Monday, March 29, 2010

வலை பதிவர் சங்கம் - ஆணியே புடுங்க வேணாம்

சங்கம் ஆரம்பிச்சாச்சு, எப்படியும் நம்மளைதான் தலைவரா தேர்ந்தெடுப்பாங்க, தேர்ந்தெடுத்த உடனே மாலை போடுவாங்க, ஆயிரமா, ஐநூறா இல்ல அம்பது ரூபாயோட நிறுத்திக்குவாங்களா? அப்படி மாலை போடும்போது போட்டோ எடுக்க தயாரா இருக்குற பலாபட்டறையை எப்படி அப்புறப்படுத்துறது? மாலை போட்ட உடனே மைக்க குடுத்து பேச சொல்லுவாங்களே, என்ன பேசலாம்? அப்புறம் பொன்னாட வேற போத்துவாங்களே, அதெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்கு? லாரி ஏதாவது தேவைப்படுமா? ஆட்டோ போதுமா? ஒருவேளை தனியா ஒருத்தர் மட்டும் தலைவர்னு கிடையாது, ஒரு குழுதான்னு சொல்லிட்டாங்கன்னா எப்படி போஸ் குடுக்குறது, ரெண்டு பக்கம் நிக்கிற ஆட்களோட கைகோர்த்து நிக்கணுமா? இவங்க தனியா மேடை வேற போடமாட்டாங்களே, நம்ம உயரத்துக்கு யார் பக்கத்துல நின்னு போஸ் குடுத்தா சரியா இருக்கும்? ஒருவேளை நம்மள தலைவரா தேர்ந்தெடுக்கலைன்னா போராட்டம் நடத்த வலையுலக தாக்கரேவையும் மோடியையும் கூப்பிடலாமா? உள்ளூர் புலியையும் சிங்கை சிங்கத்தையும் கூப்பிடலாமா?

இதெல்லாம் தான் சங்க கூட்டத்துக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது மனதில் ஓடிக்கிட்டிருந்த கேள்விகள்.


ஆறு மணி கூட்டத்துக்கு அஞ்சே காலுக்கே போய் நின்னா, நம்மக்கு முன்னாடியே அஞ்சாறு பேரு வாசல்ல நின்னுக்கிட்டுருந்தாங்க, அண்ணன் தண்டோரவோட கிளம்பி போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வந்தேன். சொன்ன சொல் தவறாம சரியா ஆறு மணிக்கு கூட்டத்த ஆரம்பிச்சாங்க. உ.த. அண்ணன் கொண்டு வந்திருந்த சுண்டலை, ச்சே, பேப்பரை எல்லாருக்கும் குடுத்தாரு. படிச்சிட்டு நிமிரும் போதே, அண்ணாச்சி நாமெல்லாம் எதுக்காக கூடி இருக்கோம்னு ஒரு பேருரை நிகழ்த்த தொடங்கி இருந்தார். அவர் பேசி முடிச்சிட்டு மைக்கை அண்ணா சிவராமனிடம் கொடுத்தார், சிதைவுகள்னு ப்ளாகுக்கு பேர் வச்சாலும் வச்சார், என்னோட கனவுகளையெல்லாம் ஜல்லி ஜல்லியா சிதைக்கிற அளவுக்கு ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க "எதுக்காக நாம சங்கம் ஆரம்பிக்கணும்?". அப்புடியே, கண்ணுக்கு முன்னாடி ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது. அடுத்து சில கேள்விகள் கேட்டாரு, அதுல முக்கியமான ஒன்னை தவிர மத்த எல்லாத்தையும் பத்தி எல்லாரும் பேசினாங்க, அந்த முக்கியமான கேள்விக்கு கடைசியா பேசின நர்சிம் தான் பதில் சொன்னாரு. அது என்னன்னு கடைசில சொல்றேன்.


