Tuesday, March 9, 2010

தம்பிக்கு இந்த ஊரு - மகா மெகா காவியம்!!

தம்பிக்கு இந்த ஊரு


தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்க,ஏதோ தெரியாதனமா
பைலட் தியேட்டர் பக்கம் போய்ட்டேன்.உண்மை என்னனா
நான் ராஜலீலை படம் பார்க்கலாம்னு தான் நினைச்சேன்
ஆனா அதுக்குள்ள ராஜலீலை படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.
பத்து நிமிஷம் கழிச்சு போன கதை?? புரியாதுன்னு போகலை.
சரி அவ்ளோ தூரம் வந்துட்டோம் நம்ம சின்ன தளபதி நடிச்ச
படத்தை பார்ப்போம்னு உள்ளே என்டர் ஆயிட்டேன்.


சின்ன தளபதினு கார்டு போடும் போதே தலையெல்லாம் சுத்திச்சு...சீ சீ..மப்புல்ல இல்லங்க,சாதாரணமாவே தான்!முதல் சீனே விவேக் இன்ட்ரோ எனக்கு கொஞ்சம் டவுட் ஆயிடுச்சு,அதாவது படம் போடுறாங்களா இல்ல ஆதித்யா டி.வி. கட்டுராங்கலன்னு....படத்தில் விவேக்வோட அக்கபோர்
செம பிளேடு!!என்ன கதையா?? இருபது வருஷம் முன்னாடி உள்ள கதை...பயங்கரமான கதை...!!

இளைய,புரட்சி தளபதினு ரெண்டு பேருமே பன்ச் குறைச்சி
சும்மா இருக்கும் போது நம்ம சின்ன தளபதி மட்டும்
அறிமுக காட்சியில் இருந்து பஞ்ச் பஞ்சா உட்டு உடம்பை
பஞ்சர் ஆக்குகிறார்.பஞ்சர்னு சொன்ன உடனே இன்னொரு
விஷயம் நினைவுக்கு வருது......


நம்ம பரத் ஒரு பைட் சீன்ல நின்னுக்கிட்டு இருக்கிற பைக்கின்
டயரை சும்மா ஒரு கையில் இழுத்து எடுத்து வில்லன் மேல வீசுவாரு பாருங்க...சான்ஸ்ஏ இல்லை.எங்க வீட்டாண்ட உள்ள
பஞ்சர் கடையில் அவசரத்துக்கு வண்டியை விட்ட பஞ்சர் பார்க்க
அரை மணி நேரம் ஆகுது.அங்க மட்டும் நம்ம சின்ன தளபதி
இருந்தார்னு வைங்க அஞ்சு நிமிஷத்தில் பஞ்சர் பார்த்து
வண்டியை கொடுத்துடுவாங்க...சும்மாவா திருப்புழி,
ஸ்பேனர் இல்லாம வண்டி டயரை அழகா கழட்டுறார்.
ஒரே இழுப்பில் எந்த வித உபகரணமும் இல்லாமல்
டயரை கழட்டிய சின்ன தளபதி வாழ்க.....!!!



அடுத்த மொக்கையாக ஆந்திராகாரர் வேடத்தில் பாஸ்கர்.இவர் ஹோட்டல்லில் போடும் மொக்கைக்கு அளவே இல்லை.அப்புறம் பாட்டெல்லாம் செம....ஒரு ஒரு பாட்டுக்கும் தியேட்டர்ல இருக்கிற நாப்பது பேர்ல இருபது பேர் வெளியே போய்டுறாங்க....படத்தின் ஒரே ஆறுதல் சானாகான் மட்டுமே...!!சானாகான் இன்னும் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


அப்புறம் செண்டிமெண்ட் சீன்...நிழல்கள் ரவி பரத் தன்
மகனில்லை என்று சொன்னதும் நமக்கு தண்ணி தாரை
தாரையாக ஊற்றுகிறது....அம்பது ரூவா போச்சே என்று!!
பிரபு வருகிறார் ஊறுமுகிறார் அப்புறம் என்ன ஆனார்னு
எனக்கு தெரியல....காரணம் படம் முடிய அரை மணி நேரம்
முன்னாடியே வெளியே வந்துட்டேன்!!வெளியே வந்ததுக்கு
காரணம் வீட்டில் சின்ன வேலை இருந்ததுனு சொன்ன
நம்பவா போறீங்க....


