Tuesday, March 30, 2010

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்!!

கோவா vs தமிழ்ப்படம் விளம்பர மோதல்!! இன்ன பிற விளம்பரங்களும்

சமீபத்தில் நான் ரசித்த மற்றும் சிரித்த சில விளம்பரங்களை
உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.நீங்க இந்த
விளம்பரத்தை பார்த்து இருக்கலாம் இருந்தாலும் வெளிநாட்டில்
உள்ளவர்களுக்கும் பேப்பர் படிக்காதவர்களுக்கும் என்னால்
முடிந்த சிறு உதவி!!

முதல்ல....

கோவா படத்தின் விளம்பரம்...கடந்த வெள்ளிக்கிழமை கோவா படத்தின் 9 வது வாரம் வெற்றி??? விளம்பரத்தில் சரோஜா சிவா ஸ்டில்லை போட்டு "எனக்கு தமிழ்ப்படம்- களிலேயே மிகவும் பிடித்த படம் கோவா" என்று தமிழ்ப்படத்தை நக்கல் அடித்தனர் கோவா குழுவினர்.தமிழ்ப்படம் விளம்பரத்தில் "ஊரறிய ஜெயிச்சவன் நான்தாண்டி,என்கிட்டே
காட்டாத பூச்சாண்டி" என்று அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில்
சிவா நடிக்கும் பூச்சாண்டி படத்தின் வாசகத்துடன் வெளம்பரம் வந்தது....









ஆஹா...சண்டையே ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்தேன்...
சண்டே பேப்பரில் தமிழ்ப்படம் விளம்பரத்தில் வந்ததை
நீங்களே படத்தை கிளிக் பண்ணி பாருங்க....கோவா படத்தை
செமையா ஒட்டி இருக்காங்க!!





சிவா: அண்ணே கோவாக்கு டூர் போனீங்களே என்ன ஆச்சு??

சண்முகசுந்தரம்: ஊராப்பா அது? ஒரு மூஞ்சி கூட பார்க்குற
மாதிரி இல்ல.அதான் திரும்பி இங்கியே வந்துட்டேன்.




ஆனா ரெண்டு படத்துக்கும் மிக பெரிய ஊறுகாயாக சிவாவும் ஷண்முகசுந்தரமும் இருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!!




கண்டிப்பா இவங்க இதை ஜாலிக்கு தான் பண்றாங்கனு நினைக்கிறேன்.நாம் நண்பர்களை கலாய்ப்பது போல் அவர்கள் பேப்பர் விளம்பரத்தில் செய்கிறார்கள் போலும். ஏற்கனவே ndtv hands - up ஷோவில் மாற்றி மாற்றி கலாய்த்து இருக்கிறார்கள்.உங்களை யாராவது ஒட்டுனா நீங்க திருப்பி கலாய்க்க மாட்டீங்களா.... ஓட ஓட ஓட்டுறது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்!!



சில பேர் இதை நம்மை april fool பண்ணத்தான் செய்கிறார்கள்
என்று சொல்கிறார்கள்.அவுங்க மாத்தி மாத்தி கிண்டல் பண்றதை
நாம் ரசிக்கிறோம் அவ்ளோதான்...இதில் april fool பண்ண என்ன
இருக்கிறது...!


இன்னைக்கு கோவா விளம்பரம் பாருங்க.....கொஞ்சம் ஓவர்ஆ தான் இருக்கு....கோவா சூப்பர் படமாக இருந்தா அவர்கள் விளம்பரம் செய்வதை ரசிக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் விளம்பரத்தை பார்த்தால் "செத்த கிளிக்கு ஏன்டா சிங்காரம்" என்று தான் தோன்றுகிறது.....

(செவ்வாய்க்கிழமை(இன்றைய) கோவா விளம்பரம்)


நாளைக்கு தமிழ்ப்படம் என்ன விளம்பரம் பண்ண போறாங்கனு ஆர்வமா இருக்கேன்...கண்டிப்பா இதே பதிவில் நாளைக்கு அப்டேட் செய்வேன் வந்து பாருங்க....


**************************************

அசல் வெற்றி...

ஹேஹே....ஹேஹே.... எங்கே தல படம் நூறு நாள் ஓடிடுச்சு... ஸாரி அம்பது நாள் ஓடிடுச்சு....இது தான் அசல் வெற்றி..... எனக்கு ஒரு டவுட்ங்க ஏகன் படம் கூட சாந்தி தியேட்டர்ல தான் ஒடிச்சு! என்னை பொருத்தவரை அசலுக்கு ஏகன் எவ்வளவோ பரவாயில்லை.சொந்த தியேட்டர் சொந்த தயாரிப்பு மட்டுமே அசல் படம் ஓட காரணம் என்பது சின்ன குழந்தைக்கு கூட
தெரியும்.