அடுத்து வந்த ஞாநி பேசினாரு, பேசினாரு, பேசினாரு, ஸ்ஸ்ஸ்ஸபப்பா இதுக்கே எனக்கு மூச்சு வாங்குதே, அவரு அவரோட முப்பத்து வருட தொழிற்சங்க வாழ்க்கை பத்தி பேசிட்டு உக்காந்தாரு. திரும்பவும் எந்திரிச்சு இந்த கூட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளர் அவசியம்னு சொன்னாரு. சொன்னவரு, வரும்போது கோபிக்கிட்ட கேட்டு ஒரு கோட்டு வாங்கிட்டு வந்திருந்தா, நீயா நானாவோட தீவிர ரசிகரான நர்சிம்முக்கு போட்டு அவரையே ஒருங்கிணைக்க சொல்லியிருக்கலாமேன்னு எனக்கு தோணிச்சு. அவரு கேபிள் பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த என்னை பார்த்துதான் சொன்ன மாதிரி தோணிச்சி, "அய்யா, நானு பேசி களைச்சி போனா எல்லாருக்கும் காப்பி, தண்ணி குடுக்கதான் நின்னுக்கிட்டுருக்கேன்"னு சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள்ளே கடைசி பெஞ்சில் இருந்த கார்க்கி கூப்பிட்டாருன்னு அங்க போயிட்டேன். அப்புறம் வந்த எல்லாரும் பேசினாங்க, பேசினாங்க அவுங்களும் பேசினாங்க, உட்காந்திருந்தவுங்களும் அவுங்களுக்குள்ள பேசினாங்க. எந்த நேரமும் ஏதாவது நடக்கலாம்னு நினைச்ச நான் எஸ்கேப் ஆகுறதுக்கு வசதியா வாசல் பக்கத்தில நின்னுக்கிட்டேன்.


சரி, வெள்ளாட்டு போதும், இப்போ கொஞ்சம் சீரியஸ்


சிவராம் அண்ணன் கேட்ட கேள்விகள் நல்ல ஒரு ஆரம்பப்புள்ளி தான்,


எதுக்காக இப்போ இந்த சங்கம்?


இதுவரைக்கும் என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? அதை எதுவாக மாத்தப் போறோம்? அல்லது


இதுவரைக்கும் பண்ணாத எந்த விஷயத்தை புதுசா சங்கம் மூலமா பண்ணப் போறோம்?

இதுக்கப்புறம் ஞாநி கேட்டது இதே தொனியில் தான் இருந்தது,


சங்கம் ஒரு சட்டரீதியான, பதிவுபெற்ற நிறுவனமாக செயல்படுமா?
சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துமா?
சங்கம் உறுப்பினர்களை கட்டுப்படுத்துமா? ஆம் என்றால் எல்லை எது?

அடுத்து பேசிய எல்லாருமே இதை ஒட்டி / வெட்டியே பேசினார்கள்

இப்போ என்னோட (அங்கே கேட்க நினைத்து, நான் நினைத்ததன் சாரத்தை நர்சிம் பேசிவிட்டதால் கேட்காமல் விட்ட) சில கேள்விகள்,

ஆரம்பம் முதல்

எதற்கு சங்கம்?  சங்கம் என்ன செய்யப் போகிறது? என்ற தொனியில் பேசிய எல்லாரும் கூறிய ஒரு விஷயம், போராட்டம் மற்றும் பிரச்சனைகளை எதிர் கொள்வது,

எனக்குப் புரியவில்லை, எதற்காக நாம் போராட வேண்டும்? நமக்கு எதையும் எழுதும் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக சொன்னார்கள், நம்முடைய சுதந்திரம் சினிமா விமர்சனம் வரையிலும், சாரு, ஜெமோ வரையிலும் கட்டற்றதாக இருக்கலாம், அரசியல் பேசினால் ஆட்டோ வரும் என்ற பயம் இல்லாத பதிவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இப்படி ஒரு சூழலில் போராட்டம் என்பதும், பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதும் முதல் உரிமை கொடுக்கப் பட வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றவில்லை.


போராட்டத்திற்காக மட்டும் தான் சங்கம் கூட்டவேண்டுமா? சந்தோஷத்தை, ரசனையை பகிர்ந்து கொள்ள சங்கம் கூட்டக் கூடாதா? அது ஒரு காஸ்மோ பாலிட்டன் க்ளப் போல் ஆகிவிடும் என்றால், அதில் என்ன தவறு?


பதிவெழுதுவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட, மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் பதிவர் ஒருவரை IndiBlog பதிவர் சந்திப்பில் சந்தித்ததாகவும், நாமும் முயற்சித்தால் அதை இங்கே நடைமுறைப்படுத்தலாம் என்று லக்கி கூறியது, MLM செய்பவர் குரல் போல பலருக்கு ஒலித்திருக்கலாம், ஆனால் அதை நாம் ஏன் இங்கே நிஜமாக்க முயற்சிக்கக்கூடாது?


