Friday, July 30, 2010

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....

சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும்....


மன்னிக்க வேண்டுகிறேன் :


ஒரு பதிவில் அவளின் உணர்ச்சிகள் என்ற படத்தில் மௌலி
இருக்கிறார் என்று தவறாக பதிந்து விட்டேன்... பார்ப்பதற்கு
அவர் போலவே இருந்ததால் தவறாக கூறிவிட்டேன்....
இதனால் நான் படம் பார்த்துட்டு தான் பதிவு போடுறேன்னு
நினைக்காதிங்க.... இன்னைக்கு பேப்பரில் அந்த மனிதரின்
படம் தெளிவாக தெரிகிறது.... அப்புறம் இது ஒரு ஹிந்தி
படம் டப்பிங் ஆக இருக்கும் என்பது என் கணிப்பு....
இந்த படம் பார்த்தவர்கள் அவர்களின் பொன்னான கருத்தை

இங்கே பகிர்ந்து கொள்ளலாம்...!!



சால்ட்:

சால்ட் படம் பார்த்து அஞ்சு நாள் மேல ஆச்சுனாலும்....நானும்
அந்த படத்தை பார்த்தேன் அப்படின்னு உங்களுக்கு தெரிவிக்கவே
இந்த டைட்டில். அதுசரி...சால்டில் என்ன ஸ்பெஷல் அப்படின்னு
கேட்டா, வேற யாரு நம்ம ஏஞ்சலின ஜோலி தான்.அது தவிர
படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிஷத்திலே வர்ற உதட்டு முத்தமும்
ஸ்பெஷல்னு சொல்லலாம்.


சால்ட் என்ன கதை அப்படின்னு பார்த்தா நமக்கு தெரிஞ்சு எல்லா
ஹாலிவுட் ஹீரோக்களும் நடித்த அதே சி.ஐ.ஏ கதை தான் சால்ட்டும்.
என்ன இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அவ்வளவுதான்.
ஏஞ்சலின ஜோலி பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.... ஆக்சன் காட்சியில் நல்லாவே பண்றாங்க.

\


ஒரு நண்பர் இன்னும் 80 ஆண்டுகள் கழித்து கூட நம் தமிழ்
சினிமாவில் ஏஞ்சலின ஜோலி மாதிரி ஆக்சன் காட்சியில்
நடிக்க எந்த நடிகையும் வர மாட்டார் என்று போட்டிருந்தார்.
இப்ப நான் சொல்றேங்க சால்ட் பட ஏஞ்சலின ஜோலியை
விட நம்ம அக்கா சிநேகா, பவானி ஐ.பி.எஸ் படத்தில்
ஆக்சன் காட்சியில் மீஞ்சுவார் என்று நம்புவோம்!!


********************

மர்யாத ராமண்ணா (தெலுங்கு)



இது வரைக்கும் தமிழ், ஆங்கில டப்பிங், ஆங்கில படங்களே
அப்புறம் அட்டு மலையாள படங்களை மட்டும் பார்த்து
கொண்டிருந்த நான், வேதம் படத்திற்கு பின் மீண்டும் அதே
காசினோ தியேட்டரில் போய் இந்த படத்தை பார்த்தேன்.
இந்த படம் நல்லா இருக்கு என்று பார்க்க சொல்லி
கதையும் சொல்லி...பார்த்தாச்சா...சீக்கரம் பாருங்க என்று
நண்பர் வெண்டைக்கா யுவராஜ் பரிந்துரை செய்தார்.


ஒரு காமெடியன் ஹீரோவாக நடித்து இருக்கிறார். காமெடியன்
தானே என்னத்த பெருசா கிழிக்க போறார் என்று போய் பார்த்தால்...
என்னாமா டான்ஸ் ஆடுறாரு, என்னாமா ரியாக்சன் கொடுக்கிறார்
சுனில். பல காட்சிகளில் வசனம் இல்லாமலே சிரிப்பையும்
பரிதாபத்தையும் வரவைக்கிறார் இந்த ஹீரோ. கதாநாயகி
சலோனி கூட சூப்பர்ஆ இருந்தாங்க. தமிழ்ல நடிச்சா நல்லா
இருக்கும்.


கதைனு பார்த்தீங்கனா கொஞ்சம் வித்தியாசம் ஆனது தான்.
அதாவது வில்லன் வந்து எதிரியே அவங்க வீட்டுக்கு வந்தாலும்
நல்லா உபசரிச்சு சாப்பாடு போட்டு கை துடைக்க துண்டு
கொடுத்து நல்ல மரியாதை கொடுப்பாங்க...ஆனா வீட்டு
வாசல் தாண்டினவுடன் அவங்களை காலி பண்ணீடுவாங்க...
இதை தெரியாம அப்போ தான் நம்ம சுனில் பூர்விக சொத்து
விக்க அந்த ஊருக்கு போறார்...வில்லன் கும்பல்க்கு சுனீலை
பழி பல வருஷமா காத்துகிட்டு இருக்காங்க...சுனில் அது
தெரியாம அவங்க வீட்டுக்குள் விருந்தாளியை போய்டுறார்...
அப்புறம் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை.


