வடசென்னையின் ஆரம்பம் தான் பர்மா பஜார் இருக்கும் ராஜாஜி சாலை.பர்மா பஜார் அருகில் தான் உயர்நீதிமன்றம், பூக்கடை,பீச் ஸ்டேஷன்,குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.பர்மாவில் இருந்து பிழைக்க வந்தவர்களுக்கு அரசு ஒதுக்கி கொடுத்த இடமே பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்று
சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரிந்த ஒன்று.
பர்மா பஜாரை போலிகளின் கூடாரம் என்று கூட கூறலாம்.
கஸ்டமரை மதிப்பது என்றால் என்ன?? என்று கேட்பவர்கள்
நிறைய பேர் அங்கு கடை வைத்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
நான் இப்போது பஜாரில் எதுவும் வாங்குவதில்லை காரணம்
எல்லாமே இன்டெர்நெட் வந்தவுடன் தேவையானதை
தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.ஆனால் அங்கு புதிதாக
செல்பவர்களுக்கு சில ஐடியாக்கள் மட்டும் சொல்கிறேன்.
# நீங்கள் அந்த ரோட்டில் நடந்து சென்றாலே ஒருவரோ
அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழுவோ உங்களை சுற்றி
கொள்ளும்,அவர்கள் வேறு யாரும் அல்ல இடை தரகர்கள்.
அவர்களிடம் நீங்கள் பேச்சு கொடுத்தால் உங்கள் பர்ஸ் பழுத்துவிடும்.
# அவர்கள் உங்களை வந்து கேக்கும் போது நீங்கள்
"எனக்கு தெரிஞ்சா கடை இருக்கு" என்று சொல்லி
அல்லது அவர்களை சட்டை செய்யாமல் கடையை
நோக்கி சென்றால் நல்லது.
# முதலில் அவர்கள் தமிழ் படம் வேணுமா என்பார்கள்,
அடுத்து பலனா படம் வேணுமா என்று கேட்பார்கள் என்பது
குறிப்பிடதக்குது......
#உங்களுக்கு தேவை ஆனதை நீங்களே கடையை பார்த்து
பேரம் பேசி வாங்குவது உத்தமம்.
# நான் சிறு வயதில் ஜாக்கிசான் நடித்த அனைத்து சி.டி.களும்
இங்கு வாங்கியுள்ளேன்...பாதி சி.டி. நின்னு நின்னு ஓடும்...
நீங்கள் ஜாக்கி நடிச்ச miracle படம் பார்த்து இருக்கிங்களா??
சூப்பர் மசாலா படம்...
கல்யாண பிரியாணி:
சில மாதங்களுக்கு முன் நண்பனின் பரிசீலனையின் பேரில்
இந்த ஹோட்டல்க்கு சென்றோம்.அப்போது மதியம் மணி 1,
செம கூட்டம்...பிறகு, போன வாரம் போகும் போது கொஞ்சம்
முன்னாடியே சென்றோம் கூட்டம் அப்போது தான் கூட
ஆரம்பித்தது.
முதலிலே டோக்கன் வாங்க வேண்டும்.பின்பு வாழை
இலையில் கேசரி மற்றும் வெங்காயத்தை,கத்திரிக்காய்
கொஸ்து வைப்பார்கள்.கல்யாண பிரியாணி கொஞ்சம்
வித்தியாசமா இருக்கும் அதாவது மசாலா பொருள்கள் அவ்வளவாக கடிப்படாது.அரைத்து போட்டு விடுவார்கள் போல.....
மற்றபடி சுவை ஆஹா ஓகோனு சொல்ல முடியாது..!!
அத்தோ ப்ரை: (atho noodles)
வடசென்னைவாசிகளுக்கு பழக்கமான ஒரு சாலைஓர
உணவு(road side food) தான் இந்த அத்தோ நூடுல்ஸ் கடை.
