Friday, July 31, 2009

சிந்தனை செய் - விமர்சனம்

சிந்தனை செய் --- நான் செய்யலையே???

நடிகரும் இயக்குனரும் ஆன யுவன் தான் படத்தின் நாயகன்.
அசப்பில் நடிகர் ரஞ்சித்தை போல் உள்ளார். யுவன்,சபி,நிதிஷ்,
பாலா மற்றும் செஷாந்த் ஐவரும் சிறுவயதில் ஒன்றாக பள்ளியில்
மிடில் பெஞ்சில் அமர்ந்த மாணவர்கள். படத்தின் ஆரம்பத்திலே
மிடில் பெஞ்ச் மாணவர்கள் எதுக்கும் லாயக்கில்லை என்று
கூறும் அறிமுக காட்சிகள் நன்று.இந்த படத்தில் நட்பின் அருமையை கூறவில்லை துரோகத்தை பற்றி கூறுகின்றனர்.

யுவனும் பாலாவும் விபச்சார விடுதிக்கு சென்று பணம்

இல்லாமல் செக் கொடுப்பது செம காமெடி, மேலும் போலீஸ்
ஸ்டேஷனில் மயில்சாமி மற்ற மூவரும் மாட்டி அடிவாங்குவது
அதை விட சூப்பர் காமெடி.சபியும் நிதிஷும் இடைவெளி
காட்சிக்கு முன் தான் வருகிறார்கள்.முதல் பதினைந்து
நிமிடம் திரைக்கதை கொஞ்சம் குழம்பினாலும் அப்புறம் தெளிவாகி விடுகிறது.

தனக்கு பிடித்ததை மட்டும் செய்யும் புதுமுக நாயகி மதுஷர்மா,
நாயகியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் பெருசாக மன்னிக்கவும் புதுசாக ஒன்னும் இல்லை. கல்யாணமான அடுத்த நாளே நீ
எனக்கு வேண்டாம் என்று சொல்வதெல்லாம் ஓவர். நல்ல
வேலை முதல் பாதியில் அவர்களின் காதல் காட்சியை
சீக்கிரம் முடித்து விட்டார்கள்.

படத்தின் இசை சுமார் ரகம் தான், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது,
அதை விட எடிட்டிங் அருமை.ஹீரோ யுவன் எப்போதும் கஞ்சா
அடித்தது போல திரிகிறார். காதல் தண்டபாணி அவரை

சந்திக்கும் முதல் காட்சிகள் அனைத்தும் நாடகம் பார்ப்பது
போல் இருந்தது.படத்தின் முதல் பாதி அதுவும் இன்டெர்வல்
பிளாக் இடத்தில் நல்ல முடிச்சு. முதல் பாதி உண்மையான ஜெட் வேகம்.

பப்ஸ் சாப்பிட்டு சீட்ல வந்து ஆவலா உக்காந்தா, ரெண்டாம்
பாதி முழுவதும் யூகிக்க முடிந்த திரைக்கதை.ஜஸ்ட் லைக் தட்
அவர்கள் பாங்கில் கொள்ளை அடிப்பது நம்பும் படி இல்லை,

ஆனா அதை வைத்து தான் கதையே. கொள்ளையடித்த பணத்தை
பங்கு போடும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது.
யுவன் ஏன் அப்படி செய்கிறார் என்பதுக்கு வலுவான காரணம்
இல்லை.

ஆக மொத்தத்தில் முதல் பாதி அருமை, இரண்டாம் பாதி????
இரண்டாம் பாதியில் வன்முறை கொஞ்சம் அதிகம் தான்.
ஒன்னுமே இல்லாத யுவனை ஒரே மாதத்தில் காதல் செய்து
கல்யாணம் செய்வது பிறகு விரட்டுவது திரும்பவும் சேர்வது
எதுவும் நம்பும் படி இல்லை.கருத்தெல்லாம் வேற சொல்றாரு
யுவன்.படத்தின் முதல் பாதிக்காக ஒரு தபா பாக்கலாம்ப்பா....... போறதுக்கு முன்னாடி எதுக்கும் நீங்களும் சிந்தனை செய்யுங்க.....