தியேட்டர் டிக்கெட் கவுண்டர் பக்கத்தில் இந்த வாக்கியத்தை
வைக்கணும்...மறந்துட்டாங்க போல....

WARNING:
(Beware of thambikku intha ooru..it contents mokkai comedy and bayangara
fights and it may harmful to ur health and purse too.)

தயவு செய்து இனிமே யாரும் ரஜினி,கமல் மற்றும் நல்லா
ஓடிய படங்களின் டைட்டிலை யூஸ் பண்ண வேணாம்னு
ஒரு சட்டம் போட்ட நல்லா இருக்கும்!!ரஜினியின் தம்பிக்கு
எந்த ஊரு படத்தின் தீவிர ரசிகன் நான்...ச்சே..இப்படி பேரை
கெடுக்குரானுங்கலே.....

கவுண்டர் கிட்ட இந்த படத்தை பத்தி கேட்டதுக்கு:

"அடங் கொன்னிய,இந்த காவியத்தை காண ரெண்டு கண்ணு
பத்தாது...அதனால மக்களே, இன்னும் கொஞ்ச நாள்ல கலைஞர்
டி.வி வெள்ளி பரிசில் இந்த படத்தை போடுவாங்க....உங்களுக்கு
உயிர் மேல ஆசை இருந்தா...இந்த படம் போடும் போது
கரண்ட் இல்லாத ஊருக்கு ஓடிடுங்க.என்னா டகால்டி காட்றானுங்க"


ஜெட்லி பஞ்ச்:

தம்பிக்கு இந்த ஊரு : வெளியே சொல்லிடாத....!


பல பேர் இதை படித்து விழிப்புணர்வு பெற ஒட்டு போடுங்கள்...
இந்த காவியத்தை பற்றி விவாதிக்க பின்னூட்டத்தில் சந்திப்போம்.

ஜெட்லி....

Monday, March 8, 2010

ஊருக்குதான் உபதேசமா???

ஊருக்குதான் உபதேசமா???


நேற்று பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் ஆங்கில நியூஸ்
சேனல் NDTV ஒரு நிகழ்ச்சி நடத்தியது.அந்த நிகழ்ச்சியின்
பெயர் 'GREENATHON'.இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு
நல்விஷயங்களை செய்து வருகிறது.அதாவது மின் இணைப்பு இல்லாத கிராமங்களில் சூர்ய சக்தி மூலம் அவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கிறது.அது மட்டும் அல்லாமல் நாட்டை பச்சை பசேல் என்று வைத்திருக்க ஸ்கேடிங் பயணம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது,மரங்கள் நடுவது.
அது போல் பீச்சில் இருக்கும் குப்பைகளை கொண்டு ஒரு யானை பொம்மையின் மேல் குத்தி வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.இவை அனைத்துமே பாராட்ட பட வேண்டிய விஷயங்கள்.......



இவையெல்லாம் செய்த இந்த செய்தி நிறுவனம் நிகழ்ச்சி
முடிந்த பின் அவர்கள் போட்ட குப்பையை கவனிக்காதது
வருத்தமே.....படங்கள் கிழே....









greenathon என்று நிகழ்ச்சிக்கு பெயர் வைத்து விட்டு
அவர்களே இப்படி குப்பை, பிளாஸ்டிக் மற்றும் சாப்பாட்டு
பொருட்களை கொட்டுவது என்ன விழிப்புணர்வு என்று
தெரியவில்லை...ஊருக்கு தான் உபதேசம் செய்வோம்
என்பதை நிருபித்து இருக்கிறார்கள்.

இதுதான் அவர்கள் greenathon மூலம் மக்களுக்கு சொல்லும்
செய்தியா?? விளம்பரதாரர் மற்றும் நடிகர்கள் பிரசாரம்
மூலம் டி.ஆர்.பி ரேடிங் மட்டும் ஏற்றினால் போதுமா??

