Monday, August 31, 2009

ஷிஞ்சுகு இன்சிடென்ட்- விமர்சனம்.

ஷிஞ்சுகு இன்சிடென்ட் (Shinjuku Incident) - விமர்சனம்.

நான் ஜாக்கிசானின் தீவிர ரசிகன் என் புனை பெயர் ஜெட்லி
என்றாலும் எனக்கு பிடித்தது ஜாக்கிசான் தான். ரொம்ப நாள்
கழித்து ஜாக்கி படம் வெளிவருவதால் வெள்ளியன்றே பார்க்க
வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் நண்பர்கள் சதி செய்து
என்னை கந்தசாமி படத்தை ரெண்டாவது தடவை பார்க்க
வைத்து விட்டார்கள்.

சீனாவில் இருந்து திருட்டு தனமாக ஜப்பான் வருபுவர்களை
பற்றி தான் கதை.ஜப்பான் கேங் லீடர்கள் நடத்தும் வன்முறைகள்,
மற்றும் சீனாவில் இருந்து வந்தவர்களை கிள்ளு கீரைகளாக
நினைத்து அடித்து உதைக்கிறார்கள். இடையில் ஜாக்கி ஜப்பான்
கேங் லீடர் ஒருவரை காப்பாற்றி ஜாக்கியும் ஷிஞ்சுகு என்ற
இடத்தில் கேங் லீடர் ஆகிறார்.

ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்பதே கதையும் கரு.
பணம் இல்லாத போது ஜப்பானில் ஒன்றாக இருந்த சீனர்கள்,
பணம் வந்தவுடன் தவறான வழிகளில் ஈடுபட்டு தங்களை
அழித்து கொள்கிறார்கள்.

பேப்பரில் விளம்பரத்தில் ஜாக்கி நடித்த மாறுப்பட்ட படம் என்ற
போதே எனக்கு சில விஷயங்கள் புரிந்தது.படத்தில் வன்முறை
காட்சிகள் அதிகம் இருந்தாலும் ஜாக்கி ஸ்டைல் பைட் மிஸ்ஸிங்.
அதுவும் ஏன் என்று புரிந்தது, படத்தில் ஜாக்கி வேடம் ஒரு
சராசரி மனிதன் வேடம் ஆதலால் martial பைட் எதிர்பார்க்க முடியாது.
நாம் எப்படி நம்மை தற்காத்து கொள்ள கட்டையும் கம்பையும்
விசுருமோ அது போல் தான் ஜாக்கி இந்த படத்தில் செய்கிறார்.

ஜாக்கி இந்த படத்தில் சிரிக்கிறார்,உணர்ச்சி வசபடுகிறார், சேரன்
மாதிரி அழுகிறார்.படம் அவ்வளவாக போர் அடிக்கவில்லை,
ஆனால் இன்டெர்வல் டைம் அனைவரும் என்னப்பா ஒரு பைட் கூட
இல்லை என்று முணுமுணுத்தார்கள்.இது ஒரு நல்ல ட்ராமா, த்ரில்லர்
வகையை சேர்ந்த படம்.சும்மா ஒரு வாட்டி பாக்கலாம் ஜாக்கிசானுக்காக....

புடிச்சா ஒட்டு போடுங்க அப்பதான் பலதரப்பட்ட மக்களை போய் சேரும்.

உங்கள்
ஜெட்லி.

Thursday, August 27, 2009

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு

நாட்டு நடப்பு நல்லாதானே இருக்கு.....???(27.8.09)

நேற்று தினகரன் பேப்பரில் படித்த ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ....

சென்னை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தமிழில் முன்பதிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பெண் ஒருவரை நான்கு ஊழியர்கள்
அசிங்கமாக பேசி தாக்க முயன்றனர்.அந்த நான்கு ஊழியர்களும்
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.என்ன கொடுமை சார் இது...?
தமிழ் நாட்டுல தமிழ்ல எழுதுன அடிக்க வராங்க,
அதுவும் வேறு ஊரில் இருந்து பிழைக்க வந்தவர்கள்.

சரி அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, அதுக்கு ஏன் திட்டனும்,

தாக்க முயற்சி பண்ணனும்??..
தமிழ் நாட்டுல தமிழில் எழுதினால் தப்பா?

