Friday, March 12, 2010

மாத்தியோசி.... யோசிச்சாங்களா??

மாத்தியோசி.... விமர்சனம் மாதிரி!!

நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதைக்கு பின் இயக்கும்

படம்.நாலு பசங்க தான் நாயகர்கள்.ஷம்மு தான் நாயகி.
பொன்வண்ணன்,ரவி மரியா போன்றோரும் படத்தில் உள்ளனர்.
இசை புது ஆளு குரு கல்யாண்.





முதலில் இவங்க என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கனு
பார்க்கலாம்....மதுரையில் உள்ள கிராமத்தில் நாலு சட்டை
போடாத பசங்க....திருட்டு,மற்றும் ஊர் வம்புகள் தான்
தொழில்.அந்த ஏரியா போலீஸ் ஒருவரை கயிறு கட்டி
தொங்க விட்டு மொட்டை போடுகிறார்கள்...இந்த மாதிரி
ஒரு ஒரு விஷயம் செய்யும் போது பின்னணி இசையில்
மாத்தியோசி..மாத்தியோசி.. என்று குரல் வருகிறது.


சென்னைக்கு போறாங்க அங்க வழிப்பறி பண்ணி வாழ்க்கையை
ஓட்டுறாங்க! ஷம்முவை அந்த நாலு பேர்ல ஒருத்தர் கெட்டவன்
கிட்ட இருந்து காப்பத்துறார்...ஆ....வ்..சாரி கொட்டாவி....
அப்புறம் என்ன கேள்வி கேட்க்காம அந்த பொண்ணும் சரி
இவங்களும் சரி சென்னை முழுக்க சுத்துறாங்க......
அந்த பொண்ணு வெளிநாடு போனும்னு துடிக்குது....
இவங்க என்ன பண்ணாங்க என்பதே படத்தின் ஆ...வ் கதை!!
மேல உள்ள கதையில் என்ன மாத்தியோசிச்சு இருக்காங்கன்னு தயவு செய்து உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க......

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மதுரை பின்புலம், மதுரை
பேச்சு,இதில் பருத்தி வீரன் பாட்டு,நாலு பேரில் ஒருத்தர்
ஓவராக பேசுவது......இதெல்லாம் ஒரு படத்தை ஓட வைக்க
தகுதி இல்லை. திரைக்கதை தொய்வில்லாமல் போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.மாத்தியோசியில் சில இடங்களில் மாத்தியோசிச்சு இருந்தாலும் கைதட்டவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாதபடி இருக்கிறது.

படத்தின் பெரும் பின்னடைவு பாட்டுகள்....அதுவும் அவர்கள்
கடத்தி வரும் பெண் வயதுக்கு வந்தவுடன் பாட்டு,,முடியல
ஏன்ப்பா மாத்தி யோசிக்கிரிங்கன்னு கேட்க தோணுது!!
ஒரு கொலையை பண்ண சொல்லிட்டு இனிமே இந்த
மாதிரி தப்பெல்லாம் பண்ண கூடாது என்று சொல்லும்
நேர்மையான காவல்துறை அதிகாரியாக பொன்வண்ணன்.
ரவிமரியா திருநங்கை வில்லனாக நன்றாக செய்து இருக்கிறார்.




படத்தின் முதல் பாதியில் ஒரு வண்டியில் உள்ள பொருளை கொள்ளையடித்து கொண்டு இருக்கும் போது போலீஸ் துரத்தும்
அப்போது அவர்கள் அப்படியே கபடி ஆட்டத்தில் சேரும் போது
சிட்டி ஆப் காட் டி.வி.டி.யின் மகிமை புரிந்தது.மாத்தியோசிச்சு
வேற வேற படத்தில் இருந்து காட்சிகளை எடுங்க சார்...
இன்னும் எத்தனை நாள் தான் சிட்டி ஆப் காட் வச்சி
காலத்தை ஓட்டுறது!!


பொண்ணு பேர் தெரியாமலே அவர்களுடன் நாலு பேரும்
சுற்றுகிறார்கள்.நாலு பேர் சட்டை இல்லாம ஊரெல்லாம்
சுத்துறாங்க ஆனா ஷம்மு மட்டும் முழுசா மறைச்சு
சுத்துது...இது எந்த ஊரு நியாயம்...?? ஷம்மு உண்மையில்
கும்முன்னு இருக்காங்க.


