Thursday, March 25, 2010

ஆலோசனை / உதவி தேவை

"இப்பவே சொல்லிடுதேன், அந்த வீட்டை வாங்காதீரும், நாங்க அதை யாருக்கும் விக்க விடமாட்டோம், உங்க பெரியப்பா அதை வித்தா, ஒண்ணு எங்களுக்கு விக்கணும் இல்ல அது இடிஞ்சு விழணும். நீரு வெலகிக்கிடும், மீறி வாங்கினா, வில்லங்கமாகிப் போகும், இப்பமே சொல்லிட்டேன், அப்புறம் வருத்தப்படாதீரும்."



"நான் அந்த வீட்ட வாங்க முழு பணமும் ஆறு மாசம் முந்தியே குடுத்தாச்சு, பத்திரம் பதிவு பண்ண வேண்டியது மட்டும் தான் பாக்கி, இப்போ வந்து இப்படி பேசினா என்ன நியாயம்? "


"நியாய அநியாயமெல்லாம் பேசாதீரும், உங்க பெரியப்பா, அந்த வீட்டுக்கு அடுத்த வீட்டை எங்களுக்கு விக்கும்போது, இந்த வீட்டையும் எங்களுக்கு தரேன்னு சொல்லியிருக்காரு, நீங்கன்னு இல்ல வேற யாரு அந்த வீட்ட வாங்கினாலும் நான் விவகாரம் பண்ணுவேன், அவ்வளவு தான் சொல்லுவேன்"

"பெரியப்பா அப்படி சொல்லியிருந்தா நீங்க அவர் கிட்டத்தான் பேசணும்,"

"அவர் கிட்ட நாங்க பேசிக்கிடுதோம், நீங்க இதிலேருந்து விலகிக்கிடுங்க, அவ்வளவு தான்"

"நான் இந்த வீட்ட வாங்கி பேங்குல அடமானம் வச்சு என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கலாம்னு இருந்தேன், நீங்க அந்தப் பணத்தைக் குடுத்துட்டு வீட்ட வாங்கிக்குங்க"

"இந்த மாதிரி அர்த்தமில்லாத பேச்சு எங்கிட்ட பேசாதீரும், நீரு விலகிக்கிடுறது தான் நல்லது, மீறி வாங்கினா, வந்து இருக்க விட மாட்டோம்,"




அம்பாசமுத்திரம் அருகே ரெங்கசமுத்திரம் என்ற சிறு கிராமம் தான் என் சொந்த ஊர். ஊரை விட்டு, என் கல்லூரி படிப்பு செலவுக்காக குடியிருந்த வீட்டை விற்று, குடும்பத்தோடு இடம் பெயர்ந்து, சென்னை வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. துடிக்கும் மனதை சமாதானப்படுத்த, ஆண்டுக்கு ஒரு தடவையாவது ஊரைச் சென்று பார்த்து வரும் ஒவ்வொரு முறையும், அங்கே சொந்த வீடு என்றொரு பிடிப்பு இல்லாதது மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும்.


சென்ற வருடம் என் ஒன்றுவிட்ட பெரியப்பா வீட்டை விற்க முன்வந்த போது, ஒரு வழியாக இந்த வருத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றியது. இரண்டு தவணைகளில் பணமும் கொடுத்து முடித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அப்படி இப்படியென்று நாட்கள் ஓடி, ஒரு வழியாக, பத்திரம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்று கடந்த வாரம் ஊருக்கு புறப்பட்டுப் போன அப்பா, இரண்டாம் நாள் திரும்பி வந்து சொன்னது “நமக்கு அந்த வீடு வேண்டாம்டா, பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை பண்றான்”



கடந்த வெள்ளிக்கிழமை அவசர பயணமாக ஊருக்கு புறப்பட்டேன். கல்லிடைகுறிச்சியில் இருக்கும் பெரியப்பாவை போனில் கூப்பிட்டு வந்திருப்பதை சொன்னபோது, ”நான் மதுரைக்கு வந்திருக்கேன், திரும்பி வர நாலு நாள் ஆகும், நீ அங்க போய் அவங்கிட்ட எதுவும் பிரச்சனை பண்ணிடாதே” என்றார். அங்கே போய், பார்த்து பேசிய போது நடந்த உரையாடல்தான் மேலே உள்ளது.


