Wednesday, December 9, 2009

வழி சொல்பவனின் வலி.

வழி சொல்பவனின் வலி.


நம்ம ஊர்ல ஒரு நாளைக்கு பல ஆயிரம் பேர் வழி தெரியாமல் தவிக்கின்றனர்(மப்பில் வீடு திரும்பாமல் இருப்பவர்களை பற்றி சொல்லவில்லை!).ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விதமான தேடல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தங்கள் உறவுகளையோ, நேர்முக தேர்வுக்கு செல்லும் பணி இடத்தையோ, பிரபல மருத்துவரையோ, பிரபல சாமியரையோ, கோயிலையோ,தியேட்டரையோ என்று மனிதர்கள் தினமும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இங்கு நான் பகிர்ந்து கொள்ள போவது சரியான வழி கேட்பவர்களுக்கு வழி சொல்பவனின் அவஸ்தைகளை(வலிகள்) மட்டுமே.



நம்ம ஊரில் எதுக்கெல்லாம் கூட்டம் சேருதோ இல்லையோ ரெண்டு விஷயத்துக்கு கூட்டம் கண்டிப்பா சேரும்.முதலில் விபத்து, அது என்னமோ தெரியலங்க டம்னு சவுண்ட் வந்தா போதும் எங்கே இருந்து வேடிக்கை பார்க்க ஆள் வராங்கனு தெரியாது.அப்படி ஒரு கூட்டம் கூடிடும் அடிபட்ட ஆள் சுவாசிக்க காத்து கூட விடமாட்டங்க.அந்த கூட்டத்திலும் ஒரு சிலர்
தண்ணீர் பாக்கெட்,சோடா வாங்கி கொடுக்கும் நல்உள்ளங்களும் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.



ரெண்டாவது வழி சொல்பவன், நம்ம ஊரில் வழி சொல்பவர்களுக்கு குறையில்லை.ரெண்டு விஷயங்கள் எப்போதுமே ப்ரீயா கிடைக்கும்
ஒன்று அறிவுரை மற்றொன்று வழி சொல்லுதல்.சில பேரு இளம்
பெண்களுக்கு மட்டும் வழி சொல்வார்கள்.சிலர் வழி தெரியாமல்
திணறுபவர்களுக்கு தேடி போய் வழி சொல்வார்கள்.பல இடங்களில் ஒரு கூட்டமாக இருந்து கொண்டு அவர்களுக்குள் விவாதித்து
தப்பான வழி சொல்பவர்கள் ஏராளம்,அவர்களை விட்டுவிடுவோம்.

முதல் வலி :

சில சமயம் வழி மற்றும் ஒரு குறிப்பிட இடத்தை கேட்பவர்கள் நம்மை நொண்டி நொங்கு எடுத்து விடுவார்கள்.

இப்படித்தான் ஒருத்தர் " பரணி லாட்ஜ் எங்கே இருக்கு? " என்றார்.
"இதோ பக்கத்தில் தான் போங்க" என்றேன்.

அவர் "எவ்ளோ நேரம் ஆகும்"...."நடந்து போய் விடலாமா"...
"லெப்ட் சைட்ஆ ரைட் சைட்ஆ??"... என்று கேள்வியை
அடுக்கி கொண்டே போனார்.
ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சா லாட்ஜ் வந்துரும் அதுக்கு
டஜன் கேள்வி கேட்டு நம்மை டென்ஷன் ஆக்கி விடுவார்கள்.

***********************************************

நான் பொதுவாக யாரையும் தேடி போய் வழி சொல்வதில்லை.
அது வேலியில் போற ஓணானை பேன்ட்டுக்குள் விட்டதருக்கு
சமம்.(அப்போ நாங்கெல்லாம் தேடி போய் வழி சொல்றோமா??
என்று நீங்கள் கேட்பது புரிகிறது...சும்மா ஒரு ப்லோவில்
எழுதிட்டேன்..ப்ரீயா விடுங்க!!)