பீச் ஸ்டேஷன்க்கு எதிராக உள்ளே ஒரு சாலை போகும்
அந்த சாலையில் ஒரு ஏழு கடை அல்லது அதற்கு மேலும்
இருக்கலாம்.
இங்கு ரெண்டு வகையான அதாவது வெஜ் மற்றும் நான்-வெஜ்
நூடுல்ஸ் கிடைக்கும்.வெஜ் உணவை அத்தோ என்று மட்டும்
சொல்லுவார்கள்...அதாவது வேகவைத்த நூடுல்ஸ் உடன்
பச்சை வெங்காயம் மற்றும் இதர பொருட்கள் சேர்த்து
கொடுப்பார்கள்.நான்-வெஜ் என்பது கொத்து பரோட்டா போல்,
அதாவது தோசை கல்லில் முட்டை கோஸ் போட்டு பின்பு
முட்டை சேர்த்து அதனுடன் கொஞ்சம் சிக்கன் குழம்பு
சேர்ப்பார்கள் பின்பு அந்த நூடுல்ஸ்ஸை அதனோடு சேர்த்து
கொத்துவார்கள்.இதற்கு பேர் அத்தோ ப்ரை.
இதற்கு ஊத்திக்கொள்ள பக்கத்தில் ஒரு அண்டாவில் வாழைத்தண்டு சூப் வைத்து இருப்பார்கள் நமக்கு தேவை ஆனதை எடுத்து நம் அத்தோ ப்ளேட்இல் ஊற்றி கொண்டு சாப்பிட வேண்டியது தான்.மேலும் அங்கு பேஜா என்று ஒரு ஐட்டம் இருக்கும்,அது பார்ப்பதற்கு நம்மூர் தட்டை போல்
இருக்கும்...அதை நொறுக்கி போட்டு வாழைத்தண்டு சூப்பை ஊற்றி சாப்பிட்டால்.....உண்மையில் செம.....
அந்த பக்கம் போகும் போது கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.....
இது குறித்து ஒரு சிறிய வீடியோ காட்சி.....
நன்றி NDTV-HINDU....
மேலும் பல இடங்கள் இருந்தாலும் அதை வேறு ஒரு நேரத்தில்
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.....
உங்களுக்கு இந்த இடுகை பிடித்து இருந்தால் ஒட்டு போடவும்
ஏதாவது சந்தேகம் இருந்தாலும் இல்லை என்றாலும்
பின்னூட்டம் போட மறவாதீர்.......
உங்கள்
ஜெட்லி.....
58 comments:
நீங்க சாப்பாட்டு மாமாமன்னர்ன்னு தெரியுது :))
என்ன ஜெட்லி நம்ப ஏரியாகுள்ள வந்துருக்கீங்க, சொல்லியிருந்தா ரெண்டு பெரும் ஒண்ணா சுத்தி இருக்கலாமே.
அந்த அத்தோ கடை எதிரில் ஹோட்டல் Highness அருகில் இருக்கும் பீடா கடை சூப்பர் மச்சி, அப்புறம் நேஷனல் மருத்துவமனை பின்புறம் உள்ள கபாப் கடைகள் நல்லா இருக்கும்.
nanum cd ellam vangiruken.. semma bazzar na adhu namma burma bazzar dhan..
:)
ஜெட் வேகத்துல மேட்டர்.. சூப்பர்..
ம்ம்ம். சென்னை நாட்களை நினைவு 'படுத்திய' பதிவு.
'அத்தோ' பர்மிய உணவு. எனக்கும் மிக பிடித்தமானது.
ஒரு change-க்கு சாப்பாட்டு விமர்சனம் ??
மதுரைக்கு வாங்கப்பு..!
ஜில் ஜில் ஜிகர்தண்டா,லாலாக்கடை அல்வா, கடல் பாசி பாசந்தி,ஜெராம் பேக்கரி ஸ்வீட்டு வாங்கித் தாரேன்..!
