Friday, February 26, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - விமர்சனம்.

விண்ணைத்தாண்டி வருமா??

**********************************************



நான் இதுவரைக்கும் ஒரு பாட்டின் பாடகர் குரலுக்கு
இந்த மாதிரி கைத்தட்டு மக்கள் கொடுத்து இப்போது
தான் பார்க்கிறேன்.அந்த பாடல் மன்னிப்பாயா,ரகுமான்
பாடியது.




சிம்பு, நிறைய சொல்லலாம் இவரை பத்தி.ரொம்ப
அமைதியா, சவுண்ட் விடாம,பஞ்ச் பேசாம என்று
சொல்லி கொண்டே போகலாம்.முதலில் இவர்
த்ரிஷாவை இம்ப்ரெஸ் செய்ய பண்ணும் கலாட்டாக்கள்
நன்று.

த்ரிஷா, நல்லாவே திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க,
நடிப்பு திறமையை தான்!!அப்புறம் சிம்புவின் கூடவே
வரும் கேமராமேன் கேரக்டர் நல்லாவே கவுண்டர்
விடுறார்.அப்புறம் பழைய அர்ஜுன்,சத்யராஜ் படத்தில்
வில்லான வருவாரே அவர் இதிலும் வில்லனாக,,,,!

மனோஜ் அவர்களின் கேமரா கண்ணுக்கு குளுமை.
எனக்கு பொதுவா கௌதம் படங்களில் வந்த காதல்
சீன்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை,காரணம்
நாயகனும் நாயகியும் எப்போதும் ஒரே விஷயத்தை
மட்டும் தான் பேசுவாங்க.எனக்கு அது கொஞ்சம் போர்
அடிக்கும் அவ்வளவு தான்."எப்போ நடந்ததுனு தெரியல..
BUT I AM IN LOVE WITH U" என்று வசனம் வந்தால் அது
கௌதம் படம் தான்.ஏன்னா அவர் பாதி தமிழ் பாதி
இங்கிலீஷ் பண்ணி வசனம் எழுதுவார்...

அப்புறம் கௌதம் அவர்களிடம் இன்னொரு பிடிக்காத
விஷயம் *த்தா.... என்று அவர் எல்லா படத்திலும்
திணிக்கிறார் அதுவும் இல்லாமல் அவரே டப்பிங்
பேசுகிறார்.சென்னையின் மொழியாகி போன *த்தா... என்பதை ரோட்டில் கேட்டு கேட்டு புளிச்சு போச்சு அதை தியேட்டரிலும் கேக்கணுமா??



ஏ.ஆர்.ஆர் அவர்களின் பின்னணி இசையில் எனக்கு
பிடித்த இடம்...த்ரிஷா அண்ணனிடம் சிம்பு boxing
சண்டை போடும் காட்சி...அதாவது டப்பாங்குத்து
சவுண்ட் மாதிரி இருக்கும் ஆனா அதுவே கிளாஸ்ஆ
இருக்கும்!.....


படம் முதல் பாதி போர் அடிக்காம போது,ஆனா
ரெண்டாவது பாதி தான் கொஞ்சம் இல்ல ரொம்பவே
பொறுமையை சோதிச்சிட்டாங்க.சில இடங்களில்
இருவரும் தொடர்ந்து பேசுவது என்னால் தாங்க முடியவில்லை.ஆனா கடைசி ட்விஸ்ட் நல்லா இருந்தது..
பக்கா ஏ கிளாஸ் படம் அப்படின்னு சொல்லலாம்.
எனக்கு அவ்வளவா பிடிக்கலைங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# படத்தில் சிம்பு த்ரிஷாவை அடிக்கடி கட்டிபிடிப்பார்...

அதை பார்த்த பின் சீட்டுகாரர் "யோ என்னயா ஆனா
ஊனா கட்டி புடிச்சுக்கிறான்" என்று பீல் பண்ணினார்.
"லவ் பண்ணா கட்டி தான் புடிப்பாங்க வேற என்ன
பண்ணுவாங்க"னு கேட்கலாம் என்று நினைத்தேன்,,,
அதற்குள் பக்கத்துக்கு சீட்காரர் "சிம்பு கிஸ் அடி..ஹ்ம்"
என்று கத்தினார்..."என்னமோ கிரிக்கெட்ல சிக்ஸ் அடினு
சொல்ற மாதிரி இல்ல சொல்றார்" என்று நினைத்து கிஸ்
அடிக்கும் காட்சியை பார்த்தேன்....