இப்படிதாங்க சுமார் ஏழு வருஷங்கள் முன்னாடி ஒருத்தர்
ரோடு ஓரத்தில் வழி தெரியாமல் பைக்கில் நின்னுட்டு
இருந்தார்.சொன்னா நம்பமாட்டிங்க அப்போல்லாம் தினமும்
நான் யாருக்காவது உதவி பண்ணலைனா எனக்கு தூக்கமே
வராது.அதனால நானே போய் அவரிடம்

"என்ன சார் எங்கே போகணும்" .

"அடையார் டிப்போ பெட்ரோல் பங்க் போகணும்,
வழி சரியா தெரியலை" என்றார்.

"இங்கிருந்து நேரா போன அடையார் டிப்போ தான் சார்
வரும்" என்று கூறினேன் நான்.

அப்போது தீடிர் என்று எங்கோ இருந்து இன்னொரு நபர்
வந்தார் "எங்கே , அடையார் டிப்போ தானே இதோ இந்த
எதிர் ரோட்டில் போங்க ப்ரீயா இருக்கும்" என்று தன்
பங்குக்கு உதவி செய்தார்.

ஒரு வேளை என்னை போல இவருக்கும் யாருக்காவது
உதவலனா தூக்கம் வராது போல என்று நினைத்த நேரத்தில்
வழி கேட்ட ஆள் கொஞ்சம் ஓவர்ஆ பேச ஆரம்பிச்சுட்டாரு.

"யோ அடையார் டிப்போவுக்கு வழி கேட்டா ஒருத்தன்
இப்படி போ இன்னொருத்தன் அப்படி போனு சொல்றிங்க...
என்னயா ஒரு மனுஷன் வழி கேட்ட ஒழுங்கா
சொல்றிங்களா..." என்று எகிற ஆரம்பித்தார்.

இவனுக்கெல்லாம் உதவி செய்னுமா என்று அங்கிருந்து எஸ்
ஆகி விட்டேன்.

இந்த வழி சொல்லும் வழியால் வந்த வலி நெஞ்சில் வடு
போல் இருந்ததால் அதன் பின்பு யாருக்கும் தேடி போய்
வழி சொல்வதில்லை.

*********************************************************

சில நாட்களுக்கு முன்பு :

மாருதி காரில் ஒரு நாலு பேர் கடை முன் வண்டியை நிறுத்தி
ஒருவர் வந்து பாபாலால் பவன் எப்படி போவது என்று கேட்டார்.

சிக்னல் லெப்ட் திரும்பி பெரிய கோவில் தாண்டியவுடன் திரும்பவும்
லெப்ட் எடுத்தால் அங்கே தான் பாபாலால் பவன் என்றேன்.

தேங்க்ஸ் என்று போய் காரில் அமர்ந்தார்.

ஒரு ரெண்டு நிமிடம் கழித்து இன்னொருவர் இறங்கி வந்து
"சார் இந்த பாபாலால் பவன் எங்கே இருக்கு?" என்றார்.

திரும்பவும் அதே வழியை சொன்னேன்.உடனே அவர்
"சிக்னல் லெப்ட் தான் போனுமா இல்ல அடுத்த வர லெப்ட்
திரும்பன வராதா" என்றார்.

"வரும் ஆனா கொஞ்சம் சுத்து" என்றேன்.

அதே காரில் இருந்து இன்னொருவன் இறங்கி வந்தான்
"சார் இந்த பாபாலால் பவன் எப்படி போனும்" என்றான்.

"போடாங்" இதற்கு மேல் அச்சில் ஏற்ற விருப்பமில்லை என்ற
காரணத்தால் வழி சொல்பவனின் வலியை புரிந்து வழி
கேட்பவர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்,

இது போல் உங்களுக்கும் வழி சொன்னதில் ஏதாவது
அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த இடுகை பிடிச்சு இருந்தா கண்டிப்பா ஒட்டு போடுங்க,
மற்றும் கமெண்ட் போட்டால் ஒரு பூஸ்ட் மாதிரி இருக்கும்.