இந்த படம் ஏற்கனவே ஆங்கிலத்தில் 1930 களில் வந்த ஒரு
படத்தின் காப்பி என்றும்,இல்ல... நம்ம கௌதம் வாசுதேவ்
மேனன் ஸ்டைலில் சொல்லனும்னா "INSPIRATION" னு
சொல்றாங்க.... ஆனா இந்த படத்தில் ஆந்திரா வாசனை
அப்படியே அடிக்கிறது கண்டிப்பாக ராஜாமௌலி சீன்
பை சீன் உள்ஜட்டி கூட மாற்றாமல் எடுத்திருக்க மாட்டார்
என்று நம்புவோம். நன்றாக உழைத்து இருக்கிறார் என்று
தெரிகிறது.


இப்ப நான் ஏன் பழைய இங்கிலீஷ் படங்களை தேடி போய்
டோர்ரென்ட் அல்லது பர்மா பஜாரில் போய் வாங்கி பார்ப்பதில்லை
என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். எப்படியும் நம்ம ஆளுங்க
அதை தமிழ் தெலுங்கு படத்தில் கொண்டு வந்து விடுவார்கள்
என்ற நம்பிக்கை தான் காரணம்.

பேக் டூ ராமண்ணா...!!

உங்களுக்கு ரெண்டு ஹவர் டைம் பாஸ் கியாரண்டி தருகிறார்
மர்யாத ராமண்ணா. மொழியே தெரியாமலே படம் சுவாரிசியமாக
போகிறது. படத்தில் டச்சிங் சீன்களும் இருக்கின்றன. நான்
கடைசி காட்சியில் எங்கே நாயகி வில்லன்களிடம் பேசியே
நல்லவங்கள் ஆக்கிடுவங்களோனு பயந்தேன்...நல்ல வேளை
அப்படி இல்லாம படம் நன்றாக முடிந்தது. சுனில் ட்ரெயின்இல்
அடிக்கும் கூத்து செம....!!ஆனால் சுனில்க்கு ஒபெநிங் சீன்
கொஞ்சம் ஓவர் தான்....! படத்தில் லாஜிக் கூட பார்க்க கூடாது...

கண்டிப்பா இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வார்கள் என்று
நம்புகிறேன்... தெலுங்ம்மாயி...தெலுங்ம்மாயி....சும்மா இந்த
படத்தில் வர்ற பாட்டை பாட ட்ரை பண்ணேன்ங்க...நீங்க
பயப்படாதீங்க....!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# காசினோ, சென்னையின் பழைய தியேட்டர். இன்னும் அப்படியே
தான் இருக்கு. பால்கனிக்கும் கிழேயும் ஒரே ரேட் தான். அம்பது
ரூபாய். நம்ம மெலோடி போல. பால்கனி மட்டும் புல் ஆச்சு.

# படம் ஆரம்பிக்கும் முன் டான் சீனு என்ற புது படத்தின் ட்ரைலர்
போட்டார்கள்... ரவி தேஜாவும், ஷ்ரியாவும் நடிக்கிறார்கள்...
நல்ல மசாலா படமா வரும்னு நினைக்கிறேன்...

# ஒரு ஜோடி படம் பார்க்க வந்து முதல் பாட்டிலே எந்திருச்சு
போய்ட்டாங்க....ஏன் அவங்களுக்கு படம் பிடிக்கலையா இல்ல
தியேட்டரில் இருந்த கூட்டம் பிடிக்கலையானு பார்க்கிங் டிக்கெட்
கொடுத்தவருக்கே வெளிச்சம்.


# இடைவெளியின் போது பவன் கல்யாண் நடித்த, ஏ.ஆர்.ஆர்.
இசை அமைத்த, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய கோமரம் புலி
ட்ரைலர் போட்டார்கள் தியேட்டரில் செம கத்து, விசில்...
இருந்த நூறு பெருக்கே இப்படி விசிலா என்று வியந்தேன்...!!


இந்த இடுகை பல பேரை சேர உங்கள் வாக்கினை செலுத்துங்கள்...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Wednesday, July 28, 2010

சினிமா பேசுவோம்!!!

சினிமா பேசுவோம்!!!

சும்மா அரட்டை அடிப்போம்....சினிமா பத்தி ஏதாவது
பேசுவோம்....


நமக்கு பொழுது போவனும் அதுக்காக தான் நாம படத்துக்கு போறோம், வெளியே சுத்த போறோம்...வேற என்னலாமோ பண்றோம். சில பேருக்கு சினிமானாலே அலர்ஜியா இருக்கலாம்...சில பேருக்கு வெளியே சுத்துருது அலர்ஜியா இருக்கலாம்...நாம அவங்களை பத்தி பேச வேணாம்,அவங்களுக்கு பிடிக்கலைனா நாம ஏன் போய் கட்டாய படுத்திக்கிட்டு... அதனால அவங்களை விட்டுருவோம்....!!


