Monday, November 30, 2009

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.

முக்கிய செய்திகள்:

# "கற்பழிப்பு காட்சியில் நடிக்க பயப்படமாட்டேன்,தொடர்ந்து
நடிப்பேன்"நடிகை கீர்த்திசாவ்லா பேட்டி.(இதுவல்லவோ வீரம்!)

சமீபத்தில் திரைக்கு வந்தவுடன் திரையை விட்டு வெளியேறிய
ஸ்வேதா என்ற படத்தில் கீர்த்திசாவ்லா அவர்கள் நன்றாக
திறமை காட்டியதாக ஊர் முழுக்க பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட போனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள படத்தை
எடுத்து விட்டார்கள்(ச்சே...).



மேல உள்ளே பேட்டி படம் வெளிவந்த நான்கு நாள் கழித்து
கீர்த்திசாவ்லா கூறியதாம்.(எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம்
செய்றாங்க!!).ஏன் இது மாதிரி ஒரு விளம்பரம் ஏதோ நான்
நடித்து தேசிய விருது வாங்குவேன் என்றாள் பாராவயில்லை
ஆனால் கீர்த்தியோ கற்பழிப்பு காட்சியில் தொடர்ந்து நடிப்பேன்
என்கிறார்...என்னமோ போங்க.....

ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).

******************************************
விளம்பர இடைவேளை:

(பி.கு: தற்புகழ்ச்சிக்கு அல்ல)

போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.அப்புறம் மப்புசாமி சாரி குப்புசாமி அப்படின்னு
ஒருத்தர் நெதர்லாந்தில் இருந்து மெயில் அனுப்பி தன்
பொது அறிவு வளர நானும் ஒரு காரணம் என்று எழுதி
இருந்தார், நேரம் வரும் போது அந்த மெயில் உங்கள்
பார்வைக்கு வரும்.ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.

***********************************************

பயம் அறியான் அப்படின்னு ஒரு படம் வரபோகுது அதில்
தற்போது உதயதாரா அவர்கள் கதாநாயகி வேஷம் கட்டுகிறார்.
புதுமுக நடிகர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நமது
பொல்லாதவன் புகழ் கிஷோரும் இருக்கிறார் சரி இது அல்ல
விஷயம்....

சில பட ஸ்டில்கள் என்னை ஈர்த்தன இதோ உங்கள்
பார்வைக்கும் எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல...(ஏன்டா ஜெட்லி அவர் நாக்கு அவர்
நீட்டுராறு உனக்கு என்னடா என்று நீங்கள் கேட்பது சரிதான்
).

மனதை ஒரு நிலைப்படுத்தும் கேள்வி:

இந்த ரெண்டு படத்துக்கும் என்ன வித்தியாசம்??




ஹீரோ ஒரு படத்தில் இடது புறம் இருக்கிறார் இன்னொரு
படத்தில் வலது புறம் இருக்கிறார் என்று தயவு செய்து
சொல்லாதிங்க...படத்தை நல்லா பாருங்க வேறு வேறு
பெண்கள்.இதில் இருந்து என்ன தெரியுது கதாநாயகியை
மாற்றி விட்டார்கள்.(கதாநாயகி மாறினாலும் அதே சீனை
திரும்பவும் படம் எடுத்த இயக்குனர் வாழ்க என்று ஹீரோ
மனதில் நினைத்திருப்பார்!!)

********************

புடவையில் முமைத்கான்:

திரையில் எப்போதும் கர்சீப்பை விட சிறியதாக ஆடையை
அணிந்து வரும் முமைத்கான் பவுர்ணமி நாகம் என்ற
டப்பிங் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கு முழு
நீள புடவையுடன் வந்து நம்மை கண்ணீர் கடலில்
ஆழ்த்தினார்.



அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

****************************************

இந்த வார பொது அறிவு கேள்விகள்:


# தற்போது கலைமாமணி விருது பெற்ற தளபதி யார்?

A. புரட்சி தளபதி விஷால்

B. இளைய தளபதி விஜய்

C. சின்ன தளபதி பரத்

(மினி தளபதினு யாராவது அடுத்து வர போறாங்க!!)

