Friday, March 5, 2010

அவள் பெயர் தமிழரசி

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்


எங்க ஏரியா பக்கம் எங்கையும் அ.பெ.தமிழரசி முதல்
காட்சி போடாததால் மாயாஜால் நோக்கி வண்டியை
விரட்டினேன்.11.20 ஷோவுக்கு 11.05க்கு டிக்கெட் எடுத்த
பிறகு தான் தெரிந்தது நான் 11ஆவது ஆள் என்று.
இதை ஏன் சொல்றேன்னா ஜெய் படத்தை பார்க்க
ஒபெநிங் இல்லை அதற்கு காரணம் அவரது முந்தைய
படங்கள் வாமனன்,அதே நேரம் அதே இடம்......
அவர் தனி ஹீரோவா நடிச்ச மூணு படத்தையும் முதல்
நாள் பார்த்த ஆள் நானாகதான் இருப்பேன்.(எனக்கு
ஏதாவது விருதோ பாராட்டு விழாவோ நடத்துங்க ஐயா!!)


தமிழரசி, கூத்து போடுபவர்களின் குடும்பத்தில் உள்ள
பெண்.படிக்க ஆர்வம் இருக்கும் பெண்.சின்ன வயது
தமிழரசியாக வரும் காவ்யா சிரிப்பு கொள்ளை அழகு!!
பெரிய வயது தமிழரசியாக வரும் நந்தகி தன் பங்கை
நன்றாக செய்துள்ளார்.


ஜெய், அமைதியாக வருகிறார்.சில காட்சிகளில் 'அட' போட
வைக்கிறார்.ஜெய்யின் தாத்தாவாக தியோடர் பாஸ்கர்.பேரன்
மேல் அன்பு பொழிவதிலும் கண்டிப்பு காட்டுவதிலும் இயல்பாக
நடித்து இருக்கிறார்.அப்புறம் என்னுயிர் தோழன் படத்தின்
நாயகி இதில் தமிழரசிக்கு அம்மாவாக வருகிறார்.


காமெடி என்று கஞ்சா கருப்பு ரெண்டு மூணு காட்சிகள்
வந்து போகிறார்.தலைவர் போனம்தின்னி வீடியோ காமெடி
ஓகே.முத்தையா கேமரா மூலம் வயல்வெளிகளின் அழகுகளை,
மற்றும் தசரா திருவிழாவின் காட்சிகளை நம் கண் நிறுத்தி
இருக்கிறார்.


கூத்து பற்றி அந்த பெரியவர் ஜெய் வீட்டில் சாப்பிடும் போது
சொல்வது, தமிழரசியின் தாய் ஜெய் வீட்டுக்கு வந்து தன்
மகள் கெட்டு போனதுக்கு யார் காரணம் என்று கேட்கும் போது,
தமிழரசியின் தம்பி ஜெய்யை அடிக்கும் போது பிளாஷ்பேக்
சொல்லமால் தம்பியின் வாயிலாகவே தாயின் மரணத்துக்கு
காரணம் சொல்லியது என்று பல இடங்களில் இயக்குனர்
நிமிர வைத்திருக்கிறார்.

படம் முதல்ல கொஞ்சம் கலகலப்பா போச்சு அப்புறம் போக
போக சலிப்பு வருகிறது.அப்புறம் இடைவெளி பிளாக் நல்லா
இருந்தது.இரண்டாவது பாதி வேகமாக போனாலும் சில
காட்சிகள் மனதில் ஓட்ட மறுக்கிறது.அவள் பெயர் தமிழரசி
ஒரு pure சினிமானு சொல்லலாம்.ஆனா மசாலா பட
காதலர்களை கவர்வது மிக கடினம்.கிளைமாக்ஸ் காட்சிகள்
அனைத்தும் ஒரு நாடகம் பார்ப்பது போல் பீலிங்க்ஸ்!!


