Tuesday, August 11, 2009

இரத்த தானம்.

இன்று எனது தூரத்து உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு காலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே தான் நான் WWW.INDIANBLOODDONORS.COM என்ற தளத்தில் சென்று இந்த வேண்டுகோள் வைத்தேன். நானும் இந்த தளத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு என்னுடைய B+ve இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தருபவர்களின் செல் என் தந்தனர், ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.பத்ரி நாராயணன் என்ற அன்பர் உடனே வந்து தானம் தருவதாக சம்மதம் தெரிவித்து நேரில் கிளம்பி வந்து விட்டார். அவர் தென்சென்னையில் ஒரு முன்னணி பன்னாட்டு கணிப்பொறி நிறுவனத்தில் வேலை செய்கிறார், ஆனால் அவர் வந்தவுடன் இந்த மருத்துவர்கள் இன்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் இரு தினங்களுக்கு பிறகு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர். இது என்ன நியாயம்??? ஒரு மனுஷன் வேலை வெட்டிய விட்டுபுட்டு மனிதாபிமானத்தோட வராரே இப்படி செஞ்சா அவரு மனசு எவ்வளவு சங்கடப்படும்?? இத்தனைக்கும் சரியா ஒரு மணி நேரம் முன்னாடி தான் இரத்த தானம் பண்ண ஒருத்தர் வராருன்னு சொல்லியாச்சு அப்ப சொல்லாம் இல்லையா?? மருத்துவர்களே கொஞ்சம் யோசிங்கப்பா................

இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் WWW.INDIANBLOODDONORS.COM அல்லது http://lionsbloodbank.net/new/ ஆகிய தளங்களில் மூலம் தேடி தொடர்பு கொண்டால் கை மேல் பயன் உடனே கிடைக்கும். அல்லது எழும்பூரில் உள்ள அரிமா சங்க இரத்த வங்கிக்கு நேரில் சென்று கூட கேட்கலாம். நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.

நன்றி.
சித்து.

Monday, August 10, 2009

இது எங்க ஏரியா பார்ட்:2

இது எங்க ஏரியா பார்ட்:2

போன பகுதியில் எங்க திருவான்மியூர்
ஏரியாவில்
அமைந்துள்ள தியேட்டர் பற்றி சொன்னேன்,
இந்த வாரம் E.C.R ரோட்டில் உள்ள
தியேட்டர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பிரார்த்தனா மற்றும் ஆராதனா தியேட்டர்.

பிரார்த்தனா தென்னகத்தின் முதல் டிரைவ்-இன் தியேட்டர்.
இங்கே படம் பார்த்தால் தரையில் மெத்தை விரித்து கொண்டு
கூட பார்க்கலாம்(படத்தை சொன்னேன்!!).காருக்கு டிக்கெட்
அம்பது ரூபாய், ஒரு ஆளுக்கு 120 ரூபாய் கொஞ்சம் காஸ்ட்லி
தான்.நாம உன்னிப்பா படம் பார்த்துட்டு இருப்போம் தீடிர்னு
ஒரு நாய் உடால ஓடும் அதெல்லாம் நீங்க கண்டுக்கபிடாது.

சவுண்ட் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, ஓபன் தியேட்டர்
என்பதால் சவுண்ட் தரம் கம்மியாக தான் இருக்கும்.மிச்சபடி
நீங்க கார்ல உள்ள வந்துட்ட யாரும் உங்களை தொந்தரவு
செய்யமாட்டாங்க. நீங்க படம் பாக்கலாம் இல்லன என்ன

வேணா பண்ணலாம்.

கேலேரியில் உட்கார்ந்து பார்ப்பது சுத்த வேஸ்ட், டிக்கெட்

விலை அறுபது ரூபாய் தண்டம். பிளாஸ்டிக் நாற்காலி,
மொக்கை சவுண்ட் இது தான் கேலேரி. காரில் வந்து பார்ப்பதே
சால சிறந்தது, வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

ஆராதனா:

இந்த தியேட்டர் இது வரைக்கும் என் வாழ்வில் மர்மமாவே
இருக்கும் ஒரு புதிரான இடம். தியேட்டர் உள்ளே போன
கடைசியில் இருட்டாகவே இருக்கும் அந்த இடம் முழுவதும்
காதல் ஜோடிகள் தான்.

