Tuesday, May 22, 2012

ப்ளாட் படும் பாடு....!!


ப்ளாட் படும் பாடு....!!
 
ஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை
நகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட்டு 
புடவையோடு கை சேர்த்து வரவேற்கிறார். சென்னைல ப்ளாட் வாங்கறது ரொம்ப
கஷ்டமான விஷயம் காரணம் ஒரு சதுர அடி 5000 மேல எங்கையோ போயிருச்சு.... 
ஆனா நாங்க சென்னை நகர்ல ஒரு சதுரடி   155 க்கு தரோம்...!!
 
நம்ம சென்னை நகர் தாம்பரத்தில் இருந்து வெறும் ரெண்டு மணி நேரத்தில
வந்துடும்...சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் திண்டிவனத்தில் இருந்து அம்பது
கிலோமீட்டர் மட்டுமே.... நம்ம டூபாக்கூர் கம்பெனி இது வரைக்கும் போட்ட நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மனைமேளாவில் காசு போட்ட அனைவருக்கும் நன்றி... 
இது எங்களின் நாற்பது ஒன்னாவது மனை பிரிவு,,, 
 
 
ஆறு மணி சீரியல்ல வர்ற கிழவர் வந்து..ஏன் இந்த மனையை வாங்கனும்னு 
சொல்ல வாராரு...எல்லாரும் சௌக்கியமா...?? சென்னைல மனை வாங்குறது எல்லாருக்கும் ஒரு கனவு..அதுக்கு தான் நம்ம டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் ..சென்னைக்கு பக்கத்திலே சென்னை  நகர் னு மனை பிரிவு போட்டு இருக்காங்க....இந்த இடம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பல  லட்சத்துக்கு போகும்னு சொல்றாங்க....
 
சரி மொதல்ல ஏன் இங்க மனையை வாங்கணும்....
 
1 .  நாம ஒரு இடத்துக்கு புதுசா போன முதல்ல நமக்கு வர பிரச்சனை தண்ணீ 
பிரச்சனை தாங்க....சென்னைல  எந்த டாஸ்மாக்ல பார்த்தாலும் நைட் ஏழு மணி 
மேல ஒரே கூட்டம்...அந்த கூட்டதில அடிச்சு பிடிச்சு ஒரு குவாட்டர் வாங்கறதுகுள்ள 
தாவு தீந்துறும்...அதுவே   நம்ம சென்னை  நகர்ல  இருந்து ரெண்டு கிலோ மீட்டர்  தள்ளி 
இருக்குற டாஸ்மாக் கடைல நைட் ஒன்பதரை மணிக்கு போன  ஈ காக்கா கூட   இருக்காது... ப்ரீயா போய்ட்டு அழகா சாப்பிட்டு வரலாம்....மனுஷனுக்கு நிம்மதி தான் முக்கியம். அது நம்ம சென்னை நகர்ல நிறையாவே  இருக்கு.குறிப்பா சொல்லனும்னா அந்த பார்ல இருக்குற சைட் டிஷ் போட்டி ,ரொம்ப அருமையா இருக்கும்....
 
2 . மனுஷனுக்கு தேவையான முக்கியமான இடம் நம்ம மனை மேலயே அமைஞ்சு இருக்கு.. ஆமாங்க சுடுகாடு தான் அது. நம்ம ப்ரோமொடர்ஸ் சுடுக்காட்டு நிலத்தோட  பாதியில் தான்  மனையை அமைச்சு இருக்காங்க ... அதே மாதிரி 6X6  அடியும் அவங்களே ப்ரீயா தோண்டியும் வச்சி இருக்காங்க..உங்களுக்கு எப்ப வேணும்னாலும் போய் படுத்துக்கலாம் என்பதே பெரிய சிறப்பு....!!
 
3 .  சின்ன பசங்க ரோட் ல விளையாடினாலும் நீங்க பயப்பட வேண்டாம் ஏன்னா இந்த பக்கம் ஒரு வண்டியும் வராது ,போகாது ....ரோடு இருந்தா தானே அந்த பிரச்சனையே....!!

##################################################################################

இந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் : டி.வி.யில் தினமும் மனை விளம்பரத்தை பார்த்து கடுப்பாகி  போன சங்கம் என்பதை தெரிவித்து கொல்கிறோம்.

************************************************************

சரவணா....

 
 

Wednesday, May 16, 2012

உலகப்பட வரிசையில்


mike testing....1...2...2...2..2..3....



Tuesday, May 11, 2010

உலகப்பட வரிசையில் குருசிஷ்யன் !!

குருசிஷ்யன் - சைட் பார்வை


"வாழ்க்கையே ஒரு விளையாட்டு...
நம்ம உடம்பு தான் மைதானம்...
அந்த உடம்பில் யார் வந்து விளையாடிட்டு போனா என்ன...."

இந்த வாழ்க்கை தத்துவத்தை படத்தில் உதிர்த்தவர் நமது
ஷகீலா என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
அகில உலக காஞ்சிபுரம் தேவநாதன் ரசிகர் மன்றம் சார்பில்
எங்கள் வாழ்த்துக்களை இயக்குனருக்கு தெரிவித்து கொள்கிறோம்.


இது ஒரு சிறந்த படம்ங்க....ஹலோ ஒரு நிமிஷம் முழுசா படிச்சுட்டு அப்புறம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணுங்க. உண்மையிலே இது ஒரு சிறந்த படம் எதுக்குன்னு கேட்டிங்கனா தள்ளிட்டு போறதுக்கு இது ஒரு சிறந்த படம்னு சொல்ல வந்தேன்.நான் பார்த்த தியேட்டரில் என்னையும் சேர்த்து நூப்பது பேர் தான் இருந்தோம்.அப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஏன்டா, தயாரிப்பாளர் கோடி கோடியா பணம் போட்டு படம் எடுத்தா அதை இப்படியா சொல்லுவே என்று நீங்கள் யாராவது கேட்கலாம். ஆனா இந்த குரு சிஷ்யன் படத்தை பார்த்தா நீங்க இப்படி கேட்க மாட்டிங்கனு இருநூறு சதவீதம் நான் நம்புறேன்.


அகில கெரகம் சுந்தர்.சி நாறபணி மன்றம் சார்பாக இந்த விமர்சனத்தை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.படத்தோட கதை பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் அதன் திரைக்கதையை எங்க பக்கத்துக்கு வீட்டு அஞ்சு வயசு பையன் கூட சொல்லிவிடுவான் என்பது படத்தின் ஹைலைட். சுந்தர்.சி வழக்கம் போல் சூப்பர் பாக்கு தலையுடன் வருகிறார் . படம் முழுவதும் கழுத்தில் ஒரு துண்டை சுற்றி கொண்டு வருகிறார். தீடிர்னு ஒரு சீனில் முதுகு பின்னாடி இருந்தெல்லாம் துண்டு எடுக்கிறார்....(விசாரிச்சேன்...ஸ்டைலாம்!!)



சத்யராஜ் சார் உங்களுக்கும் விஜயகாந்த்க்கும் ஏதாவது பிரச்சனைனா பேசி தீத்துக்க வேண்டியது தானே...அதுக்குன்னு அவரோட ஈத்து போனா பழைய அரசியல் டயலாக் பேசி ஏன் கடுப்பு ஏத்துரிங்க??அதுவும் இல்லாம எங்க தல அஜித்தை வேறு கிண்டல் பண்றீங்க...படத்தில் சத்யராஜ் பேரு காலுங்க....
அதுக்கு அவர் சொல்ற காரணம் தலைன்னு ஒருத்தர் இருக்கும் போது கால்னு ஒண்ணு இருக்க கூடாதா என்பார்.....சத்யராஜ்,கிட்டத்தட்ட ஒரு ஏழு எட்டு வருஷமா இதே மாதிரி இதே விக் வச்சி நடிச்சிட்டு வர்றார்....முடியல...



இந்த கதாநாயகி நடிச்ச மூணு படத்தையும் இந்த பிரபஞ்சத்தில் பார்த்த ஒரே ஆள் நானாக தான் இருப்பேன் என்று நம்புகிறேன். படத்துக்கு படம் பேர் மாத்துறாங்க ஆனா முகத்தில் மட்டும் எந்த படத்திலும் ரியாக்சன் மாத்த மாட்டறாங்க.....வேற ஒண்ணும் சொல்றதுக்கு பெருசா இல்லைன்னு சொல்லமுடியாதுனு ஸ்டில்லை பார்த்தால் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். அநேகமா இது தான் அந்த அம்மணிக்கு கடைசி படமாக இருக்கும் என்று நம்புகிறேன், காரணம் இதுக்கு முன்னாடி நடிச்ச ரெண்டு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்ஒ ஹிட்ங்க.(இந்திரவிழா, நான் அவனில்லை 2 ). பேசாம கிரணையாவது நாயகியாக போட்டிருக்கலாம்...!!