என்னை பொருத்தவரை நான் பொழுதுபோக்கு அதாவது
டைம்பாஸ்க்கு படம் பார்ப்பவன் ஆனால் இந்த படத்தில்
டைம் அவ்வளவா பாஸ் ஆகலைன்னு தான் சொல்லணும்.
ஆனா குத்து பாட்டு,வில்லன் கத்தல்,முகம் சுளிக்கும்
காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம்
தான் அவள் பெயர் தமிழரசி.படத்தின் முதல் பாதியை
பார்க்க பொறுமை மிக அவசியம்.


தியேட்டர் நொறுக்ஸ்:

# படம் ஆரம்பித்து அஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு பசங்க
வந்தாங்க...ஸ்க்ரீன்இல் ஜெய்யை பார்த்ததும் பக்கத்தில்
இருந்தவரிடம் என்ன படம் என்று கேட்டு பின்பு பக்கத்துக்கு
ஸ்க்ரீன்க்கு போகணும் என்று விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு போனார்கள்!!


# அப்புறம் ஒரு ஹிந்தி குரூப் ஒன்னு படம் பார்க்க வந்தது.
என்னடா அதிசியமா இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கும்
போதே அங்கே அங்கே ஜோடி ஜோடியா பிரிஞ்சு உக்காந்து
இருந்தா பரவாயில்லை ஆனா ஓவர் சவுண்ட்...அப்புறம்
நாங்க பின்னாடி இருந்த ஒரு அஞ்சு பேர் எதிர் சவுண்ட்
விட்டாவுடன் தான் அடங்கியது....!!

# எனக்கு பின்னாடி இருந்த மூணுபேர் பணம் போட்டு
படத்துக்கு கூட்டிட்டு வந்தவரை திட்டிட்டு இருந்தாங்க...
இன்டெர்வல்லே போய்டலாம் என்றார்கள் ஆனால் பணம்
போட்டு கூட்டி வந்தவர் இன்டெர்வல்க்கு அப்புறம் தான்
படம் சூப்பர்ஆ இருக்கும் என்று கூறி கஷ்டப்பட்டு நண்பர்களை
உட்க்கார வைத்தார்.

# வழக்கம் போல் படம் முடியுற முன்னாடி ஒரு ஒரு ஜோடியா
வெளியே போனாங்க...நம்ம rowல மூணு ஜோடி இருந்ததே
ரெண்டு தானே வெளியே போச்சு என்று எண்ணியவாரே
கடைசி சீட்டை பார்த்தேன்....அந்த கொடுமையை வேற
சொல்லனுமா....!!


ஜெட்லி பஞ்ச்:

அவள் பெயர் தமிழரசி : இருந்துட்டு போட்டும்.....


உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டும் பின்னூட்டமும்
போடுங்க!!

ஜெட்லி

நன்றி:indiaglitz

71 comments:

CS. Mohan Kumar said...
This comment has been removed by the author.
CS. Mohan Kumar said...

முதல் நாள் முதல் காட்சிக்கு 50 பேர் கூட இல்லை போலிருக்கு. இப்படி தான் இருக்கு தமிழ் சினிமா நிலை

Raju said...

படம் தேறுமா..?

ஜெட்லி... said...

@மோகன் குமார்


ஆமாம் அண்ணே....என்ன பண்றது...

ஜெட்லி... said...

@ ♠ ராஜு ♠ said...
படம் தேறுமா..?


கஷ்டம் தான்...

ப்ரியமுடன் வசந்த் said...

//என்னை பொருத்தவரை நான் பொழுதுபோக்கு அதாவது
டைம்பாஸ்க்கு படம் பார்ப்பவன் ஆனால் இந்த படத்தில்
டைம் அவ்வளவா பாஸ் ஆகலைன்னு தான் சொல்லணும்.//

அதாங்க இது மாதிரி நல்ல படம் எடுக்குறதுக்கே யோசிக்கிறாங்க

:(

ஜெட்லி... said...

@ பிரியமுடன்...வசந்த்


//அதாங்க இது மாதிரி நல்ல படம் எடுக்குறதுக்கே யோசிக்கிறாங்க//


படம் பார்க்காம...நல்ல படம்னு சொல்ற...
நடத்து....

