Friday, April 17, 2009

தொலைக்காட்சி பெட்டியும் குடும்ப உறவுகளும்.



நண்பர்களே வணக்கம், எல்லோரும் சௌக்யம் தானே? சமீபத்தில் என்னை பாதித்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத என்னை தூண்டியது. அது என்னவென்றால், அலுவல் காரணமாக ஒரு முன் இரவு பொழுதில் நான் சைதாபேட்டை சென்றிருந்தேன். அலைச்சல் காரணமா மிகவும் களைப்புற்றிருந்தமையல் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம் என்று முடிவு செய்து ஒரு சின்ன ஆனால் சுகாதாரமான சூப் கடைக்கு சென்று ஒரு காளான் சூப் வாங்கி உட்கார்ந்து அருந்திக்கொண்டிருந்தேன். விலை பத்து ருபாய், பரவாயில்லை நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதில் அதிகபட்சம் அரை காளானுக்கு மேல் இருந்திருக்காது அதுவும் எவ்வளவு பொடியாக நறுக்கி போட்டிருந்தார்கள். சரி அதை விடுங்கள் இன்று காலம் அப்படி ஆகிவிட்டது. விஷயத்துக்கு வருவோம். எனக்கு எதிர் இருக்கையில் இரு சிறு பிள்ளைகள் அமர்திருந்தனர் 6 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் 3 வயது மதிக்கத்தக்க அவனது தங்கையும் அமர்திருந்தனர். அவர்கள் இருவரும் மிகவும் மும்முரமாக ஏன் தலைக்கு மேல் தங்கள் பார்வையை செலுத்திக்கொண்டிருந்தனர் என்னடா அதுவென்று பார்த்தல் வேறு ஒன்றுமில்லை நம் கலைஞர் வழங்கிய இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி தான். நான் நல்ல ஆறு அடிக்கு மேல் வளர்ந்தவன் ஆதலால் அந்த சிறுமிக்கு நான் அமர்திருந்தாலும் ஒன்றும் தெரியவில்லை பாவம் தவியாய் தவித்து போனால். ஆனால் பெருந்தன்மையான அந்த பாலகன் தங்கைக்கு இருக்கையை மாற்றி கொடுத்தான். ஆஹா நாம் அனைவரும் குழைந்தளாகவே இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. பிறகு அந்த குழந்தைகள் அந்த கடைக்காரரின் குழந்தைகள் என்று தெரிய வந்தது. 


அவர் தன் மகளை "வாமா செல்லம் சும்மா பைக்ல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்"னு கூப்பிடுகிறார் ஆனால் அந்த சிறுமியோ வைத்த கண் எடுக்காமல் இந்த பாழாய் போன தொலைக்காட்சியையே பார்க்கிறாள், அதுவும் எதோ குழந்தைகள் நிகழ்ச்சி என்று பார்த்தால் இசையருவி சானலில் தனுஷ் அவர்கள் தமன்னாவை அப்பம்மா வெளையாட்டு விளையாடுவோமா என்று கேட்கிறார்???? என்ன கொடும சார் இது?? குழந்தைகள் இயல்பாகவே பெற்றோருடன் வாகனத்தில் வெளியில் செல்ல பிரியப்படுவர் என்பதை பலமுறை முன்பு பார்த்திருக்கிறேன், சில காலங்களுக்கு முன்பெல்லாம் காலையில் அப்பாக்கள் வேளைக்கு செல்லும்முன் கண்டிப்பாக தங்கள் குழந்தையை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பிறகு கொஞ்சி விட்டு தான் செல்வர் ஆனால் இன்று?? இது ஒரு கொடுமை என்றால் இந்த அம்மாக்கள் நெடுந்தொடர் பார்த்துக்கொண்டு பன்னும் சலம்பல் இருக்கே அப்பப்பா பாவம் கணவர் வேலையில் இருந்து களைப்பாக வருவார் சரி மனைவியுடன் ஆசையாக நாலு வார்த்தை பேசிவிட்டு அவள் கைய்யால் ஏதாவது சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் வருவர். ஆனால் நடப்பது என்ன??  அரசியும் அபியும் நடுவீட்டில் தாண்டவமாடும்போது இவர்களுக்கு எங்கு கணவர் வருவதோ குழந்தை அழுவதோ தெரிய போகிறது??


