Monday, October 19, 2009

மச்சான்ஸ் நமீதாவின் ஜகன்மோகினி

நமீதாவின் ஜகன்மோகினி


"ஜெய் ஜ்வாலமுகி" டென்ஷன் ஆவாதிங்க இந்த வசனத்தை தான்
அடிக்கடி கோட்டா ஸ்ரீனிவாசன் படத்தில் பயன்ப்படுத்துவார்.
பல தியாகங்கள் பண்ணி தான் இந்த படத்தை நான் பார்த்தேன்.
முக்கியமாக என் ஆர்குட் நண்பர்கள் கேட்டதற்கு இணங்க இந்த
படத்தை பார்த்தேன் என்றே சொல்லலாம்.என்ன பண்றது நாப்பது
ரூபாய் இன்று தண்டம் ஆழ வேண்டியது என்று எழுதியுள்ளது
அதை யாரால் தடுக்க முடியும்.

ஜெயமாலினி நடித்து திறமை காட்டிய ஜெகன்மோகினி படத்தை
திருப்பி பார்த்தால் கூட இந்த படத்திற்கு பக்கத்தில் கூட வர முடியாது. ஜெயமாலினி படத்தில் உள்ள கிக் கூட இதில் இல்லை.
நம்ம மச்சான்ஸ் நமீதா திறமை காட்டியும் காட்டாமலும் நம்மை
நோகடிக்கிறார்.

நிஜம் ஜெகன்மோகினியில் நடித்த ராஜாதான் இந்த படத்தில் மன்னராக வருகிறார், இவரின் மகன் நமீதாவுடன் காதல் கொண்டது
பிடிக்காமல் நமீதாவை தீர்த்து கட்டுகிறார்.இதுக்கு மேல கதை
வேணுமா??. "ஜெய் ஜ்வாலமுகி" என்று மந்திரவாதியாக வருகிறார்
கோட்டா ஸ்ரீனிவாசன்.என்ன கொடுமை பாருங்க மன்னர் மட்டும்
நூப்பது வருஷம் முன்னாடி ஜெயமாலினி கூட டூயட் பாடுவாராம்,
ஆன அவர் புள்ளை டூயட் பாடுன எரியுது.


வடிவேல், ஏன் வாராரு எதுக்கு வாராருனு இயக்குனருக்கே வெளிச்சம்.வெண்ணிற ஆடை மூர்த்தி எப்போது போல் இரட்டை அர்த்த வசனங்களில் பிச்சு உதறுகிறார்.அப்புறம் நம்ம நிலா அக்கா
வாரங்க, இவங்களை பத்தி சொல்ல பெருசா இரண்டு விஷயம் இருக்கு. அற்புதமான நடிப்பு காதல் கொள்ளும் பார்வை அப்படின்னு
நான் சொன்ன நீங்க நம்பவா போறீங்க??.

அடுத்தது முக்கியமா இசை, ஏன் இளையராஜா வர வர இந்த
மாதிரி மொக்கை படத்துக்கு மொக்கையா மியூசிக் பண்றாரு அப்படின்னு தெரியுல.ஆன ஒன்னு மட்டும் தெரியுது இளையராஜா
அவர்கள் ராஜா காலத்து படத்துக்கு 90's டைப் மியூசிக் போட்டுட்டு
இருக்காரு.

தியேட்டர் நொறுக்ஸ்:

# என்னை கொடுமை பார்த்திங்களா, தியேட்டர் நொறுக்க்ஸ் எழுதலாம்னு பார்த்தா தியேட்டர்ல ஆளே இல்ல.

# மிச்சபடி பாப்கார்ன் ரொம்ப ஆறிபோய் இருந்தது.(ஒரு
வேளை முந்தா நேத்து போட்டதோ).

#"ஜெய் ஜ்வாலமுகி" ஜெட்லியை காப்பாத்து என்று வேண்டி கொள்ளுங்கள் .


ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம்னு தெரிஞ்சு போறது என் தப்பில்ல,
பத்து பேர் வந்தாலும் டிக்கெட் தாரன் பாருங்க அவன் தப்பு.

இந்த விமர்சனம் எல்லோரும் படிக்க ஒட்டு போடுங்க...

நன்றி: cinesnacks


அன்புடன்
ஜெட்லி சரண்.

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்ப இது அந்த மாதிரி படம் இல்லையா தல..,

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்!

இதுவும் புட்டுக்குச்சா!?

Dinesh said...

உங்க தைரியத்தை பாராட்டாம இருக்க முடியல ஜெட்லி

இராகவன் நைஜிரியா said...

voted

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆஹா சோ இதுக்கும் காசு செலவழிக்க தேவையில்லை

Admin said...

இந்த படத்தையும் விட்டு வைக்கலையா....

Admin said...

இந்த படத்தையும் விட்டு வைக்கலையா....

ஜெட்லி... said...

@ சுரேஷ்
எந்த மாதிரி படம்???

@ வால்

கண்டிப்பா....

@ தினேஷ்
மிக்க நன்றி...

@ ராகவன்

நன்றி சார்.

@ யோ

ஆன என் காசு போச்சே யோ!

@ சுரேஷ் பாபு
எதையும் தாங்கும் இதயம்
நண்பரே.

Menaga Sathia said...

//# என்னை கொடுமை பார்த்திங்களா, தியேட்டர் நொறுக்க்ஸ் எழுதலாம்னு பார்த்தா தியேட்டர்ல ஆளே இல்ல.

# மிச்சபடி பாப்கார்ன் ரொம்ப ஆறிபோய் இருந்தது.(ஒரு
வேளை முந்தா நேத்து போட்டதோ).

#"ஜெய் ஜ்வாலமுகி" ஜெட்லியை காப்பாத்து என்று வேண்டி கொள்ளுங்கள் .//ரொம்ப நொந்து போயிருக்கிங்க போல..இருந்தாலும் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதியதற்க்கு நன்றி ஜெட்லி!!

Cable சங்கர் said...

நானே பாக்கல.. உனக்கு அவ்வளவு தைரியமா..?

ஜெட்லி... said...

@மேனகா

நன்றி அக்கா..

@ கேபிள் சங்கர்

சும்மா டைம் பாஸ்க்கு போனேன் அண்ணே,
நமீதா அண்ணே !!! உங்களுக்கு தெரியாதாத...