நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் ஆங்கில நியூஸ்
சேனல் NDTV ஒரு நிகழ்ச்சி நடத்தியது.அந்த நிகழ்ச்சியின்
பெயர் 'GREENATHON'.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு
நல்விஷயங்களை செய்து வருகிறது.அதாவது மின் இணைப்பு இல்லாத கிராமங்களில் சூர்ய சக்தி மூலம் அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறது.அது மட்டும் அல்லாமல் நாட்டை பச்சை பசேல் என்று வைத்திருக்க ஸ்கேடிங் பயணம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது,மரங்கள் நடுவது.
அது போல் பீச்சில் இருக்கும் குப்பைகளை கொண்டு ஒரு யானை பொம்மையின் மேல் குத்தி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.இவை அனைத்துமே பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்.......
இவையெல்லாம் செய்த இந்த செய்தி நிறுவனம் நிகழ்ச்சி
முடிந்த பின் அவர்கள் போட்ட குப்பையை கவனிக்காதது
வருத்தமே.....படங்கள் கிழே....
greenathon என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு
அவர்களே இப்படி குப்பை, பிளாஸ்டிக் மற்றும் சாப்பாட்டு
பொருட்களை கொட்டுவது என்ன விழிப்புணர்வு என்று
தெரியவில்லை...ஊருக்கு தான் உபதேசம் செய்வோம்
என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.
இதுதான் அவர்கள் greenathon மூலம் மக்களுக்கு சொல்லும்
செய்தியா?? விளம்பரதாரர் மற்றும் நடிகர்கள் பிரசாரம்
மூலம் டி.ஆர்.பி ரேடிங் மட்டும் ஏற்றினால் போதுமா??
இந்த குப்பைகளை இந்த நேரம் அங்கு வேலை செய்து
கொண்டு இருப்பவர்கள் சுத்தம் செய்து இருக்கலாம்...
ஆனால் நிகழ்ச்சி நடத்தும் இவர்களுக்கே குப்பையை
தொட்டியில் போட எண்ணம் வராதது வருத்தமே!!
***********************************************************
பீச்சை சுத்தமா வைக்க குப்பை போடாதீங்க அப்படின்னு
சொன்ன நம்ம ஆளுங்க கேக்கவே மாட்டாங்க,
சரி குப்பையை குப்பை தொட்டியில் ஆவது போடுங்க
என்றாலும் ஹ்ம்..சில பேர் தவிர பல பேர் போடுவது
இல்லை.
நாம போடுற குப்பையை மறுநாள் அள்ளி அதை குப்பை
தொட்டியில் போடுவதற்கு சில பேர் வேலை செய்து
கொண்டு இருக்கிறார்கள்.அதில் இந்த சிறுவனும் இருக்கிறான்.
சின்ன பையன் காலையில் எழுந்தவுடன் படிக்கலாம் இல்ல
விளையாட போலாம்....ஏன் அவனுக்கு இந்த வேலை??
அவன் வேலை செய்ய வேணுமானால் வறுமை காரணமாக '
இருக்கலாம் ஆனால் பீச்சில் குப்பை அள்ள நாம் போடும்
குப்பை தான் காரணம்!!
அங்கு குப்பையை அள்ளி பீச்சை சுத்தம் செய்பவர்கள் யாரும் வேலை செய்யவில்லை நமக்காக சேவை செய்கிறார்கள் என்பதே உண்மை.அவர்கள் ஒன்றும் ஒரு சில தனியார் அமைப்புகள் மாதிரி எப்பொழுது ஆவது பீச்சை சுத்தம் செய்கிறேன் என்று ரெண்டு பேப்பர் எடுத்து கூட்டமாக போஸ் கொடுத்து அதை பேப்பர்க்கு அனுப்புபவர்களும் இல்லை!!
நாமும் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால்
நம்ம பங்குக்கு நம்மால் முடிந்த வரை சுற்றுபுறத்தை
தூய்மையாக வைத்து கொள்வோம்!!