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல விமர்சனம்
பகிர்விற்கு நன்றி

Bala De BOSS said...

அந்த கடைசி ஜோடி என்ன பண்ணிட்டு இருந்துச்சு??

ப்ரியமுடன் வசந்த் said...

// குத்து பாட்டு,வில்லன் கத்தல்,முகம் சுளிக்கும்
காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம்
தான் அவள் பெயர் தமிழரசி.//

நீதானே சொல்லியிருக்க மச்சி அப்போ நல்லபடம்தானே...

:))

லோகு said...

ஜெய் கூட அவரு படங்களை இவ்வளவு ஆர்வமா பார்த்திருக்க மாட்டார்.
விரைவான விமர்சனத்துக்கு நன்றி.

******
சிலபல எழுத்துபிழைகள் இருக்கு, பாருங்க

அகல்விளக்கு said...

ஓக்கே....

படம் தேறாதுன்றீங்க...

:-)

நொறுக்ஸ் எல்லாம் கலக்கல்ஸ்

ராம்ஜி_யாஹூ said...

ippadi 1 cinema vandu irukka,

jay nnu 1 hero irukkaraa

Paleo God said...

அடுத்த ஜெய் படம் சூப்பரா இருக்கும் ஜெட்லி..:))

Ashok D said...

பொறுமைசாலிபோல...இருந்துட்டு போட்டும்.....

மணிஜி said...

நான்,கேபிள்,சூர்யா,ரமேஷ்வைத்யா பார்த்தோம். கிராமத்தில் நாடகம் பார்ப்பது போலத்தான் இருந்தது. படம் ..தேறாது...

hasan said...

wheather it has any chance to grab AWARD?

hasan said...

wheather it has any chance to grab AWARD?

Jackiesekar said...

# வழக்கம் போல் படம் முடியுற முன்னாடி ஒரு ஒரு ஜோடியா
வெளியே போனாங்க...நம்ம rowல மூணு ஜோடி இருந்ததே
ரெண்டு தானே வெளியே போச்சு என்று எண்ணியவாரே
கடைசி சீட்டை பார்த்தேன்....அந்த கொடுமையை வேற
சொல்லனுமா....!!


அந்த கொடுமை என்னன்னு சிம்பு போல அடுத்த பதிவுல சொல்றேன்னு சொல்ல வேண்டியதுதானே..

தமிழ் உதயம் said...

தமிழ் சினிமாவை நினைச்சா ரெம்ப கவலையா இருக்கு.

பொன். வாசுதேவன் said...

என்னங்க ஜெட்லி, இப்படி எழுதிட்டீங்க. படம் நல்லாதானே வந்திருக்கு

பிரபாகர் said...

சோ,

படத்தையும் பாத்துட்டு வந்திருக்கீங்க...

பிரபாகர்.

ஜெட்லி... said...

@நினைவுகளுடன் -நிகே-


நன்றி

ஜெட்லி... said...

@ Bala De BOSS

நீ ஆஸ்திரேலியாவில் வாரத்துக்கு ஒரு
தடவை ரூம் போட்டு என்ன பண்ணுவேன்னு
கதை உட்டியோ....அதை தான் அவங்க பண்ணாங்க !!

ஜெட்லி... said...

@பிரியமுடன்...வசந்த்

//நீதானே சொல்லியிருக்க மச்சி அப்போ நல்லபடம்தானே...
//

மாமே நீ படம் பார்த்துட்டு சொல்லு....

ஜெட்லி... said...

@லோகு

அடுத்த தடவை mistake குறைசிக்கிரேன்...
நன்றி....
நீ சொன்ன விஷயம் என்னை ரொம்ப
யோசிக்க வைக்குது....

ஜெட்லி... said...

@ அகல்விளக்கு

நன்றி...

ஜெட்லி... said...

@ ராம்ஜி_யாஹூ


பாஸ் இது ஓவர்ஆ தெரியல உங்களுக்கு....

ஜெட்லி... said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

எனக்கு தெரிஞ்சு அடுத்து ஜெய் எந்த
படமும் நடிக்கிலனு நினைக்கிறேன்.....
இப்படியே உசுபேத்தி உடுங்க....