பர்மா பஜார்ல வாங்குறதுலாம் நம்ம லக்தான் ஜெட்லி, ஹாலிவுட் படங்கள்லாம் இங்க வாங்கினப்போ சிலது குவாலிட்டி சூப்பரா இருந்தது, சிலது செம மொக்கை
நண்பா 5வருடம் முன்பு பர்மா பஜாரில் தான் மொத்தமாக ஃபைவ் இன் 1 ஆங்கில பட் டிவிடி 3 ரூபாய்கு வாங்குவேன். தெரிந்த கடையில் மட்டுமே வாங்கவேண்டும்,அப்போது தான் பிரச்சனை என்றால் மாற்றமுடியும்.
போலிகளும் அதிகம் உண்டு,சில பேர் பேக்கிங் செய்கையிலே கணிமைக்கும் நேரத்தில் வேறு ஒரு போலியான பொருளை வைத்து விடுவர்.மந்திரம் போட்டது போல இருக்கும்.
பல்லாவரத்திலேயே இந்த பர்மா சூப்பு கடை உண்டு,நூடுல்ஸும் உண்டு.
பிரியாணி கடையில் இப்போது கோம்போ ஆஃபராக
1/2ப்லேட் பிரியாணி+1/4ப்லேட் சிக்கன்+200கோக்=99ரூபாயாம்,கூட்டம் அலை மோதுது
அத்தோ சாப்பிட்டு இருக்கேன், அதென்ன மொய்யான்? ஹ்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க
அத்தோ மட்டும்தானா? மொய்ங்கா???
ஹும்ம் சாப்ட்டு 15 வருஷம் ஆயிடிச்சி:)
பசார் அனுபவம் ஸூப்பர்..:)
@வெற்றி
ஆமாம்.... ஏம்பா நீ சாப்பிட மாட்டிய....??
@சித்து
நீ எங்கப்பா வரப்போற.....
சனிக்கிழமை கஸ்டம்ஸ்......
@vinodhu
ரைட்....
@ வானம்பாடிகள்
நன்றி....
@ ஜாக்கி சேகர்
நன்றி அண்ணே...
@துபாய் ராஜா
துபாய்க்கு ஒரு பார்சல் அனுப்பி விடவா???
@மோகன் குமார்
விமர்சனம்லாம் இல்ல...
சும்மா ஒரு அறிமுகம் அவ்வளவுதான்....
@♠ ராஜு ♠
கண்டிப்பா வரேன்.....
@குறும்பன்
நீங்க சொல்றது சரிதான்.....
லக் வேண்டும்...
@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
பல்லாவரம் மேட்டர் புதுசு....
அந்த பக்கம் போகும் போது ட்ரை பண்றேன்....
உங்களுக்கும் பர்மா பஜாரில் பல அனுபவம்
இருக்கும் போல.....
@ நாஸியா
//அதென்ன மொய்யான்? //
யாருக்கு தெரியும் ஒரு வேளை
பழங்காலத்தில் அத்தோவை மொய்யான்னு
சொன்னன்களோ என்னவோ.......
இதை பற்றி விரிவா கூடிய விரைவில்
ஒரு ஆராய்ச்சி பண்றேன்....
@ஷங்கர்
//ஹும்ம் சாப்ட்டு 15 வருஷம் ஆயிடிச்சி:)
//
:(
burmavil irunthu pizaikka vanthavarkal//
burmavil iruntha thiruppi anuppapatta akathikalaaka vantha indhiyarkal thaan avarkal.etho avarkalai pizaikka india vantha burmiyar pol ezuthi irukkireerkal.
இது உங்க ஏரியா மட்டும் இல்லை எங்க ஊர் ஏரியாவும் தான் பர்மா பஜார் குட்டி குட்டி கடைகள் வெளிநாட்டில் இருந்து சாமான் வாங்கி செல்ல முடியாதவர்கள் நேரா இங்கு போனால் போதும் வெளிநாட்டு அயிட்டம் எல்லாம் கிடைக்கும்.