சந்தானம் இவர் மட்டும் இல்ல..இன்டெர்வல் முன்னாடியே வெளியே வந்திருப்பேன். சந்தானம் காமெடி உண்மையிலே நல்லா இருந்தது.ஆனா அதுக்காக முழு படமெல்லாம் பார்க்கமுடியாது.நான் கிளைமாக்ஸ்க்கு முன்னாடியே வெளிநடப்பு செய்ஞ்சிட்டேன் என்பதை இங்கே சொல்லி கொள்கிறேன் யுவர் ஆனர்!!

சக்தி சிதம்பரம், ஐயா நீங்க ஒரு படமெடுக்க அந்த டைம்மில்
வந்த பத்து படங்களில் இருந்து சீனை எடுத்து நீங்கள் ஒரு
படம் எடுத்துடுறீங்க....மசாலா படம் நாங்க பார்ப்போம் அதுக்காக
ஓவர் மசாலா படமெல்லாம் பார்க்க முடியாது.....அப்புறம் ஒரு
சின்ன request தயவு செய்து நீங்க இனிமே ரஜினி பட டைட்டில்
யூஸ் பண்ணாதீங்க....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

#படத்தில் இன்டெர்வல்க்கு பிறகு ஒரு காட்சி...எப்பா எப்படி
இப்படி யோசிக்கிறாங்கனு தெரியல அதுவும் இல்லாம ஒரு
பாட்டு வரும் பாருங்க "தம்பி இல்லடா,இவன் தாயை போலடா"னு
அப்படியே தாரை தாரையா கண்ணீர் வர மாதிரி இருந்தது...
காரணம் அம்பது ரூபாய் வீணா போச்சே!!

# படத்திலே மிகவும் பிடித்த இடம் ராஜ்கபூரும் நாயகியும் நடிச்ச ரேப் சீன்தான். ஆனா கொஞ்ச நேரத்தில் அந்த காட்சி முடிந்து விட்டது என்பது கொடுமையான விஷயம்.இந்த சீனுக்கு ஒருத்தர் தியேட்டரில் கைதட்டினார்....சத்தியமா நான் அவன் இல்லைங்க....


# ஈவ்னிங் ஷோ இன்டெர்வல் அப்பவே நாலைந்து பேர் இந்த
காவியத்தை பார்த்து மட்டையாகி விட்டார்கள்.


# இன்டெர்வல் ஆரம்பிச்சதில் இருந்து ஒரு முக்கா மணி நேரம்
சந்தானம் வரவே மாட்டார்(நடுவில் சும்மா ஒரு சீனில் வருவார்) அவ்ளோ தான் போல வீட்டுக்கு போய்விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே பெண் வேடத்தில் சந்தானம் வரும் காட்சி வந்தது......ஆனா பாருங்க அப்போ தான் ஒரு ஜோடி வேற வெளியே போறாங்க...அந்த பெண் கடைசி வரை ஸ்க்ரீனை பார்த்து கொண்டே போனாள்....இதிலிருந்து நாம் பெறும் நீதி :
இதுக்குதான் வேலை முடிஞ்சவுடன் அவசரமா போக கூடாது!!

படத்தை தலைவர் கவுண்டர் பார்த்து இருந்தா என்ன
சொல்லிருப்பார்.....


"படமாடா இது, என்னாமா டகால்டி காட்றானுங்க,...காவியம்டோய் !! இதுக்கு தான் நான் அந்த சூப்பர் பாக்கு மண்டையன் நடிச்ச படத்தை பார்க்குறது இல்லை.... சும்மா வீட்ல இருந்தவனை கூட்டிட்டு வந்து...தலைவலி கொடுத்துட்டாங்க....."


குரு சிஷ்யன் - போதும்டா சாமி!!

சுந்தர்.சி ரசிகர்கள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் யாரும் கவலை
கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்...கூடிய விரைவிலே நம்மை மகிழ்விக்க வாடா படம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்!!

Saturday, March 31, 2012

3 - குற்றம் நடந்தது என்ன...????

3 - குற்றம் நடந்தது என்ன...????

மூணு படம் டிஸ்கசன் அப்போ என்ன நடந்திருக்கும்....!!

ஐஸ்வரியா : முதல் பாதி படத்தில நீங்க செம ஜாலியா வரீங்க... இன்டெர்வல்க்கு
அப்புறம் நீங்க சைக்கோ ஆயிடுறீங்க........

தனுஷ் : இப்ப தான் மயக்கம் என்ன படத்தில சைக்கோ சீன் ஒண்ணு எடுத்தாங்....க....

ஐஸ்வரியா: அதுல நீங்க மேல இருந்து கிழே விழுவீங்க..இதுல தானாவே ஆயிடுவிங்க ...
அப்புறம் சுந்தர் எப்பவுமே படம் பூரா உங்க கூட வருவார்...

தனுஷ் : ஹையோ...மயக்கம் என்ன ல கூட என் கூடவே தான் வருவான்...

ஐஸ்வரியா : ஷட் அப்... அதுல நீங்க சாகமாட்டீங்க...ஆனா நம்ம படத்துல செத்து போய்டுவிங்க...

தனுஷ் : (மனசுக்குள்) நான் மட்டுமா படம் பார்க்க வர்ரவனும் தானே....!!


ஒய் தீஸ் கொலைவெறி.......!!!

Sunday, January 15, 2012

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!

நண்பன்...மற்றும் ரசிகர்களை வேட்டை ஆடிய வேட்டை....!!


நண்பன் - டப்பிங் பண்ணி இருக்கலாம்...!!

வசனம் கூட மாத்தம்மா ஏன் ஷங்கர் இப்படி ஒரு படத்தை எடுத்தார்....னு தெரியல...திருக்குறள் வசனம் தவிர... விஜய் ஓகே...கடுப்பு அடிக்கல...



வேட்டை - கோட்டை விட்டுட்டாங்களே....!!


ஐயோ டபுள் ஹீரோ சப்ஜெக்ட்...லிங்கு சாமி டைரக்ட் பண்றாரு...யுவன் இசை னு போய் தியேட்டர் ல உட்கார்ந்தா....ஐயோ ஐயோ... என்னத்த சொல்றது... மேடி தவிர வேற யாரையும் புடிக்கல.. மீதி பிட் எல்லாம் பேஸ்புக் ல பார்த்துக்குங்க....!!

சரவணா...(ஜெட்லி...)

Friday, December 16, 2011

மௌனகுரு.... பேசப்படுவாரா...?

மௌனகுரு.... பேசப்படுவாரா...?



இதுவரைக்கும் நான் அருள் நிதி படத்தை தியேட்டர்ல போய் டி.வி.டில கூட பார்த்தது இல்ல...ஆனா மௌனகுரு ட்ரைலர் நல்லா இருந்தது... அதுவும் இல்லாம மகேஷ் முத்துசாமி கேமரா...தமன் இசைனு தெரியும் ஆனா பாட்டை கேட்குற வாய்ப்பு கிடைக்கல... சரி நாம தியேட்டருக்கு போவோம்...

திருவான்மியூர் ஜெயந்தி தான் போனேன்...இதுக்கு முன்னாடி எங்க சூப்பர் பாக்கு தல சுந்தர்.சி நடிச்ச வாடா படத்தை பார்த்து பாதியில் ஓடிவந்தது தான், நான் கடைசியா ஜெயந்தில பார்த்த படம்னு வரலாறு சொல்லுது...!! சென்னை சிட்டில 25 ரூவாய்க்கு படம் பார்க்கறத நினைச்சா சந்தோசமா இருக்கு என்ன பண்றது அந்த தியேட்டருக்கு அவ்ளோ தான் வொர்த்....


மௌனகுரு...நாலு கெட்ட போலீஸ் ஒரு பணத்தை லம்பா விபத்து நடந்த காரில் இருந்து அடிக்கிறார்கள்...அதற்கு எவிடன்ஸ் இல்லைனு பார்த்தா இருக்கு...அருள் நிதி கல்லூரி படிக்கிறார்...சந்தர்ப்பவசத்தால் அந்த எவிடன்ஸ் விஷயத்தில் நாலு பேரிடமும் சிக்கி..என்கவுண்டர் என்று போய்...அப்படியே கீர் போட்டு படம் போகுது....

