Thursday, October 1, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு(01.10.09)

என்னிடம் கேள்வி கேட்ட ட்ராபிக் சார்ஜன்ட்.

நான் சிவனேன்னு கடைல இருந்தேன், நம் நண்பர் ஒருவர்
வேலை முடித்து களைத்து வந்து என்னிடம் கொஞ்சம் கதை
பேசுவார்(அவர் யூத் இல்லை).அவர் உன்னை போல் ஒருவன்
படத்தை பத்தி ரொம்ப சிலாகித்து பேசினார்.அப்போ தான் அந்த
சம்பவம் நடந்தது......

ஒரு ட்ராபிக் சார்ஜன்ட் வந்து என்னிடம் காலண்டர் இருக்கா??
என்று கேட்டார்.

நான் ஓசியில் ஒரு காலண்டர் கேக்குறாரு போல நினைத்து
"அடிச்ச காலண்டர் தீர்ந்து போய் ஏழு மாசம் ஆச்சுங்க" என்றேன்
அப்பாவியாய்...

ரொம்ப டென்ஷன் ஆகி போனார் ட்ராபிக் சார்ஜன்ட்.

ஒரு வேளை நாளைக்கு அவர் ராசிக்கு என்ன போட்டு இருக்கு என்று பார்ப்பதற்கு கேக்குறாரு என்று நினைத்து

"நான் யூஸ் பண்ற காலண்டர் இருக்கு" என்றேன் நான்.

உடனே சார்ஜன்ட் "நாளைக்கு என்னப்பா??" என்றார்.

"நாளைக்கு காந்தி ஜெயந்தி" என்றேன்.

"ஹோ அப்படியா" என்று விறுவிறு என்று ரோட்டை நோக்கி
நடந்தார்.

என்னிடம் பேசிகொண்டிரிந்த நண்பர்" நாளைக்கு காந்தி பொறந்த
நாள், வைன் ஷாப் எல்லாம் லீவ்" என்று அவர் காதில் விழும்
படி கூறினார்.

ஆனா ட்ராபிக் சார்ஜன்ட் திரும்பி பார்க்கவே இல்லை,,

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காந்தியின்
பிறந்த நாளை கூட நினைவில் இல்லாமல் ஒரு அரசு அதிகாரி
முதல் நாள் இரவு எட்டு மணிக்கு வந்து நாளைக்கு என்ன

நாள் என்று கேக்கும் அளவுக்கு நாம் நாடு இருக்கிறது......

என்னத்த சொல்றது.... நாட்டு நடப்பு ரொம்ப கேவலமா இருக்கு!!

**********************************************

என்று தீரும் இந்த மந்தைவெளி பிரச்சனை:

மயிலாப்பூர் மற்றும் அடையார் நடுவில் இருக்கும் இடம் தான்
மந்தைவெளி.நான் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில்
இளநிலை படிக்கும் காலத்தில் இருந்தே ரோட்டை நொண்டி
நொங்கு எடுத்து விடுவார்கள். அந்த ரோட் சைடு போனாலே
புழுதி பறக்கும்.நான் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு ஆனா
இன்னும் அந்த சாலைகள் சரியாகவில்லை.


இப்போ திரும்பவும் ஆரம்பித்து இருக்கிறார்கள்.மயிலாப்பூர்

போனும்னா சுத்து சுத்துக்கிட்டு தான் போகணும்.இதை ஒரு
டைம் பாஸாக நம்ம குடிநீர் அல்லது கழிவு நீர் வாரியம்
பண்ணுதா என்று எனக்கு தெரியவில்லை.

பாவம் மந்தைவெளி மக்கள் வாகனம் போகும் தூசியே
அவர்களுக்கு பாதி நோயை கொண்டு வந்துவிடும்.எனக்கு
தெரிஞ்சு ஒரு ஆறு வருஷமா இந்த மாதிரி தொடர்ந்து நடந்துட்டு
வருது.இதற்கு எப்போது விடிவுகாலம் என்று தெரியவில்லை??

**************************************************

உங்கள்
ஜெட்லி சரண்.

3 comments:

shabi said...

அரசு அதிகாரியலாம் காந்தி பிறந்த நாளை நினைவு வச்சுக்கணும்னு எதும் சட்டமா எ.கொ.ஜெ.

பிரபாகர் said...

தல, இதுக்கெல்லாம் டென்ஷனானா எப்படி? நிறையா பேருக்கு கடை லீவுன்னாதான் அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள்னு தெரியும்...

கொஞ்சம் மாத்தி யோசிச்சி அது கூட தெரியாத அளவுக்கு டூட்டி பாக்கறாருன்னு நினைச்சிக்குங்களேன்...

பிரபாகர்.

யோ வொய்ஸ் (யோகா) said...

:))))