டிப்ஸ் -- எவன்யா கண்டுபிடிச்சான்???
நாம் சர்வருக்கு தரும் டிப்ஸின் விரிவாக்கம்:
TIPS - TO INSURE PROMPT SERVICE
நான் ரொம்ப பணக்கார தனமான ஹோட்டல்க்கு போய்
பழக்கம் இல்லை, எப்போதாவது முனியாண்டி விலாஸ், உடுப்பி ஹோட்டல்களில் சாப்பிட்டு காலத்தை ஒட்டி கொண்டிரிக்கிறேன்.
நான் டிப்ஸ் வைப்பது என் மூடு பொருத்து இருக்கு,அது எப்படின்னா
நான் கேக்காமல் சர்வர் அதிக சால்னா கொண்டு வந்தாலோ,
நான் கேக்காமல் ஆப்பாயிலில் அதிகமாக பேப்பர் போட்டு கொண்டு
வந்தாலோ கொடுப்பேங்க,முக்கியமா சீக்கரமா வந்த கொடுப்பேன்.
தினமும் ஹோட்டலில் சாப்பிடும் என் பாச்சிலர் நண்பர்கள் டிப்ஸ்
வைப்பது மிகவும் குறைவு.மூணு வேளையும் டிப்ஸ் வைக்கிற
காசில் ஒரு வேளை சாப்பிட்டு விடலாம் என்பதே காரணம்.
ஏதோ ஒரு பவனில் அன்றாடும் நடக்கும் நிகழ்ச்சி.
ரெண்டு கேரக்டர் ரெண்டு பேருமே அந்த பவனுக்கு தினமும்
செல்பவர்கள் ஒருவன் டிப்ஸ் கொடுப்பவன் மற்றவன்
டிப்ஸ் கொடுக்க மாட்டான்.டிப்ஸ் கொடுப்பவனுக்கு நீல நிற
எழுத்தும் டிப்ஸ் கொடுக்கதவனுக்கு சிகப்பு நிற எழுத்தும்....
1) ஹோட்டல் உள்ளே போகும் போதே எப்போதும் பரிமாறும்
சர்வர் உங்களை தான் கண்காணிக்கும் இடத்தில் உட்கார
சொல்வார்.
1) ஹோட்டல் முதலாளி தவிர வேறு யாருமே உங்களை
கண்டு கொள்ள மாட்டார்கள்.எங்கே இடம் காலியாக இருக்கோ
அங்கே போய் உட்கார வேண்டியதுதான்.
2) சர்வர் நீங்கள் உட்காரும் முன்னே தண்ணீர் வைப்பார்,
எப்போதும் கூட வருபவர் வரவில்லை என்றால் அவர் வரலையா
என்று அக்கறையாக விசாரிப்பார்.
2)பத்து நிமிஷம் உங்க பக்கம் சர்வர் வரவே மாட்டார்.
முன்னாடி கவனிப்பார் பின்னாடி கவனிப்பார் அப்புறம் தீடிர்னு
வந்து அடிப்பதை போல் "என்ன வேணும்" என்று கேட்பார், நாம்
தட்டு தடுமாறி இரண்டு இட்லி என்பதுக்குள் போய் விடுவார்.
(என்னது தண்ணியா?? அதெல்லாம் இட்லி வந்ததுக்கு அப்புறம்
தான் வரும்)
3) இரண்டு இட்லிக்கு கொஞ்சம் சட்னி அதிகமாவே இருக்கும்.
"வடை வேணுமா சார் சூட இருக்கு" என்று கேட்பார்.
3) நம்ம இட்லி ப்ளேட்இல் ஏதோ பெண்ணின் முகத்தில் பொட்டு
வைத்து போல் சட்னி இருக்கும்.சாம்பார் பாதி கிண்ணம் தான்
இருக்கும்.