இப்பொழுது சில வருடங்களாக ஒரு புது தொல்லை வேறு, "இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக திரைக்கு வந்து சில நாட்கலேயான சூப்பர் ஹிட் திரைப்படம்" என்ன வென்று பார்த்தல் ஒரு வாரம் கூட திரையில் ஓடாத நமத்துப்போன ஏதாவது மொக்கை படம். சுதந்திர தினத்தன்று நமீதா பேட்டி வேறு, பாவம் சுதந்திரத்திற்காக ரொம்பதான் பாடு பட்டார்ல!!!!!!!! இந்த பாடலாசிரியர்கள் தொல்லை அதுக்கு மேல் இருக்கு, என்ன கருத்துள்ள பாட்டுக்கள், "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா........." "லோக் லோக் லோக்கலு நான் லோக்கலு............." அய்யா நீங்க லோக்கலுனு எல்லாருக்குமே தெரியுமே பெறவு ஏன் தம்பட்டம் அடிக்கறீங்க?? நமக்கு எது வருதோ அதோட நிறுத்திக்க வேண்டியது தானே?? 

அடுத்தது இந்த இயக்குனர்கள் தொல்லையை நாம் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும், கதைக்கு தேவை பட்டதால் தான் அந்த முத்த காட்சியை வைத்தேன், அதனால் தான் இந்த நிர்வாண காட்சியை வைத்தேன், மக்கள் என்ன எதிர்பார்கிரார்களோ அதை தான் நாங்கள் குடுக்கிறோம் என்று ஒரு இயக்குனர் சொன்னார். இதை பற்றி திரு.சிவகுமார் அவர்கள் ஒரு பேட்டியில் "வருகிறவர்கள் எதிர்பார்பதால் தான் இந்த தொழில் செய்கிறேன்" என்று ஒரு விலைமாது சொன்னால் அதே போன்று நீங்கள் சொல்லிக்கொண்டு இப்படி படம் எடுக்கிறீர்களே பிறகு அவர்களுக்கும் உங்களுக்கும் என்னய்யா வித்தியாசம்??. மண்டையில் அடித்தார் போல் கேட்டாரே ஒரு கேள்வி?? உறைக்குமா இவர்களுக்கு?? 








நடிகைகளை பற்றி நாம் எதுவும் எழுதாமல் போனால் இந்த பதிவு முழுமை பெறாமல் போகும், இப்பொழுது அவர்களை பற்றி பார்போம். மேலே உள்ள படங்கள் எப்படி?? சும்மா ஆபாசதுல அதிருதுல இவர்களை கேட்டால் நாங்கள் ரொம்ப "Expose" பண்ணாம கிளாமரா நடிக்கிறதுல என்ன தப்புன்னு அப்பாவியா கேக்குதுங்க புள்ளைங்க. அதுல நீங்க இன்னும் என்ன எக்ஸ்போஸ் பண்ணலைனு நெனைக்கறீங்க??? ஏன் நீங்க இப்படி நடிச்சா தான் படம் பார்க்க வருவேன்னு எந்த மடையனாவது சொன்னானா??

அய்யா நல்லவங்களே சினிமா தொலைக்காட்சி எல்லாம் வியாபாரம் தான் ஆனா நமக்குன்னு ஒரு வாழ்கை முறை கலாசாரம் பண்பாடுன்னு இருக்குது (குத்துயிரும் குலையுயிருமா) அதை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விடாதீர். தரமான படங்களை மக்கள் என்றும் இருகரம் கூப்பி வரவேற்பர், இதற்க்கு சமீபத்தில் கூட எவ்வளவோ எடுத்துக்காட்டு இருக்க்கிறது.  இப்படிக்கு நல்ல படங்களை எதிர்பார்க்கும் ஒரு ரசிகன். நன்றி.