தீவிர இலக்கிய ரசனை என்பது சித்த வைத்தியம் போல குறிப்பிட்ட சிலரிடமே தங்கி விடாமல், பரவலாக்கலாமே? நான் சொல்வது பட்டறைகளைப் பற்றி அல்ல, கதை/கவிதை வாசிப்பு, அதை விளக்கி சொல்வது என்று மாதம் ஒரு நாள் செய்யலாமே, உதாரணமாக, எனக்கு ஜீரோடிகிரி புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை, அது ஒரு பின்நவீன நாவல், படிம நாவல் என்றெல்லாம் படித்துப் புரிந்து கொண்டவர்கள், எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே


ரவிசங்கர் சங்கம் வேண்டாம் என்று பேசினார், ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்றார், 
"அண்ணே இப்பவும் அதே தான் பண்ணபோறோம், சங்கம் ஆரம்பிக்கலாம் ஆனா ஆணி எதுவும் புடுங்கவே வேண்டாம்" (அப்பாடா தலைப்பை கொண்டு வந்தாச்சி),
இன்னொரு விஷயம், தன் கருத்தை சொல்லும்போது, சாமியார் சம்சாரியான கதை ஒன்றைச் சொன்னார், சாமியாரின் கோவணத்தை கடித்த எலியை ஒழிக்கத்தான் பூனை வாங்குவார் சாமியார், அது கடைசியில் சாமியாரை சம்சாரியாக்கி விடும், எதற்காக இதெல்லாம் என்று ஒருவர் கேட்கும் போது சாமியார் சொல்வார் "எல்லாம் ஒரு கோவணத்துக்காகத்தான்". ரவிசங்கர் இதை சொல்லும்போது முதலிலும் முடிவிலும் கோவணத்தை விட்டு விட்டார்,
"அண்ணே, சபை நாகரிகம் கருதி நீங்க அதை நீங்கள் விட்டிருந்தால், ஸாரி, சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன் உங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்படும் :)"


கடைசியாக , சிவராம் அண்ணா முதலில் கேட்ட விஷயம்,

இந்த சங்கம் பதிவர்கள் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் கொண்ட தகவல் தளமாக மட்டுமே செயல்படப் போகிறதா?

அதில் என்ன தவறு இருக்க முடியும்? நம்மில் பெரும்பாலோர் எழுதுவது சுய இன்பத்துக்க்காகத்தான், நான் இங்கே வந்தது ஒத்த ரசனை உள்ள நண்பர்களைத் தேடியும், ரசனைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் தான், தற்போது ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இருக்கும் ரசனைகள் ஒரு பெரிய குழுவாக சேர்வதில் என்ன தவறு? நான் சந்திப்புக்கு வரும்போது கவலைப்பட்ட ஒரு விஷயம், அந்த இடம் நமக்கு போதுமா என்பது தான், ஆனால் வந்தவர்கள் வெறும் ஐம்பது பேர்தான் என்பதில் எனக்கு ஏமாற்றமே! இங்கே எத்தனை குழுக்கள் இருக்கின்றன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?  அத்தனை குழுக்கள் பற்றிய விஷயங்களும் ஒரு இடத்தில் இருப்பது பெரியதொரு வசதி தானே. தகவல் தளமாக இயங்கும்பட்சத்தில், அதை நிர்வகிக்கவும், தினம்தோறும் அப்டேட் செய்யவும் ஒரு குழு தேவை தானே அது சங்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

நர்சிம் கடைசியாக பேசும்போது, சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றியும், அதில் பதிவர்கள் வானம்பாடி ஐயாவும், மருத்துவர் புருனோவும் செய்த உதவிகள் பற்றி சொன்னார். எனக்கு வானம்பாடிகள் ஐயாவை பதிவுகள் மூலம் பழக்கம் என்றாலும் அவரது தொழில் பற்றி எதுவும் தெரியாது. சங்கம் ஒரு தகவல் தளமாக இருந்தால் எதிகாலத்தில் பிரச்சனைகளில் உதவிக்கு ஆள் இருக்கு என்ற நிம்மதி கிடைக்கும்.

எது இல்லாவிட்டாலும், "பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.

அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி இரவு பத்தரைக்கு வீடு வந்து சேர்ந்தேன்
 
 
நன்றி

சங்கர்

43 comments:

Unknown said...

ரெண்டு நாள் கழிச்சு ரொம்ப யோசிச்சு பதிவு போட்டிருக்கிங்க ...
இங்க ஆணி புடுங்க இது வரைக்கும் அம்பது பேருக்கு மேல சேந்துருக்காங்க...
தவிச்ச வாய்க்கு தண்ணி குடுத்தது நீங்கதானா நன்றிங்க .......

