Monday, October 26, 2009

உஷாரு மாமே உஷாரு!!

உஷாரு மாமே உஷாரு!!

************************
நன்றிகள் பல:

ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்.இந்த இடுகையை எங்களது நூறாவது
பாலோயர்க்கு சமர்ப்பணம்.


************************
"பஜார்ல உஷாரா இல்லனா நிஜார உருவிடுவானுங்க" அப்படின்னு
சென்னை பழமொழி ஒன்னு இருக்கு அது நூறு சதவிதம் உண்மை.
இந்த இடுகையில் சென்னையில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்
என்பதை பற்றி சில விஷயத்தை பார்ப்போம், பின்வரும் அனைத்தும்
பேப்பரில் படித்ததும் மற்றும் சொந்த அனுபவம் மட்டுமே.




இன்றைய ஹாட் இது தான்:

உங்களுக்கு பணம் தரவேண்டிய நபர் அல்லது தெரியாத நபரிடம் இருந்து பணத்தை பெறும்போது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாளாக இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.கள்ள நோட்டுக்கள் தாராள புழக்கத்தில் இருப்பது தான் காரணம்.பல பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்குவதில்லை.அதனால் கொஞ்சம் உஷாரா இருங்கோ மக்களே......


போனஸ் செய்தி:

நேற்று ஒருத்தன் கடைக்கு வந்து அரை லிட்டர் பெப்சிக்கு
ஆயிரம் ரூபாய் நீட்டறான், இன்னொருத்தன் ஆயிரம் ரூபாய்
நீட்டி அரை கிலோ சர்க்கரை கேக்குறான்......

பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதி :

தனிநபர்கள் ஏமாற்றும் விதம் :

நீங்க பஸ் ஸ்டாண்ட்ல பஸ்க்கு காத்திருக்கும் நேரத்தில் ஒரு
டிப் டாப் ஆசாமி உங்களிடம் வந்து "பர்ஸ் மிஸ் பண்ணிட்டேன்
ஊருக்கு போக காசில்ல" என்று நம்மை உருகும் அளவுக்கு சோகமாக
பேசுவார், அது அல்லாமல் தான் ஊர் போய் சென்றவுடன் மணிஆர்டர் செய்வதாக உங்கள் வீடு முகவரி கேட்பார்.நீங்கள் பணம் கொடுக்காமல் நகர்ந்து சென்றாலே நல்லது, பணம் கொடுத்து வீட்டு முகவரியும் கொடுத்தால் மொத்தமாக அபேஸ் செய்து விடுவார்கள்.

சிலர் பேசுவது உண்மையில் நெஞ்சை தொடுவது போல் இருக்கும்,
உண்மையிலே சில பேர் ஊருக்கு போக காசில்லாமல் இருப்பார்கள்
ஏமாற்று பேர்வழி என்று இதனால் அவர்களுக்கும் காசு கிடைக்காமல்
போகும். இது போல் காசு கேட்பவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று எங்கள் புலனாய்வு குழு கூறுகிறது.

குடும்பமாக ஏமாற்றும் விதம்:

இதுவும் மேல கூறியது போலதான்.என்ன இவர்கள் கைகுழந்தை
மற்றும் பொண்டாட்டியுடன் ஏமாற்றுவார்கள். இவர்களும் ஊருக்கு
போக காசில்லை என்று தான் கேட்பார்கள்.சிறு பிள்ளைகள் இருந்தால் ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் கேட்பார்கள்,பால் வாங்க பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். பால் வாங்க பணம் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அவர்கள் பிச்சை மற்றும் ஏமாற்றுவதை தட்டி கொடுத்த மாதிரி ஆகிவிடும். நாட்டுல வேலைக்கு ஆள் கிடைக்காம நிறைய பேர் கஷ்டப்படுறாங்க!!.

வங்கியின் வெளியே :

வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும் போது யாரவது ஒரு சிறுவன்
"சார் பத்து ரூபாய் கிழே விழுந்துடுச்சு" என்பான். நீங்கள் குனிந்து எடுத்தால் உங்கள் பை அபேஸ் செய்து பைக்கில் தப்பி விடுவார்கள். இந்த சம்பவத்தை நான் நேரில் பார்த்துள்ளேன்...ஆனால் பைக் ஆசாமியை யாராலும் பிடிக்க முடியவில்லை.ஜஸ்ட் ஒரு செகண்ட் தான் ஆள் எஸ்கேப்.


இது தான் ரொம்ப முக்கியம்:

நீங்க கார்லயோ இல்ல பைக்லயோ போகும் போது ஒருத்தர் உங்களை வழிமறைக்கலாம், உங்கள் வாகனத்தின் சாவியை எடுக்கலாம், உங்களை மரியாதை குறைவாக பேசலாம், அவங்க கிட்ட தூப்பாக்கி கூட இருக்கலாம், அவங்க கும்பலாவோ ரெண்டு பேர் ஆகாவோ கூட இருக்கலாம்,நீங்க காசில்லை அப்படின்னு கெஞ்சின கூட உங்களை விடமாட்டங்க,உங்களை
மடக்கி விட்டாலே நீங்கள் கண்டிப்பாக குறைந்தபட்சம் அம்பது ரூபாயாவது தண்டம் ஆழாமல் போக முடியாது.நாம ஒன்னும் பண்ண முடியாது அவர்கள் தான் நம் ஊர் டிராபிக் போலீஸ். இவர்களிடம் தப்பிக்க ஒரே வழி எங்கே போனாலும் நடந்து அல்லது அரசு பேருந்தில் செல்ல வேண்டும்.


