Wednesday, September 30, 2009

ரசனைகள் (அல்லது) கிரிவல விவாதம் ஒரு தொடர்ச்சி


வணக்கம், நான் சங்கர், நண்பர்கள் சரவணன் (ஜெட்லி) & சித்து குறிப்பிட்டு இருக்கும், ஒரேபுத்தகத்தை பலமுறை வாசிக்கும், அதே சங்கர் (
http://nee-kelen.blogspot.com/2009/09/blog-post_661.html#comments) (http://nee-kelen.blogspot.com/2009/05/blog-post_31.html), பலமுறை எழுதுவதை பற்றி யோசித்து, சிலமுறை எழுதவும் தொடங்கி சில காரணங்களால் அதை கைவிட்ட blog உறுப்பினர், அந்த சில காரணங்கள்,
  • என் ரசனை மேல் எனக்கு இருக்கும் நம்பிக்கை, அதை பற்றி பேசுவதில் இல்லை
  • எல்லாமே எப்போதோ சொல்லப்பட்டு விட்டது, புதிதாய் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம்
  • நாம் சொல்வது அதே அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற தயக்கம்
  • பல இடங்களில், பல நேரங்களில் தோன்றும் எண்ண சிதறல்களை ஒன்றாய் கோர்ப்பதில் உள்ள சிரமம்
  • எல்லாத்துக்கும் மேலே எனக்கு கேள்வி இல்லாம பதில் சொல்ல தெரியாது (அதாவது கேள்வியும் நானே பதிலும் நானே என்பது இயலாது)
இது எல்லாம் மீறி தைரியத்தை வரவழைத்து எழுத முடிவு செய்து, தொடங்கிவிட்டேன், எதை பற்றி எழுதலாம் என யோசிக்கும்போது, நண்பர்கள்என் ரசனை பற்றி குறிப்பிட்டு இருப்பதால் அதையே எழுதலாம் என முடிவுசெய்தேன். சற்றே நீண்ட பதிவு தான், முதல் முயற்சி, பொறுத்தருளுங்கள்,

முதலில், ஜே ஜே சில குறிப்புகளில் இருந்து சில வரிகள்,

"காலை ஒன்பதரை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது ஜே ஜே அந்த பிச்சைக்காரனை பார்த்தான், முற்றிய தொழுநோயாளியான அவன், கைகளை இயந்திரகதியில் அசைத்து முகத்தில் இரக்க பாவத்தை வரவழைத்து கவனத்தை ஈர்த்து கொண்டிருந்தான், ஜே ஜே யோசிக்க ஆரம்பித்தான், கிழக்கிலும் மேற்கிலும் இது குறித்து சொல்லபட்டிருப்பவை யாவற்றையும் நினைவுக்கு கொண்டு வந்தான், உடலில் சூடு பரவ தொடங்கியது, காது மடல்களில் உஷ்ணம் ஏறி வந்தது, எவ்வளவு நேரம் அப்படியே இருந்தான் என தெரியவில்லை, திடிரென உடலில் ஓர் அதிர்வு, ஹோட்டலின் சுற்றுப்புறத்தில் வந்து விழுந்துவிட்டான், மணி பன்னிரண்டாகி விட்டிருந்தது, எதிரே மேஜையில் நான்கைந்து காலி தம்ளர்கள் இருந்தன, தன் நினைவின்றியே தண்ணீர் குடித்து கொண்டு இருந்திருக்கிறான், அவன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது, அவன் பிச்சைகாரனுக்கு உதவ முடிவு செய்துவிட்டான், 'இதிகாச நாயகர்களும் புராண மாந்தர்களும் வந்திருக்க கூடிய முடிவுக்கு தான் நானும் வந்திருக்கிறேன், ஆனால் அவர்கள் வந்திருக்க கூடிய விதம் வேறு, நான் வந்த வழி வேறு'' என தனக்குள் கூறி கொண்டான்,

