Saturday, October 10, 2009

காதல் தோல்வியா - கவலை வேண்டாம்

வாலிப வயோதிக அன்பர்களே, (ச்சீ ச்சீ, 'கவலை வேண்டாம்'னு டைட்டில் வச்சாலே இப்படி தான் ஆரம்பிக்க தோணுது)

முடிந்து போன காதலுக்கு முதலாமாண்டு அஞ்சலி கொண்டாடும்(!) இந்நேரத்தில் சக வீரர்களுக்கு (ஆணின் பார்வையில்) சில யோசனைகள்,

  • சிறிது காலத்திற்கு (குறைந்தது ஆறு மாதம்) வேறு ஓர் உறவை தேடிச் செல்லாதீர்கள், ஏனென்றால் மயக்கம் தெளிந்தபின் அடித்தால் தான் வலி தெரியும் (ஒரே நேரத்தில் நான்கைந்து வண்டிகளில் சவாரி செய்பவர்களுக்கு இது பொருந்தாது)
  • ஏற்கனவே அடுத்த ஆட்டம் தொடங்கி விட்டவர்களுக்கு ரீமேக் படத்திலும் ஹீரோவாக நடிக்கும் உணர்வு வந்தால் ஒன்றும் செய்வதற்கில்லை
  • காதலியோடு சென்று வந்த இடங்களுக்கு செல்வதை கூடியவரை தவிர்க்கலாம் (ஊரின் மூலைமுடுக்கு ஒன்று விடாமல் சுற்றியவர்கள் ஊரையே மாற்றிவிடுவது நல்லது)
  • மொபைல் நம்பரை மாற்றிவிடுவது உத்தமம் (இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட விருப்பம் உள்ளவர்கள் இதை பொருட்படுத்த தேவையில்லை)
  • முடித்தவரை தனிமையை தவிருங்கள், விட்டு போன நட்புக்களை புதுப்பிக்க இது தக்க சமயம் (உல்லாச சுற்றுலாக்கள் செல்லலாம், அங்கு நண்பர்களால் உண்டாகும் இம்சைகளுக்கு நான்பொறுப்பில்லை)
  • வார விடுமுறைகளில் நண்பர்களோடு சினிமா செல்லலாம் (அது தோரணையோ, மலை மலையோ, அழகர் மலையாகவோ கூட இருக்கலாம், எவ்வளவு மொக்கையோ அவ்வளவு நல்லது)
  • காதலிக்கு சகோதரிகள் இருந்தால் முயற்சியை அங்கு தொடரலாம் (மொத்தத்தில் அந்த குடும்பம் உருப்படக்கூடாது, அதுதானே குறிக்கோள்)
  • நண்பர்கள் திருமணங்களுக்கு தவறாமல் செல்லவும் (எங்கே யார் தென்படுவார்கள் என யாருக்கு தெரியும்)
  • காதலில் இருக்கும் சக நண்பர்களுக்கு, முன்னின்று திருமணம் செய்து வைக்கலாம் (நாலு பேருக்கு நல்லது பண்ணினா நமக்கு ஒரு நல்லது நடக்காதா)
  • காதலியின் கணவருடன் நட்பை வளர்த்து கொள்ளலாம் (நம்ம சொத்தை அவர் எடுத்து கொண்டதால், அவர் வீட்டு சொத்து ஏதாவது தேறுமா என பார்க்கத்தான்)
  • புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம், (அது மோகமுள்ளாகவோ, விஷ்ணுபுரமாகவோ ஏன் ஸீரோ டிகிரியாகவோ கூட இருக்கலாம்)
  • Blog எழுதலாம்
தங்கள் கருத்துக்கள் / அனுபவங்களை பின்னூட்டத்தில் சொல்லலாம், அப்படியே ஓட்டும் போட்டால் நன்றாக இருக்கும்

சங்கர்

9 comments:

பிரபாகர் said...

வணக்கம் தல.... நல்ல யோசனைகளை(?).... இதில் எதை கேட்டாலும் காதலில் தோல்வியுற்ற எவரும் உருப்படுவார்கள்(?).... வாழ்க உம் தொண்டு...

பிரபாகர்.

சங்கர் said...

ஏதோ, தமிழ் கூறும் நல்லுலகுக்கு நம்மாலான தொண்டு

சங்கர்

லோகு said...

அனுபவம் பேசுது போல... :)

வாங்க நண்பா.. ஜெட்லி தனி ஆளா கலக்கிட்டு இருந்தாரு.. இப்ப நீங்களும் அவருக்கு கை கொடுக்க வந்துட்டீங்க.. கலக்குங்க..

சங்கர் said...

//லோகு said...


அனுபவம் பேசுது போல... :) //

ஆம் நண்பரே

//வாங்க நண்பா.. ஜெட்லி தனி ஆளா கலக்கிட்டு இருந்தாரு.. இப்ப நீங்களும் அவருக்கு கை கொடுக்க வந்துட்டீங்க.. கலக்குங்க..//

நன்றி, எங்கள் முன்னோடி இளம் தொழிலதிபர் சித்துவை விட்டு விட்டீர்களே

லோகு said...

//
நன்றி, எங்கள் முன்னோடி இளம் தொழிலதிபர் சித்துவை விட்டு விட்டீர்களே //

அவரும் இப்போ அதிகமா எழுதறதில்லையே.. ஜெட்லி அவரை பார்த்தே ரொம்ப நாளாச்சுன்னு சொன்னார்.

லோகு said...

ஓட்டும் போட்டாச்சு.. தமிழிஸ் ல சேர்க்கலையா???

சித்து said...

என்னது நான் இளம் தொழிலதிபரா?? டேய் நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியல டா. புல்லு புடுங்குறவன் புண்ணாக்கு விக்கிரவன்லாம் தொழிலதிபராம் .... ஏன் மச்சி இப்படி என்ன கிண்டல் பண்ற?? நானே ஒரு காமெடி பீஸ்.

சித்து said...

அது ஒன்னும் இல்ல லோகு, கொஞ்சம் வேலை அதிகம். அதுவும் இல்லாம எனக்கு அந்தளவுக்கு சரியாய் எழுத வரல, நான் எழுதுனா யாரும் படிக்க வரல.

சங்கர் said...

//என்னது நான் இளம் தொழிலதிபரா?? டேய் நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியல டா. புல்லு புடுங்குறவன் புண்ணாக்கு விக்கிரவன்லாம் தொழிலதிபராம் .... ஏன் மச்சி இப்படி என்ன கிண்டல் பண்ற?? நானே ஒரு காமெடி பீஸ்.//

எங்களுக்கு உன்னோட தன்னடக்கம் பற்றி நல்லாவே தெரியும் நண்பா, நீ தினந்தோறும் Deal பண்ணும் பல 'C'கள் பற்றியும் தெரியும்