நன்றி
ஜெட்லி சரண்.

Tuesday, December 8, 2009

ஒரு நாள் விடுப்பும் நான்கு டெஸ்ட் போட்டிகளும்




பத்து நாட்களுக்கு முன், கொஞ்சம் ஆணி அடிக்க வேண்டிய வேலை இருந்ததால் அலுவலகத்துக்கு மட்டம் போட்டுவிட்டு வீட்டில் இருந்தேன். அடிக்க வேண்டிய ஆணிகள் அனைத்தையும் முடித்ததால் ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணில்பட்டது நான்கு டெஸ்ட் போட்டிகள், அவை

NEO Cricket - இந்தியா - இலங்கை இரண்டாவது போட்டி (கான்பூர்)
STAR Cricket - ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டிஸ் முதல் போட்டி (பிரிஸ்பேன்)
TEN Sports - நியுசிலாந்து - பாகிஸ்தான் முதல் போட்டி (டுனெடின்)
NEO Sprots - ஹைதராபாத் - ஒரிசா ரஞ்சி போட்டி (ஹைதராபாத்)

இந்த நான்கு போட்டிகளையும் வெவ்வேறு அடிப்படைகளில் எப்படி வரிசைப்படுத்துவது என யோசித்துக்கொண்டிருந்தபோது மனதில் தோன்றிய சில கருத்துக்கள் இங்கே,


அணிகளின் பேட்டிங் தரத்தின் அடிப்படையில்

1. NEO Cricket - உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் பலரை கொண்டிருக்கும் இந்தியா - இலங்கை போட்டி முதலிடத்தை பெறுகிறது

2. STAR Cricket - Chris Gayle மட்டுமே நம்பி இருக்கும், வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங் வரிசை, ஆட்டத்தின் தரத்தை கீழே இழுக்கும் போதும், புதுசா வருபவனும் கூட ஒரு அம்பதோ, நூறோ அடித்துவிட்டு போகும் ஆஸ்திரேலிய பேட்டிங் இப்போட்டிக்கு இரண்டாமிடத்தை தருகிறது.

3. TEN Sports - 'நாங்க அடிப்போம், ஆனா அடிக்கமாட்டோம்' அப்படின்னு இரண்டு அணிகளும் விளையாடுவதால் இந்த போட்டிக்கு மூன்றாவது இடம்தான்.

4. NEO Sports - எங்களில் யாரையும் தேசிய அணிக்காக தேர்ந்தெடுப்பதை பற்றி தேர்வாளர்கள் கனவிலும் கூட நினைத்து விடக்கூடாது என கங்கணம் கட்டி இரு அணிகளும் விளையாடுவதால், நான்காவது இடம்.


அணிகளின் பவுலிங் தரத்தின் அடிப்படையில்

1. STAR Cricket - மிட்செல் ஜான்சனின் புஜ வலிமைக்க்காகவே (அது கையா, உலக்கையா என்பது இன்னும் தொடரும் சந்தகம்) நான் இதற்கு முதலிடம் கொடுப்பேன்.

2. TEN Sports - 'சண்டை முன்னப்பின்ன இருந்தாலும் சத்தம் அதிகமா இருக்கும்' என்பதுபோல், மொக்கையா பேட்டிங் பண்ணினாலும் ஷேன் பான்ட், வெட்டோரி, ஆசிப், உமர் குல் அடங்கிய சிறந்த பந்துவீச்சு படையை இரு அணிகளும் வைத்திருக்கும் இப்போட்டி இரண்டாமிடம் பெறுகிறது.

3. NEO Cricket - என்னதான் ஜாகிர்கான் பார்முக்கு வந்துவிட்டார், முரளிதரன் கண்ணாடியில் கூட பந்தை திருப்புவார்னு சொன்னாலும், மொக்கை பவுலிங்குக்கு மூன்றாமிடம் தான்.