அதுக்காக சினிமா பார்க்கறவன் எல்லாம் முட்டாள்னு சொல்றாங்க
பாருங்க அவங்களை விட முடியாது. யாரோ ஒருத்தர் நம்மை
பார்த்து வாரம் ஆனா போது சினிமாவுக்கு போயிருவாண்ட என்று
சொன்னால் சில பேருக்கு கோபம் வரலாம். ஆனா எனக்கு வராது...
காரணம் ஒருத்தர் சொன்னது தான் " வாரம் ஆனா சினிமாவுக்கு
போனமா படத்தை என்ஜாய் பண்ணினோமா...நம்மாளா யாருக்கும்
எந்த தொந்தரவும் இல்ல...". ஆனா அவனும் படத்துக்கு போகாம
நம்மையும் நோண்டிக்கிட்டு அடுத்தவனையும் நோண்டிக்கிட்டு இருக்கறவங்களை என்ன சொல்றது...??!!


அதே மாதிரி படத்தை பற்றி கருத்து சொல்றது....என் நண்பன்
எந்த படத்தை பார்த்தாலும் பார்க்காத மாதிரி அந்த படத்தின்
கருத்தை கேட்பான்... உதராணமாக பையா படம் வந்தப்ப கேட்டான்...
"நான் அதை டைம்பாஸ் படம்...ஓகே" என்றேன். உடனே நண்பன்
"என்னடா கதையே இல்லை அதை போய் நல்லா இருக்குனு"
நக்கல் அடித்தான். உடனே நான் "அங்காடி தெரு பார்த்தியா"
என்று கேட்டேன். "இன்னும் இல்லை...அழுவாச்சி படமாமே அது"
என்றான் சிரித்து கொண்டே. "ஆமாண்டா.. கதை உள்ள படத்தை
போய் பார்க்காதீங்க....ஆனா பொழுது போற படத்தை பத்தி
சொன்னால் மட்டும் கிண்டல் பண்ணுங்க..." என்று கொஞ்சம்
சீரியஸ்ஆகவே சொன்னேன்.

நான் எனக்கு பிடிக்காத படங்களை பலருக்கோ சிலருக்கோ பிடித்து
இருந்தால் நான் அந்த பலர் சிலர் பற்றி விமர்சிப்பதில்லை.படத்தை பற்றி மட்டுமே பேசுவேன். உங்க டேஸ்ட் வேற என் டேஸ்ட் வேற... உங்களுக்கு பிடிச்சு இருந்தா சந்தோசம் தான் என்றும் எனக்கு ஏதாவது டவுட் இருந்தா கேட்டுப்பேன் அவ்வளவு தான். ஆனா ஒரு சிலர் தங்களுக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றால் படத்தை பற்றி திட்டுவது மட்டும் அல்லாமல் படம் நல்லா இருக்கு என்று சொன்னவனையும் சேர்த்து திட்டுவார்கள் கலாய்ப்பார்கள். அதில் என்ன திருப்தி அவர்களுக்கு என்று
தெரியவில்லை....!!


சரி...நம்ம தமிழ் சினிமா எப்படி போகுது....ஆரோக்யமா போகுதா
இல்ல வீக்ஆ போகுதானுலாம் பார்க்க எனக்கு தெரியாது. இந்த
ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்லா இருக்கு சூப்பர்னு
சொல்ற மாதிரி சில படங்களை மட்டுமே சொல்ல முடியும்
என்பது மட்டுமே உண்மை. வேலுபிரபாகரின் காதல் கதைக்கு
முன் , பின் என்று தமிழ் சினிமாவை பார்த்தால் இப்போ

வர்ற படங்களில் அட்டு காட்சிகள் வைத்து விளம்பரம்
செய்து துட்டு பார்க்கிறார்கள். புதிதாக சாந்தி என்று ஏதோ
ஒரு அட்டு படம் வேற வர போது போல.... அதற்கு ஏற்ற
மாதிரி வூட்லாண்ட்ஸ், கோபிகிருஷ்ணா தியேட்டர்கள்
இந்த மாதிரி படங்களுக்கு ஆதரவு தருகின்றன. ஏற்கனவே
சொன்ன மாதிரி அவளின் உணர்ச்சிகள் என்று ஒரு அட்டு
படம் வருகிறது....!! (படத்தோட பேர் மட்டும் தான் நல்லா
இருக்கும்....)


முக்கியமா இவ்வளவு நேரம் மொக்கை போட்டதே இதுக்கு தான்... நேற்று பேப்பரில் வந்த செய்தி இது...