ஜெட்லி... said...

@ D.R.Ashok

கரெக்ட்ஆ சொன்னிங்க....

Anbu said...

:-)))

நாளைக்குப் போகலாம் என்று நினைத்தேன்

ஜெட்லி... said...

@ தண்டோரா

அப்படிதான் நானும் நினைக்கிறேன்....

ஜெட்லி... said...

@hasan


வாய்ப்பிருக்கு ஹசன்.....பார்ப்போம்....

ஜெட்லி... said...

@ஜாக்கி சேகர்

இதுக்கு தான் அண்ணே
மாயாஜால் பக்கம்
போக கூடாதுனு நினைப்பேன்.....

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்

அண்ணே....
ப்ரீயா விடுங்க....

ஜெட்லி... said...

@ pon.vasudevan

எனக்கு அவ்வளவா ஒத்து போகலை அண்ணே....
இந்த மாதிரி படங்களை ஜனங்கள் ஏற்று கொள்வது
கடினம்.....

ஆடுமாடு said...

ஜெட்லி சார், ஹீரோயின் பேர் நந்தகி.

படத்துக்கு மிக்ஸ்ட் கமெண்டுதான் வருது.

நண்பன் இயக்கிய படம். வெற்றிப்பெற்றால், பிள்ளையாருக்கு 50 தேங்காய் உடைக்கிறாதா வேண்டுதல் வேற இருக்கு.

மராட்டி பாட்டு வருமே... அதை பத்தி ஒண்ணுமே சொல்லலையே...

ஜெட்லி... said...

@ பிரபாகர்

ரைட்...புரியுது...
ஆனா லைட் ஆப் அண்ணே...
ஒன்னும் தெரியுல!!

ஜெட்லி... said...

@ Anbu

போய் பார்த்துட்டு சொல்லு அன்பு....
உனக்கு பிடிக்க வாய்ப்பிருக்கு...!!

ஜெட்லி... said...

@ஆடுமாடு

நாயகி பேர் அடிச்சேன் செக் பண்ண மறந்துட்டேன் சார்...

//மராட்டி பாட்டு வருமே... அதை பத்தி ஒண்ணுமே சொல்லலையே...//

வித்தியாசமா இருந்தது.....

//படத்துக்கு மிக்ஸ்ட் கமெண்டுதான் வருது.//

கண்டிப்பா ஒபினியன் differs சார்.....
படம் ரசிகர்களால் கவனிக்கபட்டால் எனக்கும்
சந்தோசம் தான்....!!

தேவன் மாயம் said...

நல்ல விமரிசனம்!!

உண்மைத்தமிழன் said...

[[[வழக்கம் போல் படம் முடியுற முன்னாடி ஒரு ஒரு ஜோடியா
வெளியே போனாங்க... நம்ம rowல மூணு ஜோடி இருந்ததே
ரெண்டுதானே வெளியே போச்சு என்று எண்ணியவாரே கடைசி சீட்டை பார்த்தேன்....அந்த கொடுமையை வேற
சொல்லனுமா....!!]]]

இதுக்குத்தான் அல்லாரும் மாயாஜாலுக்கு ஓடுறீங்களா..? கண்ணுல கொள்ளியை வைச்சுத் தேய்க்க..!!!

ரோஸ்விக் said...

ஜெட்லி பஞ்ச் - தியேட்டர் நொறுக்ஸ் - லும் இருக்கிறது... :-))

ஜெட்லி... said...

@தேவன் மாயம்

நன்றி டாக்டர் சார்....

ஜெட்லி... said...

@உண்மைத் தமிழன்


நல்ல வேளை முருகனை கூப்பிடல நீங்க!!

ஜெட்லி... said...

@ ரோஸ்விக்

நன்றி அண்ணே....

Nat Sriram said...

நாயை கல்லடிக்கிற குணம் நம்ம விட்டு போகாதே...

