Friday, August 19, 2011

மேற்கு மலை தொடர்ச்சியில் -- பயண கலாட்டா அனுபவங்கள்.

மேற்கு மலை தொடர்ச்சியில்...!!




இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு தடவை எனக்கு வருமான்னு தெரியல... கல்யாணத்துக்கு அப்புறம் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா என்பது ஒரு வரம் தான். கண்டிப்பா இந்த பயணம் எனக்கு மட்டுமில்ல என் கூட வந்த மற்ற பதிமூணு நண்பர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். GHATIKALLU அப்படின்னு கர்நாடகா மாநிலத்தில் ஹொரநாடு போற வழியில் இருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியாவில் அதிக மழை அளவு பதிவான இடம். எந்த வித செயற்கை சத்தமில்லாமல் இயற்கை சத்தத்தை மட்டுமே ரெண்டு நாளும் சுவாசித்தோம் அனைவரும்.அது தவிர இங்குள்ள அனைத்து இடங்களும் அருவி உள்ப்பட தனியாருக்கு சொந்தமானதாம்.



சரியா சனிக்கிழமை 13.8.11 அன்று 11.30 மணிக்கு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் அமர்ந்தோம். ட்ரெயின்லேயே எங்க ஆட்டம் கல கட்ட ஆரம்பிச்சுருச்சு.ஒரு பக்கம் சீட்டாட்டம் மறுபக்கம் போட்டோ செச்சன் என்று போய் கொண்டு இருந்தது.சேலம் வந்ததும் எங்கள் jason.... bourn(சாரதா பிரசாத்) வீட்டில் இருந்து பழங்கள் வந்து குவிந்தது. நண்பர் நிர்மல் வீட்டில் இருந்து ஜவ்வரசி உப்புமா வந்தது..செம சூப்பர்.அப்புறம் எங்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படும் பிரசன்னாவின் நண்பர்கள் திருப்பூரில் சிக்கன் பகோடா கொடுத்தது ரொம்ப உதவியா இருந்தது.இரவு கோவையிலிருந்து நண்பர் ரங்கா வீட்டில் இருந்து புளியோதரை வந்தது...மிக அருமை...!!




ட்ரெயின்லேயே பல சம்பவங்கள் நடந்தது....எங்கள் சீட்டில் உட்கார்ந்து வந்த
அஞ்சு பேரில் ஒருவர் தீடிர் என்று என்னிடம் வந்து தோள் மீது கை வைத்து.
தம்பி நீங்க எல்லாம் ஏதோ காலேஜ் இல்ல ஆபிஸ்ல இருந்து ஒன்னா வந்து
இருக்கீங்க நான் உங்க சுதந்திரத்தை தடுக்க விரும்பல...சீட்டு ஆடறது
ஆபன்ஸ்..நாங்க எல்லாம் போலீஸ் அக்யுஸ்ட்ட கூட்டிட்டு போறோம் அதனால வெளி ஆள உள்ள சேர்க்காதீங்க...அப்படின்னு சொல்லிட்டு போனாரு...அப்படியே நாங்க எல்லாரும் பயந்துடுவோம் அப்படின்னு நினைச்சாரு போல... இன்னும் சவுண்ட் தான் ஓவர்ஆ போச்சு... ஒரு வேளை அவரு போலீஸ்ஆ இருந்தா இந்த உலகத்திலே அக்யுஸ்ட்டுக்கு கொய்யா வாங்கி கொடுத்த மொதல் ஆள் அவரா தான் இருப்பார்..!!னு காலாசிட்டே போனோம்.