வாசலை பார்த்தபோது, அந்த பிச்சைக்காரன் எப்போதோ போய்விட்டிருந்தான்,
ஜே ஜே அவசரமாக வெளியே வந்தான் அவன் போயிருக்க கூடியதாக அனுமானித்து ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஓடினான் ஒரு திருப்பத்தில் உள்ளுணர்வு உந்த சர்ச் சாலையில் திரும்பினான், சற்று தூரத்தில் சாலை மரத்தடியில் தொழுநோயாளியை பார்த்தான், ஆனால் இவன் உடைகள் சற்று சுத்தமாக இருந்தன, இது என்ன அதற்குள் ஓர் அவசர சலவையா என யோசித்தான், இவன் வேறு பிச்சைக்காரன், ஆனால் யாராயிருந்தால் என்ன, உதவுவதாக எடுத்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை, ஒரு முழு வெள்ளி நாணயத்தை எடுத்து அவன் முன் வீசினான், ஒருவேளை விரல்களே இல்லாமலிருந்தால் எப்படி பணத்தை எடுப்பான் என உரைக்க குனிந்து எடுக்க போனான் அப்போது அந்த பிச்சைகாரனின் இடது கால் நீண்டு பணத்தை மண்ணோடு தேய்த்தது,"

இந்த சம்பவத்தை ஜே ஜே பேராசிரியர் மேனனிடம் கூறும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாக இருந்தான், "அவன் தேய்த்து தள்ளியது பணத்தை அல்ல, அவனை சக மனிதனாக கணக்கில் எடுத்துக்கொள்ளாத என்னுடைய அலட்சியத்தை தான், பல புத்தகங்களும் பல நூறு தத்துவங்களும் கடந்து வந்த பின்னும் பழக்கத்தின் தடத்திலேயே மீண்டும் மீண்டும்
மனம் சரிகிறது," என்றான்,"

நண்பர் ஜெட்லி குறிப்பிட்ட கிரிவல விவாதம் முடிந்த பின் நடந்த ஒரு சம்பவம், கோவிலுக்குள் சென்று வெளியே வரும்போது அங்கே ஒருவர் போவோர் வருவோரிடம் எல்லாம் பாக்கெட் சைஸ் படங்களை கொடுத்து கொண்டிருந்தார், பழக்கத்தின் காரணமாக என் கை நீண்டு ஒன்றை வாங்கியது, கொடுத்தவர் பத்து ரூபாய் கொடுங்கள் என கேட்டார், அப்போது தான் அவர் படங்களை அன்பளிப்பாக தரவில்லை விற்பனை செய்து கொண்டிருப்பவர் என புரிந்தது, கடவுள் பக்தி இல்லை என கூறிக்கொள்ளும் நான் ஏன் அந்த படத்தை கைநீட்டி வாங்கினேன் என யோசித்த போது மேலே உள்ள வரிகள் மனதில் ஓடின, திருவண்ணமலையில் இருந்து சென்னை வரும் வரை மீண்டும் மீண்டும் இந்த சம்பவமும் வரிகளும் மனதில் வந்து கொண்டே இருந்தன, இது எளிதில் கடந்து சென்றுவிட கூடிய சிறு சம்பவம்தான் என்றாலும் சுந்தர ராமசாமியின் வரிகள் இதை என்றும் மறக்க முடியாத பாடமாக செய்துவிட்டன.

மேலே உள்ள வரிகள் எழுதும் போது ஜே ஜே சில குறிப்புகள் என் கையில் இல்லை, கிட்டதட்ட ஆறு முறை தொடர்ந்து (அதாவது ஆரம்பத்திலிருந்து முடிவு வரை படித்து மீண்டும் முதல் பக்கத்தில் தொடங்கி படிப்பது) படித்து முடித்து நண்பன் நட்ராஜ்க்கு கொடுத்து இருக்கிறேன், வரிக்கு வரி அப்படியே எழுதாவிட்டாலும் தொண்ணூறு சதம் சுராவின் வார்த்தைகளையே பயன்படுத்தி எழுதி இருக்கிறேன். நான்காவது முறை வாசிக்கும் போது, புத்தகத்தின் இந்த பகுதி என் கவனத்தை ஈர்த்தது,

ரசனை பற்றி பேசும்போது ரசனைக்குரிய விஷயங்கள் பற்றியும் கூற வேண்டும்
, "ஒரு நல்ல படைப்பு என்பது ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையோ அல்லது ஒரு பாறையின் கனத்தையோ மனதில் ஏற்படுத்த வேண்டும்" (எங்கேயோ படித்தது
). அப்படி ஓர் உணர்வை ஏதாவது ஒரு கணத்தில் உருவாக்கும் படைப்பே ரசிகன் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.