" சென்னை சினிமா தியேட்டரில் நடனமாடி ரகளை.....
படம் பார்க்க விடாமல் தொல்லை கொடுத்த 4 மாணவர்கள்
உள்பட 6 பேர் கைது"


இது எந்த தியேட்டர்ல நடந்ததுனு சொன்ன நம்ப மாட்டீங்க...
சத்யம் சினிமாஸ்இல் தான் இந்த சம்பவம் நடந்தது.
சத்யம் மாதிரி தியேட்டர்களில் போனாலே ஒரு ரேன்ஜ்...
விசில் அடிக்க தோணினா கூட அடிக்க யோசிப்போம்...
ஆனா இப்படி ஆறு பேரு தண்ணியை போட்டுட்டு நல்லா
கூத்து அடிச்சு இருக்காங்க...இதெல்லாம் எங்க ஏரியா
தியேட்டரில் சகஜம்ங்க.. ஆனா இப்ப எல்லாம் இந்த மாதிரி
டான்ஸ் ஆடி பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க....


சினிமா பார்க்கும் போது எப்படி கமெண்ட் வருதுனு நான்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்டிப்பா ஒரு மொக்கை
படத்துக்கு கமெண்ட் மட்டுமே ஒரு சிறு இன்பம். பல நேரங்களில்
படத்தை விட வரும் கமெண்ட்கள் நன்றாக இருக்கும்.ஆனா
அதுவே நல்ல படத்துக்கு கமெண்ட் அடிக்கும் போது தான்
நமக்கு தொந்தரவு ஆயிடுது. துணை கமிஷ்னர் வாழ்க...!
அவர் தான் இந்த தொந்தரவு நடந்தப்ப படம் பார்த்துட்டு
இருந்தாராம். நல்ல வேளை அவர் முதல் நாள் கணபதிராமில்
சிங்கம் பார்க்க வரல, வந்து இருந்தார்னா இந்நேரம் பாதி பேர்
உள்ளே தான் இருந்து இருக்கணும்....!!


அடுத்து....இன்னைக்கு....

பட தயாரிப்பாளரிடம் 25 ஆயிரம் லஞ்சம்...
சென்னையில் சினிமா தணிக்கை அதிகாரி கைது..!!


நான் நினைச்சேன்ங்க....தணிக்கை குழுவில் ஏதோ உள்ளடி வேலை
நடக்குதுனு. எல்லாம் துரோகம் நடந்தது என்ன?? படத்தை
பத்தி தான். அந்த படத்துக்கு 'ஏ' தர சான்றிதழ் கொடுத்திருக்கும் போதே நினைச்சேன். ஒரு படத்தை ரீலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி அதை பார்த்து மக்களுக்கு எது எல்லாம் தேவை, தேவையில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது...எவ்ளோ பெரிய வேலை இது.... அதை சிறப்ப செய்வாங்கனு பார்த்தா இங்கயும் லஞ்சமா.... மக்களே இதில் இருந்து என்ன கருத்து நாம கத்துக்கணும்னா....இனிமே நீங்க பாட்டுக்கு 'ஏ' போட்டிருக்குன்னு அஜால் குஜால்னு நம்பி போகாதீங்க.....எல்லாம் வேஸ்ட்..!!


இந்த போஸ்ட் மொக்கையா, மரண மொக்கையா என்று
நீங்களே முடிவு செய்து...ஒரு முடிவுக்கு வாங்க....

ஜெட்லி...(சரவணா...)

Monday, July 26, 2010

மேதை - ஒரு இசை பயணம்!!

மேதை - ஒரு இசை பயணம்!!



மேதை இசை கானம் இல்ல இசை வெள்ளம் இல்லை இசை சுனாமினு
கூட சொல்லலாம்...நம்ம தினா அவ்வளவு அருமையா மியூசிக் போட்டு
இருக்காரு...!!இந்த அளவுக்கு இந்த டைமில் இப்படி மியூசிக் போட நம்ம
எஸ்.ஏ.ராஜ்குமாரால் மட்டுமே முடியும் என்று நினைத்த போது...
என்னாலையும் முடியும் என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.


மேதையா.... கொக்கா??

உள்ளே போறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்,நீங்க நினைக்கிறதை கிழே நானே சொல்லிடுறேன்.....

" டேய் நீ மொக்கைனு தெரியும் ஆனா இந்த அளவுக்கு மொக்கையா
இருப்பேன்னு நினைக்கிலைடா....."
னு தப்பா நினைக்க கூடாது....

எந்திரனுக்கு ஒரே போட்டி மேதை தான்.

இப்போ சவால் விடுறேன்ங்க முடிஞ்சா ஷங்கர் எங்கள் மக்கள்
நாயகன் ராமராஜனின் மேதை படம் வரும் போது எந்திரன்
படத்தை ரீலீஸ் பண்ண சொல்லுங்க.... அப்புறம் தெரியும்
எங்கள் டவுசர் பாண்டி பவர்!!