ரொம்ப நாள் ஆச்சு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் பார்த்து...அடுத்தது என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று நல்லா போச்சு மௌனகுரு... அருள்நிதி நல்லா தான் பண்ணி இருக்கார்..இனியா ஓகே...அவ்வளவா வேலை இல்லை... ஜான் விஜய் வில்லனாக வருகிறார்..மொக்கை காமெடிலாம் பண்ணாமா நல்லாவே பண்ணி இருக்கிறார்... முக்கியமா உமா ரியாஸ் பத்தி சொல்லணும் ஷி டன் ஏ குட் ஜாப்...!!

படத்தில சில பல விஷயங்கள் புதுசா இருந்தது... முக்கியமா சில ஷாட்ஸ் சூப்பர்ஆ இருந்தது... அதே மாதிரி பின்னணி இசை குறிப்பா அந்த ஓட்டேரி நரி அதாங்க ஆடுகளம் படத்துல தனுஷ் கூட வருவாரே... அவர் பூட்டு சாவியை மனநல காப்பகத்தில் திறக்கும் சீன் ..உண்மையிலே செம... படத்தில ரெண்டு பாட்டு தான் வருது அதனால பெரிசா ஒண்ணும் பிரச்சனை இல்லை...ஆனா இந்த தமன் அவர் ஸ்டைல் பாட்டை விட மாட்டாரு போலையே...!!

முக்கியமான விஷயம் வசனம்... ஷார்ப் வசனங்கள்...கடைசியில் எதிர்ப்பாராத ட்விஸ்ட்னு நல்லா தான் போச்சு... ஆஹோ ஓஹோ னு சொல்ல முடியலைனாலும் கண்டிப்பா நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும்... தியேட்டர்ளையும் நல்ல ரெஸ்பான்ஸ்.. ...ஆங்கங்கே வசனங்களுக்கு கைத்தட்டுக்கள்.... !!

ஒஸ்தி பாத்து நாஸ்தி ஆனவங்களுக்கு மௌனகுரு
மருந்தாக இருக்க வாய்ப்பு இருக்கு....!!


மௌனகுரு - பேசப்படுவார்....!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# எங்க வீட்டு பக்கத்தில் தான் தியேட்டர் இருக்கு...11 மணிக்கு போனேன்..கேட் கூட திறக்கல..கூட்டம் சேர சேர தான் டிக்கெட் கொடுக்கவே ஆரம்பிச்சாங்க.... அந்த கூண்டு உள்ள போய் டிக்கெட் வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு...

# நான் எதிர்ப்பார்த்ததை விட கூட்டம் நிறையவே இருந்தது...

# இன்டெர்வல் டைம் ல ஸ்க்ரீன் பக்கத்தில ஒரு வெள்ளை நாய் ஒடிச்சு...!
இந்தியாவிலே வளர்ப்பு பிராணியை அனுமதிக்கும் ஒரே தியேட்டர் எங்க
ஜெயந்தி தான்...! :))

# 12 to 1 கரன்ட் கட்னாலே ரெண்டு வாட்டி படம் கட் ஆச்சு...ஒரு தடவை
படம் தெரிஞ்சுது சவுண்ட் வரல...அடுத்த தடவ படம் தெரியல சவுண்ட்
வந்தது என்பது குறிப்பிடதக்கது....!!


ஜெட்லி...(சரவணா...)

Friday, November 25, 2011

மயக்கம் என்ன... ஒரு பார்வை..





மயக்கம் என்ன...

என்னமோ தெரியல மயக்கம் என்ன படம் எனக்கு பிடிச்சு இருக்கு... இதை ஏன் நான் முதல்லே சொல்றேன்னா தியேட்டர்ல அவ்வளவா ரெஸ்பான்ஸ் இல்ல..காரணம் காலேஜ் பசங்க... படம் கொஞ்சம் மெதுவா தான் போச்சி....கமெண்ட் பண்றேன்னு சொல்லி வண்டை வண்டையா வாயிலே இருந்து எடுத்து விடுறானுங்க....அதனால சத்தியமாஅவங்களுக்கு படம் பிடிக்க வாய்ப்பு இல்ல... அவங்க எதிர்ப்பார்த்தது மாப்பிளை
மாதிரி படமா இருந்து இருக்குமோ..??

கார்த்திக்...அதாங்க நம்ம தனுஷ்... போட்டோகிராபர் ஆக வருகிறார்... அவங்க நண்பர் கூட்டம் அப்புறம் யாமினியாக நம்ம ரிச்சா... ரிச்சா உண்மையிலே ரிச்சாதான் இருக்காங்க...கதை இது தான் நண்பனின் காதலி ரிச்சா ஆனா ரிச்சா தனுஸ் மேல லவ்வு... கல்யாணம் பண்றாங்க... தனுஷ் எடுத்த போட்டோவை ஒருத்தன் லவட்டிட்டு அவார்ட் வாங்குறான்...அப்போ தனுஷ்க்கு ஒரு விபத்து...அதற்கு அப்புறம் அவர் கொஞ்சம் மனநிலை
பாதிக்கப்படுகிறார்... அதற்கு அப்புறம் நீங்க தியேட்டர் ல பாருங்க....


பிடிக்காதது.. காதல் என் காதல் பாட்டு வந்த இடம் பொருள் எனக்கு என்னமோ சரியா வரலை.... லிரிக்ஸ் கூட அந்த இடத்துக்கு ஏத்த மாதிரி இல்ல... அது ஒன்னியும் தான்.

பிடிச்சது....நிறைய இருக்கு.... போட்டோகிராபர் கேரக்டர்... தனுஷ் காட்டில் படம்
எடுக்கும் காட்சிகள்... படத்தில நிறைய இடத்தில பின்னணி இசை இல்லாமல்
வரும் காட்சிகள் நன்றாக இருந்தது. இண்டர்வலும் சரி படம் முடிஞ்சதும் சரி
அவங்க பேரு போட்டாத்தான் தெரியுது.....!!

தனுஷ் தனுஷ்....கார்த்திக்காக வாழ்ந்து இருக்கிறார் மனுஷன்.... அந்த டூபாகூர்
நாய் மாதிரி வேலை செய்ஞ்சு காட்டு என்று சொல்லும் காட்சியில் தனுஷ்
செம... ஏக்கம், சோகம், காதல், என்று மனிதர் பிரித்தும் பிரிக்காமலும் மேய்ந்து
இருக்கிறார்...


நண்பனின் காதலியை லவட்டிய பிறகு நண்பனின் அப்பா ரெண்டு பேருக்கும்
சரக்கு ஊற்றி கொடுத்து பிரச்சனையை தீர்ப்பது புதுசு..... ரிச்சா உண்மையிலே
செம ஆக்டிங் கொடுத்து இருக்காங்க...

எனக்கு ஏனோ இந்த படம் பிடிச்சு இருக்கு...இன்னும் நிறைய சொல்லணும்னு
ஆசை தான் ஆனா டைம் இல்ல....!!


ஜெட்லி...)சரவணா...

Monday, November 21, 2011

திருவான்மியூர் டூ கோவளம்....!!

திருவான்மியூர் டூ கோவளம்....!!






அட அது ஒண்ணும் இல்லைங்க...டிஜி கேமரா ஒண்ணு வாங்குனேன்... எங்க ஏரியாவை சுத்தி காக்க, பூனை தான் கண்ணுக்கு சிக்குது அதனால அப்படியே முட்டுக்காடு போயிட்டு கோவளம் வரைக்கும் சும்மா படம் எடுத்துட்டு திரும்பிட்டேன்....!! சில படங்கள் கொஞ்சம் சேக் ஆயிருக்கு...அதே மாதிரி ஜூம் பண்ண குவாலிட்டி கொஞ்சம் சரி இல்ல...இருந்தாலும்
போடுறேன்...










ஆபத்தான ஈ.சி.ஆர் பயணம்....








