Monday, March 15, 2010

இது எங்க ஏரியா: பார்ட்-5 (சென்னை-28)

இது எங்க ஏரியா: பார்ட்-5 (சென்னை-28)

டிஸ்கி:


(நான் இந்த பதிவில் போட்டுள்ள ரெண்டு ஹோட்டல்களில்
இருந்து எனக்கு எந்த விதமான கமிஷன்'ஒ' எக்ஸ்ட்ரா
சிக்கன் பீஸ்'ஒ' தரவில்லை என்பதை வருத்ததுடன்
தெரிவித்து கொள்கிறேன்)


*******************************************

நமக்கு சென்னை-28 என்றவுடன் நினைவுக்கு வருவது
கண்டிப்பாக வெங்கட்பிரபுவின் படமாகதான் இருக்கும்.
சென்னை-28 என்பது ரெண்டு ஏரியாக்களை உள்ளடக்கியது.
ஒன்று மந்தைவெளி மற்றொன்று ஆர்.ஏ.புரம் என்று
அழைக்கப்படும் ராஜா அண்ணாமலைப்புரம்.

ராஜா அண்ணாமலைப்புரம்:

காஸ்ட்லியான ஏரியா என்று சொல்லலாம்.பல பிரபலங்கள்
பேர் வசித்து வரும் போட் ஹவுஸ் போன்ற இடங்களை உள்ளடக்கியது இந்த ஆர்.ஏ.புரம்.முன்னாடி இந்த ஏரியாவில் பூந்து டிராபிக் இல்லாமல் மயிலாப்பூர் மற்றும் ராயபேட்டை போன்ற இடங்களுக்கு ஈஸியாக போகலாம், ஆனால் இப்போது நிலைமையே வேறு...பீக் ஹவுர்ஸ்இல்
செம டிராபிக்.அதுவும் இல்லாமல் இப்போது பல இடங்கள் ஒரு வழி பாதையாக மாற்றிவிட்டார்கள்.அடையார் சத்யா ஸ்டுடியோ ரைட்டில்
இருக்கும் தினகரன் சாலையில் அமைந்துள்ள மேயர் ராமநாதன் ஹால்,ஐயப்பன் கோவில் எல்லாமே சென்னை-28 தான்.


அப்புறம் முக்கியமான இடம்,ரோட்டு முனையில ஏ.சி.டாஸ்மாக் இருக்கும் அங்கே போகாதிங்க அதை தாண்டி வந்தா சங்கீதாஹோட்டல் இருக்கும் அதையும் தாண்டி வந்தா எதிர்ல நம்ம லட்சுமி சரவணா பாஸ்ட் பூட் கடை இருக்கும்.பக்கா லோக்கல் கடை,வார இறுதி நாட்களில் கூட்டம் பிச்சுக்கும்.
பாஸ்ட் பூட் மட்டும் இல்ல இட்லி,தோசா,பரோட்டா என்று போடுவதானால் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.



இவர்களிடம் பிடித்தது சிக்கன் 65,சும்மா மொறுமொறுனு பூண்டு மற்றும் மசாலா வாசனை செமையா இருக்கும்.சிக்கன் வறுத்த அரிசி அஜினோமோட்டோ உபயத்தால் டேஸ்ட்ஆக இருக்கிறது.கூட்டம் இல்லாத நேரத்தில் அஜினோமோட்டோ வேணாம் என்றால் போட மாட்டார்கள்.


கூடுதல் தகவல்:

பக்கத்தில் புதிதாக பிரியாணி எக்ஸ்பிரஸ் என்ற கடை ஆரம்பித்து இருக்கிறார்கள் இன்னும் சாப்பிட்டு பார்க்கலை...பக்கத்தில் ஒரு நல்ல டீ,ஜூஸ் கடையும்(melting point) உண்டு இவர்களிடம் பிரட் ஆம்லேட் நன்றாக இருக்கும்!!

மந்தைவெளி:

ராணி மெய்யம்மை,ராஜா முத்தையா,st .johns போன்ற பிரபல பள்ளிகள் அமைந்த இடம் மந்தைவெளி.மந்தைவெளி ஸ்டார்டிங்இல் இருக்கும் கிரௌண்ட்தெரியாதவர்கள் இருக்க முடியாது.மந்தைவெளிக்கும் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கும் கற்காலம் தொட்டே ஏதோபந்தம் இருக்கும் போல!! எனக்கு தெரிஞ்சு ஒன்பது வருஷத்தில் அங்கே ரோடுகளில் ஏதாவது ஒரு
இடத்தில் கால்வாய் பணி நடந்து?? கொண்டே இருக்கும்.

நடுவில் ஒரு வருடம் நன்றாக இருந்தது தற்போது ஆறு மாதம் முன்பு மறுபடியும் மயிலாப்பூர் நோக்கி செல்லும் ஒரு வழி பாதையில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது.புழுதி பறக்கும் சாலை என்றால் எனக்கு மந்தைவெளி தான் நினைவுக்கு வரும்.