இந்த குப்பைகளை இந்த நேரம் அங்கு வேலை செய்து
கொண்டு இருப்பவர்கள் சுத்தம் செய்து இருக்கலாம்...
ஆனால் நிகழ்ச்சி நடத்தும் இவர்களுக்கே குப்பையை
தொட்டியில் போட எண்ணம் வராதது வருத்தமே!!


***********************************************************

பீச்சை சுத்தமா வைக்க குப்பை போடாதீங்க அப்படின்னு
சொன்ன நம்ம ஆளுங்க கேக்கவே மாட்டாங்க,
சரி குப்பையை குப்பை தொட்டியில் ஆவது போடுங்க
என்றாலும் ஹ்ம்..சில பேர் தவிர பல பேர் போடுவது
இல்லை.

நாம போடுற குப்பையை மறுநாள் அள்ளி அதை குப்பை
தொட்டியில் போடுவதற்கு சில பேர் வேலை செய்து
கொண்டு இருக்கிறார்கள்.அதில் இந்த சிறுவனும் இருக்கிறான்.
சின்ன பையன் காலையில் எழுந்தவுடன் படிக்கலாம் இல்ல
விளையாட போலாம்....ஏன் அவனுக்கு இந்த வேலை??
அவன் வேலை செய்ய வேணுமானால் வறுமை காரணமாக '
இருக்கலாம் ஆனால் பீச்சில் குப்பை அள்ள நாம் போடும்
குப்பை தான் காரணம்!!



அங்கு குப்பையை அள்ளி பீச்சை சுத்தம் செய்பவர்கள் யாரும் வேலை செய்யவில்லை நமக்காக சேவை செய்கிறார்கள் என்பதே உண்மை.அவர்கள் ஒன்றும் ஒரு சில தனியார் அமைப்புகள் மாதிரி எப்பொழுது ஆவது பீச்சை சுத்தம் செய்கிறேன் என்று ரெண்டு பேப்பர் எடுத்து கூட்டமாக போஸ் கொடுத்து அதை பேப்பர்க்கு அனுப்புபவர்களும் இல்லை!!


நாமும் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றால்
நம்ம பங்குக்கு நம்மால் முடிந்த வரை சுற்றுபுறத்தை
தூய்மையாக வைத்து கொள்வோம்!!

ஜெட்லி....

Friday, March 5, 2010

அவள் பெயர் தமிழரசி

அவள் பெயர் தமிழரசி - என் பார்வையில்


எங்க ஏரியா பக்கம் எங்கையும் அ.பெ.தமிழரசி முதல்
காட்சி போடாததால் மாயாஜால் நோக்கி வண்டியை
விரட்டினேன்.11.20 ஷோவுக்கு 11.05க்கு டிக்கெட் எடுத்த
பிறகு தான் தெரிந்தது நான் 11ஆவது ஆள் என்று.
இதை ஏன் சொல்றேன்னா ஜெய் படத்தை பார்க்க
ஒபெநிங் இல்லை அதற்கு காரணம் அவரது முந்தைய
படங்கள் வாமனன்,அதே நேரம் அதே இடம்......
அவர் தனி ஹீரோவா நடிச்ச மூணு படத்தையும் முதல்
நாள் பார்த்த ஆள் நானாகதான் இருப்பேன்.(எனக்கு
ஏதாவது விருதோ பாராட்டு விழாவோ நடத்துங்க ஐயா!!)


தமிழரசி, கூத்து போடுபவர்களின் குடும்பத்தில் உள்ள
பெண்.படிக்க ஆர்வம் இருக்கும் பெண்.சின்ன வயது
தமிழரசியாக வரும் காவ்யா சிரிப்பு கொள்ளை அழகு!!
பெரிய வயது தமிழரசியாக வரும் நந்தகி தன் பங்கை
நன்றாக செய்துள்ளார்.


ஜெய், அமைதியாக வருகிறார்.சில காட்சிகளில் 'அட' போட
வைக்கிறார்.ஜெய்யின் தாத்தாவாக தியோடர் பாஸ்கர்.பேரன்
மேல் அன்பு பொழிவதிலும் கண்டிப்பு காட்டுவதிலும் இயல்பாக
நடித்து இருக்கிறார்.அப்புறம் என்னுயிர் தோழன் படத்தின்
நாயகி இதில் தமிழரசிக்கு அம்மாவாக வருகிறார்.