# த்ரிஷா ஒரு காட்சியில்

"எனக்கு சினிமா புடிக்காது,ஏன்னா இருட்டு பிடிக்காது
எல்லாரும் கத்துவாங்க....." என்பார்...அதற்கு ஒரு
குரூப் "எங்களுக்கு இருட்டு தான் புடிக்கும்....%%&**"
என்று கத்தியது....

# படம் முடிய பத்து நிமிஷ முன்னாடி சிம்பு எடுத்த
படத்தை ரெண்டு பேரும் பார்ப்பார்கள்..அப்போது
அந்த படம் முடியும் போது "A FILM BY KARTHIK"
என்று கார்டு வரும்....இங்கே உடனே நம்ம தியேட்டர்
OPERATOR படம் முடிஞ்சு போச்சுனு லைட்ட போட்டாரு..
சில பேரு லைட்டை போட்டவுடன் மொக்கை தாங்காம
வெளியே போய்ட்டாங்க....அப்புறம் தான் படத்தில்
முக்கியமான ட்விஸ்ட்ஏ வந்தது!!



ஜெட்லி பஞ்ச்:

விண்ணைத்தாண்டி வருவாயா : வரும் ஆனா வராது...!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள்
ஒட்டு மற்றும் பின்னூட்டத்தை போடுங்கள்....


ஜெட்லி....

நன்றி : indiaglitz!

Thursday, February 25, 2010

சச்சின் - தொடர்பதிவு

சச்சின் - தொடர்பதிவு





நேற்று இரவு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடி,  சங்கத்தை உடனடியாக கலைத்து விடுவதைப் பற்றி அவசர ஆலோசனை நடத்தியதாகவும்,  ஆனால் ஒருநாள் போட்டியில் முன்னூறு அடிப்பது கடவுளின் அடுத்த சாதனையாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூறு முன்வைக்கப் பட்டதால், முடிவைத் தள்ளிவைத்து விட்டதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பை பார்த்து இதென்ன புதுசா ஒரு தொடர் பதிவுன்னு நினைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை

கிரிக்கெட் = சச்சின்

போன வாரமே, வலையுலக வழக்கறிஞர் அண்ணன் மோகன் குமார் இந்தப் பதிவைத் தொடர அழைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்கள் அழைக்கப்பட்ட அரைமணிக்குள் பதிவிட்டுவிட, நானும் இன்று, நாளை என்று நாட்களை ஓட்டிவந்தேன். ஆனால் நேற்று கடவுள் அடித்த இருநூறைப் பார்த்த பின்புதான் வேகம் வந்து இதோ பதிவிடுகிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும். 

. மிக மிக மிக மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர்?       சச்சின்

1. பிடித்த கிரிக்கெட் வீரர்  
    கபில், டிராவிட், கில்க்ரிஸ்ட் (ஆடும் ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்
     இங்கு முகிலனை வழிமொழிகிறேன், கவாஸ்கர்

3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்
   மெக்ராத் (ஆறு அல்ல அறுபது பந்து போட்டாலும் அதே லைனில் போடுவதால்)  (ஆடும்     ஆட்டத்திற்காக  (ஆடியோ இல்லாமல்) மட்டும்), வாசிம் அக்ரம், கபில், மிட்செல் ஜான்சன் (அது கையா? உலக்கையா?) , கும்ப்ளே 

4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்
   காலிஸ் (ஆள் மட்டும் வளர்ந்திருந்தாலும், 130 தாண்டி போடாததால்), ஸ்ட்வர்ட் பிராடு, நெக்ரா (சப்பாணி ஞாபகம் தான் வருகிறது)  அப்ரிடி,

5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்
   சக்லைன்,  ஷேன் வார்னே, முரளி, வெட்டோரி,சச்சின்  

6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்
   ஆஷ்லி ஜைல்ஸ்

7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
   சச்சின், டிராவிட் (200 கிமி வேகத்தில் போட்டாலும், பந்து பிட்சை தாண்டி போகாது), அசார் (அந்த ரிஸ்ட் ஒர்க்குக்காக)

8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்
    தோனி (வடிவேலு போல குழி வெட்டி ஆடுவதால்), தில்ஷான், அக்மல் 

9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
   கில்க்ரிஸ்ட், சங்ககாரா, லாயிட், 2004க்கு முந்தைய கங்குலி

10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர்
     கம்பீர்

11. பிடித்த களத்தடுப்பாளர்
    ஜடேஜா, ஜான்டி ரோட்ஸ், சச்சின் (தெ.ஆ முதல்  போட்டியில் கடைசி ஓவர் டைவ் போதாதா?)