பெரியப்பா கறாராகப் பேசியோ, வேறு வழியிலோ பிரச்சனையை தீர்த்து வைப்பதாகத் தோன்றவில்லை.


நானோ, என் அப்பா, அம்மாவோ வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை தான் ஊருக்கு சென்று பார்க்க முடியும்



வீடு அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று ஆகிவிட்டால், நாங்கள் இங்கே இருக்கும் போது, அவர்கள் அங்கே வீட்டை ஏதாவது செய்து விடுவார்களோ (ஓட்டை பிரிப்பது, சுவற்றை இடிப்பது) என்ற பயமும் உள்ளது


இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?


துணிந்து வீட்டை வாங்கி விடலாமா? அல்லது வேண்டாம் என்று பெரியப்பாவிடம் சொல்லி பணத்தை திருப்பி வாங்கி விடலாமா?


எங்களை மிரட்டிப் பேசிய அவர்கள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா? (இந்த உரையாடல், அவர் வீட்டினுள் நடந்தது, சாட்சிகள் ஏதும் கிடையாது)


வீட்டை வாங்கிவிடுவதென்றால், விவகாரம் ஏதும் நடக்காது இருக்கவும், அவர்களிடமிருந்து வீட்டைக் காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது முன்கூட்டியே எடுக்க முடியுமா?


விபரம் அறிந்தவர்கள் ஆலோசனைகள் சொல்லி உதவுங்கள்


நன்றி
சங்கர்

26 comments:

vasu balaji said...

அப்படியெல்லாம் யாரும் தாதாகிரி வேலை பண்ணமுடியும்னு தோணலை. வக்கீல் யாரையாவது புடிக்க வேண்டியதுதான்:)

சங்கர் said...

நாலு பேரை வச்சி பஞ்சாயத்து பண்ணலாம், ஆனா, நாம இந்தப் பக்கம் வந்தப்புறம், அவுங்க அங்கே ஏதாவது பண்ணாமல் இருக்கணுமே

Starjan (ஸ்டார்ஜன்) said...

சங்கர் இது வருத்தமான விஷயம். ஏன் இப்படி நடந்துக்கிறாங்க சே!

சித்து said...

மிகவும் வருத்தமான விஷயம் மச்சி, ஆனால் முதலிலேயே வாயை திறந்தார்கள் பார் அது தான் நீ செய்த புண்ணியம். பேசாம பணத்த உங்க பெரியப்பா கிட்ட வாங்கிட்டு இந்த பக்கம் வந்துடு. அது தான் உனக்கும் உன் எதிர்காலத்துக்கும் நல்லது, வக்கீல் கோர்ட் போலீஸ் இவர்களிடம் மல்லுகட்ட உன்னிட்டம் பணம் ஆட்கள் மற்றும் நேரம் இருக்கிறதா என்று முதலில் பார். நீ அங்கேயே இருந்தால் பரவாயில்லை, பின் எதற்கு இந்த விபரீத விளையாட்டு??

Raju said...

சித்துவை அப்படியே வரி மாறாமல் வழிமொழிகிறேன் சங்கரன்ணே..!

சைவகொத்துப்பரோட்டா said...

வக்கீலிடம் ஆலோசனை கேளுங்கள், தீர்வு கிடைக்கும்.
(இந்த முறையே சிறந்தது என நான் நினைக்கிறேன்)

துபாய் ராஜா said...

