Saturday, October 17, 2009

ஆதவன் - என் விமர்சனம்.

ஆதவன் - என் விமர்சனம்.

நான் ஆதவன் படம் பார்த்த அனுபவத்தை, ஆதவன் படம் பார்க்காத என் நண்பர்கள் குப்பன் மற்றும் சுப்பனிடம் பகிர்ந்தது இங்கே.....


குப்பன் : என்ன ஜெட்லி காலையிலேயே படமா?

ஜெட்லி; ஆமாம் மச்சி...காலையில ஏழு மணிக்கு எழுந்தேன், சும்மா மாயாஜால் இணையத்தை பார்த்தேன் எட்டு மணி ஷோ ப்ரீயா
இருந்தது, ஒடனே கிளம்பிட்டேன்.

சுப்பன்:அடப்பாவி! அங்கே ப்ளாக் டிக்கெட் ரேட்ல விப்பாங்க!

ஜெட்லி: சூர்யா, படம்னா சும்மாவா...

சுப்பன்: படம் எப்படி இருந்தது மச்சி?

ஜெட்லி: பராவாயில்லைடா, ஆஹா ஒஹோனு சொல்ல முடியாது.

குப்பன்:என்னடா இப்படி சொல்ற...

ஜெட்லி: போர் அடிக்காம போகுது,சில காட்சிகளில் அலுப்பு சலிப்பு
அடிக்குது மச்சி.

சுப்பன்: என்னடா கதை?

ஜெட்லி: போடறது தான் மச்சி கதை

குப்பன்: டேய்...

ஜெட்லி: அட கெட்ட எண்ணம் புடிச்சவனே, நான் சூரியாவோட
கேரக்டர் பத்தி சொன்னேன்டா...

குப்பன்: நீ என்ன சொல்ற, ஒன்னும் புரியுல மச்சி!

ஜெட்லி: அடேய் சூர்யா வந்து ஒரு கூலிப்படை கொலையாளி
ஆளை போட்டு தள்றது மட்டும் தான் அவர் வேலை, புரிஞ்சுதா?

சுப்பன்:புரியுது..இங்கிலீஷ் படம் வான்டட் மாதிரியா?

ஜெட்லி: சுப்பா கலக்குற...அந்த படத்தின் சில காட்சிகள் கூட
முதலில் வரும் மச்சி.

சுப்பன்: சூர்யா பைட் எப்படி மச்சி

ஜெட்லி: நாம கம்ப்யூட்டர்ல ஹல்க் கேம்ல அந்த பச்சை மனிதன்
பில்டிங் பில்டிங்கா பறப்பாரே அந்த மாதிரி சூர்யா பறக்கிறார்டா...

குப்பன்: அப்போ பைட் செம காமெடி..ஆமா பத்து வயசு பையனா சூரியா வராரமே எப்படி டா?

ஜெட்லி: கிராபிக்ஸ் தான்டா.பெரிய குறை சொல்ல முடியாது.
நல்லா பண்ணி இருக்காங்க.




சுப்பன்: வடிவேல் காமெடி நல்லா இருக்கா இல்ல கந்தசாமி மாதிரி
தானா?

ஜெட்லி: சீ.. இதுல உண்மையிலே சில சீன்ல சிரிக்க வைக்கிறார்டா.

குப்பன்: நயந்தாரா எப்படி திறமையை காமிச்சி இருக்காங்க..

ஜெட்லி: ரொம்ப இல்ல கொஞ்சம் தான், என்ன மறுபடியும் ஒரு
லூசு கதாநாயகி.

குப்பன்: நயந்தாரா இதுல லூசா?

ஜெட்லி: இல்லப்பா அவங்க கேரக்டர் பத்தி சொன்னேன்,எதை
சொன்னாலும் நம்புறாங்க.(நானும் தான் டைரக்டர் படத்தில்
சொன்னதெல்லாம் நம்பினேன்).

சுப்பன்: சரி, கடைசில என்ன சொல்ற படம் பார்க்கலாமா?

ஜெட்லி: சூர்யாவுக்காக ஒரு வாட்டி பாக்கலாம்.அப்புறம் இந்த
லாஜிக் அப்படின்னு ஒன்னு சொல்வாங்களே அதெல்லாம் படத்தில்
தேடக்கூடாது.இது வழக்கான ரவிக்குமார் படம், அதனால அது
எப்படி இது எப்படினு கேள்வி கேக்ககூடாது. சூர்யாவின் பிளாஷ்பேக்
காட்சிகள் நம்பமுடியுல.கடைசியில் பெப்சி விஜயன் உண்மையை
கூறும் காட்சிகள் காதில் முழம் முழமாக பூ வைத்த மாதிரி
இருக்கும்.