இங்கு இருக்கும் ஆபரேட்டர் கொஞ்சம் கல் நெஞ்சுகாரர், நான்
இது வரை பார்த்த படங்களில் ஒன்றிரண்டை தவிர அனைத்து படங்களையும் இருபது நிமிஷம் ஒருக்கா நிறுத்தி நிறுத்தி போடுவார்.

போனஸ் செய்தி:

ஒரு நாள் 11.30 படம்ன்னு டிக்கெட் எடுத்துட்டேன்,மணி

கரெக்ட்ஆ 11.30 ஆச்சு. செக்யூரிட்டி கிட்ட டிக்கெட் கொடுத்து
படம் போட்டாச்சா என்று கேட்டேன்.

அதற்கு அவர் " அதோ அங்கே லுங்கி கட்டிட்டு வெளியே
உட்கார்ந்து இருக்காரே அவர் தான் ஆபரேட்டர், அவர்
போய்த்தான் படம் போடுவார்" என்றார்

உள்ளே போய் உட்கார்ந்தேன் மணி 11.45 என்னடா இன்னும்
படம் போடல அப்படின்னு யோசிக்கும் போது ஆபரேட்டர்
உள்ளே வந்து சீட்இல் கொஞ்சம் நேரம் உட்கார்ந்தார். கொஞ்ச
நேரம் வெறும் ஸ்க்ரீனை மட்டும் பார்த்தார்.அப்புறம் ஒரு பத்து
நிமிஷம் கழிச்சு போய் படத்தை போட்டார். (என்ன ஒரு வில்லத்தனம்!!)

படத்தை ரசித்து பார்ப்பவர்கள் இங்கே வந்தால் கண்டிப்பாக
டென்ஷன் ஆவார்கள். படத்தை அடிக்கடி நிறுத்தி அல்லது

சவுண்ட் சரியில்லாமல் போடுவதை திருத்தி கொண்டால்
கோடி புண்ணியமாக போகும்.

காதலர்களுக்கு எச்சரிக்கை:

படம் ஓடிட்டு இருக்கும் போது தீடிரென்று செக்யூரிட்டி டார்ச்
லைட் அடித்து அப்போ அப்போ செக் பண்ணுவார்... அதனால
கொஞ்சம் காதலர்கள் உஷாராக இருப்பது நல்லது.

மாயாஜால்:

காதலர்களின் சொர்க்க பூமி என்று
சொல்லப்படும் மாயாஜாலில் இருப்பது
பத்து தியேட்டர்கள். ஸ்க்ரீன் ஆறுக்கு மேல் அனைத்தும் கொஞ்சம் புதியவை.
சீட்கள் எல்லாம் நல்ல இருக்கும்.படத்தை ரசித்து பார்க்கவேண்டும்
என்றால் மாயாஜால் தான் வர வேண்டும்.ஏன் என்றால் ஒரு
பத்து பேர் தான் படம் பார்ப்பாங்க,யாரும் யாரையும் தொந்தரவு
செய்ய மாட்டாங்க,கத்த மாட்டங்க, காதலர்கள் அவர்களின் வேலையில்
குறியுடன் இருப்பதால் படத்தை ரசித்து பார்க்கலாம்.


கிழே உணவாக தளம் இருக்கிறது இரண்டு பேருக்கு குறைந்தது
நானுறு ரூபாய் இருந்தால் அரை வயிறு சாப்பிடலாம். படத்துக்கே
இரண்டு பேரின் டிக்கெட் 240 வாங்கி விடுவதால் அரை வயிறு
தான் சாப்பிட முடியும்.


மிச்ச படி சவுண்ட், ஏ.சி எதையும் குறை சொல்ல முடியாது.
இன்டெர்வல் டைம் வெறும் அஞ்சு நிமிஷம் தான், இந்த ஒரு
விஷயம் மட்டும் தான் எனக்கு அவர்களை பிடித்ததற்கு காரணம்.
கந்தசாமி இங்கே தான் போலாம் என்று ப்ளானில் இருக்கிறேன்.
ஏன் என்றால் வேறு எங்கையும் எளிதாக டிக்கெட் கிடைக்காது.

போனஸ் செய்தி:

மாயாஜால்க்கு முன்னாடி ரேவதி ஹோட்டல் அப்படின்னு ஒரு
பக்கா லோக்கல் ஹோட்டல் இருக்கு. வீச்சு அருமையாக இருக்கும்
விலையும் குறைவு சிக்கன் குழம்பும் சுவையாக இருக்கும்.
அந்த பக்கம் போன ட்ரை பண்ணி பாருங்க......