இதை நான் ஏன் சொல்றேன்னா எனக்கு அஜித்தை இந்த விஷயத்தில் ரொம்ப பிடிக்கும் படம் நல்லா இல்லைன்னா காசு கொடுத்து நூறு நாட்கள் ஓட்டமாட்டார்.அஜித் இது போன்று விளம்பரங்களை வெறுப்பவர். என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி!!

மறுபடியும் சொல்றேன் நான் அஜித் எதிர்ப்பாளன் கிடையாது, அவரின் கோடான கோடி நலவிரும்பிகளில் நானும் ஒருவன், ரசிகனாக அல்ல!!




குறிப்பு: சைடில் உள்ள படங்களை(வடிவேலு,சின்ன பையன்) பார்த்து தவறாக நீங்களே எதுவும் எண்ணி கொள்ள வேண்டாம்!!

***********************************************************

ஆயிரத்தில் ஒருவன்:



நாம எப்போவும் நேர்மையா இருக்கணும்....
ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்
என்பதில் இதுவரை எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது...!!
ஆனால் இவர்களின் 75 நாள் விளம்பரம் கொஞ்சம் எரிச்சலை
ஏற்படித்தியது, காரணம் படம் பேபி ஆல்பர்ட்இல் இருந்து
தூக்கி ஒரு வாரம் ஆச்சி!! கண்டிப்பா கார்த்தியின் செல்வாக்கை
உயர்த்த தான் இந்த நூறு நாள் மோகம்....!
வேண்டாம் கார்த்தி காமெடி ஆயிடும்.....
என்ன ஏற்கனவே ஆயிடுச்சா?? மீ எஸ்கேப்.....

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டும் விவாதிக்க பின்னூட்டமும்
போடுங்கள்!!




ஜெட்லி

Monday, March 29, 2010

வலை பதிவர் சங்கம் - ஆணியே புடுங்க வேணாம்

சங்கம் ஆரம்பிச்சாச்சு, எப்படியும் நம்மளைதான் தலைவரா தேர்ந்தெடுப்பாங்க, தேர்ந்தெடுத்த உடனே மாலை போடுவாங்க, ஆயிரமா, ஐநூறா இல்ல அம்பது ரூபாயோட நிறுத்திக்குவாங்களா? அப்படி மாலை போடும்போது போட்டோ எடுக்க தயாரா இருக்குற பலாபட்டறையை எப்படி அப்புறப்படுத்துறது? மாலை போட்ட உடனே மைக்க குடுத்து பேச சொல்லுவாங்களே, என்ன பேசலாம்? அப்புறம் பொன்னாட வேற போத்துவாங்களே, அதெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்கு? லாரி ஏதாவது தேவைப்படுமா? ஆட்டோ போதுமா? ஒருவேளை தனியா ஒருத்தர் மட்டும் தலைவர்னு கிடையாது, ஒரு குழுதான்னு சொல்லிட்டாங்கன்னா எப்படி போஸ் குடுக்குறது, ரெண்டு பக்கம் நிக்கிற ஆட்களோட கைகோர்த்து நிக்கணுமா? இவங்க தனியா மேடை வேற போடமாட்டாங்களே, நம்ம உயரத்துக்கு யார் பக்கத்துல நின்னு போஸ் குடுத்தா சரியா இருக்கும்? ஒருவேளை நம்மள தலைவரா தேர்ந்தெடுக்கலைன்னா போராட்டம் நடத்த வலையுலக தாக்கரேவையும் மோடியையும் கூப்பிடலாமா? உள்ளூர் புலியையும் சிங்கை சிங்கத்தையும் கூப்பிடலாமா?

இதெல்லாம் தான் சங்க கூட்டத்துக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது மனதில் ஓடிக்கிட்டிருந்த கேள்விகள்.


ஆறு மணி கூட்டத்துக்கு அஞ்சே காலுக்கே போய் நின்னா, நம்மக்கு முன்னாடியே அஞ்சாறு பேரு வாசல்ல நின்னுக்கிட்டுருந்தாங்க, அண்ணன் தண்டோரவோட கிளம்பி போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வந்தேன். சொன்ன சொல் தவறாம சரியா ஆறு மணிக்கு கூட்டத்த ஆரம்பிச்சாங்க. உ.த. அண்ணன் கொண்டு வந்திருந்த சுண்டலை, ச்சே, பேப்பரை எல்லாருக்கும் குடுத்தாரு. படிச்சிட்டு நிமிரும் போதே, அண்ணாச்சி நாமெல்லாம் எதுக்காக கூடி இருக்கோம்னு ஒரு பேருரை நிகழ்த்த தொடங்கி இருந்தார். அவர் பேசி முடிச்சிட்டு மைக்கை அண்ணா சிவராமனிடம் கொடுத்தார், சிதைவுகள்னு ப்ளாகுக்கு பேர் வச்சாலும் வச்சார், என்னோட கனவுகளையெல்லாம் ஜல்லி ஜல்லியா சிதைக்கிற அளவுக்கு ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க "எதுக்காக நாம சங்கம் ஆரம்பிக்கணும்?". அப்புடியே, கண்ணுக்கு முன்னாடி ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது. அடுத்து சில கேள்விகள் கேட்டாரு, அதுல முக்கியமான ஒன்னை தவிர மத்த எல்லாத்தையும் பத்தி எல்லாரும் பேசினாங்க, அந்த முக்கியமான கேள்விக்கு கடைசியா பேசின நர்சிம் தான் பதில் சொன்னாரு. அது என்னன்னு கடைசில சொல்றேன்.