குதிரை மூக்கு


நண்பன் 'காரசேவ்' தனா மற்றும் 'புத்தர்' சாய் அவர்கள் கூட நான் அடித்த லூட்டி கொஞ்சம் நஞ்சமல்ல.. ட்ரெயின் அதிகாலை 4.20 க்கு எல்லாம் மங்களூர் அடைந்தது.அங்கிருந்து மினி பஸ்ஸில் காடிக்கல்லுவுக்கு பயணம். நாலு மணி நேரம் ஆகும்னு சொன்னார். ஆனா நாங்க போய் சேர்ந்தது 10 மணிக்கு மேல் தான். ரோட் எல்லாம் பயங்கரமா இருந்தது. நடுவுல ரெண்டு மூணு இடத்தில் இறங்கி ஏறி போனதும் லேட் ஆனதுக்கு காரணம். அப்புறம் பஸ்ஸில் ஒரு தெலுங்கு படம் ரவிதேஜா நடிச்சது மிரப்பகாய் என்ற படம் பார்த்து கொண்டே போனோம். அதில் வரும் ஆன்டி சொல்லும் அப்பா...என்ற டயலாக் ரெண்டு நாள் எங்களுக்குள் ஓடியது. குதிரை மூக்கு னு ஒரு இடம்..அட அட... அங்கேயே ஹோட்டல் இருந்தா கூட தங்கி இருந்து இருக்கலாம். அந்த இடமே அவ்வளவு குளுமை.நாங்க போக வேண்டிய இடம் அங்கிருந்து நாப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.













நாங்கள் ஏற்கனவே புக் பண்ணிருந்த ஹோம் ஸ்டேக்கு போனவுடன் காலை உணவை சாப்பிட ஆரம்பித்தோம். கடு என்ற இட்லி மாதிரி உருண்டையாக கொடுத்தார்கள். செம டேஸ்ட். அதை விட அவங்க கொடுத்த சட்னி சூப்பர்ஒ சூப்பர். மொழி தெரியாதது எங்களுக்கு பெரிய பிரச்சனையா தெரியல.. நண்பர் பிராணேஷ் கன்னடத்தில் நல்லாவே மாடி கட்டினார். சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அருவிக்கு கிளம்பினோம். மொத்தம் ரெண்டு அருவி இருக்குனு சொன்னாங்க. 300 அடி அருவிக்கு அரை மணி நேரம் நடக்கனும்
அட்டை நிறைய இருக்கும்னு குளிக்கவும் முடியாதுனு சொன்னார். அதனால இன்னொரு அருவிக்கு போனோம் அங்கே இருபது நிமிஷம் நடக்கனும். அங்கே அருவி பக்கத்தில் விட்ட ஜீப் டிரைவர் செம பாஸ்டாக வண்டி ஓட்டினார். பிராணேஷ், ஏன் இவ்வளவு வேகமா ஓட்டுறீங்க என்று கேட்டதற்கு அந்த டிரைவர் தன் எட்டு வருஷ சர்வீஸ்ல் வந்த முதல் கம்ப்ளைன்ட் என்றார்.


அங்கே போற வழியில் தான் ' காரசேவ் கூட சண்டை போட்ட எங்கள் உரசல் நாயகன்' அரவிந்த் அவர்கள் மீது ஒரு சின்ன அட்டை சாக்ஸ்ல ஏறிடுச்சு. கத்தியால அதை சிதைசிட்டாறு. அருவியை கண்டதும் செம குஷி. ஆனா பெரிய சின்ன பாறை எல்லாம் காலை பதம் பார்த்தது. நல்லா குளியல் போட்டோம். திரும்பவும் ரிட்டன் வரும் போது ஷார்ட் ரூட் கொஞ்சம் டேஞ்சர்ஆக தான் இருந்தது.



3 மணி வாக்கில் திரும்பவும் ரூம் வந்தோம். நல்ல சாப்பாடு.மொத நாள் ரசம் தான் கொஞ்சம் நல்லா இல்லை. அப்புறம் ரெஸ்ட் எடுக்காம கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சோம்.நான் எப்பவும் போல டக் தான். பாலை தூக்கி அடிச்சா அவுட்னு சொல்றாங்க நான் என்னங்க பண்றது. அப்புறம் நைட் கேம்ப் பைர்.. பாட்டு பாடி செம கலாட்டா. அன்னைக்கு நைட் சுதந்திர தினத்தை கொண்டாட என்று நிர்மல் போட்டு வந்த இங்கிலாந்து டி.ஷர்ட்டை எரிப்பதில் பிரசன்னா மற்றும் அவரது குழு மிகவும் ஆர்வமாக இருந்தது. அப்புறம் சுதந்திரம் பத்தி ரெண்டு ரவுண்ட் பேசினதில் இருந்து யாருமே கொண்டாடவில்லை. 'காரசேவ்' தனா சைட் டிஷ்சை தொடவே இல்லை என்பதை இங்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன்.