மேலே கூறியது ரசனை பற்றி பொதுவான கருத்து என்றாலும் பொதுவான ரசனை என்று ஒன்று இல்லை, அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் (மற்ற எந்த விஷயத்தையும் போலவே!). அது அவரவர் பிறந்து வளர்ந்த சூழலை சார்ந்தே உள்ளது.
எனக்கு மிக சிறந்ததாக தோன்றும் ஒரு நாவல், நண்பர் நட்ராஜ்க்கு அர்த்தமற்ற சொற்குப்பையாக இருக்கலாம். நண்பர் சரவணனுக்கு மொக்கை படமாக தோன்றும் மும்பை எக்ஸ்பிரஸ் (http://nee-kelen.blogspot.com/2009/04/blog-post_16.html ), நான் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்த நகைச்சுவை படங்களில் ஒன்று.


என் செய்கைகளை பற்றி மற்ற யாருக்கும் பதில் சொல்வதை விடவும் எனக்கு நானே சொல்லிக்கொள்ள வேண்டியதை தான் முக்கியமானதாக கருதுகிறேன், என் ரசனை எனக்கு தந்திருக்கும் பெரும்பரிசு இந்த சுயவிமர்சன பார்வைதான். என் ரசனை வெறுமனே படித்து ரசித்து விடுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதிப்பீடு செய்யவும், தவறுகளை மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துகொள்ளவும் உதவுகிறது. ஒரு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்த இடமும் சூழலும் ஒரு புதிய அர்த்தத்தை காட்டும். கவுண்டமணியின், வடிவேலுவின் நகைச்சுவை காட்சியையே ஒவ்வொரு முறையும் அதே உற்சாகத்துடன் நம்மால் ரசிக்க முடிகிறபோது இதுவும் சாத்தியமே.

சில வாரங்களுக்கு முன் விஜய் டிவி நீயா நானாவில் தமிழ்நாட்டில் புத்தக வாசிப்பு குறித்து விவாதம் நடந்தது, தமிழ் வாசிப்பும் ரசனையும் தேவை இல்லை என பேசிய இந்த தலைமுறை இங்கிலீஷ் மீடியம் இளைஞர்கள், (பெரும்பாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள், சங்கம் வளர்த்த செந்தமிழர்கள் சிலரும் கூட), பேசியதன் ஒரு வரி சுருக்கம், 'தமிழ் எங்கள் சோற்றுக்கு உதவுவதில்லை அதனால் எங்களுக்கு அது தேவையில்லை', இதை கூட ஒரு வகையில் ஏற்று கொள்ளலாம், ஆனால் தமிழ் வேண்டும் என பேசியவர்களோ 'தமிழ் எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் ம... ' என்ற ரீதியிலே பேசினர், சிறப்பு விருந்தினராக வந்த பேச்சாளர் (பாரதி பாஸ்கர் என நினைக்கிறேன்) கூறிய, வேறு ஒருவர் கூட குறிப்பிடாத, விஷயம், வாசிப்பு அனுபவமும் அது தரும் இன்பமும் தான், நண்பர்கள் சிலர் கூறும் மது தரும் போதையை விடவும், நல்ல புத்தகத்தின் சில பக்கங்கள் தரும் இன்பம் மிக அதிகம் என்றே என்னால் கூற முடியும், அதிலும் மதுவின் வசப்பட்டபின் தான் யார், எங்கிருக்கிறோம் என்பதையும் மறந்து தன சுய மரியாதையை பற்றி சிறிதும் யோசிக்க முடியாமல் நடு சாலையில் தடுமாறும் நண்பர்களின் உல்லாச சுற்றுலாகளை விடவும், சில வரிகளை படித்து அடக்க முடியாத சிரிப்புடனோ, நீர் தளும்பி நிற்கும் கண்களுடனோ நிமிர்ந்து சக பயணிகளின் ஆச்சர்ய (அல்லது) பரிதாப பார்வைக்கு இலக்காகும் ரயில் பயணங்கள் எந்த வகையிலும் தாழ்ந்ததாய் தோன்றவில்லை.


