முன்னுரை: பல பேர் பல விதமாக படம் பார்த்தாலும்,நான்
பார்க்கும் விதம் ஒரு பாமரனை போல தான் என்பதை இங்கு
தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தேவை இரண்டரை மணி
நேரம் டைம் பாஸ் அவ்வளவு தான்.படத்தை பார்த்து யாரும்
பாடம் கற்று கொள்ள போவதும் இல்லை, கெட்டு போவதும்
இல்லை.

பேராண்மை, இந்த படத்தை எடுத்த இயக்குனர் ஜனநாதன் மற்றும்
நடித்த ஜெயம் ரவியை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.
இது வழக்கமான தமிழ் படம் இல்லை.ஒளிப்பதிவாளர் தன் பங்கை
சிறப்பாக செய்துள்ளார்.
இந்தியாவின் செயற்கைகோளை அழிக்க வரும் அந்நிய சக்திகளிடம்
இருந்து ஜெயம் ரவியும் ஐந்து பெண்களும் சண்டைபோடுவதே கதை
என்று நினைத்தால்?? அது மட்டுமல்ல கதை, இயக்குனர் அவர்கள்
பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் மற்றும் அவர்கள் படும்
இன்னல்களையும் முதல் பாதியில் மிக நேர்த்தியாகவும் தைரியமாகவும் சொல்லி இருக்கிறார்.
ஜெயம் ரவியை இந்த படம் கண்டிப்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்து
கொண்டு போகும்.ஆபிசராக வரும் ரவியின் இயல்பான மற்றும் விறைப்பான நடிப்பும் கலக்கல்.ஐந்து பெண்கள் வருகிறார்கள் அதில்
எனக்கு தெரிந்த முகம் ரெண்டு சரண்யா மற்றும் அதிசியா.
முதல் பாதியில் இந்த ஐந்து பெண்கள் அடிக்கும் கூத்து செம
ரகளை.வடிவேலு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைக்கிறார்.
ஊர்வசி மற்றும் பொன்வண்ணன் அவர்களின் பங்கை சிறப்பாக
செய்துள்ளனர்.
ரவி பழங்குடி இனத்தில் இருந்து வந்த ஆபிசர் என்பதால் பொன்வண்ணன் அவரை அடிக்கடி ஜாதியின் பெயரை குறிப்பிட்டு பெசுவுது, மற்றும் அந்த ஐந்து பெண்கள் அவனுக்கு கீழ் நாங்கள் படிக்க முடியாது என்று கூறும் காரணம் என்று படத்தில் ஏகப்பட்ட சென்சார் செய்து ஊமை வசனங்கள் .படத்தின் ஆரம்பத்திலே
இது போல் வந்துவிடுவதால் நமக்கும் ஒரு சலிப்பு ஏற்பட்டு
விடுகிறது.

ஏற்கனவே சொன்னது போல் படத்தின் பாடல்கள் சொல்லி கொள்ளும் படி இல்லை.காட்டில் நடக்கும் சண்டை காட்சிகள் அனைத்தும் நம்மை சீட் நூனியில் உட்கார வைக்கும். காட்டில் நடக்கும் புது ரக கன்கள் மற்றும் ஏவுகணைகளை ரவி மற்றும் பெண்கள் வெடிக்கும் போது ஏதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது போல் இருந்தது இவங்க எங்கயோ சுடுறாங்க குண்டு எங்கயோ வெடிக்குது.
படத்தின் பலமே வசனம் தான். வடிவேலு கோபத்தில் பழங்குடி மக்களை பார்த்து ஒரு வசனம் பேசுவர் "இனிமேலாவது நீங்க விளைய வெச்சத விக்காம, நீங்களும் உங்க புள்ளைங்களும் சாப்பிடுங்க" என்பார்.பொன்வண்ணன் இதில் கொஞ்ச வில்லத்தனமான வேடமா இல்லை கேனதனமனா வேடமா என்று நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளுங்கள் ..மொத்தத்தில் தமிழில் ஒரு அட்வென்ச்சர் திரைப்படம் அனைவரும் பார்த்து மகிழுங்கள்.வாருங்கள், பேராண்மை போன்ற படங்களை வரவேற்போம்.