இரும்புத்திரை said...

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.நான் வம்பு இழுத்தா சங்கம் ஆதரவு தருமா.யாராவது கேஸ் போட்டா எனக்கு கை செலவுக்கு காசு தருமா.இல்லை உன் ரோதனை தாங்க முடியல.இப்படி எல்லாம் செய்ய கூடாதுன்னு சொல்லுமா.யோவ் சாறு சங்கர் நீங்க தானே தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டது சொல்லுங்க பாஸ்.நர்சிம் வேற அடிப்படை உறுப்பினர் என்று சொல்லி விட்டார்.நீங்க தான் நிரந்தர தலைவர்.எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் நீங்கள் தான் தீக்குளிக்கணும்.

சங்கர் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
ரெண்டு நாள் கழிச்சு ரொம்ப யோசிச்சு பதிவு போட்டிருக்கிங்க ...
//

நேத்து ஆற்காடு வீராசாமி புண்ணியத்துல எழுத முடியாம போச்சி, அதுதான் இன்னைக்கு போட்டேன்

சங்கர் said...

// இரும்புத்திரை said...
நீங்க தான் நிரந்தர தலைவர்.எனக்கு ஒரு பிரச்சனை வந்தால் நீங்கள் தான் தீக்குளிக்கணும்.//

உனக்காக தீக்குளிக்கத்தான் ஏற்கனவே ஒரு ஆள் இருக்கே :))

vasu balaji said...

/அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி இரவு பத்தரைக்கு வீடு வந்து சேர்ந்தேன்//

இட்லி மட்டும்தானா? வட போச்சா:))

Raghu said...

//அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி //

எல்லாம் ச‌ரி, இதென்ன‌ க‌டைசியில‌ கேபிளை க‌ல்கி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க‌ :))

பிரபாகர் said...

இந்த மாதிரியெல்லாம் கேள்வியோட போனதாலதான் கலகலத்துப்போச்சி... தம்பி... உங்க அலப்பறை தாங்கல! கலக்குங்க...

பிரபாகர்...

Nathanjagk said...

//நம்ம உயரத்துக்கு யார் பக்கத்துல நின்னு போஸ் குடுத்தா சரியா இருக்கும்? //

U r standing..!

// "எதுக்காக நாம சங்கம் ஆரம்பிக்கணும்?". அப்புடியே, கண்ணுக்கு முன்னாடி ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது. //

Here understanding..!

// நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்//

Hi...hi.. Outstanding..!

Nathanjagk said...

இந்த ​வெளாட்டு ​போர் மா​மே.
வாங்க நாம அகில உலக பதிவர் சங்கம் ஆரம்பிக்கலாம்.

சங்கத்து ஆள எவன் அடிச்சாலும் நாம ​கோடு கிழிச்சு ஃ​பைட் பண்ணுவோம்..!

Unknown said...

எது எப்படியோ, இப்ப நான் அடிப்படை உறுப்பினராயாச்சி. அதுனால எனக்கு என்ன பிரச்சனைன்னாலும் சங்கம் தான் பாத்துக்கணும். சொல்லிட்டேன்..

புலவன் புலிகேசி said...

பொன்னாடை போட்டங்களா? இல்லைய? சொல்லுங்க போராட்டம் நடத்தலாம்.

//"பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.//

அது நடக்காதுடி...உருட்டுக் கட்டையோட ஒருத்தன் வந்தாலும் உடனே சங்கம் கலைக்கப் படும்...

ஸ்ரீராம். said...

என்ன சங்கமோ...என்ன குழுமமோ... இப்படி சேர்ந்தால்தான் நண்பர்களாக இருக்க முடியுமா என்ன?

வசந்தசேனன் said...

இப்படி ஆனிய புடுங்காம்ம இருக்கிறதுக்கு என்னத்துக்கு சங்கம்.. வாரத்துக்கு ஒருத்தர் வீட்டு திண்ணைல உக்காந்து
அரட்டை அடிச்சிட்டு வர வேண்டியது தானய்யா .....

சுருக்கமா சொன்னா இன்னொரு எண்டெர்டெயின்மெண்ட் ஜங்க்ஷன் [ மனமகிழ் மன்றம்] வேனும் உங்களுக்கு, அதுக்கு சங்கம்ன்னு ஒரு சப்பக்கட்டு

வசந்தசேனன் said...

//////எது இல்லாவிட்டாலும், "பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.