ராமராஜனுக்கு சிறப்பு விருது:

'பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா' விருது :

எங்கள் அண்ணன் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தைரியமாக பேட்டி கொடுத்ததால்
அவருக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

(எனக்கும் ராமராஜனுக்கும் ஒரே ஒற்றுமை... நானும் ஹிந்து
பேப்பரில் படம் மட்டும் தான் பார்ப்பேன்!!)



மியூசிக் ஸ்டார்ட்ஸ்....


அன்னை ஒரு குழந்தை :

இந்த பாடலை பாடியவர் நம்ம ஜேசுதாஸ்... அன்னைக்கு இந்த பாட்டு சமர்ப்பணம். எனக்கு ஒரு டவுட் இருக்கு கடைசியில் கேட்குறேன்....


எப்போதும் எல்லாருக்கும் :


பாட்டு ஸ்டார்டிங்கே செம பீட்...எஸ்.பி.பி குரல் இந்த பாட்டுக்கு மிக பெரிய பலம். இந்த பாட்டை கேட்டாலே நாடி, நரம்பு , துரும்பு எல்லாமே ஆடிடும்னு நம்புறேன்....

சாம்பிள் வரி...

" புதுசாக தொறந்தாச்சு உனக்கு ஒரு பாதை
அதை போட்டு தந்தானே அவன் தான் மேதை.."


என் உயிர் தங்கங்களே :


இந்த பாடலை பாடியவர் உன்னி மேனன்...நல்ல கருத்துள்ள
சமுதாய பாடல். அனைவரும் கேட்க வேண்டிய பாடல்.


நிலவுக்கு பிறந்தவள் இவளோ :


ஹரிஷ் பாடியுள்ளார். டூயட் பாட்டு. இந்த கண் கொல்லா காட்சியை
பார்க்க இப்பவே என் கண்கள் துடிக்கிறது. தலைவர் ஏங்கே எல்லாம்
மோப்பம் புடிக்க போறாரோ....


தும்பிக்கை தொப்பை :


என்னையா கரக்காட்டகாரன் பாட்டை ரீமிக்ஸ் பண்ணிட்டாங்கல..
என்று யோசிக்கும் போதே....பாட்டு வேறு திசை நோக்கி போகிறது..
இந்த பாட்டை கேட்டாலே...வேறு ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...



இன்னும் ரெண்டு பாட்டு இருக்குங்க.....இதுக்கு மேல என்னால
முடியல... வேணும்னா நீங்களே கேட்டு தெரிஞ்சிக்கிங்க....
ஆனா ஒண்ணு இந்த பாட்டு ஆடியோ சி.டி. வாங்க கடைக்கு
போனா கடைக்காரன் ரியாக்சன் என்னவாக இருக்கும்னு நினைச்சு
பாருங்க... கடைக்காரர் வாங்குனா மூணு சி.டி.யில் முதல் சி.டி.யும்
கடைசி சி.டி.யும் வாங்குற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்கனு
மட்டும் சொல்ல முடியும்... சி.டி வாங்குனா மாலை மரியாதை
கூட பண்ணலாம் பண்ணுவாங்க... பீ கேர்புல்!! நான் இந்த சி.டி.யை
வாங்கனதா நினைச்சா அது உங்க தப்பு. ஆனா எப்போ மேதை
பாட்டு என் சிஸ்டம்இல் வந்ததோ அன்னைலியிருந்தே சிஸ்டம்
மக்கர் பண்ண ஆரம்பிச்சு...இன்னைக்கு நான் இணைய கடையில் இருந்து
மக்கள் நலன் கருதி போஸ்ட் பண்றேன்..என்பது குறிப்பிடதக்கது.





என் டவுட் இதுதான்ங்க இந்த பாட்டு எல்லாம் இருபது வருஷம் முன்னாடி
வர வேண்டியது...தெரியாம லேட் ரீலீஸ் பண்ணீட்டாங்க,,, இருந்தாலும் நாம
படத்துக்கு போறோம்...அது அம்பத்தூர்ல ரீலீஸ் ஆனாலும் சரி திருவள்ளூர்ல
ரீலீஸ் ஆனாலும் சரி...முதல் நாள் முதல் ஷோ போறோம்...!


***************************************


வாடா படம் மீட்பு போராட்ட குழுவின் முக்கிய அறிவிப்பு :

எங்கள் சூப்பர் பாக்கு அண்ணன் சுந்தர்.சி நடித்த வாடா படத்தை
முடக்க பல சக்திகள் முயன்று வருகின்றன. அந்த சக்திகளை
முறியடிக்க மந்தைவெளி மூத்திர சந்தில் கூடிய விரைவில் மாபெரும்
போராட்டம் நடக்க இருக்கிறது...அனைவரும் திறந்து சாரி திரண்டு வாரீர்,,,,!!

