Tuesday, July 7, 2009

இதென்ன ரோடா இல்ல..........

நான் பெரும்பாலும் ஞாயிறு அன்று என் நண்பர்களுடன் பீச் ரோடு வழியாக மெரினா பீச் அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வது வழக்கம், அப்பொழுது நான் சாலைகளில் கண்டதை இங்கு கூறுகிறேன். சமீப காலமாக அதுவும் குறிப்பாக ஞாயிற்று கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டி சென்றோ அல்லது நடந்து சென்றோ விட்டு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தால் அது நம் முன்னோர் செய்த புண்ணியம் தான். இதற்கு முக்கிய காரணம் இரு சக்கர வாகனஓட்டிகள் தான், ஏதோ ரேஸ் ஓட்டுவது போல் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.


பொதுவாக இந்த சாலையில் சிக்னல் ரொம்ப கம்மியாக இருக்கும், அதனால் நல்ல வேகமாக செல்ல தூண்டும். ஆனால் நல்லா கூட்டமாக இருக்கும் (பெண்கள் கூட்டத்துக்கு கேட்க வேண்டுமா??) இதனால் ஒரு சவாலாக நல்லா வேகமா ஓட்டுறாங்க. இதில் மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. கூட ஒரு பொண்ணு இருந்தா இவனுங்க போற வேகம் இவர்களுக்கே தெரியாது, இவர்கள் வேறு ஒரு லோகத்தில் பறந்துகொண்டிருப்பதாக தான் ஒரு எண்ணம், அப்படியே கண்ட எடத்துல பிரேக் போடுறதும் பள்ளம் மேடு பாத்து பாத்து வேணும்னே ஏற வேண்டியது. பாவம் அந்த புள்ள ஒரு ஷேர் ஆட்டோ பயணம் தான், பெரும்பாலும் இவர்கள் காதலர்களாக தான் இருப்பார் அதனால் ஒரு வயசு முறுக்குல கொஞ்சம் வேகம் போவாங்க ஆனா ரொம்ப வேகம் போன பொண்ணு நல்லா பயத்துல தட்டுவா அதனால் இவர்களால் ஆபத்து கொஞ்சம் கம்மி தான்.

2. நம்ம பய தன நண்பன் கூட ஏதாவது வெட்டி கதை பேசிட்டே போவான், ஆனா வேற ஒருத்தன் சல்லுனு முந்திட்டா போதும் அவ்வளவு தான் சும்மா ஜல்லிக்கட்டு காளை மாதிரி வீறு கொண்டு எழுவான் இவன், உடனே இதை உணர்ந்து பின்னால இருக்கும் நண்பன் கெட்டியா புடிச்சிகிட்டா உண்டு, இல்லைனா அப்புறம் பாப்போம் மச்சினு ரேஸ் கெளம்பிடுவான் நம்ம ஆளு. இவங்களுக்கு ஈகோ தான் பிரச்சனை அதெப்படி karizma பெரிசா இல்லை Pulsar பெரிசா அப்படின்னு சோதனை பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க.



