Friday, November 6, 2009

அதே (நேரம்)அடி அதே (இடம்)வலி.

அதே (நேரம்)அடி அதே (இடம்)வலி.


தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,அப்புறம்"ஏன்டா படத்தில் நடித்த ஜெய்யே படம் ஒரு வாரம் கூட ஓடாதுனு சொன்னார் நீ போய் ஏன் பார்த்தேன்னு கேக்காதிங்க". இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குங்க அது என்னனா மொக்கை படங்களை பார்ப்பதால் நமக்கு மன வலிமையும், சகிப்பு தன்மையும் வளர்வதாக சுவாமி கில்மானந்தா ஏற்கனவே என்கிட்டே சொன்னாருங்க.அதனால்தான் நான் என் சகிப்பு தன்மையை வளர்க்க இந்த படத்தை பார்க்க போனேன்னு சொன்ன நீங்க நம்பவா போறீங்க......


ரைட், அப்புறம் படத்துக்கு வருவோம். ஜெய் ஒரு விஷயத்தை தப்பா சொல்லிட்டார் அதாவது ஒரு வாரம் படம் ஓடும்னு சொன்னார் ஆனா எனக்கு என்னவோ இன்னைக்கு நைட் ஷோ வரைக்கும் ஓடினாலே பெருசு என்று தோன்றுகிறது.படம் அவ்வளவு மொக்கையான்னு கேக்காதிங்க ஏன்னா?
நான் படத்தை முழுசா பார்க்கவில்லை, மரண மொக்கைனு கூட சொல்லலாம்.மழை டைம் மற்றும் மொக்கை படத்துக்கு மட்டும் புல் ஏ.சி போடுறானுங்க அதான் இன்டெர்வல் முடிஞ்சி ஒரு பத்து நிமிஷம் பார்த்தேன்... முடியலை.....



நியாயமா நான் படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்தில் வெளியே வந்துருக்க வேண்டும் ஆனால் தியேட்டரில் வந்த கமெண்ட்ஸ் படத்தை விட காமெடியாக இருந்ததால் சிரித்து ரசித்தேன்.நான் முதல் பாடலுக்கு தான் என்ட்ரி கொடுத்தேன் அதனால் பிரேம்ஜி தான் பின்னணி இசை அமைத்தாரா என்று தெரியவில்லை ஒரு வேலை பிரேம்ஜிதான் பின்னணி இசை என்றால் "ரொம்ப கஷ்டம்".

இப்போ தியேட்டரில் நடந்த சுவாரிசியமான விஷயங்கள்.

தியேட்டர் நொறுக்ஸ்:

படத்தில் பெரிய மைனஸ் குழந்தைதனமான வசனம்

# விஜயலட்சுமி அழகாய் வர்ணிக்க ஜெய் கூறும் ஒரு வசனத்துக்கு
ரசிகர்கள் கொந்தளித்து போய் விட்டார்கள்...

" அவளுக்குக்காக ஆயிரம் தாஜ்மகால கட்டலாம் மச்சி" என்பார்.

#விஜயலட்சுமி அவர்கள் அடிக்கடி

" ஐ கப்பல் " "ஐ ரெயின்போ"
என்று கூறும் வசனங்களில் தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

# படம் ஆரம்பித்து இருபது நிமிடம் டி.வி. சீரியல் மாதிரி
சென்றது, பின்னாடி இருந்து ஒருத்தர்

"யோ சீக்கரம் படத்தை போடுங்கயா".என்றார். அனைவரும்
குபீரென்று சிரித்தனர்.

இன்னொருவர் சிறிது நேரம் கழித்து

"எப்பா சேனல் மாத்துங்கப்பா" என்றார்.


# இதில் ஜெய் சில கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார்,
அது தான் செம காமெடி.

# படத்தின் ஒளிப்பதிவு தரத்தை பார்த்த ஒரு ரசிகர் அவர்
நண்பரிடம்

"டேய் ஷகீலா நடிச்ச மலையாள படம் மாதிரி படம் தெரியுது".

#படத்தில் பெரிய காமெடி இந்த சீன்தாங்க....



விஜயலட்சுமி சின்ன பசங்க கூட கண்ணாமூச்சி விளையாடும்
போது பார்க்கில் உள்ள இந்த பெஞ்ச்க்கு கீழ் தான் ஒளிந்து
இருப்பார், அதை பார்க்காத ஜெய் அவரின் கையை மிதித்து
விடுவார் ஒடனே லவ் ஸ்டார்ட்......

# படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து...

ஒருவர் டிக்கெட் போட்ட அவரின் நண்பனிடம்

" ராமசாமி கொடுத்த காசு ஊ ஊ ஊ,...".

இன்னொருவர் " யோவ் என் அம்பது ரூவாய கொடுங்க
கிளம்பி போய்டுறேன்" என்று கத்தினார்.

# அனைவரும் கொலைவெறியில் உக்காந்து இருக்க,டாய்லெட் போயிட்டு வந்த நண்பர் அவர் நண்பரிடம்

"எந்த முக்கியமான 'சீன்'னும் மிஸ் ஆகலையே" என்று சவுண்ட்டாக
கேட்டார்,அப்புறம் தியேட்டர் முழுவதும் சிரிப்பு சத்தம் தான்.

# ஒரு வசனம் விஜயலட்சுமி ஜெய்யிடம்

"எல்லா லவர்ஸ்க்கும் பிடிச்ச இடம் எது" என்று கேட்பார்

பின்னால் நண்பர்கள் "சுடுகாடு, சுடுகாடு" என்று கத்தினார்கள்.



# படத்தில் ஒரு காட்சியில் மழையில் விஜயலட்சுமியை நனையாமல் போய் லைப்ரரியில் விடுவதாக ஒரு கோட்டை வைத்து மறைத்து இருவரும் அண்ணா நகர் பூங்காவில் இருந்து இ.சி.ஆர் ரோட்டுக்கு நடந்தே வருவார்கள் திருப்பியும் அண்ணா நகர் போவார்கள். இதை கண்டு கோபம் அடைந்த பின் சீட் நண்பர்

"இவங்க தலைல எல்லாம் இடி விழாத".என்றார்.


(மேல உள்ளே படம் தான் அந்த சீன் )


# விஜயலட்சுமி சீன் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டாங்க
போல.... ஆனா யார் பாக்கறது???...

# லொள்ளு ஜீவா பல டைம் மொக்கை போடுகிறார், ஏதோ
அந்த பாரில் நடக்கும் காமெடி ஓகே.

# தியேட்டரில் கேட்ட முக்கா வாசி வசனம் இது தான்

*
மச்சான் முடியுல....

* சும்மா இருந்த என்னை கூட்டு வந்து.....

* எவன்டா இந்த படத்துக்கு கூப்ட்டது....


# நான் பாதி பார்த்ததுக்கே போஸ்ட் கொஞ்சம் பெருசா போகுது
மீதி படம் பார்த்தா அவ்வளவு தான்....

ஜெட்லி பரிந்துரை:

உங்களுக்கு வேண்டாதவங்க மற்றும் எதிரிகளை தூன்பத்தில்
ஆழ்த்த அதே நேரம் அதே இடம் டிக்கெட்டை இலவசமாக
வாங்கி கொடுத்து அனுப்புங்கள்.அதுக்கு அப்புறம் உங்க சைட்
வரவே மாட்டங்க..... அப்புறம் படத்தை முழுசா பார்த்தவங்க
கடைசியில் என்ன ஆச்சுன்னு பின்னூட்டத்தில் போடுங்க...


ஜெட்லி பஞ்ச்:

அதே அடி அதே (பயங்கர) வலி.


நன்றி
indiaglitz

இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு போடுங்க, கமெண்ட்
போட்டு போங்க......


உங்கள்
ஜெட்லி சரண்.

43 comments:

Successful-Failures said...

rotfllll ... sema adi vaangirupeenga pola .. lols

Successful-Failures said...

rotfllll ... sema adi vaangirupeenga pola .. lols

சங்கர் said...

நண்பா, நான் வேணும்னா இரண்டாவது பாதி பாத்துட்டு கதை சொல்லவா?

லோகு said...

//சங்கர் said...


நண்பா, நான் வேணும்னா இரண்டாவது பாதி பாத்துட்டு கதை சொல்லவா?
//

வீட்ல சொல்லிட்டு போங்க...

லோகு said...

அடுத்த முறை படம் பார்க்க போகும் போது நரி முகத்துல முழிச்சுட்டு போ மாப்ள.

பிரபாகர் said...

யப்பா... நன்றி ஜெட்லி... நிறைய பேர உசிரோட காப்பாத்திருக்கீங்க. வாழ்க உம் தொண்டு.

பிரபாகர்.

pradeep said...

super review...............itha antha pada directer pakkanum...............ivanuku ellam chance kudutha antha producer'a sollanum...............