கடைசியா ரிட்டன் வரும் போது சோளிங்கநல்லூர் கட்டிங் முன்னாடி ஒரே கையேந்தி
பவனில் ஆப்பம் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தாச்சு.... அட ஆப்பத்தை பத்தி ஒண்ணும்
சொல்லலயேனு யாராவது கேட்டா என் பதில்...என் வாழ்க்கையில் இப்படி ஒரு
ஆபத்தை சாப்பிட்டதே இல்லைங்க...ஆப்பத்துக்கான ஒரு அறிகுறியும் அதில் இல்லை..!!
நெக்ஸ்ட் வேடதாங்கல் போலாம்னு ப்ளான் வச்சிருக்கேன்...பார்ப்போம்...!!


ஜெட்லி...(சரவணா...)

Monday, October 31, 2011

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???

ஏன் வேலாயுதத்தை பார்க்க வேண்டும்???





அட சுறாக்கு அப்புறம் தள படத்தை பார்க்க கூடாது அப்படின்னு உறுதியா இருந்தேன்...ஆனா இன்னைக்கு ரெம்பா வெட்டியா இருந்தேன் அதனால நம்ம ஆஸ்தான தியேட்டர் பைலட்க்கு போய் வேலாயுதம் படத்தை பார்த்துட்டேன்....

ஏழாம் அறிவு படத்தை நான் மொக்கைனு சொன்னதுக்கு சில பல பேரு ஏதோ
எனக்கு படம் புரியல அவங்களுக்கு எல்லாம் நல்லா விளங்கடிச்சு அப்படின்னு
நினைச்சுட்டாங்க....அட ஏழாம் அறிவுல புரிய என்ன இருக்கு...அந்த ரெண்டு
நிமிஷ ட்ரைலர் பார்த்தாலே படத்தோட மொத்த கதை, திரைக்கதை, எடிட்டிங்
எல்லாமே புரியுமே...இது தெரியாம அவங்க மொக்கைனு சொல்றவங்களை
வெளுத்து வாங்குறாங்க.... இதுல வேற யுடியுப் ல வேற வந்து அந்த படத்துக்கு
வக்காலத்து வாங்குறாங்க....நான் இப்போ வரைக்கும் ஆயிரத்தில் ஒருவன்
படத்துக்கு சொம்பு தூக்குறேன்..தூக்குவேன்... ஆனா ஏழாம் அறிவு செம மொக்கை
தான்... முருகதாஸ் எவ்ளோ எவ்ளோ எவ்ளோ எதிர் பார்க்குரிங்களோ அவ்ளோ
மேல மேல மேல இருக்கும்னு சொன்னாரோ அந்த அளவுக்கு படம் செம மொக்கையா போச்சு.....!!!



வேலாயுதத்துக்கு வருவோம்.... ஹ்ம்... தெலுங்கு ஆசாத் படத்தை ஜெமினி டி.வியில சில காட்சிகள் பார்த்ததா நினைவு... சவுந்தர்யா, ஷில்பா ஷெட்டினு படம் களை கட்டும்.தமிழ்ல விஜய் கரெக்ட் சாய்ஸ் தான். விஜய்க்கு ஒண்ணும் அவ்வளவா பன்ச் அடிச்சு டிஞ்சர் ஆக்குற வசனம்லாம் இல்லை...அதனால் விஜய் ரசிகர் இல்லாதவங்களுக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை.


அஸ்ஸாசின் கேம் டிரஸ் போட்டது எரிச்சலா இருந்தாலும் படம் பார்க்கும் போது
ஒண்ணும் பெரிசா தெர்ல. ஆனா ஜெனீலியா கூட மாயம் செய்தாயோ பாட்டுக்கு
அவர் ஹேர் ஸ்டைல் ரசிக்க முடியல....ஹன்சிகா ஊறுகாய்...சந்தானம் காமெடி
ஓகே...

ஆஹோ ஓஹ்ஹோ னு சொல்லாம வந்த வேலாயுதம் கண்டிப்பா ஒரு டைம்பாஸ் படம். சுறா படத்துக்கு பத்து மடங்கு தேவலாம். வழக்கமா வர்ற விஜய் மசாலா படம் தான் என்றாலும் கொடுத்த அம்பது ரூபாய்க்கு கண்டிப்பா வொர்த்....

ஆனா கடைசியில் தள வோட மூஞ்சு மைதானத்தில் தெரிவது கொஞ்சம் ஓவர்
தான்... அதை பார்த்து வெளியே ஓடி வந்தவன்...திருவெல்லிக்கேணி பிரியாணி
கடையில் தான் வண்டி நிறுத்தினேன்...என்ன ஆச்சரியம் கடைசி ஹாப் பிரியாணி
மட்டும் தான் இருந்தது...டக்குனு டோக்கன் கொடுத்து வாங்கிட்டேன்...அதுக்கும்
வேலாயுதம் தான் காரணம்...இல்லனா 9.30 மணிக்கெல்லாம் பிரியாணி காலி
ஆகுமா....!!


வாழ்க வேலாயுதம்....!!

ஜெட்லி...(சரவணா...)



ஜாய் ஆப் பீடிங் (JOY OF FEEDING)



இது ஒரு மீள் பதிவு ஆனால் பூனை படங்கள் புதுசு....
கிட்டதட்ட ரெண்டு வருடங்கள் ஆக போகுது இந்த பதிவு எழுதி..
உங்களுக்கும் இது போல் உதவிகள் செய்யணும்னு ஆசை
இருந்தா... தேவிதாஸ் ஐயா அவர்களை தொடர்பு கொள்ளலாம்...
cell : 9380961428


படிக்க கிளிக்கவும்

ஜாய் ஆப் பீடிங்









ஜெட்லி...(சரவணா...)

Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ஏழாம் அறிவும் ....போ(தை)தி தர்மரும் ...!!

ரெண்டு நாள் முன்னாடி என்னோட FaceBook அப்டேட் இது....

//என்ன கொடுமை சார் இது...ஏழாம் அறிவுக்கு மொதல்ல தீபாவளி அன்னைக்கு ஸ்பெஷல் ஷோனு சொன்னாங்க...அதையும் புக் பண்ணேன்...அப்புறம் 25 தேதி ஸ்பெஷல் ஷோனு
சொன்னாங்க..அதுக்கும் நைட் ஷோ புக் பண்ணேன்....இப்ப என்னடானா ரெண்டு மணிக்கே படத்தை போடுறாங்களாம்.... அதுக்கு பேசாம நாளைக்கு படத்தை ரீலீஸ் பண்ணத்தான் என்ன???//


படம் பார்த்த அப்புறம் தான் புரியுது ஏன் படத்தை ஒரு ஒரு ஷோவா
முன்னாடியே விட்டங்கான்னு....கொய்யலா வெளியே உண்மை
தெரிஞ்சா தீபாவளி அன்னைக்கு மட்டும் தான் படம் ஓடும்னு
முன்னாடியே ரீலீஸ் பண்ணிட்டானுவோ....கதை என்னன்னா
ட்ரைலர் பார்த்தீங்க ல அதே எடிட்டிங் தான் படத்தோட முழு
திரைக்கதையும்...இப்படி ஒரு படத்தை முருகதாஸ் கிட்ட இருந்து
நினைச்சு கூட பார்க்கல...

போதி தர்மர் பத்தி இருபது நிமிஷம் சொல்றாங்க ...பல நூற்ற்றண்டுகள்
முன்னாடியே காஞ்சிபுரத்தில் இருந்து சைனா போய் அங்க மருந்து எல்லாம் கண்டுபிடிக்காரு, குங்பூ கத்து கொடுக்காரு...இதில இருந்து என்ன தெரியுது....
ஒண்ணும் தெரியலையா....சரி விடுங்க...!!அப்புறம் தீடிர்னு முத பாட்டு வருது....
இன்னொரு சூர்யா சர்கஸ்ல வேலை செய்யுறாரு...அங்க சுருதி வாராங்க...
சூர்யாக்கு பார்த்த உடனே லவ் ஆவுது...செல்போன் திருடுராறு...
ஹோட்டல்ல மொக்கை வாங்குறாருனு...முதல் பாதி படம் மொக்கையா போச்சு...

ச்சே...முருகதாஸ் எப்படி இப்படி ஒரு சுவாரசியம் இல்லாத திரைக்கதையை
பண்ணார்னு தெரியலையேப்பா....படம் எப்ப விடும் எப்ப போலாம்னு தான்
இருந்தது... ஏதோ சில சில காட்சிகள் ஓகே... அந்த சீனாக்காரன் வர்ற சீன்ஸ்
ஓகே...ஆனா சூர்யாவையும் ஸ்ருதியையும் சேஸ் பண்ணி கார்,பைக்
மூலமா கொலை பண்ண ட்ரை பண்றது ஏதோ சுட்டி டி.வி பார்த்த எபக்ட்
கொடுத்தது.....