3. இந்த மூணாவது குரூப் தானுங்க டெர்ரர் குரூப் (அவரு மாதிரி டெர்ரர் கிடையாது (:P ). இவனுங்க எப்பவுமே பன்னி மாதிரி, ஒரு கூட்டமா தான் சுத்துவானுங்க இது வந்து ஒரு Gang War மாதிரி. இரண்டு மூன்று குழுக்கள் ஒரு ஏரியால இருப்பானுங்க ஒரு குழுவுக்கு குறைந்தது பத்து நபர் இருப்பானுங்க. ஒரு நபர் 150 ருபாய் கொடுக்கணும் ஆகா 1,500/- பெட் கட்டி ரேஸ் ஆரம்பம் ஆகும். அதாவது பாரிமுனை தொடங்கி லைட் ஹவுஸ் அல்லது பெசன்ட் நகர் வரை யார் அல்லது எந்த குழு முதலில் செல்கிறதோ அவர்களுக்கு தான் அந்த முழு தொகையும். இதற்காக இவர்கள் வண்டியில் பல்வேறு மாற்றங்களை செய்து வைத்திருக்கின்றனர். இந்த வெறி தான் பேய் மாதிரி இவர்கள் செல்வதற்கு காரணம், பத்து பதினைந்து வண்டிகள் தொடர்ச்சியாக நூறு KM வேகத்தில் ரோட்டில் சென்றால் எப்படி இருக்கும்?? இதனால் பெண்களும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கபடுகின்றனர். கரணம் தப்பினால் மரணம், சரி இவர்கள் இவ்வாறு சென்று செத்து தொலைத்தால் சரி, தான் செய்த தவறுக்கு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம் ஆனால் இவர்கள் குடும்பத்தினர்?? இவர்களால் ஏற்படும் விபத்தில் பாதிக்கப்படும் அப்பாவிகள்?? யோசிப்பார்களா?? அப்படி ஜெயிக்கும் பணமும் நேராக TASMAC தான் செல்லும்.



இந்த இடத்தில ஒரு சம்பவத்தை நான் கண்டிப்பாக கூற வேண்டும். அதாவது இந்த குழு ஒரு முறை சாந்தோம் சர்ச் எதிரில் ஒரு பேருந்தை முந்தும் பொழுது அங்கு ரோட்டை கடக்க முற்பட்ட ஒரு பெண்னை ஏற்றியதில் அந்த பெண் அங்கேயே இறந்து போனார், இவர்கள் ஒரு நொடி நின்னு கூட எந்த உதவியும் செய்யவில்லை. அந்த பெண் யாரோ அவர் குடும்பம் இன்று என்ன ஆச்சோ?? அது எனக்கு தெரியாது ஆனால் அந்த பெண்னை கொன்றனவனின் நிலை என்ன தெரியுமா?? சரியாக இரு மாதங்களுக்குள் அதே இடத்தில அதே மாதிரி ஒரு பேருந்தை முந்தும் பொழுது எதிரே வந்த பேருந்தில் அடி பட்டு அதே போல் செத்து போனான். இதை என்னவென்று சொல்வது?? விதியா?? அந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதா?? அவளின் குடும்பத்தாரின் சாபமா?? கடவுள் தண்டித்து விட்டாரா?? அதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் ரொம்ப கொடுமையான விஷயம் என்னவென்றால் அவனை அவன் நண்பர்கள் நின்று உதவவில்லை அதே போல் சரியாக இரண்டே வாரங்களில் மீண்டும் தங்கள் வேலையே தொடங்கிவிட்டனர். இதை நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம்.


இதுங்க வளர்ந்து கெட்டுபோனதுங்க இதுங்கள பாத்து வளர்ற பசங்க என்ன பண்ணுறாங்க தெரியுமா?? நம்ம மன்றோ சிலை இருக்குல, அந்த பக்கம் போகும் பொழுது ரொம்ப ஜாக்ரதையா போங்க. அங்க ஸ்கூல் பசங்க சைக்கிள்ல பண்ற வித்தை இருக்கே யப்பப்பா, இப்படி தான் நான் ஒரு நாள் வேலைய முடிச்சிட்டு இரவு ஒரு 08:30 மணிக்கு அந்த பக்கம் வந்துட்ருந்தேன் கரெக்டா அந்த சிலைய தாண்டியவுடன் நாடு ரோட்டில் ஒரு பத்து பசங்க சைக்கிள்ல முன் சக்கரத்த தூக்கிட்டு ஒரு சக்கரத்துல வேகமா ஓட்டிட்டு எனக்கு எதிர் திசைல வரானுங்க. கொஞ்சம் கூட பயம் இல்லை "இவனுங்க என்ன இடிசிடுவானுங்களா என்ன??" இப்படி ஒரு எண்ணம், சரியா அருகில் வந்தவுடன் அந்த மிலிடரி ரோடுக்குள் ஓடிட்டானுங்க. ஏதாவது கார் வேகமா வந்து இடிச்சா சட்னி தான்.