12. பிடிக்காத களத்தடுப்பாளர்
     கங்குலி, சேவாக்

13. பிடித்த ஆல்ரவுண்டர்
     வெட்டோரி (அவர் அந்த அணிக்காக கீப்பிங் மட்டும் தான் இன்னும் செய்யவில்லை), கபில்தேவ், குளூஸ்னர்  

14. பிடித்த நடுவர்
   டேவிட் ஷெபெர்ட், சைமன் டோபல் 

15. பிடிக்காத நடுவர்
    ஜெயப் பிரகாஷ், ஹரிஹரன், (ஏதோ ஒரு) சாஸ்திரி 
 
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
    தல அடித்த சிக்சருக்கு "Its going, going, going, Gone "சொன்னவர்  (ரிச்சி பெனாட்?), ஹர்ஷா போக்ளே, மைக்கேல் ஹோல்டிங், என் எதிர் வீட்டு செல்லப்பா மாமா ((பதினைந்து வருடம் முன்) எங்கள் மொழிபெயர்ப்பாளர்)
   



17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் குறிப்பாய் யாருமில்லை
     ரவி சாஸ்திரி (இவர் பாராட்டி பேசினால் தல அவுட் ஆகி விடுவார்), 

18. பிடித்த அணி
     இந்தியா (சச்சின் இருப்பதனால் மட்டும்), எந்த ஒரு அணியும் (ஆஸ்திரேலியா எதிராக விளையாடும் போது)

19. பிடிக்காத அணி
     தனியா சொல்லணுமா?

20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி
      சச்சின் ஆடும் எந்த ஒரு போட்டியும்,

21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி
     சச்சினுக்கு ஓய்வு கொடுத்து இந்தியா ஆடும் எந்த ஒரு போட்டியும்,

22. பிடித்த அணி தலைவர்
      கபில், அசார் (ஆயிரம் குறை சொன்னாலும், ஒற்றை ஆளை நம்பி இருந்த அணியை, பத்து வருடம் வழி நடத்தியதற்காக), வெட்டோரி, கடந்த பத்தாண்டுகளில் மேஇ தீவுகளுக்கு காப்டனாய் இருந்த அனைவரும், தோனி (மச்சக்காரன்), ரணதுங்கா (காப்டன் கூல்), குரோனியே  

23. பிடிக்காத அணித்தலைவர்
      பின் குறிப்பை பார்க்கவும்     

24. பிடித்த போட்டி வகை
    ஒருநாள் போட்டி (தலையின் சமீப சாதனை இதில் தானே) 

25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
     சச்சின் – கங்குலி, கில்க்ரிஸ்ட் - ஹைடன் 


26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட  ஜோடி
      குறிப்பாய் யாருமில்லை

27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
     சச்சின், டிராவிட்

28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
    சச்சின், சச்சின், சச்சின், சச்சின்

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

அண்ணன் பிரபா
இரும்புத்திரை அரவிந்த் (இதை அவர் படித்தால்)
கேபிள் சங்கர்
MANO (பிற்சேர்க்கை)

வேறு யாரும் விரும்பினால் கூறலாம், பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்
 

பின் குறிப்பு

எனக்கு ரிக்கி பாண்டிங்கை பிடிக்காது என்று சொல்வதை விட அவரை வெறுக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் பிடிக்காத ஆட்டக்காரர்கள் பட்டியலில் அவரை சேர்க்கவும் மனம் வரவில்லை, ஏனென்றால் அவரை கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று சொல்லவே மனம் வரவில்லை.

முகிலனைப் போலவே எனக்கு ஆஸ்திரேலியா அணியைப் பிடிக்காது  ஏனென்றால் "Its not Cricket" என்ற தொடர் பயன்படுத்தப் பட்டு வந்த தொனியையும், அர்த்தத்தையும் மாற்றியதில் முதலிடம் அவர்களுக்குத்தான். அதையும் மீறி சில பச்சை தொப்பிக்காரர்கள்  பட்டியலில் இருப்பதற்கு அவர்கள் ஆட்டத்திறமையும் அவர்கள்  எப்போதாவது காட்டிவந்த நேர்மையும் மட்டுமே காரணம்.