ஆரம்பமே சரியில்லையே.... விளங்கிருமைய்யா இந்த சங்கம் உங்கள மாதிரி இன்னும் நாலு ஆளு இருந்தா ....

சங்கர் said...

//வானம்பாடிகள் said...
இட்லி மட்டும்தானா? வட போச்சா:))//

ஆமாங்கையா, தேங்கா சட்னி கூட வைக்கல :(((((

சங்கர் said...

// ர‌கு said...

எல்லாம் ச‌ரி, இதென்ன‌ க‌டைசியில‌ கேபிளை க‌ல்கி ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க‌ :))//

நான் என்னங்க ஆக்குறது, அவரோட டக்கீலா படிச்சி பரவச நிலை அடைஞ்ச பக்தர்களை பாக்கத்தானே அவரு சிங்கப்பூரே போனாரு :)))))))

சங்கர் said...

//பிரபாகர் said...
இந்த மாதிரியெல்லாம் கேள்வியோட போனதாலதான் கலகலத்துப்போச்சி... தம்பி... உங்க அலப்பறை தாங்கல! கலக்குங்க...//

இன்னும் சில கேள்விகள் இருந்தது, ஆனா பத்தி ரொம்ப பெருசா போகுதேன்னு விட்டுட்டேன் :)

Paleo God said...

அட்லீஸ்ட் உங்களுக்காவது நான் வெறும் போட்டோ புடிக்கத்தான் வந்தேன்னு புரிஞ்சிதே..

ரொம்ப நன்றிண்ணே..!

:))

சங்கர் said...

//ஜெகநாதன் said...
U r standing..!
Here understanding..!
Hi...hi.. Outstanding..!//

ஆமாங்க, சந்திப்பு நடந்த ரெண்டு மணி நேரமும் நின்னுக்கிட்டே தான் இருந்தேன், கால் வலிக்குது :)

சங்கர் said...

// ஜெகநாதன் said...
சங்கத்து ஆள எவன் அடிச்சாலும் நாம ​கோடு கிழிச்சு ஃ​பைட் பண்ணுவோம்..!//

நமக்குள்ள தானே அடிச்சிக்கணும் ?

சங்கர் said...

//முகிலன் said...
எது எப்படியோ, இப்ப நான் அடிப்படை உறுப்பினராயாச்சி. அதுனால எனக்கு என்ன பிரச்சனைன்னாலும் சங்கம் தான் பாத்துக்கணும். சொல்லிட்டேன்..//

அதுக்காக, அண்ணிகிட்ட அடிவாங்றதுக்கெல்லாம் சங்கம் எதுவும் செய்ய முடியாது

சங்கர் said...

//புலவன் புலிகேசி said...
பொன்னாடை போட்டங்களா? இல்லைய? சொல்லுங்க போராட்டம் நடத்தலாம்.//

பொன்னாடையா, சிங்கிள் பீஸ் பன்னுக்கே வழியக்காணும்

சங்கர் said...

//ஸ்ரீராம். said...
என்ன சங்கமோ...என்ன குழுமமோ... இப்படி சேர்ந்தால்தான் நண்பர்களாக இருக்க முடியுமா என்ன?//

அப்படி இல்லீங்கண்ணா, அடிச்சிக்கிட்டாலும் அணைச்சிக்கிட்டாலும் ஒரு கூரைக்கு கீழ பண்ணினா, நாலு பேருக்கு தெரியாது, அதுக்குத் தான்

சங்கர் said...

// வசந்தசேனன் said...
சுருக்கமா சொன்னா இன்னொரு எண்டெர்டெயின்மெண்ட் ஜங்க்ஷன் [ மனமகிழ் மன்றம்] வேனும் உங்களுக்கு, அதுக்கு சங்கம்ன்னு ஒரு சப்பக்கட்டு//

அதே தானுங்க நான் சொல்ல வர்றது, க.க.க. போங்கள்

சங்கர் said...

//【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ said...
அட்லீஸ்ட் உங்களுக்காவது நான் வெறும் போட்டோ புடிக்கத்தான் வந்தேன்னு புரிஞ்சிதே..//

நான் கூடத்தான் இட்லி சாப்பிடலாம்னு வந்தேன், இதெல்லாம் சகஜம் தானே,

ஆமா, நான் உங்களுக்கு அண்ணனா??????????????

சங்கர் said...

//வசந்தசேனன் said...
ஆரம்பமே சரியில்லையே.... விளங்கிருமைய்யா இந்த சங்கம் உங்கள மாதிரி இன்னும் நாலு ஆளு இருந்தா ...//

நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவும் தப்பில்லை:)))))))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே... ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே..