நானும் சினிமாவும் மற்றும் மொக்கை படங்களும்


சினிமா, இந்த மூன்றுஎழுத்து மந்திர சொல் நம் அனைவரது வாழ்விலும் நீங்காத ஒரு இடம் உண்டு. நமக்கான ஒரு பொழுதுபோக்குஆக இல்லாமல் சில படங்கள் நல்ல கருத்தையும் சொல்வதுண்டு. எந்த ஒரு விசயம்னாலும் அதற்கு எதிர்வினையும் உண்டு ஏன் என்றால் திரைப்படங்களை பார்த்து வன்முறையில் ஈடுபடுவோரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை சினிமாவை விட சிறந்த பொழுதுபோக்கு எதுவுமில்லை,முக்கியமா ஒரு விஷயம் அது நாம எந்த படத்துக்கு போறம்னு அத பொறுத்து இருக்கு,இல்லன தலைவலி தான்.

என்னோட சில நண்பர்களிடம் அருந்ததி படம் பார்த்ததாக கூறினேன் நண்பர்களில் பாதி பேர் "ஏன்டா அந்த படத்துக்கு போன" என்று என்னை எதிர் கேள்வி கேட்டார்கள் "நீ இன்னும் படத்துக்கு போறதா உடலையானு" கேட்டாங்க. எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நாம டைம்பாஸ்க்கு படத்துக்கு போறோம் எதுக்கு அதை போய் அவர்களிடம் சொல்லி ,ஒரு வேலை நம்ம ஊருல ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படம் மட்டும் தான் பார்க்கணும் போலன்னு நினைத்தேன். அருந்ததி படம் ஓரளவுக்கு சில காட்சிகள் மொக்கையாக இருந்தது தான் ஒத்துக்குறேன் ஆனா அந்த மாதிரி ஒரு படம் தமிழில் வந்ததில்லை அதை டப் செய்து தமிழுக்கு வரும் பொது அதை பார்ப்பதில் தவறு ஏதுமில்லை.

நான் பி.சி.ஏ. படிக்கும் பொது நேரிய மொக்க படம் பார்த்து இருக்கேன் அதை எல்லாம் வெளிய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கும். சில படங்கள் பாட்டுகாக சில படங்கள் கேமராகாக சில படங்கள் நடிகர்களுக்காக ஆனால் எனக்கு மிஞ்சியது ஏமாற்றம். "சூரி"நு ஒரு படம் விக்னேஷ்,பார்த்திபன் நடிச்சது டைரக்டர் வந்து ஷங்கர் உதவியாளர், அப்புறம் படத்துல ஒரு பெண்களுக்கு எதிர ஒரு பாட்டு. கண்டிப்பா இந்த படம் பாக்கனும்னு நான் முடிவு பண்ணினேன், வூட்லண்ட்ஸ் திரைஅரங்கில் படம் ரிலீஸ் ரிசர்வ் செய்தோமா என்று நினைவில் இல்லை. இதெல்ல வேற என் நண்பர்கள் சிலர் மருகம்மால் படத்துக்கு வந்தனர் படம் பாத்து நொந்தனர். சூரி மாதிரி பல படங்களை நான் நம்பி பாத்துஉள்ளேன். சரி நான் பார்ப்பது இந்த மாதிரி மொக்கை படம் மட்டும் தான? இல்லை நானும் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை முதல் நாள் பார்ப்பேன். ஏன் ரஜினி கமல் விஜய் அஜித்(ஐயோ) போன்றவர்கள் மொக்கை படத்தை நமக்கு தந்தது இல்லையா? பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் , குசேலன், குருவி, வில்லு. அஜித் படத்த பத்தி சொல்லவே வேணாம். ஆனா இப்பவும் நல்ல தரமான படங்கள் வந்து கொண்டு இருக்கிறது வெண்ணிலா கபடி, பொம்மலாட்டம்(இது நேரடி படமாக இருந்தால் கண்டிப்பாக ஓடி இருக்கும்), யாவரும் நலம், நான் கடவுள் போன்று நேரிய படங்கள் வருகின்றன.