இப்படி தான் கொஞ்சம் காலம் முன்னாடி மணியார்டர்

விண்ணப்பத்தில் மலையாளம் மற்றும் ஹிந்தி
மட்டுமே உள்ள விண்ணப்பத்தை விற்றார்கள்...
வர வர தமிழன் கிள்ளு கிரையாக போய் கொண்டு
இருக்கிறான். தமிழ் நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லை.
வேற என்னத்த சொல்ல......


*******************************************

இனிமே என்னை மொக்கை படத்துக்கு கூப்பிட்ட
ஒதை உழும்... ஜாக்கிரதை!!!

******************************************************

வாமனன் படத்துக்கு மலேசியா கூட்டு போறாங்கோ,
ஆறுமனமே படத்துக்கு துபாய் கூட்டு போறாங்கோ,
கந்தசாமி படத்துக்கு பாரிஸ் கூட்டு போறோங்கோ......

இப்படியே போன படம் பார்க்கும் நபர்களுக்கு நெறைய
பரிசு தருவாங்க போல......இந்த மாதிரி படத்தை
பார்ப்பவர்களுக்கு தியாக செம்மல் விருது வழங்க வேண்டும்.

என் நண்பன் ஒருத்தன் இருக்கான் அந்த டாக் படம்
பிடித்திருந்தால் மட்டுமே டிக்கெட் காசு தருவான்....
அது போல் மேல உள்ள பரிசுக்கு பதில் படம் திருப்தி
தரவில்லை என்றால் காசை திருப்பி கொடுக்குற மாதிரி
திட்டம் வகுத்தால் நல்லா இருக்கும்.....

நீங்க என்ன நினைக்கிறிங்க???

*************************
புடிச்சா ஒட்டு போடுங்க
உங்கள்
ஜெட்லி

Wednesday, August 26, 2009

கற்றது தமிழ் ரீமிக்ஸ்....

கற்றது தமிழ் ரீமிக்ஸ் ....




எனக்கு கற்றது தமிழ் படம் ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த
பாட்டு எதற்கும் நிகர் இல்லை, இந்த பாட்டை நான் ரீமிக்ஸ்
செய்வது சும்மா ஒரு ஜாலிக்கு தான் யாரும் கோபித்து கொள்ள
வேண்டாம்.,,,

முன்னுரை:

பிரபாவுக்கு ஆனந்தி தான் சரக்கு ஸ்பான்சர், தீடிர்னு ஆனந்தி
ஊருக்கு போனதுனாலே பிரபாவுக்கு யாரும் ஓசியில் சரக்கு
வாங்கி கொடுக்குல.....இதோ சாங்....

ஒரிஜினல் வீடியோ இங்கே.........



என் வாழ்க்கையில் நான் காசு கொடுத்து சரக்கு வாங்கினது
மூணே மூணு தடவை....

பிரபா நீ என்னை தேடி இருப்பனு தெரியும்,
நானும் அம்மாவும் பாண்டில இருக்கிற ஒன்னு விட்ட மாமா
வீட்ல இருக்கோம், நீ இங்கே வந்து சரக்கு அடிக்க ஏத்த நேரம்
வரும் போது சொல்றேன்....

நேரத்துக்கு சரக்கு அடி
சரக்குல நெறைய தண்ணி உத்து
வாரத்துல மூணு வாட்டிக்கு மேல (சரக்கு)அடிக்காதே
சைடு டிஷ் கம்மியா சாப்பிடு
போதையில ரோட்ல படுக்காத....

சரக்கே எங்கே இருக்கிறாய்
அடிக்கவே என்னை அழைக்கிறாய்
பாண்டி வைன் ஷாப் தேடி வருகிறேன் மப்பே.....

அடி என் பூமி தொடங்கும் இடம் எது ராயல் stag தானே....
அடி என் பாதை இருக்கும் இடம் டாஸ்மாக் தானே....

பார்க்கும் டாஸ்மாக் கடை யாவையும் பாவை முகம் வருமே,
சரக்கு ஒரிஜினல்ஆ டுப்ளிகட்ஆ என்று தெரிவதில்லை
அதை கண்டு சொல்ல யாருக்கும் தூணிவில்லை....
நீ வாங்கி கொடுத்த சரக்கு இன்னும் மனதில் மறையவில்லை
அதில் மிதந்தேன் நானும் ஒரு படகாக.......(சரக்கே)

உன்னோடு நானும் சரக்கடிக்கும் வேளை
இது நீளாதோ.... teachers scotch rate போலவே
கதை பேசி கொண்டு வா வைன் ஷாப் போவோம்
சைட் டிஷ் தீர்ந்தாலும் உன் சரக்கு மட்டும் போதும்

இந்த half அடிச்ச போதை இன்னைக்கு போதாத
இனி நம்மூர் டாஸ்மாக் முழுவதம் அழகாய் மாறதா????

முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

*********************************************

ஆனந்தியை பாண்டியில் உள்ள வைன்ஷாப் கடை பக்கத்தில்
பார்த்த உடன்....

பிரபா: ஆனந்தி இங்க தான் ராயல் stag புல் கிடைக்குதாம், அதான்
அப்படியே உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்....

ஆனந்தி: நான் வரலைனா என்ன பண்ணி இருப்ப...?

பிரபா: என்ன ரெண்டு புல் ராயல் stag வாங்கிட்டு அடுத்த பஸ்ல
கிளம்பி இருப்பேன், இப்ப தான் உன்னை பார்த்துட்டேனே நீதான் ஸ்பான்சர்....

ஆனந்தி: நிஜமாத்தான் சொல்றியா?...

*************************************************

ஏழை... சரக்கு.... டாஸ்மாகில் இருக்கிற அறுபது ரூபாய்
மொக்கை சரக்கு....
(சரக்கு அடித்த பின்)
மண்ணில் விழுந்து ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் சரக்கு பாட்டில் போல...
இதோ இதோ இந்த பயணத்திலே
இந்த half பாட்டில் போதும் கண்மணி
வேறு என்ன நானும் கேப்பேன்
சரக்கு காலியானாலும் தண்ணி ஊத்தி
பாட்டில் கழுவி குடிப்பேன்...
இந்த மப்பு இப்படியே தான் தொடராதா
என் தணியாத போதை இன்றுடன் தீராதா...


முதல் முறை ராயல் stag half கிடைத்ததே
முதல் முறை பக்கத்துக்கு டேபிள் சைடு டிஷ் கிடைத்ததே
முதல் முறை கட்டிங் சாப்பிட்டு மப்பு தாறுமாற ஏறுதே....

முதல் முறை வாந்தி வர மாதிரி கொமட்டுதே
முதல் முறை ஆப்பாயில் போட்டனே
முதல் முறை டேபிள் தூடைத்தேனே..... மப்பே......

பிரபா : ஆனந்தி ஆனந்தி சரக்கு காலி ஆயிடுச்சு,
இன்னொரு குவாட்டர் சொல்லேன்....

புடிச்சா ஒட்டு போடுங்க.....
உங்கள்
ஜெட்லி.

Tuesday, August 25, 2009

அடுத்த தலைமுறையின் எமன்

அடுத்த தலைமுறையின் எமன்.


நமக்கு அடுத்து வரப்போகும் தலைமுறைகளுக்கு நாமேஅழிவை தேடி தரும் செயல் தான் பிளாஸ்டிக் பொருட்களை
உபயோகிப்பது. நம் அன்றாட வாழ்க்கையின் ஒன்றாகி விட்ட
பிளாஸ்டிக் என்னும் பொருளை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல.
நான் இதை எழுதுவதற்கு காரணம் இதை படித்த நம் சக
பதிவர்கள் மற்றும் என் நண்பர்கள் பத்து பேரவாது சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்.

பிளாஸ்டிக்கை, அதாவது மனிதன் தயாரித்த செயற் பிளாஸ்டிக்
1855 ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வித மாற்றங்களுக்கு பிறகு நாம் முக்கியமாக உபயோகிக்கும் கேரி
பேக் வடிவமைக்கப்பட்டது.


நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத தேவையாகி விட்டது
கேரி பேக்.கடைக்கு போனால் ஒரு பாக்கெட் பால் வாங்குனா
கூட கேரி பேக் கேக்குறோம்,துணி கடைக்கு போன ஒரு ஒரு
மாடிக்கும் மூணு நாலு கேரி பேக் தருகிறார்கள்.வீட்டுக்கு
வந்தவுடன் நாம் கேரி பேகை குப்பை தொட்டியில் வீசி எறிகிறோம்
அல்லது ரோட்டில் தூக்கி போடுகிறோம்.அந்த பிளாஸ்டிக் பேக் மக்காது என்று நமக்கு தெரியும் இருந்தாலும் அதை வைத்து
என்ன பண்ணுவது என்று தூக்கி எறிகிறோம். அந்த பிளாஸ்டிக்
பேக் அனைத்தும் மக்கமால் மண்ணோடு மண்ணாக அப்படியே
இருக்கும். மழை வந்தால் தண்ணீர் உள்ளே போகாமல் பிளாஸ்டிக்
பேக்கால் தடுக்க பட்டு தடுக்க பட்டு இப்போதே நாம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம்.