இந்த வித்தை காட்டுறது வேகமா போறது இதெல்லாம் பண்றதுக்கு தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் இருக்கே அங்க போய் பண்ண வேண்டியது தான?? யாரு வேண்டாம்னு சொன்னாங்க?? நம்ம காவல் துறையும் பாவமுங்க இதை ஒன்னும் பண்ண முடியல, முதல்ல இவங்க போற வேகத்துல ஏதாவது தடை பண்ணி அத பாக்காம இடிச்சி செத்து போனா பாவம் இவுங்க தலை தான் உருளும். அப்படியே புடிச்சிட்டா பெரிய எடத்துல இருந்து போன் வரும் உட்டுடுவாங்க.

நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்காதீங்க.

நன்றி.

சித்து.

Monday, July 6, 2009

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.

பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-2.

*************************************************************************

(கைக்கு எட்டனது வாய்க்கு எட்டலன்னு சொல்வாங்க....
ஆனா கைக்கே எட்ட மாட்டுகிதே.
என்ன கொடுமை சரவணா இது!......)



*************************************************************************

(என் உயிரே நீதான்....
நாளைக்கு எங்கே மீட்டிங்....)



*************************************************************************

தம்பி, இன்னும் சோடா வரல......


*************************************************************************

நாங்கெல்லாம் அட் எ டைம்ல வாய்ல இருந்து பாட்டில்
எடுக்காமலே குடிப்போம்லே......




*************************************************************************
யப்பா.. சரியா பத்த வைப்பா, இதை கூட ஒழுங்கா பத்த
வைக்க தெரியுல! நீயெல்லாம்.....



*************************************************************************
மட்டமான சரக்கா இருக்கும் போல, பாட்டில் காலியாயும்
போதை ஏறல மச்சி.....




*************************************************************************
வருங்கால சிம்பு....



*************************************************************************


பிஞ்சுல பழுத்த பசங்க பார்ட்-1 படிக்க கிளிக் செய்யுங்க....
எல்லாம் சும்மா தமாசுக்கு தான்ங்க.....
புடிச்சிருந்த ஒட்டு போடுங்க.....

உங்கள்
ஜெட்லி

Saturday, July 4, 2009

நண்பனின் காதல்.

நண்பனின் காதல்.(சிறுகதை)



என் நண்பன் முத்து உண்மையிலே மிக அருமையான நபர்,
நட்பு என்றால் என்ன என்று அந்த ஊருக்கு நாங்கள் தான் எடுத்துக்காட்டாக இருந்து வந்தோம்.ஒரே தட்டில் சாப்பிடுவது,
ஒரே க்ளாசில் சரக்கு அடிப்பது, முக்கியமாய் விட்டு கொடுத்து
செல்வது என்று எங்கள் நட்பு நன்றாக போய் கொண்டிரிந்த
சமயம், முத்து காதல் வயபட்டான். பக்கத்துக்கு ஊரில் தான்
டாவு கட்டும் பெண் இருப்பதாக என்னிடம் கூறினான்.

காதல் வந்தாலும் வந்தது பேனாவும் கையுமாக அலைந்தான்.

"என்னடே பேப்பர் பேனாவுமா சுத்துற" கேட்டேன்.

"இல்ல பங்காளி நம்ம ஆளுக்கு கவிதை கிறுக்கிட்டு இருக்கேன்"
என்றான்.

"நீயெல்லாம் கவிதை எழுதுரியா, மக்க செத்தாங்க போ"
என்று கிண்டல் அடித்து விட்டு படித்து காட்ட சொன்னேன்.