4) நடுநடுவில் வந்து சாம்பார் போதும் என்றாலும் ஊத்து ஊத்து என்று ஊத்துவார், தட்டு சாம்பாரில் நிரம்பி வழியும்.
4) நம் கிண்ணத்தில் சாம்பார் காலியாகி விட்டாலும் சர்வர் நம்ம பக்கமே வரமாட்டார்.நாம கடுப்புல இருக்கும் போது வந்து "சார் சாம்பார் வேணுமா??" என்பார்.
5) தோசை சொல்லிடவா சார் இல்லை பூரியா என்று பயங்கரமா
கவனிப்பார்.
5) வேற ஏதாவது வேணுமா?? என்று அவர் கேட்பது நமக்கு
எழுந்து சீக்கரம் போட என்பது போல் இருக்கும்.
6) பில் கொண்டு வரும்போது "போதுமா சார் காப்பி வேணுமா"
என்று கேட்பார்.பில் என்பது ரூபாய் ஆச்சுனா கண்டிப்பா மீதி
இருபது ரூபாயில் ரெண்டு அஞ்சு ரூபாய் காயின் இருக்கும்.
6) பில்லை நாமே காஷ் கவுண்டரில் கட்ட வேண்டியது தான்.
நான் அனைத்து சர்வர்களையும் சொல்லவில்லை சில பேர்
அப்படி இருக்கின்றனர்.வர வர டிப்ஸ்இன் அர்த்தம் லஞ்சம்
கொடுப்பது போல் ஆகிவிட்டது....
கொசுறு செய்தி 1:
முன்னால் நடிகை ஸ்ரீதேவிக்கு ஹோட்டலில் டிப்ஸ் வைக்கும்
பழக்கம் இல்லை.
கொசுறு செய்தி 2:
pirates of carribean புகழ் ஜானி டேப் அவர்கள் சமீபத்தில் சிகாகோ
உணவகத்தில் 4,000 டாலர்கள் டிப்ஸ் அளித்துள்ளார்.
என் நெருங்கிய நண்பன் எப்போதும் கூறுவான் ஆங்கிலத்தில்
தனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை டிப்ஸ் என்று.
உங்களுக்கு இது போல் ஹோட்டல் மற்றும் டிப்ஸ் அனுபவம்
இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்வோம்.....
புடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க மக்களே.....
நன்றி
ஜெட்லி சரண்.
Tuesday, October 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நல்ல கட்டுரை. பகிர்வு.
எங்கூர்லேயும் சரி, ஆஸ்தராலியாவிலும் சரி இந்த டிப்ஸ் கொடுக்கும் & வாங்கும் பழக்கம் அறவே இல்லை. ஹொட்டேல் மட்டுமுன்னு நினைக்காதீங்க...எல்லா இடங்களிலும்தான். அதேபோல் மீதிச் சில்லரையை அது பத்து செண்ட்டாக இருந்தாலும் கவனமாத் திருப்பித்தருவாங்க.
டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் 22 வருசமா இல்லாமப் போயிருச்சு. அமெரிக்கா இன்னும் மற்ற நாடுகளில் பயணம் செஞ்சப்ப....... பெட்டிகலைக் கொண்டுவந்து ரூமில் வச்சுட்டு எதுக்குடா இந்த ஆள் நிக்கிறாருன்னுட்டு தேங்க்ஸ் சொல்லி அனுப்பி இருக்கேன். லுக் விட்டுட்டுப் போவாங்க.
ரொம்ப நாளுக்கப்புறம்தான் உறைச்சது..... அந்தப் பார்வைகளுக்குப் பொருள்.
'அட அல்பமே'
ஓட்டுப் போட்டாச்சு
ஹோட்டல்.. டிப்ஸ்..., நிறைய எழுதலாம். என் தம்பி ஒரு ஓட்டலுக்கு கூட்டி சென்றான். இட்லிக்கே மசால் வைக்க ஏக கவனிப்பு... எல்லாம் டிப்ஸ் செய்யும் மாயம்...