4. NEO Sports - இந்திய அணியில் இடமில்லாமல் அனுப்பபட்ட, 2003 உலககோப்பையில் விளையாடிய மொஹந்தி (ஞாபகம் இருக்கா?), மற்றும் ஒரு கிலோமீட்டர் ஓடிவந்து போட்டாலும் 120 KM தாண்டாத பல பாஸ்ட் (??) பவுலர்கள் விளையாடும் இப்போட்டி நான்காமிடம் பெறுகிறது.


ஆடுகளத்தின் தரத்தின் அடிப்படையில்



1. STAR Cricket - இருபது மீட்டர் தள்ளி நிற்கும் கீப்பருக்கே, இடுப்புயரம் பந்து செல்லும் அற்புதமான Swing மற்றும் Bounce கொண்ட நியுசிலாந்து மைதானத்திற்கே முதலிடம்

2. TEN Sports - நியுசிலாந்து மைதானதிற்கு கொஞ்சமும் குறைவில்லாதபோதும் கடைசி நாளில் காணமல் போன Bounce இந்த மைதானத்தை இரண்டாமிடத்திற்கு இழுக்கிறது

3. NEO Cricket - முக்கி முக்கி பந்து வீசினாலும் முட்டிக்கு மேல் எழும்பாத கான்பூர் மைதானம் மூன்றாமிடம் பெறுகிறது

4. NEO Sports - சர்வதேச போட்டியில் பந்தை உருட்டிவிளையாடிய சேப்பல் பயிற்சியாளராய் சிறிதுகாலம் இருந்த ஒரே காரணத்தினால் ஆடுகளங்களை எல்லாம் நலுங்கு உருட்டும் இடமாய் மாற்றிய BCCI யின் சாதனை இந்த போட்டியை நான்காமிடதிற்கு தள்ளுகிறது.

ஒளிப்பதிவு மற்றும் வர்ணனை

1. அட்டகாசமான ஒளிப்பதிவு, அருமையான வர்ணனை, அற்புதமான ஆங்கிலம் என்ற STAR Criket இன் தாரகமந்திரம் முதலிடம் பிடிக்க செய்கிறது.

2 & 3. ஸ்கொயர் லெகில் அடிக்கப்பட்ட பந்தை லாங் ஆனில் தேடும் காமெரா, என்ன சொல்ல வருகிறோம் என்பதில் ஒரு தெளிவில்லாமல் எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிக்கும் வர்ணனையாளர்கள், பெரும்பாலும் ஒருத்லைபட்சமாகவே அமையும் வர்ணனைகள் NEO Cricket மற்றும் TEN Sports இடையே 2 & 3 ஆம் இடங்களுக்கு கடும் போட்டியை உண்டாக்கினாலும், சுஜாதா சொல்வதுபோல், தப்புத்தப்பாய் ஆங்கிலம் பேசி முதுகு வலியை அதிகமாக்கும் போட்டியில் வெல்லும் TEN Sports மூன்றாமிடம் பிடிக்கிறது.

4 . தண்டவாளத்தில் தலை வைத்தாலும் சரி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் சரி, (காமெடி பண்ணாதேன்னு நீங்க சொல்வது காதில் விழுகிறது), காங்கிரசுக்கு தமிழ்நாட்டு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் சரி, (எந்த கோஷ்டிக்கு என்று அப்புறம் முடிவுசெய்யலாம்) நாங்கள் ஹிந்தியை மட்டும் தான் ஆட்சிமொழியாக கருதுவோம் எனும் தூர்தர்ஷனின் கொள்கையை அப்படியே பின்பற்றும் NEO Sports நான்காவது இடம் பெறுகிறது.