ஹ்ம் தொண்டையை சரி செய்து விட்டு முத்து தொடர்ந்தான்

"நீ இல்லாமல் நான் இல்லை
உன்னை என் நெஞ்சம் மறப்பதில்லை
அதனால் என் இதயம் சிறகடித்து பறப்பதில்லை
ஏன் என்றால் என் இதயம் என்னிடம் இல்லை"

"பின்னிட்ட போ, ஆமாம் இதை எங்கயோ படிச்ச மாதிரி
இருக்குடே" என்றேன்.

*************************************
கள் குடிக்க முத்துவும் நண்பனும் சென்றோம், முத்து போதை
ஏறியவுடன்

"பங்காளி இன்னொரு கவிதை இருக்கு கேக்குறியா" என்றான்.

சும்மாவே விடமாட்டான் இப்போ வேற போதை "ஹ்ம்ம் சொல்லுடே" என்றேன்

"டயரும் டியுபும் சேர்ந்தால் தான்
வீல் ஓடும்....
அது போல்
நானும் நீயும் சேர்ந்தால் தான்
என் வாழ்க்கை எனும் சக்கரம் ஓடும்."

க்க் என்று காரி தூப்பினேன், அவன் போதையில் கண்டு கொள்ளவில்லை.

***************************************
என்னிடம் அடிக்கடி பேசும்போதெல்லாம் தன் காதல் மேலும்
மேலும் இருகுவதாக கூறினான்.

"பங்காளி எனக்கு நீ தான் ஊரே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணி
வைக்கணும்டே, நான் நீ இருக்கிற நம்பிக்கையில் தான் பக்கத்துக்கு
ஊரு பொண்ணை லவ் பண்றேன்டே" என்றான்.

ஆஹா நம்மளை நம்பிட்டான் நாமதான் அவனை சேத்து வைக்கணும் என்று முடிவு பண்ணினேன்.

திரும்பவும் ஒரு கவிதை படிக்க ஆரம்பித்தான் கவிஞர் முத்து

"நான் ஒரு பித்தன்
உன் பின்னால் அலையும் சித்தன்
நீ ஒரு மல்கோவா
நாம் எப்போது போவோம் கோவா?..... "

என்னடே வர வர கேவலமா போகுது, நாம வேற நேத்து நாடோடிகள் படம் பார்த்தோம். எதுக்கும் அவன் காதலில்
ஸ்ட்ராங்காக இருக்கானானு பாப்போம்,அப்புறம் சேப்போம்.
என்று மனதில் நினைத்து விட்டு அன்று நடையை கட்டினேன்.
*********************

அன்று நான் நண்பர் கவிஞர் முத்து அவர்களின் கவிதை
என்று கிறுக்கிய புத்தகத்தை காண நேர்ந்தது, அதில் ஒரு
கவிதையை படித்த படித்த பின் புத்தகத்தை காரி தூப்பிவிட்டு, இனிமே அந்த நாய் சைடு தலை வைத்து படுப்பதில்லை என்று முடிவெடுத்தேன்.

அந்த கவிதையை நீங்களே படிங்கள்........


நீ எனக்கு
நான் உனக்கு
நடுவில் உன்
புருஷன் ஏதற்கு?

(டிஸ்கி:இதெல்லாம் கவிதைன்னு வேற சொல்ல வேண்டியதா இருக்கு, கள்ள காதல் பண்றவன் கூட கவிதை எழுத ஆரம்பிச்சிடானே! )

****************************************
புடிச்சிருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க, பிடிக்கிலனாலும்
ஒட்டு போடுங்க அதனால ஒன்னும் தப்பு இல்ல.


உங்கள்

ஜெட்லி

Friday, July 3, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....
*******************************************
நம் ஊர்களில் பேருந்துகளின் அவல நிலை....

கடந்த வாரம் நானும் எனது நண்பர்களும் ஒரு மினி பயணமாக மாம்மலபுரம் தாண்டி கடலூர்க்கு முன் இருக்கும் ஒரு இடத்துக்கு சென்றோம்.