படங்கள்  அனைத்தும் நான் பன்னிரண்டு ஆண்டுகளாய் பாதுகாத்து வரும் பிலிப்ஸ் விளம்பர புத்தகம் ஒன்றில் எடுக்கப் பட்டது


நன்றி
சங்கர்

Wednesday, February 24, 2010

முன்தினம் பார்த்தேனே

முன்தினம் பார்த்தேனே....-ஒரு பார்வை.

செவன்த் சேனல் மாணிக்கம் தயாரிப்பில்,கௌதம் மேனன்
சிஷ்யர் மகிழ் திருமேனி இயக்கத்தில்,தமன் இசையமைப்பில்,
புதுமுகங்கள் சஞ்சய்,ஏக்தா இன்னும் ரெண்டு நடிகை(பேர் எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு...) நடித்திருக்கும் படம் முன்தினம் பார்த்தேனே....கூடிய விரைவில் வெளிவரபோகும் படத்தின்பாடல்கள் பற்றி ஒரு பார்வை....

தமன் அடுத்து கமல் நடித்து கே.ஸ்.ரவிக்குமார் இயக்கம் யாவரும் கேளிர் படத்துக்கு இவர் தான் இசையமைக்க போகிறாராம்.ஈரம்,சிந்தனை செய் படத்தின் மூலம் தன்முத்திரையை பதித்ததமனின் இசையில் மற்றொரு படம்.இவர் இசையமைத்தமாஸ்கோவின் காவேரி படத்தின்பாட்டும் நன்றாக இருக்கும்,இன்னும் படம் தான் ரீலீஸ் ஆகிற மாதிரி தெரியலை.


************************************************

# இன்றே இன்றே : பாடலாசிரியர்- ப்ரியன்.

ரஞ்சித் வாய்ஸ்இல் ஒரு நல்ல காதல் பாட்டு...
அநேகமா இந்த பாட்டு ஹீரோவுக்கு காதல் பூக்கும்
போது வர பாட்டா இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஈரம் படத்தின் மழையே பாட்டை கேட்ட மாதிரி பீலிங்...

#பேசும் பூவே : பாடலாசிரியர்:விவேகா

கிருஷ் வாய்ஸ் தான் இந்த பாட்டில் ஸ்பெஷல்...
முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் பாட்டு சில
நொடிகளில் ஜெட் வேகத்தில் பறக்கிறது....
கிருஷ் அடிச்சு தூள் கிளப்பி இருக்கிறார்....

# மனதின் அடியில் : பாடலாசிரியர்:ப்ரியன்


பிரியதர்ஷனி குரலில்..குரலா ஆமாம் அவங்க
பாடுற சவுண்ட் கேக்கவே இல்லை...மியூசிக் பீட்
மட்டும் தான் கேக்குது...பார்ப்போம் போக போக
பிடிக்குதா என்று....

# மாயா : நரேஷ் ஐய்யர் பாடலாசிரியர்:ரோஹிணி

மாயா....மாயா என்று நரேஷின் குரலில் மெலடி
போகிறது....இந்த பாட்டும் எனக்கு பிடிக்கவில்லை...


# கனவென... : ஹரி சரண்,சுசித்ரா பாடலாசிரியர்:ரோஹிணி

சின்ன பாட்டு...ஹரி சரணின் குரலில் நன்றாக இருக்கிறது.
நடுவுல சுசித்ரா அக்கா இங்கிலீஷ்ல ஏதோ ஜிங்க்லஸ்
பாடுறாங்க....சத்தியமா ஒரு வார்த்தை கூட எனக்கு
புரியலை.... ஆ.அஅ ...ஹோ ஹோ என்று தமன் குரல்
வருகிறது.பல பாட்டில் கேட்டு இருந்தாலும் அலுக்க
வில்லை....


# முன்தினம் பார்த்தேன்...தமன் பாடலாசிரியர்: ப்ரியன்

ஜாஸ் ஸ்டைலில் வந்திருக்கும் பாடல்...ஜாஸ் மியூசிக்கும்
தமனின் குரலும் காதுகளை ஈர்க்கின்றன....கேட்க வேண்டிய பாடல்....

************************************************

தமன் சிந்தனை செய்மூலம் கவனிக்கப்படவில்லை
என்றாலும் ஈரம் மூலம் கவனிக்கப்பட்டார்(எனக்கு
சிந்தனை செய் பாடல்கள் பிடிக்கும்!!) .பொதுவா
அவரோட எல்லா பாடல்களிலும் அவரோட குரல்
ஆஆஆஆ... என்று வருகிறது.நல்லா இருந்தாலும் போக
போக சலிச்சுடும்.அப்புறம் இப்போ முன்தினம் பார்த்தேனே படத்தின் பாடல்கள் முன்னாடி வந்த ஈரம் பாடல்களையும் நினைவுப்படுத்தியது.வருங்காலத்தில் தமன் வித்தியாசமான இசைகளை நம் செவிக்கு விருந்தாக்கினால் நலம்!