மீண்டும் ஜே ஜே யிலிருந்து சில வரிகள்,


" ஜே ஜே யின் பழைய கட்டுரை ஒன்றை வாசித்து கொண்டிருந்தேன், அப்போது என் மனதில் தோன்றிய என்னகளை வார்த்தை வடிவில் குறுக்கினால், இரு உணர்ச்சிகள் தான், ஒன்று பயம் மற்றது லகரி.
பயம் ஜே ஜே என்னை, என் உலகத்தை இல்லாமல் செய்துவிடுவானோ என்று, நானோ கனவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவன், அவையே எனக்கு தின்பண்டம், ஆனால் கனவுகள் அவன் கைகளில் சல்லா துணிகளை போல் கிழிபடுகின்றன, காதலியின் புன்முறுவலில் நான் மயங்கி நிற்கும் போது 'இது புன்முறுவல் அல்ல, பொய்' என்கிறான், 'ஆசை உன் மீது அல்ல, குழந்தை பெற்றுக்கொள்ள தான்' என்று தொடரவும் செய்வான் என்றால் நான் என்ன தான் செய்வது,
ஜே ஜே என் மனதில் தோற்றுவித்த மற்றொரு உணர்ச்சி லகரி, எதிர்பாராத இடத்தில் பள்ளத்தாக்கின் விளிம்பை வந்தடைந்தது போன்ற ஆச்சர்யம், அவன் பாஷை ஒரு சவரக்கத்தி, சொல்முறை கவிதை, தாண்டல் வீரன் ஓட்டபந்தயதில் தாவி செல்வது போல் வாக்கியங்களை தாண்டி செளிக்றான், முதல் வாக்கியத்தை வாசித்து இரண்டாவது வாக்கியம் தேடி கிடைக்காமல் நேராக மூன்றாவது வாக்கியத்தை பற்றிகொள்ளும்போது உண்டாகும் உணர்வை தான் மூளையின் நரம்பில் லகரியாக உணர்கிறேன்"


ஜே ஜே யின் எழுத்துக்கள் பற்றி சுந்தர ராமசாமி கூறியுள்ள இந்த வரிகளே என் ரசனைக்கு நான் வைத்துள்ள வரையறை. மற்றொரு விஷயம், நான் எந்த ஒரு படைப்பையும் முன்தீர்மானகளோடு அணுகுவதில்லை, என்னுடைய வாசிப்புகளின் பெரும்பகுதியை சுஜாதா, எஸ் ராமகிருஷ்ணன், கசீ சிவகுமார், மதன் போன்ற சிலரின் பரிந்துரைகளே தீர்மானிக்கின்றன என்றாலும் எந்த புத்தகத்தையும் எப்படியாவது, ஒரு முறையாவது முழுதாய் வாசிப்பது என்ற குறிக்கோளுடனே களம் இறங்குவேன், இல்லாவிட்டால் தூங்க இயலாத ஒரு முன்பதிவில்லா ரயில் பயணத்தில் சாருவின் ஸீரோ டிகிரியை நூற்றி நாற்பது பக்கங்கள் தொடர்ந்து வாசித்திருக்க இயலாது. எனவே நண்பர்களே பார்வையை விசாலமாக்குவோம், ரசனையை வளர்ப்போம், ரசித்ததை பகிர்வோம்.

நண்பர் ஜெட்லி பலமுறை என்னை எழுதும்படி கூறிவந்துள்ளார், அப்போது அவர் சொல்லும் வாக்கியம் "முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைபடாதே" என்பது தான், நான் சிக்ஸர் அடித்தேனா டக் அவுட் ஆனேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்

நன்றி
சங்கர்

Monday, September 28, 2009

பொடிமாஸ்....