# அடுத்த சிம்ரன் என்று இயக்குனர் ஷங்கர் யாரை கூறினார்??

A.பறவை முனியம்மா

B.தமன்னா

C.சுனைனா

பதில் தெரிந்தால் 55540 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டாம்
மீறி அனுப்பினால் உங்கள் கைப்பேசியில் மூன்று ரூபாய்
போய் விடும்.பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடவும்....

நன்றி:
indiaglitz.com

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, November 27, 2009

யோகி?? - விமர்சனம்

யோகி ??



இயக்குனர் அமீரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் யோகி.
சுப்ரமணியன் சிவா கதையிலும் இயக்கத்திலும் அமீரின்
வசனத்திலும் திரைக்கதையிலும் இன்று உலகம் முழுவதும்
ரிலீஸ்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதாலும்
அமீரின் தயாரிப்பு என்பதாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு
இருந்தது உண்மை.ஆனால் யோகி எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா??

பாசம் கிடைக்காமல் கொலை மற்றும் கொள்ளை
செய்யும் மனிதனாக அமீர் அவன் வாழ்வில் தீடிர்னு
ஒரு குழந்தை வந்தா என்ன ஆகும் இது தான் கதை.
அமீர் திரையில் தோன்றி முதல் பாடலில் குத்து மற்றும்
பரத நாட்டிய டான்ஸ் எல்லாம் ஆடுகிறார்.அமீரின்
கூட்டாளியாக பாடலாசிரியர் சிநேகன் ஒன்னும் பெருசா
வேலை இல்லை.மதுமிதா தன் பங்கை சிரிப்பாக செய்து
இருக்கிறார்.வின்சென்ட் அசோகன்,சுவாதிக்கா எல்லாம் வந்து
போகிறார்கள்.


ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.அமீரின் வசனம் படத்துக்கு பெரிய
ப்ளஸ்.முதல் பாதி முழுவதும் அமீரின் கேரக்டர் என்னவென்று
புரியவில்லை ஒரு வேளை சினிமா ரவுடி எல்லாமே இப்படிதான்
இருப்பாங்களா என்று டவுட் வருகிறது.ஒபெநிங் சீன் கொஞ்சம்
வித்தியாசமா இருந்தது.

காரில் குழந்தை கிடைத்தவுடன் அமீரின் தீடிர் மாற்றம் நமக்கு
விளங்க வில்லை.குழந்தையின் அழுகையை நிறுத்த அவர்
செய்யும் குறும்புகளை மற்றும் ரஜினி பாட்டுக்கு டான்ஸ்
ஆடுவது எல்லாம் ஒரு பத்து வருஷம் முன்னாடியே பார்த்த
காரணத்தால் சலிப்பு ஒன்றே ஏற்படுகிறது.அது ஏங்க புள்ளை
ரவுடி ஆனா அப்பாவை மட்டும் காரணம் சொல்றாங்க??
பிளாஷ்பேக் காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை அமீரின்
மேல் பரிதாபத்தையும் வரவழைக்கவில்லை என்பது மட்டும்
உண்மை.

படம் திருவான்மியூர் ஏரியாவில் நடப்பதாக காட்டுகின்றனர் அதுவும் நான் படம் பார்த்த ஜெயந்தி தியேட்டர் பெயரை கூட ஒரு சீனில் சொல்வார்கள்.ஆனால் திருவான்மியூரில் இருக்கும் அமீர் குழந்தையுடன் சிட்டி சென்டர் சென்று பர்ச்சேஸ் செய்து விட்டு சத்யம் சினிமாஸ் பாத்ரூம்க்கு போறது கொஞ்சம் ஓவர்.

கஞ்சாகருப்பு செம மொக்கை ,ஈ படத்தில் வருகிற ஜீவாக்கும்
அமீர்க்கும் ரெண்டு வித்தியாசம் தான் ஜீவா ஈ படத்தில் யாரையும்
கொன்று விட்டு கொள்ளை அடிக்க மாட்டார் யோகியில் அமீர்
கொலை செய்ய தயங்காதவர். ஜீவா ஈயில் பாசத்துக்கு எல்லாம்
ஏங்க மாட்டார் ஆனால் இதில் அமீர் குழந்தை வந்தபின் எதற்கெடுத்தாலும் கண்கலங்கி விடுகிறார் பின்னணி வேற அந்த வயோலின் இசை(முடியல!).