ரேணிகுண்டா மாதிரியே படத்துக்கு விளம்பரம் வேற
பண்ணாங்க அதாவது ஒரு ஒரு இயக்குனரும் சொன்னதை
பேப்பர் விளம்பரத்தில் போட்டார்கள்.நாலு பசங்க ஒரு
பொண்ணு என்றவுடன் நான் கொஞ்சம் யோசிச்சேன்.
ஒரு வேளை ரேணிகுண்டா மாதிரி இருக்குமோனு.ஆனா
அப்படி இல்லை, ரேணிகுண்டா அளவுக்கு வராது.காரணம்
மனசை தொடுற மாதிரி எந்த காட்சியும் இல்ல.நான்
அவ்வளவா எந்த படத்தையும் இன்னொரு படத்துடன்
ஓப்பீடு செய்வதில்லை...ஆனால் மாத்தியோசியில் சில பல
இடங்களில் சில பல படங்களின் காட்சிகள் வந்து போயின!!


ஆனா ஊனா ஓணான்னா வர்ற பையன் தூப்பாக்கி எடுத்து காட்டுவது..பொட்டு பொட்டு என ஆட்களை சுடுவது,முடியல...!
சில காட்சிகளில் டப்பிங் வேறு சரியில்லை..ஊரில் கருவண்டாக
வரும் சின்ன பெண் கவர்ந்தாலும் சில சமயம் எரிச்சல்
வருகிறது....முதல் பாதி ஓரளவுக்கு போச்சி ஆனா ரெண்டாவது
பாதி எப்போ படம் முடியும் என்பது போல் இருந்தது....!!



தனுஷ் புதுபேட்டை ஜெயில் இன்ட்ரோ ஸ்டைல் மாதிரி தான் சொல்லணும்...

"அந்த கார்னர் சீட்ல ஆள் இருக்கீங்களா.....கொடுமையா இருக்குது..
என்னால தாங்க முடியல.....ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்குது!!"


காரணம், தியேட்டரில் ஓரளவுக்கு தான் கூட்டம் இருந்தது....
ஆனா நான் உட்கார்ந்த வரிசையில் ஒரு முனையில் நான்
மறு முனையில் வேறு யாரோ உட்கார்ந்து இருந்தார்கள்,
நடுவில் யாருமில்லை...!!

தியேட்டர் நொறுக்ஸ்:

படம் பார்க்க ஒரு பெண் பயங்கர மேக்அப்பில் வந்திருந்தார்,
கொஞ்சம் கிழவி தான்.படம் பார்க்க வந்த ரெண்டு பேர்
அந்த பெண் தான் படத்தின் நாயகியாக இருக்கும் என்றபடி
பேசி கொண்டிருந்தனர்.நான் அவர்களிடம் இல்லை படத்தில்
சின்ன ரோலில் ஏதாவது வந்தீருப்பாங்க என்றேன்.

அந்த பெண் ஓரிரு காட்சிகள் படத்தில் தலை காட்டியிருந்தார்.
படம் முடிந்த பின் அந்த ரெண்டு பேரிடம் நான்
"அந்த அக்கா படத்தில் வந்தாங்களே பார்த்திங்களா??"என்றேன்
அவர்கள் அப்படியா எந்த சீன் என்று கேட்டார்கள்...நான் சீனை
சொன்னதும்...."சாரி பாஸ் படத்தை மெய் மறந்து பார்த்துட்டு
இருந்தோம்" என்றான் ஒருவன்."ஆமா ஆமா ரொம்ப மெய்
மறந்துட்டோம்" என்றான் சிரித்தபடியே அவனின் நண்பன்!!

ஜெட்லி பஞ்ச்:

மாத்தியோசி : தலைப்பில் மட்டுமே!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்...பின்னூட்டத்தில் உங்கள் சந்தேகத்தை தெளிவுப்படுத்துகிறேன்!!



ஜெட்லி.....

நன்றி:indiaglitz.com

58 comments:

தமிழ் உதயம் said...

ரெம்ப சுறுசுறுப்பு சார் நீங்க. அதான் இந்த மாதிரி படங்கள் பார்த்து ஆபத்துல மாட்டீக்கிறிங்க.

Anbu said...

:-))

Priya said...

//மாத்தியோசி : தலைப்பில் மட்டுமே!!//..... இதையே ப‌ட‌த்தின் பெய‌ருக்கு ப‌ஞ்சா வ‌ச்சிருந்தா, நாமும் கொஞ்ச‌ம் மாத்தி(பார்க்க‌ வேண்டாமுன்னு) யோசிச்சிருக்க‌லாம்:-)

ஆடுமாடு said...

ஒரு படத்தை கூட விடமாட்டேங்க போலிருக்கே. எல்லாத்தையும் மொத நாள்ல மொத காட்சியில பாத்துரணுமோ?