காமெடி என்று கஞ்சா கருப்பு ரெண்டு மூணு காட்சிகள்
வந்து போகிறார்.தலைவர் போனம்தின்னி வீடியோ காமெடி
ஓகே.முத்தையா கேமரா மூலம் வயல்வெளிகளின் அழகுகளை,
மற்றும் தசரா திருவிழாவின் காட்சிகளை நம் கண் நிறுத்தி
இருக்கிறார்.


கூத்து பற்றி அந்த பெரியவர் ஜெய் வீட்டில் சாப்பிடும் போது
சொல்வது, தமிழரசியின் தாய் ஜெய் வீட்டுக்கு வந்து தன்
மகள் கெட்டு போனதுக்கு யார் காரணம் என்று கேட்கும் போது,
தமிழரசியின் தம்பி ஜெய்யை அடிக்கும் போது பிளாஷ்பேக்
சொல்லமால் தம்பியின் வாயிலாகவே தாயின் மரணத்துக்கு
காரணம் சொல்லியது என்று பல இடங்களில் இயக்குனர்
நிமிர வைத்திருக்கிறார்.

படம் முதல்ல கொஞ்சம் கலகலப்பா போச்சு அப்புறம் போக
போக சலிப்பு வருகிறது.அப்புறம் இடைவெளி பிளாக் நல்லா
இருந்தது.இரண்டாவது பாதி வேகமாக போனாலும் சில
காட்சிகள் மனதில் ஓட்ட மறுக்கிறது.அவள் பெயர் தமிழரசி
ஒரு pure சினிமானு சொல்லலாம்.ஆனா மசாலா பட
காதலர்களை கவர்வது மிக கடினம்.கிளைமாக்ஸ் காட்சிகள்
அனைத்தும் ஒரு நாடகம் பார்ப்பது போல் பீலிங்க்ஸ்!!


என்னை பொருத்தவரை நான் பொழுதுபோக்கு அதாவது
டைம்பாஸ்க்கு படம் பார்ப்பவன் ஆனால் இந்த படத்தில்
டைம் அவ்வளவா பாஸ் ஆகலைன்னு தான் சொல்லணும்.
ஆனா குத்து பாட்டு,வில்லன் கத்தல்,முகம் சுளிக்கும்
காட்சிகள் என்று எதுவும் இல்லாமல் வந்திருக்கும் படம்
தான் அவள் பெயர் தமிழரசி.படத்தின் முதல் பாதியை
பார்க்க பொறுமை மிக அவசியம்.


தியேட்டர் நொறுக்ஸ்:

# படம் ஆரம்பித்து அஞ்சு நிமிஷம் கழிச்சு ரெண்டு பசங்க
வந்தாங்க...ஸ்க்ரீன்இல் ஜெய்யை பார்த்ததும் பக்கத்தில்
இருந்தவரிடம் என்ன படம் என்று கேட்டு பின்பு பக்கத்துக்கு
ஸ்க்ரீன்க்கு போகணும் என்று விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு போனார்கள்!!


# அப்புறம் ஒரு ஹிந்தி குரூப் ஒன்னு படம் பார்க்க வந்தது.
என்னடா அதிசியமா இருக்குன்னு யோசிச்சிட்டு இருக்கும்
போதே அங்கே அங்கே ஜோடி ஜோடியா பிரிஞ்சு உக்காந்து
இருந்தா பரவாயில்லை ஆனா ஓவர் சவுண்ட்...அப்புறம்
நாங்க பின்னாடி இருந்த ஒரு அஞ்சு பேர் எதிர் சவுண்ட்
விட்டாவுடன் தான் அடங்கியது....!!

# எனக்கு பின்னாடி இருந்த மூணுபேர் பணம் போட்டு
படத்துக்கு கூட்டிட்டு வந்தவரை திட்டிட்டு இருந்தாங்க...
இன்டெர்வல்லே போய்டலாம் என்றார்கள் ஆனால் பணம்
போட்டு கூட்டி வந்தவர் இன்டெர்வல்க்கு அப்புறம் தான்
படம் சூப்பர்ஆ இருக்கும் என்று கூறி கஷ்டப்பட்டு நண்பர்களை
உட்க்கார வைத்தார்.