காலம் தவறி பெய்யும் மழை யாருக்கும் உதவாது, முக்கியமா விவசாயம் பண்றவங்க ரொம்ப கஷ்ட படுவாங்க. போன வாரம்
திருவண்ணாமலை சென்ற போது பாக்கம் என்ற ஊரில் பாதி
விவசாய நிலங்கள் பிளாட் போட்டு விற்று விட்டார்கள் எல்லா ஊரிலும் இதே கதி தான். இதற்கு நான் பிளாஸ்டிக் மட்டுமே
காரணம் என்று சொல்லவில்லை பிளாஸ்டிக்கும் ஒரு காரணம்,
அதை உபயோகிக்கும் நாமும் ஒரு முக்கிய காரணம்.

சரி இவ்ளோ பேசுறியே ஜெட்லி, நீ சொல்ற மாதிரி தூணி
கடைக்கு அல்லது மளிகை கடைக்கு போன எல்லாத்தையும்
கையுல எடுத்துட்டு வர முடியுமா? என்று நீங்கள் கேட்பது எனக்கு
புரிகிறது. தூணி கடையில் கூட அந்த கட்டை பேக் கொடுப்பார்கள்
அதை வாங்கி கொள்ளலாம், ஆனால் மளிகை கடையில் ஒவ்வொரு பொருளும் பிளாஸ்டிக் பையால் தான் கட்டப்பட்டு அதை ஒரு
பெரிய பிளாஸ்டிக் பையில் தருவார்கள். மளிகை கடை வைத்திருப்பவன் என்ற முறையில் எனக்கே தெரியும் நாங்கள் செய்வது தவறு என்று, ஆனா என்ன பண்றது பத்து வருஷம்
முன்னாடி அரிசி, பருப்பெல்லாம் பேப்பரில் கட்டி தான் கொடுப்போம்.
எங்கள் வாடிக்கையாளர்கள் தான் "என்னங்க இன்னும்
பேப்பரில் கட்டிட்டு இருக்கீங்க?" என்று எங்களை மாற வைத்தார்கள்.


அப்புறம் இந்த கேரி பேக் தான் பேரும் பிரச்சனை, சின்ன பிஞ்சு குழந்தைகள் கூட ஒரு பால் அல்லது இட்லி மாவு வாங்கினால்
கூட கேரி பேக் வேண்டும் என்பார்கள் அவர்களிடம் கையில்
எடுத்து போக சொன்னால் அதெல்லாம் முடியாது எனக்கு மாவு
வேணாம் என்பார்கள். எனக்கு தெரிந்து ஒரு மூணு நாலு பேர் மட்டுமே பிளாஸ்டிக் பை வேண்டாம் என்பார்கள். கையில் எடுத்து
கொண்டு போய் விடுவார்கள் அல்லது வீட்டில் உள்ள பழைய
பிளாஸ்டிக் பையை எடுத்து வந்து வாங்கி போவார்கள்.
அதிலும் ஒரு பெரியவர் என்னிடம் "யாருக்கும் பிளாஸ்டிக் பேக்
கொடுக்காதிங்க, நீங்க மொதல்ல நிறுத்துங்க" என்பார்.

நான் கேரி பேக் கொடுப்பதை நிறுத்தினால் என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள் என்று தெரிந்த காரணத்தால்,ஏதோ வருபவர்களிடம் முடிஞ்ச வரைக்கும்
பிளாஸ்டிக் பையை யூஸ் பண்ணாதிங்க என்று சொல்வதோடு சரி. சில பேர் எதிர் கேள்வி வேறு கேட்பார்கள் "அப்புறம் எப்படி இதெல்லாம் எடுத்துட்டு போறது" என்று. அவர்கள் கேட்பதிலும் தப்பு இல்லை.இவ்ளோ வருஷம் பழகியாச்சு நிறுத்தறது கொஞ்சம் கஷ்டம் தான், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை.