இரண்டாவது நாள்:





("காராசேவ் வீரன்" அரவிந்த், காட்டு சாரதா, காமேஷ்)



அனைவராலும் வெள்ளை மற்றும் வைட்டி என்று அழைக்கப்படும் அருண் அவர்களை முதல் நாள் மாலையே அட்டை கடித்து இருந்தது. அருணுக்கு ரத்தம் நிக்கவே இல்லை.நள்ளிரவு மூணு மணிக்கு தான் நின்னதாம். காலையில் ட்ரெக்கிங்க்கு கிளம்பினோம்.அங்கே தான் எங்களுக்கு காட்டிகல்லு மலையை காட்டினார்கள். செம செம...!!

நாங்கள் தங்கும் இடத்தில் இருந்து ஜீப்பில் போவாதே மிக பெரிய ஆனந்தம். ஏதோ ரோலர் கோஸ்டரில் செல்வது போல் இருக்கும். நண்பர் காட்டு சாரதா அவர்கள் அந்த ஜீப்பில் ஓட்டு கேட்டு, கமாண்டர் ஆபரேஷன் செய்தது, வழியில் பார்ப்பவை அனைத்தையும் காட்டு பைக், காட்டு ஆயானு சொல்லிட்டு வந்தான்.








ட்ரெக்கிங் என்றதும் கொஞ்சம் அட்டை பயம் இருந்தது. 8 கிலோ மீட்டர் ட்ரெக்கிங் தேர்ந்து எடுத்தோம். பள்ளலர்யா கோட்டையை பார்க்க மலை ஏறி செல்ல வேண்டும்.என் பின்னாடி நைரோபி மணி அவர்கள் துணையாக வந்தார். நண்பன் காமேஷ் உதவியோடு மலையேறி சேர்ந்தேன். தனாவுக்கு என்னைவிட நாக்கு கொஞ்சம் அதிகமாவே தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனா இந்த மாதிரி இயற்கை அழகை ரசிக்க எவ்வளவு தூரம் வேணும்னாலும் நடக்கலாம். தீடிர்னு லைட்ஆ வெயில் அடிக்கும் அப்புறம் மேகமூட்டம் இருக்கும். நாங்கள் கோட்டையை அடைந்த கொஞ்ச நேரத்தில் மழை பெய்து எங்கள் வியர்வையை நினைத்தது.




சைக்கோ சாமியார் சாய் அவர்கள் மலை மீது மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்தவுடன் குஷி ஆகி கத்த ஆரம்பித்து விட்டார் நானும் வைட்டியும் டென்ஷன் ஆகிட்டோம். எங்கே மாடு மிரண்டுற போதுன்னு. கொஞ்ச நேரம் கோட்டையில் (வெறும் சிதைந்த மதில் சுவர் தான்) ஓய்வு எடுத்து மீண்டும் மலையை விட்டு இறங்க ஆயுத்தமானோம். மலை இறங்கவுது கொஞ்சம் ஈஸி தான். நடுவில் ஒரு இடத்தில் வந்த தண்ணீர் மிகவும் அருமை.