சங்கர், பெரியப்பா ஒத்துழைத்தால்தான் இந்த பிரச்சினை முடிவிற்கு வரும். முதலில் பெரியப்பாவிற்கு வீட்டை யாருக்கு கொடுக்க விருப்பம் என்பதை தெளிவாக கேட்டுகொள்ளுங்கள். அவர் அவர்களுக்கு கொடுப்பதாக கூறியிருந்தால் உங்களிடம் பணம் வாங்கியிருக்கமாட்டார். வக்கீலுடன் போலீஸ் ஸ்டேசன் சென்று பேசுங்கள். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் உதவி தேவையென்றால் தனிமடலிடுங்கள். உதவ தயார். போலீஸ் ஸ்டேசன் செல்லும் முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

எனது மின்மடல் முகவரி thubairaja@gmail.com

லோகு said...

அவங்க மிரட்டலை தவிர வேற ஒன்னும் பண்ண முடியாதுன்னு நான் நினைக்கிறேன். அந்த வீட்டின் மேல் வில்லங்கம் ஏதும் இல்லாதபட்சத்தில் (பத்திரம் எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில்) தைரியமாக வாங்குங்கள்.

வீட்டை வாங்கி, அங்கயே வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டால், வீட்டை பராமரித்தது போலவும் இருக்கும், பாதுகாப்பாவும் இருக்கும். வாடகையும் வரும்.

****
மறுபடியும் பிரச்சனை பண்ணா சொல்லுங்கள், பதிவுலக ரௌடிகளையெல்லாம் கூட்டிட்டு ஒரு டாடா சுமோல போய் இறங்கிடலாம் :)

பிரபாகர் said...

அய்யா சொல்றபடி கேளுங்க தம்பி! கவலை வேண்டாம், நல்லபடியாய் நடக்கும்...

பிரபாகர்...

puduvaisiva said...

நண்பா
1. நீ கொடுத்த பணத்துக்கு உனது பெரியப்பா இருந்து எதாவது பத்திரதாளில் வீடு வாங்குவதற்கான தவனை பணங்கள் என்று அவர் கையொழுத்தை போட்டு தந்துள்ளாரா?

2. வீட்டை விற்பது தொடர்பாக உனது பெரியப்பாவிடம் இருந்து எதாவது கடித நடவடிக்கை மேற்கொண்டாரா?

3. உன் சார்பாக இதில் 3வது நபர்கள் யாராவது சாட்சியாக இருக்கீறார்களா?

4. அந்த பக்கத்து வீட்டுகாரர் அரசு ஊழியரா? - ( வழக்கை போட ஈசியா இருக்கும்)

5. அந்த பக்கத்து வீட்டு நபருடன் உனது பெரியப்பா நீ வாங்க நினைக்கும் வீட்டின் மீது முன்பே ஏதாவது வீடு விற்பது தொடர்பாக ஓப்பந்தம் ஏதாவது போட்டுயுள்ளாரா? அப்படி இருந்தால் அதை சட்டபடி ரீஜிஸ்டர் ஆபிசில் பதிவு செய்யபட்டு உள்ளதா? அது ஓப்பந்தம் நடைமுறையில் உள்ளதா இல்லை காலவதியாகியுள்ளதா ? என்பதை அவசியம் தெரிந்துகொள்ளவும்.

6. இனிமேல் இது தொடர்பாக பெரியப்பா அல்லது ஊர் முக்கியநபரிடம் மற்றும் பக்கத்து வீட்டு நபரிடமும் செல் போன் பேசும் போது அந்த போச்சுகளை பதிவு செய்யவும்.

மேற் சொன்ன ஆவனங்களை நல்ல வழகரிஞரிடம் தந்து அந்த வீட்டின் மீது இடைகால தடை வாங்கவும் ( வழக்கு முடியும்வரை வீட்டை வாங்க ,விற்க மற்றும் கட்டுமான வேலைகள் தடை ).

எதற்கும் கவலைபடதே அந்த ஊரில் உனது பழைய நண்பர்கள் சொந்தகளுடன் இனைந்து வெற்றி கனியை பறி.

ரவி said...

புதுவை சிவாவை வழிமொழிகிறேன். சட்டரீதியாக செல்வதே சரி.

சங்கர் said...