//அப்புறம் ஒரு ஹிந்தி குரூப் ஒன்னு படம் பார்க்க வந்தது.
என்னடா அதிசியமா இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கும்
போதே அங்கே அங்கே ஜோடி ஜோடியா பிரிஞ்சு உக்காந்து
இருந்தா பரவாயில்லை ஆனா ஓவர் சவுண்ட்...அப்புறம்
நாங்க பின்னாடி இருந்த ஒரு அஞ்சு பேர் எதிர் சவுண்ட்
விட்டாவுடன் தான் அடங்கியது....!!
//

Raghu said...

ப‌ர‌வாயில்ல‌ ஜெட்லி, ஒரே டிக்கெட்ல‌ ரெண்டு மூணு ப‌ட‌ம் பாத்துருக்கிங்க‌ போல‌...:)

என‌க்கு ஒண்ணு புரிய‌லை, அவார்ட் வாங்குற‌ ப‌ட‌ம், வித்தியாச‌மான‌ ப‌ட‌ம் அப்ப‌டின்னாலே அழுகாச்சி ப‌ட‌மாத்தான் இருக்க‌ணுமா என்ன‌?

நேத்து பேப்ப‌ர்ல‌ "த‌மிழ் ப‌ட‌ம்" விள‌ம்ப‌ர‌ம் பாத்திங்க‌ளா? வெ.ஆ.மூர்த்தி, சிவா இவ‌ங்க‌ ரெண்டு பேர் ப‌ட‌த்தை போட்டுட்டு, வெ.ஆ.மூ சொல்ற‌ மாதிரி ஒரு க‌மெண்ட் "த‌மிழ் சினிமால‌ வ‌ர‌வ‌ர‌ ட‌புள் மீனிங் ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சு, பேசாம‌ ஃபீல்ட‌ விட்டு வில‌கிட‌லாம்னு இருக்கேன்". அதுக்கு சிவா ஃபீல் ப‌ண்ற‌ மாதிரி ஒரு க‌மெண்ட் "என் நேர‌ம் இதெல்லாம் கேக்க‌ணும்னு"

என்னைப் பொறுத்த‌வ‌ரை "த‌மிழ்ப் ப‌ட‌ம்" கூட‌ வித்தியாச‌மான‌ ப‌ட‌ம்தான்:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த படத்தை 11 பேரில் ஒருவராக பார்த்த ஜெட்லி வாழ்க..

Unknown said...

வழக்கம் போல இந்த தடவையும் , படம் பார்த்துவிட்டு படம் பார்க்க வந்தவர்களையும் பார்த்தேன்னு சொல்லு.....
நாங்க எப்படி உன்னோட விமர்சஹங்களை நம்பறது... உன்னோட கவனம் படம் பார்ப்பது மேல் இல்லை , நீ படம் பார்க்க வந்தவர்களை பார்த்துக்கொண்டு இருந்தால் எப்படி ஐயா.....

நீங்க இப்படி பண்ணினால் நல்லா இருக்குமே... விமர்சிப்பதற்கு வேண்டி ஒரு தடவை படம் பாருங்க அப்புறம் அக்கம் பக்கம் இருக்குறவங்கள பார்க்குறதுக்கு இன்னொரு தடவை போய் பாருங்க..

எங்களுக்கும் நல்ல ஒரு விமர்சனம் கெடைச்ச மாதிரி இருக்கும்லா....

Unknown said...

ஜெட்லி , நாங்க இன்னும் உங்ககிட்ட இருந்த நிறைய expect பண்றோம்....

Chitra said...

படத்தின் விமர்சனமும், படத்தை "பார்க்க" வந்தவர்கள் பற்றிய விமர்சனமும் நல்லா இருந்துச்சு, ஜெட்லி. தொடர்ந்து ஆதரவு கொடுப்பதால், ஜெய் உங்களுக்கு பரிசு கொடுக்க காத்து இருக்கிறாராம்.

ஜெட்லி... said...

@ Nataraj

நீங்க தப்பா புரிஞ்சிகீட்டிங்க....
அதாவது அந்த ஹிந்திகாரங்க படம்
பார்க்க உடாம தொந்தரவு பண்ணாங்க.......

