Friday, March 26, 2010

அங்காடி தெரு-விமர்சனம்

அங்காடி தெரு


மூணு மணிநேரம் ரெங்கநாதன் தெருவில் இருந்தது போல் இருந்தது அங்காடி தெரு.வசந்தபாலன் அவர்களின் மூன்றாவது படம்.படத்தின் களம் புதுசு.தி.நகர் ரெங்கநாதன் தெரு தான் படத்தின் ஹீரோ.சைதை ராஜில் முதல் காட்சிக்கு கூட்டம் ஓரளவுக்கு வந்தது.அங்கே பதிவர்கள் கேபிள் சங்கர் அண்ணனும் தண்டோரா அண்ணனும் வந்திருந்தார்கள்.


புதுமுக நாயகன் மகேஷ் அறிமுகம் மாதிரியே தெரியவில்லை.
மிக நன்றாக நடித்து இருக்கிறார்.நாயகி அஞ்சலி பத்தி நிறைய
சொல்லலாம்.நன்றாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி
இருக்காங்க.கனா காணும் காலங்கள் பாண்டி நாயகனின்
நண்பனாக சில இடங்களில் பழைய மொக்கைகளை போட்டாலும்
பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு கடையில் வேலை
செய்பவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்திருந்தாலும்
பல விஷயங்களில் எனக்கு உடன்ப்பாடு இல்லை.முக்கியமா
ஊழியர்களுக்கு சாப்பாடு அளிக்கும் முதல் காட்சி.ஆனா
அடுத்த தடவை அந்த காட்சி வரும் போது எல்லோரும்
அமைதியாக வரிசையில் நின்று சாப்பிடுகிறார்கள்....


ரிச்சர்ட் அவர்களின் ஒளிப்பதிவு சூப்பர்.படத்துக்கு அடுத்த
பலம் ஜெயமோகன் அவர்களின் வசனம்...பல இடங்களில்
பளிச் பளிச் என்று இருக்கிறது.முக்கியமா மகேஷ் அஞ்சலி
தூங்கி கொண்டிருக்கும் இடத்தில் தேடி போய் பார்த்து
பேசுவாரே மற்றும் மாற்று திறன் படைத்த ஒருவருக்கு
குழந்தை பிறந்தவுடன் அதான் தாய் கூறும் வசனமும் செம!!

இரண்டு பாட்டு படத்துக்கு மிக அழகு, கடைசியாய் துணி
கடையில் ஆடும் பாட்டு படத்தின் வேகத்தை குறைக்கிறது
ஆனா கதைக்கு தேவையானது.முதல் பாதியில் சில இடத்தில்
கொட்டாவி விட்டேன் அதை வேற கேபிள் அண்ணன் பாத்துட்டு
"என்னப்பா கொட்டாவி விட்டுட்டு இருக்கே" என்று தண்டோரா
அண்ணனிடம் கூறி கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.


இந்த படம் பாசிடிவ் படம் அப்படின்னு சொல்லலாம்.....
இயக்குனர் சில இடங்களில் முக்கியமா அந்த கழிவறையை
பார்த்து கொள்பவர்,அந்த கண்ணு தெரியாத தாத்தா என்று
பலர் மூலம் நம்முள் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.அதே
போல் வெங்கடேஷ் நாயகனிடம் "இந்த தெருவில் உனக்கு
யாரும் வேலை தராமாட்டங்க..பிச்சை தான் எடுக்கணும்"
என்பார்.அதற்கு நாயகன்"யானை வாழ்ற காட்டில் தான்
எறும்பும் வாழுது, நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்று
பதில் அளிப்பார்....செம...!!


அங்காடி தெரு,சில இடங்களில் தொய்வு இருந்தாலும் ரசிக்கலாம். இந்த படம் கண்டிப்பா சுத்தமான மசாலா காதலர்களுக்கு ஏற்றது அல்ல!! தண்டோரா அண்ணன் சொன்ன அதே கருத்தை நானும் சொல்றேன் கொடுத்த அம்பது ரூபாய்க்கு படம் வொர்த்!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# சைதை ராஜை தல தியேட்டர்னு சொல்லலாம்,அட எங்க
உட்கார்ந்தாலும் யார் தலையாவது மறைச்சுகிட்டே இருக்கும்னு சொன்னேங்க!!

# சூப்பர்வைசர் ஆக இயக்குனர் வெங்கடேஷ், மனுஷன் முதல்
காட்சியில் இருந்து தொடர்ந்து மூர்க்கத்தை காட்டிவிட்டு பின்பு இன்டெர்வல் முடிந்தவுடன் ஆளை காணோம்...நான் ஒரு அரை மணி நேரம் கழிச்சு கேபிள் அண்ணன்கிட்ட "எங்கே அண்ணே வெங்கடேஷை காணோம்??" என்று கேட்டேன்."இதோ இது அவர் வர வேண்டிய சீன்தான்" என்றார். அண்ணன் சொன்ன மாதிரி வெங்கடேஷ் அந்த சீன் வந்து தலை காட்டி விட்டு போனார்.