மந்தைவெளியில் பிடித்த ஹோட்டல் ஆர்.கே.மடம் ரோட்டில் ஒரு வழி பாதையில் அமைந்துள்ள பாண்டி ஹோட்டல்.பரோட்டா நன்றாக இருக்கும் அதற்கு அவர்களின் சால்னா மற்றும் சிக்கன் குழம்பு செம!! எல்லா விதமான சைட் டிஷும்கிடைக்கும்.எனக்கு அவர்களின் சிக்கன் ப்ரை ரொம்ப பிடிக்கும்.தோசை கல் புல்ஆ இருந்தா கொத்து போட மாட்டாங்க!!,இது ஒரு முனியாண்டி விலாஸ் டைப் ஹோட்டல்.




பிரியாணி, சாப்பாடு என்று அனைத்துமே இங்கு உண்டு.ஒரு தடவை மீன் ப்ரை வாங்கினேன் அதுக்கு அப்புறம் எந்த ஹோட்டல்லிலும் மீன் ப்ரை வாங்குவதில்லை!!ஆனா சுறா புட்டு நல்லா இருக்கும் என்ன மீனோட தேங்காய் துருவல் கொஞ்சம் அதிகமா இருக்கும்...பட் வொர்த்.

அடுத்த இது எங்கே ஏரியாவில் வேறு இடத்தில் உள்ள ஸ்பெஷல்களை பார்க்கலாம்....

உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டும் ,பின்னூட்டமும் போடவும்....!!

ஜெட்லி....

31 comments:

Chitra said...

(நான் இந்த பதிவில் போட்டுள்ள ரெண்டு ஹோட்டல்களில்
இருந்து எனக்கு எந்த விதமான கமிஷன்'ஒ' எக்ஸ்ட்ரா
சிக்கன் பீஸ்'ஒ' தரவில்லை என்பதை வருத்ததுடன்
தெரிவித்து கொள்கிறேன்)

......... அதனால் என்ன, நாங்க வரும் போது வாங்கி தரோம். இம்பூட்டு அருமையா எழுதி இருக்கீக. இது கூட செய்யலைனா, எப்படி ஜெட்லி?

settaikkaran said...

நம்ம ஏரியா தான்! :-)))

Paleo God said...

ஹும்ம் இவ்ளோ கடை தெரிஞ்சி என்ன? நல்லா சாப்பிட்டு உடம்ப ஏத்து ராசா..:) அனியாத்துக்கு ஒல்லியா இருக்கியே..:)

Ganesan said...

இலைக்கு மேல புரோட்டாவும், சில்லி சிக்கனும் போட்டா போட்டு காலையிலெயே புரோட்டா சாப்பிட வெச்சுட்டியப்பா.

vasu balaji said...

/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹும்ம் இவ்ளோ கடை தெரிஞ்சி என்ன? நல்லா சாப்பிட்டு உடம்ப ஏத்து ராசா..:) அனியாத்துக்கு ஒல்லியா இருக்கியே..:)/

இதான் சரி:))

ஜெட்லி... said...

@ Chitra

நன்றி...5 ஸ்டார் ஹோட்டல் போய் தான் சாப்பிடனும்...

ஜெட்லி... said...

@சேட்டைக்காரன்

எந்த ஏரியாப்பா நீ??....
இப்போ எங்கே இருக்கே...

ஜெட்லி... said...

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

உங்களுக்கு பொறாமைங்க.....

ஜெட்லி... said...

@ காவேரி கணேஷ்

காலையிலே கிடைக்காது அண்ணே...
மதியமும் நைட் மட்டும் தான்!! ஹி ஹி..

ஜெட்லி... said...

@ வானம்பாடிகள்

என்னை நீங்க நேரில் பார்த்தது இல்லைனு
நினைக்கிறேன்.....இல்ல நீங்களும் ஷங்கர்
அண்ணன் மாதிரி உள்குத்தோட சொல்றீங்களானு
தெரியல......

அண்ணாமலையான் said...

அண்ணனுக்கு ஒரு லெக் பீஸ் பார்சேல்

மேவி... said...

நல்ல இருக்கு அண்ணே ....... என்னை மாதிரி சின்ன பசங்க போற இடத்தை பற்றியும் எழுதலாம்ல

ஆடுமாடு said...

அப்படியே கிளம்பி லஸ் வந்திங்கன்னா, லெப்ட் சைட்ல செலக்ட் இருக்கு. செலக்ட் சிக்கன் ஸ்பெஷல் பிரியாணியும், கேரள மீன் சாப்பாடும் சூப்பரா இருக்கும். டைரட் சைட் கச்சேரி ரோட்ல அஜ்மல் பிரியாணி கடை இருக்கு. பல இடங்கள்ல இருந்தும் இங்க பிரியாணி சாப்பிட வர்றதால எப்பவும் கூட்டம் இருக்கும். ஆனா, சூப்பரா இருக்கும்.