திரும்பவும் வந்து மதிய உணவு உண்டோம். ஏதோ அக்கி ரொட்டினு சொன்னாங்க நானும் மூணு வாங்கிட்டேன் பார்த்தா ஒண்ணு தின்னாலே வயிறு புல் ஆகிடுச்சு.அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு ரசம் விட்டு சாதம் சாப்பிட்டேன். மீண்டும் கொஞ்ச நேரம் ரெஸ்ட். அப்புறம் சன்செட் பாயிண்ட் போனோம்..உண்மையிலே செம... அங்கே எந்த விதமான அட்டை பூச்சியும் இல்லை. சாயங்காலம் விடுதிக்கு வந்ததும் நண்பர் சேர்மன் வினோத்துக்கும் ராஜேஷ்க்கும் பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் சமரசத்துக்கு வந்ததாக கூறினார்கள். வினோத் பேச்சு வார்த்தையின் போது குண்டு வெடித்ததாக பிராணேஷ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (எதுவும் புரியலையா..?? அவங்க அவங்களுக்கு தான் புரியும்...)




இரவு டின்னர் முடித்து அங்கிருந்து ஜீப்பில் பஸ் ஏற ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். அங்கே மீண்டும் என்னையும், நிர்மல் மற்றும் நைரோபி மணியையும் கலாய்க்க ஆரம்பித்தனர். அந்த ஸ்பாட் செம காமெடி.மாத்தி மாத்தி கலாய்ச்சு வயிறு வலி வந்திருச்சு. அங்கிருந்து பஸ்ஸில் பெங்களூர் கிளம்பினோம். காலை ஆறு மணிக்கெல்லாம் பெங்களூர் வந்தடைந்து லால் பாக் எக்ஸ்பிரஸ் புடிச்சு சென்னை வந்து சேர்ந்தோம்...ரொம்ப பீல் பண்ண இடம்னா அது லால் பாக் எக்ஸ்பிரஸ் சீட் எல்லாருக்கும் ஒண்ணா கிடைக்கல. இருந்தும் கொஞ்சம் கலாய். அரவிந்த் கண்டிப்பா இந்த ட்ரெயின் பயணத்தை மறக்க மாட்டான்னு நினைக்கிறேன். அனைவரும் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தோம்.



நீங்களும் இந்த இடத்துக்கு செல்ல வேண்டுமானால் காண்டக்ட் செய்யவும்....
GURUDEV B.N. GOWDA (08263216660)


நன்றி
ஜெட்லி...(சரவணா...)








Tuesday, July 19, 2011

ஹாரிபாட்டர் கதை முடிஞ்சுது.....!!

ஹாரிபாட்டர் கதை முடிஞ்சுது.....!!




நான் முதல் ஹாரிபாட்டர் பாகத்தை ஜெயந்தி தியேட்டர்ல தான் பார்த்தேன்.... அப்புறம் அடுத்த அடுத்த பார்ட் பைலட், மோட்சம்னு அப்படியே போச்சு...நடுவுல ஒண்ணு ரெண்டு கூட மிஸ் ஆகி இருக்கலாம்...என்ன பெரிய ஹாரிபாட்டர் படம் துடைப்பக்கட்டையில் பறப்பது, கம்பி மத்தாப்பு வச்சு மாயஜாலம் பண்றது அப்படின்னு நீங்க நினைக்கலாம்...ஆனா அதையெல்லாம் தாண்டி படத்துல நிறைய இருக்கு.

இந்த கடைசி பாகத்துல ஹாரியோட நண்பர்கள் ரெண்டு பேரும் ரோன்னும் ஹெர்மாயினியும் பிக் அப் ஆகி எஸ்கேப் ஆயிடுறாங்க. ஹாரியோட அப்பா யாருன்னு தெரிய வருது. கடைசியா ஒரு வேப்பங்குச்சி மாதிரி இருக்கிற ஒரு மந்திரகோளை ரெண்டா உடைச்சு ஆத்துல போட்டுராறு நம்ம ஹாரி கண்ணு...!!





நம்ம காசினோல தமிழ் 3-D தான் பார்த்தேன்...பக்கத்தில் கெயிட்டி தியேட்டர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஆக உருவாகி வருகிறது...தினத்தந்தியில் கெயிட்டி தியேட்டர் பத்தி போட்டு இருந்தாங்க...ஆனா நான் படம் பார்க்கும் போது அந்த மாதிரிலாம் எதுவுமே இல்லை....!!


நான் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கிறுக்குன ஒரு பதிவை கிழே பேஸ்ட் பண்றேன்....படிச்சுட்டு சொல்லுங்க....