தமிழன் தமிழன்னு சொன்னா போதுமா...அப்படியே மண்டைல நிக்குற மாதிரி
சொல்லி இருந்தா நல்லா இருந்து இருக்கும்... ஆனா சில காட்சிகள் ஓகே...
சுருதி ஹாசன் தான் ஹீரோவா இல்ல அந்த சைனா க்காரன் ஹீரோவானு சில
டைம் கன்புசன் வருது... பாவம் சூர்யா ஆறு நாள் தண்ணீல ஊற போட்டுருறாங்க....

ஏழாம் அறிவு - எட்டாத அறிவு....!!

என்னடா இவன் இப்படியெல்லாம் எழுதுறானே....இவன் தமிழனே
இல்லன்னு சொன்னாலும் சொல்வாங்க ...க்கும்...கவுண்டர் ஸ்டைல
ஒண்ணும் மட்டும் சொல்ல ஆசைப்படுறேன்.... நான் தமிழ்ங்கோ நான்
தமிழ்ங்கோ பச்சை தமிழ்ங்கோ....!!

தியேட்டர் நொறுக்ஸ்:

# ஆராதனா நைட் ஷோ போனேன்....அங்கே மட்டும் டிக்கெட் ரேட் கொஞ்சம் சீப்...எழுபது
ரூபாய்....இது மட்டும் தான் படம் பார்த்ததிலே கிடைச்ச ஒரே சந்தோசம்...

# முன் அந்தி சாரலே பாட்டு ஒரு மினி இன்டெர்வல் தான்....

# இன்டெர்வல் டைம்ல மூன்று ஆட்டோகார நண்பர்கள் பேசி கொண்டது...
டேய் போதி தர்மா?? அவரது நண்பர்...டேய் அவன் போதை தர்மர் டா..என்று
கூறியது செம டைமிங் காமெடி...

# இன்னொருவர் தன் நண்பருக்கு போன் மூலம் அப்டேட் கொடுத்தார் இப்படி....
"மாமா கஜினி அளவுக்கு கூட இல்லடா... செம மொக்கையா போது...பஸ்ட் இருபது
நிமிஷம் டிஸ்கவரி சானல் போட்டாங்க டா..அதுல போதி தர்மர் யார்னு ரெண்டு மூணு
சிலையை காமிச்சி"....என்று போனது....

# என் வரிசையிலும் முன் வரிசையிலும் கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் அஞ்சு அஞ்சாக பிரிந்து உட்கார்ந்து இருந்தனர்.... ரெண்டாவது பாதியில் வந்த ஒரு மொக்கை காட்சிக்கு முன் வரிசையில் இருந்த நண்பர் அவனின் நண்பனை திரும்பி பார்த்தார்..உடனே இவர்..."டேய் நாந்தாண்ட உன்னை பார்க்கணும்...சும்மா உட்கார்ந்து இருந்தவனை கடத்தி கூட்டு வந்துட்டு...லுக்கை பாரு..."என்றார்....

# விரைவில் எங்க பவருதர்மர் நடிக்கும் "எட்டாத அறிவு " படம் திரைக்கு
வந்து பிச்சுக்கிட்டு போகும்னு தென்சென்னை ரசிகர் மன்றம் சார்பா வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம்...





# இன்று 225 நாள் காணும் எங்கள் லத்திக்கா படத்தை காண வருபவர்களுக்கு
பிரியாணி பொட்டலமும் பஞ்சும் வழங்கப்படும்...!!


ஜெட்லி...


Friday, September 30, 2011

முரண் , வாகை சூட வா, வெடி , உளவாளி ஜானி...!!

முரண் , வாகை சூட வா, வெடி , உளவாளி ஜானி...!!




இந்த வீக்கென்ட் என்ன படத்துக்கு போலாம்னு முடிவு பண்ண இன்னும் கொஞ்ச நேரத்தில் மேல உள்ள படங்களோட ரிசல்ட் உங்களுக்கு தெரிஞ்சுரும். அது சரி நீ ஏன்டா படம் பார்க்காம பதிவு எழுதுறேன்னு கேட்டா.... வேற ஒண்ணும் இல்ல சும்மா தான். இன்னைக்கு ரீலீஸ் ஆக போற படங்களோட என்னோட என்னோட கருத்துக்களை சொல்லலாம்னு ஆசைப்பட்டுடேன்...வேற ஒண்ணும் இல்ல...யாருக்கு தெரியும் காலையில் ஷோ ஏதாவது தியேட்டர்இல் போய் உட்காரவும் வாய்ப்பு இருக்கு...!!


நான் இன்னைக்கு முரண் போலாம்னு நினைச்சேன் ஆனா எங்க ஏரியா பக்கம் எங்கையும் வரல...ஆராதனாவில் மாலை காட்சி தான்.மாயாஜால் போக எல்லாம் இப்ப இன்ட்ரஸ்ட் இல்ல.முரண் மேல ஏன் அவ்ளோ ஆர்வம் எனக்கு சேரன் தான் பிடிக்காதேனு நீங்க நினைக்கலாம்..சேரன் புடிக்காதுதான் ஏன் புடிக்காது அந்த ஆள் அழுதுட்டு, லவ்வர் கிட்ட டேய் டேய் என்னடானு வசனம் பேசும் போது எல்லாம் பயங்கர கடுப்பா இருக்கும் எனக்கு... ஆனா அவர் நடிச்ச ராமன் தேடிய சீதை படத்தில் சேரனை ரசிக்கவே செய்தேன். மேலும் முரணில் பிரசன்னா இருக்கிறார்.பிரசன்னா நடிச்ச நிறைய படங்களை பார்த்து இருக்கிறேன்..இயல்பான நடிகர். முரண் ஒரு ரோட் படம் இல்லனாலும் ஏதோ பார்க்கணும் அப்படின்னு ஆர்வம் இருக்கு..ரெண்டு மூணு பாட்டு கூட நல்லா தான் இருக்கு... பார்ப்போம்...


போன வருஷம் களவாணி படத்தை FDFS மாயாஜால்ல பார்த்தேன்...ஆனா வாகை சூட வா படத்தை பார்க்கணும்னு தோணல...ஹிட்னு சொன்னாங்கனா போய்க்கலாம்னு இருக்கேன். ரொம்ப ஹார்ட் ஆனா சப்ஜக்ட்ஆ இருக்கும்னு பீலிங்...எனக்கு பாட்டு கூட அவ்வளவா பிடிக்கல...பார்க்கலாம்...



வெடி... ஹி ஹி.. விஷால், விவேக், பிரபு தேவானு பேரே கேட்டாலே சும்மா பகிருது,... தெலுகு படம் ரீமேக் என்பதால் படம் டைம் பாஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது பார்ப்போம்..


உளவாளி ஜானி...பீன் நடிச்ச படம்...கண்டிப்பா இந்த படத்தை பார்ப்பேன்... சிம்போனில போட்டு இருக்காங்க... முடிஞ்சா வரைக்கும் பார்த்துட்டு சொல்றேன்....




ஜெட்லி...(சரவணா...)

Thursday, September 29, 2011

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!



நேத்து தான் அபாச்சி ரெண்டாவது சர்வீஸ். முதல் சர்வீஸ்க்கு அப்புறம் தான் என் வண்டிக்கு நிறைய ப்ராப்ளம் வந்தது. ஒரு ஹோர்ன் தான் அடிச்சுது, பின்னாடி சீட்ல இருந்து ஒரே சவுண்ட் , கியர் ஷிப்ட் ரொம்ப ஹார்ட்ஆ இருந்தது. கியர் ஷிப்ட் மட்டும் தான் முதலில் தெரிந்து திரும்பவும் போய் நானே சரி செய்தேன். எத்தனை தடவை தான் போய் போய் சரி பண்றது அப்படின்னு ரெண்டாவது தடவை சர்வீஸ் பண்ணும்போது
பார்த்துக்கலாம்னு விட்டுடேன்.