தியேட்டர் நொறுக்ஸ்:
#நாங்கள் வூட்லண்ட்ஸ் தியேட்டருக்கு இணையத்தில் புக்
செய்து சென்றோம், ஆன பாருங்க அங்க படமே புல் ஆகலை.
ஏன் மோசமான ஒபெநிங் என்று தெரியவில்லை.
#படத்தில் அந்த ஐந்து பெண்களும் ரெண்டு இடத்தில் டபுள்
மீனிங் வசனம் வசனம் பேசுவார்கள்...தியேட்டரில் பயங்கர
கத்தல்...(உ :சார் இவ பாம்பே பார்த்தது இல்லையாம்...)
# காட்டுக்குள் போனதும் ரவி ஒரு பொந்து மரத்தை காட்டி இங்கே
நாம் ஒளிந்து கொண்டு தாக்கலாம் என்பார்.ஆனால் என்
பக்கத்துக்கு இருக்கை குடிமகன் பேசியே வசனம் "மச்சான்
அந்த பொந்து மரத்திலே உள்ளே உட்கார்ந்து சரக்கு அடிச்சா
சூப்பர் ஆக இருக்கும் டா".
இந்த விமர்சனம் அனைவரும் படிக்க ஒட்டு போடவும் முடிஞ்சா
கமெண்ட் போடவும்
மொட்டை தலையுடன்
ஜெட்லி சரண்.
10 comments:
படம் ஓடுமா , ஓடாதா ..........?
செம்ம...பக்கத்துல உக்காந்திருந்தது உங்க ஃப்ரண்ட்தானே அப்பறம் அவர் மட்டும் எப்பிடி இருப்பார்?
:)
வித்யாசமான முயற்சிக்காக படம் பார்க்கலாம்..
//தமிழில் ஒரு அட்வென்ச்சர் திரைப்படம்//
corect, very nice movie.. should be a hit movie
சுருக்கமான விமர்சனம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
பாசிடிவ் ஒட்டு போட்டும் 2/3 தலைவா...
விமர்சனம் படத்த தியேட்டர்ல போய் பார்க்கவே கூடாது எனும் முடிவெடுக்க வைத்திருக்கிறது.
நல்லா படத்த அலசியிருக்கீங்க. பொந்துல ஒளிஞ்சிக்கிற மேட்டர் நல்லாருக்கு.
பிரபாகர்.
@ ஊடகன்
என்ன இப்படி கேட்டிங்க... கண்டிப்பா ஓடும்...
@ ப்ரியமுடன் வஸந்த்
நிச்சயமாக, நான் படத்தை பத்தி சொன்னேன்.
ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான்....
@Sachanaa
தேங்க்ஸ்...நானும் அதை தான் எதிர்பார்க்கிறேன்.
@துபாய் ராஜா
நன்றி ராஜா... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@ பிரபாகர்
//விமர்சனம் படத்த தியேட்டர்ல போய் பார்க்கவே கூடாது எனும் முடிவெடுக்க வைத்திருக்கிறது.//
ஹலோ என்னது இது.... நான் அப்படி என்ன படத்தை பத்தி தப்பா எழுதிட்டேன் ???
கண்டிப்பா அனைவரும் வரவேற்க வேண்டிய படம் இது பிரபா.
அதுக்குள் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதியாச்சா ஜெட்லி..
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
இந்த மாதிரி படங்கள் வரும்போது சின்ன சதி ஒன்று நடக்கும். அதில் பெரும்பாலானா தயாரிப்பாளர்கள் சிக்கிக் கொண்டு படத்தை தோல்வியாக்கிவிடுவார்கள்
படத்தோட விமர்சனத்தை விட தியேட்டர் நொறுக்ஸ் சூப்பர்... தீபாவளி வாழ்த்துக்கள் ஜெட்லி
தீபாவளி வாழ்த்துக்கள் தல..
Post a Comment