Friday, May 1, 2009

பசங்க விமர்சனம்

பசங்க விமர்சனம் தமிழ் திரையுலகில் அஞ்சலிக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து குழந்தைகளை மையப்படுத்தி வந்துள்ள படம் பசங்க. முதலில் இந்த மாதிரி ஒரு முயற்சி எடுத்ததற்கு தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்கும் ஒரு சபாஷ் போடலாம். படத்தில் நடித்த அனைத்து
குழந்தை நட்சத்திரங்களும் மிகவும் இயல்பாக தங்கள் நடிப்பை வெளிபடித்தியுள்ளனர், முக்கியமா அந்த புஜ்ஜி ஆக வரும் சின்ன பையன் செய்யும் குறும்புதனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன அவர் அடிக்கடி கூறும் வசனம் "எப்புடி" சூப்பர்ஒ சூப்பர்.

நான் படத்தின் PROMOS டி.வி.யில் பார்த்த உடன் என்னடா திரும்பவும் ஒரு வன்முறை படமா என்று நினைத்தேன் ஆனால் ஒரு வன்முறை கூட இல்லை. இந்த படம் கண்டிப்பாக மசாலா படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை படத்தில் ஒரு பைட் கூட இல்லை எல்லாம் சின்ன பசங்க சண்டைதான். ஆனா அந்த சண்டை காட்சிக்கே ரொம்ப பில்டப் குடுக்குறாங்க.



புதிதாக பள்ளிக்கு வரும் அன்பரசன் அங்கு ஏற்கனவே பள்ளியில் படிக்கும் ஜீவா இருவருக்கும் முதல் நாளே சண்டை ஆரம்பம் ஆகிறது. அதே பள்ளியில் ஜீவாவின் அப்பாவும் ஆசிரியராக பணியாற்றுகிறார். ஜீவா வால்தனம் மிக்கவன் ஆனால் அறிவு நல்ல புத்திசாலி, ஜீவா கடந்த ஐந்து வருடங்களாக கிளாஸ் லீடர் பதவியில் இருப்பவர் ஆனால் அன்பரசன் வந்த உடன் அந்த பதவியை பெறுகிறார். இதனால் இருவருக்கும் சண்டை ஆரம்பித்து அடிக்கடி அடித்து கொள்கிறார்கள். அன்பரசன் சித்தப்பாக்கும் ஜீவாவின் அக்காவுக்கும் காதல் மலர்கிறது, அப்புறம் நடுவில் இரண்டு குடும்பத்துக்கும் சண்டை வருகிறது இதையெல்லாம் மீறி அவர்கள் இருவரும் நட்பனார்களா? என்பதே கதை.

படம் ஆரம்பத்தில் விமல்(சித்தப்பா) பேர் முதலில் போட்டாலும் அவுருக்கு பெருசா ஒண்ணும் வேலையில்லை. வேகாவும் விமலும் காதல் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன. ஜீவாவின் அப்பாவாக வரும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ் ஆசிரியராக நல்ல நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
ஜீவா கூட வரும் பக்கட(பகோடா இல்லை), குட்டிமணி இருவரும் நம்மை சிரிக்கவைகிறார்கள். அதுவும் அந்த பக்கட பையன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. படத்தில் அனைவரும் தங்கள்
நடிப்பை மிக அருமையாக வெளிபடுத்தியுள்ளார், எப்படின்ன ஒரு REALITY இருக்கு.

படத்தின் முதல் பாதி ரொம்ப மெதுவாக நகர்கிறது, சின்ன பசங்க படம்னாலும் பில்டப்க்கு குறைவில்லை. முதல் பாதியில் நம்மை ரொம்பவே சோதிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் வாழ்கைக்கான அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் சில அறிவுரைகள் நம்மை சலிப்படைய செய்கின்றன. இந்த படத்தை கண்டிப்பாக
பசங்க பாக்கறாங்களோ இல்லையோ ஆனால் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.இந்த படம் கண்டிப்பாக நம்மை வேறு உலகத்துக்கு கொண்டு செல்லும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு தரமான படம். இந்த மாதிரி புது முயற்சிகள் வரவேற்க படவேண்டும்... மக்கள் வரவேற்பார்களா?