குழந்தையை ஊரே தேடுமாம் ஆனா நம்ம அமீர் அண்ணன்
மட்டும் குழந்தையை பையில் அல்லது கூடையில் வைத்து அடிக்கடி மதுமிதா வீட்டுக்கு போய் குழந்தைக்கு பால் ஊட்ட சொல்வாராம்,இதை வேற கடைசியில் போலீஸ் விசாரணையில் தான் கண்டு பிடிப்பார்கலாம்.காதுல ஒரு முழம் சுத்தலாம் ஒரு பூக்கூடையை சுற்றினால் எப்படி.அமீரின் இயக்கி நடிக்காத அடுத்த படைப்பான கண்ணபிரானை காண துடிக்கும் அமீரின் ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஜெட்லி டவுட்:

# அது ஏன் கிளைமாக்ஸ் சீன் மட்டும் கட்டி முடிக்கப்படாத
பில்டிங்ல வைக்கிறாங்க?? அதுவும் மொட்டை மாடியில்
போய் ஏன் நிக்கிறாங்க??. பதில் தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.

தியேட்டர் ரசிகர்கள் கமெண்ட்ஸ்:

# நல்லதானே படம் எடுத்துட்டு இருந்தார்..ஏன் இப்படி??

# கடைசியில் HULK மாதிரி கத்தி பைட்லாம் ஓவர் மச்சி.

இந்த விமர்சனம் பல பேரை சேர ஒட்டு போடவும் முக்கியமா
கமெண்ட் போடுங்க.

உங்கள்
ஜெட்லி சரண்.

Thursday, November 26, 2009

ஓர் இலக்கிய திறனாய்வு

நீங்கள் தமிழ்வழி கல்வியில் உங்கள் பள்ளிக்காலத்தை கழித்திருந்தால், உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய திறனாய்வு என்றொரு விஷயத்தை தமிழ் இரண்டாம் தாளில் கடந்து வந்திருப்பீர்கள். பயின்ற வகுப்பையும் அவ்வாண்டின் பாடத்திட்டத்தையும் பொறுத்து "செவ்வாழை"யையோ, "குறட்டை ஒலி"யையோ, "முள்முடி"யையோ கொத்துக்கறி போட்டிருப்பீர்கள். இதோ மீண்டுமொரு அரிய வாய்ப்பு. ஒரே வேறுபாடு, நீங்கள் ஆராயப்போவது கதையோ கவிதையோ இல்லை, ஒரு நகைச்சுவை துணுக்கு. ஆரம்பிக்கலாமா?

இரண்டு நாட்களாய், வடகிழக்கு பருவமழை போலவே, வருவதும் போவதுமாய் போக்கு காட்டிக்கொண்டிருந்த காய்ச்சல் முழுவீச்சில் தொடங்கியதாலும், அலுவலகத்தில் ஏசி அதிகமாயிருந்த காரணத்தாலும் சீக்கு வந்த கோழிபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ரயிலில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தேன். முன்னொருமுறை இதுபோன்றதொரு சூழலில் இதேபோல் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தபோது, ஒரு பெண்ணிடம் கொண்ட மோகத்தால் இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிட்டு அடுத்ததில் இறங்கி, அதற்குப்பின் வேருவண்டியும் இல்லாத காரணத்தால் ஐந்து கிமீ நடந்த அனுபவம் இருப்பதால், தூங்க விடாத இரைச்சலாக இருக்கட்டுமென பண்பலையை ஆன் செய்து handfreeயை காதில் வைத்தேன்.அலைவரிசை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருந்தபோது காதில் விழுந்தது ஒரு முத்து. இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையென சுஜாதா விருது கொடுத்திருக்கக் கூடிய அந்த ரத்தினம் இதோ.