நல்லாருங்கடே!

ரொம்ப நாள் கழிச்சு, நந்தா பெரியசாமி (ரவிராதா) படம் பண்றாரே, நல்லா பண்ணியிருப்பாருனுல்லா நின்னைச்சேன்.

நானும் பார்த்துவிட்டு வந்து சொல்றேன்.

settaikkaran said...

நான் கூட படத்தைப் பார்க்கலாமோன்னு நினைச்சேன்! மாத்தி யோசிக்க வச்சிட்டீங்க! :-))

Mohan said...

நான் இந்தப் படம் நன்றாக வந்திருக்குமென்று நினைத்தேன்.படத்தின் விமர்சனத்திற்கு நன்றி!

விக்னேஷ்வரி said...

பாவம்ங்க நீங்க. இந்த மாதிரி மொக்கைப் படத்துக்கெல்லாம் போய் மாட்டிக்குறீங்க.

மன்னார்குடி said...

நீங்க பெரிய்ய தியாகிங்க. மதுரை பின்னணி படம்னாலே வரவர பயமா இருக்குங்க. தமிழ்நாட்ல வேற ஊரே கிடையாதுங்களா? மதுரை பின்னணினு சொல்லிட்டு, நீங்க சொல்லிருக்குற மாதிரி, ஒரே மாதிரி கதாபாத்திரங்களையும் கதைகளையும் வச்சி கொல்றானுங்க. அதுவும் 'மதுரை சம்பவம்' படத்துல அந்த ஹீரோ பேசுற மதுரை வட்டார மொழி இருக்கே.. ஸ்ஸப்பா.... என்னை பொருத்தவரைக்கும் மதுரை பின்னணியில வந்த சிறந்த படம்னா அது 'காதல்' தான்.

Unknown said...

ஜெட்லி, உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்குது..

ரெண்டு ஓட்டுப் பட்டியையும் கீழயே வச்சா ஓட்டுப் போட வசதியா இருக்கும். படிச்சி முடிச்சிட்டு மேல வரைக்கும் திரும்ப போக வேண்டியிருக்கு.

//மன்னார்குடி said...
நீங்க பெரிய்ய தியாகிங்க. மதுரை பின்னணி படம்னாலே வரவர பயமா இருக்குங்க. தமிழ்நாட்ல வேற ஊரே கிடையாதுங்களா? மதுரை பின்னணினு சொல்லிட்டு, நீங்க சொல்லிருக்குற மாதிரி, ஒரே மாதிரி கதாபாத்திரங்களையும் கதைகளையும் வச்சி கொல்றானுங்க. அதுவும் 'மதுரை சம்பவம்' படத்துல அந்த ஹீரோ பேசுற மதுரை வட்டார மொழி இருக்கே.. ஸ்ஸப்பா.... என்னை பொருத்தவரைக்கும் மதுரை பின்னணியில வந்த சிறந்த படம்னா அது 'காதல்' தான்//

@மன்னார்குடி, காதல் சினிமா எந்த ஊரைப் பின்னணியா வச்சி எடுத்திருந்தாலும் பொருத்தமா இருந்திருக்கும். மதுரை மண்ணோட கலாச்சாரத்தைப் பின்னணியா வச்சி வந்த படம்னா அது விருமாண்டியும், சுப்ரமணியபுரமும்தான்.

யோ வொய்ஸ் (யோகா) said...

அவ்வ்வ்வ்வ்வ்

உங்கள பார்த்தா பாவமாய் இருக்கிறது

Thenammai Lakshmanan said...

நல்ல வேளை ஜெட்லி பார்க்க வேண்டாம் தப்பிச்சோம் நன்றி

Unknown said...

படம் ”மாத்தி கடியா”?

அகல்விளக்கு said...

//"அந்த கார்னர் சீட்ல ஆள் இருக்கீங்களா.....கொடுமையா இருக்குது..
என்னால தாங்க முடியல.....ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்குது!!"//


ஹஹாஹாஹாஹாஹாஹா

எப்படி தல...

நீங்க இப்படி தலையக்கொடுத்து எங்களமாதிரி எத்தனையோ பேர காப்பத்துற நினைச்சா...
ரொம்ப பீலிங்கா இருக்கு....

வெற்றி said...

போஸ்டரை பார்த்துட்டு நல்லா இருக்குமோன்னு நினைச்சு இந்த வாரம் போலாமோன்னு நினைச்சேன்..காப்பாத்திட்டீங்க :)

வெற்றி said...

// முகிலன் said...