பொடிமாஸ்....(28.9.09)


நேற்று பூஜை இருந்ததால் ஒரு ஆறு மணிக்கு பூஜை போட்டு
பதிவர் சந்திப்புக்கு கிளம்பி விடலாம் என்றும் பார்த்தால் செம மழை.மழையால் கடைசியில் எட்டு மணிக்கு தான் பூஜை
முடிந்தது.பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...

************************************

யாரவது தெரிஞ்சா சொல்லுங்க....

ஆயிரத்தில் ஒருவன் எப்போது வெளிவரும்?????

************************************************

ஒரு சில பேர் பழுத்த மரம் தான் கல்லடிப்படும் என்று நம்
முன்னோர்கள் கூறிய கருத்தை தப்பாக எடுத்து கொண்டுள்ளனர்....
அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது ஒன்று மட்டும்
தான் " நம் முன்னோர்கள் பிஞ்சுல பழுத்தவங்களை பத்தி
சொல்லவில்லை".(கண்டிப்பா உள்க்குத்து இருக்கு!).

***********************************************

நண்பரிடம் போனில்...

நான்: மச்சி நாளைக்கு சிதம்பரம் கோவிலுக்கு போறேன்...

நண்பர்: என்னடா தீடிர்னு...

நான்: வேண்டுதல் மச்சி...

நண்பர்: என்ன வேண்டுதல் டா?...

நான்: சிதம்பரம் கோவிலுக்கு போறது தான்...

நண்பர்: சரிடா ...போய்ட்டு வா. நான் அப்புறம் பேசுறேன்.

********************************************

சமீபத்தில் படித்த செய்தி:

தூத்துக்குடியில் குடித்து விட்டு பணியாற்றிய
மதுவிலக்கு ஏட்டுகள் கைது....

***************************************

பொன்மொழிகள்

நீ துன்பப்பட வேண்டுமானால் உன்னை விட
பணக்காரியை மணந்து கொள்.

- மைக்லேட்.

என்னை பொறுத்தவரை மனித தன்மையை அடியோடு
ஒழித்து விட்ட ஆஸ்திகனை விட மனித தன்மையை
பத்திரமாக பாதுகாக்கும் நாஸ்திகனாக இருக்க ஆசைபடுகிறேன்.

- இங்கர்சால்.

************************************

உல்டா விளம்பரம்:(சென்னை சில்க்ஸ்)

எனக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டுக்கு ரொம்ப பிடிக்கும்
என் ப்ரெண்டோட ப்ரெண்டோட ப்ரெண்டுக்கும் பிடிக்கும்
விஜய் மல்லையாவின் கிங்க்பிஷேர் ....
குடியா குடிப்போம்
சைட்டிஷை தள்ளுவோம்....
கடைசியில் வாந்தியும் எடுப்போம்!!


********************************************
மொக்கை மேட்டர் :

தென்னகத்தின் வருங்கால ஸ்பீல்பெர்க் போல எழுதி வரும்
ஒருவர் செம காமெடி இடுகை இட்டுள்ளார்......................
அவர் கூறவது "ஹரி ஒரு அடி முட்டாளான இயக்குனராம்,
சேவல் படத்தில் பிராமணர்கள் திருநெல்வேலி பாஷை
பேசுவார்களாம் அது கூட தெரியாம ஹரி படம் எடுத்து
இருக்குராம்"

(எனக்கு தெரிந்து என் பிராமண நண்பர்கள் இரண்டு பேர்
திருநெல்வேலியை சேர்ந்தவர்கள். அவர்கள் திருநெல்வேலி
பாஷை தான் பேசுவார்கள்)

சேவல் படத்தில பிராமணர் பாத்திரங்கள் அவர்கள் பாஷையை
பேசி இருந்தால் படம் வெற்றி அடைய ஒரு காரணமாக

இருந்திருக்கும் என்ற அரிய கண்டுபிடிப்பை நமக்கு கண்டுபிடித்து
கூறிய பதிவர் சக்திவேல் அவர்களின் பெயரை ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்வோம்.

************************************************
நன்றி

கண்டிப்பா ஒட்டு போட்டு போங்க.....

உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, September 25, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு....(25.9.09)

வாழ்த்துக்கள்:

அழகர் மலை இன்னைக்கு தான் அம்பதாவது நாளை நிறைவு
செய்தது, அந்தோணி யார், சிவகிரி போன்ற படங்கள் நூறாவது
நாளை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது........

***********************************************

கடந்த வாரம் பேப்பரில் படித்த விஷயம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியினர் தங்கள் தலைவரை பற்றி
மலை மலை என்ற படத்தில் தவறான வசனம் வருவதாக
கூறி தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் செய்ய சென்றனர்.
இதிலே என்ன கொடுமைனு பாருங்க அந்த படம் அந்த
தியேட்டரில் ஓடவில்லை.ரைட், அப்புறம் கொஞ்ச நேரம்
கோஷம் போட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்களாம்.....

இதில் இருந்து எனக்கு ரெண்டு விஷயம் தெரியுது :

# அந்த குறிப்பிட்ட கட்சியினர் லேட்ஆக தான் படத்தை
பார்த்து இருக்கின்றனர், போன வாரம் தான் படம்
அம்பதாவது நாளை கடந்து நூறாவது நாளை நோக்கி
வெற்றி நடை போடுகிறது.(காமெடி இல்ல சீரியஸ், ஆனா
எந்த தியேட்டர்ல அப்படின்னு என்கிட்டே கேக்காதிங்க!!!)

# பேப்பரில் படம் விளம்பரத்தில் போடும் தியேட்டர்களில்
படம் ஓடுவது இல்லை. ஏன்? அப்புறம் எதுக்கு இந்த வெட்டி
விளம்பரம்?..... அதை சரியா போட்டாதான் என்ன....


எனக்கு தெரிஞ்சு மலைமலை படத்தை சத்யம் தியேட்டரில்
மூணு வாரம் ஒடிச்சு...ஆனா இவங்க அம்பது நாளை கடந்த பின்னும் சத்யம் தியேட்ட்டரில் ஓடுவதாக பீலா உட்டனர். ...
இப்ப பாருங்க இவங்க பப்பு தானா வெளியே வந்து ஒழுங்கா
ரெண்டு தியேட்டரில் தலா ஒரு ஷோ ஓடுவதாக விளம்பரம்
செய்கின்றனர். யாருக்கு தெரியும் அங்க படம் ஓடுதான்னு....


**************************************************

சில்லரை பையன்னு யாரையும் கூப்பிடாதிங்க:

இனிமே நீங்க யாரையும் சில்லரை பையன் அப்படின்னு
கூப்பிடமுடியாது.ஏன் என்றால் நாட்டுல எவ்ளோ
சில்லரை தட்டுப்பாடு அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சு
இருக்கும்னு நினைக்கிறேன்.இல்லனா நான் சில சாம்பிள்
சொல்றேன்.......

# ஒரு ஹோட்டல்லில் பார்த்த வாசகம்

"ஐநூறு ரூபாய்க்கு சில்லரை கொடுத்தால் டிபன் இலவசம்"

நாம சில்லரை கொடுத்தால் அவுங்க ஐநூறு ரூபாய் நோட்
கொடுத்து ஒரு வேளை டிபன் தருவார்கள். அதுகூட அவுங்க
சொல்றத தான் சாப்பிடணும்... இதோ அந்த லிஸ்ட்

* தோசை மற்றும் காபி
(அல்லது)
*பொங்கல் மற்றும் வடை
(அல்லது)
*நான்கு இட்லி மற்றும் காபி.

நாட்டுல சில்லரை கிடைக்க ரொம்ப கஷ்டம்ங்க....
இனிமே பக்கி பசங்கள திட்டனும்னா வேறு ஏதாவது
பேர் வச்சிதான் திட்டனும் போல......
இப்போ சில்லறைக்கு தான் மதிப்பு அதிகம்.......

சரி உடுங்க....யாரவது சில்லரை அதிகம் இருந்தா எனக்கு
போன் பண்ணுங்க......கடைசியா ஒன்னு சொல்றேன்
நான் ரொம்ப நாணயமானவன்.


***********************************

இந்தியாவிலேயே நம்ம ராயப்பேட்டை மெலடி தியேட்டரில்
மட்டும் தான் பால்கனி டிக்கெட் விலையும், கிழே டிக்கெட்
விலையும் ஒன்று,ஆமாம் அம்பது ரூபாய் மட்டும் தான்....