தோழி said...

ha ha ha. Romba rasichu sirichennga. semma jollya irukkum pola padam. Naan Aadhavan padathaiye ivlo commnetsodathan pathen. Adutha padama. hmmm great

சரவணகுமரன் said...

ரொம்ப போர் அடிச்சிது... பார்த்திரலாமான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்... என்னை காப்பாத்திட்டே!

சரவணகுமரன் said...

அப்புறம் சா பூ த்ரி, தம்பியுடையான் இதெல்லாம் எப்படி இருக்குது?

வரதராஜலு .பூ said...

எவ்வளவோ செய்ஞ்சிருக்கிங்க. ரெண்டாதவது பாதி படத்தையும் ஃபுல்லா பாத்துட்டு விமர்சனம் பார்ட் 1, விமர்சனம் பார்ட் 2 அப்டின்னு பதிவுலக வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டு பாகமாக விமர்சனம் போட்டிருக்கலாமே நீங்க? மிஸ் பண்ணட்டிங்க பாஸ்?

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்ப சிரிச்சி வாசிச்ச விமர்சனம் தல.

ஹா ஹா ஹாஹ் சொல்லி வேலையில்ல.

உங்கள பார்த்தா பாவமாமாமாமாமாமாம இருக்குகுகுகு

Anbu said...

தலைவரே நல்ல விமர்சனம்...படம் பார்த்து ரொம்ப நொந்து போய் இருப்பீங்க போல...ஒரு பாட்டு ஒன்னு நல்லா இருக்குமே தல..

thiyaa said...

நல்லாத்தான் கதை சொல்லுறிங்க

யாரோ ஒருவர் said...

நல்லா விமர்ச்சிக்கிறீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

ha ha haa

super review saravanan...

ஜெட்லி... said...

@Successful-Failures

சந்தோசமா?? இல்லை வருத்தப்படுரிங்களா??

ஜெட்லி... said...

@ சங்கர்

நீ பார்க்கனும்னு இருந்த
பார்த்து தான் ஆவே,,,,




@லோகு

யாரு முகத்தில் முழித்தாலும் ஒன்னும்
ஆக போவதில்லை நண்பா... இருந்தாலும்
ட்ரை பண்றேன்....

ஜெட்லி... said...

@ பிரபாகர்

நன்றி நண்பரே...மக்கள்
தொண்டு தான் நமக்கு முக்கியம்.





@பிரதீப்

கரெக்ட்ஆ சொன்னிங்க பாஸ்....

ஜெட்லி... said...

@ தோழி

ரொம்ப நன்றிங்க... என்ன இருந்தாலும் மொக்கை படம்
பார்ப்பதில் கிடைக்கும் சுகமே தனி....
(அம்மா அந்த தலைவலி தைலம் கேட்டேனே எங்க??).
என்ன நான் சொல்றது சரி தானே....





@ சரவணகுமரன்

நண்பா.... எவ்வளவோ பார்த்துடோம் அதையும்
பார்ப்போம்...பை தி வே நீங்களும் வரிங்களா??

ஜெட்லி... said...

@வரதராஜுலு

உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு....
இருந்தாலும் எனக்கு ரிஸ்க் எடுக்க
விருப்பமில்லை... நான் வேணும்னா
டிக்கெட் எடுத்து தரேன் போய் பாருங்க...






@யோ

பல என்னை பார்த்து அப்படி தான் சொல்றாங்க யோ...

ஜெட்லி... said...

@ அன்பு

அட விடுப்பா... பாட்டா?? அப்படி
ஒன்னும் தெரியிலை ....




@ தியா

நன்றி ஜி....

ஜெட்லி... said...

@ திருமதி ஜெயசீலன்...

மிக்க நன்றிங்க...,,

Menaga Sathia said...

ஐயோ ஜெட்லி ரொம்ப பாவம்பா நீங்க.எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த மொக்கை படத்தை பார்த்து வேதனை பட்டுருக்கிங்கன்னு புரியுது.தலைப்பும் பொருத்தமா இருக்கு.

Dinesh said...

ஏனுங்க படம் அவ்ளோ மொக்கையாவா இருந்தது

Cable சங்கர் said...

நானே இன்னும் பாக்கலை அவ்வளவு தைரியமா..?

வினோத் கெளதம் said...