அட எங்க வீட்டு கல்யாண ஸ்பெஷல் பிரியாணி,
மட்டன் பிரியாணி, எண்ணை கத்திரிகாய், தயிர் சட்னி, கேசரி .
அதுவும் வாழை இலையில் ம்ம் சூப்பர்
ஆஹா....
//burmavil iruntha thiruppi anuppapatta akathikalaaka vantha indhiyarkal thaan avarkal.etho avarkalai pizaikka india vantha burmiyar pol ezuthi irukkireerkal. //
தவறுக்கு வருந்துகிறேன்.....
நன்றி ஜலீலா......
நன்றி ஸ்ரீராம்....
அட அது நம்ம ஏரியா தல. எனது சொந்தக்காரர்கள் பலரின் கடை உண்டு. :-) வாடிக்கையாளர்கள் சேவை அங்கு கிலோ என்ன விலை தான். அது ஒரு வித்தியாசமான வியாபார உலகம்.
அத்தோ, பேஜோ, மோங்கியா, கொவ்சோ எல்லாம் பர்மா உணவு வகைகள். எல்லாமே நல்ல இருக்கும் வித்தியாசமா.
பிரியாணி போட்டோவே பசிய தூண்டுதுப்பா... நீங்க என்ன கேபிளோட அண்ணனா??
ஐய்யோஓஓஓ பிரியாணி படத்தை போட்டு ஆசையை வேற கிளப்பிட்டீங்களே ஜெட்லி..நியாயமா?
வித்தியாசமான முயற்சி.. பஜாரப் பத்தி நல்லாவே சொல்லி இருக்கீங்கப்பா..
அத்தோ நூடுல்ஸ் கடை.......... here I come.
.........இந்த பதிவு தொடர், ரொம்ப நல்லா இருக்கு. சினிமா தவிர, இது நல்ல சைடு பிசினசு.
ஜெட்லி பர்மா பஜார் கடைகளுக்குள் நுழைந்து வெண்டாம் என்றால் அவனுங்க நம்ம காதுல உழுற மாதிரியே திட்டுவானுங்க. சாப்பாட்டுகடை அறிமுகங்களை பார்த்தாச்ச். போய் சாப்பிட வேண்டியதுதான்.
@ ரோஸ்விக்
//மோங்கியா, கொவ்சோ //
இது ரெண்டும் என்னனு சொல்லுங்க பாஸ்....
@ D.R.Ashok
அண்ணனா??
சைடில் காலை வாரி உட்டிங்கலே டாக்டர்...
@ Mrs.Menagasathia
நீங்க மட்டும் ஒரு ஒரு டிஷ்க்கும்
போட்டோ போடும் போது எனக்கு
எப்படி இருக்கும்.....அதான் நானும்
போட்டோ போட்டேன்..... :)
@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி அண்ணே
@ chitra
//இது நல்ல சைடு பிசினசு.//
என்னாது இது....நான் என்னமோ அத்தோ
கடை நடத்துற மாதரி பிசினஸ்னு சொல்றிங்க....
விட்டா கமிஷன் வாங்கி எழுதுறேன்னு சொல்விங்க
போல......:)
@ புலிகேசி
சரியா சொன்னிங்க பாஸ்.....
சாப்பிட்டுட்டு சொல்லுங்க.
பர்மா பஜார்ல எந்த சைடு போனாலும் இந்த இடைதரகர்கள் கரெக்டா வந்து புடிப்பாங்க. அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதே பெரும் பாட இருக்கும்.
என்ன ஜெட்லி .. நீங்கள் சென்னையை சூறாவளி சுற்று பயணம் பண்றிங்க போல ?????
வாழைத்தண்டு சூப்புக்கு "கொவ்சோ"-னு பேரு. மோங்கியாங்கிறது வெள்ளை கலர்ல நூட்லஸ் மாதிரி ஒரு ஐட்டம் இருக்கும் பாருங்க... எல்லாமே பர்மாகாரர்களின் சாப்பாட்டு வகை.