(நாங்கள் இந்த பஸ்சில் செல்லவில்லை, வேற பஸ் படம் கிடைக்கவில்லை)


நாங்கள் ஏறிய பேருந்தில் இருக்கைகள் நிறைந்துவிட்டதால்
நாங்கள் அனைவரும் நின்று கொண்டே பயணித்தோம்.
அன்பு நண்பர் சின்ன தம்பி எனப்படும் சரவணன் அவர்கள்
பயண கழிப்பால் கண்டக்டர் அவர்களிடம் அனுமதி வாங்கி
டிரைவர் அருகே உக்காந்து கொண்டு வந்தார்.

நாங்கள் நின்று கொண்டே வந்தோம், E.C.R ரோட்டில் பஸ்
பறக்கும் என்று பார்த்தால். ஷேர் ஆட்டோகாரன் கூட எங்களை ஓவர்டேக் செய்து விட்டு போனான். எங்கள் பின்னாடி வந்த
அனைத்து பஸ்களும் எங்களை ஓவர்டேக் செய்து கொண்டு முன்னால் போனது.தீடிரென்று சரவணனிடம் இருந்து நண்பர் ராம் அவர்களுக்கு ஒரு sms ,

"டேய் டிரைவர்க்கு பஸ்ல ஆறாவது கீர் இருக்கிறது இப்பதாண்டா தெரியுது. இவ்வளவு நேரம் அஞ்சாவது கீர்லதான் வண்டி ஓட்டிட்டு வந்துருக்கார், அதை வேற டிரைவர் சிரிச்சிகிட்டே சொல்லி மாத்துறார் டா".

அவன் sms வந்த அஞ்சாவது நிமிஷத்தில் நாங்கள் இறங்க வேண்டிய பஸ் நிறுத்தம் வந்து விட்டது.

போனஸ் செய்தி:

பாவம் டிரைவர் இதுவரை ஐந்து கீர் உள்ள வண்டிதான் ஒட்டி
பழக்கமாம், அவரிடம் தீடிரென்று இந்த வண்டியை கொடுத்து உள்ளனர். அதுவும் இல்லாமல் வண்டி அடிக்கடி ஹீட் ஆகுதாம்.

(உங்க(டிரைவர்) குத்தமா அரசு குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல)

******************************

டிராபிக் போலீஸ்

(இன்னைக்கு எவனும் சிக்கலையே.....சுழ்நிலை பாட்டு:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி)


நீங்கள் பைக்கிலோ அல்லது காரிலோ போகும் போது உங்கள்
முன் ஆறு அல்லது எட்டு சக்கரம் கொண்ட லாரி சென்று
கொண்டிரிக்கலாம், அப்படினா அப்படியே பிரேக் போட்டு மெதுவா போங்க.தயவு செய்து அந்த லாரி பின்னால் போகாதிங்க, அது ஆட்டோ பின்னால் போவதற்கு சமம்.


ஏன்னா கண்டிப்பா அந்த ஸ்பீடாக வரும் லாரியை டிராபிக்
போலீஸ்காரர் கடமை உணர்ச்சியோடு கண்டிப்பாக நிறுத்துவார்.
ஆம் சென்னை நகரத்தில் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை அந்த லாரிகளுக்கு உள்ளே வர அனுமதியில்லை.