"நீங்கள் அடுத்து கேட்கப்போவது இளையதளபதி விஜய் நடித்த வில்லு என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்திலிருந்து ஓர் அழகான, இனிமையான பாடல்"

இங்கே துவங்குகிறது உங்களுக்கான சவால், மேலே இருக்கும் வரியில் அடிக்கோடிடப்பட்டிருக்கும் எந்த வார்த்தை அதிகபட்ச நகைச்சுவை உணர்வைக் கொண்டிருக்கிறது? எந்த வார்த்தை இந்த வாக்கியத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துகிறது? உங்கள் இலக்கிய திறனாய்வை பின்னூட்டத்தில் சமர்ப்பிக்கலாம். மிகச்சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு முதல் பரிசாக, வெளிவர இருக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தின், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ஒன்று வழங்கப்படும். அந்தக் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் கம்பெனி சார்பில் புக் செய்யப்படும் என்பதையும் உங்களுக்கு ஒரே ஒரு டிக்கெட்தான் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் (தற்கொலை செய்துகொள்ள தனியாய்தான் செல்ல வேண்டும்). இரண்டாம் பரிசாக வில்லு மற்றும் குருவி திரைப்படங்கள் அடங்கிய DVD வழங்கப்படும். மூன்றாம் பரிசாக என்ன கொடுக்கலாம் என்பதையும் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம்.





இந்த ஒற்றைவரி தந்த உற்சாகத்தாலும், புதியதொரு இலக்கிய படைப்பை உங்களுக்கு வழங்க ஒரு வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தாலும், கொதிக்கும் உடம்பையும் மறந்து சைக்கிளை உருட்டியபடி ஸ்டேஷனிலிருந்து வீடுவந்து கொண்டிருந்தபோது, Z போல் வளைத்து வளைத்து ஓட்டிவந்த ஒரு புண்ணியவான் வண்டியை நேரே என் சைக்கிளில் விட்டார், அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் T-Shirt உம், கையில் கட்டியிருந்த கைக்குட்டையும் பார்த்தபோது, அவர் விஜய் ரசிகராயிருக்க கூடிய சாத்தியங்கள் மிக அதிகமென தோன்றியது. யோசனை செய்தபோதே வண்டியில் வந்து மோதுபவர்கள், வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினால் என்ன செய்வது என்ற அச்சம் இருக்கும் போதிலும், நீங்கள் தரப்போகும் ஆதரவின் தைரியத்தில்இப்பதிவை இடுகிறேன்.

டிஸ்கி:
இப்பதிவை படிக்கும் ரசிகர்கள் யாரும் கோபப்படவேண்டாமென்றும், அசல் மற்றும் சிங்கம் திரைப்படங்கள் வெளிவரும்போதும் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, November 25, 2009

2012 இல் நம் நடிகர்கள்.....

2012 இல் நம் நடிகர்கள்.....


2012 என்ற படத்தில் நம் ஊர் நடிகர்கள் நடித்திருந்தால் எப்படி
இருந்திருக்கும் என்ற ஒரு சிறு கற்பனையே இந்த இடுகை.
அந்த படத்தின் ஹீரோவே நம்ம தமிழ் நடிகர் போல் தான்
நடிச்சிருந்தார் என்று நீங்கள் சொல்வது சரி, இருந்தாலும் நம்ம
ஊர் நடிகர்கள் கிட்ட வர முடியுமா.....முக்கியமான விஷயம்

பின்வரும் யாவையும் சிரிக்க மட்டுமே தயவு செய்து சிந்திச்சுராதிங்க.

முதலில் அஜித்:

அந்த எரிமலை வெடிக்கும் சீனில் நம் தல அஜித் இருந்திருந்தால்


தல அவர்கள்,எரிமலை பந்துகளை பேஸ்பால் மட்டையால்
அடித்து திரும்பி எரிமலைக்குள்ளே அனுப்புகிறார்.கடைசி
எரிமலை பந்தை காலால் நிறுத்தி அதன் பின் அந்த எரிமலை
பந்தில் சிகரட் பத்த வைக்கிறார்.அப்புறம் வழக்கம் போல்
பேஷன் ஷோவில் நடப்பது போல் திரையில் நம்மை பார்த்து
நடந்து வருகிறார்.(என்னது அதே கருப்பு கலர் கோட்டு பின்னாடி
பில்லா பாட்டா??).