இந்த ஐட்டங்கள் எல்லாம் வியாசர்பாடி, சர்மா நகர் ஏரியாவுலையும் கிடைக்கும்...
நம்ம ஏரியால என்ன பண்றீங்க???
அத்தோ மேட்ட சூப்பர்.. ஃபோட்டோலாம் அருமை..
கபாப் பத்தி போடம விட்டிடீங்களே..
அடுத்த முறா வந்தா சொல்லுங்க . கபாப் சாப்பிடலாம்.. (பில் நீங்க பே பண்ணுங்க...)
அப்டியே நம்ம ஹை கோர்ட் பத்தியும் ஒரு பதிவு போடுவோம்..
@ரோமியோ...
அதுக்காக தான் டிப்ஸ் கொடுத்து இருக்கேன்....
@ Dinesh
வேற என்ன வேலை....
நீங்களும் ஜோதில கலந்துகீறிங்களா??
@ ரோஸ்விக்
ஹோ...நான் கூட வெள்ளை கலர் நூடுல்ஸ்
பார்த்தேன்....ரைட்...தகவலுக்கு நன்றி அண்ணே....
என் நண்பன் ரெட்ஹில்ஸ் பக்கம் கூட இருக்கணு
சொன்னான்...
@ கடைக்குட்டி
கண்டிப்பா போவோம்...
போன் பண்றேன்...
@jetli
நான் ரெடி ஜெட்லி ..நீங்க ..அடுத்து உங்க சுற்று பயணம் எங்க தொகுதி வில்லிவாக்கதுல இருண்டு ஆரம்பிக்கணும் ..என்ன சொல்றிங்க
@ dinesh
கண்டிப்பா வில்லிவாக்கம் வருகிறேன்....
நாம ஒன்னும் அரசியல் சுற்றுபயணம் போகலையே??
வில்லிவாக்கத்தில் என்ன ஸ்பெஷல் என்று
மெயில் பண்ணவும்.... jetliidli@gmail.com
@jetli
அந்த mail id உங்களோடது தானா...
வில்லிவாக்கம் தான் இந்திய திருநாட்டின் மிக பெரிய தொகுதி ...இத தவிர வேற ஒன்னும் இல்ல ஜெட்லி..
@ dinesh
என் mail id தான்....
இட்லி சாப்பிடும் போதும் ஆரம்பிச்சது....!
பெரிய தொகுதி என்று தெரியும்....
சுத்தி பார்க்க எதுவும் இடம் இருக்கா??
சுத்தி பாக்கற அளவுக்கு ஒன்னும் இல்ல ஜெட்லி ...வேண்டும் என்றால் ICF factory இருக்கு .. அங்க போயிட்டு வரலாம் ...நீங்க அண்ணா நகர்க்கு போரிங்கனா அப்படியே வில்லிவாக்கதுக்கு வாங்க ஜெட்லி.. உங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கறேன் ...
@Dinesh
ரைட்....வரும் போது சொல்றேன்...
"மதுரைக்கு வாங்கப்பு..!
ஜில் ஜில் ஜிகர்தண்டா,லாலாக்கடை அல்வா, கடல் பாசி பாசந்தி,ஜெராம் பேக்கரி ஸ்வீட்டு வாங்கித் தாரேன்..!"
ராஜு,
மதுரைகரங்க ஜில் ஜில் ஜிஹார்தண்டா , இடிலியோட நிறுத்திகோங்க அப்பு..
அல்வா கொடுக்க நாங்க இருக்கோம்ல......
Just am kidding...
ஐயா ஜெட்லி அவர்களே..
இந்த அத்தோ கடை விளம்பரத்துக்கு எவ்ளோ கமிசன் வாங்குனீங்க.
அத்தோ, பெஜோ, கொவ்சோ, மொய்யான் தவிர வேற பர்மா உணவுகள் எதும் கிடைக்குதா சென்னைல... தகவல் தெர்ந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும். நன்றி!
Post a Comment