இந்த தடவை வண்டி எடுக்கும் போது ரெண்டு ப்ரேக் அடிச்சாலும் கிரீச் கிரீச்னு சவுண்ட்... முன்னாடி போர்க்கில் இருந்து ஒரு மாதிரி சவுண்ட்....நேத்தே திரும்பவும் சரி செய்ய சொல்லி வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் ஓரளவுக்கு சவுண்ட் கம்மி ஆச்சு... நாளைக்கு சரி ஆயிடும் ஆயில் ஸ்ப்ரே பண்ணதால அப்படி சவுண்ட் வருதுனு சொன்னான்...நான் நம்பல, இருந்தாலும் கடைக்கு லேட் ஆயிடுச்சுனு வந்துட்டேன்...


அடையார் ராம்கேல தான் வண்டியை எடுத்தேன்.... ரெண்டு நாள்ல வண்டியை கொடுத்துட்டாங்க. ஆனா சர்வீஸ் தான் மோசம்... அங்க இருக்குற ஆளுங்க கிட்ட கேட்டாலும் எங்களுக்கு தெரியாது அப்படின்னு சொல்றாங்க.... இங்க மட்டும் இல்ல எல்லாம் சர்வீஸ் சென்டர்களும் அப்படி தான்.
மொத மொத எங்க பைக் பஜாஜ் கலிபர்... அங்க வண்டியை கொடுத்து சர்விஸ் பண்ற அவஸ்தை இருக்கே...அய்யோயோ... அதனால தான் பல்சர் பக்கமே தலை வச்சி படுக்கல..அப்புறம் பேசன் ப்ளஸ்...ப்ரீ சர்வீஸ் வரைக்கும் கூட அங்க நான் பண்ணல...அவ்வளவு கடுப்பு ஏத்துவாங்க.


அப்புறம் நண்பர் ராம்ப்ரசாத் சைதாபேட்டையில் ஒரு மெக் கடையை அறிமுகப்படுத்தினார். செமையா சர்வீஸ் பண்ணுவாரு...ஒரு நாளைக்கு சில வண்டிகளை மட்டும் தான் எடுப்பார். காசு ஆனாலும் சர்வீஸ் பக்காவாக இருக்கும். இப்படியே சில வருஷங்கள் அவர்கிட்ட சர்வீஸ்
விட்டுட்டு வந்தேன். அப்புறம் வேலையால் அங்க போறது இல்லை...இங்க இருக்குற லோக்கல் கடைல ரெண்டு தடவை வண்டியை விட்டேன்....எப்பா அதுக்கு ஷோரூம் சர்வீஸ் சென்டர்ஏ மேல்...அப்புறம் சர்வீஸ் பண்றது விட்டுட்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை என்ஜின் ஆயில்
மட்டும் மாத்தினேன்..அதுவும் பிடிக்காம எவனோ வண்டியை லவட்டிட்டு போய்ட்டான்...!!

திரும்பவும் சர்வீஸ் சென்டர் போறேன்... இன்னைக்கு விட்றதா இல்லை....என்ன காலைல பெய்ஞ்ச மழைல வாட்டர் வாஷ் பண்ண வண்டி தான் சேர் ஆயிடும்...என்ன பண்றது... சர்வேஸ் விட்டு எடுத்து அடுத்த நாளே மழை பெய்யறது கொஞ்சம் கொடுமையான விஷயம் தான்... !!

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

Wednesday, August 31, 2011

மங்காத்தா...டா..!!

மங்காத்தா...டா..!!

அஜித் படத்துக்கு ஓபனிங் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும்.. நம்ம அடையார் ஐநாக்ஸ் தியேட்டர்லேயே டிக்கெட் கிடைக்கல. அதனால ரெண்டு நாள் காத்திருந்து அப்படி இப்படினு நம்ம வில்லிவாக்கம் நாதமுனியில் காலையில் அஞ்சு மணிக்கு படம் பார்த்துட்டு வந்துட்டேன். அட அஞ்சு மணிக்கு படம் பார்க்குற அளவுக்கு வெறியானு நினைச்சா அது உங்க தப்பு, எனக்கு தேவை புது புது அனுபவங்கள்...அதனால தான்
காலையில் அஞ்சு மணிக்கு அண்ணா ஆர்ச் பக்கத்தில் இருக்குற டீக்கடையில் டீ குடிச்சு...அது ஒரு சுகம் தான்....!!


சரி சரி... படத்துக்கு வரேன்... கிரிக்கெட் சூதாட்ட பணத்தை தன் முதலாளி செட்டியார் (ஜெயபிரகாஸ்)யிடம் இருந்து வைபவ் மற்றும் மூன்று நண்பர்கள் கொள்ளை அடிக்க திட்டம் போடுறாங்க. அஜித் தனியா திட்டம் போடும் போது இந்த நாலு பேரை பத்தி தெரிய வருது. அப்புறம் என்ன அந்த கொள்ளை கூட்டத்துக்கு அஜித் தான் பாஸு... கொள்ளை அடிச்சா 500 கோடி பணத்தை எப்படி பிரிச்சாங்க, என்ன ஆச்சு என்பதே மங்காத்தா.... அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வந்து சூதாட்ட கும்பலை வேட்டை ஆடுகிறார். த்ரிஷா ஜெயப்ரகாஷ் பொண்ணு, அஞ்சலி வைபவின் மனைவி, சண்முக சுந்தரம் அஞ்சலியின் அப்பா , அம்பிகா புருஷன் செட்டியாரின் அடியாள்,
அரவிந்த்தும் செட்டியாரின் அடியாள், பஞ்சு அருணாச்சலம் பையன்...என்னது
போதுமா...ரைட் விடுங்க....!!


அஜித் அஜித் அஜித்... தல இல்லனா மங்காத்தா இல்ல... படத்தை தாங்கி
நிற்கும் தூண் அஜித் தான். வழக்கமான வசனம் இல்லாம நல்லாவே இருக்கு.
ஆட்டம் பாட்டம் என்று மனிதர் கலக்கி அடித்து இருக்கிறார். அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா...??. அர்ஜுன் கூட நல்லாவே பண்ணி இருக்கிறார். அஜித் அர்ஜுனை அக்சன் கிங் என்று அழைக்கும் போது தியேட்டரில் பயங்கர விசில். அதே போல் அர்ஜுனும் தல என்று சொல்வார்...அட அட என்னா விசில்... விசில் கூட ஒரு படத்தின் வெற்றியை முடிவு பண்ணும். காரணம் முதல் பாதியில் அஜித், அர்ஜுன் இன்ட்ரோ தவிர விசில் சத்தம் இல்லை.


வைபவ், அரவிந்த். பிரேம்ஜி......அட டைப் அடிக்க கை வலிக்குதுங்க..... இப்படின்னு வழக்கமான வெங்கட் பிரபு ஆட்கள் படம் முழுவதும் வருகிறார்கள்.விடுங்கடா சாமி எத்தனை படத்தில இவனுங்க மூஞ்சை பார்க்கறதுனு தான் தோணுது. நல்ல வேளை அந்த ரெண்டு பசங்களையாவது புதுசா போட்டார்..லட்சுமி ராய் எதுக்கோ வருகிறார் எதுக்கோ போறார். த்ரிஷாவும் தான்.

வாடா பின்லேடா பாட்டு மேகிங் நல்லா இருந்தது. அதே மாதிரி சில சில டைமிங் காமெடிகள் அதுவும் அஜித் சொல்ற... பசங்க : என்னணே காமெடி பண்றீங்க?? அஜித்: நான் என்னா சந்தானமாட... என்று டென்சன் ஆகும்போது. வஸந்த் & கோ விஜய் வைன் ஷாப்பில் அடிக்கும் லூட்டி. என்று சொல்லலாம். சாம் அண்டர்சன் கூட விட்டு வைக்கவில்லை வசனத்தில்.


படத்தில போதை பாடமே நடத்துறார் வெங்கட் பிரபு...ஒரே போதை மயம் தான். பிரேம்ஜி கொஞ்சம் ஓவர் தான் இதிலும். இன்டெர்வல் முன்னாடி வர்ற கற்பனை காட்சிகள் சூப்பர். அப்புறம் கிளைமாக்ஸ் நல்லா இருக்கு. இது தான் மங்காத்தா. வெங்கட் பிரபு அப்போ அப்போ நம்மளை குஷி ஏற்படுத்துகிறார் தவிர வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. முன்னாடி எல்லாம் பன்ச் டயலாக் சொன்னால் விசில் அடிப்பார்கள் இப்போ அஜித் அந்த பையன் இந்த பையன் திட்டறதுக்கு விசில் பறக்கிறது. இந்த வசனம் எல்லாம் கேட்டவுடன் கௌதம் மேனன் ஐயா நினைவு தான் வந்தது.