இது போல் உங்களுக்கோ உங்கள் நண்பர்க்கோ ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

முடிஞ்ச ஓட்டும் போடுங்க....

நன்றி
ஜெட்லி சரண்.

15 comments:

லோகு said...

இது சென்னைல மட்டும் இல்ல, எல்லா ஊர்லயும் நடக்குது.. பஸ்சுக்கு காசில்லை என்று பிச்சை எடுப்பவர்களை நண்பர்களோடு சேர்ந்து கலாய்த்ததுண்டு....

நல்ல பதிவு மாப்ள..

பிரபாகர் said...

வாழ்த்துக்கள் நண்பா.... 100.....100000..... எங்கேயோ போயிட்டீங்க.... கலக்குங்கள்.

தமிலிஷ் ஒட்டுப்பட்டைய காணும்? தமிழ்மணத்துல தட்டிட்டேன்....

Anonymous said...

கடைசி பத்தி தாங்க அல்டிமேட்...

சித்து said...

வாழ்த்துக்கள் மச்சி.

நீ இதை சொல்ற நேத்து ஒரு கபோதி சரக்கு அடிக்க அஞ்சு ரூபா கொறையுது குடுங்கறான், இந்த கொடுமைய எங்க போய் சொல்றது???

புலவன் புலிகேசி said...

தல நான் 20 கொடுத்து தப்பித்தவன்

Menaga Sathia said...

100 பலோவர்ஸ்க்கு வாழ்த்துக்கள் ஜெட்லி,நல்ல பதிவு!!

ப்ரியமுடன் வசந்த் said...

ட்ராஃபிக் போலீஸ் மேட்டர் நச் சரவணன்

ஒரு லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்க அண்ணாச்சி....,

வளர்க உங்கள் விழிப்புணர்வுப் பணி

ரோஸ்விக் said...

நண்பா இது போன்ற அனுபவங்கள் எனக்கு நிறைய நடந்திருக்கிறது...கோபத்தின் உச்சியில் ஒருவனை அடித்தும் கூட இருக்கிறோம். எத்தனை தடவைதான் எங்ககிட்டையே வாங்குறது....

இன்னொன்றை விட்டுட்டீங்க...அவங்க உங்களுக்கு காசு கொடுத்து ஏமாத்துவாங்க. நல்ல, வெள்ளை வேட்டி சட்டையில இருப்பாக...நீங்க ஒட்டு போட்ட காசு கொடுப்பாக. அப்புறம் நிறைய்ய்ய்ய்ய்ய அல்வா தருவாங்க...அவங்ககிட்டயும் சூதானமா இருங்கப்பூ.


http://thisaikaati.blogspot.com

Anonymous said...

கடைசி விஷயம் சூப்பரா இருக்கு.. நானும் துப்பாக்கி எல்லாம் வெச்சிருப்பாங்கன்னு சொன்னதும் உண்மையாவே இப்படி எல்லாம் நடகுந்துன்னு நினைச்சிட்டேன் பா

ஜெட்லி... said...

@ லோகு

நன்றி மச்சி...



@ பிரபாகர்

மிக்க நன்றி நண்பரே..



@ மணி

நன்றி மணி..



@ சித்து

குடிமகன்களை திட்ட கூடாது மச்சி...
அரசு காஜன நிரம்புவதற்கு
அவர்கள் தான் காரணம்.



@ புலிகேசி

ஹோ.. இருபது ரூபாய் கூட வாங்குறாங்களா??



@ மேனகா

நன்றி அக்கா



@ ப்ரியமுடன் வசந்த்.

நன்றி நண்பா....


@சுரேஷ்

நன்றி டாக்டர் சார்...



@ரோஸ்விக்

எப்பா ஆளை விடு....



@ நாஸியா

நம்பினதுக்கு நன்றி.....

வரதராஜலு .பூ said...

இலட்சத்திற்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் சொன்னதுபோல பர்ஸ மிஸ் பண்ணிட்டேன்னு ஏமாத்தறவங்க இப்ப ரொம்ப அதிகமாயிட்டாங்க. இளகிய மனம் படைத்த பலரும் இன்றும் ஏமாறுகிறார்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

இப்படி எல்லாம் சொன்னா நம்மள மாதிரி ஆட்கள் எப்படி இனி திருடுறது..

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆமா இதுல நீங்க திருடுறவங்களுக்கு வழி சொல்லுறீங்களா இல்ல அறிவுரையா?

எப்படியோ நல்ல பதிவு தல..

ISR Selvakumar said...

இது போல ஆயிரம் அறிவுரைகளுடன் போஸ்டர் அடித்து ஒட்டினாலும், அந்த போஸ்டர்களின் முன்னாலேயே ஏமாறுவதும், ஏமாற்றுவதும் நடக்கும்.