அடுத்து வந்த ஞாநி பேசினாரு, பேசினாரு, பேசினாரு, ஸ்ஸ்ஸ்ஸபப்பா இதுக்கே எனக்கு மூச்சு வாங்குதே, அவரு அவரோட முப்பத்து வருட தொழிற்சங்க வாழ்க்கை பத்தி பேசிட்டு உக்காந்தாரு. திரும்பவும் எந்திரிச்சு இந்த கூட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளர் அவசியம்னு சொன்னாரு. சொன்னவரு, வரும்போது கோபிக்கிட்ட கேட்டு ஒரு கோட்டு வாங்கிட்டு வந்திருந்தா, நீயா நானாவோட தீவிர ரசிகரான நர்சிம்முக்கு போட்டு அவரையே ஒருங்கிணைக்க சொல்லியிருக்கலாமேன்னு எனக்கு தோணிச்சு. அவரு கேபிள் பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த என்னை பார்த்துதான் சொன்ன மாதிரி தோணிச்சி, "அய்யா, நானு பேசி களைச்சி போனா எல்லாருக்கும் காப்பி, தண்ணி குடுக்கதான் நின்னுக்கிட்டுருக்கேன்"னு சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள்ளே கடைசி பெஞ்சில் இருந்த கார்க்கி கூப்பிட்டாருன்னு அங்க போயிட்டேன். அப்புறம் வந்த எல்லாரும் பேசினாங்க, பேசினாங்க அவுங்களும் பேசினாங்க, உட்காந்திருந்தவுங்களும் அவுங்களுக்குள்ள பேசினாங்க. எந்த நேரமும் ஏதாவது நடக்கலாம்னு நினைச்ச நான் எஸ்கேப் ஆகுறதுக்கு வசதியா வாசல் பக்கத்தில நின்னுக்கிட்டேன்.


சரி, வெள்ளாட்டு போதும், இப்போ கொஞ்சம் சீரியஸ்


சிவராம் அண்ணன் கேட்ட கேள்விகள் நல்ல ஒரு ஆரம்பப்புள்ளி தான்,


எதுக்காக இப்போ இந்த சங்கம்?


இதுவரைக்கும் என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? அதை எதுவாக மாத்தப் போறோம்? அல்லது


இதுவரைக்கும் பண்ணாத எந்த விஷயத்தை புதுசா சங்கம் மூலமா பண்ணப் போறோம்?

இதுக்கப்புறம் ஞாநி கேட்டது இதே தொனியில் தான் இருந்தது,


சங்கம் ஒரு சட்டரீதியான, பதிவுபெற்ற நிறுவனமாக செயல்படுமா?
சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துமா?
சங்கம் உறுப்பினர்களை கட்டுப்படுத்துமா? ஆம் என்றால் எல்லை எது?

அடுத்து பேசிய எல்லாருமே இதை ஒட்டி / வெட்டியே பேசினார்கள்

இப்போ என்னோட (அங்கே கேட்க நினைத்து, நான் நினைத்ததன் சாரத்தை நர்சிம் பேசிவிட்டதால் கேட்காமல் விட்ட) சில கேள்விகள்,

ஆரம்பம் முதல்

எதற்கு சங்கம்?  சங்கம் என்ன செய்யப் போகிறது? என்ற தொனியில் பேசிய எல்லாரும் கூறிய ஒரு விஷயம், போராட்டம் மற்றும் பிரச்சனைகளை எதிர் கொள்வது,

எனக்குப் புரியவில்லை, எதற்காக நாம் போராட வேண்டும்? நமக்கு எதையும் எழுதும் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக சொன்னார்கள், நம்முடைய சுதந்திரம் சினிமா விமர்சனம் வரையிலும், சாரு, ஜெமோ வரையிலும் கட்டற்றதாக இருக்கலாம், அரசியல் பேசினால் ஆட்டோ வரும் என்ற பயம் இல்லாத பதிவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இப்படி ஒரு சூழலில் போராட்டம் என்பதும், பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதும் முதல் உரிமை கொடுக்கப் பட வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றவில்லை.


போராட்டத்திற்காக மட்டும் தான் சங்கம் கூட்டவேண்டுமா? சந்தோஷத்தை, ரசனையை பகிர்ந்து கொள்ள சங்கம் கூட்டக் கூடாதா? அது ஒரு காஸ்மோ பாலிட்டன் க்ளப் போல் ஆகிவிடும் என்றால், அதில் என்ன தவறு?


பதிவெழுதுவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட, மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் பதிவர் ஒருவரை IndiBlog பதிவர் சந்திப்பில் சந்தித்ததாகவும், நாமும் முயற்சித்தால் அதை இங்கே நடைமுறைப்படுத்தலாம் என்று லக்கி கூறியது, MLM செய்பவர் குரல் போல பலருக்கு ஒலித்திருக்கலாம், ஆனால் அதை நாம் ஏன் இங்கே நிஜமாக்க முயற்சிக்கக்கூடாது?


தீவிர இலக்கிய ரசனை என்பது சித்த வைத்தியம் போல குறிப்பிட்ட சிலரிடமே தங்கி விடாமல், பரவலாக்கலாமே? நான் சொல்வது பட்டறைகளைப் பற்றி அல்ல, கதை/கவிதை வாசிப்பு, அதை விளக்கி சொல்வது என்று மாதம் ஒரு நாள் செய்யலாமே, உதாரணமாக, எனக்கு ஜீரோடிகிரி புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை, அது ஒரு பின்நவீன நாவல், படிம நாவல் என்றெல்லாம் படித்துப் புரிந்து கொண்டவர்கள், எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே


ரவிசங்கர் சங்கம் வேண்டாம் என்று பேசினார், ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்றார், 
"அண்ணே இப்பவும் அதே தான் பண்ணபோறோம், சங்கம் ஆரம்பிக்கலாம் ஆனா ஆணி எதுவும் புடுங்கவே வேண்டாம்" (அப்பாடா தலைப்பை கொண்டு வந்தாச்சி),
இன்னொரு விஷயம், தன் கருத்தை சொல்லும்போது, சாமியார் சம்சாரியான கதை ஒன்றைச் சொன்னார், சாமியாரின் கோவணத்தை கடித்த எலியை ஒழிக்கத்தான் பூனை வாங்குவார் சாமியார், அது கடைசியில் சாமியாரை சம்சாரியாக்கி விடும், எதற்காக இதெல்லாம் என்று ஒருவர் கேட்கும் போது சாமியார் சொல்வார் "எல்லாம் ஒரு கோவணத்துக்காகத்தான்". ரவிசங்கர் இதை சொல்லும்போது முதலிலும் முடிவிலும் கோவணத்தை விட்டு விட்டார்,
"அண்ணே, சபை நாகரிகம் கருதி நீங்க அதை நீங்கள் விட்டிருந்தால், ஸாரி, சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன் உங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்படும் :)"


கடைசியாக , சிவராம் அண்ணா முதலில் கேட்ட விஷயம்,

இந்த சங்கம் பதிவர்கள் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் கொண்ட தகவல் தளமாக மட்டுமே செயல்படப் போகிறதா?

அதில் என்ன தவறு இருக்க முடியும்? நம்மில் பெரும்பாலோர் எழுதுவது சுய இன்பத்துக்க்காகத்தான், நான் இங்கே வந்தது ஒத்த ரசனை உள்ள நண்பர்களைத் தேடியும், ரசனைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் தான், தற்போது ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இருக்கும் ரசனைகள் ஒரு பெரிய குழுவாக சேர்வதில் என்ன தவறு? நான் சந்திப்புக்கு வரும்போது கவலைப்பட்ட ஒரு விஷயம், அந்த இடம் நமக்கு போதுமா என்பது தான், ஆனால் வந்தவர்கள் வெறும் ஐம்பது பேர்தான் என்பதில் எனக்கு ஏமாற்றமே! இங்கே எத்தனை குழுக்கள் இருக்கின்றன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?  அத்தனை குழுக்கள் பற்றிய விஷயங்களும் ஒரு இடத்தில் இருப்பது பெரியதொரு வசதி தானே. தகவல் தளமாக இயங்கும்பட்சத்தில், அதை நிர்வகிக்கவும், தினம்தோறும் அப்டேட் செய்யவும் ஒரு குழு தேவை தானே அது சங்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

நர்சிம் கடைசியாக பேசும்போது, சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றியும், அதில் பதிவர்கள் வானம்பாடி ஐயாவும், மருத்துவர் புருனோவும் செய்த உதவிகள் பற்றி சொன்னார். எனக்கு வானம்பாடிகள் ஐயாவை பதிவுகள் மூலம் பழக்கம் என்றாலும் அவரது தொழில் பற்றி எதுவும் தெரியாது. சங்கம் ஒரு தகவல் தளமாக இருந்தால் எதிகாலத்தில் பிரச்சனைகளில் உதவிக்கு ஆள் இருக்கு என்ற நிம்மதி கிடைக்கும்.

எது இல்லாவிட்டாலும், "பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.

அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி இரவு பத்தரைக்கு வீடு வந்து சேர்ந்தேன்
 
 
நன்றி

சங்கர்

Friday, March 26, 2010

அங்காடி தெரு-விமர்சனம்

அங்காடி தெரு


மூணு மணிநேரம் ரெங்கநாதன் தெருவில் இருந்தது போல் இருந்தது அங்காடி தெரு.வசந்தபாலன் அவர்களின் மூன்றாவது படம்.படத்தின் களம் புதுசு.தி.நகர் ரெங்கநாதன் தெரு தான் படத்தின் ஹீரோ.சைதை ராஜில் முதல் காட்சிக்கு கூட்டம் ஓரளவுக்கு வந்தது.அங்கே பதிவர்கள் கேபிள் சங்கர் அண்ணனும் தண்டோரா அண்ணனும் வந்திருந்தார்கள்.


புதுமுக நாயகன் மகேஷ் அறிமுகம் மாதிரியே தெரியவில்லை.
மிக நன்றாக நடித்து இருக்கிறார்.நாயகி அஞ்சலி பத்தி நிறைய
சொல்லலாம்.நன்றாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி
இருக்காங்க.கனா காணும் காலங்கள் பாண்டி நாயகனின்
நண்பனாக சில இடங்களில் பழைய மொக்கைகளை போட்டாலும்
பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி ஒரு கடையில் வேலை
செய்பவர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்திருந்தாலும்
பல விஷயங்களில் எனக்கு உடன்ப்பாடு இல்லை.முக்கியமா
ஊழியர்களுக்கு சாப்பாடு அளிக்கும் முதல் காட்சி.ஆனா
அடுத்த தடவை அந்த காட்சி வரும் போது எல்லோரும்
அமைதியாக வரிசையில் நின்று சாப்பிடுகிறார்கள்....


ரிச்சர்ட் அவர்களின் ஒளிப்பதிவு சூப்பர்.படத்துக்கு அடுத்த
பலம் ஜெயமோகன் அவர்களின் வசனம்...பல இடங்களில்
பளிச் பளிச் என்று இருக்கிறது.முக்கியமா மகேஷ் அஞ்சலி
தூங்கி கொண்டிருக்கும் இடத்தில் தேடி போய் பார்த்து
பேசுவாரே மற்றும் மாற்று திறன் படைத்த ஒருவருக்கு
குழந்தை பிறந்தவுடன் அதான் தாய் கூறும் வசனமும் செம!!

இரண்டு பாட்டு படத்துக்கு மிக அழகு, கடைசியாய் துணி
கடையில் ஆடும் பாட்டு படத்தின் வேகத்தை குறைக்கிறது
ஆனா கதைக்கு தேவையானது.முதல் பாதியில் சில இடத்தில்
கொட்டாவி விட்டேன் அதை வேற கேபிள் அண்ணன் பாத்துட்டு
"என்னப்பா கொட்டாவி விட்டுட்டு இருக்கே" என்று தண்டோரா
அண்ணனிடம் கூறி கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.


இந்த படம் பாசிடிவ் படம் அப்படின்னு சொல்லலாம்.....
இயக்குனர் சில இடங்களில் முக்கியமா அந்த கழிவறையை
பார்த்து கொள்பவர்,அந்த கண்ணு தெரியாத தாத்தா என்று
பலர் மூலம் நம்முள் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்.அதே
போல் வெங்கடேஷ் நாயகனிடம் "இந்த தெருவில் உனக்கு
யாரும் வேலை தராமாட்டங்க..பிச்சை தான் எடுக்கணும்"
என்பார்.அதற்கு நாயகன்"யானை வாழ்ற காட்டில் தான்
எறும்பும் வாழுது, நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்று
பதில் அளிப்பார்....செம...!!


அங்காடி தெரு,சில இடங்களில் தொய்வு இருந்தாலும் ரசிக்கலாம். இந்த படம் கண்டிப்பா சுத்தமான மசாலா காதலர்களுக்கு ஏற்றது அல்ல!! தண்டோரா அண்ணன் சொன்ன அதே கருத்தை நானும் சொல்றேன் கொடுத்த அம்பது ரூபாய்க்கு படம் வொர்த்!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# சைதை ராஜை தல தியேட்டர்னு சொல்லலாம்,அட எங்க
உட்கார்ந்தாலும் யார் தலையாவது மறைச்சுகிட்டே இருக்கும்னு சொன்னேங்க!!

# சூப்பர்வைசர் ஆக இயக்குனர் வெங்கடேஷ், மனுஷன் முதல்
காட்சியில் இருந்து தொடர்ந்து மூர்க்கத்தை காட்டிவிட்டு பின்பு இன்டெர்வல் முடிந்தவுடன் ஆளை காணோம்...நான் ஒரு அரை மணி நேரம் கழிச்சு கேபிள் அண்ணன்கிட்ட "எங்கே அண்ணே வெங்கடேஷை காணோம்??" என்று கேட்டேன்."இதோ இது அவர் வர வேண்டிய சீன்தான்" என்றார். அண்ணன் சொன்ன மாதிரி வெங்கடேஷ் அந்த சீன் வந்து தலை காட்டி விட்டு போனார்.