***********************************
எப்போதும் எல்லோருக்கும் நல்லதை செய்...
தப்பாம நன்மை வரும் நம்பிக்கை வை....!!


ராமராஜன் கல் உடைக்கிறார் (ராக்ஸ்).

ஏதோ ஒரு குறிப்பு:

அடுத்து சால்ட் கொட்டா சரசுவும் ராமண்ணாவும் என்ற இடுகை
போடலாம் என்று இருந்தேன்...சிஸ்டம் பணால் ஆனதால் முடியாது
போல.... முடிந்தவரை சீக்கரம் சரி பார்க்கிறேன்!!

இந்த இடுகையை நீங்க லைக் பண்ணா உங்கள் கருத்தையும்
வாக்கையும் போடுங்க....இப்போதைக்கு மீ எஸ்கேப்....


ஜெட்லி...(சரவணா...)

Friday, July 23, 2010

தில்லாலங்கடி - பக்கத்துக்கு வீட்டு பார்வை.

தில்லாலங்கடி - கிக்கா இல்லையா...??




எப்படியா, இவ்ளோ பெரிய கூட்டத்தை மெய்ச்சி படம் எடுக்குறாங்கன்னு
இயக்குனர் ராஜா மேல் எனக்கு பொறாமை உண்டு. படத்துக்கு மிக
பெரிய ப்ளஸ் ஸ்டார் கேஸ்ட் தான். அப்புறம் என்ன.... கிக் திரைக்கதை
தான்.



கணபதிராம் தியேட்டர் முழுவதுமே கல்லூரி பசங்க தான்...அது
என்னமோ தெரியல சன் டி.வி படம்னாலே கூட்டம் வந்திருது.
கிக் படத்தை நான் தெலுங்கில் பார்க்கலைங்க...ஆனா இலியானா
வர்ற சீன் மற்றும் பாட்டை எல்லாம் பார்த்து இருக்கேங்க...
அந்த முதல் சீன்ல இலியானாவா தமன்னாவானு போட்டி வச்சா
இலியானாக்கு தான் முதல் இடம்...ஆனா தமன்னாவை பார்த்தும்
பெருமூச்சு விட்டது தியேட்டர் கூட்டம்.




ரவி...இளம் புயலாம்... ஏன் இப்படி அடைமொழி வச்சிக்கிட்டு இருக்கார்னு தெரியில. ரீமேக் நாயகன்னு கூட வைக்கலாம் காரணம்
சில பல காட்சிகளில் டான்ஸ்களில் ரவி தேஜாவை பார்த்த மாதிரி
தான் இருந்தது. ரவி என்ன கேரக்டர்னு தமன்னாவையும் குழப்பி
நம்மையும் குழம்ப வைக்கிறார்.


தமன்னா இந்த படத்தில் தாராள கொள்கையை கடைப்பிடித்திருக்கிறார்..
வழக்கமா தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் வரும் கதாநாயகி
வேடம் தான். தன் வேலையை சரியாக செய்து இருக்கிறார். கடைசியில்
காணாமலும் போய் விடுகிறார்.


வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்...தூக்கில் தொங்கி தன்
மகன் ஊஞ்சல் ஆடும் போதும், தமன்னாவுடன் அயன் அன்பே அன்பே
பாட்டிலும், போலீஸ் ஆக வரும் மன்சூர் அலிகான் பாம்ப் சீனும்
காமெடி சரவெடி. சந்தானம் பற்றி சொல்லவே வேணாம். இடைவெளிக்கு
அப்புறம் வந்தாலும் அவர் வரும் சீன் எல்லாமே காமெடி அதகளம்
தான். ஜான் விஜய், மயில் சாமி கூட்டணியும் ஜோர்..!!


ரவியின் அப்பாவாக பிரபு... இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா
என்று கேட்கும் அளவுக்கு பையனுடன் சேர்ந்து கூத்து அடிக்கிறார்...
பிரபுவும் ரவியும் போலீஸ் ஸ்டேஷன்இல் அடிக்கும் கூத்து நல்ல
ரகளை.அம்மாவாக சுஹாசினி...சும்மா வந்து போறாங்க... அப்புறம் இன்னொருத்தர் ஷாம், பெரிய கேரக்டர் ஆ ஊனு சொன்னாங்க...
இதை தான் நம்ம சரண்ராஜ் ஜென்டில்மேன் படத்திலே செய்தாலும்
ஷாம் செய்வது ஏதோ ஓகே தான்....!!


கேம் ஸ்டார்ட்ஸ் நௌ !!

GAME STARTS NOW இந்த வாக்கியத்தை படத்தில் இடைவெளிக்கு அப்புறம் எல்லாரும் பயன்ப்படுத்துவாங்க....அதையே நாமும்
யூஸ் பண்ணுவோம்....


படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா....படத்தோட
ஓடுற நேரம்..மூணு மணி நேரம் படமெல்லாம் ரொம்ப ஓவர்
சாமி... நடுவுல நிறைய மொக்கை சீன் வேற வருது....
அதுவும் இண்டர்வல் டைமில் ரவி மாஸ்க் போட்டு கொண்டு
அசால்ட் ஆறுமுகம் ரேஞ்சில் கொள்ளை அடிப்பது எல்லாம்
ரொம்பவே ஓவர்...!!


இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... நான் அதிமேதாவி,
என்னை யாரும் ஏமாத்த முடியாது, பூ சுத்த முடியாது அப்படின்னு
நினைக்கிறவங்க இந்த படத்தை தவிர்ப்பது நலம். ஏன்னா காதில்
கூடை கூடையாக பூ, காய் , மரம் என்று சுற்றுவார்கள்.ஆனா இதில் வரும் அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் நாம் காலம் காலமாக தமிழ் சினிமாவில் பார்த்து வரும் ராபின்ஹூட் படங்களை தான் நினைவுப்படுத்தி சலிப்பையும் தருகிறது.


மற்றபடி ஒரு பொழுதுபோக்கு, டைம் பாஸ் படம் தான் இந்த தில்லாலங்கடி. சில பல காட்சிகள் போர் அடிக்கிறது. முக்கியமா படத்திற்கு யுவனின் பாடல்கள் பெரும் பின்னடைவு. பாட்டு வந்தாலே கடுப்பா இருக்கு. இந்த படத்தில் ரவிக்கு எதை பண்ணினாலும் கிக் வேணும் என்பார்... நமக்கும் கிக் வேணும்னா ஒரு ரவுண்ட் மட்டும் அடிக்கலாம். சும்மா ஒரு வாட்டி பார்க்கலாம்...அடுத்த ரவுண்ட் அடிச்சா மட்டை தான்.....!!



தில்லாலங்கடி - கிக் கொஞ்சம் கம்மி தான்!!


தியேட்டர் நொறுக்ஸ் :


# ஒரு காட்சியில் ரவி தமன்னாவிடம் "கருமம் புடிச்ச லவ்"
என்று சொல்வார்...

இங்கே நம்ம ஆட்கள் செம கைத்தட்டு... ஒருத்தர்
"சூப்பர் மாமே..." என்றார்.


# படத்தின் நடுவில் ரவி மற்றும் வடிவேலுவை அனிமேஷன்இல்
காட்டுவார்கள்...அதற்கு பின்சீட்காரர்...

" இதுக்கு நான் வீட்லயே..சுட்டி டி.வி. பார்த்து இருப்பேன்"
என்று ஆதங்கத்தை வெளிப்படித்தினார்.

# இண்டர்வல் அப்பவே பல பேர் "என்ன ரவி.... கடைசியில்
போலீஸ்ஆ வருவார்...அதானே நடக்கும்" என்று பேசிகொண்டே
கலைந்தனர்.



# கடைசியில் படம் முடிந்து பேர் போடும் போது... கட் சீனில்
இளைய தளபதி விஜயை கிளாப் அடித்து படம் ஆரம்பித்த
காட்சியை காட்டினார்கள்....தியேட்டரில் செம விசில்...!!


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடவும்....


நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Thursday, July 22, 2010

கனவு வேட்டையும் போஸ்டர் வேட்டையும்!!!

கனவு வேட்டை:





கனவு வேட்டை (INCEPTION) படத்திற்கு கடந்த வெள்ளியே போய்
இருக்க வேண்டியது கூர்க் செல்ல வேண்டிய காரணத்தால் இன்று
தான் பார்த்தேன். பைலட் தியேட்டரில் இன்று தான் கனவு வேட்டை கடைசி நாள் என்பதால் சுமார் நுப்பது பேர் இருந்ததே அதிசியம். அதுவும் தியேட்டர்க்காரன் படம் முழுவதும் ஏ.சி. போட்டது மிக பெரிய அதிசியம்.



வேட்டை ஆரம்பம்டோய்.....!!


கனவு வேட்டை பற்றி ஒரு தமிழ் நாளிதழில் படித்த நினைவு...
கதாநாயகன் வேறு லியோநார்டா என்பதால் ஒரு எதிர்ப்பார்ப்பு
என்னுள் இருந்தது. படம் போட்டவுடனே அப்போ அப்போ கொஞ்சம்
சவுண்ட் கட் பண்ண ஆரம்பிச்சான் நம்ம ஆராதனா தியேட்டர்
மாதிரி. அதிலே எனக்கு கண்ணு சொக்க ஆரம்பிச்சுருச்சு... கண்
அசந்த நேரத்தில ரெண்டு மூணு கனவு வேற வந்திருச்சிங்க.
ஒரு வேளை இது தான் கனவு வேட்டையோ....??


