Tuesday, July 13, 2010

ஆனந்துபுரத்து வீட்டில் கமரூன் டியாஸ்!!

KNIGHT AND DAY , ஆனந்துபுரத்து வீடு ஒரு பார்வை.



"டேய் என்கிட்டே பி.வி.ஆர் ரெண்டு பிரஸ் பாஸ் இருக்குடா வா படத்துக்கு போயிட்டு வருவோம்"னு நண்பன் கூப்பிட்டான்.அங்கே போய் பார்த்தா எல்லா படமும் புல். தீடிர்னு பார்த்தா knight and day பத்து ரூபாய் டிக்கெட் தான்டா இருந்தது வாங்கிட்டேன்.. பாஸ்க்கு நாளைக்கு வேற படத்துக்கு புக்
பண்ணிக்கலாம் என்றான்...புக் பண்ண படம் தான் ஆனந்துபுரத்து வீடு!!

"டேய் பத்து ரூவா.... கட்டை சீட்டுடா ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க முடியாது...தலை வேற வலிக்கும்டா" என்று அவனிடம் சொல்லியபடி ஸ்க்ரீன் ஏழில் நுழைந்தால் எல்லாத்துக்கும் ஒரே சீட்.... எனக்கு ஒரே ஆச்சரியம்... இதுவே மாயாஜால்னா முதல் ரோ என்றாலும் இருநூறு
ரூபாய் தான் டிக்கெட் ரேட்.

KNIGHT AND DAY :


சரி படத்துக்கு வருவோம்... ஹாலிவுட் ஹீரோக்களில் எனக்கு
பிடித்தவர்களில் டாம் க்ருஸும் ஒருவர். சும்மா ஆக்சன் காட்சிகளில்
பூந்து விளையாடுவார் மனிதர். இது கிட்டதட்ட ஒரு ஜேம்ஸ் பான்ட்
படம் மாதிரி தான். டாம் நிகருக்கு டாமே!! கதைன்னு பார்த்தா
சிங்கள் லைன் தான்...ஆனா திரைக்கதை செம வேகம்....





கமரூன் டியாஸ் ஆன்டிக்கு கிழடு தட்டி போச்சுன்னு தான் சொல்லணும்.... ஆனா இந்த படத்தில் காமெடி செய்வதில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். பிகினி காட்சியில் வரும் போது அவர் டாமை பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு பின்னர் கிளைமாக்ஸ்இல் டாம் அதே கேள்வியை கேட்கும் காட்சி கிச்சு கிச்சு ரகம்.

ஒரு பையன் சார்ஜ் தீராத பாட்டரியை கண்டு பிடிக்கிறான்...
அதை வில்லன் கும்பலிடம் விற்க ஒரு ஏஜென்ட் நினைக்கிறார்...
ஆனால் அதை டாம் கைப்பற்றி என்ன பண்ணுகிறார் என்பதே
கதை.படத்தில் லாஜிக் பார்த்தால் சுத்தம்....எப்படி ஹீரோ ட்ரெயின்யில் இருந்து தப்பிக்கிறார்,வில்லன் கோட்டையில் எப்படி உள்ளே வருகிறார் என்று எல்லாம் கேட்க கூடாது. ஆனால் படம் விறு விறு ரகம்.

தியேட்டர் நொறுக்ஸ்:


# போனது பத்து ரூபாய் டிக்கெட் அதிலும் ஒரு சிறு பையன் வந்து
" PLEASE SHIFT UR SEAT, MY FREIND SIITTING THERE" என்று பிலா உட
ஆரம்பித்தான். அவன் நண்பன் சீட் இடைவெளி தள்ளி உட்கார்ந்திருந்தான்... எப்படியும் பக்கத்தில் உட்கார முடியாது...
பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் ஆங்கிலத்தில்..."அவன் அங்கே
உட்கார்ந்து இருக்கிறான்..எப்படியும் உங்களுக்குள் இடைவெளி
இருக்க போகிறது..எங்கே உட்கார்ந்தா என்ன??" என்று கேட்டார்..
அவன் " FIRST SHIFT UR SEAT.." என்று ஆர்டர் போட ஆரம்பித்தான்..
பக்கத்தில் உள்ள நண்பர் முடியாது என்றார்... அந்த பையன் அவன்
சீட்டில் போய் உட்கார்ந்தான்... பக்கத்தில் இருந்த நண்பரின் நண்பர்
"இங்கிலீஷ்ல பீட்டர் உட்டா சீட்டை விட்டுருவமோ...",,, என்றார்.