படத்தோட நீளம் எனக்கு ஆகாது சாமி. இன்டெர்வல் சேர்த்து மூணு மணி நேரம் ஓடுது. படத்தில சில காட்சிகள் ஏற்கனவே நம்ம சன் அண்ணாச்சி கட் பண்ணிட்டாங்கனு தெளிவா தெரியுது. அவங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...தயவு செய்து நல்ல கத்திரிக்கோல் யூஸ் பண்ணுங்க ஜி... பாதி வசனத்தில் கட் பண்றது நியாயம் இல்லை.

நான் ரெண்டாவது தடவை மங்காத்தா திரும்பவும் திங்கக்கிழமை போறேன்... அட படம் அவ்வளவு சூப்பர்ஆ னு நீங்க தப்பு கணக்கு போட்டுறாதீங்க... அதுக்கு நான் பொறுப்பில்ல.. கல்யாணம் ஆனா இது ஒரு பிரச்சனை... படம் எப்படி இருந்தாலும் ரெண்டாவது தடவை பார்த்து தான் ஆகணும்...இதுக்கு தான் நான் பல படங்களை இப்போதெல்லாம் முதல் நாள் பார்ப்பது இல்லை...!!

படம் எப்படி நச்சுனு சொல்லு அப்படின்னு கேட்கறவங்களுக்கு....கண்டிப்பா படத்தை பார்க்கலாம்..டைம் பாஸ் தான். ஆனா என்ன பல காட்சியில் கொட்டாவியும் கண்ணை கட்டுவதையும் நிறுத்த முடியலை. இப்படி அப்படி பண்ணிட்டு கடைசியில் குஷியா வெளியே அனுப்புகிறார் இயக்குனர். அதை முதலில் இருந்தே செய்ஞ்சு இருந்தால் மங்காத்தா ஆட்டம் களை கட்டி இருக்கும்...!!

மங்காத்தா - கட்டுல சீட்டு கம்மி ..!!

தியேட்டர் நொறுக்ஸ்:
# இது தான் நாதமுனியில் முதல் படம்... தியேட்டர் ஓகே...ஆனா தலை தான் மறைக்கிற மாதிரி சீட் இருக்கு.

# படம் ஆரம்பிக்கறது முன்னாடியே களை கட்ட ஆரம்பிச்சாச்சு...செம கூட்டம்... ரெண்டு பேர் விசில் அடித்து வெளியே சென்றதுக்கு போலிஸ் அடித்து அவர்கள் கையை பிடித்து...ஒரே கலாட்டா....

# இப்ப பல தியேட்டர்ல டிக்கெட் கூட ஈஸியா கிடைச்சுடுது ஆனா பைக் பார்க்கிங் டோக்கன் வாங்கறதுக்கு தான் லேட் ஆகுது... இங்கயும் அந்த அனுபவம் தான்.


# த்ரிஷாவை கண்டவுடன் படம் பார்த்த பின் சீட்டுக்காரர் இருந்து வாயில் இருந்து பன்னீராக கொட்டியது வார்த்தைகள். காலையிலே இந்த கொடுமையெல்லாம் கேட்க வேண்டியது இருந்தது.

# இன்டெர்வல் அப்ப எழுந்து போகும் போது முன் சீட்டுக்காரர் முதல் பாதியிலே தூங்கி போய் இருந்தார் என்று அவர்கள் நண்பர்கள் கலாய்த்து கொண்டு இருந்தனர்.

உங்கள்...
ஜெட்லி... (சரவணா...)









Friday, August 19, 2011

மேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள்.

மேற்கு மலை தொடர்ச்சியில்...!!




இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு தடவை எனக்கு வருமான்னு தெரியல... கல்யாணத்துக்கு அப்புறம் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா என்பது ஒரு வரம் தான். கண்டிப்பா இந்த பயணம் எனக்கு மட்டுமில்ல என் கூட வந்த மற்ற பதிமூணு நண்பர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். GHATIKALLU அப்படின்னு கர்நாடகா மாநிலத்தில் ஹொரநாடு போற வழியில் இருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியாவில் அதிக மழை அளவு பதிவான இடம். எந்த வித செயற்கை சத்தமில்லாமல் இயற்கை சத்தத்தை மட்டுமே ரெண்டு நாளும் சுவாசித்தோம் அனைவரும்.அது தவிர இங்குள்ள அனைத்து இடங்களும் அருவி உள்ப்பட தனியாருக்கு சொந்தமானதாம்.



சரியா சனிக்கிழமை 13.8.11 அன்று 11.30 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் அமர்ந்தோம். ட்ரெயின்லேயே எங்க ஆட்டம் கல கட்ட ஆரம்பிச்சுருச்சு.ஒரு பக்கம் சீட்டாட்டம் மறுபக்கம் போட்டோ செச்சன் என்று போய் கொண்டு இருந்தது.சேலம் வந்ததும் எங்கள் jason.... bourn(சாரதா பிரசாத்) வீட்டில் இருந்து பழங்கள் வந்து குவிந்தது. நண்பர் நிர்மல் வீட்டில் இருந்து ஜவ்வரசி உப்புமா வந்தது..செம சூப்பர்.அப்புறம் எங்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் பிரசன்னாவின் நண்பர்கள் திருப்பூரில் சிக்கன் பகோடா கொடுத்தது ரொம்ப உதவியா இருந்தது.இரவு கோவையிலிருந்து நண்பர் ரங்கா வீட்டில் இருந்து புளியோதரை வந்தது...மிக அருமை...!!




ட்ரெயின்லேயே பல சம்பவங்கள் நடந்தது....எங்கள் சீட்டில் உட்கார்ந்து வந்த
அஞ்சு பேரில் ஒருவர் தீடிர் என்று என்னிடம் வந்து தோள் மீது கை வைத்து.
தம்பி நீங்க எல்லாம் ஏதோ காலேஜ் இல்ல ஆபிஸ்ல இருந்து ஒன்னா வந்து
இருக்கீங்க நான் உங்க சுதந்திரத்தை தடுக்க விரும்பல...சீட்டு ஆடறது
ஆபன்ஸ்..நாங்க எல்லாம் போலீஸ் அக்யுஸ்ட்ட கூட்டிட்டு போறோம் அதனால வெளி ஆள உள்ள சேர்க்காதீங்க...அப்படின்னு சொல்லிட்டு போனாரு...அப்படியே நாங்க எல்லாரும் பயந்துடுவோம் அப்படின்னு நினைச்சாரு போல... இன்னும் சவுண்ட் தான் ஓவர்ஆ போச்சு... ஒரு வேளை அவரு போலீஸ்ஆ இருந்தா இந்த உலகத்திலே அக்யுஸ்ட்டுக்கு கொய்யா வாங்கி கொடுத்த மொதல் ஆள் அவரா தான் இருப்பார்..!!னு காலாசிட்டே போனோம்.








குதிரை மூக்கு


நண்பன் 'காரசேவ்' தனா மற்றும் 'புத்தர்' சாய் அவர்கள் கூட நான் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல.. ட்ரெயின் அதிகாலை 4.20 க்கு எல்லாம் மங்களூர் அடைந்தது.அங்கிருந்து மினி பஸ்ஸில் காடிக்கல்லுவுக்கு பயணம். நாலு மணி நேரம் ஆகும்னு சொன்னார். ஆனா நாங்க போய் சேர்ந்தது 10 மணிக்கு மேல் தான். ரோட் எல்லாம் பயங்கரமா இருந்தது. நடுவுல ரெண்டு மூணு இடத்தில் இறங்கி ஏறி போனதும் லேட் ஆனதுக்கு காரணம். அப்புறம் பஸ்ஸில் ஒரு தெலுங்கு படம் ரவிதேஜா நடிச்சது மிரப்பகாய் என்ற படம் பார்த்து கொண்டே போனோம். அதில் வரும் ஆன்டி சொல்லும் அப்பா...என்ற டயலாக் ரெண்டு நாள் எங்களுக்குள் ஓடியது. குதிரை மூக்கு னு ஒரு இடம்..அட அட... அங்கேயே ஹோட்டல் இருந்தா கூட தங்கி இருந்து இருக்கலாம். அந்த இடமே அவ்வளவு குளுமை.நாங்க போக வேண்டிய இடம் அங்கிருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.