முன்தினம் பார்த்தேனே பாடல்களை பற்றி கோவா ஜெய்
ஸ்டைல்லா சொல்லனும்னா

"நீங்க believeஒ notஒ நாலு பாட்டு chance no ...,my ears
are குளிரிங்...."


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நன்றி:INDIAGLITZ!!

இந்த படத்தின் பாடல்களை கேட்டு இருந்தால்
பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்....

ஜெட்லி....

Monday, February 22, 2010

ஆசிரியர் பதவி....!!

ஆசிரியர் பதவி....!!



வணக்கம்ங்க....என்னையும் நம்பி சீனா ஐயா அவர்கள்
என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக நியமித்து உள்ளார்.
இதில் இருந்தே உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் அவருக்கு
தைரியமும்,தன்னம்பிக்கையும் ஜாஸ்தினு.


சீனா ஐயா என்னை கூப்பிட்ட போது, நான் ரெண்டு
நாள் குப்புற படுத்து யோசிச்சேன்!!நம்மளையும்
நம்புராரே என்று.சரி,இப்போ நானும் ஆசிரியர் ஆகிட்டேன்....


வலைச்சரத்தில் ஜெட்லி


என்ற இந்த லிங்க்ஐ சொடுக்கி...அங்கேயும் வாங்க.....


நம்ம "ப்ளாக்"ளையும் கண்டிப்பா இந்த வாரம் ரெண்டுபோஸ்ட் இருக்கும்...முடிந்த வரை விண்ணை தாண்டிவருவாயா விமர்சனத்தை வழக்கம் போல் வெள்ளிக்கிழமையே போட முயற்சிப்பேன்....


உங்கள் ஆதரவை எதிர்ப்பார்க்கும்....

ஜெட்லி.....

Friday, February 19, 2010

ராஜலீலையும் தேவலீலையும்!!

ராஜலீலை-நமக்கு கற்று தரும் பாடம் என்ன??

நம்ம நாட்டுல குண்டு வெடிக்குது,காலேஜ்ல பசங்க
சண்டை போடுறாங்க,பெட்ரோல்,காஸ் விலை ஏத்த
போறாங்க,விலைவாசி உயர்வு,பல கோடி ஊழல்,
தனி மாநில பிரச்சனைகள்னு பல சாதாரண விஷயங்கள்
இருந்தாலும்.இப்போது நான் கையில் எடுத்திருக்கும்
இந்த சப்ஜெக்ட்ஐ யாருமே தொட தயங்குவார்கள்.
ஆம் அது தான் நம் நாட்டு மக்களுக்கு தேவையான
அதிமுக்கிய விஷயமான "ராஜலீலை-வெற்றியின்
ரகசியம்
"(இன்னைக்கு 50 வது நாள்!!)




நாலைந்து நாட்களாக என்ன பதிவு போடுவது என்று
யோசித்து திணறி போய் விட்டேன்,காரணம் நாம
போடுற பதிவு நாலு பேருக்காவது நல்லதாக அமைய
வேண்டும் என்று வழக்கம் போல் நினைத்தேன்.அது
போல் இந்த பதிவு மக்களின் சிந்தனையை தூண்டி
விடுவதாக அமைந்ததில் எனக்கு பேரின்பம்.

ராஜலீலை, சத்தியமா நான் இந்த படத்தை பார்க்கலாங்க....
படத்தில் பெருசா ஒன்னும் இல்லைன்னு பார்த்தவங்க
சில பேரு சொன்னாங்க அதான் போல!! நான் எப்பவுமே
பாக்காத படத்தை பற்றி தப்பாக பேசுவதில்லை.ஆனால்
ராஜலீலை பற்றி பேச காரணம் அவர்களின் விளம்பரம்.


ஒரு பேய் படத்தை ஏதோ தபு நடித்த அட்டு படம்
போல் விளம்பரம் செய்து காசு பண்றாங்க.இதை
நம்பி போறவன் காசு வேஸ்ட்தான்.இந்த விஷயம்
பல பேருக்கு தெரிஞ்சாலும் சில பேர் சபலப்பட்டு
இந்த மாதிரி படத்துக்கு போய்டுறாங்க.


ராஜலீலை-இளசுகளின் இன்ப எல்லை....