# அப்புறம் சில இடங்களில் நானும் கேபிள் அண்ணனும் படத்தை பற்றி மாத்தி மாத்தி கேள்வி கேட்டுட்டு இருந்தோம்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்லி பஞ்ச்:

அங்காடி தெரு - ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்.


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்,
முடிந்தால் பின்னூட்டம் போடுங்கள்!!


நன்றி
ஜெட்லி

நன்றி:cinesnacks

57 comments:

Romeoboy said...

ரொம்ப எதிர்ப்பார்ப்பு இரு படத்திருக்கு .. கண்டிப்பா பார்க்கணும்

சைவகொத்துப்பரோட்டா said...

சுடச்சுட விமர்சனம்!!!
ஆமா இது வசந்த பாலனுக்கு மூணாவது படம் இல்ல.....
வெயிலுக்கு முன்னரே ஒரு படம் இயக்கி இருக்காருன்னு நினைக்கிறேன்.
(படம் பேர் தெரியலை)

லோகேஷ்வரன் said...

@சைவகொத்துப்பரோட்டா
that film name is album

பாலாஜி சங்கர் said...

வெயிலுக்கு முன்னரே ஒரு படம் இயக்கி இருக்காருன்னு நினைக்கிறேன்.
(படம் பேர் தெரியலை)


ஆல்பம்

இராகவன் நைஜிரியா said...

இப்பத்தான் மணிஜீ அவர்கள் விமர்சனம் படிச்சேன்.

உங்க விமர்சனமும் அவருடையது மாதிரி.. நச்சுன்னு இருக்கு..

Paleo God said...

அங்காடி பத்திரம் அண்ணே..:))

தமிழ் உதயம் said...

பேராண்மைக்கு பிறகு தியேட்டருக்கு போக இருக்கேன். அங்காடி தெருவை பார்க்க.

geethappriyan said...

மிகவும் எதிர்பார்க்கும் படம்,அடுத்த வாரம் பார்ப்பேன்

துபாய் ராஜா said...

சீக்கிரம் பார்க்கணும்.

KUTTI said...

VASANTHA BALAN'S FIRST FILM "ALBUM"

NICE REVIEW JETLI...


MANO

T.V.ராதாகிருஷ்ணன் said...

கண்டிப்பா பார்க்கணும்

ஆடுமாடு said...

இது வ.பா க்கு 3 வது படம். முதல் படம் ஆல்பம்.

Mohan said...

வசந்த பாலன் அரைச்ச மாவையே அரைச்சிருக்க மாட்டாருன்னு நம்புகின்றேன். இந்த வார இறுதியில்தான் இப்படத்தைப் பார்க்கனும்!

kanagu said...

vimarsanathukku nandri thalaiva.... seekram indha padatha paakuren :) :)

மாதேவி said...

பார்க்கிறேன். நன்றி.

Porkodi (பொற்கொடி) said...

venkatesh yaru? indha hero kooda vera padathula nadichurukare?
sneha varranglame, sollave illa? :)

Unknown said...

ரொம்ப நாள் கழிச்சி ஒரு படத்துக்கு பாஸிட்டிவ்வா விமர்சனம் வந்திருக்கு.. :))

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விமர்சனம் படம். பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

Chitra said...

நல்ல விமர்சனம் - இந்த வெள்ளி, மொக்கை வெள்ளி இல்லை போல. நல்லது.

Unknown said...

Matinee raj thetrela thaan paarthen. enge ukkandhaalum thala maraikithu. Mathapadi padam worth watching.

ஜெட்லி... said...

@ எல்லோருக்கும்

மன்னிக்கவும் தவறாக போட்டுவிட்டேன்....
ஆல்பம் என் நினைவில் இல்லை....
மாற்றி விட்டேன்....
தவறை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி....

Muruganandan M.K. said...

பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளிவிட்டீர்கள். நல்ல விமர்சனம்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

,அடுத்த வாரம் பார்க்கணும்.

vasu balaji said...

விமரிசனம் ஏமாத்தல

ஜெட்லி... said...

@~~Romeo~~

@ சைவகொத்துப்பரோட்டா

@ இராகவன் நைஜிரியா

நன்றி....

ஜெட்லி... said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

எங்க வீட்லயும் அதே கவலைதான்...!!

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்

கண்டிப்பா போங்க....உங்களுக்கு தீனி போடும்
படமாக இருக்கும்....

ஜெட்லி... said...

@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்

@ துபாய் ராஜா

@ MANO

@T.V.ராதாகிருஷ்ணன்

பாருங்க...கண்டிப்பா புடிக்கும்...

ஜெட்லி... said...

@ ஆடுமாடு

மறந்துட்டேன்...


@ Mohan

பார்த்துட்டு சொல்லுங்க

ஜெட்லி... said...

@ kanagu

பார்த்துட்டு சொல்லுங்க கனகு


@ மாதேவி

பார்த்துட்டு சொல்லுங்

ஜெட்லி... said...