ஒரு தனிப்பட்ட வீரரின் அடிப்படையில்

1. என்றும் ஆட்டநாயகன், கிரிக்கெட்டில் எங்கள் தெய்வம், சச்சின் இருக்கும் ஒரே காரணத்தினால் NEO Cricket முதலிடம் பெறுகிறது.

2. ஒற்றை ஆளாய் நின்று அணியை வழிநடத்தி செல்லும் வெட்டோரியை எனக்கு பிடித்த காரணத்தால், எனக்கு பிடிக்காத அப்ரிடி இருந்தபோதும், TEN Sports இரண்டாமிடம் பெறுகிறது

3. இரு அணிவீரர்களில் யாரையும் பற்றி எனக்கு தெரியாது என்ற போதிலும் கீழே கூறியுள்ள காரணத்தினால் NEO Sports மூன்றாமிடம் பெறுகிறது.

4. கிரிஸ் கெயில், சந்தர்பால் போன்ற எனக்கு பிடித்த பல வீரர்கள் இருந்த போதிலும், நான் வெறுக்கும் ஒரே ஆட்டக்காரரான பாண்டிங் இருக்கும் ஒரே காரணத்தால், STAR Cricket கடைசி இடம்பெறுகிறது


நன்றி சங்கர்

Monday, December 7, 2009

பிடிக்கும் ஆனா பிடிக்காது!!

பிடிக்கும் ஆனா பிடிக்காது!!

அண்ணன் மோகன் குமார் அவர்களின் அழைப்பின் பேரில் எனக்கு
பிடித்தவை மற்றும் பிடிக்காதவை.

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்
.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.

நடிகர்:

பிடித்தவர்: ரஜினி (அது என்னமோ தெரியல சின்ன வயசில்
இருந்தே ஒரு ஈர்ப்பு ),சசிகுமார்(நம்மில் ஒருவர் மாதிரி இருக்கிறார்)


பிடிக்காதவர் :தற்போது ராமகிருஷ்ணன்(கு.பூ.கொ.புறாவும் ஹீரோ.... ஓவர் பந்தா!!)...அப்புறம் நிறைய பேரு சிம்புவை
ஓவர் பந்தா அப்படின்னு சொல்வாங்க அது கரெக்ட் தான்,
இருந்தாலும் சிறுவயதில் இருந்தே திரைத்துறையில் இருக்கும்
ஒருவர் அனைத்திலும் வல்லவராக இருப்பவர் பந்தா பண்ணுவதில்
என்ன தப்பு??....

இயக்குனர்

பிடித்தவர்: அமீர்(மௌனம் பேசியதே), ராம் (கற்றது தமிழ்).

பிடிக்காதவர்:கே.பாலசந்தர்(அது என்னமோ தெரியல இவர் படம் என்றாலே எனக்கு ஆகவில்லை).

இசையமைப்பாளர்


பிடித்தவர்: யுவன் ஷங்கர் ராஜா, தமன்(ஈரம்),
சதீஷ் சக்ரவர்த்தி(லீலை). டைம் இருந்தா லீலை பாட்டை
கேட்டு பாருங்க, அதுவும் ஜில்லென்று ஒரு கலவரம்
செம...


பிடிக்காதவர்: எஸ்.ஏ.ராஜ்குமார்(காரணம்: லா லா லா தான்).

நடிகை

பிடித்தவர்: திறமையை காட்டும் அனைவரையுமே பிடிக்கும்...
(நடிப்பு திறமையை பத்தி தான் சொன்னேன்)

பிடிக்காதவர்: பத்மப்ரியா.

எழுத்தாளார்:

பிடித்தவர்: சுஜாதா, ராமகிருஷ்ணன்.

பிடிக்காதவர்: பிடிக்காதவங்க புக்கை இது வரைக்கும் படிச்சது இல்ல.


தொழிலதிபர்

பிடித்தவர் : ரங்கநாதன் (கெவின் கேர்)

பிடிக்காதவர்:அம்பானி சகோதரர்கள்....