சரி நல்ல விஷயம்தானே அதுக்கு என்ன என்று கேக்குறிங்களா??

டிக்கெட் கவுன்டரில் அவன் மேல கிழே என்று கூறுவதில்லை.
நான் படத்துக்கு சென்றபோது ஒரு பேமிலி மேல வந்தார்கள்

அவர்களை திரும்ப கிழே போக சொன்னார்.அதே போல் பல
பேர் தெரியாமல் வந்து திரும்பவும் திட்டி கொண்டே கிழே
சென்றார்கள்.

ஒன்னு மேல பத்து ஏத்துங்க,இல்ல கிழே பத்தை எறுக்குங்க.

******************************

இது போன்று அதி முக்கிய நாட்டு நடப்பு செய்திகள் அனைவரையும்
அடைய ஒட்டு போடுங்கள்.

உங்கள்
ஜெட்லி சரண்.

Wednesday, September 23, 2009

G.I.Joe : The Rise OF Cobra


ரொம்ப வருடங்கள் கழித்து நான் திரை அரங்கில் பார்த்த ஆங்கிலப் படம், அதுவும் நான் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்து பொழுதைக் கழித்த G.I. Joe படம் பார்த்ததில் செம செம சந்தோசம் தான். ரொம்ப நாளாக முயன்று நேற்று தான் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இயக்குனர் ஸ்டீபன் சொம்மேர்ஸ் அவர்களுக்கு என் நன்றிகள் பல, நான் சிறு வயதில் வைத்து விளையாடிய பொம்மைகளுக்கு உயிர் குடுத்து அந்த பாத்திரங்கள் அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டுவருகிறார். அரங்கில் பலரும் என்னை போலவே, இதோ பாரு Snake Eyes, Duke இப்படி ஒவ்வொரு பாத்திரம் வரும் பொழுதும் குஷியாகி பேசிக்கொண்டனர். அந்த கார்ட்டூன் மொத்தத்தையும் நவீன தொழில்நுட்பத்துடன் அதன் Originality மாறாமல் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியுள்ளார். இவர் ஏற்கனவே The Mummy, Catch Me If U Can, The Jungle Book, Deep Rising..... போன்ற அதிரடி பிரமாண்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மம்மி பட புகழ் Brendan Fraser இந்த படத்தில் சும்மா ஒப்புக்கு வருகிறார், அவரை இன்னும் நல்லா பயன் படித்திருக்கலாம்.

ஒவ்வொரு G.I.Joe உருவான விதமும் மிக சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது, கதை என்னவோ வழக்கமான ஆங்கில action பட கதை தான். கெட்டவர்களிடம் இருந்து இந்த உலகை காக்கும் நல்லவர்களின் கதை. ஆனால் அதை எடுத்த விதம் தான் சூப்பர். அதுவும் அந்த பாரிஸ்இல் நடக்கும் அதிரடி Chasing, பிரம்மாண்டம் என்றால் அப்படி ஒரு பிரம்மாண்டம்.அதென்னப்பா உலகை அழிக்கும் வஸ்துக்கள் அனைத்தும் Fluorescent Green நிறத்தில் இருக்குது?? கடைசியில் சிறிது நேரம் போர் அடித்தாலும் ரொம்ப காட்சிகள் நல்லா இருக்கு. படம் முடிந்த விதத்தை பார்க்கும் பொழுது, இன்னும் சில Part வரும் என்றே தோன்றுது.


மொத்தத்தில் நீங்கள் சிறு வயதில் இந்த கார்டூன் பார்த்தோ அல்லது இந்த பொம்மைகளை வைத்து விளையாடி இருந்தால் உங்களுக்கு இந்த படம் ஒரு மலரும் நினைவாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. கண்டிப்பாக சென்று பாருங்கள்.

நன்றி
சித்து

Tuesday, September 22, 2009

சொல்ல சொல்ல இனிக்கும் - விமர்சனம்.

சொல்ல சொல்ல இனிக்கும் - விமர்சனம்.

