Thursday, November 5, 2009

ஒரு வெயிற்பொழுதில்.....

ஒரு வெயிற்பொழுதில்.....

நம்மில் பலர் மெரீனா பீச்சுக்கு ஆதவன் தன் சூட்டை தணித்த பின் காற்று வாங்கவோ, காதலியை சந்திக்கவோ, குழந்தைகளுடன் விளையாடவோ,


நடைபயிற்சி செய்யவோ, அங்கு கூட்டமாக வரும் பெண்களை சைட் அடிக்கவோ,நண்பர்களை சந்திக்கவோ,சுண்டல் வாங்கி தின்னவோ, அல்லது ஏதாவது ஒரு வோவு க்கு சென்று இருப்போம்.

ஆனால் மதியம் நேரம் பன்னிரண்டு மணிக்கு போய் பார்த்து இருக்கிங்களா???
நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!.


பைக்கில் லைட் ஹவுஸ் அடைந்தவுடன் பச்சை பசேல் என்று
இருந்தது.சில பட்டாம்பூச்சிகள் என் மீது மோதியது.ஆனால் காந்தி
சிலை தாண்டிய பின் மரங்கள் அதிகமாக மரங்கள் இல்லை.
புல் கூட காய்ந்து இருந்தது, புல்லுக்கு தண்ணி அடிக்கும்
தானியங்கி கருவி நடைபாதையிலும் தண்ணி அடித்து வருவோர்
போவோர் மீதெல்லாம் தண்ணி அடித்தது.தண்ணி கஷ்டம் அப்படின்னு சொல்றாங்க ஆன இங்க தண்ணி வீணா போகுது!!.

சுற்றுலா பேருந்துகள் மற்றும் சில வேன்களை அதன்
டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் துடைத்து கொண்டு இருந்தார்கள்.
பொது இடத்தில் வண்டி கழுவ கூடாது என்ற சட்டம் என்ன ஆனது
என்று அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்???.தள்ளு வண்டி கடைக்கு
சிறிது காலம் தடை போட்டு இருந்தார்கள் ஆனால் மீண்டும் கடைகள் முன்பை விட அதிகமாவே வந்து விட்டது.


பீச்சில் எந்நேரமும் அலைகளுக்கு மட்டும் தான் ஓய்வில்லை
என்று நினைத்து இருந்தேன், ஆனால் அங்கு காதலர்கள் செய்யும்
சில்மிஷங்களுக்கும் ஓய்வில்லை என்று இன்று தான் புரிந்து
கொண்டேன். சில ஜோடி குடையுடன் வெயிலை சமாளித்து கொண்டு
தங்கள் வேலையை தொடர்ந்தனர், சிலர் தங்கள் துப்பட்டாவை
உபயோகித்து தங்களை மறைத்து கொண்டனர்.


பீச்சில் முக்கிய பிரச்சனையே மொபெட் ஒட்டி வரும் பெண்கள்
தான், கண்டிப்பாக அவர்கள் பின்னால் ஒரு ஆண்மகன் உட்கார்ந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்கள் வண்டி ஒட்டி கொண்டே பண்ணும் சில்மிஷத்தை பார்த்தால் நைட் தூக்கம் வராது. எப்பா என்னம்மா வண்டி ஒட்டுதுங்க(உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல).

பீச்சில் நம்மை போன்று நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே நீச்சல்
குளம், ஆனால் அதை ஒழுங்காக கிளீன் செய்வதே இல்லை.
நான் அந்த நீச்சல் குளத்துக்கு போய் ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது,
காரணம் நான் அங்கு கடைசியாக போன போது ஒருத்தன் சொன்ன
செய்தி தான் அது "தண்ணிரில் எலி இருக்குது" என்றான்.



