிடம் சென்று "தம்பி சின்ன செலவுதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி கிளம்புங்க"என்றேன்.

"நீ அவனோட சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறியா, இருடி சாயங்காலம் பசங்களை கூட்டிட்டு வரேன்" என்று கிளம்பினான் பைக் ஆசாமி.


"ச்சே.. இவனுங்க ரவுசு தாங்க முடியுலப்பா" என்று நான் என் வேலையை பார்க்க போனேன். கையை மேலே தூக்கி எதிரே வரும் வாகனத்தை விசிலடித்து நிறுத்திய பின்,மக்கள் ரோட்டை கடந்தார்கள்.


சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க.... பின்னோட்டம் போட்டாலும் நன்றாக இருக்கும்...

உங்கள்
'ஜெட்லி' சரண்.

17 comments:

லோகு said...

ஹைக்கூ கவிதை மாதிரி இது என்ன ஹைக்கூ கதையா மாப்ள.. நல்லாருக்கு.. ஓட்டு போட்டாச்சு..

Cable சங்கர் said...

ட்விஸ்ட் நல்லாருந்தாலும்.. இன்னும் கொஞ்சம் கதையில வேலை செஞ்சிருக்கணும்.. ஜெட்லி..

புலவன் புலிகேசி said...

ஹைக்கூ கதை....

பிரபாகர் said...

சங்கர் அண்ணா சொன்ன மாத்ரி இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கனும்... நல்லாருக்கு நண்பா...

பிரபாகர்.

யோ வொய்ஸ் (யோகா) said...

வாசிச்சிட்டேன், ஓட்டும் போட்டுட்டேன் தல

Anonymous said...

நல்லா இருக்கே.. பாவம் அந்த police

விக்னேஷ்வரி said...

கதை நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

நல்லாயிருக்கு ஜெட்லி!!

ஜெட்லி... said...

@ லோகு


ஏதோ நீயும் சொல்ற...நானும் நம்புறேன் மச்சி.



@ கேபிள் சங்கர்


நீங்க சொல்றது கரெக்ட்தான் தலைவரே....
விடுங்க நான் சின்ன பையன் இப்போ தான் ட்ரை பண்றேன்....

ஜெட்லி... said...

@ புலிகேசி


நன்றி நண்பரே ...


@ பிரபாகர்

தாங்கள் சொல்வது சரிதான்

ஜெட்லி... said...

@ யோ

மிக்க நன்றி யோ...



@நாஸியா

இந்த போலீஸ் மாதிரி நான் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன்.

ஜெட்லி... said...

@ விக்னேஸ்வரி

மிக்க நன்றி.....


@ மேனகா

மிக்க நன்றி...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அந்த நபர் பற்பல சாகஸங்கள் செய்யலாம் என்ற கனவில் பணிக்குச் சேர்ந்தவர்..,

கடைக்குட்டி said...

நல்ல முயற்சி.. இந்த மாதிரி நச் எல்லாம் நான் அப்பப்போ கிருக்குறதுதானே... அதனால இந்த மாறி ஃபஸ்ட் கட்டிங் கதைகள் எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும்..படிச்சு முடித்ததும் ஒரு புன் முறுவல் வந்தது.. ஆஹா ஓஹோன்னு சொல்ல முடியாட்டியும்.. நீங்கள் செய்த இந்த முயற்சி சூப்பர்..ஆனா படிக்கும் போது.. அடடா.. இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் டீடெய்ல் பண்ணி இருந்தா கலக்கலா இருக்குமேன்னு ஒரு இது .. ஆனாலும் கதையில் குறை இல்லை.. எடுத்த முயற்சியில்.. விளக்கும் வித்தத்தில்.. வார்த்தைப் ப்ரயோகத்தில்..... நீங்கள் சொல்ல வந்த கருத்தும்.. அந்தக் காட்சியின் பரிணாமமும்...,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



நான் என்ன சொல்ல வர்றேன்னு எனக்கே புரியல...
(இதுக்குதான் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடனும்கிறது...)

****** நல்லா இருக்கு ******
**** வெற்றி பெற வழ்த்துக்கள் ******

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்கு

சரவணன் வாழ்த்துக்கள்

ஜெட்லி... said...

@ சுரேஷ்

பாவம் அவரை விட்டுருங்க தல


@ வஸந்த்

நன்றி நண்பா

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி

நண்பா உந்தன் பெரிய பின்னூட்டத்துக்கு
நன்றி... உன் வரிகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் ...