
நான் இன்று மதியம் சத்யம் தியட்டர் சென்று இந்த படம் பார்த்தேன், நாங்கள் குடும்பமாக அனைவரும் பல வருடங்கள் கழித்து பார்த்த படம் இது தான் (கடைசியாக எந்த படம் பார்த்தோம் என்பது நினைவில்லை). சத்யமில் குறைகள் என்று சொல்ல எதுவும் இருப்பதாக தெரியவில்லை, அப்படி ஒரு சுத்தம், ஒழுக்கம், மரியாதை, படத்தின் தெளிவு, சப்தம் எல்லாமே சூப்பர் தான்.

பதிவுலகில் இந்த அருமையான படத்தை பற்றி அவ்வளவாக பதிவுகள் வராதது எனக்கு சிறு வருத்தம் தான். குடும்பத்துடன் சென்று நல்லா சிரித்து ரசித்து பார்க்கும்படியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் Shashanka Gosh, பல இடங்களில் ரொம்ப நுணுக்கமான நகைச்சுவை காட்சிகளை புகுத்தியுள்ளனர் உதாரணத்திற்கு எமதர்மராஜா வரும் வாகனம் அதில் முருகன் பேசும் வசனம், பிறகு Terminator படத்தில் Arnold முதலில் என்ட்ரி ஆகும் காட்சியை கிண்டல் பண்ணியிருப்பது போல இன்னும் பல படம் முழுவதும் ஆங்காங்கே இருக்கிறது. படத்தின் வசனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம, ரொம்ப நகைச்சுவையாக இருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டு கூறப்பட வேண்டியவர் அனு மேனன் இவர் தான் சேனல் V புகழ் லோலா குட்டி, இவர் அதில் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை, இதிலும் சும்மா அதிரடி கலக்கல் தான். அதுவும் ரம்பாவை சிரிக்கி என்று ஏசும்பொழுது. ரம்பாவிற்கு நடிக்க பெரிதாக ஒன்றும் வாய்ப்பு இல்லை அதனால் நல்லா காட்டிருக்கார், சகிக்கல. நம்ம ஹீரோ முருகன் (தெலுங்கு புகழ் ராஜேந்திர பிரசாத்) குடுத்த வேலைய கச்சிதமா பார்த்திருக்கார் ஆனா இவர் முகத்த க்ளோஸ்அப ஷாட் பாக்க சகிக்கல, வடிவேலு இந்த பாத்திரத்திற்கு ரொம்ப பொருத்தமா இருப்பார்.
இந்தியா டுடே இதழில் இந்த படம் அந்த காலத்து தமிழ் தெலுங்கு சினிமாவ கிண்டல் பண்ணி எடுக்கப் பட்ட படம்னு போட்ருந்தாங்க ஆனா எனக்கு ஒன்னும் அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை. இதே மாதிரி எத்தன படத்துல நம்ம கேப்டன் இந்த மாதிரி கேவலமா வசனம் பெசிருப்பாறு?? எத்தன படத்துல நம்ம விஜய், அஜித், சிம்பு......... சும்மா பறந்து பறந்து அடிச்சிருப்பாங்க?? என்ன ஒரே வித்தியாசம் அவங்க சீரியசா பண்றேன்னு காமெடி பண்ணுவாங்க இவங்க காமெடினு சொல்லியே பண்றாங்க.
நடு நடுவில் கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் வெறும் ஒன்னரை மணிநேரம் ஓடும் இந்த Quick Gun Murugan கண்டிப்பா பாத்து ரசிக்கவேண்டிய படம் என்பதில் சந்தேகமே இல்லை, கண்டிப்பா பாருங்க என்ஜாய் பண்ணுங்க.
நன்றி
சித்து.
4 comments:
நானும் அதைத்தான் சொல்றேன்
இந்த மாதிரி படங்களில் குறைகள் இருந்தாலும் நகைச்சுவையை ரசித்து சிரிக்க ஆரம்ப்பித்துவிட்டால் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.
Thanks...
paarkuren.
நம்ம கேப்டன் இந்த மாதிரி கேவலமா வசனம் பெசிருப்பாறு?? எத்தன படத்துல நம்ம விஜய், அஜித், சிம்பு......... சும்மா பறந்து பறந்து அடிச்சிருப்பாங்க?? என்ன ஒரே வித்தியாசம் அவங்க சீரியசா பண்றேன்னு காமெடி பண்ணுவாங்க இவங்க காமெடினு சொல்லியே பண்றாங்க. //
கேப்டன் கட்சி காரங்க தேடுறாங்களாம் கொஞ்சம் ஒளிஞ்சே இருங்க
Post a Comment