சூர்யா:

சூர்யா இதுல கை குழந்தையா வர்றாரு... ஆமா ஆமா அதே
ஒட்டு வேலை தான்.1990 ல கை குழந்தையா இருக்கும் போதே
வீட்டை விட்டு ஓடி போயிடுறாரு ஸாரி தவழ்ந்து போயிடுறாரு.
அப்புறம் 22 வருஷம் கழிச்சு அவருக்கு 23 வயசு ஆயிடுது.
படத்துல அந்த கண்ணாடி பில்டிங் ஒன்னு விழுமே அதை
நம்ம சூர்யா தாங்கி பிடிக்கிறாரு அங்கே தான் சமீராரெட்டியை பார்க்கிறார்,அப்புறம் என்ன லவ்ஸ் தான் ரோமென்ஸ் தான்
உலகம் அழிஞ்ச அவங்களுக்கு என்ன....


விஷால்:

நம்ம புரட்சி தளபதி விஷாலுக்கும் எதிர் வீட்டில் இருக்கும்
ஸ்ரேயாவுக்கும் லவ்ஸ்.அப்போதான் நிலநடுக்கும் வருது.
படத்தில் சூப்பர் மார்க்கெட் ரெண்டாக பிளக்குமே அது போல்
விஷால் வீட்டுக்கும் ஸ்ரேயா வீட்டுக்கும் இடைய உள்ள
ரோட் பிளந்து விடுகிறது.அப்ப தான் நம்ம விஷால் மண்ணு
கூட ஒரு அரைமணி நேரம் மொக்கை போட்டு பேசுறார்.
( எ.கா- தோரணை கிளைமாக்ஸ்) விஷாலின் மொக்கை
தாங்காமல் உடனே தானாகவே பிளந்த ரோட் ஒட்டிகொள்கிறது
அப்புறம் என்ன பாட்டுதான்.



விஜய்:

விஜய் கப்பலில் முட்டிக்கு கீழ் ஒரு கர்சீப் கட்டி கொண்டு
தலையில் ஒரு தொப்பி போட்டு கொண்டு எதிரிகளுக்கு
தெரியாமல் மாறுவேஷத்தில் இருக்கிறார்.அப்போ தான்
சுனாமி வருது.2012 படத்தில் ஒரு தாத்தா சுனாமியை
கப்பலில் வெளிய வந்து பார்ப்பாரே அது போல் நம் விஜய்
வந்து பார்க்கிறார்.(என்னது பஞ்ச் டயலாக்கா??) சுனாமிக்கு
எல்லாம் பஞ்ச் உட்ட எப்படி.சுனாமி கப்பல் கிட்டே நெருங்கும்
போது சுசுன்னு ஊதுகிறார் அவளோதான் சுனாமி அப்படியே
திரும்பி போய் விடுகிறது.
(போவாதுனு சொல்றிங்களா ?? )


டி.ஆர்:

ஸ்பேஸ் ஷிப் ஏறி தப்பிக்க டி.ஆர் வருகிறார் அப்போது அவரை
காவலாளி தடுத்து நிறுத்துகிறார்.

டி.ஆர்: நான் யார் தெரியுமா?முன்னால் சிறுசேமிப்பு துறை
தலைவர் என்னை முதல்ல உள்ள விடுயா...

காவலாளி: மந்திரிகளே பின்னாடி தான் நிக்குறாங்க நீங்க
அவுங்க பின்னாடி போய் நில்லுங்க.

டி.ஆர்: u r appressing suppressing deppressing supervising a tamilian...
நான் தமிழன்டா பச்சை தமிழன்டா...

காவலாளி: இப்போ யாரு இல்லன்னு சொன்னங்க??