ஜெட்லி, உங்க கடமை உணர்ச்சி புல்லரிக்குது..

ரெண்டு ஓட்டுப் பட்டியையும் கீழயே வச்சா ஓட்டுப் போட வசதியா இருக்கும். படிச்சி முடிச்சிட்டு மேல வரைக்கும் திரும்ப போக வேண்டியிருக்கு.//

படிச்சு பார்த்து ஓட்டு போடுற ஆளா நீங்க..ம்ம்ம்..மைண்ட்ல வச்சுக்கிறேன்..

க ரா said...

மக்கள இந்த மாதிர் படங்கள பாக்குறதுல இருந்து காப்பத்தற ஒங்களுக்கு பாரத ரத்னா தரலான்னு காங்கிரஸ்ல பேசிக்கிறாங்களாமா !. ரொம்ப நல்ல விமர்சனம்.

Chitra said...

நீங்களாவது கொஞ்சம் மாத்தி யோசிச்சு, இந்த படத்துக்கு விமர்சனம் ஒரு கேடா என்று எழுதாமல் இருந்திருக்கலாம். ஹா,ஹா,ஹா,ஹா.....

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்

நான் சோம்பேறி சார்....
நல்ல படம் தான் பார்க்கனும்னு நினைச்சா
வருஷத்துக்கு ஆறு அல்லது ஏழு படங்கள்
தான் பார்க்கணும்..... :((

ஜெட்லி... said...

@ Anbu

:((

ஜெட்லி... said...

@ Priya


நல்லா இருந்துருக்கும் தான்.....

ஜெட்லி... said...

@ ஆடுமாடு...

அப்படி இல்லணே...
எனக்கு சினிமா பார்ப்பது passion அவ்வளவுதான்....
பார்த்துட்டு சொல்லுங்க.....
உங்கள் பார்வைக்கு காத்து கொண்டிரிக்கிறேன்.!!

ஜெட்லி... said...

@ சேட்டைக்காரன்

சேட்டை நாம யார் சொன்னாலும் கலங்ககூடாது...
போய் பார்த்துட்டு சொல்லு....

ஜெட்லி... said...

@ Mohan

நன்றி....

ஜெட்லி... said...

@ விக்னேஷ்வரி

அட விடுங்கங்க....
எனக்கு இதெல்லாம் சாதா"ரணம்"!!

ஜெட்லி... said...

@ மன்னார்குடி

பல நல்ல படங்கள் மதுரையை மையமாக
வைத்து வந்து இருக்கின்றன...சில பேரு
எப்பயாவது இந்த மாதிரி சில template
காட்சிகளை வைத்து சுவாரசியம் அற்ற
படத்தை எடுக்கின்றனர்......

ஜெட்லி... said...

@ முகிலன்


பார்த்து பாஸ் ஏதாவது மேய போகுது....
நன்றி....

ஜெட்லி... said...

@ யோ வொய்ஸ்

ஹா ஹா..நன்றி...

ஜெட்லி... said...

@ thenammailakshmanan

நன்றி....

ஜெட்லி... said...

@ கே.ரவிஷங்கர்

நல்ல தலைப்பு அண்ணே.....

ஜெட்லி... said...

@அகல்விளக்கு

அழ கூடாது.....நோ பீலிங்க்ஸ்...
நன்றி...

ஜெட்லி... said...

@ வெற்றி

நீயே இப்படி சொன்ன எப்படிப்பா....
படத்தை பார்த்துட்டு சொல்லு...

ஜெட்லி... said...

@இராமசாமி கண்ணண்

ஏன் பாஸ் உங்களுக்கு எனக்கும் ஏதாவது
பகை இருக்கா....எதுக்கு அரசியல் நமக்கு....
நான் நோபல் பரிசுக்கு காத்துகிட்டு இருக்கேன்...!!

ஜெட்லி... said...

@ Chitra

அப்படி இருக்க முடியாதே....
பழக்கம் ஆயிடுச்சு....

ஜெட்லி... said...

@ gulf-tamilan

நன்றி

பிரபாகர் said...

ரெண்டுல ஒன்னு சூப்பர்.

1. படம்.

2. விமர்சனம்.

நீங்களே முடிவு பண்ணிக்குங்க!

பிரபாகர்.

vasu balaji said...

பிரபாகர் said...

ரெண்டுல ஒன்னு சூப்பர்.

1. படம்.

2. விமர்சனம்.

நீங்களே முடிவு பண்ணிக்குங்க!