# வழக்கம் போல் படம் முடியுற முன்னாடி ஒரு ஒரு ஜோடியா
வெளியே போனாங்க...நம்ம rowல மூணு ஜோடி இருந்ததே
ரெண்டு தானே வெளியே போச்சு என்று எண்ணியவாரே
கடைசி சீட்டை பார்த்தேன்....அந்த கொடுமையை வேற
சொல்லனுமா....!!


ஜெட்லி பஞ்ச்:

அவள் பெயர் தமிழரசி : இருந்துட்டு போட்டும்.....


உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சு இருந்தா ஓட்டும் பின்னூட்டமும்
போடுங்க!!

ஜெட்லி

நன்றி:indiaglitz

Wednesday, March 3, 2010

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்

ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்:(3.3.10)

முக்கிய அட்டு செய்திகள் :

***************************************************

கவர்ச்சி காட்டுவது தப்பல்ல.....
நீச்சல் உடையில் நடிப்பேன்.
-நடிகை பியா பரப்பரப்பு பேட்டி.

ஏகன், கோவா போன்ற படங்களில் மினி ட்ரெஸ்ஸில்
வந்து அசத்திய பியா அவர்கள் கதைக்கு தேவைப்பட்டால்
பிகினியில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்....



இது குறித்து எமது செய்தியாளரிடம் கோவா படம் பார்த்து
வந்த வாலிபர் தெரிவித்தது.....

" பியா அவர்கள் ஏற்கனவே ஜட்டி போன்ற கால்சட்டையில்
நடிச்சாலும்,நாங்க அவரை பிகினியில் பார்க்க ஆவலாக

இருக்கோம்..!" என்று ஜொள் வழிந்தபடி அவர் கூறியது
காலை நினைத்தது.

"எதுவாக இருந்தாலும் பியாவின் தாராள சேவை தமிழ்நாட்டுக்கு
வழக்கம் போல் தேவை என்பதை தெரிவித்து கொள்கிறோம்."
ஜெட்லி செய்திகளுக்காக நைன்டி மைனா.

********************************************

ரொம்ப சீரியஸ் ஆன விஷயம்:

இடைத்தேர்தலில் சுயமரியாதையை விட்டுவிட்டு யாரையும்
ஆதரிக்க மாட்டோம்.....

ஆதரவு கேட்டால் மட்டும் ஆதரவு கொடுப்போம்....

விஜய.டி.ராஜேந்திரன் பேட்டி...



(இதுக்கு என்ன கமெண்ட் பண்றதுனு எனக்கு தெரியல!!)

*************************************************

விளம்பர இடைவெளி:

உங்க சரக்கில் மப்பு இருக்கா??

மைக்குடன் ஒரு பெண் வீட்டினுள் நுழைந்து அங்கு
குப்புற படுத்து கிடந்தவரிடம்:" உங்களுக்கு காலையில்
எழுந்தவுடன் தலைவலி இருக்கா??"

அவர் : "ஆ.ஆ ..ஆமா!!"

பெண்: உங்க சரக்கில் மப்பு இருக்கா??

அவர் :"லை..லை.. லைட்டா தான் இருக்கு...."

பெண் : "இந்தாங்க புதிய B.P.GOLD இனிமே உங்களுக்கு
மப்பு பிரச்சனையே இருக்காது...."

அவர்: "புதிய B.P.GOLD நாள் முழுதும் கிடைக்குமே மப்பு!!"

புதிய B.P.GOLD மப்புக்கு கியாரண்டி....!!

************************************************

சிறப்பு பார்வை:

சின்ன அசினா?? இல்ல சின்ன சிநேகாவா??....



தொடர்ந்து மொக்கை படங்களை கொடுத்து வரும்
பூர்ணா என்ற நடிகை முதலில் தன்னை சின்ன அசின்
என்று கூறினால் சந்தோஷப்படுவேன் என்றார்.இப்போ
என்னனா சின்ன சிநேகானு சொன்ன சந்தோஷப்படுவேன்
என்கிறார்.