&&&&&&&&&&&&&&



ஹாரிபாட்டரும் எட்டுப்பட்டி நாட்டாமையும்.
****************************************************
னேனேன்னே....னேனேன்னே... என்ற பின்னணி இசையுடன்
நாட்டாமை விஜயகுமார் வந்து ஆலமரத்தடியில் இறங்குகிறார்.

நாட்டாமை: என்னடா பிராது இன்னைக்கு?

கவுண்டர்மணி: அய்யா நம்ம ஊர் ஹோவர்ட்ஸ் ஸ்கூல்ல
இந்த பானை மண்டையன் ஹாரிபாட்டர் ஒரு பெண்ணை கெடுத்துட்டான்ங்க......

நாட்டாமை: யாரது கண்ணு ஹாரிபாட்டர்.

ஹாரிபாட்டர்: நான் தாங்க அய்யா... என் மந்திரத்தால உங்க உடம்புல உள்ள சந்தனத்தை எடுத்துருலாம் அய்யா.... என்று மந்திர குச்சியை எடுக்கிறான்.

நாட்டாமை(கோபமாகிறார்): டாய்...ஹாரிபாட்டர் கண்ணு, நான்
இந்த சந்தனத்தை பூச ஒரு மணி நேரம் ஆகும்.இதுக்கு என்புள்ள சரத்குமாரும் குஷ்பூவும் உதவி செய்வாங்க... அத நீ எடுக்க போறியா கண்ணு. உன் குச்சை உள்ள வை.

ஹாரிபாட்டர் டர்ராகிறார்......

நாட்டாமை: ஏன் தம்பி! உன் குச்சியை(மந்திர) வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா..... நீ ஏன்டா அந்த புள்ளையை கெடுத்த?

ஹாரிபாட்டர்: அய்யா...நான் அவ ரூமுக்கு போனது உண்மை, ஆனா
எனக்கு முன்னாடி யாரோ அவளை கெடுத்துட்டாங்க......

நாட்டாமை: அப்போ நீ அவளை கெடுக்கத்தான் போன கண்ணு.

ஹாரிபாட்டர்: ஐயோ இல்லைங்க... பாடத்துல ஒரு டவுட் அதான் போனேன்...இது ஏதோ ஒரு தீயசக்தியோட வேலைன்னு
நினைக்கிறேன்.இதெக்கெல்லாம் காரணம் அந்த வோல்டிமொர்ட்
தான் அய்யா.

நாட்டாமை: உனக்காக யாரும் சாட்சி சொல்ல வருவாங்களா?....

ரோன்(பாட்டரின் நண்பன்): அய்யா நான் பார்த்தேங்க.....

நாட்டாமை: யாரு கண்ணு நீ...

ரோன்: நான் ஹாரிபாட்டர் நண்பங்க...

நாட்டாமை: செல்லாது கண்ணு.

ஹெர்மாயினி (பாட்டரின் தோழி): அய்யா நான் பார்த்தேங்க...

நாட்டாமை: நீ யாரு கண்ணு.

ஹெர்மாயினி: பாட்டர் என் பெஸ்ட் பிரண்டு....

நாட்டாமை: செல்லாது செல்லாது....

அப்போது அங்கே ஹோவர்ட்ஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர்
டம்ப்ல்டோர் வருகிறார்.

கவுண்டர்மணி: நாட்டாமை அய்யா.. இந்த செம்மறி ஆட்டு மண்டையன் தான்ங்க டம்ப்ல்டோர்.

நாட்டாமை: என்னடா பேர் இது. டபுள்டோர், சிங்கள்டோர்ன்னு.
[Image]
டம்ப்ல்டோர்: நாட்டாமை நியாயம் செத்து போச்சு, நீதி தொத்து போச்சுஹாரிபாட்டர் சின்ன பையன் அவன் இத செய்ஞ்சு இருக்க மாட்டான்.