இது எங்க ஏரியா பார்ட்:ஒன்று படிக்க கிளிக் செய்யவும்.


முடிஞ்ச ஒட்டு போடுங்க இல்லனா கருத்துரை கூட போடலாம்.

உங்கள்
ஜெட்லி

Saturday, August 8, 2009

பொது அறிவு செய்திகள்

ஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி வழங்கும் பொது அறிவு செய்திகள்.


ரொம்ப முக்கியமான ஆராய்ச்சியில் கடந்த ரெண்டு நாட்களாக
ஈடுபட்டு இருந்தேன்(நம்புங்க ஜி!!!), அதாவது அணில் கடிச்ச
பழத்தை மன்னிக்கவும் கமல் கூட நடிச்ச நடிகையோடு
தலைவர் ரஜினி ஜோடி சேருவதில்லை, அதாவது தனக்கு
முன் கமல் உடன் ஜோடி போட்ட நடிகையை ரஜினி

ஜோடியாக போடுவதில்லை.


உதாரணங்கள்:

சிநேகா, சிம்ரன், ஜோதிகா... இவர்கள் அனைவரும் உச்சத்தில் இருந்தபோதும் ரஜினி பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
சந்திரமுகியில் கூட ஜோதிகா பிரபுவுக்கு தான் ஜோடி.

பாபா படத்தில் மட்டும், இந்தியன் படத்தில் நடித்த கிழவியை
மன்னிக்கவும் மனிஷாவை நடிக்க வைத்தார்.

இன்னும் இந்த ஆராய்ச்சி முழுவதுமாக முடியவில்லை, முடிந்தவுடன் விரிவான அறிக்கையுடன் உங்களிடம் சமர்பிக்கிறேன் .முடிந்தால் யாரவது எனக்கு டாக்டர் பட்டம்
வழங்க சிபாரிசு செய்யவும்... தருவாங்களா?

*********************************
அடுத்த ஆராய்ச்சி....

போன வாரம் பேப்பர்ல ஒரு செய்தி படிச்சேன்ங்க,...
உங்கள் பார்வைக்கு

பெண் கற்பழிப்பு.
கல்யாணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் கைது.

பெண்ணின் சம்மதம் இல்லமால் உறவு கொண்டால் அது
கற்பழிப்பு. மேல உள்ள செய்தியை படித்தால் எனக்கு ஒரே
குழப்பமா இருக்கு. கல்யாணத்துக்கு முன்னாடி உடலுறவு
வைத்து கொண்டது அந்த இருவரின் தப்பு. என்னால் இந்த
செய்தியில் ஒத்து கொள்ள முடியாதது காரணம் கற்பழிப்பு
என்ற
ஒன்று மட்டுமே......

ஏன் இதை கற்பழிப்பு என்று கூறுகிறார்கள்.
யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க பாஸ்.....

*****************************************
முடிஞ்சா ஒட்டு போடுங்க பாஸ், அப்படியே பின்னூட்டமும் போடுங்க.

ஆராய்ச்சி தொடரும்
ஜெட்லி.

Wednesday, August 5, 2009

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.

ஷகீலா படமும் விடாமுயற்சியும்.


சென்னை அண்ணாசாலையில் உள்ள கெயிட்டி தியேட்டரை
ஒரு வழியாக இடித்து விட்டார்கள், அங்கே ஷாப்பிங் மால் வரபோகிறது என்று பெரிய பேனர் வைத்துள்ளனர். அந்த இடித்த
தியேட்டரை பார்க்கும் போது என் எண்ணத்தில் உதித்த சில
மலரும் நினைவுகள் உங்களுக்காக, நான் சொல்லும் செய்தி
மூலம் உங்களுக்கும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்
மேலும் மலரும் என்று நம்புகிறேன்.

ஐந்து வருடங்கள் முன்:

நானும் என் நண்பன் ராஜ்(பெயர் மாற்றபட்டுள்ளது) கெயிட்டி
தியேட்டரில் ஓடும் மலையாள படத்துக்கு போனோம். சிட்டி சென்டர் என்பதால் அவ்வளவாக பிட் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது.இடைவெளி நேரம் பொதுவாக இந்த மாதிரி தியேட்டரில்
முக்கா வாசி பேர் இடைவெளியுடன் போய் விடுவார்கள், ஆனால்
நாங்கள் தன்னம்பிக்கையுடன் அடுத்த பாதியையும் பார்க்க முடிவு
செய்தோம்.