எதுக்காக இதெல்லாம் சொல்லி நான் மொக்கை போட்றன்னு நீங்க கேக்கலாம். நான் முடிஞ்ச வரைக்கும் படம் ரிலீஸ் ஆனா ஒரு வாரத்துக்குள் பார்த்து விடுவேன் ஏன் என்றால் படம் பார்ப்பது எனக்கு பிடிக்கும் அதுக்குன்னு மொக்கைநு தெரிஞ்ச நான் போகமாட்டேன். எப்படி அடுத்தவர்கள் கிரிக்கெட் மேட்ச் தொலைகாட்சியில் கண்டு ரசிபார்கோல அது போல் நான் சினிமாவை பார்த்து ரசிக்கிறேன். நான் சினிமா பார்ப்பதை குறை கூறுபவர்களுக்கு (நண்பர்கள், என் வீட்டில் உள்ளவர்கள் ) ஒன்றை மட்டும் சொல்ல ஆசை படுகிறேன் " சினிமா என் முக்கியமான பொழுதுபோக்கு, நான் சினிமா பார்பதனால் யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லை. மொக்கை படம் பார்க்கிறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன் தப்பு".





Tuesday, April 14, 2009

Lasik Laser அறுவை சிகிச்சை



நண்பர்களே வணக்கம், இந்த பதிவு என்னை போன்று மூக்குகண்ணாடி (spectacles) மற்றும் காண்டாக்ட் லென்ஸ் (contact lens) அனிந்து சிரமப்படும் அன்பர்களுக்காக. நான் கடந்த 14 வருடங்களாக இந்த கண்ணாடிய போட்டுட்டு பட்ட பாடு சொல்லி மாளாது, அப்பப்பா நிம்மதியா ஒரு கூலர்ஸ் போட்டுட்டு சீன் போட முடியல நீச்சல் அடிக்க முடியல (நமக்கு தான் கண்ணாடிய போடலைனா கண்ணு ஒரு எளவும் தெரியாதே). இப்போ இரண்டு வாரம் தான் ஒரு சுதந்திர பறவையை போல் இருக்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருவோம், நான் இரண்டு வாரத்துக்கு முன்பு தான் இந்த அதிநவீன லேசிக் லேசர் சிகிச்சையை மேற்கொண்டேன். அப்பாடா இந்த மருத்துவ உலகம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று எண்ணி வாயடைந்து நிற்கிறேன். என்னோட இத்தனை வருட தொல்லையை வெறும் 8 நிமிடங்களுக்குள் மறைய செய்துவிட்டது. 

பதினெட்டு வயது பூர்த்தியாகிய பிறகு தான் ஒருவர் இந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும், ஏனென்றால் அதற்கு பிறகு தான் நம் கண்ணின் அமைப்பு மாறாது. நீங்கள் Contact Lens உபயோகிப்பவரானால் மருத்துவரை அணுகுவதற்கு குறைந்தது ஒரு 15 நாட்கள் முன்பே அதை தவிர்க்க வேண்டும். பின் பல்வேறு சோதனைகள் செய்து நீங்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள தகுதியானவரா என்பதை மருத்துவர் முடிவு செய்வார். இதற்கு நீங்கள் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் ஒதுக்க வேண்டும்.

பின் மருத்துவர் உங்களுக்கு எப்படி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பதை மிக தெளிவாக விளக்குவார், கடுகளவேனும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். மேலும் இதில் பல வகைகள் உண்டு, பொதுவாக Lasik சிகிச்சை தான் பல மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது, இதற்க்கு காரணம் அதற்கு ஆகும் செலவு தான் (சற்று அதிகம் தான்). இந்த சிகிச்சை மேற்கொள்ள நான் விசாரித்ததில் Agarwal 40,000/- Sankara Nethralaya 35,000/- Reya Laser Vision Centre 38,000/- மற்றும் Lasik Laser Associates 30,000/- இப்படியாக உள்ளது. இந்த நேரத்தில் நான் ஒன்றை குறிப்பிட வேண்டும், பாதுகாப்பு துறையில் இந்த முறை சிகிச்சை செய்துகொள்பவர்களை அனுமதிப்பது கிடையாது. ஆனால் இப்பொழுது புதிதாக வந்துள்ள Intralasik முறையில் (Microkeratome என்ற நுண்ணிய கத்தி உபயோகப்படுத்தாத முறை) நீங்கள் சிகிச்சை செய்து கொண்டால் முதன் முறையாக அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது.