Wednesday, April 29, 2009

சூர்யாவின் ஆதவன்

ஆதவன் கதை.
இந்த படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் , அப்பா, மகன் மற்றும் வாரணம் ஆயிரம் படத்துக்கு 20 கிலோ குறைத்து +2 மாணவனாக நடித்த சூர்யா இந்த படத்தில் இன்னும் 20 கிலோ குறைத்து L.K.G படிக்கும் மாணவனாக நடிக்கிறார்.



காட்சி 1:
சன் டி.வி முக்கிய செய்திகள் சுஜாதா பாபு அவர்கள் வாசித்து கொண்டு இருந்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகவே மிச்சர்(mixture) தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் சரக்கு விற்பனை சரிந்து அரசுக்கு பெரும் நஷ்டம் உண்டாகிறது. மிச்சர் போடுபவர்களை சில சமூக விரோதிகள் கடத்தி கொண்டு போய்விடுவதால் நாட்டில் முன் ஒருபோது இல்லாத அளவுக்கு மிச்சர் தட்டுபாடு ஆகியுள்ளது.

குடிமகனின் பேட்டி:" என்னங்க பண்ண சொல்றிங்க என்னதான் நெறைய சைடு டிஷ் இருந்தாலும் ஒரு கட்டிங் உட்டு மிச்சர் சாப்பிடற சுகமே தனிங்க..ஆனா இப்ப பாருங்க மிச்சர் 100 கிராம் 100 ரூபாய் விக்கிறாங்க நாங்கல்லாம் ஏழை பாழைங்க அவ்ளோ காசுக்கு எங்க போறது... இதுக்கெல்லாம் ஒருத்தன் பொறந்து வருவான்".
அப்போது ஒரு கிழவன் பொறந்துட்டான் அப்படின்னு சொல்லிட்டு போவார். அந்த கிழவனை உற்று நோக்கினால் அவர் தான் சூர்யா.


*********************************************************************************

காட்சி 2:
(இடம்: சென்னை துறைமுகம்)
சூரியன் கிழக்கு திசையில் இருந்து எழும்புகிறது அப்போது நமது நாயகன் சூர்யா கோட்டு சூட்டு போட்டு கொண்டு கழுத்தில் ஒரு சிகப்பு நிற ரிப்பனை கட்டிக்கொண்டு சூரியனில் இருந்து குதிப்பது போல் வருகிறார். அவர் தான் ஆதவன், துறைமுகத்தில் உள்ள CONTAINERil எல்லாம் ஏதோ தேடுகிறார், அதற்குள் வில்லன் ஆட்கள் ஆதவனை கண்டுகொள்கிறார்கள். உடனே ஒரு பைட், ரைட் கால CONTAINER மேல வெச்சி LEFT கையால் வில்லன் கோஸ்டியை துவம்சம் செய்கிறார் ஆதவன்.நமது .அப்புறம் துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் ஏறி சும்மா சும்மா பறந்து பறந்து அடிக்கிறார்,அப்புறம் ஒரு ஆளுக்கு சூர்யாவின் பஞ்ச் மிஸ்ஸாகி CONTAINER மேல் பட்டு CONTAINER saro அடுத்து ஒரு ஒரு CONTAINER ஆக தான் தேடி வந்த பொருளை தேடுகிறார். கடைசியில் ஒரு CONTAINERil தான் தேடி வந்த பொருள் கிடைக்கிறது. அந்த CONTAINERil 1000 டன் மிச்சர் இருக்கிறது. அதை ஒவ்வொரு டாஸ்மாக் பாருக்கு சென்று குடிமகன்களிடம் ப்ரீயாக குடுக்கிறார். கொஞ்சம் மிச்சரை எடுத்து தன்
பாக்கெட்டில் போட்டு கொள்கிறார்.உடனே ஒரு தத்துவ பாட்டு.

நாயகி நயன்தாரா துறைமுகம் பக்கத்தில் கருவாடு விற்கும் ஆயாவாக வருகிறார் ஐயோ சாரி ஆயாவின் மகளாக வருகிறார். இந்த படத்தில் நயன் SINGLE பீஸ் இல் வந்து கடலில் குளிப்பது போன்று கிளுகிளுப்பான காட்சிகள் வருகின்றன.