வில்லன் நடிகர்

பிடித்தவர் : சம்பத் (இவருக்கு குரலே போதும்),கிஷோர்.

பிடிக்காதவர்: ஆசிஷ் வித்யார்த்தி...(ஆனால் இவரு காமெடி பண்ணிய மலைக்கோட்டை படம் எனக்கு பிடிக்கும்).

காமெடியன்

பிடித்தவர் : கவுண்டமணி , வடிவேலு

பிடிக்காதவர்: இப்போதைக்கு விவேக், கருணாஸ்.


அரசியல்வாதி :

பிடித்தவர்: சுப்ரமணிய சுவாமி.(இவர் அடிக்கிற காமெடி எல்லாம்
சூப்பர்)

பிடிக்காதவர்: ஊழல் பண்ணி மக்களின் வரி பணத்தை கொள்ளை
அடிக்கும் அனைவருமே.

இதற்கு மேல் யாரையும் மாட்டி விட விருப்பம் எனக்கு இல்லை...

நன்றி
உங்கள்
ஜெட்லி சரண்.

Friday, December 4, 2009

ரேணிகுண்டா - விமர்சனம்

ரேணிகுண்டா - விமர்சனம்

பன்னீர்செல்வம் இயக்கத்திலும் கணேஷ் ராகவேந்திர இசையிலும்
வெளிவந்திருக்கும் படம் தான் ரேணிகுண்டா.அஞ்சு புது பசங்க
ஒரு புது கதாநாயகி என்றாலும் கதை என்னமோ பழசுதான்,
ஆனால் அதை எடுத்த விதம் கொஞ்சம் புதுசு.படத்துக்கு பெரிய
பலம் ஒளிப்பதிவாளர் சக்தி,காட்சி அமைப்புகளில் மனுஷன்
மிரட்டுறார்.



நாலு பேர் பக்கா ரவுடி அவர்களுடன் சந்தர்ப்பவசத்தால் சேரும்
அப்பாவி.அதன் பின் அவன் வாழ்வில் வரும் பெண் அந்த பெண்ணால் திருந்தி வாழ நினைக்கும் மற்றவர்கள்... திருந்தினார்களா??வாழ்ந்தார்களா??


ஜானி, இவர் தான் கதையின் நாயகன்.இயல்பாக நடித்து இருக்கிறார்.
படம் முழுவதும் அமைதியாக வரும் இவர் கடைசி காட்சிகளில்
கோபத்தை காட்டுகிறார்.நாயகி ஏதோ பத்தாவது படிக்கும் பெண்
போல இருக்கிறார்.நல்லா அழகா தான் இருக்கா,முகபாவத்தில்
நம்மை கவர்கிறார்.அதுவும் ஜானி மற்றும் அவர்கள் சகாவுடன்
கைதட்டி விளையாடும் சீன் அருமை.

டப்பாவாக வரும் பையன் தான் படத்தின் ரியல் ஹீரோ,மனுஷன்
சும்மா பிச்சு உதறுகிறான்.ஆரம்பத்தில் அவர் ஜெயிலில்
ஆரம்பிக்கும் லொள்ளு மற்றும் நக்கல் பேச்சுக்கள் கடைசி
வரை நம்மை சிரிக்க வைக்கிறது.ஒரு சீனில் கட்டை அவரை
விட நீளமாக இருக்கும் அதை எடுத்து அவனை போட போறேன்
என்று அவர் சீரியஸ்ஆக சொல்லும் போது நமக்கு அந்த கட்டையின்
நீளத்தை பார்த்தால் சிரிப்பு வந்து விடும்.இன்னொரு காட்சியில்
தெலுங்கில் கடலோர கவிதை "அட ஆத்தாடி" பாட்டை கேட்டு
அவர் செய்யும் சேட்டைகள் லக லக லக.....