ஆலோசனைகளுக்கு நன்றி நண்பர்களே

@ ♠புதுவை சிவா♠

//1. நீ கொடுத்த பணத்துக்கு உனது பெரியப்பா இருந்து எதாவது பத்திரதாளில் வீடு வாங்குவதற்கான தவனை பணங்கள் என்று அவர் கையொழுத்தை போட்டு தந்துள்ளாரா?

2. வீட்டை விற்பது தொடர்பாக உனது பெரியப்பாவிடம் இருந்து எதாவது கடித நடவடிக்கை மேற்கொண்டாரா?//

பத்திரத்தாள் எதுவும் எழுதப்படவில்லை, வெறும் வெள்ளை காகிதத்தில் ரெவின்யு ஸ்டாம்ப் ஓட்டி இரு சாட்சிகளின் கையெழுத்துடன், கையொப்பம் இட்டு தந்துள்ளார்

//3. உன் சார்பாக இதில் 3வது நபர்கள் யாராவது சாட்சியாக இருக்கீறார்களா?
//

அவர் என்னை மிரட்டும் தொனியில் பேசியதற்கு சாட்சி எதுவும் இல்லை

//4. அந்த பக்கத்து வீட்டுகாரர் அரசு ஊழியரா? - ( வழக்கை போட ஈசியா இருக்கும்)//

இல்லை, ஏதோ வியாபாரம் செய்கிறார்

//5. அந்த பக்கத்து வீட்டு நபருடன் உனது பெரியப்பா நீ வாங்க நினைக்கும் வீட்டின் மீது முன்பே ஏதாவது வீடு விற்பது தொடர்பாக ஓப்பந்தம் ஏதாவது போட்டுயுள்ளாரா? அப்படி இருந்தால் அதை சட்டபடி ரீஜிஸ்டர் ஆபிசில் பதிவு செய்யபட்டு உள்ளதா? அது ஓப்பந்தம் நடைமுறையில் உள்ளதா இல்லை காலவதியாகியுள்ளதா ? என்பதை அவசியம் தெரிந்துகொள்ளவும்.//

அந்த பக்கத்து வீட்டுகாரருக்கு கொடுப்பதாக சொன்னதாக எழுத்துப்பூர்வமான சாட்சி எதுவும் இல்லை

//6. இனிமேல் இது தொடர்பாக பெரியப்பா அல்லது ஊர் முக்கியநபரிடம் மற்றும் பக்கத்து வீட்டு நபரிடமும் செல் போன் பேசும் போது அந்த போச்சுகளை பதிவு செய்யவும்.//

நானும் அதைத்தான் செய்ய நினைத்திருக்கிறேன்

சங்கர் said...

@ துபாய் ராஜா

நன்றி ராஜா,

இந்த வார இறுதிக்குள் அவர்களிடம் சென்று பேசி ஒரு முடிவுக்கு வரும்படி பெரியப்பாவிடம் சொல்லி இருக்கிறேன், விவகாரம் அந்த அளவுக்கு சென்றால், நிச்சயம் உங்களை அழைக்கிறேன்

சங்கர் said...

// லோகு said...
மறுபடியும் பிரச்சனை பண்ணா சொல்லுங்கள், பதிவுலக ரௌடிகளையெல்லாம் கூட்டிட்டு ஒரு டாடா சுமோல போய் இறங்கிடலாம் :)//

அருமையான யோசனை லோகு, பதிவுலக ரவுடிகளோடு எழுத்துலக ரவுடிகளையும் அழைத்து சென்றால் இன்னும் எளிதாக காரியம் முடியும் என்று நினைக்கிறேன் :)

சங்கர் said...