திரைக்கதையில் சொதப்பல்:

முதல் காட்சிக்கு அப்புறம் யுவனும் தண்டபாணியும் சந்திக்க
மாட்டர்கள், மேல உள்ள கலக்குறான் பாட்டில் தீடிரென்று காதல் தண்டபாணி தோன்றுவார், ஆனால் படத்தின் கடைசியில் நான் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சே, நீ இன்னும் உயிரோடவா இருக்க அன்னிக்கே நீ தற்கொலை பண்ணி செத்து இருப்பன்னு நினைச்சேன் என்று யுவனை பார்த்து கூறுவார்.பாட்டுக்கு மட்டும் ஏன் வந்தார். தண்டபாணி என்ன ரகசியவா?? , குத்து டான்ஸ் போடுறதுக்கு.இல்லனா தனியா விளம்பரத்துக்கு மட்டும் அந்த பாட்டை உபயோக படுத்தி இருக்கணும்.

ஜெட்லி பஞ்ச்:

முதல் பாதி ஸ்பீட்ஆ போன வண்டி , இரண்டாம் பாதி பஞ்சர் ஆச்சு..........

நீங்கள் படித்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.

நன்றி
indiaglitz

உங்கள்
ஜெட்லி

Thursday, July 30, 2009

நானும் கைப்பேசியும்

நானும் கைப்பேசியும்:

தீடிரென்று நேற்று என் கைப்பேசி வேலை செய்யவில்லை,
எப்படியும் யாரும் அழைக்க போவது இல்லையென்றாலும்
ஒரு முன் அறிவிப்பாக தெரிவித்து கொள்கிறேன்.
நேத்து மதியத்தில் இருந்து செத்த எனது கைப்பேசியை
இன்று தான் சரி பார்க்க கடையில் கொடுத்து உள்ளேன்.
அநேகமாக இன்று இரவு சரி செய்து வந்து விடும் என்று நம்புகிறேன். வீட்டுக்கு வந்தால் இல்லாத கைப்பேசியை அடிக்கடி தேடிகிறேன்.

இதுக்கு பேர் தான் மொபைல்இல்லாமல்இருக்கும்மேனியா என்று நினைக்கிறேன்.கைப்பேசி இல்லாததால் என் விரல்களுக்கு
எதையவாது அமுக்க வேண்டும் போல் தூண்டுகிறது(கைப்பேசியை
அழுத்துவது பற்றி தான் சொல்கிறேன்!!!).

நானும் புது கைப்பேசி வாங்க வேண்டும் என்று எண்ணி பல
மாதங்கள் ஆகிறது, என் நண்பர்களில் சில பேர் நான்
கைப்பேசி வாங்க வேண்டும் என்றாலே என்னை ஒரு
மாதிரி பார்ப்பார்கள். சில பேர் "மச்சான் இவனும் பல
வருஷமா சொல்றான் ஒன்னும் வாங்குற மாதிரி தெரியுல"
என்று கலாயிப்பவர்களும் உண்டு.(அப்படி சொன்ன
நண்பர்களில் ஒருவர் கல்லூரி முதல் வருடத்தில் மொபைல்
வாங்க வேண்டும் என்று கல்லூரி கணினி லேப் நேரத்தை
இணையத்தில் கழித்தான், ஆம் அவன் மொபைல் வாங்கி
விட்டான் எப்போது? மூன்றாம் ஆண்டு படிக்கும் போது!!!)



நான் இன்னும் ஏன் கைப்பேசி வாங்கவில்லை என்றால் மனதுக்கும்,

பணத்துக்கும் பிடித்த கைப்பேசி இன்று வரை வெளிவாரதது கைப்பேசி
நிறுவனங்களின் தவறு. இதைவிட முக்கிய காரணம் நான் இப்போது
உபயோகப்படுத்தும் கைப்பேசியின் செண்டிமெண்ட் தான்
காரணம்
என்று பலருக்கு தெரியாது(ஹி ஹி!!).