ஜெட்லி... said...

@ ர‌கு

//என‌க்கு ஒண்ணு புரிய‌லை, அவார்ட் வாங்குற‌ ப‌ட‌ம், வித்தியாச‌மான‌ ப‌ட‌ம் அப்ப‌டின்னாலே அழுகாச்சி ப‌ட‌மாத்தான் இருக்க‌ணுமா என்ன‌?

//

யதார்த்தமான படமா இருக்கணும் அவ்வளவுதான்.....

ஜெட்லி... said...

@ Starjan ( ஸ்டார்ஜன் )

இல்ல சார் ஒரு 30, 40 பேரு இருந்தோம்....

ஜெட்லி... said...

@Rajaram

ஐயா, ராஜா...

என்னை கலாய்கீரதா நினைச்சி ரொம்ப பெருமை
பட்டுக்காத....படம் நல்ல இருந்தா நான் ஏன்
தியேட்டர்ல பராக்கு பார்க்க போறேன்!!.......

இருடி உன்னை திங்கள்கிழமை கூட்டிட்டு போறேன்...

ஜெட்லி... said...

// Rajaram said...
ஜெட்லி , நாங்க இன்னும் உங்ககிட்ட இருந்த நிறைய expect பண்றோம்....
//

எதைன்னு தெளிவா சொல்லவும்??

ஜெட்லி... said...

@Chitra

//ஜெய் உங்களுக்கு பரிசு கொடுக்க காத்து இருக்கிறாராம்.
//

பரிசா...ஏதோ உள்குத்து மாதிரி இருக்கு!!

ஸ்ரீராம். said...

ரொம்பப் பொறுமை உங்களுக்கு..

Romeoboy said...

சகா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும். நீ தியேட்டர்க்கு போன பிறகு ஜோடிங்க வராங்களா, இல்ல ஜோடிங்க இருக்குற தியேட்டரா பார்த்து படம் பார்க்க போறியா.
படம் பார்கதான் போறியா இல்ல ஜோடிங்க பார்க்க போறியா.

CS. Mohan Kumar said...

படத்தை விட இதில உள்ள சில கமெண்ட் நல்லா இருக்கும் போல தோணுது

Thenammai Lakshmanan said...

நன்றி ஜெட்லி

நல்லவேளை கஷ்டப்பட்டு பார்க்க வேணாம்

ஜெட்லி... said...

@ ஸ்ரீராம்

ச்சே ச்சே...நான் பொறுமைசாலி இல்லை....

ஜெட்லி... said...

@ ROMEO

அதான்ப்பா எனக்கும் தெரியல...
அப்புறம்..... எப்படி கண்ணுக்கு முன்னாடி அநியாயம்
நடக்கும் போது ஹீரோ தட்டி கேட்பாரோ....
அது மாதிரி தான் நான் பார்க்கிற விஷயங்களும்!!

மாயாஜால் போன உங்களக்கே தெரியும் ரோமியோ.

ஜெட்லி... said...

@மோகன் குமார்

நான் வரலைப்பா இந்த விளையாட்டுக்கு....

ஜெட்லி... said...

@ thenammailakshmanan

கஷ்டப்பட்டு பாக்கலங்க...
இஷ்டப்பட்டு தான் பார்க்கிறேன்....
passion !!

Anbu said...

\\ஜெட்லி said...

@ Anbu

போய் பார்த்துட்டு சொல்லு அன்பு....
உனக்கு பிடிக்க வாய்ப்பிருக்கு...!!\\

ஓ.கே அண்ணா

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விமர்சனம்.

ஜெட்லி பஞ்ச் சூப்பர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல முயற்சி மாதிரி தெரியுதே.. பார்க்கலாம்னு இருக்கேன் ஜெட்லி

ஜெட்லி... said...

@ அக்பர்

நன்றி...

ஜெட்லி... said...

@ கார்த்திகைப் பாண்டியன்

கண்டிப்பா.....பார்த்துட்டு சொல்லுங்க அண்ணே..