# அப்புறம் சில இடங்களில் நானும் கேபிள் அண்ணனும் படத்தை பற்றி மாத்தி மாத்தி கேள்வி கேட்டுட்டு இருந்தோம்
என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெட்லி பஞ்ச்:

அங்காடி தெரு - ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரலாம்.


இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஒட்டு போடுங்கள்,
முடிந்தால் பின்னூட்டம் போடுங்கள்!!


நன்றி
ஜெட்லி

நன்றி:cinesnacks

Thursday, March 25, 2010

ஆலோசனை / உதவி தேவை

"இப்பவே சொல்லிடுதேன், அந்த வீட்டை வாங்காதீரும், நாங்க அதை யாருக்கும் விக்க விடமாட்டோம், உங்க பெரியப்பா அதை வித்தா, ஒண்ணு எங்களுக்கு விக்கணும் இல்ல அது இடிஞ்சு விழணும். நீரு வெலகிக்கிடும், மீறி வாங்கினா, வில்லங்கமாகிப் போகும், இப்பமே சொல்லிட்டேன், அப்புறம் வருத்தப்படாதீரும்."



"நான் அந்த வீட்ட வாங்க முழு பணமும் ஆறு மாசம் முந்தியே குடுத்தாச்சு, பத்திரம் பதிவு பண்ண வேண்டியது மட்டும் தான் பாக்கி, இப்போ வந்து இப்படி பேசினா என்ன நியாயம்? "


"நியாய அநியாயமெல்லாம் பேசாதீரும், உங்க பெரியப்பா, அந்த வீட்டுக்கு அடுத்த வீட்டை எங்களுக்கு விக்கும்போது, இந்த வீட்டையும் எங்களுக்கு தரேன்னு சொல்லியிருக்காரு, நீங்கன்னு இல்ல வேற யாரு அந்த வீட்ட வாங்கினாலும் நான் விவகாரம் பண்ணுவேன், அவ்வளவு தான் சொல்லுவேன்"

"பெரியப்பா அப்படி சொல்லியிருந்தா நீங்க அவர் கிட்டத்தான் பேசணும்,"

"அவர் கிட்ட நாங்க பேசிக்கிடுதோம், நீங்க இதிலேருந்து விலகிக்கிடுங்க, அவ்வளவு தான்"

"நான் இந்த வீட்ட வாங்கி பேங்குல அடமானம் வச்சு என் தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கலாம்னு இருந்தேன், நீங்க அந்தப் பணத்தைக் குடுத்துட்டு வீட்ட வாங்கிக்குங்க"

"இந்த மாதிரி அர்த்தமில்லாத பேச்சு எங்கிட்ட பேசாதீரும், நீரு விலகிக்கிடுறது தான் நல்லது, மீறி வாங்கினா, வந்து இருக்க விட மாட்டோம்,"




அம்பாசமுத்திரம் அருகே ரெங்கசமுத்திரம் என்ற சிறு கிராமம் தான் என் சொந்த ஊர். ஊரை விட்டு, என் கல்லூரி படிப்பு செலவுக்காக குடியிருந்த வீட்டை விற்று, குடும்பத்தோடு இடம் பெயர்ந்து, சென்னை வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. துடிக்கும் மனதை சமாதானப்படுத்த, ஆண்டுக்கு ஒரு தடவையாவது ஊரைச் சென்று பார்த்து வரும் ஒவ்வொரு முறையும், அங்கே சொந்த வீடு என்றொரு பிடிப்பு இல்லாதது மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும்.


சென்ற வருடம் என் ஒன்றுவிட்ட பெரியப்பா வீட்டை விற்க முன்வந்த போது, ஒரு வழியாக இந்த வருத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று தோன்றியது. இரண்டு தவணைகளில் பணமும் கொடுத்து முடித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அப்படி இப்படியென்று நாட்கள் ஓடி, ஒரு வழியாக, பத்திரம் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம் என்று கடந்த வாரம் ஊருக்கு புறப்பட்டுப் போன அப்பா, இரண்டாம் நாள் திரும்பி வந்து சொன்னது “நமக்கு அந்த வீடு வேண்டாம்டா, பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை பண்றான்”



கடந்த வெள்ளிக்கிழமை அவசர பயணமாக ஊருக்கு புறப்பட்டேன். கல்லிடைகுறிச்சியில் இருக்கும் பெரியப்பாவை போனில் கூப்பிட்டு வந்திருப்பதை சொன்னபோது, ”நான் மதுரைக்கு வந்திருக்கேன், திரும்பி வர நாலு நாள் ஆகும், நீ அங்க போய் அவங்கிட்ட எதுவும் பிரச்சனை பண்ணிடாதே” என்றார். அங்கே போய், பார்த்து பேசிய போது நடந்த உரையாடல்தான் மேலே உள்ளது.