அப்போது நண்பர் ராஜ் தனக்கு சிகரட் வேண்டும் என்று,தான்
கிளாசிக் மெந்தால்(classic menthol) மட்டும்தான் அடிப்பதாக கூறி
என்னை வாங்க சொன்னார். நான் "ஐயோ என்னால் முடியாது"
என்று மறுத்து விட்டேன் இந்த மாதிரி தியேட்டரில் பில்டர்
இருந்தாலே பெரிய விஷயம் என்று எனக்கு தெரிந்தது தான்
காரணம்.

நண்பர் ராஜ் கான்டீன் சென்று கேட்டார்.....

ராஜ்(தன்னம்பிக்கையுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால்
ஒன்னு கொடுங்க...

கான்டீன் ஆள் ஒரு மாதிரி பார்த்து விட்டு பதில் ஏதும்
சொல்லாமல் வேறு திசை திரும்பி விட்டார்.

ராஜ்(விடாமுயற்சியுடன்): அண்ணே கிளாசிக் மெந்தால் இருக்கா?

கான்டீன் நபர்: தம்பி பில்டர் மட்டும் தான் இருக்கு, இதுக்கே
இங்கே நாறுது.... மெந்தால் வேணுமா இவருக்கு....!!!


ராஜ்: சரி எது இருக்கோ கொடுங்க........(என்னை பார்த்து)என்ன நண்பா இது ஒரு மெந்தால் கூட இல்ல... ச்சே.

போனஸ் செய்தி:

கெயிட்டி தியேட்டரில் பிட் போடுவது குறைவு என்றாலும் என்றாவது ஒரு நாள் பிட் பார்ப்போம் என்று நாங்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து சென்றது தனி கதை....

********************************************

கேட்க மறந்த கேள்வி:

நான் கல்லூரி படிக்கும் போது நடந்த சம்பவம்.

அன்று எங்கள் மேம் பாடம் நடத்தி கொண்டு இருக்கும்
போது சுற்று அறிக்கை வந்தது, அதாவது நாளைக்கு விடுமுறை
என்றும் வரும் சனிக்கிழமை அதற்காக கல்லூரி இருக்கும் என்று
மேம் அந்த அறிக்கையை வாசித்தார்.

என் பக்கத்தில் உள்ள நண்பன் "எதுக்கு மேம் நாளைக்கு லீவ்?"
என்று கேட்டான்.

"நாளைக்கு வரலட்சுமி விரதம் அதான் லீவ்" என்றார் எங்கள் மேம்.

உடனே நான் என் நண்பனின் காதில் "மேம் என்னைக்கு விரதம்
இருப்பாங்க அப்படின்னு கேளு மச்சான் நமக்கு இன்னொரு நாள்
லீவ் கிடைக்கும் இல்ல" என்றேன்.

"என்னடா உளர்றே?" என்றான் நண்பன்

"ஏன்டா வரலட்சுமி , விரதம் இருந்தா லீவ் விடுறாங்க, நம்ம
தீபலட்சுமி மேம், விரதம் இருந்தா லீவ் உடமாட்டங்களா?"
என்றேன்.

"இரு இப்பவே கேக்குறேன்" என்ற என் நண்பனின் வாயை கணினி
லேப் மார்க்கை நினைத்து பொத்தினேன்.

******************************************************

நீங்கள் படித்ததை அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


உங்கள்
ஜெட்லி

Monday, August 3, 2009

பொடிமாஸ்

பொடிமாஸ்(3.8.09):
**********************

மல்லாக்க படுத்து யோசிச்சது:

டாஸ்மாக் தத்துவம்:

பிராந்தியும் டெட்டாலும் ஒரே கலர் இருக்குதுன்னு,
டெட்டால்ஆ தான் குடிக்க முடியுமா, இல்ல
பிராந்தியதான் ஊத்தி கையை கழுவ முடியுமா???.,,,

**********************
இன்றைய சிந்தனை:
(அல்லது)
ஜெட்லி தத்துவம் நெ.3444

அசின் த்ரிஷா என்றால் உதடுகள் ஒட்டாது
நமீதா மாளவிகா என்றால் உதடுகள் ஓட்டும்.