குப்பன்: அப்போ தீபாவளி ரேஸ்சில் முந்துவது யாரு?

ஜெட்லி: விறுவிறுப்பில் பேராண்மை வசூலில் ஆதவன்.வர்ட்டா..


இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு போடவும் முடிந்தால் கமெண்ட் செய்யவும்.

உங்கள்
ஜெட்லி சரண்.

12 comments:

Prathap Kumar S. said...

பழைய ஆனந்த விகடன்ல வர்ற மாதிரி டயலாக் விமர்சனம்...நல்லாருக்கு...

கதையை பத்தி எதாவது சொல்லிருக்கலாம்... ஒகே நானே பார்த்துர்றேன்...

இரும்புத்திரை said...

ஆதவன் விமர்சனம்

murali.. said...

exactly ths wht i felt.. After saw ths movie.

its nt so gud r so bad.. Infact i can say ths movie is better than Aegan n Villu.. Keep in mind Im nt Surya hardcore fan.. y mention this two movies bcoz happen to c Both ajith n vijay fans Mocking ths movie..

Once again..Movie s nt Gud ..at the same Its nt Shit.. trust me. Surya -Vadivel combo rocks ..

Unknown said...

movie is bore.Don't waste your money for watching this utter movie.Hope peranmai is good and it rocks(not yet watched but heard the gossip).KSR tried to give an Hoolywood movie but miserably failed in many areas.No logic in the whole movie.Aadhavan an Bull shit.

ARV Loshan said...

நம்ம விமர்சனமும் பாருங்கண்ணே..
http://loshan-loshan.blogspot.com/2009/10/blog-post_17.html

நம்ம இருவர் கருத்துக்களும் அப்பிடி சிங்க் ஆகின்றன..

காமெடியையும் சூர்யாவையும் பாடல்களையும் ரசிக்கலாம்.. அவ்வளவு தான்..

படத்தில் கடைசிக் காட்சியில் வருவது தவிர கே.எஸ்.ரவிக்குமார் மிஸ்ஸிங்

Subankan said...

இது எனது விமர்சனம்

ஆதவன் – முற்றுமுழுதாக ஒரு பார்வை

ISR Selvakumar said...

எனக்கு படம் பிடிக்கவே இல்லை.

ஜெட்லி... said...

@நாஞ்சில் பிரதாப்

மிக்க நன்றி.. படம் பார்த்துட்டு சொல்லுங்க.

@ முரளி

தாங்கள் கூறுவது உண்மையே...

@ கணேஷ்

ஒரு ஒரு மனுசனுக்கும் ஒரு ஒரு பீலிங்க்ஸ் பாஸ்...
பீ கூல்.

@ லோஷன்

தங்களின் அலசல் அருமை நண்பரே...

@ செல்வகுமார்

நீங்க சூர்யா படம்னு நினைச்சி போய் பார்த்து இருப்பிங்க,
அதுவே ரவிக்குமார் படம் நினைச்சி நீங்க போய் இருந்தா
உங்களுக்கு படம் சுமாராக இருந்திருக்கும் நண்பரே.......
ஆதவன், ரவிக்குமார் கைவண்ணமே.....

யோ வொய்ஸ் (யோகா) said...

தல நாங்க ரிஸ்க் எடுத்து பார்க்கலாமா வேண்டாமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

புது ஸ்டைல்ல எழுதி இருக்கீங்க நண்பா..நல்லா இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம்.. படம் ஒரு வாட்டி பார்க்கலாம். அவ்வளவுதான்..

ஜெட்லி... said...

@ யோ

நீயே ரிஸ்க் அப்படின்னு சொல்லிட்டே நான் வேறு என்ன
சொல்றது நண்பா...


@கார்த்திகை பாண்டியன்

இல்லான சில பேர் நான் முழு கதையும் சொல்லிடுறேன் அப்படின்னு பீல் பண்ணங்க அதான்
சின்னதா முடிச்சிட்டேன்....

Menaga Sathia said...

அப்போ சூர்யாவுக்காக படம் பார்க்கலாம்னு சொல்றீங்க,பார்த்துடுவோம்..