முன்னுரை:
என் குரு கில்மானந்தா கூறியது:
"மோட்சத்தை அடைய சிறந்த வழி மோட்சம் தியேட்டரில்
படம் பார்ப்பது தான்"
என் குரு சொன்னது போலவே கடந்த திங்கள்கிழமை மோட்சம்
தியேட்டரில் திகிலன்(TWILIGHT-NEW MOON) படத்தை பார்த்தேன்.
ரொம்பவே திகிலாகவே இருந்தது, அய்யய படம் இல்லைங்க
பால்கனியில் என்னையும் சேர்த்து ஒரு பதினாலு பேரு தான்
இருந்தோம் அது தான் திகிலுக்கு காரணம்.
காதல் காட்சி படம். கிழே
ஜெட்லி சரண்.

நான் இந்த படத்தின் முதல் பாகத்தை பார்க்கவில்லை இருந்தாலும்
வாம்பைர்(VAMPIRE) படம் என்று விளம்பரம் இருந்ததால் ஒரு கில்மாவுக்காக போய்ட்டேன்.நான் சின்ன வயசில் ரெண்டு மூணு வம்பைர் படம் தியேட்டரில் பார்த்து இருக்கிறேன், சீன்கள்(காட்சியமைப்புகள்!!) எல்லாம் அருமையாக இருக்கும்.முக்கியமா நான் தேவி தியேட்டரில் ஒரு படம் பார்த்தேன் செம திகிலா(சீனா) இருக்கும்.ஆனா இந்த திகிலன் பெயரில் மட்டும் தான் திகில் இருக்கிறது.
இந்த மாதிரி அற்புதுமான கேவலமான சுவாரசியம் இல்லாத ஹாலிவுட் படத்தை ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன்.ஏதோ நரி வர காட்சிகள் மட்டும் ஓகே. நாங்கள் இதே மோட்சம் தியேட்டரில் பல டப்பிங் படங்கள் பார்த்து உள்ளோம்.அதில் ALIEN vs PREDATOR என்ற படம் மிக நன்றாக இருந்தது ஆனால் எங்களுக்கு வெறும் குரல் மட்டும் தான் கேட்டது காரணம் படத்தை அந்த அளவுக்கு இருட்டில் எடுத்து இருந்தனர்.
சரி திகலனுக்கு வருவோம், வம்பைர் படத்தில் பல் தான்
நமக்கு பயத்தை வரவழைக்கும் இந்த படத்தில் வம்பைர்
என்று சொல்லி கொள்பவர்களுக்கு பல்லையும் காணோம்
ஒன்னும் காணோம் மூஞ்சில மட்டும் சுண்ணாம்பு அடிச்சு
உட்ட மாதிரி ஜொலிக்கிது.படத்தில் எந்த ஒரு சீனிலும் திகில்
இல்லை குஜால்ஸ் சீனும் இல்லை அப்புறம் ஏன் இதுக்கு
திகிலன்னு பேரு வச்சி இருக்காங்க??.
இந்த படத்தில் எனக்கு பிடித்தது ரெண்டு விஷயம் மட்டும்
தான் ஒன்னு இண்டர்வல் ப்ளாக் அடுத்தது படம் முடிந்த
நேரம்!!.படம் புல்லா ஒரே கொட்டாவி ,சத்தம் பால்கனியில்
இருந்த பதினாலு பேரும் மாறி மாறி கொட்டாவி விட்டது
தான் மிச்சம்.
இண்டர்வல் நேரத்தில் புறாவின்
ஜெட்லி பஞ்ச்:
காதலர்கள் செல்ல ஒரு அற்புதமான படம் திகிலன்.
இந்த விமர்சனம் பிடிச்சு இருந்தா ஒட்டு போடுங்க முடிஞ்சா
பின்னூட்டமும் போடுங்க....
உங்கள்
15 comments:
திகில் படத்துக்கு புது அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன் பாஸ்...ஆவ்... தூக்கமா வருது...
பிரபாகர்.
அமெரிக்கால பெரிய ஹிட்டாம்....
i m the first
//காதலர்கள் செல்ல ஒரு அற்புதமான படம் திகிலன்// யூத்துக்கு தெரிஞ்சா உடனே கிளம்பிடுவாரே... என் கேர்ள் ப்ரேண்டுக்கு exam time இப்ப முடியாது :(
எப்படியோ படத்துக்போனதுனாலதான புறாவோட கில்மா காட்சியாவது பார்க்க முடிஞசது...
எப்படிங்க உங்களால இந்தமாதிரி மொக்கை படத்தை அதுவும் ஒரு மொக்கை தியேட்டருலப்போய் பார்க்க முடியுது. இதுக்காகவே நான் ஓட்டுபோடறேன்.
இந்த மாதிரி அற்புதுமான கேவலமான சுவாரசியம் இல்லாத ஹாலிவுட் படத்தை ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பார்க்கிறேன்.ஏதோ நரி வர காட்சிகள் மட்டும் ஓகே. நாங்கள் இதே மோட்சம் தியேட்டரில் பல டப்பிங் படங்கள் பார்த்து உள்ளோம்.அதில் ALIEN vs PREDATOR என்ற படம் மிக நன்றாக இருந்தது ஆனால் எங்களுக்கு வெறும் குரல் மட்டும் தான் கேட்டது காரணம் படத்தை அந்த அளவுக்கு இருட்டில் எடுத்து இருந்தனர்.........................இதுக்குதான் இந்த ஜெட்லி ஸ்டைல் விமர்சனத்துக்கு வெயிட் பண்றது......... கலக்குங்க.
@ பிரபாகர்
இந்த படம் மட்டும் திகில் படத்துக்கு
விதிவிலக்கு அண்ணே
@ பேனா மூடி
இருந்துட்டு போட்டும் அதுக்காக மொக்கை
படத்தை நல்ல படம்னு சொல்ல முடியுமா..
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ் தலைவரே...
@ அஞ்சலை
சாரி மா...U R THIRD... :)
@ அசோக்
அண்ணே இது உங்களுக்கே ஓவர்ஆ தெரியல!!
அப்போ நீங்க எந்த காலேஜ் படிக்கிறிங்க...??
@நாஞ்சில் பிரதாப்
ஒட்டு போட்டதுக்கு மிக்க நன்றி.....
மொக்கை படம் பார்க்கறது ஒரு தவம் மாதிரி.....
@ சித்ரா
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி....
ம் இன்னும் பாக்கல..விம்மர்சனமும் பஞ்ச்சும் சூப்பரு...
//காதலர்கள் செல்ல ஒரு அற்புதமான படம் திகிலன்//
சூப்பர் பஞ்ச்!:D
நீங்க முதல் பாகம் பாக்காதது தப்பு.. அதை பாக்காம விமர்சனம் எழுதினது இன்னொரு தப்பு ...
திகிலன் என்று இந்திய ல தான் வைச்சாங்க
Post a Comment