துறைமுகத்தில் எந்த கப்பல்ல எப்ப சரக்கு எத்துராங்கன்னு நயன் சூர்யாவிடம் சொல்வார். வடிவேலு அப்போ அப்போ வந்து "வில்லு
உடஞ்சிபோச்சே" என்று சொல்வார்(போக்கிரியில் வடை போச்சே அது மாதிரி பி .கு: " நான் விஜயை கிண்டல் பண்ணவில்லை")
***********************************************************************************
காட்சி 2:
இடம் : ஆதவனின் வீடு

நைட் வீட்டுக்கு வரும் ஆதவனிடம் அப்பா சூர்யா சோக பாட்டை படுகிறார்.......
வில்லன் படத்தில் வரும் ஆடியில் காத்து அடிச்சா சோக பாட்டு மாதிரி

காலையில சரக்கு அடிச்சா
தொட்டுக்க மிச்சர் இல்ல
கொமடிகிட்டு வாந்தி வருது அன்பு மகனே.........

உடனே தன் பாக்கெட்டில் உள்ள மிச்சரை அப்பாவிடம் கொடுக்கிறார் .

********************************************************************************

காட்சி 3:

இடம் : துறைமுகம் பக்கத்தில் உள்ள ஏரியா


தான் ஏன் மிச்சர் பொட்டலங்களை திருடுகிறேன் என்று நயந்தாரா
கேட்காமலயே ஆதவன் தன் FLASHBACKi கூறுகிறார்.

FLASHBACK:

ஆதவன் அப்போது L.K.G படித்து கொண்டு இருந்தான்(அதுவும் சூர்யாதான்) ஆதவனின் அப்பா சூர்யா வேலையை விட்டு தினம்தோறும் வீட்டுக்கு வரும்போது அரை கிலோ மிச்சர் வாங்கி கொண்டு வருவார். ஆதவன் சாப்பிட்டு வைத்த மீதி மிச்சரில் அப்பா சூர்யா சரக்குக்கு சைடு டிஷாக சாப்பிடவது வழக்கம். ஒரு நாள் அப்பா சூர்யா டாஸ்மாக் பாரில் சரக்கு அடித்து கொண்டு இருக்கும் போது வில்லன் சுமன் பக்கத்தில் கட்டிங் சாப்பிட்டு கொண்டு இருந்தார், சுமன் சூர்யாவிடம் கொஞ்சம் மிச்சர் கேட்கிறார். ஆனால் சூர்யா அது தனக்கே பத்தாது என்று சுமனை
கேவலபடுத்துகிறார். இந்த அவமானத்தை தாங்காமல் சுமன் சூர்யாவின் மிச்சர் பொட்டலத்தை வாங்கி கிழே கொட்டுகிறார். "இனிமே இந்த தமிழ்நாட்டுல யாருக்கும் மிச்சர் கிடைக்காத படி செய்றேன்" என்று சுமன் கர்ஜிக்கிறார். அப்போதிலிருந்து சுமன் மிச்சர் போடுபவர்களை கடத்தி
கொன்றுவிடுகிறார் அல்லது தனது கூடாரத்தில் அடைத்து மிச்சர் போட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். தனது மிச்சர் பொட்டலத்தை கிழே கொட்டிய சுமனை பழிவாங்க வேண்டும் என்று L.K.G படிக்கும் ஆதவனுக்கு அனைத்து சண்டைகளையும் கற்று தருகிறார்.மேலும் L.K.G படிக்கும் ஆதவன் தன் அப்பா மிச்சர் இல்லாமல் சரக்கு அடிப்பதை பார்த்து மனம் வெம்புகிறார். எப்படியாவது தான் பெரியவன் ஆகியதும் தன் அப்பாவுக்கு தினமும் சரக்குக்கு சைடு டிஷ் ஆக மிச்சர் பொட்டலம் தருவேன் என்று சபதம் போடுகிறார்.


