முக்கிய அ(பி)ட்டு செய்திகள்:
"நடிகர் விஜய், அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது"
- தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி.
மேலும் அவர் " நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை
நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம்"
இது குறித்து எண்ணூர் டாஸ்மாக்கின் வெளியே வாந்தி எடுத்து
கொண்டிருந்தவரிடம் வாய் கழுவாமலே அவரின் கருத்தை கேட்டதற்கு .....
"என்னது நடிகர்களை நம்பி படம் பண்ண மாட்டாரா....
நல்ல வழக்கம் இந்த மாதிரி எல்லாம் டைரக்டரும் நினைச்சா விஜய்க்கு படம் கிடைக்காதே!!அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதா... அப்போ படத்தில் பில்டிங் பில்டிங்ஆ குதிக்கிறத தவிர்க்கலாம் இல்ல!!"
வ்வாஅ...வ்வாஅ....
*******************************
கிரிகெட்டை விட நடிப்பது கஷ்டம் - சடகோபன் ரமேஷ்.
ஏதோ ஒரு டாக்கீஸ் சார்பில் யுவராஜ் இயக்கம் பட்டாபட்டி
படத்தில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவா நடிக்கிறார்.
இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் சடகோபன் ரமேஷ்
அவர்கள் "சில ஹீரோக்களை பார்த்து, எவ்வளவு ஜாலியாக
இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு. நடிக்க வந்த பிறகுதான்,
நடிப்புக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று புரிந்தது.
கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம்
என்றும் புரிந்து கொண்டேன்" என்றார்...
இது குறித்து நம் சிறப்பு நிருபர் "சடகோபன் ரமேஷ் கிரிக்கெட்டே
பயங்கரமா விளையாடுவாருனு சொன்னா அதை விட மிகை
வேறு எதுவும் இல்லை. அப்போ கிரிக்கெட் ஈஸினா நடிப்பு
எப்படி இருக்கும்னு நினைச்சு பார்க்கவே முடியல. ஏற்கனவே
சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் எப்படி ப்ரேம் உள்ள
வந்தார்னு ரமேஷ்க்கே மிக பெரிய ஆச்சரியமாம் அந்த
அளவுக்கு அவர் ரியாக்சன் கொடுத்து இருப்பார், அப்போ
பட்டாபட்டி படம் பார்க்கறவங்களுக்கு கிழிஞ்சுடும்னு ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க..." மணலி முட்டு சந்தில் இருந்து முனியம்மா.
***************************
"இனிமேல் தனியாக நடித்து எந்த நடிகரும் ஜெயிக்க முடியாது,
பல கதாநாயகர்கள் சேர்ந்து நடித்தால் படம் ஓடும்"
- சுப்ரீம் பிளேடு ஸாரி ஸ்டார் சரத்குமார்.
இது குறித்து நான் கேபிள் அண்ணனிடம் கருத்து கேட்டதற்கு
அவர் சாட்டிங்இல் அனுப்பிய பதிலில் குபீர் சிரிப்பு வந்தது...
" நல்ல முடிவு, அவருக்கு"
நான் இது குறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பலை.....
**********************************
பழைய (அ)பிட்டு செய்தி:
"ரீமாவுக்கு முத்தம் கொடுக்க முப்பது டேக் எடுத்தார் புதுமுகம்."
சொஸைட்டி என்கிற ஹிந்தி படத்தில் புதுமுகத்துடன் ஜோடி
சேர்கிறார் ரீமா சென். படத்தில் ஒரு காட்சியில் புதுமுகம்
ரீமாவின் கன்னத்தில் வசனம் பேசிகொண்டே முத்தம் கொடுக்க
வேண்டுமாம். ஆனா பாருங்க அவர் வசனம் ஒழுங்கா பேசுனா
முத்தம் சரியா கொடுக்கலை, முத்தம் சரியா கொடுத்தா வசனம்
தப்பா பேசி ஆக மொத்தம் முப்பது தடவை கிஸ் ஸாரி டேக்
எடுத்து இருக்கிறார்.
இது குறித்து மெரினா பீச்சில் ஜோடிகளை வெறித்து பார்த்து
கொண்டிருந்தவரிடம் கேட்டதற்கு..."கொடுத்து வச்சவன் சார்!! அவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு." என்றபடியே தன் வேலையை தொடர்ந்தார்.
*********************************************
எனக்கா மணி உனக்கா...
கடந்த வாரம் ஜு.விகடன் மற்றும் குமுதம் ரிபோர்ட்டர் ரெண்டிலும்
நடுபக்க படம் ஒரே ஸ்டில்ஆக வந்த ப்ரியாமணி படம் மேலே .
இது ஒரு சரித்திர நிகழ்வு என எதிர் வுட்டு பொக்கை தாத்தா
சொன்னார்.
இன்னைக்கு இப்படி ஒரு படம் ரீலீஸ் ஆகுது...இது ஒரு தெலுங்கு
படம் டப்பிங். துரோணா என்ற படத்தின் தமிழாக்கம் தான் இது.
ஆனா இவங்க ப்ரியாமணி கவர்ச்சி ஸ்டில் வச்சி கிட்டத்தட்ட
ராஜலீலை ரேன்ஜில் விளம்பரம் செய்கிறார்கள்.
இந்த படம் குறித்து கிட்ட தட்ட ஒரு வருடம் முன்பே நான்
போட்ட ச(த)ரித்தர பதிவை படிக்க தவற வேண்டாம்...
கிளிக் செய்யவும்....
உனக்கா மணி எனக்கா
இது போன்று நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையில்லாத அட்டு
மற்றும் பிட்டு செய்திகளை தொடர்ந்து வழங்கிட உங்கள் ஆதரவை
எதிர்ப்பார்க்கும்.....
ஜெட்லி.... (சரவணா....)
12 comments:
சரித்திர நிகழ்வு...
நல்ல நகைசுவையுடன் தகவல்களை கொடுத்துள்ளீர். வாழ்த்துக்கள்!
this time you rounded to north madras?
ennore
manali
attu news to not good
but your writting is goodu
:)
நல்ல நகைசுவைகள்.
//பட்டாபட்டி படம் பார்க்கறவங்களுக்கு கிழிஞ்சுடும்னு ஊருக்குள்ள
பேசிக்கிறாங்க..."//
தெரிஞ்சது தான...
கடைசில எடுத்தவனுக்கும் அப்டிதான்...
தகவல்களை கண்டு வியந்தேன்... மேலும் இந்த சீரிய பணியை செவ்வனே செய்க... என் ஆதரவு எப்போதும் உண்டு...
super anne.
இன்னும் என்ன என்ன இருக்கோ !
தம்பி.. தமிழன் எக்ஸ்பிரஸிலும் அதே படம்தான்.. ஹி ஹி ஹி..
சடகோபன் ரமேஷ் பேசுறதே சிம்பு ரேஞ்சுக்கு இருக்கும், இதுல ஹீரோவா வேற நடிக்கறாரா? எப்படியும் அந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதி வழக்கம் போல எல்லாரையும் காப்பாத்திடுவீங்கள்ல? :)
@ அனைவருக்கும்
மிக பெரிய நன்றி...
@ ரகு
போவோம்...வேற என்ன வேலை
எனக்கென்னவோ இவர் சீக்கிரம் அரசியலுக்கு வந்துடுவாருன்னு நினைக்கிறேன்.
Post a Comment