தொடர் பதிவு என்ற இந்த புதிய விஷயத்தை எங்களுக்கு அறிமுகம் செய்து அதில் கலந்து கொள்ள ஒரு அழைப்பு (வாய்ப்பு) தந்த கடைக்குட்டி மற்றும் லோகுவுக்கு எங்கள் நன்றி.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?எங்கள் குடும்பத்தில் எனக்கு தெரிந்த வரையில் ஒரு ஐந்து தலை முறையாக (சிதம்பரம், திருப்புகழ், சிதம்பரம், திருஞானம், சித்தரஞ்சன்) அதாவது C அடுத்து T மாறி மாறி வரும், எங்கள் குடும்ப பெயரே (C.T.& Sons) தான். அதனால் C என்று தொடங்க ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து முதலில் சாணக்யன் என்று தான் எனக்கு பெயர் வைத்தனர் பிறகு என்ன தோன்றியதோ அதை மாற்றி சித்தரஞ்சன் என்று சூட்டினர்.
எனக்கு கண்டிப்பாக எனது பெயர் பிடிக்கும், எனது பெயர் தான் எனது முகவரி (Identity) . உங்களுக்கு தெரிந்த யாராவது இந்த பெயரில் இருக்கிறார்களா?? அதனால் ஒரு சின்ன பெருமையும் கூட. ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் பலருக்கு ஏன் பெயரை சொல்லி புரிய வைப்பதற்கு சிரமம் தான், அதனால் சித்து என்றே கூறிவிடுவேன்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?கடைசியாக அழுதது எப்பொழுது என்று எனக்கு சரியாக நினைவில்லை, ஆனால் உள்ளுக்குள் அழுதது பல முறை. கடந்த அக்டோபர் மாதம் நான் சபரி மலை சென்று திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது என் ராக்கி இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்ட தகவல் வரவே சற்று நேரம் அழுது விட்டேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?என்னோட கையெழுத்து எனக்கு கண்டிப்பாக ஓரளவுக்கு புடிக்கும், ஆனால் மற்றவர் ஒருவருக்கும் புடிக்காது. கோழிக்கும் எனக்கும் ஒரு போட்டி வைத்தால் அனேகமாக வெற்றி எனக்கு தான்.
4.பிடித்த மதிய உணவு என்ன?எனக்கு பிடித்த மதிய உணவு தயிர் சாதம் தான், அதுவும் இந்த வெயிலுக்கு ரொம்பவே சூப்பர். இது தவிர தோசை, சப்பாத்தி எந்த நேரம் குடுத்தாலும் கூச்ச படாமல் சாப்பிடுவேன்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனேவச்சுக்குவீங்களா?பொதுவாக எனக்கு கல்லூரியிலும் சரி பள்ளியிலும் சரி நிறைய நண்பர்கள் உண்டு, யாரை பார்த்தாலும் Hi, Hello கண்டிப்பாக சொல்வார்கள். ஆனால் என்னுடைய நெருங்கிய வட்டம் மிகவும் சிறியது தான். அதனால் கண்டிப்பாக நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன், வாங்க பழகலாம்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?எனக்கு கடலில் குளிக்க அவ்வளவு புடிக்காது, காரணம் அந்த உப்புத் தண்ணீர்.