செம காமெடி..:)

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே நான் AVM ஸ்டுடியோவில் தயாரிப்பாளருடன் பார்த்தேன்.........படு மொக்கை ....
preview show எல்லாம் தயாரிப்பாளர் உறவினர் மொக்கை என்று கூட விமர்சனம் செய்ய முடியவில்லை......ஜமாளுடன் சேர்ந்து படம் பார்த்தேன்

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே நான் AVM ஸ்டுடியோவில் தயாரிப்பாளருடன் பார்த்தேன்.........படு மொக்கை ....
preview show எல்லாம் தயாரிப்பாளர் உறவினர் மொக்கை என்று கூட விமர்சனம் செய்ய முடியவில்லை......ஜமாளுடன் சேர்ந்து படம் பார்த்தேன்

Unknown said...

ஹையா ... அடுத்த மொக்க படம் இந்த சண்டே பசங்களோட போய்ட வேண்டியது தான்.....

ஜெட்லி... said...

@ வஸந்த்

என்ன சிரிப்பு..,என் டைம்
சரியில்லை வஸந்த்.



@ மேனகா

நீங்களாவது ஏன் கஷ்டத்தை புரிஞ்சிகிட்டிங்கலே...

ஜெட்லி... said...

@ தினேஷ்

என்ன கேள்வி இது நான் தான்
சொன்னேனே.... மரண மொக்கைனு




@ கேபிள் சங்கர்

தெரியாம பாத்துட்டேன் ஜி ...
நீங்க தெரியாம தியேட்டர் பக்கம் போய்ராதிங்க

ஜெட்லி... said...

@ வினோத்கௌதம்

என்ன சொல்றிங்களா ?? இல்லை எழுதினத
சொல்றிங்களா??



@ வெண்ணிறஇரவுகள்

உங்க பாடு பெரும்பாடு ஆச்சே....
எப்படி மூணு மணி நேரம் நல்லா இருக்குற மாதிரி சமாளிச்சிங்க??
உங்களக்கு ஜமால்க்கும் சகிப்பு தன்மை அதிகம் பாஸ்...

Jawahar said...

ரொம்ப சுவாரஸ்யம். தலைப்பையும் ஆரம்பத்தில் இருக்கும் படத்தையும் இணைத்துப் பார்த்தேன். இதொண்ணும் வலிக்கிற அ(இ)டியாத் தெரியலையே?

http://kgjawarlal.wordpress.com

சி. முருகேஷ் பாபு said...

நான் முழு படமும் பார்த்தேன்... பாதிக்கு மேலே படத்தைப் பார்க்க பயமா இருந்தது... அவங்க ஏதோ த்ரில்லர் மாதிரி எடுத்துட்டாங்கனு நினைச்சுடாதீங்க... எல்லோரும் இண்டர்வெல்ல கிளம்பிட்டாங்க!
இதையெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பாடமா வைக்கணும்!

Dinesh said...

நீங்க எப்படி இவ்ளோ தைரியசாலி ஆனிங்க ..எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ...

Naandanta Nee... said...

தியேட்டர் கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பரா இருக்குது. இன்னொருவாட்டி போயிட்டு வந்து இன்னும் என்னனென்ன கமண்ட்ஸ் எல்லாம் வருதுன்னு பாத்துட்டு வாங்க. உங்க ராசிக்கு கமண்ட்ஸ் மட்டும் நல்ல வரும் போல.

ஜெட்லி... said...

@ ஜவகார்

நீங்க வேணும்னா படம் பார்த்துட்டு சொல்லுங்க ஜி..
படம் அடியா இல்லை இடியானு....





@ முருகேஷ் பாபு..

ஒத்துக்குறேன்.. நீங்க ரொம்ப நல்லவர்...
அதுவும் இல்லாமா தையிரசாலி என்று..

ஜெட்லி... said...

@ தினேஷ்

எப்பா.. நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது??




@ நான் தான்டா... நீ

அவனா நீ??

வரதராஜலு .பூ said...

//நான் வேணும்னா
டிக்கெட் எடுத்து தரேன் போய் பாருங்க... //

ஏன் அய்யா இந்த கொலவெறி.

Admin said...

nalla veala ena kaapathitinga... inniku night show polannu irunthean...

Chitra said...

kalakkal. nallaa kalaaikireenga....... super appu, indha vimarsanam.

பெசொவி said...

இந்தப் படத்தை எடுத்தவங்களுக்கு என்னுடைய பல பல.......பல நன்றிகள்.

இல்லன்னா, இப்படி ஒரு நகைச்சுவை விருந்து நீங்க குடுத்திருப்பீங்களா?