நான் மேற்கொண்ட Lasik சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்க கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


ஒரு மிக நவீன மிக சிறிய பிளேடு (Microkerotene) கொண்டு நம் கண்ணின் முன்பு உள்ள பகுதியில் (cornea)  ஒரு சிறிய பகுதியை (few microns) திறந்து (பயம் வேண்டாம்) அதை சற்று நீக்கிய பின்பு சிறிது விநாடிகள் லேசர் கற்றைகள் நம் கண்ணில் செலுத்தப்படுகிறது. பின் அந்த பகுதியை திறந்த மாதிரியே மூடி விடுகிறார்கள். அவ்வளவு தான் மேட்டர் ஓவர். ஒரு கண்ணுக்கு இதை செய்ய ஆனா நேரம் நான்கு நிமிடங்களுக்கும் சற்று குறைவு தான். வலி என்பது ஒன்றும் இல்லை. சிகிச்சை மேற்கொண்ட சற்று நிமிடங்களிலே பார்வையில் நன்றாக வித்தியாசம் உள்ளது.
அன்று ஒரு நாள் மட்டும் கண்னை திறக்காமல் மூடி இருப்பது நல்லது. சிலருக்கு கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற தொல்லைகள் அன்று ஒரு நாள் மாட்டும் ஏற்பட வாய்ப்பு உண்டு ஆனால் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. மருநாள் முதல் பலுவற்ற வேலைகள் செய்யலாம். சொட்டு மருந்து விட வேண்டும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் வெயிலில் செல்லும்பொழுது கருப்பு கண்ணாடி அணிவது நல்லது, அது கூட பரவாயில்லை ஆனால் மொத்தம் இரண்டு வாரங்களுக்கு இரவில் என்னால் வாகனம் ஓட்டிசெல்ல முடியவில்லை அவ்வளவு Glare. ஆனால் படிப்படியாக நல்ல முன்னேற்றம் இன்று ஒரு பிரச்னையும் இல்லை. கணினி உபயோகம் மற்றும் சற்று சிரமமாக உள்ளது, தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகப்படுத்த இயலவில்லை.
 
முடிவாக நான் சொல்லுவது என்னவென்றால் வருடம் ஒரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று பிறகு கண்ணாடி மாத்தி, இந்த வேலையெல்லாம் செய்து சிறிது சிறிதாக செலவு செய்வதைவிட மொத்தமாக ஒரே முறை இந்த சிகிச்சை மேற்கொண்டு நிம்மதியாக இருங்கள்.  நான் சென்ற இந்த நாலு இடத்திலும் நான் பார்த்த வரையில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது ஐந்து சிகிச்சை செய்கின்றனர் தினமும். எந்த ஒரு வலியும் இல்லாம நோகாத நொங்கு உரிக்கிற வேல.





தேர்தல் களத்தில் இளம் தொழிலதிபர்

சரத்பாபு அவர்கள் இளம் தொழிலதிபர் ஆவார் இவர் பிட்ஸ் பிலானியில் பட்டம் பெற்றவர். இவர் புகழ் பெற்ற கல்லூரி மற்றும் ஆபீஸ்களில் கான்டீன் நடத்துகிறார் இவரிடம் பல பேர் பணிபுரிகிறார்கள். திரு.சரத்பாபு அவர்கள் நம் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர். இவரின் அம்மா இட்லி கடை நடத்தி தன் பிள்ளைகளை படிக்க வைத்தார். தற்போது வரும் தேர்தலில் சரத்பாபு அவர்கள் சுயட்சையாக தென்சென்னை பகுதியில் நிற்கிறார்.