இது குறித்து ஒரு சிறப்பு பார்வை வழக்கம் போல் சாதாரண
கண்ணில் பார்த்தது தான்.

"நாடே கொந்தளிக்கிறது....யார் இந்த பூர்ணா??
இவர் சின்ன அசினா?? இல்லை சின்ன சிநேகாவா??
இதற்கு விடை தெரியாமல் மக்கள் கூட்டம் அங்கும்
இங்கும் இருக்கும் சுவர்களில் தங்கள் தலையை முட்டி
கொண்டு இருக்கிறார்கள்......"

இது பற்றி ஒரு குடிமகனிடம் கேட்டதற்கு....
"இவங்கள விட்டா நான் மினி நமீதா, குட்டி தமன்னானு
சொல்லிட்டே போவாங்க...." என்று மேலும் சோகத்தில்
ஒரு குவாட்டர் வாங்க சென்றார்.

****************************************************

பொது அறிவு கேள்வி :

சமீபத்தில் லிப் கிஸ் அடித்து ஜுரம் வந்த நடிகர் யார்??

A.பட்டாப்பட்டி சடகோபன் ரமேஷ்.

B.என் கூட பி.சி.ஏ. படிச்ச ரமேஷ்.

வழக்கம் போல விடையை யாருக்கு வேணும்னாலும்
அனுப்புங்க.....முடிஞ்சா பட்டாபட்டி படத்தின் டிக்கெட்
வாங்கி அனுப்புகிறேன்.....!!

***************************************

இது போல் நாட்டுக்கு தேவையில்லாத அட்டு செய்திகளை
உங்களுக்கு பிந்தி தருவது.......


உங்கள்
ஜெட்லி....

மேலும் உங்கள் பொது அறிவு வளர பின்னூட்டத்தை போட்டும்
ஒட்டு போட்டும் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Monday, March 1, 2010

பழவேற்காடு - ஜாலி ட்ரிப்!!

பழவேற்காட்டில் நண்பர்களுடன்





கல்லூரி இறுதி ஆண்டின் இறுதித் தேர்வுகளுக்கு முந்தைய வாரத்தில், வகுப்பின் முப்பத்து ஒன்பது நண்பர்களும் மாமல்லபுரம் சென்றோம். ஆயன சிற்பியை அருகில் சென்று பார்ப்பதாய்ச் சொல்லி, யானையின் அருகே குனிந்து தலையில் இடித்துக் கொண்ட நண்பன் நடராஜ், நொடராஜ் ஆனதும், கொலம்பஸ் மாதிரி வழி கண்டுபிடிப்பதாய் சொல்லி பாறையில் ஏறி குப்புற விழுந்து கண்ணாடியைப் பறக்க விட்ட ஸ்ரீராமும், போகும் வழியில் கோவளத்துக்கு முன், இறங்கிக் குளிக்கும் போது, சுனாமிக்கு முன்பே கடலோடு போகவிருந்து கரையில் அள்ளிப் போடப்பட்ட நண்பன் செந்திலும், இன்றுவரை நிகழும் நண்பர் சந்திப்புகளில் கட்டாயம் பேசப்படும் விஷயங்கள்.


அதற்குப் பிந்தைய, இந்த ஆறு வருடங்களில், ஆளுக்கு ஒரு திசையில் போனபின் சந்திப்புகள் குறைந்து போய், எப்போதாவது ஏற்பாடு செய்யப்படும் கடற்கரைக் கூட்டங்களிலும், நண்பர்களின் திருமணங்களிலும் ஐந்து அல்லது ஆறு பேர் வருவதே பெரிய விஷயமாகிப் போனது. இந்த நேரத்தில் தான் வேடந்தாங்கல் செல்வது பற்றி நான், சித்து, நட்டு, மற்றும் ஜெட்லி பேசிக்கொண்டிருந்த போது, இதை ஏன் மீண்டுமொரு நண்பர் சந்திப்பாக ஆக்கக்கூடாது என தோன்றியது. பிற நண்பர்களிடம் சொன்னபோது, பாண்டி, பர்வதமலை, திருவண்ணாமலை என்று ஆளுக்கு ஒன்று சொல்ல, சந்தோஷ் சொன்ன பழவேற்காடு இறுதி முடிவானது. வழக்கம் போல இருபது பேர் வருவதாய் ஒப்புக்கொண்டார்கள், வழக்கம் போலன்றி இறுதிப்பட்டியல் பதினேழு பேரில் முடிந்தது.


