Thursday, September 29, 2011

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!

பைக் சர்வீஸ் - கடுப்புயேத்துறாங்க மை லார்ட் !!!



நேத்து தான் அபாச்சி ரெண்டாவது சர்வீஸ். முதல் சர்வீஸ்க்கு அப்புறம் தான் என் வண்டிக்கு நிறைய ப்ராப்ளம் வந்தது. ஒரு ஹோர்ன் தான் அடிச்சுது, பின்னாடி சீட்ல இருந்து ஒரே சவுண்ட் , கியர் ஷிப்ட் ரொம்ப ஹார்ட்ஆ இருந்தது. கியர் ஷிப்ட் மட்டும் தான் முதலில் தெரிந்து திரும்பவும் போய் நானே சரி செய்தேன். எத்தனை தடவை தான் போய் போய் சரி பண்றது அப்படின்னு ரெண்டாவது தடவை சர்வீஸ் பண்ணும்போது
பார்த்துக்கலாம்னு விட்டுடேன்.

இந்த தடவை வண்டி எடுக்கும் போது ரெண்டு ப்ரேக் அடிச்சாலும் கிரீச் கிரீச்னு சவுண்ட்... முன்னாடி போர்க்கில் இருந்து ஒரு மாதிரி சவுண்ட்....நேத்தே திரும்பவும் சரி செய்ய சொல்லி வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் ஓரளவுக்கு சவுண்ட் கம்மி ஆச்சு... நாளைக்கு சரி ஆயிடும் ஆயில் ஸ்ப்ரே பண்ணதால அப்படி சவுண்ட் வருதுனு சொன்னான்...நான் நம்பல, இருந்தாலும் கடைக்கு லேட் ஆயிடுச்சுனு வந்துட்டேன்...


அடையார் ராம்கேல தான் வண்டியை எடுத்தேன்.... ரெண்டு நாள்ல வண்டியை கொடுத்துட்டாங்க. ஆனா சர்வீஸ் தான் மோசம்... அங்க இருக்குற ஆளுங்க கிட்ட கேட்டாலும் எங்களுக்கு தெரியாது அப்படின்னு சொல்றாங்க.... இங்க மட்டும் இல்ல எல்லாம் சர்வீஸ் சென்டர்களும் அப்படி தான்.
மொத மொத எங்க பைக் பஜாஜ் கலிபர்... அங்க வண்டியை கொடுத்து சர்விஸ் பண்ற அவஸ்தை இருக்கே...அய்யோயோ... அதனால தான் பல்சர் பக்கமே தலை வச்சி படுக்கல..அப்புறம் பேசன் ப்ளஸ்...ப்ரீ சர்வீஸ் வரைக்கும் கூட அங்க நான் பண்ணல...அவ்வளவு கடுப்பு ஏத்துவாங்க.


அப்புறம் நண்பர் ராம்ப்ரசாத் சைதாபேட்டையில் ஒரு மெக் கடையை அறிமுகப்படுத்தினார். செமையா சர்வீஸ் பண்ணுவாரு...ஒரு நாளைக்கு சில வண்டிகளை மட்டும் தான் எடுப்பார். காசு ஆனாலும் சர்வீஸ் பக்காவாக இருக்கும். இப்படியே சில வருஷங்கள் அவர்கிட்ட சர்வீஸ்
விட்டுட்டு வந்தேன். அப்புறம் வேலையால் அங்க போறது இல்லை...இங்க இருக்குற லோக்கல் கடைல ரெண்டு தடவை வண்டியை விட்டேன்....எப்பா அதுக்கு ஷோரூம் சர்வீஸ் சென்டர்ஏ மேல்...அப்புறம் சர்வீஸ் பண்றது விட்டுட்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை என்ஜின் ஆயில்
மட்டும் மாத்தினேன்..அதுவும் பிடிக்காம எவனோ வண்டியை லவட்டிட்டு போய்ட்டான்...!!

திரும்பவும் சர்வீஸ் சென்டர் போறேன்... இன்னைக்கு விட்றதா இல்லை....என்ன காலைல பெய்ஞ்ச மழைல வாட்டர் வாஷ் பண்ண வண்டி தான் சேர் ஆயிடும்...என்ன பண்றது... சர்வேஸ் விட்டு எடுத்து அடுத்த நாளே மழை பெய்யறது கொஞ்சம் கொடுமையான விஷயம் தான்... !!

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனுபவம் பேசுகிறது...

rajamelaiyur said...

//
சர்வேஸ் விட்டு எடுத்து அடுத்த நாளே மழை பெய்யறது கொஞ்சம் கொடுமையான விஷயம் தான்... !!
//

உண்மைதான்

MANO நாஞ்சில் மனோ said...

பிடிச்சி வச்சி நாலு அப்பு அப்பினா சரியாவானுங்க, இது என் அனுபவம்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so sad....

SURYAJEEVA said...

பேசாமல் நிறுவனத்திற்கு ஒரு மின் அஞ்சல் தட்டி விடுங்கள்.. காசா பணமா... இது வரை எனக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

so sad....
///

very bad . . .

Ashok D said...

நானும் apache தான்... இதுவரைக்கும் 20 சர்வீஸ் பண்ணியாச்சு(2 சுழியா?)gear shifting problem இருக்கு இதுவரைக்கும் சரி பண்ணல :)... வேற வழியில்ல பக்கத்தல இருக்கற சர்வீஸ் செண்டர்... prabha TVS...

next time honda or heromotocorp try பண்ணலாம்ன்னு இருக்கேன் :)

meyyappanram said...

jetle vei parkatha mokkai padam

vaagai soodava super

and muran nice but inspird of strangers of train

ஜெட்லி... said...

@meyyappanram...

vaagai sooda vaa...superAA...??

muran parthaen ok... vsv.. time kidaichaa parkkalam...
ippothaikku johny english parkka thaan plan