இந்த மாதிரி விளம்பரம் போட்டு என்னை மாதிரி
சிறுவர்களின் மனதை சலனப்படுத்துகிறார்கள்.
அடுத்த மாசம் வேற பரீட்சை வருது இந்த மாதிரி
நேரத்தில் இப்படியான விளம்பரத்தை போட்டு
எங்கள் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள்.

எங்கே போகும் இந்த பாதை??

ஒரு அட்டு படத்துக்கு இது போல் விளம்பரம் அளித்து
ஓட வைப்பதால் வரலாறு கொஞ்சம் தப்பா ஆயிடும்.
இது குறித்து நான் ஏற்கனவே யார் விதைத்த விதை?
என்ற இடுகையில் விலாவரியாக எழுதியுள்ளேன்.
"இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல்
வெற்றி" என்று ஹிந்தி டப்பிங் படத்துக்கு விளம்பரம்
செய்வதை யார் கேட்பார்கள்.....

கூடிய விரைவில் இது குறித்து ச.ம.கட்சியுடன்
பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த எங்கள் தெருமுனையில் கூட்டம்
போடலாம் என்று இருக்கிறோம்.இதுல ஒரு
பிரச்சனை என்னனா, எங்கள் தெருமுனையில்
வடை சுடும் ஆயா எங்களுக்கு இடம் கொடுக்க
மறுக்கிறார்.இந்த ஆயாவிடம் ஒரு அரைமணி
நேரம் அனுமதி வாங்கி தர அரசுக்கு கூடிய
விரைவில் மனு அளிக்க உள்ளோம்.


இந்த படத்தை பார்த்து அடுத்ததாக "தேவலீலை"னு
பேர் போட்டு அடுத்த படத்தை ஆரம்பிச்சாச்சு.....
ஸ்டில் எல்லாம் படுபயங்கரமா?? இருக்கு.சாம்பிள்
கிழே.....



ஒரு நிமிஷம்.. போன் கால் வருது....

ஜெட்லி: சொல்லு மாமே...

ராஜேஷ்: எப்படிடா இருக்கே...இன்னைக்கு என்ன படம்
பார்த்தே??

ஜெட்லி : இன்னைக்கு எதுவும் படம் வரலடா...

ராஜேஷ் : ரசிக்கும் சீமானே விமர்சனம் போடலையா??

ஜெட்லி : டேய்...என்ன கலாய்க்கிரியா??

ராஜேஷ் :என்னமோ மொக்கை படமே பார்க்காத மாதிரி
கேக்குற!!!

ஜெட்லி : சரி உடு...என்ன படம் புதுசா டவுன்லோட் பண்ணே??

ராஜேஷ் : புது படம் பிரிண்ட் சரியில்லைடா அதனால
பண்ணலா...ஏதோ ராஜலீலைனு ஒரு படம்
டவுன்லோட் பண்ணிருக்கேன்.

ஜெட்லி : சூப்பர்டா...ரைட் பண்ணி வை.அந்த பக்கம்
வரும் போது வாங்கிகிறேன்...bye டா...!!

ரைட்...எங்கே விட்டேன்...ஹ்ம்.இந்த மாதிரி படங்களை
முதலில் தடை செய்யனும்ங்க...நம்ம தமிழ் படத்தில்
A சான்றிதழ் வாங்கி இருந்ததுனா விளம்பரத்தில் ரொம்ப
சின்னதா போடுவாங்க...ஆனா ராஜலீலை மாதிரி
படத்தில் A தான் ரொம்ப பெருசா போடுவாங்க...


சரிங்க...நாம சொல்லி அவங்க இந்த மாதிரி
விளம்பரம் போடுறதை நிறுத்த போறதில்லை.
என்ன கொடுமைன்னு பார்த்திங்கனா இந்த
அம்பது நாள் விளம்பரத்தில் மூணே மூணு
தபு ஸ்டில் மட்டும் தான் வந்திருக்கு....
அட்லீஸ்ட் அதையாவது டெய்லியும் வேற
வேற ஸ்டில் போட்டால் நல்லா இருக்கும்!!


எந்த வித கொள்கையும் இல்லாமல் நாட்டு மக்கள்
நலனுக்காக சிந்தித்து கொண்டிருக்கும்....



ஜெட்லி.....


இந்த இடுகை பற்றி உங்கள் கமெண்ட்(பின்னூட்டம்)
மற்றும் ஓட்டை போடுமாறு கேட்டுகொள்கிறோம்.