கவுண்டமணி: சின்ன பையன் செய்யல, அப்ப பெரிய மனுஷன் நீ
செய்ஞ்சியா? என்று டம்ப்ல்டோரிடம் ஏறுகிறார்.

டம்ப்ல்டோர்: கெடுக்கப்பட்ட அந்த பெண்ணோட ரூம்ல சந்தன
வாசம் அடித்தது, அது மட்டும் இல்ல அவ உடம்பு மேலையும்
சந்தனம் இருக்கிறது. இதில் இருந்து யார் காரணம்னு தெரியுலேயே
நாட்டாமை.இது தீயசக்திகளின் வேலை. அவங்களை எதிர்க்கிற
நேரம் வந்துடிச்சு.

கவுண்டமணி: யோ..அப்ப நீ என்ன நாட்டாமைதான் இந்த
காரியத்தை செய்ஞ்சார் அப்படின்னு சொல்றியா....

அதற்குள் நாட்டாமை சுதாரித்து

என்னடா சொல்லிபோட்ட நீ...
உன்னை இந்த எட்டுப்பட்டி கிராமத்தை விட்டு
ஒதுக்கி வைக்கிறன்டா....
இனிமே சுத்துபட்டியிலே எந்த டாஸ்மாக்
கடைலயும் உனக்கு சரக்கு தர மாட்டங்கடா.
இதாண்டா இந்த நாட்டமை தீர்ப்பு.


பசுபதி வண்டியை உடுறா.....

நாட்டாமை(தனக்குள்): இனிமே இந்த மாதிரி தப்பு காரியம்
செய்யும் போது சந்தனத்தை தடவாம போனும்......

நாட்டாமை பாதம் பட்ட இந்த வெள்ளமாய் விளையுமடி
நம்ம நாட்டாமை கை அசைச்சா....................



நன்றி

ஜெட்லி...(சரவணா...)

Friday, July 15, 2011

தெய்வதிருமக(ன்)ள்!!

தெய்வதிருமக(ன்)ள்!!






இதுவரைக்கும் நான் கணபதிராம் தியேட்டர்ல பார்த்த படங்களிலே தெய்வதிருமகள் படத்துக்கு பார்த்த கூட்டத்தை வேற எந்த படத்துக்கும் பார்த்தது இல்லை....தியேட்டர் உள்ளே என்ட்ரி கொடுக்கும் போதே ஒரு டப்பால மிச்சர், ஸ்வீட் லாம் கொடுத்தாங்க...ரைட் நாம படத்துக்கு
போவோம்...!!

விக்ரம் மன நல குன்றியவர்னு உங்க எல்லாத்துக்கும் தெரியும்,அதுக்கு அப்புறம் வேற எதுவும் சொல்றதா இல்லை. ஏன்னா நாம படம் பார்க்க போகறதுக்கு முன்னாடி சில பல கற்பனைகள் வச்சிரிப்போம். அதை ஏன் நாம லீக் பண்ணனும். உதாரணாம அமலா பால் யார்?? விக்ரம்க்கு ஜோடி யாரு??....






கிருஷ்ணாவாக விக்ரம்... சான்சே இல்லை. செம ஆக்டிங். கண்டிப்பா இப்ப உள்ள எந்த ஹீவும் நடிக்க தயங்குற கேரக்டர். சண்டை இல்லை, ரோமென்ஸ் சாங்
இல்லை...விக்ரம் நடிப்புக்கு பல இடங்களில் தியேட்டரில் செம கைத்தட்டு. நிலாவாக வரும் விக்ரம் பெண் கூட செம அழகு குட்டி. தன் குழந்தை அப்பா சொல்லும் காட்சியில், இன்னும் நிறைய சொல்லணும் மறந்துட்டேன்.

அனுஷ்கா, வக்கீலாக வருகிறார். பொட்டுக்கு கிழே அந்த விபூதி அனுஷ்காக்கு
கொள்ளை அழகு. அனுஷ்கா அப்பாவாக மகேந்திரன். அனுஷ்கா அசிஸ்டன்ட்
ஆக சந்தானம். வழக்கம் போல் டைமிங் காமெடியில் பின்னுகிறார்.
அமலா பால் எப்படி சொல்றது...