கிளைமாக்ஸ்:

இந்த தடவை CONTAINER எல்லாம் சரக்கு கப்பல்ல ஏத்தி வண்டி கிளம்பிடிச்சு..ஆதவன் இந்த தடவை கொஞ்சம் லேட் ஆக வந்துட்டார், வந்ததும் அங்கே இங்கே என்று பார்க்கிறார் உடனே பீச் மணலில் நிறுத்தி இருக்கும் கட்டுமரத்தில் ஏறுகிறார். கட்டுமரத்தால் அந்த சரக்கு கப்பலை
பின் தொடருகிறார், ஆதவன் அவசரத்தில் துடுப்பு எடுக்காம கட்டுமரத்தை கடலில் இறக்கிவிட்டார், அதனால் கட்டுமரத்தில் படுத்து தன் இரு கையை துடுப்பாய் பயன்படுத்துகிறார்.சரக்கு கப்பல் ஆதவன் கண் முன்னால் போய் கொண்டிருக்கிறது தீடிரென்று ஆதவனக்கு ஒரு யோசனை வருகிறது அதாவது நிலாவின் திசை அறிந்து கப்பலை பின் தொடர்வது என்று ஆதவன் வானத்தில் டார்ச் அடிக்கிறார் ஆனா பாருங்க ஆதவனோட கெட்ட நேரம் அன்னிக்கு அமாவாசை ஆகி போச்சு. ஒரு பத்து நிமிஷமா ஆதவன் நிலாவா தேடுகிறார் அவர் தேடுற சமயத்தில மிச்சர் ஏத்துகிட்டு போற சரக்கு கப்பல் அவர் கண்ணில் இருந்து மறைந்து வெகு தூரம் போய்விட்டது.
அப்போது அந்த வழியாக வந்த STAR CRUISER பிரமாண்ட கப்பல் போகிறது, உடனே கட்டுமரத்தில் இருக்கும் கயிறை தூக்கி CRUISER கப்பலில் உள்ள பால்கனி கம்பியில் போடுகிறார். அந்த கயிர் நன்றாக தன்னை கப்பலுடன் இணைத்து கொள்கிறது. CRUISER கப்பல் வேகம் எடுத்து கிளம்புகிறது CRUISER பின்னாடி சூர்யா SURFING செய்வது போல் கட்டுமரத்தில் செல்கிறார்,அப்போது சில டால்பின்கள் சூர்யாவை முத்தமிட்டு செல்கின்றன. இந்த SURFING காட்சியை நாம் ஆறு விதமான ஷாட் களில் காண்கிறோம். அப்புறம் சிறிது தூரத்தில் ஒரு ராட்சஸ சுறா இருப்பதை கண்டு கொள்ளும் சூர்யா, சுறாவை technical ஆக ஏமாற்றுகிறார்.ஆதாவது LEFTil திரும்புவது போல் கை காட்டி RIGHTil திரும்பி நேராக போய்விடுகிறார்.

CRUISER கப்பல் மூலமாக ஆதவன் மிச்சர் சரக்கு கப்பலை அடைந்து எதிரிகளை பந்தாடி திரும்பவும் தமிழ்நாட்டுக்கு குடிமக்களுக்கு மிச்சர்களை கிடைக்க செய்கிறார்.
சுபம்.
உங்களுக்கு பிடிச்சிதுன்ன கண்டிப்பா TAMISHil ஒட்டு போடுங்க.


Tuesday, April 28, 2009

மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு மில்க் ஷேக்.



இந்தியா டுடே மே 6 இதழில் வந்த சுவாரசியமான செய்தியை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஷீராஸ் ஹாசன் எனும் நபரால் நடத்தப் படும் "Millions of Milkshake (MoM)" என்னும் கடை உள்ளது. இந்த கடை அமெரிக்கா முழுவதும் மிகப் பிரபலமானது, இங்கு எண்ணற்ற வகையில் மில்க் ஷேக் (துபாய் ஷேக் அல்ல) வகைகள் விற்கப்படுகின்றன. இதன் விசேஷம் என்னவென்றால் ஹாலிவுட் மற்றும் மிக பிரபலமானவர்களின் பெயரில் மில்க் ஷேக் விற்கப் படுகிறது. இப்படி ஒபாமா, பாரிஸ் ஹில்டன், மைலீ சைரஸ், டேவிட் பெக்கம் ஆகியவர்களின் பெயரில் விற்கப்படுகிறது.