கடந்த வெள்ளியன்று வெளியான படம் இது பல பேருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.முரளி அப்பாஸ் அவர்கள்
இயக்கியுள்ளார்.நவ்தீப்,அபிநெய்,பிரகாஷ்ராஜ்,மதுமிதா
ஆகியோரின் நடிப்பிலும் பரத்வாஜ் அவர்களின் இசையிலும்
வெளிவந்திருக்கும் படம்.

எனக்கு இந்த நல்ல படத்தை படத்தை பரிந்துரை செய்த
அண்ணன் கேபிள் சங்கருக்கு நன்றி.இந்த படத்தில் காதல்
ஒரு பள்ளிக்கூடம் என்ற பாடலை நம் சக பதிவர்
அப்துல்லா அண்ணன் பாடியுள்ளார், வாய்ஸ் சூப்பர் ஆக
இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணே.

போன மாதம் நான் பேப்பரில் படித்த செய்தி:

டி.வி. தொகுப்பாளினி மீது ஆசிட் வீச்சு.
நான்காவது காதலன் கைது.

மேல உள்ள செய்திக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கு.
நவ்தீப்பை காதல் செய்யும் பெண்கள் ஏதாவது ஒரு காரணத்தை
சொல்லி கலட்டி நவ்தீப்பை விட்டு விடுகின்றனர். ஆனால்
அதை அவர் அதை சீரியஸ் ஆக எடுத்து கொள்ளாமல்
ஜஸ்ட் லைக் தட் என்று அவர் எப்போதும் போல்
கலகலப்பாக இருக்கிறார்.அடுத்த பெண்ணை டாவு
அடிக்கிறார் அவள் ஏதாவது காரணம் சொல்வாள்
உடனே பிரிந்து விடுவார்கள்.

இது தான் இப்போ நாட்டுல நடக்குது, இது தெரியாம சில
பேர் டீப் லவ் அப்படின்னு சொல்லி தாடி வளக்குறாங்க
இல்லேன்னா தற்கொலை பண்ணி கொள்கிறார்கள்.
பிரகாஷ்ராஜ் தான் படத்தின் மிக பெரிய ப்ளஸ், சும்மா
மிரட்டுகிறார்.கிளைமாக்ஸ்இல் அவர் முழிக்கும் முழி
சூப்பர்.குறிப்பாக அந்த ஏலம் எடுக்கும் காட்சி செம...

அபிநய் தன் வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
விஜயகுமார் இயல்பான நடிப்பில் நம்மை கவர்கிறார்.
சத்யன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் சில இடங்களில்
மொக்கை போடுகிறார்.படத்தில் வசனங்கள் பளிச், ஒரு ஒரு
வசனமும் நச்சுனு இருக்கு.குறிப்பாக நவ்தீப் கோபமாக
மதுமிதாவிடம் பேசும் காட்சி தியேட்டரில் பயங்கர கத்தல்.

படத்தில் எனக்கு பிடித்த சில விஷயங்கள்:

# படம் 2.10 மணி நேரம் தான் ஓடுகிறது....

# வசனம்

# பிரகாஷ்ராஜ்

#நவ்தீப்

# படம் போர் அடிக்கமால் போகிறது கடைசி பாடல் தவிர...

#ஒளிப்பதிவு

#ஆஷிஷ் வித்யார்த்தி(எதார்த்தமான போலீஸ்....)

# காதல் ஒரு பள்ளிக்கூடம் பாடல் வரிகள் மற்றும் பாடிய
அப்துல்லா அண்ணே...

தவிர்த்திருக்க வேண்டியது;

நாயகிகளின் தாராளமனதை காட்டும் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்
என்னை போன்ற சிறுவர்களின் மனதை சஞ்சலப்படுத்துகிறது.

ஜெட்லி பஞ்ச்:

சொல்ல சொல்ல இனிக்கும் விளம்பரம் அதிகரித்தால் தரமான
வெற்றிக்கு வாய்ப்பிருக்கு.....

இந்த விமர்சனம் அனைத்து மக்களையும் போய் சேர
ஒட்டு போடவும்....

உங்கள்
ஜெட்லி சரண்.