நாங்கள் ஏற்கனவே புக் பண்ணிருந்த ஹோம் ஸ்டேக்கு போனவுடன் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம். கடு என்ற இட்லி மாதிரி உருண்டையாக கொடுத்தார்கள். செம டேஸ்ட். அதை விட அவங்க கொடுத்த சட்னி சூப்பர்ஒ சூப்பர். மொழி தெரியாதது எங்களுக்கு பெரிய பிரச்சனையா தெரியல.. நண்பர் பிராணேஷ் கன்னடத்தில் நல்லாவே மாடி கட்டினார். சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அருவிக்கு கிளம்பினோம். மொத்தம் ரெண்டு அருவி இருக்குனு சொன்னாங்க. 300 அடி அருவிக்கு அரை மணி நேரம் நடக்கனும்
அட்டை நிறைய இருக்கும்னு குளிக்கவும் முடியாதுனு சொன்னார். அதனால இன்னொரு அருவிக்கு போனோம் அங்கே இருபது நிமிஷம் நடக்கனும். அங்கே அருவி பக்கத்தில் விட்ட ஜீப் டிரைவர் செம பாஸ்டாக வண்டி ஓட்டினார். பிராணேஷ், ஏன் இவ்வளவு வேகமா ஓட்டுறீங்க என்று கேட்டதற்கு அந்த டிரைவர் தன் எட்டு வருஷ சர்வீஸ்ல் வந்த முதல் கம்ப்ளைன்ட் என்றார்.


அங்கே போற வழியில் தான் ' காரசேவ் கூட சண்டை போட்ட எங்கள் உரசல் நாயகன்' அரவிந்த் அவர்கள் மீது ஒரு சின்ன அட்டை சாக்ஸ்ல ஏறிடுச்சு. கத்தியால அதை சிதைசிட்டாறு. அருவியை கண்டதும் செம குஷி. ஆனா பெரிய சின்ன பாறை எல்லாம் காலை பதம் பார்த்தது. நல்லா குளியல் போட்டோம். திரும்பவும் ரிட்டன் வரும் போது ஷார்ட் ரூட் கொஞ்சம் டேஞ்சர்ஆக தான் இருந்தது.



3 மணி வாக்கில் திரும்பவும் ரூம் வந்தோம். நல்ல சாப்பாடு.மொத நாள் ரசம் தான் கொஞ்சம் நல்லா இல்லை. அப்புறம் ரெஸ்ட் எடுக்காம கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம்.நான் எப்பவும் போல டக் தான். பாலை தூக்கி அடிச்சா அவுட்னு சொல்றாங்க நான் என்னங்க பண்றது. அப்புறம் நைட் கேம்ப் பைர்.. பாட்டு பாடி செம கலாட்டா. அன்னைக்கு நைட் சுதந்திர தினத்தை கொண்டாட என்று நிர்மல் போட்டு வந்த இங்கிலாந்து டி.ஷர்ட்டை எரிப்பதில் பிரசன்னா மற்றும் அவரது குழு மிகவும் ஆர்வமாக இருந்தது. அப்புறம் சுதந்திரம் பத்தி ரெண்டு ரவுண்ட் பேசினதில் இருந்து யாருமே கொண்டாடவில்லை. 'காரசேவ்' தனா சைட் டிஷ்சை தொடவே இல்லை என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.


இரண்டாவது நாள்:





("காராசேவ் வீரன்" அரவிந்த், காட்டு சாரதா, காமேஷ்)



அனைவராலும் வெள்ளை மற்றும் வைட்டி என்று அழைக்கப்படும் அருண் அவர்களை முதல் நாள் மாலையே அட்டை கடித்து இருந்தது. அருணுக்கு ரத்தம் நிக்கவே இல்லை.நள்ளிரவு மூணு மணிக்கு தான் நின்னதாம். காலையில் ட்ரெக்கிங்க்கு கிளம்பினோம்.அங்கே தான் எங்களுக்கு காட்டிகல்லு மலையை காட்டினார்கள். செம செம...!!

நாங்கள் தங்கும் இடத்தில் இருந்து ஜீப்பில் போவாதே மிக பெரிய ஆனந்தம். ஏதோ ரோலர் கோஸ்டரில் செல்வது போல் இருக்கும். நண்பர் காட்டு சாரதா அவர்கள் அந்த ஜீப்பில் ஓட்டு கேட்டு, கமாண்டர் ஆபரேஷன் செய்தது, வழியில் பார்ப்பவை அனைத்தையும் காட்டு பைக், காட்டு ஆயானு சொல்லிட்டு வந்தான்.








ட்ரெக்கிங் என்றதும் கொஞ்சம் அட்டை பயம் இருந்தது. 8 கிலோ மீட்டர் ட்ரெக்கிங் தேர்ந்து எடுத்தோம். பள்ளலர்யா கோட்டையை பார்க்க மலை ஏறி செல்ல வேண்டும்.என் பின்னாடி நைரோபி மணி அவர்கள் துணையாக வந்தார். நண்பன் காமேஷ் உதவியோடு மலையேறி சேர்ந்தேன். தனாவுக்கு என்னைவிட நாக்கு கொஞ்சம் அதிகமாவே தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனா இந்த மாதிரி இயற்கை அழகை ரசிக்க எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கலாம். தீடிர்னு லைட்ஆ வெயில் அடிக்கும் அப்புறம் மேகமூட்டம் இருக்கும். நாங்கள் கோட்டையை அடைந்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்து எங்கள் வியர்வையை நினைத்தது.




சைக்கோ சாமியார் சாய் அவர்கள் மலை மீது மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்தவுடன் குஷி ஆகி கத்த ஆரம்பித்து விட்டார் நானும் வைட்டியும் டென்ஷன் ஆகிட்டோம். எங்கே மாடு மிரண்டுற போதுன்னு. கொஞ்ச நேரம் கோட்டையில் (வெறும் சிதைந்த மதில் சுவர் தான்) ஓய்வு எடுத்து மீண்டும் மலையை விட்டு இறங்க ஆயுத்தமானோம். மலை இறங்கவுது கொஞ்சம் ஈஸி தான். நடுவில் ஒரு இடத்தில் வந்த தண்ணீர் மிகவும் அருமை.



திரும்பவும் வந்து மதிய உணவு உண்டோம். ஏதோ அக்கி ரொட்டினு சொன்னாங்க நானும் மூணு வாங்கிட்டேன் பார்த்தா ஒண்ணு தின்னாலே வயிறு புல் ஆகிடுச்சு.அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ரசம் விட்டு சாதம் சாப்பிட்டேன். மீண்டும் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்புறம் சன்செட் பாயிண்ட் போனோம்..உண்மையிலே செம... அங்கே எந்த விதமான அட்டை பூச்சியும் இல்லை. சாயங்காலம் விடுதிக்கு வந்ததும் நண்பர் சேர்மன் வினோத்துக்கும் ராஜேஷ்க்கும் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் சமரசத்துக்கு வந்ததாக கூறினார்கள். வினோத் பேச்சு வார்த்தையின் போது குண்டு வெடித்ததாக பிராணேஷ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (எதுவும் புரியலையா..?? அவங்க அவங்களுக்கு தான் புரியும்...)




இரவு டின்னர் முடித்து அங்கிருந்து ஜீப்பில் பஸ் ஏற ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே மீண்டும் என்னையும், நிர்மல் மற்றும் நைரோபி மணியையும் கலாய்க்க ஆரம்பித்தனர். அந்த ஸ்பாட் செம காமெடி.மாத்தி மாத்தி கலாய்ச்சு வயிறு வலி வந்திருச்சு. அங்கிருந்து பஸ்ஸில் பெங்களூர் கிளம்பினோம். காலை ஆறு மணிக்கெல்லாம் பெங்களூர் வந்தடைந்து லால் பாக் எக்ஸ்பிரஸ் புடிச்சு சென்னை வந்து சேர்ந்தோம்...ரொம்ப பீல் பண்ண இடம்னா அது லால் பாக் எக்ஸ்பிரஸ் சீட் எல்லாருக்கும் ஒண்ணா கிடைக்கல. இருந்தும் கொஞ்சம் கலாய். அரவிந்த் கண்டிப்பா இந்த ட்ரெயின் பயணத்தை மறக்க மாட்டான்னு நினைக்கிறேன். அனைவரும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.



நீங்களும் இந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் காண்டக்ட் செய்யவும்....
GURUDEV B.N. GOWDA (08263216660)


நன்றி
ஜெட்லி...(சரவணா...)