ஜெட்லி....
48 comments:
thiurnthave maataanga!
பாஸ் நீங்க இத சன் டிவிக்கோ இல்ல ஸ்டார் விஜய்க்கோ சொல்லி இருந்தீங்கன்னா, அவங்க வந்து இதைப் படம்பிடிச்சி என்.டி.டி.வியக் கிழிச்சிருபாங்க..
அதோட அவங்க இன்னும் கொஞ்சம் குப்பை போட்டிருந்திருப்பாங்க.. :))
விளம்பரத்துக்காகவும், வியாபார நோக்கத்துடனும் சில செய்தித்தொலைக்காட்சிகள் செய்து வருகிற சில முயற்சிகள் அருவருக்கத்தக்கவை! அதில் ஒன்றை மிக அருமையாக சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்!
சார், சரியான கேள்வி கேட்டுருக்கீங்க? நானும் இதே கேள்வியை வேரு ஒரு இடத்தில் கேட்டுருக்கேன் ..அவசியம் பாருங்க! :))
சரியான ஆதங்கம்.
அவர்களது கவரேஜ் முடிநதற்கு அப்புறம் யார் எப்படிப் போனா என்ன? இன்னுமா NDTV - ங்கற காமெடி பீஸையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்துகிட்டிருக்கிங்க? 26/11 க்கு அப்புறம் அவுங்க மேல வெச்சிருந்த மரியாதையே போச்சு.
நிகழ்ச்சிக்கு வந்தவங்க சீரியசா எடுத்துக்கிட்டாங்களா இல்லையான்னு டெஸ்டு பண்ணியிருப்பாய்ங்களோ!
இவனுங்க பண்ணுனதையெல்லாம் வீடியோவா எடுக்க ஆளில்லையா?
நியூஸ்க்கே நியூஸா
பளார்னு அறைஞ்ச மாதிரி சொல்லியிருக்கிங்க. கண்டிப்பா அவங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் மட்டும்தான் முக்கியம். யார் எக்கேடு கெட்டு போனா அவங்களுக்கென்ன.....
சன் டிவிக்கு சொன்னாகூட இதையெல்லாம் ஒளிபரப்பறதுக்கு வரமாட்டாங்க. இதென்ன ஏதாவது கில்மா வீடியோவா? அவங்கள பொறுத்தவரைக்கும் இது வெறும் குப்பைதானே...
குப்பை சமாசாரம் தானேன்னு நினைக்காம சும்மா பூந்து விளையாடி இருக்கீங்க.......வாழ்த்துகள்!
ஊருக்கு தான் உபதேசம். இதிலிருந்து யாருமே விதிவிலக்கில்லையே
ஒழுங்கா கடைக்குப் போனமா, வியாபாரத்தப் பார்த்தோமான்னு இல்லாம இதென்ன சமூக அக்கறை அது,இதுன்னுட்டு...
கெட்டுப்போய்ட்டீங்கண்ணா :))
தல இதப் பத்தி நானும் நிறைய முறை குமுறியாச்சு...
நல்ல அவதானிப்பு...
@ வெள்ளிநிலா ஷர்புதீன்
என்ன பண்றது....
@ முகிலன்
சரியா சொன்னிங்க..ஆனா சன் டி.வி.க்கு
இந்த நியூஸ் மேல் ஈடுப்பாடு இருக்காது....
@ சேட்டைக்காரன்
நன்றி....
@ ஹனுமந்ராமா
பார்க்கிறேன்...லிங்க் அனுப்புங்க...
@ தராசு
அது சரி தான்....இனிமே ட்ரை பண்றேன்!!
@வானம்பாடிகள்
நல்ல கேள்வி.......
ஆனா அப்படி இருக்காதுன்னு நினைக்கிறேன்...