இந்த வகையில் நம் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி, குலுக்கல் நாயகி, ஜாக்கி சாண் புகழ் மல்லிகா ஷெராவத் பெயரில் ஒரு புதிய மில்க் ஷேக் பானத்தை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளனர். அதாவது ப்ளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் பால் சேர்த்து ஒரு கலக்கு கலக்கி குலுக்கு குலுக்கி தருவர். இதன் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட அம்மணி ஷேக் (Shake) என்றவுடன் எதோ குலுக்கல் நிகழ்ச்சி என்று அதற்குரிய பிரத்யேக ஆடையுடன் கலந்துக் கொண்டதை கீழே பாருங்கள். அந்த கடையில் இதற்கு முன்பு நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் எந்தவொரு ஹாலிவுட் நடிகையும் இது போன்று இந்த அளவுக்கு தங்கள் அழகை வெளிப்படுத்தவில்லை (அவர்கள் இணையத்தளம் சென்று பார்த்தேன்) ஆனால் கலாசாரம் அபசாரம் என்று பேசும் நம் நாட்டில் இருந்து சென்ற இவரோ இப்படி, ஐயோ ஐயோ.







நீங்கள் தமிழனா???

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!


2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!



3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை

அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க....!


4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!



5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!



6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு.....!



7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து

எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.


8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!



9... ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் ைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]



10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!



11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!



12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!



13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ... லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி...!



14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே> மாட்டாங்க.. அடுத்த

பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க...!


15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!



16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்...!



17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ
வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]


18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க..
ஒன்னு உலக தொலைக் காட்சி வரலாற்றில் ஏதாவது மொக்கை படத்தை பாத்து அழுவீங்க இல்லைனா தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!


19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க...

மேலே கூறிய அனைத்தும் உங்களுக்கு பொருந்தினால் நீங்கள் தமிழனாக இருக்க வாய்ப்புக்கள் அதிகம்.



20.இதற்கும் மேலாக, எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிற நல்லவரா இருந்தால் கண்டிப்பா நீங்க தமிழனே தானுங்கோ

.








Monday, April 27, 2009

பொன்னர் சங்கர் (அண்ணன்மார் வரலாறு)

வணக்கம் நண்பர்களே கலைஞரின் பொன்னர் சங்கர் புத்தகம் படித்தேன், சேரர் சோழர் பாண்டியர் வரலாற்றையே கேள்விப் பட்ட நமக்கு அவர்களன்றி இன்னும் சில வீரத் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு சான்றாக விளங்கியது இந்த வரலாற்றுக் காவியம்.

கலைஞர் எழுதியதில் நான் படித்த முதல் புத்தகம் இது தான், ஒரு எழுத்தாளராக அவர் என் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம். முதலில் நிறைய கவிதை நடையாக தான் இருக்கும் என்று எண்ணி படிக்க தயங்கினேன் (நமக்கு அதெல்லாம் புரியாதே!!!!!!!!!!!) ஆனால் அவ்வாறு இல்லாமல் அனைவரும் படிக்கும் வகையில் மிக எளிய நடையில் தந்திருக்கிறார்.

கதை முழுவதும் கொங்குச் சீமையிலே நடைபெறுகிறது, கொங்கு வேளாள கவுண்டர்கள் மற்றும் வேட்டுவ குலமக்களின் வாழ்கையை மிக அழகாக பிரதிபலிக்கிறது. அவர்கள் வாழ்கை முறை, உயர்ந்த பண்பு அவர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்பற்றும் மரபு கட்டிக் காத்த குல பெருமை எல்லாம் மிக சிறப்பாகவும் இயல்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கதையில் கலைஞர் என்னவோ அந்த காலத்துக்கே நம்மை அழைத்து போக முனையவில்லை, கல்கி கதைகளில் அவர் நம்மையே அங்கு கூட்டி செல்வார் ஆனால் அப்படி ஒரு உணர்வு எனக்கு இதை படிக்கும் பொழுது ஏனோ ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் பொழுது ஏதோ ஒரு திடுக்கிடும் திருப்பம் நமக்கு காத்திருக்கிறது அது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. அதுவே கதையை வேகமாக படிக்க தூண்டும் ஒரு உந்து சக்தியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பதவி வெறி, பண வெறி, குரோதம், சூழ்ச்சி, ஆகியவற்றால் இரு குடும்பங்களுக்குள் நடக்கும் பங்காளி சண்டையால் ஏற்படும் இழப்புகள் ஏமாற்றங்கள் அழியும் சாம்ராஜியங்கள், இதை சுற்றி தான் கதை நகர்கிறது. பொன்னர் சங்கர் இருவரும் வீரத்திற்கும் தீரத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக் காடு.

நல்ல கதை அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி.