Wednesday, March 24, 2010

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??




முன்தினம் இரவு தூங்கும் போது நானே எனக்கு கேட்ட கேள்வி இது.அது நான் ஏன் கவிதை எழுத கூடாது?? "டேய் ஜெட்லி ஏற்கனவே உன் அக்கப்போர் தாங்கல இதுல கவிதை வேறயா..." என்று நீங்கள் நினைப்பது
எனக்கு புரியாமல் இல்லை.இருந்தாலும் கடந்த ஒரு நாளா என் அறை முழுவதும் கவிதை கவிதை என்று சுவர்களில் இருந்து சத்தம் வருவது போல் ஒரு பிரம்மை!!

நான் இதற்கு முன் சில மாதங்கள் முன்பு ஒரு கவிதை எழுதினேன்.அதை கவிதை என்று கடைசி வரை என் நண்பன் ஒத்துகொள்ளவில்லை.ஏதோ ஏதோ பல்கலைகழகத்துக்கு எல்லாம் அங்கீகாரம் கிடைத்த போதும் என் கவிதைக்கு அங்கீகாரம் அப்போது கிடைக்கததால் நான் கவிதை எழுதுவதை
விட்டுவிட்டேன்.இதோ அந்த கவிதை உங்கள் பார்வைக்கு....
யாரும் டென்ஷன் ஆகாதிங்க...பீ கூல்....

***********************************

நான் அவளை பார்த்தேன்


அவள் என்னை பார்த்தாள்


பூ போல் சிரித்தாள்


செல்லமாய் வெட்கப்பட்டாள்


என் உடம்பு சிலிர்த்தது


அவள் அருகில் சென்றேன்


பின்பு தான் புரிந்தது


அவள் ஹெட் போனில் யாருடுனோ


பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........!!

***********************************************

குரு கில்மானந்தாவின் யோசனை:

தீடிர்னு கவிதை எழுதணும் என்ற வீபரித ஆசை வந்தவுடன் என் குரு கில்மானந்தாவிடம் ஆசி வாங்க சென்றேன்.அப்போது தான் அவர் K.F.STRONG பீரை தன் வாயால் ஓபன் செய்தார். நான் கவிதை எழுத போறேன் சாமி என்றேன்.அவர் காதில் வாங்கினாலும் முகத்தில் எந்த வித ரியாக்சன் காட்டாமல் பீரை க்ளாசில் ஊற்ற ஆரம்பித்தார்,பீர் பொங்கி க்ளாசை
விட்டு வழிந்தது.அப்போதும் குரு நிறுத்தாமல் ஊற்றி கொண்டே இருந்தார்.....

அப்போது நான் "சாமி கிளாஸ் தான் புல் ஆச்சி இல்ல.... அப்புறம் ஏன் இன்னும் ஊத்திக்கிட்டே இருக்கீங்க?"என்றேன்.

உடனே குரு "அது போல தான்ப்பா நீ கவிதை எழுத போறேன்னு சொல்ற ஆசையும்....பீர்ல இருந்து வர நுரை ஒரு நிமிஷம் கூட க்ளாசில் இருக்காது...அது போல தான் உன் ஆசையும்....தயவு செய்து மக்களுக்கு நல்லது செய்றதா நினைச்சு அந்த கவிதை எழுதனும்னு நினைக்கிற அந்த எண்ணத்தை விட்டுரு ஜெட்லி...." என்றார்.

"முடியாது சாமி.....நான் ஆசைப்படறது தப்பா...??" என்று கேட்டேன்.

உடனே குரு "ஆசைப்படறது தப்பு இல்ல.அதுக்குனு அளவு இருக்கு.இதை தான் ஸ்ரீ ஸ்ரீ செல்வராகவா சுவாமிகள் 'என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா' என்று மனிதனின் ஆசையின் அளவுகோலை மிக அழகாக சொன்னார்" என்று முடித்தார்.

சரி இனிமே இவர்கிட்ட யோசனை கேட்டா வேலைக்கு ஆகாது என்று அங்கிருந்து கிளம்பினேன்!!


****************************************************************

பலா(ன)பட்டறை கவிஞர் ஷங்கர் அவர்களின் யோசனை:

"அண்ணே கவிதை எழுதணும் ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க"
என்று அண்ணன் பலாபட்டறை ஷங்கரிடம் கேட்டேன்....

"முதல்ல நாம கவிதைக்கு வைக்கிற டைட்டில் பேரே புரியக்கூடாது...அப்புறம் கவிதையே புரியக்கூடாது....."
என்றார் அவர்.

"என்ன அண்ணே கவிதை புரியலைனா எப்படி.....?" என்றேன் நான்.