நல்லருக்கு சரண்.ஓட்டும் போட்டாச்சு...
பிரபாகர்.
ஹோட்டல் டிப்ஸ் நிறைய எழுதலாம்... என் தம்பி ஒரு ஓட்டலுக்கு கூட்டி சென்றான். இட்லிக்கே மசால் வைக்க ஏக கவனிப்பு... எல்லாம் டிப்ஸ் செய்யும் மாயம்...
நல்லருக்கு சரண். ஓட்டுக்கள போட்டாச்சு...
பிரபாகர்.
நல்லா போடுறீங்கய்யா டிப்ஸ், நானெல்லாம் சீக்கிரமா கொண்டு வந்தால் மாத்திரமே டிப்ஸ் கொடுப்பென். அரைகுறைய கொண்டு வந்தாலும் டிப்ஸ் கட்...
//
பில்லை நாமே காஷ் கவுண்டரில் கட்ட வேண்டியது தான்//
டிப்ஸ் வைக்காமல் இருப்பது பற்றிய டிப்ஸ்க்கு நன்றி
கரெக்ட் தான் மாப்ள... கிட்டத்தட்ட எல்லா சர்வரும் இப்படித்தான்... எனக்கு பெரும்பாலும் சிகப்பு கலர்தான்...
//பேப்பர்
பெப்பர் ??
//கொசுறு செய்தி 1:
ரொம்ப முக்கியம் :)
ஒரு ரெண்டு ரூவா கொடுத்தா என்ன குறைஞ்சு போச்சு ?
//மூணு வேளையும் டிப்ஸ் வைக்கிற
காசில் ஒரு வேளை சாப்பிட்டு விடலாம் என்பதே காரணம்.//
டிப்ஸ் பற்றியான உங்கள் பார்வை அருமை.........!
தினமும் ஹோட்டலில் சாப்பிடும் என் பாச்சிலர் நண்பர்கள் டிப்ஸ்
வைப்பது மிகவும் குறைவு.மூணு வேளையும் டிப்ஸ் வைக்கிற
காசில் ஒரு வேளை சாப்பிட்டு விடலாம் என்பதே காரணம்.
good one
@ முரளி கண்ணன்.
நன்றி அண்ணே
@துளசி கோபால்
நீங்கள் சொல்வது சரிதான்.
@SUREஷ் (பழனியிலிருந்து)
நன்றி
@பிரபாகர்
அஞ்சு ரூபாய் கொடுத்தால் செம
கவனிப்பு நண்பா....
@யோ வாய்ஸ்
கரெக்ட் யோ...
@தண்டோரா
நன்றி அண்ணே....
@லோகு
அட நீயும் நம்ம ஆளுதான்....
@பின்னோக்கி
எல்லாம் ஒரு பொதுஅறிவு தான் பாஸ்.
@செந்தழல் ரவி
ரெண்டு ரூவா கொடுத்தா திருப்பி நம்ம கிட்டைய கொடுத்துருவாங்க அண்ணே.....மினிமம் அஞ்சு தான்
ஜி.....
@Abdul K Raj
வருகைக்கு நன்றி நண்பரே...
சீக்கிரமா வந்தால் மட்டும் டிப்ஸ் கொடுப்பேன்... அருமையான பதிவு
நான் சர்வராக வேலை செய்த போது டிப்ஸ் வைக்காதவர்களுக்கு நிறைய சர்வீஸ் செய்வேன்!
அவர்களிடம் டிப்ஸ் வாங்கி காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டு!
@ சுரேஷ் பாபு
வருகைக்கு நன்றி.....
@ மேனகா
நன்றி அக்கா
@ வால் பையன்
உங்க கிட்ட பிடிச்சதே இந்த தன்னம்பிக்கை தான் ஜி...
கரெக்ட்டாத்தான் சொல்லியிருக்கீங்க சரவணன்
Post a Comment