//லோகு said...
வீட்டை வாங்கி, அங்கயே வேறு யாருக்காவது வாடகைக்கு விட்டால், வீட்டை பராமரித்தது போலவும் இருக்கும், பாதுகாப்பாவும் இருக்கும். வாடகையும் வரும்.//

இதுல ரெண்டு விஷயம் இருக்கு லோகு,

1. அப்பப்போ ஊருக்கு போகும் போது தங்குறதுக்கு இடம் தேட வேண்டி இருக்கே என்ற எண்ணம் தான் வீடு வாங்கக் காரணமே, யாராவது வாடகைக்கு வந்தா அப்புறம் கஷ்டம் தான்
2. அது ரொம்ப சின்ன ஊரு, வாடகைக்கு ஆள் வர்றது ரொம்ப கஷ்டம், அப்பிடியே யாராவது வந்தாலும் பின்னாடி அவுங்களை காலி பண்ண செய்வது அதைவிட கஷ்டம்

துபாய் ராஜா said...

சங்கர் said...
//அந்த பக்கத்து வீட்டுகாரருக்கு கொடுப்பதாக சொன்னதாக எழுத்துப்பூர்வமான சாட்சி எதுவும் இல்லை.//

//உங்க பெரியப்பா, அந்த வீட்டுக்கு அடுத்த வீட்டை எங்களுக்கு விக்கும்போது, இந்த வீட்டையும் எங்களுக்கு தரேன்னு சொல்லியிருக்காரு//

அந்த வீட்டை வாங்கும் போது இந்த வீட்டையும் விற்கும் எண்ணமிருந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டிருப்பார். பெரியப்பாவும் சாதாரணமாக ஆகட்டும்.பார்க்கலாம் என்று கூறியிருப்பார். இதை வைத்துதான் இப்போது பிரச்சினை செய்கிறார்கள் என்பது என் எண்ணம்.

தயங்க வேண்டாம் சங்கர்.நியாயம் உங்கள் பக்கம்தான். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்.

Romeoboy said...

உங்கள் மனதில் இருக்கும் என்ன ஓட்டம் எது வென்று நீங்களே முடிவு செய்துவிடுங்கள். அதற்க்கு ஏற்ற அறிவுரையை கேட்டு நடந்து கொள்ளுங்கள் பாஸ் .

Menaga Sathia said...

அரசாங்க வக்கிலின் உதவியை நாடுவதே நலம்..எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுகிறேன்...

வெற்றி said...

நம்ம ஆளுங்க எல்லாம் தயாரா இருக்காங்க..உம் ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க..எவனா இருந்தாலும் தூக்குறோம் :)

Radhakrishnan said...

எப்பாடுபட்டாவது அந்த வீட்டை வாங்கிவிடுங்கள். புதுவை சிவாவின் யோசனை நல்லது. வெற்றியின் யோசனை நகைச்சுவைக்குரியது. ;)

ஸ்ரீராம். said...

பிரச்னை சீக்கிரம் நல்லபடியாய் முடிய வாழ்த்துகிறேன்.

Chitra said...

மோகன் குமார் என்ன சொல்றாங்க? பிரச்சினை சீக்கிரம் நல்ல படியாக முடியட்டும்.

சுசி said...

பிரச்சனை தீரட்டும் சங்கர்.

அதுக்கேத்த முடிவா எடுங்க.

Prasanna Ramachandran - PXR said...

Legal action can be taken, but later will cause friction and may lead to bad blood.

Ask them to give in written the following.

"இந்த மாதிரி அர்த்தமில்லாத பேச்சு எங்கிட்ட பேசாதீரும், நீரு விலகிக்கிடுறது தான் நல்லது, மீறி வாங்கினா, வந்து இருக்க விட மாட்டோம்,"

Attempt to cause trouble and life threatening can be registered.

manjoorraja said...

நீங்கள் உள்ளூரில் இல்லையென்பதால் அவர்கள் உங்களை சும்மா மிரட்டி பார்க்கிறார்கள் என்று தெரிகிறது. பெரியப்பாவிடம் தீர விசாரித்து விட்டு பின் ஒரு நல்ல வக்கீலை பார்த்து சட்டரீதியாக அணுகவும்.

Ahamed irshad said...

வருந்ததக்கது.. வக்கீலை நாடினால் நலம்.. வக்கீலுக்கு முன்னாடி "நல்ல" என்ற வார்த்தையை சேர்த்துவிடவும்..