@ பிரியமுடன்...வசந்த்
அதான் வஸந்த் என் வருத்தமும்...... :((
@ D.R.Ashok
எல்லாம் உங்க தயவு தான் அண்ணே....
@ ரகு
சரியா சொன்னீங்க ரகு...நன்றி..
@பெயர் சொல்ல விருப்பமில்லை
என் ஆதங்கத்தை சொன்னேன் தலைவரே....
நன்றி...
@தமிழ் உதயம்
எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...
நீங்க உண்மையை சொல்லீட்டிங்க...
@ எம்.எம்.அப்துல்லா
அண்ணே......ஏன்??
@ Murugavel
படிச்சிருக்கேன் புலிகேசி....
@ இராகவன் நைஜிரியா
நன்றி....
கண்டிப்பா அவங்களுக்கு டிஆர்பி ரேட்டிங் மட்டும்தான் முக்கியம். யார் எக்கேடு கெட்டு போனா அவங்களுக்கென்ன.....
+1
திருந்தவே மாட்டாங்க...
நாமும் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால்
நம்ம பங்குக்கு நம்மால் முடிந்த வரை சுற்றுபுறத்தை
தூய்மையாக வைத்து கொள்வோம்!!
.......... போன வாரம், ஜெட்லி படத்துக்கு போனா, மொக்கை.
பீச் பக்கம் போனா, குப்பை. :-(
கருத்துள்ள பதிவு. :-)
பேசாம பதிவுலக புலனாய்வு பிரிவு என்று ஒன்றை தொடங்கலாம் சகா.
குப்பை ? அதுல தானே நாம் இருக்கோம் .சுத்தம் எங்க இருக்குனு சொல்லுங்க ? நம்மால ரோடு ஓரமா நடக்க இயலுமா?
@ LK
@ அமுதா கிருஷ்ணா
நன்றி....
@ Chitra
நீங்க நடத்துங்க....
@~~Romeo~~
அப்படிங்க்ரிங்க.....ட்ரை பண்ணுவோம்....
@ sakthi
நீங்க சொல்றது உண்மை தான்.
ஆனா அதுக்கு நாம தானே காரணம்!!
நல்ல அலசல் ஜெட்லி
இதுக்கு எதுவும் வழி உண்டா?.
:-(((((((((
இதையும் அந்த சேனலுக்கு அனுப்பி வைங்க. அப்பறமாவது அவங்க செஞ்சது என்னன்னு புரியுதான்னு பாப்போம்.
@Starjan ( ஸ்டார்ஜன் )
அண்ணே வழி சொல்ற அளவுக்கு நான்
பெரிய ஆளு இல்லணே....
@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி...
@ சின்ன அம்மிணி
அனுப்ப முயற்சி பண்றேன்...
உங்களுக்குள் ஒரு குட்டி அன்னியன் இருக்கான் போல...
எப்போ, எப்படி NDTV-ஐ கொள்ளப் போறீங்க??? ஹிஹிஹி
நல்ல அலசல்... திருத்தனும், எல்லாத்தையும் திருத்தனும்...
பி.கு. நேரம் இருந்த என் பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க...
நம்மால் முடிந்த வரை சுற்றுபுறத்தை
தூய்மையாக வைத்து கொள்வோம்!!//
....வோம்....
சமுதாயச் சிந்தனை..
அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு விசயம் . பகிர்வுக்கு நன்றி !
தராசு said...
.... அவர்களது கவரேஜ் முடிநதற்கு அப்புறம் யார் எப்படிப் போனா என்ன? இன்னுமா NDTV - ங்கற காமெடி பீஸையெல்லாம் நீங்க சீரியஸா எடுத்துகிட்டிருக்கிங்க? 26/11 க்கு அப்புறம் அவுங்க மேல வெச்சிருந்த மரியாதையே போச்சு......
முற்றிலும் உண்மை நண்பரே!
நல்ல விஷயம் சொன்னீங்க. திருந்தனும்..
Post a Comment