படத்தில் நான் பார்த்த வரைக்கும் எனக்கு புரிஞ்சுது இது தாங்க..
நம்ம ஹீரோ ஒரு குழுவா அடுத்தவங்க கனவுக்குள் போய்
களவாடுராறு. சில சமயம் கனவுக்குள் போய் கனவுக்குள்ளயே
கனவுக்குள்ளும் போறாங்க. அதாவது நம்ம தமிழ் சினிமாலா
சில படத்தில் வருமே பிளாஷ்பேக் உள்ளயே பிளாஷ்பேக் அந்த
மாதிரி.... ஆனா இந்த கனவு வேட்டை வேற... ஆக மொத்தத்தில்
எனக்கும் ஒன்னுமே புரியலைன்னு சொல்ல முடியாது...ஏதோ
கொஞ்சம் புரிஞ்சுது...ஆனா புரியல....!! சரி ரைட் விடுவோம்..

***********************************

போஸ்டர் வேட்டை :


நானா தேடி போய் இப்படிப்பட்ட போஸ்டரை படம் பிடிக்கறது
இல்லைங்க...அப்படியே போகும் போதும் கண்ணில் பட்டா
எடுக்கறது உண்டு...நாம ரசிச்சதை மற்றவர்களும் ரசிக்கட்டுமே
என்ற ஒரே காரணம் தாங்க...

சின்ன தளபதி பரத்:



எங்கள் அண்ணன் சின்ன தளபதி பிறந்தநாள் போஸ்டரை
பார்த்ததும் அசந்துட்டேன்.... இப்படியெல்லாம் கூட காமெடி
பண்ணுவாங்களானு ஒரே சிரிப்பு...ஏற்கனவே facebook , ஓர்குட்
என்று இந்த போட்டோவை அப்டேட் பண்ணாலும்... அதை
பார்க்கதவங்களுக்கு இங்கே...... சின்ன தளபதியை யாரும்
நக்கல் பண்ண கூடாது...சொல்லிப்புட்டேன் ஆமாம்....



அவளின் உணர்ச்சிகள் :




இப்ப நம்ம தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் கஷ்ட காலம்னு நினைக்கிறேன்.... அட்டு படத்துக்கு தான் இப்போ விளம்பரம் அதிகமா வருது... அவளின் உணர்ச்சிகள் போறதுக்கு முன்னாடி அந்தரங்கம் பற்றி கொஞ்சம் பேசுவோம்....


உண்மைய சொன்ன நம்புங்க நான் இன்னும் அந்தரங்கம் படத்தை
பார்க்கவில்லை.எங்க பக்கத்துக்கு வுட்டு பொக்கை வாய் தாத்தா "நான் எப்போ அந்தரங்கம் படம் போவேன்" னு கேட்டு, நான் பார்த்துட்டு வந்து அவர்க்கிட்ட சீன் இருக்கா இல்லையானு சொன்ன பிறகு தான் அவர் போவேன்னு ஒத்தகாலில் நிக்குறார்.... நான் என்ன பண்றது சொல்லுங்க... எனக்கு என்னமோ அந்த படம் நல்லா இருக்காதுனு தான் தோணுது..... என் நண்பன் ஒருவன் சிவப்பு விளக்கு பார்த்து நொந்து விட்டான்..காரணம் கேட்டதற்கு படத்தில் சிவப்பு விளக்கை கூட காட்டவில்லையாம்.....!!


சரி அவளின் உணர்ச்சிகள் படத்துக்கு வருவோம்... இந்த படம்
போஸ்டர் பார்த்தவுடன் அடுத்த அட்டு படம் ரெடி ஆயிடுச்சு
டோய் என்று மகிழ்ந்தாலும். இந்த மாதிரி அட்டு படங்கள்
மக்கள் காசை வீணடிக்கிறது. இந்த மாதிரி படத்தால் மக்கள்
காசை ஒரு சில கும்பல்கள் நாமம் போட்டு விடுகிறார்கள்
என்பதே உண்மை.

காதலர் கட்சி :



கொஞ்ச நாள் முன்பு பெசன்ட் நகர் பீச்க்கு போகும் போது இந்த
போஸ்டர் கண்ணில்ப்பட்டது. சில வருடங்களுக்கு முன் இது
போல் ஒரு கட்சி இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால்
இப்போது தான் அதன் தலைவரை பார்க்கிறேன். ஒரு தடவை
தேர்தலில் நின்றதாக கூட நினைவு...ஆனா எத்தனை ஓட்டு
வாங்கினார்னு தெரியலை...... ஆனா ஒண்ணு கடைசி வரி...
காதலர்களின் புரட்சி தலைவர் குமார்...ஹி ஹி...!!
யாராவது கள்ள காதல்னு ஒரு கட்சி ஆரம்பிச்சா நிறைய ஓட்டு
விழ வாய்ப்பிருக்கு...பேப்பர் திறந்தாலே அது தானே நியூஸ்.


இந்த இடுகை பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...

ஜெட்லி...(சரவணா...)