Friday, October 23, 2009

சபலம்.

சபலம்.

"மச்சான் எத்தனை நாள்டா வீட்டிலியே....,," என்று இழுத்தான் சுரேஷ்.

"டேய்! வெளியே எல்லாம் வேணாம்டா, கண்ட கண்ட நோயெல்லாம்
வருதாம்" என்றான் அமுதன்.

"என்னடா டெய்லியும் ஒரே இதை பண்ண போர் அடிக்கும்டா,
வெளியே வா விதம்விதமா இருக்கும்" என்று அமுதனை
ஆசைப்படுத்தினான் சுரேஷ்.

"விதம்விதமா இருக்கும்,உள்ளே போகும் போது நல்லா தான் இருக்கும்,ஆனா எத்தனை பேர் பண்ணிட்டு போன எச்சையோ!"
என்று சுரேஷை எச்சரித்தான் அமுதன்.

"மச்சி டி.நகர்ல குஜராத்தி ஒன்னு இருக்குடா, ரேட் 600 ரூபாய் தான்டா"என்று ரேட்டை சொல்ல ஆரம்பித்தான் சுரேஷ்.

அமுதன் உதட்டை பிதுக்கினான்.

"அப்படி நம்ம ஊரு வேணாம்னா, அடையார்ல சைனீஸ் எப்படிடா?
ரேட் கொஞ்சம் அதிகம்டா ஆயிரம் ரூபாய்" அமுதனை
பொருட்படுத்தமால் நச்சரித்தான் சுரேஷ்.

"வேணாம் மச்சான், என் பொண்டாட்டி அவுங்க அப்பா வீட்டுக்கு போன டைம்ல என்னை யாரவது வெளிய பார்த்து அவகிட்ட சொன்னாங்க வை அவ்வளவுதான்"என்றான் பயத்தில் அமுதன்.


"ரைட் இதான் மேட்டர்ஆ!! கால் பண்ணா item வீட்டுக்கே வர போகுது....." சுரேஷ் வாய் மூடுவதற்க்குள்

"மச்சி அக்கம் பக்கத்தில் எல்லாம் ஒரு மாதிரி பார்ப்பாங்காட"
சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்த அமுதன் சொன்னான்.

"சைனீஸ் item வாசலுக்கு வந்த உடனே கதவை மூடிடாலம் மச்சி, அப்புறம் யாருக்கு தெரிய போகுது?" என்று கிளுகிளுப்பில் கூறினான் சுரேஷ்.

"மச்சான் அந்த டைம்ல யாரவது கதவை தட்டின பிரச்சனை தாண்ட,பக்கத்தில் எல்லாம் ஐயர் ஆளுங்கடா அப்புறம் உடனே வீட்டை காலி பண்ண சொல்வாங்க"வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறினான் அமுதன்.


"டேய் டோமர் !!நீயும் ஒரு வாரமா உன் பொண்டாட்டி வீட்ல இல்லாம வெறும் சப்பாத்தி, தோசை மட்டும் சாப்புடுற.சரி சைனீஸ் ஹோட்டல்க்கு போலாம்னு கூப்பிட்டா ரொம்ப
ஓவர்ஆ பண்ற. நீ சப்பாத்தியை சாப்பிட்டு தொலை. நான்
குஜராத்தி ஹோட்டல்க்கு போறேன். இன்னொரு தடவை நான் உன்னை வெளியே சாப்பிட கூப்பிட்டா என்னை செருப்பால அடிடா" என்று கோபத்தில் குஜராத்தி ஹோட்டலை நோக்கி நடந்தான் சுரேஷ்.

டிஸ்கி: இவ்ளோ நேரம் இவங்க பேசினது வெளியே போய் சாப்பிடறத பத்தி மட்டும் தான், வேணும்னா முதலில் இருந்து படிச்சு பாருங்க.

மக்களே கதை பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க, கமெண்ட் போட்ட கொஞ்சம் உற்சாகமா இருக்கும்.பார்த்து பண்ணுங்க.


உங்கள்
ஜெட்லி சரண்.

12 comments:

Cable சங்கர் said...

ஆரம்பிச்ச உடனேயே கண்டு பிடிச்சிட்டேன்.. சைனீஸ் மேட்டரை சொல்லியிருக்க கூடாது..

பிரபாகர் said...

சைனீஸ் அயிட்டத்த வெச்சு பில்டப்போட கதை... கலக்குங்க சரண். அருமையா இருக்கு.

பிரபாகர்.

மணிஜி said...

நச்..எதிர்பார்த்தேன்

ஜெட்லி... said...

@ கேபிள் சங்கர்...

அடுத்த வாட்டி இன்னும் கொஞ்சம் ட்ரை பண்றேன் ஜி...

@பிரபா

நன்றி நண்பரே

@ தண்டோரா

நன்றி அண்ணே, நான் வேற மாதிரி முடிக்கலாம்னு நினைச்சேன்.
ஆனா அது கேவலமா இருக்கும்னு இப்படியே முடிச்சிட்டேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

ஓட்டு போட்டாச்சி. ஓரளவுக்கு எதிர்பார்த்த முடிவுதான்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ.கே.., ஓ.கே..., சாப்பாடு மட்டும் பிரச்சனை மாதிரி தெரியலயே...,

Menaga Sathia said...

சைனீஸ் அயிட்டத்த வெச்சு பில்டப்போட கதை... கலக்குங்க ஜெட்லி..நல்லாயிருக்கு.இன்னும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்!!

Subankan said...

ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தது. ஆரம்பத்திலிருந்த ஒரு வசனம் காட்டிக்கொடுத்துவிட்டது.

velji said...

இன்னும் நிறைய வெரைட்டிஸ் காமிக்க போறீங்கன்னு ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இருந்தேன்.(நான் சாப்பாட்ட சொன்னேன்)

250WcurrentIsay said...

I knew the ending.... bulb ungalukkuthaan.... :)

ஜெட்லி... said...

@ யோ

கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு யோ....

@ சுரேஷ்

நீங்க ஏதோ சொல்ல வரீங்க.. ஆன புரியல. ஹீ ஹீ.

@ மேனகா

தாங்கள் ஊக்கத்திற்கு நன்றி அக்கா.

@ சுபங்கன்

எல்லாரும் அதை தான் சொல்றாங்க,,, அடுத்த தடவை
பார்ப்போம்.

@ விஜி

என்னப்பா இது....

@250WcurrentIsay

பல்புக்கு நன்றி நண்பரே

புலவன் புலிகேசி said...

பார்ரா.......இப்பிடித்தான் ஊருக்குள்ள நெறயப் பேர் திரியுறாங்க....