தற்போதுள்ள இளைஞர்கள் அரசியலை சாக்கடை என்று ஒதுங்கும் நேரத்தில் சரத்பாபு ஒரு நம்பிக்கையான முடிவு எடுத்துள்ளார். சரத்பாபு பின்னால் இளைஞர்கள் கூட்டம் இருக்கிறது அவரின் தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை தருமா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். சரத்பாபு வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்.

Sunday, April 12, 2009

திரை அரங்கினில் சில இம்சைகள்

பொதுவாக நாம் ஏன் படத்துக்கு போறோம், ஒரு டைம் பாஸ்க்கு போவோம் இல்லன நண்பர்கள் அழைத்ததின் பேரில் செல்வோம். படம் ஓடற அந்த மூன்று மணி நேரம் எந்த பிரச்சனை இருந்தாலும் அதை மறந்து நாம் படத்தை ரசிக்க முக்கியமா போறோம். ஆனால் நாம திரை அரங்குக்கு சென்றால் படம் பார்க்க வருபவர்களை இம்சிக்க ஒரு கூட்டம் அலையுது. சில பேர் திரை அரங்கை லாட்ஜ்அக எண்ணுகிறார்கள் அவர்கள் தங்கள் வேலையை அமைதியாய் செய்தாலும் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு தருகிறார்கள்.

சமீபத்தில் நானும் என் நண்பனும் சத்யம் சினிமாஸ்க்கு யாவரம் நலம் முதல் முதல் காட்சி சென்றோம். எங்களுக்கு மூன்று, நான்கு இருக்கைகள் ஒதுக்க பட்டன . எனக்கு பக்கத்தில் உள்ள ஒன்று , இரண்டு இருக்கைக்கு படம் ஆரம்பித்தும் ஆள் வரவில்லை. சுமார் முப்பது நிமிடங்கள் கழித்து ஒரு ஆணும் பெண்ணும் வந்தார்கள். படம் முதல் பாதி கொஞ்சம் வீறுவீறுபாய் சென்றது. படம் இடைவெளியில் நான் அவர்களை பார்த்தேன் "சத்யமா அவங்களுக்கு தமிழ் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்லை ". படம் தொடங்கியது இரண்டாம் பாதி திகில் உடன் சென்றது. சும்மா பக்கத்துல எதொச்சையாக திரும்பினால் அந்த வாலிபன் அவள் மேல் படுத்து இருக்குற மாதிரி இருந்தது... ஆஹா கைய போட்டுட்டு இருக்கான் போலன்னு பார்த்த அவன் வேற என்னமோ பண்றான்னு மட்டும் தெரியுது , இன்னும் உட்ட என்னவெல்லாம் செயவோன்களோ. இந்த செய்கை எனக்கு தொந்தராவாக இருந்தது. அப்புறம் படம் முடியறதுக்கு முப்பது நிமிடங்கள் முன்னதவே கிளம்பிடங்கா. அந்த வாலிபன் வந்த வேலை முடித்து விட்டு கிளம்பி விட்டான் என்று எனக்கு புரிந்தது.

இன்னொரு வகை தொந்தரவு தருபவர்கள் இருக்கிறார்கள், அது இருக்கை மாறும் பிரச்சனை. சில பேர் தன் மனைவி துணைவியோடு வருவார்கள் அவர்களக்கு ஒதுக்க பட்ட சீட் பல ஆண்கள் இருந்தால் தள்ளி உட்கார சொல்லி இம்சை அளிப்பார்கள். இப்பொது உள்ள நடைமுறையில் நமக்கு என்ன சீட் வேண்டுமோ நாம் கேட்டு பெற்று கொள்ளல்லாம் அதை விட்டு விட்டு நமக்கு தொந்தரவு தருவார்கள். கடைசியில் நான் சொல்வதெல்லாம் நீங்க கை போடுங்க வாய் போடுங்க அத காலியாக இருக்கும் மொக்கை படத்துக்கு போய் பண்ணுங்க தயவு செய்து நல்ல படத்துக்கு வந்து தொந்தரவு தராதிங்க.

இப்படிக்கு
உங்கள் ஜெட்லி