கூடிய விரைவில் நாங்களும் பேப்பர் பேக் உபயோகிக்க எல்லாம் முயற்சிகளும் எடுத்து வருகிறோம். பேப்பர் பேக் விலையும்
அதிகம் மற்றும் அதிக பொருள்கள் எடை தாங்குமா என்று
தெரியவில்லை. என்னால் முடிந்த வரை கடைக்கு வரும் மக்களிடம் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீமையை
எடுத்து கூறுவேன். நாமும் இனி முடிந்த வரை பிளாஸ்டிக்
பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்போம். நம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு நல்லதை செய்வோம்.

எல்லா மக்களையும் சென்று அடைய முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை போடுங்க ஜி...

என்றும் அன்புடன்
ஜெட்லி.

Friday, August 21, 2009

கந்தசாமி - விமர்சனம்.

கந்தசாமி - விமர்சனம்.

நானும் நண்பரும் படத்தை மாயஜாலில் பார்ப்பது என்று முடிவு செய்து,
மாயஜாலை நோக்கி புறப்பட்டோம்.மதிய சாப்பாட்டு வேலை என்பதால்
வழக்கம் போல் மாயாஜால் முன்னாடி இருக்கும் ரேவதி ஹோட்டலில்
பரோட்டா மற்றும் வீச்சு சாப்பிட்டோம்.

படம் வழக்கம் போல் லேட் ஆகதான் போட்டார்கள், படம் பார்த்த பத்து
நிமிடத்திலேயே,வேகாதது பரோட்டா மட்டும் இல்லை கந்தசாமியும் தான்
என்று தெரிந்தது. இயக்கனர் சுசி அவர்களிடம் இப்படி ஒரு சுவாரசியம்
இல்லாத திரைக்கதையை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
ஒரு ஒரு காட்சிகளின் நீளமும் சற்று அதிகம் தான். என்னால் மூணு
மணி நேரம் உக்காந்து படத்தை பார்க்க இயலவில்லை என்பதே உண்மை.

நம் தமிழ் சினிமாவுக்கு வழக்கமான கதை தான் என்றாலும், படத்தில்
சில புதுமைகள் இல்லாமல் இல்லை.ஸ்ரேயாவுக்கு விக்ரம் ஒரு வரியில்
பதில் சொல்வது, கோழியாக வரும் கந்தசாமி எப்படி பறக்கிறார் என்று
லாஜிக் இடிக்காமல் சொல்லி இருக்கிறார் சுசி.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு
மிக அருமை. பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்பதால் அதை பற்றி சொல்ல
தேவை இல்லை.

இருக்கிறவன் கிட்ட எடுத்து இல்லாதவன் கிட்ட கொடுக்கும் ராபின் ஹூட்
கதை தான் கந்தசாமி. ஆனால் உப்பு சப்பு இல்லாத காட்சிகளால் நம்மளை
நோக அடிக்கிறார் கந்தசாமி. ஹை டெக் என்ற ஒரு வார்த்தையை மட்டும்
எடுத்து திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார் இந்த சாமி.
சண்டை போடுறவன் மெக்சிகோ நாட்டுல போட்ட எனக்கென்ன திரிசூலம்
மலையில சண்டை போட்ட எனக்கென்ன, என்னா ஒரு பில்ட் அப்.

கந்தசாமியிடம் இருந்து நம்மை மீட்பவர்கள் இருவர் ஒருவர் வடிவேலு,
இன்னொருவர் ஷ்ரேயா என்றால் மிகையல்ல.படத்தின் நீளம் நமக்கு
கண்டிப்பாக கொட்டாவி வர வைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆக மொத்தம் WATCH AT UR OWN RISK.

போனஸ் செய்தி:

கந்தசாமி பார்த்த மகிழ்ச்சியில் வீட்டுக்கு ஒன்னும் இல்லங்க 40K.M ஸ்பீட்ல
தான் வந்தேன். எங்க இருந்து வந்தான் தெரியுல ஓவர் ஸ்பீட் அப்படின்னு
சொல்லி அம்பது ரூபாய் ஆட்டையை போட்டுட்டான். கந்தசாமி நல்லா
இல்லன்னு கூட எனக்கு வருத்தம் இல்லங்க, E.C.R. ரோட்ல 40K.M ஸ்பீட்ல
வந்தது தப்பாம்......?....

ஜெட்லி பஞ்ச்:

கந்தசாமி --- ஒன்னும் சொல்றதுக்கு இல்ல சாமி.


இந்த விமர்சனம் பெரும் மக்களை சேர ஒட்டு போடவும்.

உங்கள்
ஜெட்லி.