"தம்பி...கவிதை புரிஞ்சா அந்த பதிவோட முடிஞ்சு போய்டும்...
ஆனா புரியலைன்னு வை இன்னொரு பதிவு போட்டு விளக்கவுரை கொடுத்தடலாம்" என்று பயங்கர ஐடியா கொடுத்தார்.

"என்ன இருந்தாலும்?" என்று இழுத்தேன்


"என்ன ஐடியா பிடிக்கலையா??இல்ல ரெண்டு பதிவோட கவிதை முடிஞ்சிடுமோன்னு...பயப்படுறியா அவ்ளோதானே, கவலைய விடு, அப்படியே இத தொடர நான் அழைப்பவர்கள்னு ஒரு 10 பேர கூப்பிட்டுவிடு.." முடிக்கும் முன்பே நான்


"என்னது கவிதைய தொடர்றதா ரொம்ப டெர்ரர்ரா இருக்கேண்ணே.."
என்றேன் விழிபிதுங்க.....


"அட வரலாறு முக்கியமில்லையா?? இது வரைக்கும் யாராவது கவிதை தொடர்பதிவுன்னு போட்டுருக்காங்களா பாரு..இதுக்கு தான் ஊருக்குள்ள என்னை மாதிரி ஐடியா'மணி' வேணும்ங்கறது" என்றார் ஐடியாவாக

"ஆஹா செம ஐடியாணே இது" என்று அங்கிருந்து கிளம்பினேன்!!

ஷங்கர் அண்ணன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு நைட் குப்புற
மற்றும் மல்லாக்க படுத்து யோசித்ததில் ஒரு கவிதை தோணிச்சு
அது இதோ........

(caution: following content may sema mokkai or marana mokkai...)

மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!!



இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


கவுண்டர் ஸ்டைலில் என் மனம்
"நான் கவிஞர்ங்கோ....ஐயோ நான் கவிஞர்ங்கோ...
நானும் கவிஞர்ங்கோ....." ஹி ஹே ஹே ஹி......


************************************************

அடுத்து வரும் வாரங்களில் வர போகிற தலைப்புகள்....

# நான் ஏன் சாமியார் ஆக கூடாது??

# நான் ஏன் மாஸ்டர்(டீ,குங்க்பூ,கராத்தே,பரோட்டா) ஆக கூடாது??


விரைவில்.....


தொடர்ந்து நான் கவிதை எழுத வேண்டாம்னு நீங்க நினைச்சா
கண்டிப்பா ஒட்டு போடுங்க.....பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!

ஜெட்லி....

52 comments:

Unknown said...

எதுக்கும் ஒடம்பப் பாத்துக்கப்பா.. ஷங்கர் கிட்ட எல்லாம் ரோசன கேட்டிருக்க..

Unknown said...

தமிழ்மணம் ஓட்டுப் பட்டியை கீழேயே கொண்டு வந்ததற்கு கோடானு கோடி நன்றி..

Unknown said...

அய்யயோ ! அநியாயம் நடந்திருச்சு ... உங்க கவிதைய திருடி ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாலயே சாக்லேட் அப்புடிங்குற படத்துல பாட்டா வைச்சுட்டாங்க..

சைவகொத்துப்பரோட்டா said...

கதை மிக மிக அருமை.

KUTTI said...

அட்டகாசம் BOSS. 100 % COMEDY.

Chitra said...

(caution: following content may sema mokkai or marana mokkai...)

நினைச்சேன் ....... வரிசையா செம மொக்கை அல்லது மரண மொக்கை படங்கள் பாக்கும் போதே, உங்களுக்கு இப்படி ஆகும் என்று.
ஜெட்லியின் கவுஜை படிக்கும் போது - பதிவு நொறுக்ஸ் ஆக வந்த ஷங்கரின் அறிவுரை நல்லா இருந்தது.

எறும்பு said...

திரைவிமர்சனம் அருமை அப்படியே அங்காடி தெரு விமர்சனத்தையும் எதிர்பார்கிறேன்

;)

voted

Mohan said...

கவிஞரானதற்கு வாழ்த்துகள்!

தமிழ் உதயம் said...

கவிதை எழுதறதுல ஒரு சாதகமான அம்சம் இருக்கு- வலைப்பூவுல. தினசரி ஒரு பதிவு போடலாம். நானும் கவிதைக்கு முயற்சிகிறேன். முடியல.

CS. Mohan Kumar said...

ரெண்டாவதை படிக்கும் போது சிரிப்பை அடக்க முடியலை; அதே போல் செல்வா மேட்டரும் செம சிரிப்பு

சிநேகிதன் அக்பர் said...

//மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!! //

ஏஏஏ... டண்டனக்கா .... டணக்குனக்கா...

vasu balaji said...

நல்லாருந்த புள்ளைய இப்படி ஆக்கி வச்சிட்டாங்களே:))

ஜெட்லி... said...

@முகிலன்

ஏன்ப்பா அவர் சூப்பர் யோசனை சொல்லி இருக்காரு....
இது வரைக்கும் கவிதை தொடர் பதிவு யாராவது
யோசிச்சாங்களா??

ஜெட்லி... said...

@ பேநா மூடி

அப்படியா...அப்போ கேஸ் போடணும்...
படத்தை இனிமே எங்கையும் திரையிட கூடாதுன்னு
ஸ்டே வாங்கணும்.... நமக்கு விளம்பரம் தான் முக்கியம்.

ஜெட்லி... said...

@ சைவகொத்துப்பரோட்டா

கதையா....சரி ஏதோ ஒன்னு..நன்றி

ஜெட்லி... said...

@ MANO

நன்றி நண்பரே....

ஜெட்லி... said...

@ Chitra


முன்னாடியே நினைச்சீங்களா...
நீங்கதான் உண்மையான தீர்க்கதரிசி...

ஜெட்லி... said...

@ எறும்பு

மாத்தி கமெண்ட் போஸ்ட் பண்ணீட்டிங்களா??
கண்டிப்பா அங்காடி தெரு போடுவேன்...

ஜெட்லி... said...

@ Mohan

நீங்க ரொம்ப நல்லவர் அண்ணே....
உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு...
என்னை கவிஞர் அப்படின்னு ஒத்துக்கிட்ட
முதல் ஆள் நீங்க தான்....

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்

அண்ணே...

கவிதை தானா வரணும்....
நம்ம ஷங்கர் அண்ணன் தூங்கும் போது
கூட கவிதை சொல்லிக்கிட்டே தான்
தூங்குவாராம்.....

ஜெட்லி... said...

@ மோகன் குமார்

நன்றி அண்ணே....
நான் பாஸ் ஆயிட்டேனா??

ஜெட்லி... said...

@ அக்பர்


நான் அதை போட மிஸ் பண்ணிட்டேன்...
தாங்கள் டன் டனக்க போட்டு நிறைவு செய்துடிங்க...

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்

நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்க ஐயா..
இது மேல கவிதை எழுத மாட்டேன்...!!

எறும்பு said...

//மாத்தி கமெண்ட் போஸ்ட் பண்ணீட்டிங்களா??
கண்டிப்பா அங்காடி தெரு போடுவேன்.//

நீங்க ரொம்ப நல்லவர் அண்ணே....
உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு...

துபாய் ராஜா said...

இதை அப்படியே பெசண்ட் நகர் பீச் சுவத்துல எழுதி வச்சுட்டு பக்கத்துல உடகார்ந்துக்கோங்க... ஏன்னா அரசாங்கம் ராத்திரியோட ராத்திரியா அந்த சுவத்தை இடிச்சுடக்கூடாதுல்லா...

அதுக்கு முன்னாடி பலா பட்டறைட்ட சொல்லி ஒரு கவிதை பட்டறைக்கு ஏற்பாடு பண்ணிடுங்க...

:)))))

வெற்றி said...

கவிதை அருமை..பின்நவீனம்,முன்நவீனம்,சைடுநவீனம் எல்லாம் நிறைய தெறிக்கிறது..நோபல் காலிங்பெல் அடிக்கிறது..கதவை திறங்க :)

Radhakrishnan said...

காரணத்தை அழகாக பதிவுகளில் காட்டிய திறமைக்கு வாழ்த்துகள்.

Menaga Sathia said...

கவிதை நல்லாயிருக்கு ஜெட்லி!!

//மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!!



இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.// ஹி..ஹி.. செம காமெடி!!

Menaga Sathia said...

கவிதை நல்லாயிருக்கு ஜெட்லி!!

//மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!!



இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.// ஹி..ஹி.. செம காமெடி!!

Ashok D said...

ஜெட்லி மாஸ்டர்...
Teach me கவிதை & குங்க்பூ ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

தெய்வமே.. வேண்டாம் இந்தக் கொலவெறி..:-)))

ஜெட்லி... said...

@ எறும்பு

ஐயா நான் உங்களுக்கு அண்ணனா??

ஜெட்லி... said...

@ துபாய் ராஜா

செம ஐடியா அண்ணே இது....
அண்ணன் பட்டறைக்கு ரெடியா தான் இருக்காரு....

ஜெட்லி... said...

@ வெற்றி

நீ தான்பா நண்பன்....
ச்சே...உன்னை மாதிரி ஆளை தான்
தேடிக்கிட்டு இருந்தேன்ப்பா....