சரி அந்த போலீஸ்காரர் நிறுத்தி பைன் போடுவார்ன்னு மட்டும்
நினைக்காதிங்க, எல்லாம் இருபது,முப்பது வாங்கத்தான் நிறுத்துவார். இந்த மாதிரி லாரி ஓட்டுனர்கள் காசை கொடுப்பதை
நான் தினமும் பார்த்து கொண்டு தான் இருக்கேன். முக்காவாசி
காலையில் தான் இது நடக்கும், டிராபிக் போலீஸ்காரர் அந்த
லாரி பின்னால் எந்த வண்டி வருகிறது அல்லது சைடில் எந்த
வண்டி வருகிறது என்று எதுவுமே அவர்கள் பார்ப்பதில்லை.
அந்த லாரியை பார்த்தாலே கை போட்டு விடுவார்கள் பின்னாடி
வரவன் எவ்வளவு பாஸ்ட் வரான் என்றெல்லாம் பார்க்காமல்
அவர்கள் பாட்டுக்கு நிறுத்துவதால் பல விபத்துக்கள் நடப்பதற்கு
டிராபிக் போலீஸாரே காரணம் ஆகி விடுகின்றனர் என்பது
கசப்பான உண்மை.அவர்கள் அந்த லாரியை மடக்கி நிறுத்தும்
கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஜாம் ஆகி விடும்.


(நம்புங்க... இவங்க லாரியை மடக்க நிற்கவில்லை)


நான் அனைவரையும் சொல்லவில்லை, சில நல் உள்ளம் கொண்ட டிராபிக் போலீசாரும் நம் ஊரில் உள்ளனர். இந்த மாதிரி லாரியை
கண்டால் தூரத்தி கொண்டு போய் பணம் பிடிங்கிவிட்டு தான்
மறு வேலை பார்க்கும் போலீஸாரும் உள்ளனர்.

சரி மக்களே பார்த்து வண்டி ஒட்டுங்கோ......

(ராஜா வசூல் ராஜா, மாமூல் வாங்க போவது யாரு... நீதான்).

இது போல் உங்களுக்கும் அனுபவம் இருந்தால், கமெண்ட்ல
எழுதி எங்க கூட பகிர்ந்துக்கலாம்.

உங்கள்
ஜெட்லி.

Wednesday, July 1, 2009

பில்ட்-அப் ஆசாமிகள்.

உங்கள நண்பர் பில்ட்-அப் ஆசாமியா?

சில பில்ட்-அப் படங்கள்:



நாம் இதுவரை வாழ்வில் சந்தித்த நபர்களில் எவரேனும்
ஒருவரையாவது, அதாவது பில்ட்-அப் பார்ட்டிகளை
சந்திக்கமால் இருந்திருக்க வாய்ப்பில்லை. பில்ட்-அப்
பார்ட்டிகளின் நோக்கம் தாங்கள் நண்பர்கள் மத்தியில்
மதிப்போடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தெரியாதவற்றை பயங்கர பில்ட்-அப் செய்து கூறுவதே
இவர்களின் வேலை.

அது என் வாழ்வில் நான் சந்தித்த என் நெருங்கிய நண்பனின்
சில பில்ட்-அப்கள் இங்கே
,

எனக்கு கல்லூரியில் முதல் நாள் கிடைத்த முதல் நண்பன்
குமார்(பெயர் மாற்றபட்டுள்ளது).கல்லூரி காலத்தின்
ஆரம்பத்தில் அவன் எந்த ஒரு விஷயத்தையும் மிகையாக
தான் சொல்லுவான், அப்போது எங்களுக்கு தெரியாது அவன்
பில்ட்-அப் பார்ட்டி என்று.முதல் முதலில் அவன் சிக்கியது
விஜய் நடித்த பகவதி படத்தால். எனக்கு கொஞ்சம் சினிமா
நியூஸ் அத்துபடி. அந்த டைம் பகவதி டிரைலர் டி.வி.யில்
காண்பித்தார்கள்.ஆனா பாடல்கள் ரிலீஸ் ஆகவில்லை.

குமார்: மச்சி பகவதி பாட்டு கேட்டியா? செமையா இருக்குடா...

ஜெட்லி: ஆமாண்டா டிரைலர்ல பார்த்தேன்.

குமார்: டேய் நான் பகவதி பாட்டு சி.டி வாங்கிட்டேன் டா....
எல்லாமே சூப்பர் பாட்டு.

ஜெட்லி: உன்கிட்ட பகவதி பாட்டு சி.டி இருக்குதா மச்சான்?,
இல்ல விஜய் , தேவா உங்க மாமாவா?