அமலா பாலை விட அனுஷ்காக்கு தான் அதிகம் நடிக்கிற வாய்ப்பை தான்
சொல்றேன். எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் கலகலக்க வைக்கிறார்.
ஆனால் முதல் பாதியில் இவரும் பாண்டியும் வர சில காட்சிகள் மொக்கையாக இருக்கு. நாசர் பெரிய வக்கீலாக வருகிறார். பாட்டு பத்தி சொல்லவே வேணாம் ஆரிரோ பாட்டு செம... அப்புறம் கதை சொல்ல போறேன் பாட்டு பிரமாதமா Visualize பண்ணி இருக்காங்க....

படம் எப்படிப்பா...?

படம் கொஞ்சம் பெருசுதான் கிட்டத்தட்ட 2.45 மணி நேரம் ஓடுது...அதே மாதிரி
சில காட்சிகள் நாடகத்தனமா கூட இருந்தது. முக்கியமா நிறைய கொட்டாவி
கூட வந்தது. ஆனா இதையெல்லாம் மீறி கிருஷ்ணாவும் நிலாவும் இணைந்தார்களா?? என்ற பாசத்தில் மேல உள்ளதை கொஞ்சம் ப்ரீயா விட்ரலாம். அட எத்தனை நாள்ங்க கமர்சியல் சினிமா பார்க்கறது... இந்த படத்தையும் பாருங்க... அழகான பாசத்தை காட்டி இருக்கிறார்கள்.

கமர்சியல் இல்லாம படம் வந்திருக்கு. அப்ப ரொம்ப போர் அடிக்குமேனு நீங்க
கேட்கலாம் அப்படியெல்லாம் இல்லை..ஆனா கொஞ்சம் அடிக்கும். அதுவும் சில சமயம் சந்தானம் வந்து சரி பண்ணிடுவார். கண்டிப்பா விக்ரம் இயக்குனர் விஜய் அந்த சின்ன பெண், அப்புறம் அனுஷ்காக்காக கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் தெய்வதிருமகள்.

தெய்வதிருமகள் - வெற்றி திருமகள்!!

தியேட்டர் நொறுக்ஸ்:





# சந்தானம் ஒரு காட்சியில் கோர்ட்க்கு கேஸ் தான் வரும்னு நினைச்சேன்
இவனை மாதிரி லூஸ் வரும்னு எனக்கு எப்படி தெரியும்" அப்படின்னு விக்ரமை பார்த்து அனுச்காவிடம் சொல்லுவார்... இந்த வசனத்துக்கு தியேட்டரில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது....

#கோர்ட் சீனில் ரெண்டு பேரு அடிக்கடி அப்பப்பா...அம்மம்மா..னு சொல்வாங்க...
சில சீனில் காமெடியா இருந்தது ஆனா ஒரு காட்சியில் வெறுப்பான ரசிகர்
ஒருவர்...."யார்ட இவனுங்க..." என்று டென்ஷன் ஆயிட்டார்.

# படம் முக்கா வாசி ஓடி கொண்டிருந்த போது பின்னாடி இருந்த ஒருவர்
அவர் நண்பரிடம் "என்ன மச்சி நாடகம் பார்க்கிற மாதிரி இருக்கு..?"னு
கேட்டார்.

# நாசர் வீட்டில் ஒரு வயதான பெண் டாக்டர் வருவார்...அவரோட வாய் கொஞ்சம் வீங்கி இருந்தது...உடனே கிழே இருந்த ரசிகர்கள்..."மச்சான் மாவா போட்டிருக்குடா..." என்று கத்த ஆரம்பித்தனர்.

#நம்ம அமலா பால் நடிச்ச சிந்து சமவெளி படத்தை திரும்பவும் ரீலீஸ் பண்றாங்க...




இந்த பதிவு பல பேரை சென்று அடைய நீங்க செய்ய வேண்டியதை மறக்காம செய்யுங்க...


நன்றி

ஜெட்லி...(சரவணா...)