டி.ஆர்: நான் மூச்சை பிடிச்சு பேசுனா நீ என்னையே கலாயிக்கிரியா!
சரி விடுப்பா நான் சால்ட் கொட்டா சரசு கிட்டயே போறேன். என்று திரும்பி போகிறார்.மும்தாஜ்க்கு போன் போட்டு
எங்கே இருக்கே அடுத்து நான் வீராசாமி பார்ட் -2 எடுக்க போறேன் நீ தான் நாயகி.நம்ம படம்தான் 0001 வருஷ பொங்கலுக்கு முதல் ரிலீஸ்.

சரத்குமார்:

சரத்குமார் கட்சி அலுவலத்தில் இருந்து நமக்கு வந்த கடிதம்
தேதி 10.12.12.

20.12.12 அன்று உலகம் அழியும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
இதை எங்கள் கட்சி மென்மையாக கண்டிக்கிறது.என் படம்
ஜக்குபாய் 20.12.12 அன்று ரிலீஸ் தேதி அறிவிக்கபட்டு ஒரு
வருடம் ஆகிறது.என் வளர்ச்சியை பிடிக்காத யாரோ பீதியை
கிளப்பி விடுகிறார்கள்.நாங்க கண்டிப்பா 0004 ஆம் வருஷம்
ஏதோ ஒரு நாட்டில் அல்லது கிரகத்தில் ஆட்சியை பிடிப்போம்.

கமல்:

தேதி: உலகம் அழியும் கடைசி நாள்.
நேரம்: சுனாமி வரும் நேரம்
.

அசின்: ஏன் உலகம் அழியுது அழியுதுனு சொல்றேள்..

கமல்: நான் அழியனும்னு சொல்லல அழிஞ்சா நல்ல இருக்கும்னு
தான் சொன்னேன்.


உங்களுக்கு பிடிச்சா கண்டிப்பா ஒட்டு போடுங்க , கமெண்ட்
போட்டால் சந்தோசம்.

உங்கள்
ஜெட்லி சரண்.

Monday, November 23, 2009

உங்களோட கொஞ்சம் பேசணும்

அலுவலகத்தில் மும்மரமாக வேலை (!!) செய்து கொண்டிருந்தபோது, இன்டர்காம் கத்தியது, யாரென்று பெயரை பார்த்தபோது, அவள், குறுக்கும் நெடுக்கும் நடக்கும் போது அவள் அரைக்கண்ணாலும் (எப்போதாவது), நான் முழுக்கண்ணாலும் (எப்போதும்) பார்ப்பது தவிர, இதுவரை ஒரு வார்த்தை பேசியதில்லை, வேறு வேறு துறைகளில் இருப்பதால், பேச அவசியமும் ஏற்பட்டதில்லை. இப்போது எதற்கு அழைக்கிறாள், அழைப்பதுஅவள்தானா அல்லது வேறு யாரும் அவள் மேஜையிலிருந்து அழைக்கிறார்களா, இப்படியெல்லாம் எண்ணங்கள் ஒரு நொடிக்குள் மனதில் கடந்துபோக, தொலைபேசியை எடுத்தேன்.




நான் : ஹலோ, சங்கர்

அவள் : நானதான் பேசறேன்,

நான் : சொல்லுங்க,

அவள் : உங்க கூட கொஞ்சம் பேசணும்,

நான் : பேசலாமே, இப்போ நான் Free (வெட்டி) தான்,

அவள் : போன்ல இல்லை, நேர்ல பேசணும்,

நான் : சரி, நீங்க என் இடத்துக்கு வாங்க,

அவள் : ஆபிஸ் விஷயம் இல்லை, கொஞ்சம் பர்சனலா பேசணும், வெளியில எங்கேயாவது பேசலாம்,

நான் : சரி, எங்கே பார்க்கலாம்னு நீங்களே சொல்லுங்க,

அவள் : பக்கத்து பில்டிங்ல இருக்கிற சாப்பாட்டு நீதிமன்றத்துல (Food court) பார்க்கலாம்,

நான் : ஆமா, என்ன விஷயம்னு சொல்லவே இல்லியே,

அவள் : இப்போதான் கேக்கணும்னு தோணிச்சா?