ஆறு வருடங்களுக்கு முன் போன (சற்றேறக்குறைய) அதே நாளில், போய் வந்த பயணம் பற்றி ஜெட்லியும் சித்துவும் தொடர்கிறார்கள்




அனைவரும் பேசி தீடிரென்று நடந்தது இந்த பழவேற்காடு GET-TOGETHER. பொன்னேரி தாண்டி இருபது கிலோமீட்டர் சென்றால் அழகான பழவேற்காடு நம் கண்களுக்கு விருந்தாய் அமையும்

நண்பர்கள் சென்னை மாநகரம் முழுவுதும் படர்ந்து இருப்பதால் புழல் ஜெயிலை மீட்டிங் பாயிண்ட் ஆக பிக்ஸ் பண்ணினோம். எனக்கு நண்பர் கௌரி காரில் இடம் கிடைத்தது. கௌரி ஏற்கனவே மூணு நாலு தடவை பழவேற்காடு சென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இவர் புழல் போக பாடி ப்ரிட்ஜ் லெப்ட் எடுத்து ஆவடி செல்லும் போது என் மனசில் மணி அடித்தது, அது, "அநேகமா நாங்க ரேணிகுண்டா தான் போக போறோம்" என்று.


பழவேற்காடு செல்லும் வழி

பழவேற்காடு செல்ல இரு வழிகள் உள்ளன


1.மணலி, மீஞ்சூர், பொன்னேரி வழியாக அல்லது


2.புழல், பஞ்செட்டி (தாண்டியவுடன் Right Turn எடுத்து), பொன்னேரி வழியாக.





அங்கு சென்றவுடன் வழியெங்கும் பலர் படகு வேண்டுமா என்று கேட்பார்கள், அதில் உங்களுக்கு சரியான ஆள் யாரென்று படுகிறதோ அவர்களுடன் பேசி (ஒரு படகு 500 ருபாய்) செல்லலாம். காலை முதல் மாலை வரை அந்த படகு உங்களுக்காக தான்.

படகை வாடகைக்கு எடுத்து சிறிது தூரம் சென்ற பின் நண்பர்கள் படகை நிறுத்த சொன்னார்கள் காரணம் இன்று பிறந்தநாள் காணும் எனக்கும் (ஜெட்லி) , நாலாநேத்து பிறந்தநாள் கண்ட கெளரிக்கும் சேர்த்து கேக் வெட்ட சொன்னார்கள். கேக் எடுத்தவுடன் நண்பர்கள் எழும்பி நடக்க படகு பயங்கரமா ஆடியது.படக்கோட்டி வேறு அவரிடம் இருந்த பதினைந்து அடி கம்பை எடுத்து முட்டு கொடுத்து பார்த்தார். ஹ்ம்ம், ஆடுகிற படகை நிறுத்த முடியவில்லை. எனக்கு வேறு வரும் போது பொன்னேரியில் சாப்பிட்ட தோசை வெளியே வர மாதிரி இருந்தது.




பின்பு ஆழமில்லா இடத்தில் படகை நிறுத்தி அங்கு பிறந்தநாளை கொண்டாடினேன்.சத்தியமா இது வரைக்கும் இப்படி ஒரு பிறந்தநாளை நான் கொண்டாடியது இல்லை.நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்....!


அங்கே முதலில் சவுக்கு தோப்புக்கு உங்களை அழைத்து செல்வார்கள், அது ஒரு குப்பை காடு (அவ்வளவும் நம்மை போல சென்றவர்களின் கைங்கரியம் தான்). இங்கு ஒரு நல்ல இடத்தில் camp போடலாம். பல இடங்களில் கண்ணாடி பாட்டில் உடைந்து கிடக்கும் பார்த்து செல்லவும். அங்கு உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது, கார்த்தியிடம் வேறு குரூப்பை சேர்ந்த ஒருவன் வந்து "ரெண்டு தங்கராஜா வடிக்கட்டி இருந்தா கொடுங்க" என்றார். கார்த்தி இல்லை என்று சொல்லி பார்த்தாலும் அவன் போவதாக இல்லை. தன் நண்பர்கள் வாங்க சென்று இருக்கிறார்கள் வந்தவுடன் தந்து விடுகிறேன் என்று கேட்டு ஒன்று வாங்கி சென்றார்.