*********************************
படித்தது:

GOD BE WITH YOU என்பதன் சுருக்கம் தான் நாம் இப்போது கூறும்
GOOD BYE.

*****************************************
பொன்மொழி:

அழகான பெண் ஒரு ஆபரணம், நல்ல பெண் ஒரு பொக்கிஷம்.

- ஸாடி.

***********************************
காதில் விழுந்த செய்தி:

திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டரை அடுத்த
மாதம் முதல் சத்யம் தியேட்டர் நிர்வாகம் லீசில் எடுக்க போகிறது.
இவளோ நாள் அம்பது ரூபாய்க்கு படம் பார்த்தேன், இனிமே என்ன
ரேட் வைக்க போறாங்களோ!!!!

***********************
இன்று ஒரு தகவல்:

குடிமக்களுக்கு ஒரு நற்செய்தி:

ஏதோ புதுசா பயோ பீர் அப்படின்னு ஒன்னு வருதாம், இதுல
பத்து விதமான மூலிகைகள் அடங்கி இருக்காம். அப்புறம்
முக்கியமான் விஷயம் இதுல்ல alcahol 5 முதல் 7 சதவிதம்
வரைக்கும் இருக்காம்......
என்ன இருந்தாலும் நம்ம சிங்கத்தின் தாகத்தை தணிக்கும்
zingaro போல வருமா????

*****************************************

படித்தது உண்மையா என்று தெரியவில்லை....

கியூபா நாடு முன்னால் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ தாடி வளர்த்து
கொண்டதற்கு ஒரு காரணம், அமெரிக்கா கியூபாவுக்கு பிளேடுகள்
ஏற்றுமதி செய்ய தடை விதித்தால்தான்...

******************************

இது ஏ ஜோக்கா??? கொஞ்சம் பெருசு(ஜோக்கை சொன்னேன்!!)


ஓர் புதுமண தம்பதிக்கு அன்று தான் முதல் இரவு.
மறுநாள் காலையில் மாப்பிள்ளையின் அம்மா காலை
சிற்றுண்டிக்காக முதல் மாடியில் இருக்கும் தன் மகனையும் அழைத்தாள். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்தாங்க

உடனே அம்மா "சரி நாம சாப்பிடுவோம், அவுங்க வர
லேட் ஆகும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...."என்று
மாப்பிள்ளையின் தம்பி ஆரம்பித்தான்.

"நீ ஒன்னும் நினைக்கவேணாம்,ஒழுங்கா சாப்பிடு"
என்று அதட்டினாள் அம்மா.ஆனால் புதுமண தம்பதிகள்
காலை உணவுக்கு ரூமை விட்டு வெளிய வரவில்லை.

திரும்பவும் மதிய உணவுக்கு அம்மா தன் மகனை
சாப்பிட அழைத்தாள்.

திரும்பவும் அனைவரும் மகன் மருமகளுக்கு வெயிட்
பண்ணினார்கள்.நேரம் செல்லவே அனைவரையும் சாப்பிட
சொன்னாள் அம்மா.

"ஏன் இன்னும் வரலை?" என்று கேட்டவாரே சாப்பிட
ஆரம்பித்தாள் அம்மா.

"அம்மா நான் என்ன நினைக்கிறேனா...." என்று மாப்பிளையின்
தம்பி திரும்பவும் வாயை திறந்தான் .

"டேய் உனக்கு பத்து வயசு தான் ஆகுது, நீ ஒன்னும்
நினைக்க வேணாம். ஒழுங்கா சாப்பிடு" என்று மறுபடியும்
அதட்டினாள் அம்மா.

அவர்கள் மதிய சாப்பாடும் சாப்பிட வரவில்லை. இரவு வந்து
விட்டது. திரும்பவும் அதே கதை தான்.அம்மா ஏன் வரவில்லை என்று கேட்டாள், உடனே தம்பி "அம்மா நான் என்ன நினைக்கிறேனா"... என்றான்.

அம்மா கோபம் வந்து சொல்லி தொலை என்றாள்.

"நேத்து நைட் அண்ணா வந்து vaseline எடுத்துட்டு போகறதுக்கு
பதில் நான் aeroplane செய்ய வச்சிரிந்த glue எடுத்துட்டு போய்ட்டான்னு நினைக்கிறேன்" என்றான் தம்பி.
******************************


புடிச்சா ஒட்டு போடுங்க....

உங்கள்
ஜெட்லி.