கேங் தலைவனாக வரும் பையனும் மிக இயல்பாக நடித்து
இருக்கிறார்.ஜெயிலில் ஜானியை அடிக்கும் போலீஸ்காராரை
மிரட்டும் போது தியேட்டரில் செம கைதட்டு.மற்ற இருவருக்கும்
வாய்ப்பு அவ்வளவாக இல்லைஎன்றாலும் கொடுத்த வேலையை
சரியாக செய்து இருக்கிறார்கள்.

ஜானியின் அம்மா அப்பாவை தேவகோட்டையில் கார் ஏற்றி
கொல்லும் போது பொது மக்கள் யாரும் வந்து தட்டி கேட்கவில்லை
என்ற கோபத்தில் இருப்பார் ஜானி.ஆனால் ரேணிகுண்டாவில்
காதலியை பார்க்க ஓடும் போது ஒரு சின்ன சந்து உள்ள ஆட்டோ
இடித்து விடும் அப்போ அவரை பத்து பேர் வந்து தூக்கி
விடுவாங்க இதில் எதுவும் உள்குத்து இருக்கானு டைரக்டர் தான்
சொல்லணும்.

முதல் பாதி மின்னல் வேகம் ஆனால் காதல் காட்சிகள் கொஞ்சம்
அலுப்புட்ட வைக்கிறது.இரண்டாவது பாதியில் நாம் நினைக்கும்
சில காட்சிகள் திரையில் நடக்கும் முக்கியமா கிளைமாக்ஸ்.
படத்தில் வன்முறை அதிகம் அவர்கள் தலையில் அடி வாங்கும்
போது நம் தலையில் அடிப்பது போல் இருக்கிறது.தள்ளாகுளம்
மற்றும் மழை பாட்டு நன்று.

படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஒரு கனத்த சோகத்துடன் வெளியே வந்தேன்...ச்சே கடைசியில் காதலர்களை சேர்த்து வச்சிருக்கலாமே என்றும் ஜானி மேல் பரிதாபமும் தோன்றியது.ஒரு வேளை இது தான் டைரக்டர்க்கு கிடைத்த வெற்றி போலும்.

ரேணிகுண்டாவுக்கு தரமான வெற்றி காத்திருக்கு....

இந்த விமர்சனம் அனைவரையும் சேர ஒட்டு மற்றும்
பின்னூட்டங்கள் போடவும்.

நன்றி: cinesnacks.in

உங்கள்
ஜெட்லி சரண்.

Tuesday, December 1, 2009

நான் அவன் தாங்க(இல்லை!!)

நான் அவன் தாங்க(இல்லை!!)


தியேட்டருக்கு கிளம்பும் முன்:

இலச்சி மலை மாரியாத்தா பல பேர் இந்த படத்தை
மொக்கைன்னு சொன்னாலும் உன்மேல பாரத்தை
போட்டு நான் அவன் இல்லை படத்துக்கு போறேன்,
பத்திரமா வீட்ல திருப்பி சேத்துரு தாயி!!

சூப்பர்ங்க, நான் படத்தை பத்தி சொல்லல படத்துக்கு
போறதுக்கு முன்னாடி வூட்லண்ட்ஸ் தியேட்டர்
பக்கத்தில் ஒரு வட நாட்டு சாட் கடை இருக்குது
அங்கே சமோசாவும் ஜிலேபியும் சாப்பிட்டேன்
சூப்பர் ஆக இருந்தது.

நான் அவன் இல்லை கதையென்ன?? அதே பழைய
கதைதான் என்றாலும் இதில் சுவாரசியம் கொஞ்சம்
கம்மி.இசைஅமைப்பாளர் இமான் பற்றி சொல்லியே
ஆக வேண்டும் இந்த அளவுக்கு படு மோசமாக இசை
அமைக்க யாருளும் முடியாது.அவர் பாட்டே ரீமிக்ஸ்
மாதிரி தான் இருக்கு இதில் வேறு பழைய பாடல்களை
ஏன் ரீமிக்ஸ் செய்து கெடுக்கிறார் என்று புரியாத
புதிராகவே உள்ளது.