@Porkodi (பொற்கொடி)

ஏய், மலை மலை போன்ற டெர்ரர்ஆன படங்களை
இயக்கியவர் வெங்கடேஷ்.......
ஹீரோ புது பையன் தான்...கல்லூரி நாயகன் சாயலில்
இருக்கிறார்.......
சிநேகா சும்மா வராங்க...போறாங்க...அவ்வளவுதான்...

ஜெட்லி... said...

@ முகிலன்

@அக்பர்


கிட்டத்தட்ட மூணு வாரம் ஆகி போச்சு....

சினிமா ரசிகன் said...

புதுமுக நாயகன் மகேஷ் அறிமுகம் மாதிரியே தெரியவில்லை

mahesh is not new comer he acted in kalluri with tamannah sorry 4 typing in english i have not installed tamil typing software

ஜெட்லி... said...

வீராசாமி சதி பண்ணிட்டாரு...
நாளைக்கு வரேன்....
புழக்கமா இருக்கே......

Sathya said...

i just now came now after seeing this movie in sangam theatre super movie i am working in a call centre but the situation in this movie is similar to all working people

very realistic and review also gr8

Sathya said...

this hero has already acted with tamanaa in kallori and anjali is super she reminds my first love in KATRATHU TAMIZH and for this movie she deserves a national award

க ரா said...

ஒரு பாசிட்டீவ் விமர்சனம் உங்களிடமிருந்து. நன்றி.

Raghu said...

ஜெட்லி, ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளுக்கு பிற‌கு ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை பாத்துட்டீங்க‌ போல‌....ப‌க்க‌த்துல‌தான் எந்த‌ ப‌ட‌மும் பார்க்க‌ முடிய‌லையோ?...;)))

Porkodi (பொற்கொடி) said...

//ஏய், மலை மலை போன்ற டெர்ரர்ஆன படங்களை
இயக்கியவர் வெங்கடேஷ்.......//

அட ஆண்டவா.. நான் கூட ஒரு கேள்வி கேட்டதுக்கு என்னை தான் "ஏய்"ன்னு ஏகவசனம் ஆக்கிடீங்களோன்னு பயந்துட்டேன். அது படப்பேரா..

ஜெட்லி... said...

@ Chitra

மொக்கையா இருந்தா நீங்க என்னை காலாசி இருப்பீங்களே...

@ vinodp

ஹோ....மாட்னி நல்ல கூட்டம்...பால்கனியில்

ஜெட்லி... said...

@ Dr.எம்.கே.முருகானந்தன்

@ ஸ்ரீ.கிருஷ்ணா

பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே....

ஜெட்லி... said...

@வானம்பாடிகள்

படமும் ஏம்மாதுல ஐயா...

ஜெட்லி... said...

@வானம்பாடிகள்

படமும் ஏம்மாதுல ஐயா...

ஜெட்லி... said...

@சினிமா ரசிகன்

@Sathya

நண்பர்களே அவர் புது நாயகன்....கல்லூரி படத்தில்
நடித்தவர் பெயர் அகில்......டைட்டில் கார்டு பார்க்கவில்லையா...
அறிமுகம் என்று வருமே........

அஞ்சலி இஸ் கிரேட் சத்யா.....

ஜெட்லி... said...

@ இராமசாமி கண்ணண்

@ ர‌கு

நன்றி...ஏன் ரகு...??

ஜெட்லி... said...

@ Porkodi (பொற்கொடி)

இப்பவாது யார்னு தெரிஞ்சுதா...??
ஏய் படம் பேரை போட்டதற்கு மன்னிக்கவும்...

vijayan said...

இந்த மாதிரி படங்கள் வெற்றிபெரனும் ,ஜனங்களுடைய ரசனை மாறனும்.

ஸ்ரீராம். said...

ரெங்கநாதன் தெருவுல கும்மற கூட்டம் படத்தைப் பார்க்க நினைத்தாலே படம் வெற்றிதானே..

DREAMER said...

விமர்சனம் நல்லாயிருக்கு ஜெட்லி,
விரைவில் பார்க்கிறேன்!

-
DREAMER

karthik said...

கண்டிப்பா பார்க்கணும்படம்

ILLUMINATI said...

ஓகே.அப்போ போய் பாத்துட வேண்டியது தான்.தேங்க்ஸ் ஜெட்லி......

Sathya said...

thanks jetli

en padliku padil alitha thaliva nee vazhga pls help type in tamil your blog rocks

whenever i browse web the first page i come is to neekelen blogspot

ஜெட்லி... said...

@Sathya

jetliidli@gmail.com இல் தொடர்பு கொள்ளுங்கள் சத்யா....
முடிந்தால் சாட்க்கு வரவும்....

ஜெட்லி... said...

@vijayan

ரசனை ஒவ்வொருத்தருக்கும் மாறும் அண்ணே...
பார்ப்போம்....

ஜெட்லி... said...

@ஸ்ரீராம்

@DREAMER

@karthik

@ILLUMINATI

நன்றி...படத்தை பார்த்துட்டு சொல்லுங்க....

தமிழ் அமுதன் said...

///அங்காடி தெரு - ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்.//

அடிச்சுடுவொம்..!

பகிர்வுக்கு நன்றி said...

பகிர்வுக்கு நன்றி.