பிரபாகர்.//


மூணாவது ஒன்னு இருக்கு. ஜெட்லியின் பொறுமை:)

Matangi Mawley said...

romabavey poruma sir ungalukku! ippadiyum oru padam paaththirukkeenga! :) thanks for the story line!

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் தேறிறுமா.. அப்படின்னு டைரக்டர் மாத்தி யோசிக்கிறாரோ ...

ஸ்ரீராம். said...

உங்களோட இந்தத் தியாகம்தான் எங்களை புல்லரிக்க வைக்குது ....எங்களுக்கு விமர்சனம் எழுதறதுக்காக என்னென்ன ரிஸ்க் எல்லாம் எடுக்குறீங்க..?

Ashok D said...

நாலாவது ஒன்னு இருக்கு.. படிச்சுட்டு ஓட்டு போடறது... :)

ஜெட்லி... said...

@ பிரபாகர்

சத்தியமா படம் இல்லை......

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்

பொறுமையா இருந்ததற்கு காரணம்
தியேட்டரில் உள்ள ஏ.சி. ஐயா...

ஜெட்லி... said...

@ Matangi Mawley

நன்றி....கதை வரி ரொம்ப புதுசுல்ல...

ஜெட்லி... said...

@ Starjan ( ஸ்டார்ஜன்

அவரு என்ன மாத்தியோசிச்சாலும் படம்....காலி....

ஜெட்லி... said...

@ ஸ்ரீராம்.

ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு பரோட்டா
சாப்பிடிற மாதிரி சார்.....
பை தி வே பார்த்து ரொம்ப புல்லரிச்சு மாடு
வர போகுது.

ஜெட்லி... said...

@ D.R.Ashok

கரெக்ட் பெரியவரே.....

kanagu said...

விமர்சனத்துக்கு நன்றி தலைவா... நான் எஸ்கேப் :) :)

சிநேகிதன் அக்பர் said...

விமர்சனம் அருமை.

hasan said...

for us, you are watching such kind of movies...im appreciating you...JETLI!!

CS. Mohan Kumar said...

நாலு பேர் சட்டை இல்லாம ஊரெல்லாம்
சுத்துவது மட்டும் தான் மாத்தி யோசிச்சிருக்காங்க போல..

மறுபடி அந்த பசங்க கிட்டே போய் பேசாம, படத்தில் நடிச்ச aunty கிட்டே பேசிருக்கலாமே :))

ILLUMINATI said...

அப்பு ஜெட்லி ,மீண்டும் ஒரு முறை என் உயிரைக் காத்த நீர் வாழ்க...அவனுங்க மாத்தி யோசிக்கிறது இருக்கட்டும்.இனிமே படத்துக்கு போறதுக்கு முன்னாடி நீரு ஒரு தடவைக்கு ரெண்டு தடவ நன்றாக யோசியும்...

Raghu said...

என‌க்கு ஒரு ட‌வுட்டு ஜெட்லி. ஏன் நீங்க‌ எப்ப‌வுமே இந்த‌ மாதிரி ப‌ட‌த்துக்கே போறீங்க‌? ஒரு வேளை நீங்க‌ளும் கார்ன‌ர் சீட் புக் ப‌ண்றீங்க‌ளோ... ;)

ஜெட்லி... said...

@ அக்பர்

@ hasan

எல்லாம் ஒரு பொது சேவை தான்!! நன்றி....

ஜெட்லி... said...

@ மோகன் குமார்

அது கிழவி அண்ணே....
நீங்க வேற நானே படம் எப்போ முடியும்
கிளம்பலாம்னு வாசல் பக்கத்தில் காத்து இருந்தேன்.....

ஜெட்லி... said...

@ ILLUMINATI

யோசிச்சிட்டேன் ப்பா....அடுத்த வாரம் லீவ்
போடலாம்னு இருக்கேன்.....

ஜெட்லி... said...

@ ர‌கு

என்ன ரகு இப்படி கேட்டுடிங்க...பச்சை மண்ணு நான்....
படம் எடுத்தவனை கேளுங்க...

DREAMER said...

//"அந்த கார்னர் சீட்ல ஆள் இருக்கீங்களா.....கொடுமையா இருக்குது..
என்னால தாங்க முடியல.....ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்குது!!"//

ஹா..ஹா..! உங்க இந்த வரிகளை ரொம்ப நேரம் விஷ்வலைஸ் பண்ணிப் பாத்து சிரிச்சிட்டிருந்தேன்...
நல்ல கற்பனை..!

-
DREAMER

டக்கால்டி said...

தனுஷ் டியலாக்கை இங்கே புகுத்தி இருப்பது சூப்பர்...