குமார்: சீ..நேத்து தாண்ட நானும் வீட்டாண்ட பசங்களும் போய்
வாங்கிட்டு வந்தோம்.

ஜெட்லி: டேய் யார்கிட்ட கதை உடுற, இன்னைக்கு பேப்பர்ல
பாட்டு அடுத்த வாரம் தான் ரிலீஸ் ஆகும்னு
போட்டுருக்கான்.....

குமார்: மச்சான் எப்படிடா கண்டுபிடிச்ச.... ச்சே .சாரி ஸ்மால்
மிஸ்டேக்.

அன்னைக்கு மாட்டினவன் என் நண்பன். அவனை ஒட்டுரத
கேக்கவா வேணும்.
**************************************************
இன்னும் சில சாம்பிள்:
(கிட்ட தட்ட தலைநகரம் வடிவேலு மாதிரி ஆனா இது நடந்து ஆறு
வருடங்கள் மேல் ஆகி விட்டது)

குமார்: நாங்கெல்லாம் அசோக் நகர்ல பெரிய ரவுடி பிளஸ்2
படிக்கும் போதே சாரை(வாத்தியாரை) கிணத்துல கயிறி கட்டி
இறுக்கி விட்ருவோம்.

நாங்கள் நண்பர்கள் அனைவரும் அப்படியா என்று வியப்போம்.

குமார்: ஒரு வாட்டி இப்படி தான் மச்சி, ரோட்ல சின்ன பிரச்னை
ஆச்சி. வடபழனி சிக்னல்ல கல்ல விட்டு சிக்னலை உடைசிட்டோம்.



குமார் இதை கூறியது முதல் வருடத்தில், எனக்கு குமாரின்
நண்பன் அசோக் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கடைசி வருடத்தில்
தான் கிடைத்தது.அசோக்கும் குமாரும் ஒன்றாகவே பள்ளி படிப்பை முடித்தனர்.அவனிடம் இதை பற்றி கேட்டேன்

ஜெட்லி: என்ன +2 படிக்கும் போது சாரை கயித்துல கட்டி கிணத்துல விட்டானாமே?

அசோக்: நாங்க படிக்கும் போது சொன்னாங்க, எப்பவோ எங்க
ஸ்கூல்ல நடந்தது.

ஜெட்லி: அப்ப அவன் இல்லையா ஸ்பாட்ல?.... அவன் இருந்த மாதிரி
சொன்னான்.

அசோக்:யாரு அவனா, ஸ்கூல்க்கு வந்தா முடிட்டு உட்கார்ந்துட்டு
வீட்டுக்கு வந்துடுவான்.

ஜெட்லி: அப்புறம் ஏதோ பிரச்சனையில் வடபழனி சிக்னல் உடைச்சிடனாமே?

அசோக்: ஹ ஹ.. நல்ல காமெடி. இந்த மாதிரி கதையெல்லாம் உங்ககிட்ட வேற சொல்றானா. அந்த சிக்னல் உடைஞ்சது உண்மை
ஆனா அதை அவன் உடைக்கல.



இன்னும் பல விஷயங்கள் நண்பனை பற்றி சொல்லலாம்.
ஆனால் அவன் பழகுவதற்கு இனிமையனவான், அன்பனாவன்.
நட்புக்காக உயிர் கொடுப்பன் மேலும் நட்புக்காக படத்தை
பத்து தடவை மேல் பார்த்தவன்.(சிம்ரனுக்காக பார்க்கவில்லை).
இன்னும் சில பேர் இருக்காங்க படம் போஸ்டர்
பார்த்துட்டு படம் பார்த்த மாதிரி கதை சொல்வாங்க.
உங்களுக்கும் ஏதாவது இந்த மாதிரி அனுபவம் இருந்தா
கமெண்ட் பண்ணுங்க.....

உங்கள்
ஜெட்லி