ஒரு முக்கா மணிநேரம் கழித்து மறுபடியும் வந்தான், திரும்பவும் தனக்கு தங்கராஜா வடிக்கட்டி வேணும் என்றான்.அப்போது மற்றொரு நண்பர் அடித்த கமெண்ட் "வரும் போது வெறும் வாயை மட்டும் தான் எடுத்து வந்திருப்பான் போல" என்றார். இந்த சம்பவத்தில் இருந்து தெரிவது என்னவென்றால் பழவேற்காட்டில் படகில் ஏறும் முன் அனைத்து பொருளையும் வாங்கி வைப்பது நலம்.நாங்க கொண்டு போன தண்ணி தீர்ந்து போச்சு ரொம்ப அவஸ்தைபட்டோம்.அட குடிக்கிற தண்ணி தாங்க!!





அடுத்ததாக மணல் திட்டு பகுதிக்கு அழைத்து செல்வர் இங்கு தண்ணீர் முட்டி அளவு தான் இருக்கு இங்கு நான் என் நீச்சல் திறமையை நண்பர்களுக்கு காட்டினேன்.



தனது ஹேர்ஸ்டைல் காரணமாக "புறா" என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப் பட்டு வந்த, பிரபல மொக்கைப் பதிவர் சங்கரின் படகு ஓட்டும் திறமையைப் பார்த்த நண்பர்கள் "சுறா" என்று புதுப்பெயர் சூட்டி மகிழ, நொந்து போனார் அவர்.







பழவேற்காடு முழுவதும் ஒற்றை துண்டுடன் வலம் வந்த 'கவர்ச்சி கண்ணன்' கார்த்தி, நான் போஸ் கொடுக்க கூலிங்கிளாஸ் தந்த ஜெய்சன், எனக்கு 'ஒத்துழைப்பு' தந்த சித்து, நட்டு, ராகேஷ், ஆல்-இன்-ஆல் அருணாச்சலம், ஜீத், பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்த சந்தோஷ், எப்போதாவது கண்களுக்கு காட்சி தரும் முஜிபுர், என் முகத்தில் கேக் தடவிய சங்கர். எப்போதும் போல அமைதியாகவே இருந்தஸ்ரீராம், பிரபுராஜ், சாய்கணேஷ், நவீன்..... அனைவருக்கும் என் நன்றிகள்.

முக்கியமான ஒருத்தரை மறந்துட்டேனே.....




10.2 MEGA PIXEL,THAILAND மேக் மூலம் நமக்கு தெளிவில்லாதவர்களையும் தெளிவாக படம் எடுத்த, பக்கத்து வீட்டு குட்டிப் பையனிடம் கடனை வாங்கி வந்திருந்த கிரிக்கெட் மட்டையை தண்ணீரில் ஊறவைத்து வாழை மட்டைபோல் ஆக்கியதால், என்ன சொல்லப் போகிறானோ என்று புலம்பிக்கொண்டே போன, அம்பத்தூர் லெனின் நகர் சரவணன் அவர்களுக்கு நன்றிகள்......

ஆறு வருடங்கள் முடிந்து விட்ட போதும், சந்தித்த மறுகணம் அத்தனையும் தொலைந்து பதின்ம வயதுகளுக்கு பயணம் செய்ய வைத்த இது போன்ற பயணங்கள் இனி அடிக்கடி நடக்க வேண்டும் என்பதைக் கூறி, அடுத்த வாரம் நடக்க உள்ளே நண்பன் முஜிபுர் ரஹ்மானின் திருமணத்தில் சந்திப்பதாய் சொல்லி விடைபெற்றோம்


நன்றி
சங்கர், ஜெட்லி, சித்து