நான் : நீங்களே சொல்லுவீங்கன்னு காத்திருந்தேன் (நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க),

அவள் : நேர்லயே சொல்றேன்,

டொக் (ஒருகாலத்துல, நாங்கல்லாம் ராஜேஷ்குமார் விசிறிகள்)




மதியம் ஒரு மணி, சோத்துக்கடை, இருவரும் எதிரெதிர் இருக்கைகளில்,

நான் : சொல்லுங்க, என்ன விஷயம்,

அவள் : நான் சொல்றது இருக்கட்டும், நான் என்ன பேசப்போறேன்னு எதிர்பார்த்து வந்தீங்க?

நான் : நான் எந்த விஷயத்திலும், எதையும் எதிர்பார்ப்பது இல்லைங்க,

அவள் : பொய் சொல்லாதீங்க, சும்மா சொல்லுங்க

நான் : எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை, ஆனா, சில யூகங்கள் இருந்தது,

அவள் : என்ன யூகங்கள்?

நான் : "நீங்க தானே பிரபல (!!!) பதிவர் சங்கர், உங்க பதிவுகள் (மொத்தமே பத்து தான்) எனக்கு ரொம்ப பிடிக்கும், நான் உங்க விசிறி," அப்படின்னு சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்,

அவள் : இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? அடுத்து என்ன.

நான் : "நேத்து நீங்க ஒரு புத்தகம் வச்சிருந்தீங்களே, அதை எனக்கு தர முடியுமா, ரொம்ப நாளா படிக்கணும்னு ஆசை,"

அவள் : நீங்க நேத்து ஆபிஸ் வந்தீங்களா இல்லையான்னே எனக்கு தெரியாது, இதுல புத்தகத்த வேற கேக்குறாங்களா? அடுத்து,

நான் : "உங்க சொந்த ஊர் அம்பாசமுத்திரம் தானே, எங்க ஊரும் அதுதான், எங்க அப்பாவுக்கு உங்க அப்பாவ நல்ல தெரியுமாம், உங்கள வீட்டுக்கு கூட்டிவர சொன்னார்"

அவள் : எங்க அப்பா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த சிங்காரச் சென்னையில்தான் இதுல இதுவேறயா, அப்புறம்,

நான் : வேறென்ன, "உங்க நடை (!) உடை (!!) பாவனை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீங்க மத்தவங்களோட பழகற விதம் என்ன உங்கள நோக்கி ஈர்க்குது (!!!), நீங்க ரொம்ப அழகா (!!) வேற இருக்கீங்க, மொத்ததுல உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"

அவள் : இப்படீல்லாம் வேற நினைப்பிருக்கா, அப்புறம்,

நான் : வேற ஒண்ணும் இல்லீங்க, நீங்களே சொல்லிடுங்க, இதுல ஏதாவது ஒண்ணுதானே?

அவள் : ஒரு புண்ணாக்கும் இல்லை, ஒருவாரமா பதிவு எழுத விஷயம் கிடைக்காம மண்டைய உடைச்சிக்கிட்டிருக்கியே, அதுதான் இப்படி பேசணும்னு கூப்பிட்டா அதையே பில்ட்-அப் பண்ணி ஒரு பதிவா எழுதிரமாட்ட, அதுக்குதான்.


நன்றி
சங்கர்


டிஸ்கி

  • இது கதை மாதிரி இல்லையே, நடந்த விஷயம் மாதிரி இருக்கேன்னு கேட்பவர்களுக்காக "கதை" என்ற லேபிளும், எனக்கு நடந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்னு ஆச்சரியபடரவங்களுக்காக "சம்பவம்" என்ற லேபிளும் தரப்பட்டுள்ளது,


  • பேர் போடாம அவள் அவள்னே சொன்னதுனால எனக்கு தைரியமில்லைன்னு நினைச்சிடாதீங்க, ஒரே நேரத்தில ஏழெட்டு பேர் கண்ணுல வடபடறாங்க (தென்படும்போது, வடபடக்கூடாதா? (நன்றி கசீ சிவகுமார்)) அதுல யாருக்காவது உண்மைலேயே ஏதாவது அபிப்ராயம் இருந்து, நான் வேற யார் பேரையாவது போட்டுரக்கூடாது பாருங்க, அதுக்குதான்.


புகைப்படம் நன்றி : Sulekha.com