கூடுதல் தகவல் அவ்வளவுதான்.

தமிழ் உதயம் said...

Chitra said...

(நான் இந்த பதிவில் போட்டுள்ள ரெண்டு ஹோட்டல்களில்
இருந்து எனக்கு எந்த விதமான கமிஷன்'ஒ' எக்ஸ்ட்ரா
சிக்கன் பீஸ்'ஒ' தரவில்லை என்பதை வருத்ததுடன்
தெரிவித்து கொள்கிறேன்)

......... அதனால் என்ன, நாங்க வரும் போது வாங்கி தரோம். இம்பூட்டு அருமையா எழுதி இருக்கீக. இது கூட செய்யலைனா, எப்படி ஜெட்லி?



நா சொல்ல நினைக்கிறதை எல்லாம் அவங்களே சொல்லிடுறாங்க.

ஜெட்லி... said...

@அண்ணாமலையான்

ப்ரொபசர் சார்...நான் உங்களுக்கு அண்ணனா....
இருந்தாலும் லெக் பீஸ்க்கு நன்றி!!

ஜெட்லி... said...

@டம்பி மேவீ

நீங்க எங்கே போவிங்க பாஸ்....??
தெரிஞ்சா எழுதலாம்....

ஜெட்லி... said...

@ ஆடுமாடு

அண்ணே மிக்க நன்றி...
அஜ்மல் பிரியாணியை ட்ரை பண்ணி
பார்க்கிறேன்......

ஜெட்லி... said...

@ தமிழ் உதயம்


சரி...அப்ப உங்களையும் 5 ஸ்டார் ஹோட்டல்க்கு
கூட்டிட்டு போக வேண்டியது தான்.....
பரவாயில்லை நீங்களே பில் பே பண்ணுங்க....
நான் தப்பா நினைச்சிக்க மாட்டேன் !!

Menaga Sathia said...

படத்தைப் பார்த்ததும் நாக்கு ஊறுது.அடுத்த முறை இந்தியா வந்தால் ஒரு பிடி பிடிக்கனும்....

Raghu said...

என்ன‌ ஜெட்லி, ஏரியா ஸ்பெஷ‌ல், ஃபுட் ஸ்பெஷ‌லா இருக்கு ;)

ப‌ட‌ங்க‌ளை பார்த்தாலே, ப‌சியெடுக்குது :)) அடுத்து எந்த‌ ஏரியா?

Unknown said...

/உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டும் ,பின்னூட்டமும் போடவும்....!!
//

எனக்குப் பிடிக்கலைப்பா.. தமிழ் நாட்டு ஹோட்டல் சாப்பாடு கிடைக்காம ஏங்கிப் போயிருக்கிறவன் கிட்ட இங்க பிரியாணி நல்லா இருக்கும் இங்க சிக்கன் 65 நல்லா இருக்கும்னா.. என் வயிரு எரியுது..

Romeoboy said...

நல்ல தொகுப்பு .. :)

புலவன் புலிகேசி said...

என்னைப் போன்ற சாப்பாட்டு ராமர்களுக்காகவே எழுதியிருக்கீங்க...மைந்த்ல வச்சிக்கிறேன்..

ஜெட்லி... said...

@Mrs.Menagasathia

நீங்களும் தான் விதம் விதமா சமையல் போட்டோ
போட்டு பசியை தூண்டி உடுரிங்க...

ஜெட்லி... said...

@ ர‌கு

வேளச்சேரி தான் வரலாம்னு இருக்கேன்.....

ஜெட்லி... said...

@ முகிலன்

அட விடுங்க பாஸ்....

ஜெட்லி... said...

@ ~~Romeo~~

நன்றி ரோமியோ

ஜெட்லி... said...

@ புலவன் புலிகேசி

நன்றி புலிகேசி....போன எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க

டக்கால்டி said...

நான் கூட சோத்துக்கட்சி தாங்க...
பாணி பூரி, பேல் பூரி ஐட்டம் சுவையா சாப்பிடனும்னா வேளச்சேரி விஜயநகர் பை-பாஸ் ரோட்டுக்கு போங்க...நாய்டு ஹால் எதிர்ல ஒரு சின்ன கடை இருக்கும். விலை குறைவு..சுவை அதிகம்...உணவு வகைகளும் அதிகம்...

சாமக்கோடங்கி said...

ஆஹா.. படங்களைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது..

நன்றி.. உங்கள் எழுத்தைப் பார்த்ததே அவற்றைச் சாப்பிட்டதைப் போல இருந்தது..

Thenammai Lakshmanan said...

என்ன ஜெட்லி பசி நேரத்துல இப்படி வெட்டுனதெல்லாம் போட்டோவோட போட்டு பசியைக் கிளப்பிவிட்டீங்க