பெரியப்பா கறாராகப் பேசியோ, வேறு வழியிலோ பிரச்சனையை தீர்த்து வைப்பதாகத் தோன்றவில்லை.


நானோ, என் அப்பா, அம்மாவோ வருடத்திற்கு ஒன்றிரண்டு முறை தான் ஊருக்கு சென்று பார்க்க முடியும்



வீடு அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்று ஆகிவிட்டால், நாங்கள் இங்கே இருக்கும் போது, அவர்கள் அங்கே வீட்டை ஏதாவது செய்து விடுவார்களோ (ஓட்டை பிரிப்பது, சுவற்றை இடிப்பது) என்ற பயமும் உள்ளது


இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?


துணிந்து வீட்டை வாங்கி விடலாமா? அல்லது வேண்டாம் என்று பெரியப்பாவிடம் சொல்லி பணத்தை திருப்பி வாங்கி விடலாமா?


எங்களை மிரட்டிப் பேசிய அவர்கள் மேல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா? (இந்த உரையாடல், அவர் வீட்டினுள் நடந்தது, சாட்சிகள் ஏதும் கிடையாது)


வீட்டை வாங்கிவிடுவதென்றால், விவகாரம் ஏதும் நடக்காது இருக்கவும், அவர்களிடமிருந்து வீட்டைக் காப்பாற்றவும் சட்ட நடவடிக்கைகள் ஏதாவது முன்கூட்டியே எடுக்க முடியுமா?


விபரம் அறிந்தவர்கள் ஆலோசனைகள் சொல்லி உதவுங்கள்


நன்றி
சங்கர்

Wednesday, March 24, 2010

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??

நான் ஏன் கவிதை எழுத கூடாது....??




முன்தினம் இரவு தூங்கும் போது நானே எனக்கு கேட்ட கேள்வி இது.அது நான் ஏன் கவிதை எழுத கூடாது?? "டேய் ஜெட்லி ஏற்கனவே உன் அக்கப்போர் தாங்கல இதுல கவிதை வேறயா..." என்று நீங்கள் நினைப்பது
எனக்கு புரியாமல் இல்லை.இருந்தாலும் கடந்த ஒரு நாளா என் அறை முழுவதும் கவிதை கவிதை என்று சுவர்களில் இருந்து சத்தம் வருவது போல் ஒரு பிரம்மை!!

நான் இதற்கு முன் சில மாதங்கள் முன்பு ஒரு கவிதை எழுதினேன்.அதை கவிதை என்று கடைசி வரை என் நண்பன் ஒத்துகொள்ளவில்லை.ஏதோ ஏதோ பல்கலைகழகத்துக்கு எல்லாம் அங்கீகாரம் கிடைத்த போதும் என் கவிதைக்கு அங்கீகாரம் அப்போது கிடைக்கததால் நான் கவிதை எழுதுவதை
விட்டுவிட்டேன்.இதோ அந்த கவிதை உங்கள் பார்வைக்கு....
யாரும் டென்ஷன் ஆகாதிங்க...பீ கூல்....

***********************************

நான் அவளை பார்த்தேன்


அவள் என்னை பார்த்தாள்


பூ போல் சிரித்தாள்


செல்லமாய் வெட்கப்பட்டாள்


என் உடம்பு சிலிர்த்தது


அவள் அருகில் சென்றேன்


பின்பு தான் புரிந்தது


அவள் ஹெட் போனில் யாருடுனோ


பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........!!

***********************************************

குரு கில்மானந்தாவின் யோசனை:

தீடிர்னு கவிதை எழுதணும் என்ற வீபரித ஆசை வந்தவுடன் என் குரு கில்மானந்தாவிடம் ஆசி வாங்க சென்றேன்.அப்போது தான் அவர் K.F.STRONG பீரை தன் வாயால் ஓபன் செய்தார். நான் கவிதை எழுத போறேன் சாமி என்றேன்.அவர் காதில் வாங்கினாலும் முகத்தில் எந்த வித ரியாக்சன் காட்டாமல் பீரை க்ளாசில் ஊற்ற ஆரம்பித்தார்,பீர் பொங்கி க்ளாசை
விட்டு வழிந்தது.அப்போதும் குரு நிறுத்தாமல் ஊற்றி கொண்டே இருந்தார்.....

அப்போது நான் "சாமி கிளாஸ் தான் புல் ஆச்சி இல்ல.... அப்புறம் ஏன் இன்னும் ஊத்திக்கிட்டே இருக்கீங்க?"என்றேன்.

உடனே குரு "அது போல தான்ப்பா நீ கவிதை எழுத போறேன்னு சொல்ற ஆசையும்....பீர்ல இருந்து வர நுரை ஒரு நிமிஷம் கூட க்ளாசில் இருக்காது...அது போல தான் உன் ஆசையும்....தயவு செய்து மக்களுக்கு நல்லது செய்றதா நினைச்சு அந்த கவிதை எழுதனும்னு நினைக்கிற அந்த எண்ணத்தை விட்டுரு ஜெட்லி...." என்றார்.

"முடியாது சாமி.....நான் ஆசைப்படறது தப்பா...??" என்று கேட்டேன்.

உடனே குரு "ஆசைப்படறது தப்பு இல்ல.அதுக்குனு அளவு இருக்கு.இதை தான் ஸ்ரீ ஸ்ரீ செல்வராகவா சுவாமிகள் 'என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா' என்று மனிதனின் ஆசையின் அளவுகோலை மிக அழகாக சொன்னார்" என்று முடித்தார்.

சரி இனிமே இவர்கிட்ட யோசனை கேட்டா வேலைக்கு ஆகாது என்று அங்கிருந்து கிளம்பினேன்!!


****************************************************************

பலா(ன)பட்டறை கவிஞர் ஷங்கர் அவர்களின் யோசனை:

"அண்ணே கவிதை எழுதணும் ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க"
என்று அண்ணன் பலாபட்டறை ஷங்கரிடம் கேட்டேன்....

"முதல்ல நாம கவிதைக்கு வைக்கிற டைட்டில் பேரே புரியக்கூடாது...அப்புறம் கவிதையே புரியக்கூடாது....."
என்றார் அவர்.

"என்ன அண்ணே கவிதை புரியலைனா எப்படி.....?" என்றேன் நான்.

"தம்பி...கவிதை புரிஞ்சா அந்த பதிவோட முடிஞ்சு போய்டும்...
ஆனா புரியலைன்னு வை இன்னொரு பதிவு போட்டு விளக்கவுரை கொடுத்தடலாம்" என்று பயங்கர ஐடியா கொடுத்தார்.

"என்ன இருந்தாலும்?" என்று இழுத்தேன்


"என்ன ஐடியா பிடிக்கலையா??இல்ல ரெண்டு பதிவோட கவிதை முடிஞ்சிடுமோன்னு...பயப்படுறியா அவ்ளோதானே, கவலைய விடு, அப்படியே இத தொடர நான் அழைப்பவர்கள்னு ஒரு 10 பேர கூப்பிட்டுவிடு.." முடிக்கும் முன்பே நான்


"என்னது கவிதைய தொடர்றதா ரொம்ப டெர்ரர்ரா இருக்கேண்ணே.."
என்றேன் விழிபிதுங்க.....


"அட வரலாறு முக்கியமில்லையா?? இது வரைக்கும் யாராவது கவிதை தொடர்பதிவுன்னு போட்டுருக்காங்களா பாரு..இதுக்கு தான் ஊருக்குள்ள என்னை மாதிரி ஐடியா'மணி' வேணும்ங்கறது" என்றார் ஐடியாவாக

"ஆஹா செம ஐடியாணே இது" என்று அங்கிருந்து கிளம்பினேன்!!

ஷங்கர் அண்ணன்கிட்ட பேசிட்டு வந்த அன்னைக்கு நைட் குப்புற
மற்றும் மல்லாக்க படுத்து யோசித்ததில் ஒரு கவிதை தோணிச்சு
அது இதோ........

(caution: following content may sema mokkai or marana mokkai...)

மேல பறக்குது காகா
ரோட்டில் பொண்ணு போற சோக்கா
எண்ணெய் வச்சா தலைக்கு போடணும் சீக்கா
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யாக்கா
நான் மரம் ஏறி பறிச்சா எனக்கு மூணு பழம் தரியாக்கா!!



இந்த கவிதையை எங்க பக்கத்துக்கு வீட்டு காது மற்றும் கண் பொக்கையான கிழவிக்கு படித்து காட்டியதில் படுத்த படுக்கை ஆகி விட்டார் என்பதும் மேலும் இந்த கவிதையை ரெண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் சேர்க்க சொல்லி டி.ஆர் தலைமையில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த போறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


கவுண்டர் ஸ்டைலில் என் மனம்
"நான் கவிஞர்ங்கோ....ஐயோ நான் கவிஞர்ங்கோ...
நானும் கவிஞர்ங்கோ....." ஹி ஹே ஹே ஹி......


************************************************

அடுத்து வரும் வாரங்களில் வர போகிற தலைப்புகள்....

# நான் ஏன் சாமியார் ஆக கூடாது??

# நான் ஏன் மாஸ்டர்(டீ,குங்க்பூ,கராத்தே,பரோட்டா) ஆக கூடாது??


விரைவில்.....


தொடர்ந்து நான் கவிதை எழுத வேண்டாம்னு நீங்க நினைச்சா
கண்டிப்பா ஒட்டு போடுங்க.....பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!

ஜெட்லி....