அப்புறம் இந்த இணையத்தில் வரும் கைப்பேசிகளின் விமர்சனத்தை

படித்தால் எனக்கு கைப்பேசி வாங்கணும் என்றாலே கசக்கிறது.
ஒன்னு இருந்தா ஒன்னு நல்லா இல்ல,என்று குறைகள் வேறு
கூறுகிறார்கள். ஆக மொத்தத்தில் அடுத்த மாதம் வெளி வர இருக்கும்
சோனி நைட் என்ற கைப்பேசியை வாங்க முடிவு செய்து இருக்கிறான்
இந்த ஜெட்லி.ஒரு நிமிஷம் இருங்க என் கைப்பேசியின் அழைப்பு
மணி போல் கேட்கிறது கிழே போய் பார்த்து விட்டு வருகிறேன்.

முடிஞ்சா ஒட்டு போடுங்க... உங்கள் சின்னம் tamilsh.

மேனியாவுடன்
ஜெட்லி

Wednesday, July 29, 2009

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை

கிளுகிளுப்பா இன்னொரு காதல் கதை :
(வயது வந்தவர்கள் மட்டும்)

"ஜூலீ இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே தெரியுமா...." எப்படியாவது ஜூலீயை இன்று கரெக்ட் செய்யும் நோக்கில் கூறினேன்.

"இன்னைக்கு அய்யா ரொம்ப மூடு போல..." என்றாள் ஜூலீ.

"ஆமாம் நீ என்னை ஒரு வாரமா பட்டினி போட்டுட்ட"
என்றேன் ஆதங்கத்துடன்.

அப்போது ஒரு கார் ஏற்றுவது போல் வந்தது, நானும் ஜூலீயும்
ஒதுங்கி நின்றோம்.

"என்னத்த காரை ஒட்டுறாங்களோ ஒரு ஹோர்ன் கூட அடிக்கிறதில்ல..." கோபத்துடன் கூறினாள் ஜூலீ.

"நேத்து நீயும் டேவிடும் சரசம் பண்ணிங்க போல, ஊர்ல
உள்ள எல்லாரும் சொல்றாங்க?"என்று கேட்டேன் நான்.

"அதான் இன்னைக்கு வேணாம்னு சொன்னேன்" என்று
நடையை கட்டினாள் ஜூலீ.

"நான் இன்னைக்கு ரொம்ப மூடாக இருக்கேன், உன்னை
விடமாட்டேன்" என்று அவளை மறித்து தேகத்தை முகர்ந்தேன்.
என் முத்தத்தை அவள் தேகம் முழுக்க பதித்தேன், அவள்
கொஞ்சம் முரண்டு பிடித்தாள்.

நான் அவள் முதுகை பிடித்து ஏறியதும் , தூரத்தில் இருந்து
வந்த ஒரு கல் என் முகத்தை பதம் பார்த்தது.

க்யோ க்யோ என்று கத்தி கொண்டே நாலு கால் பாய்ச்சலில்
குரைத்து கொண்டே ஓடினேன்.



இந்த மனுசங்களுக்கு தங்களை தவிர யார் காதல் செய்ஞ்சாலும் பிடிக்காது போல......





முந்தைய கிளுகிளுப்பு கதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
கிளுகிளுப்பா ஒரு காதல் கதை

பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க.....


உங்கள்
ஜெட்லி

© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.

Monday, July 27, 2009

மோதி விளையாடு....எங்கே போய் மோதுறது ???

மோதி விளையாடு....விமர்சனம்

ஜெட்லியின் முன்னுரை :

முதல் நாளே இந்த படத்தை பார்க்க பல பிளான்கள் போட்டு
அனைத்துமே நாசமா போச்சு....அடுத்த ரெண்டு நாளில் பல பேர் என்னிடம் இன்னும் படம் பார்க்கலியா??? என்று கேட்டு அதிசிய பட்டார்கள் என்பது மட்டும் உண்மை.ரைட் நாம படத்துக்கு வருவோம்....