அருவியில் குளிப்பதையே மிகவும் விரும்புகிறேன், அதுவும் பழத் தோட்டம், கிளியூர் அருவி போன்றதென்றால் அங்கேயே கிடப்பேன்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?முதலில் அவரின் முகத்தை தான் கவனிப்பேன், குறிப்பாக கண்கள். அவை கூறிவிடும் அவர் நம்மை எவ்வாறு நினைக்கிறார் என்று.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம்என்ன ?நான் பொதுவாக நண்பர்களை விட மற்றவரிடம் சற்று அதிக பொறுமையை கடைபிடிப்பேன். இதுவே எனக்கு பிடிச்ச மற்றும் பிடிக்காத விஷயம். அதே போல் யாரையும் எளிதில் நம்பிவிடுவேன் இதனால் ஏகப் பட்ட இழப்புகள்.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?இன்னும் அந்த சரி பாதி கிடைக்க வில்லை, கிடைத்த பின் பார்க்கலாம்.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?அப்படி முன்பு நிறைய வருந்தியிருக்கேன், ஆனால் அது தேவையில்லாதது. Whatever happens life has to go on.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?Light Orange Shirt, Black and green Mix Jean. என்ன இப்பவே கண்ண கட்டுதா?? நேற்று கரகாட்ட காரன் படம் பார்த்த பாதிப்புன்னு நினைக்கிறேன்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?கம்ப்யுட்டர் மானிட்டர் பார்த்துக் கொண்டே (வேண்டாம் உங்க கொலை வெறி பார்வை) தெருவில் போகும் வாகனங்களின் சத்தமும், தலைக்கு மேல் சுழலும் மின் விசிறியின் சத்தத்தையும் கேட்டுக் கொண்டே எழுதுகிறேன்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாகஉங்களுக்கு ஆசை?கண்டிப்பாக கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு.
14.பிடித்த மணம்?மண் வாசனை, குழந்தைகளுக்கு அணிவிக்கும் வசம்பு, டீசல் வாசம், மாம்பலம், காகித வாசம், Red Ferrari Perfume இப்படி பல உண்டு.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம்.அவரை அழைக்கக் காரணம் என்ன ? அவீங்க ராஜா - இவருடைய பல பதிவுகளை நான் பல முறை திரும்ப திரும்ப படித்துள்ளேன், இவர் எழுது நடை அப்படியே ராம் பட கஞ்சா கருப்பு பேசுவது போலவே இருக்கும். ரொம்ப பாசக்காரப்பய.
எடக்கு மடக்கு R.Gopi - துபாய் பற்றிய இவரின் பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. ஜோக்கிரி என்று இன்னொரு பதிவும் எழுதுகிறார்.
ஆதிமூலகிருஷ்ணன் நண்பர் ஆதிமூலக்ரிஷ்ணன் ஒரு இயல்பான நடையில் பல விஷயங்களை ஆழமாக எடுத்துரைக்கும் திறன் படைத்தவர்.
கிரி இவர் தீவிர ரஜினி மற்றும் நமீதா ரசிகர், இவரின் பதிவு முழுவதும் தீவிர சமூக சிந்தனைகள் கொட்டிக் கிடக்கும்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்தபதிவு ?எனக்கு இதை அனுப்பிய கடைக் குட்டியின் பதிவுகளில் சூர்யா பற்றிய பதிவுகள் அனைத்தும் புடிக்கும், மேலும் அவர் எழுதும் அனேக பதிவுகள் Short and Sweet ஆக இருக்கும் அது நெம்ப பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?எனக்கு பிடித்த விளையாட்டு உலகக் கோப்பை நடக்கும் பொழுது கால் பந்து, இந்தியா பாகிஸ்தான் விளையாடும் பொழுது கிரிக்கெட், நான் விளையாடும் பொழுது Computer games மட்டும் (U C basically i'm very சோம்பேறி ).
18.கண்ணாடி அணிபவரா?ஆம், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, அப்புறம் Laser சிகிச்சை மேற்கொண்டுவிட்டதால் இப்பொழுது only Sunglass (யாருப்பா அது டேய் இது ரொம்ப ஓவர்னு சொல்றது??). லேசர் சிகிச்சை பற்றிய என்னுடைய
இந்த பதிவை படித்து பயன் பெறவும்.
19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?எனக்கு பொதுவாக Action, Romantic Comedy, History, Masala படங்கள் தான் புடிக்கும், என்னை பொறுத்த வரை படம் பார்ப்பது அந்த மூன்று மணி நேரம் நிம்மதியாக பொழுதை கழிக்கவே தான் அதனால் பொதுவாக சோகமான மற்றும் மொக்கை படங்களுக்கு போவதில்லை.
