Friday, October 2, 2009

நாட்டு நடப்பு நல்லாத்தானே இருக்கு

இன்று காலை ஒரு வேலையாக நங்கநல்லூர் சென்றிருந்தேன், வழக்கமாக ஆள் நடமாட்டமே இருக்காத அந்த சாலையில் திடிரென்று ஒரு குவாலிஸ் வந்தது, முகப்பில் கட்சிக் கொடி, அதற்கு பின்னால ஒரு கூட்டம் ஆரவாரமாக வந்தது, ஒவ்வொருவர் கையிலும் கட்சி கொடி, வாயில் வாழ்க, வளர்க, ஜே என்றெல்லாம் கோஷம், இரு ஆட்டோக்கள் சில பைக்குகள், ஒரு ஸ்கார்பியோ பின்தொடர ஊர்வலம் சென்றது, அதன் பின் சென்ற மற்றொரு கும்பலில் இருந்த தெரிந்த முகம் ஒன்றை கேட்டேன், "என்ன ஊர்வலம் சார்" அவர் சொன்னார் "காந்தி ஜெயந்தி அமைதி ஊர்வலம்", முதலில் சரியாக புரியாத வாழ்த்து கோஷம் இப்போது புரிந்தது, "தலைவர் வாழ்க", "வாழும் காந்தி வாழ்க" மற்றும் தமிழ்நாட்டின் நிரந்தர ஊர்வல கோஷமான "இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா"

செய்யுங்கடா, செய்ங்க

நன்றி
சங்கர்

3 comments:

பிரபாகர் said...

//செய்யுங்கடா, செய்ங்க//

இதுக்கெல்லாம் டென்ஷனானா எப்படி சங்கர்...? திருந்த இன்னும் நாலு காந்தி வரனும்...

பிரபாகர்.

லோகு said...

இந்த ஊர்வலத்துக்கும், குவார்ட்டரும், கோழி பிரியாணியும் கொடுத்து தான் ஆள் சேர்த்து இருப்பாங்க.. (சரக்கு நேத்தே வாங்கி இருப்பாங்க)

சங்கர் said...

@பிரபாகர்
இது என்றும் திருந்தாத கூட்டம் தான், எல்லாத்தையும் அழித்து முதலில் இருந்து தொடங்குவது தான் ஒரே வழி

@லோகு
இன்றும் குவாட்டர் வாங்கலாமே, டாஸ்மாக் மூடினாலும் அக்கம் பக்கத்து கடைகளில் ப்ளாக்கில் விற்பது நமக்கு தெரியாதா என்ன