ஜீவன், இந்த மாதிரி ஒரு நடிகர் நமக்கு கிடைத்தது
நாம் செய்த தவமே.என்னாமா நடிக்கிறாரு??
விக் மட்டும் கண்டுபிடிக்கில இவரால் தமிழ் சினிமாவில்
காலம் தள்ளியிருக்க முடியாது.லட்சுமி ராயை ஏமாற்றும்
காட்சிகளில் ஒரு விக் அணிந்து வருவார் பாருங்க நம்ம
ஊரு பிச்சைக்காரன் தோத்தான் போங்க!!.(தலை புல்லா
நம்ம நண்பர் ஜீத் சூப்பர் பாக்கை கொதப்பி துப்பின மாதிரி
இருக்கும்).மீசையை கிழே விட்டா தம்பி நேரா விட்டா
அண்ணன் உண்மையில் செம டலேன்ட் ஆனா பாருங்க
டைரக்டர் விக்கை மாத்தாம விட்டுடாரு.



அநேகமா ஜீவனோட எக்ஸ்ட்ரா,ஆர்டினரி நடிப்புக்கு
ஆஸ்கார் விருது வாங்கினாலும் அது அவரின் நடிப்பு
திறமைக்கு குறைவான விருதே. ஆனா ஒன்னு மட்டும்
நிச்சயம் ஜீவனுக்கு ஏதோ ஒரு இடத்தில் மச்சம்
இருக்குங்க இல்லனா சும்மாவா ஒரு ஒரு படத்துக்கும்
அஞ்சு கதாநாயகிகள் கூட டூயட் பாடுறாரு.

வியந்தேன், டைரக்டரின் திறமையை கண்டு அல்ல.
என் முன் இருக்கை ஆசாமிகள் செம போதை படம்
ஸ்டார்ட் பண்றதக்கு முன்னாடி ஓவர்ஆ கத்தினார்கள்.
ஒருத்தன் ஆப்பாயில் போட்ட பின் சுத்தமா சவுண்டை
காணோம்.சரக்கின் மகிமையை கண்டு வியந்தேன்.

இதை தான் என் குரு கில்மானந்த முன்னாடியே சொன்னார்

சரக்கினால் உள்ளே போன சைடுடிஷ்
உள்ளாறும் ஆறாதே ஆப்பாயில் போட்ட வடு.....



செல்வா, அநேகமா இவர் நான் அவனில்லை பாகம் மூன்று எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை.என்ன கதையா??
நான் அவன் இல்லை,நான் அவன் இல்லைனு நாலு ரீல்
ஓட்டிடுவாரு மீதியை கில்மான்ஸ் காட்டி சுபம் போட்டு
விடுவார்.

நாலு கதாநாயகிகள் தாராளமாகவே தங்கள் திறமையை
வெளிபடுத்தியுள்ளனர்.ஆனால் நாலு பேருமே அடி
முட்டாளுங்க அதுவும் சாமியாரா ஒரு பொண்ணு வருது
பாருங்க முடியல!!

படத்தில் உச்ச பட்ச கொடுமையாக கிளைமாக்ஸ் இருக்கிறது.
அதில் ஜீவன் அணிந்து வரும் போப் மாதிரியான டிரஸ்
பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஜெட்லி பஞ்ச்:

நானே படத்தை பார்த்து பஞ்சர் ஆகி இருக்கேன்,
எங்கே இருந்து பஞ்ச் சொல்றது.


ஆனாலும் மொக்கை படத்தை பார்ப்பதில் ஒரு
சுகம் இருக்குங்க...


இந்த விமர்சனம் அனைவரையும் சென்று அடைய ஒட்டு
போடுங்கள்....


நன்றி:indiaglitz

உங்கள்
ஜெட்லி சரண்.