ஜெட்லி... said...

@ V.Radhakrishnan

நன்றி அண்ணே

ஜெட்லி... said...

@ Mrs.Menagasathia

நன்றிங்க...

ஜெட்லி... said...

@ D.R.Ashok

ஒரு கவிதை சுனாமிக்கு நான் எப்படிணே.....

ஜெட்லி... said...

@ கார்த்திகைப் பாண்டியன்

சும்மா...ட்ரை பண்ணேன்..இனிமே கவிதை
எழுத மாட்டேன்.....

உண்மைத்தமிழன் said...

நீங்க சத்தியமா கவிஞர்தான் ஜெட்லி..! ஒத்துக்குறோம்.. அதுக்காக இப்படியா..?

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை மிக அருமை அப்படின்னு ஒரே வார்த்தையில சொல்லமுடியாத அளவுக்கு நல்லாருக்கு.

//நான் ஏன் கவிதை எழுத கூடாது....??//

கவிஞரே இப்படி சொல்லலாமா...

Romeoboy said...

\\"முதல்ல நாம கவிதைக்கு வைக்கிற டைட்டில் பேரே புரியக்கூடாது...அப்புறம் கவிதையே புரியக்கூடாது....."//

கரெக்ட் தான்..

Raghu said...

//இதை தான் ஸ்ரீ ஸ்ரீ செல்வராகவா சுவாமிகள் 'என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா' என்று மனிதனின் ஆசையின் அளவுகோலை மிக அழகாக சொன்னார்//

ஹாஹ்ஹா............இதை ஏதோ ஒரு ப‌திவுல‌, நீங்க‌ பின்னூட்டின‌தா ஞாப‌க‌ம், க‌ரெக்ட்டா?

//முதல்ல நாம கவிதைக்கு வைக்கிற டைட்டில் பேரே புரியக்கூடாது...அப்புறம் கவிதையே புரியக்கூடாது//

ஆமா, நிறைய‌ பேருடைய‌ க‌விதைக‌ளை ப‌டிக்கும்போது, த‌மிழ்ல‌தானே இருக்கு, ஏன் ந‌மக்கு புரிய‌லைன்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சுட‌றேன்:((

//இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.//

ஜெட்லி, இந்த‌ ப‌த்தி முழுவ‌துமே செம‌ சிரிப்பு, வாய்விட்டு சிரிச்சுட்டேன் :)))))

//நான் ஏன் சாமியார் ஆக கூடாது??//

அதானே!

Thenammai Lakshmanan said...

ஜெட்லி நீங்க பாஸ் ஆகிட்டீங்களானு அந்த படத்துல இருக்குற குழந்த்தை கிட்ட கேக்கலாம் ..அது நிலையைப் பார்த்தாலே தெரியல கட்டிப் போடு கவிதை சொல்றாய்ங்கன்னு வருத்தப் படுறதை :))))

முதல் கவிதை அருமைதான்

ப்ரியமுடன் வசந்த் said...

என்னத்த சொல்றது சேர்க்கை சரியில்ல...

:)

ஜெட்லி... said...

@ உண்மைத் தமிழன்


ஒத்துக்கிட்டதுக்கு நன்றி அண்ணே.....
இனிமே இந்த மாதிரி டெர்ரர் சம்பவம்
நடைபெறாது.....

ஜெட்லி... said...

@ Starjan ( ஸ்டார்ஜன் )

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணே...

ஜெட்லி... said...

@~~Romeo~~

எல்லாம் நம்ம ஷங்கர் அண்ணன் உபயம் தான் ரோமியோ..

ஜெட்லி... said...

@ ர‌கு

கரெக்ட் தான் ராஜு அண்ணன் பதிவில் பின்னூட்டம் போட்டது
அந்த வரிகள்.....இதுல யூஸ் ஆச்சி...நம்ம பின்னூட்டம் தானே
என்று போட்டேன்..... நன்றி ரகு...இவ்ளோ நினைவாற்றலா..

ஜெட்லி... said...

@ thenammailakshmanan

//முதல் கவிதை அருமைதான்
//

நிஜமாத்தான் சொல்றீங்களா??

ஜெட்லி... said...

@ பிரியமுடன்...வசந்த்

நன்றி...

புலவன் புலிகேசி said...

ஓட்டுப் போட்டுட்டேன்...புரிஞ்சிக்குங்க ஜெட்லி...

பனித்துளி சங்கர் said...

ஆஹா !
ஒரு புதிய கவிஞர் வந்தாச்சு இனி கவிதைக்கு கவலையே இல்லை . வாழ்த்துக்கள் !