பார்த்து கவனிங்க ..

எதோ என்னால முடிஞ்சது ஓட்டு போடுவது மட்டும் தான்.

துபாய் ராஜா said...

எது எப்படியோ 2011ல நம்ம ஆட்சிதான்.அம்பை தொகுதியை நாம ஷேர் பண்ணிகிடலாம்.குழும கூட்டம் இனிமேல் எங்கே நடந்தாலும் சங்கர்தான் தண்ணீ(ர்) சப்ளை. :))

இராகவன் நைஜிரியா said...

ஹையா மீ த 25

சங்கர் said...

//இராகவன் நைஜிரியா said...
அண்ணே... ஓட்டுப் போட்டுட்டேன் அண்ணே..
பார்த்து கவனிங்க ..//

இங்கே ஓட்டுக்கு கவர்கள் கிடையாது, வேண்டுமென்றால் நீங்கள் இங்கே வரும்போது பலாவின் கவிதை பட்டறையுடன் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்கிறோம், :))

சங்கர் said...

//துபாய் ராஜா said...
எது எப்படியோ 2011ல நம்ம ஆட்சிதான்.அம்பை தொகுதியை நாம ஷேர் பண்ணிகிடலாம்.குழும கூட்டம் இனிமேல் எங்கே நடந்தாலும் சங்கர்தான் தண்ணீ(ர்) சப்ளை. :))//

அம்பையை நீங்க வச்சிக்குங்க, நான் ஆலங்குளத்தை எடுத்துக்குறேன்


நீர்வளத் துறை அண்ணன் தண்டோரா வசம் தான், நான் வெறும் டெலிவரி பாய் தான்

Thenammai Lakshmanan said...

நல்ல பகிர்வு நன்றி சங்கர்
கலந்து கொள்ள இயலவில்லையேன்னு நினைச்சேன் அந்தக் குறையை உங்கள் இடுகை போக்கி விட்டது

Chitra said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
ரெண்டு நாள் கழிச்சு ரொம்ப யோசிச்சு பதிவு போட்டிருக்கிங்க ...
//

நேத்து ஆற்காடு வீராசாமி புண்ணியத்துல எழுத முடியாம போச்சி, அதுதான் இன்னைக்கு போட்டேன்


......இதற்கு பதிவர் சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுமா?

சுசி said...

//"பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.//

ஓ.. உங்களுக்கு பொண்ணு பாத்தாச்சா?? வாழ்த்துக்கள் சங்கர்.

சுசி said...

//சரி, வெள்ளாட்டு போதும், இப்போ கொஞ்சம் சீரியஸ்//

நேர்ல பாத்தா மாதிரி இருக்கு.. நீங்க எழுதினது :)))

Raju said...

மோடியா..? இதுக்கு கெட்ட கெட்ட வார்த்தைல பச்ச பச்சயா திட்டியிருக்கலாம்..1

Romeoboy said...

ஏன்பா அன்னிக்கு சங்கத்து ஆளை யாரோ அடிசிடாங்கலாம் அது யாருன்னு கொஞ்சம் கவனிச்சு பாரு ..

KUTTI said...

கலைஞர்கள் உங்களுக்குள் போட்டி இருக்கலாம். ஆனால் பொறமை இருக்க கூடாது. ஹி...ஹி...

சிநேகிதன் அக்பர் said...

விளையாட்டா சொன்னாலும் விசயத்தோட சொல்லியிருக்கீங்க பாருங்க சூப்பர்.

Giri Ramasubramanian said...

நிறைய பேரு பதிவர் கூட்டம் பத்தி எழுதியிருக்காங்க. படிக்கப் படிக்க...ஆஹா இப்படி ஒரு ஆணி புடுங்கின கூட்டத்தை மிஸ் பண்ணிட்டமேன்னு ஒரே பீலிங்கா இருக்கு....
உங்களுக்கு என் ஸ்பெஷல் வோட்டு...எதுக்குன்னா...உங்களோட நச் தலைப்புக்காக!
- Giri
Http://sasariri.com

Vidhoosh said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே. :)

வெற்றி said...

அடுத்த வருஷத்துல இருந்து என்னை தலைவரா போட போறதா ஒரு வதந்தி உலவுதாமே..உண்மையா ?

CS. Mohan Kumar said...

சங்கர் நலமா? நீண்டா நாளாக தங்கள் பதிவை காணும், வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_18.html