என்னை போல் நீங்களும் என்றைக்காவது தனியாக மதிய நேர பீச்சுக்கு செல்லலாம், அதனால் சில குறிப்புகள்:

# உங்க வண்டியை உங்கள் கண் முன் நிறுத்தி வைத்தால் நல்லது.

# நீங்க பாட்டுக்கு கடலை பார்த்து போகும் போது குடை அழகிகள் மத்தியில் சிக்காமல் இருக்க வேண்டும்.

# கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.


மேல உள்ள தகவல்கள் அனைவரையும் சேர ஒட்டு போடுங்கள்...
கமெண்ட் பண்ணாலும் சந்தோசம்...

உங்கள்
ஜெட்லி சரண்.









13 comments:

Raju said...

என்னமோ போங்க எழுத்தாளரே...!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எங்க ஊருக்கு எப்ப பீச் வரும்?

thiyaa said...

அருமை, நல்லாயிருக்கு

மெரீனா பீஜ் கண்முன் நிற்கிறது

மணிஜி said...

நானும் போவதுண்டு சில சமயம்(ஆள் இடைத்தால்..அதாவது பேச்சு துணைக்கு)

Menaga Sathia said...

//நான் பார்த்ததன் விளைவு தான் இந்த பதிவு. நீ ஏன்டா பன்னண்டு மணிக்கு உச்சி வெயில்ல பீச்சுக்கு போனேன்னு கேக்க கூடாது.ஏன்னா, நானும் ஒரு எழுத்தாளன்னு ஊருக்குள்ள ரெண்டு பேரு பேசிக்கிறாங்க.ஒன்னு கண்ணு அவிஞ்சு போன மூணாவது தெரு பாட்டி இன்னொன்னு தமிழ் தெரியாத எதிர் வீட்டு பார்ட்டி!. // ஹா ஹா

யோ வொய்ஸ் (யோகா) said...

நீங்க ரொம்பபபபப நல்லவருன்னு நம்பிட்டோங்க

கடைக்குட்டி said...

நீங்க தனியா போனிங்கன்னு சொன்ன நாங்க நம்பனுமா???

நல்ல கதையா இருக்கே.. :-)

கடைக்குட்டி said...

ஒரு விஷயத்த விவரிக்கும் போது .. நாங்க உங்க கூட இருக்கனும்..

திருவான்மியூர் பத்தி நீங்க எழுதுனதுக்கும் இந்த பதிவிற்க்கும் முன்னேற்றம் தெரியுது...

தொடர்ந்து கற்றுக்கொள்வோம் :-)

பிரபாகர் said...

//கரை பக்கத்தில் சிறு படகு இருக்கிறது என்று ஏறி உட்கார்ந்து
விட வேண்டாம்... உள்ளே யாரவது இருந்தாலும் இருப்பார்கள்.
//
எட்டிப்பாத்து வாங்கி கட்டிட்டீரா?

உச்சி வெயில்ல பீச்... நல்லாத்தான் இருக்கு, படிக்க!

பிரபாகர்.

உங்கள் தோழி கிருத்திகா said...

aduthatha entha edathuku raid pogaporinga??

Azhagan said...

It is really a sad thing. In chennai, places like Childrens' park, Gandhi mandapam, valluvar kottam, marina,etc have become such nuisance. You cannot take the children to the Guindy Childrens' park!@, think about it. The people who are supposed to keep the place open to the public, allow antisocial elements for money to carry out such immoral activities inside the park. SHAME ON THE GOVERNMENT, esp the Corporation

ஜெட்லி... said...

@ ராஜு

நன்றி..

@ பழனி

டெல்லில பேசி மாத்தி உட்ருவோம் தல...

@ தியா

மிக்க நன்றி

@தண்டோரா

பேச்சு துணைக்கு போற மாதிரி தெரியிலையே....

@மேனகா

சிரிப்புக்கு நன்றி...

@ யோ

அதான் உண்மைப்பா...

@ கடைக்குட்டி

உனக்கு சந்தேக புத்தி ஜாஸ்தி. நான்
தனியாதான் போனேன்...

@ பிரபாகர்

நன்றி நண்பரே...

@ கிருத்திகா

சீக்ரெட்....

@ அழகன்

தாங்கள் கூறுவது சரிதான்...
நாம் என்ன செய்வது???

ஜோதிஜி said...

ரசித்தேன்