20.கடைசியாகப் பார்த்த படம்?சர்வம், வேறு வலி?? தலைவிதி. நண்பர்கள் வற்புறுத்தி கூட்டி சென்றார்கள், பாதியில் ஓடிவிடலாமேன்றால் விடலையே.
21.பிடித்த பருவ காலம் எது?குளிர் காலம் தான் எனக்கு பிடித்த காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?நேற்று தான் நண்பன் இலக்கியம் என்ற புறா என்ற சங்கர நாராயணன் கொடுத்த ஜெ.எஸ்.ராகவன் எழுதிய "தத்தக்கா புத்தக்கா" முடித்து விட்டு, க.சீ.சிவகுமார் எழுதிய "ஆதிமங்கலத்து விசேஷங்கள்!" ஆரம்பித்துள்ளேன்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒருநாள் மாற்றுவீர்கள்?பொதுவாக நான் மாற்றுவதே இல்லை, ஒன்றிரண்டு மாதங்கள் மேல் கூட ஆகலாம்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?பிடித்த சத்தங்கள் பல உண்டு, பறவைகள் எழுப்பும் ஓசை, என்னுடைய இடிப்பறவை (அதாங்க Thunderbird) எழுப்பும் ஓசை, டீசல் ரயில் என்ஜின் ஓசை, கொலுசு ஓசை, ஓட்டின் மேல் விழும் ஆலங்கட்டி/மழையோசை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பிடிக்காதது, டிராபிக் இல் சில வானரங்கள் ஓட்டும் வாகனங்களின் ஹாரன் சத்தம் எனக்கு தலைவலியையே உண்டு பண்ணிடும்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?நான் சென்னையில் இருந்து இது வரை அதிக பட்சம் 11,319 km தொலைவு உள்ள New Zealand (அதாவது Auckland வரை இந்த தூரம் Christchurch இன்னும் 762km தூரம்) தான், ஏன் வாழ் நாளில் மறக்க முடியாத பயணம் அது. ஒரு பதிவே போடலாம், போடறேன்.
இந்தியாவில் நான் அதிக தூரம் சென்றது சுமார் 1042km தூரம் உள்ள புனே (Pune), ஷீரடி சென்றுவிட்டு ரயிலேற இங்கு சென்றோம், எனக்கு தெரிஞ்சு சென்னை ஒன்னுமே இல்லைங்க அது கிட்ட, அடியாத்தி என்ன ஒரு முன்னேற்றம்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?அப்படி எதுவும் இருக்குற மாதிரி தெரியலைங்க, எதாவது உங்களுக்கு தெரிஞ்ச சொல்லுங்க.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?நம் நாடு இந்த அரசியல் வியாதிகள் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு பதில் ஐந்து வருட ராணுவ ஆட்சியோ அல்லது, அனைவருக்கு கட்டாயம் மூன்று வருட ராணுவத்தில் சேவை செய்யவோ வழி வகுக்க வேண்டும்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?கோபம், ஈகோ.
29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?நான் சென்ற இடங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள், முதலில் New Zealand, அடுத்தது பெங்களுரு, அடுத்தது சென்னை முதல் பெங்களுரு வரை உள்ள தங்க நாற்கரை சாலை அதில் பைக் அல்லது கார் இருந்தால் போதும் ஜாலிஆக சுற்றி வருவேன்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது, அதனால் ஏன் மனசாட்சிக்காவது நல்லவனாக இருக்க ஆசை.
31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?நண்பர்களுடன் ஊர் சுற்றுவது.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?எல்லாம் நன்மைக்கே என்று எந்த ஒரு துன்பத்தையும் எதிர்கொள்ளுங்கள், எல்லாம் நன்மைக்கே.