சரண் படம்னாலே நாடகம் மாதிரி இருக்கும் என்பது எல்லோருக்கும்
தெரிந்த ஒன்று தான் அதில் இது மட்டும் என்ன விதிவிலக்கா?....
படத்தை ஒரு பில்லா ரேன்ஜ்க்கு எடுக்கனும்னு நினைச்சார் போல
நான் சொல்றது stylish மற்றும் ஒளிப்பதிவில்,ஆனா ஒபெநிங்
நல்ல தான் இருந்தது ஆனா பினிஷிங் சரி இல்லையே.

வினய் தன் சொந்த குரலில் பேசி நம்மை காதை மூட
வைக்கிறார். மற்ற படி வினய் நடிப்பு ஓகே ரகம்.
காஜல் அகர்வால், இந்த அனகோண்டா படத்துல பாம்பு
வந்து வெளியே தலையே நீட்டுமே அந்த மாதிரி அடிக்கடி
பார்க்கிறார். வினய் வீட்டில் காஜல் வேலை செய்வதெல்லாம்
சுத்த அக்மார்க் நாடகம்.

அடுத்து சந்தானம், கண்டிப்பா சிரிக்க வைக்கிறார் இவருக்கு
இன்னும் காட்சிகள் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்துருக்கும்.
கலாபவன் மணி பெரிய தொழில் அதிபர், ஆனால் செய்வது
எல்லாம் கேடிதனங்கள். இவரு படத்துல அடிக்கடி புல்ஷிட்(bull shit)
என்கிற வார்த்தையை பயன்படுத்துவார், உண்மையிலேயே
படத்தின் கடைசி நூப்பது நிமிடங்கள் தான் புல்ஷிட்.

ஹரிஹரன் இசையில் பாதி காதல், மோதி விளையாடு
ரெண்டும் கேக்கும் ரகம். படத்தில் காட்சிகளில் ஒரு
காட்சிதொடர்பு(continuity) என்பதே இல்லை, வீடு அடையார்
போட் கிளப் என்று காட்டுவார்கள் தீடிரென்று மலேசியாவில்
கார் சேசிங் நடக்கும், அப்புறம் அப்படியே பாண்டியை காட்டுவார்கள்.

மற்றபடி பெரிய குறை ஒன்றும் இல்லை, கத்தி பேசும் வசனம்
இல்லை, அரிவாள் சண்டை இல்லை, ஒருத்தர் நூறு பேரை
அடிப்பது போல் காட்சி இல்லை, முகம் சுளிக்கும் காட்சிகள்
இல்லை. சரண் அடிக்கடி படத்துல வேற தல(அஜித்) புராணம் பாடுறாரு... படம் என்னை பொறுத்த வரை சுமார் சுமார் ரகம்.
அவ்வளவு மொக்கையில்லை.....

இந்த விமர்சனம் பல மக்களை சென்று அடைய ஒட்டு போடுங்கள்.

நன்றி
indiaglitz

உங்கள்

ஜெட்லி.


© The content is copyrighted to JETLI and may not be reproduced on other websites.

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்திகள் இப்படித்தான் பரவுமோ...?

வதந்தி என்னும் தீ பரவுவது அவ்வளவு நல்லதில்லை.
ஐயோ! மேல உள்ளே வரி ரொம்ப சீரியஸ் ஆக இருக்கோ.
ரைட் மேட்டர்க்கு வரேன். நான் அப்போ எம்.சி.ஏ படிச்சிட்டு
இருந்தேன்(போன வருஷம் தாங்க).என்னோடைய சில
நண்பர்கள் மிக நல்லவர்கள். எப்போதும் ஒன்றை பத்தாக
திரித்து கூறும் நல்ல பழக்கம் உடையவர்கள்.

முக்கியமா தெரியாதவங்க யாரும் சிக்குனா டின் கட்டிரிவானுங்க.
சில உதாரணங்கள் கிழே....

கல்லூரி இடைவெளி போது நாங்கள் வழக்கமாக எதிரில்
இருக்கும் கடைக்கு சென்று டீ , சமோசா, பஜ்ஜி சாப்பிடுவது
வழக்கம்.ஒரு நாள் நண்பர்களுடன் செல்லும் போது டீக்கடையில்

சமோசா தட்டில் இருந்து ஒரு சமோசா கிழே விழுந்துவிட்டது, அந்த சமோசாவை மாஸ்டர் தட்டில் வைத்து கடைக்கு வந்த இன்னொரு பையனிடம் கொடுத்து விட்டார்.

இதை நான் பார்த்து விட்டேன்.நான் சும்மா இருந்தாலும்
என் வாய் சும்மா இருக்காது.....

"அண்ணே இரண்டு சமோசா, கிழே விழாததா கொடுங்க"
என்று கூறினேன்.

நண்பர் அனைவரும் சிரித்துவிட்டார்கள், மாஸ்டர்
கொஞ்சம் கடுப்பு ஆயிட்டார்.

இதே சம்பவத்தை ஆறு மாதம் கழித்து வேற ஒரு புது
நண்பனிடம் இப்படி கூறினார்கள் என் நண்பர்கள்:

# என்ன அண்ணே டீ கேட்டா பாதி டீ குடிச்சிட்டு
கொடுக்கிறிங்க, இவ்ளோ கம்மியா இருக்கு.

# என்னங்க பஜ்ஜி சுடுற எண்ணையே எப்போ
மாத்துவிங்க,பல வருஷமா ஒரே எண்ணையலேயே
சுடுரிங்க.

# ஏன்பா தேங்காய் சட்னி கேட்டா சுண்ணாம்பு தண்ணி
உத்துற?.....இப்படியெல்லாம் நான் சொன்னேனாம்...

யாரும் என்னை நம்பாமல் நீ சொல்ல கூடியவன் தாண்ட
என்று கலாய்ப்பார்கள்.

***************************************
என் வாழ்க்கையில் நான் கேட்ட சில உண்மை வதந்திகள்:

# சுனாமி வந்த அன்று.....

நாங்கள் இருப்பது திருவான்மியூர் தியாகராஜா தியேட்டர்
எதிரே, அன்று எனக்கு தெரிந்த ஒருவர் வந்து

"பார்த்துப்பா வண்ணாந்துறை பக்கம் போகதே கடல் தண்ணி இடுப்புக்கு மேல நிக்குதுப்பா... நான் போக முடியாம திரும்பி வந்துட்டேன்" என்றார்

வண்ணாந்துறை இருப்பது பெசன்ட் நகர் கடலில் இருந்து
ஒரு கிலோ மீட்டர் தள்ளி.... எனக்கு டவுட், அது எப்படி
அவளோ தூரம் தண்ணி வரும் என்று. நான் என் வண்டியை
எடுத்து கொண்டு போய் பார்ப்போம் என்று சென்றால்
ஒரு சொட்டு தண்ணி கூட பெசன்ட் நகர் பீச் மணலை
தாண்டி ரோட்டுக்கு வரவில்லை.ஆனா உண்மையில் பீச்
ஒட்டி உள்ள மக்கள் கஷ்டபட்டர்கள், பீச் முழுவதும் ஏதோ
போர் ஓய்ந்தது போல் இருந்தது.

# பூகம்பம் வந்த சமயம்:

அதே மாதிரி வேற ஒரு நாதாரி வந்து
" தம்பி அடையார் பிரிட்ஜ் வந்த பூகம்பத்துல்ல உடைஞ்சி
போச்சாம்ப்பா"

இந்த வாட்டி நான் உஷாராக

நீங்க போய் பார்த்திங்களா என்றேன்

இல்லப்பா அந்த பீடா கடைக்காரன் சொன்னான் என்றார்

சரி ரைட் அப்பவே புரிந்தது இதுவும் வதந்தி தான் என்று,
வதந்தி பரப்புவர்களின் நோக்கம் என்ன? அவர்களுக்கு
என்ன லாபம்? யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்....!!!
உங்களுக்கும் இது போல் அனுபவம் இருந்தால் பகிர்ந்து
கொள்ளுங்கள்......

முடிஞ்சா ஒட்டு போடுங்க......

கேள்வியோடு ??
ஜெட்லி