# பக்கத்தில் இருந்த நண்பர் அவர் நண்பரிடம் "என்னயா இது
எப்படி ஹீரோ தப்பிசார்னு காமிக்கவே இல்லைனு" அப்போ
அப்போ வருத்த பட்டார்.


******************************

ஆனந்துபுரத்து வீடு:

இந்த படத்தை பார்க்க எனக்கு பல தடங்கல்கள் வந்தது...முதல் நாள்
நைட் ஷோ போறது தான் முதல் பிளான்...ஆனா கணபதிராம்
தியேட்டர்ல நைட் ஷோ போடல... அப்புறம் பி.வி.ஆர்.ல புக்
பண்ணி படத்துக்கு போகும் போதும் பல தடங்கல்கள். செம ட்ராபிக்
படத்துக்கு பத்து நிமிஷம் லேட்ஆக தான் போனேன்...போகும் போது
முதல் பாட்டு ஓடி கொண்டி இருந்தது.



படத்தை பற்றி இருவிதமா கருத்துக்கள் வந்ததால் நாமே பார்த்து
முடிவு பண்ணி விடுவோம் என்று தான் போனேன். இந்த படத்தை பரப்பரப்பான திகில் படம்னு அவங்க விளம்பரம் செய்ஞ்சது முதல் தப்பு. சத்தியமா படத்தில் திகில் இல்லை என்பதே உண்மை...
இது ஒரு காமெடி படம் என்று சொன்னால் கூட நம்பலாம்..!!

என்ன கதை:


நந்தா கடன் தொல்லையால் ஊரில் இருக்கும் தன் அப்பா வீட்டுக்கு
வருகிறார். அப்பா அம்மா நந்தா சிறு வயதா இருக்கும் போதே கார்
விபத்தில் இருந்து விடுகிறார்கள். பையன் ஊருக்கு வந்தவுடன் ஆவியாய் வந்து பாசத்தை கொட்டுகிறார்கள்.....ஆனா ஒண்ணு
இந்த மாதிரி ஆவி மட்டும் எல்லார் வீட்டிலும் இருந்தா வேலைகாரங்க சம்பளம் மிச்சம்......!!


படத்தில் ஒரு இடத்தில் கூட திகிலோ பயமோ வரவில்லை
என்பது தான் உண்மை. சரி படம் மொக்கையா என்று கேட்டால்
அப்படி சொல்லி விட முடியாது. இது நமக்கு ஒரு வித்தியசமான
படமாக இருந்தாலும் அதை எடுத்த விதத்தில் சலிப்பு தான்
வருகிறது. எனக்கு ஒரே வருத்தம் தான் நந்தா நண்பரின் மனைவி பண பெட்டியை எடுத்து வரும்போதே ஆவி அந்த பெட்டியை
திறந்து காட்டி இருந்தால்...படம் பார்த்த அனைவருக்கும் அரை
மணி நேரம் மிச்சம் ஆகி இருக்கும்...!! அதை விட்டுட்டு திகில்னு சொல்லி சில காட்சிகள், நந்தா ஆவியை போக சொல்லுவது, வில்லன்
சேசிங்...என்று வைத்து நம் உயிரை வாங்குகிறது அந்த ஆவி...!!


சாயா சிங்....பத்தி சொல்ல ஒண்ணும் பெருசா இல்லை... ஆனா
அந்த சின்ன பையன் உண்மையில் கவர்கிறான். அப்புறம் வில்லனா
வர்ற அந்த ஆள் மோகன்ராம் குரல்னு நினைக்கிறேன்... வழக்கமா
கடந்த ஆறுபது வருஷமா வர்ற தமிழ் சினிமா வில்லன் தான்.
கடைசி நொடியில் எப்படியோ திருந்தி விடுகிறார். அப்புறம் நந்தாவின்
நண்பராக வரும் சீரியல் நடிகர் செம மொக்கை.... காமெடி பீஸ்....
அவர் மனைவியும் அவரும் கொஞ்சும் காட்சிகள் செம காமெடி...!!



நாகா,மர்மதேசம்,இந்திரா சௌந்தராஜன் என்று நம்பி போனவர்களுக்கு இந்த படம் ஒரு பெரிய இடி தான்.... எனக்கு தெரிஞ்சு என் கூட படம் பார்த்தவர்கள் பல காட்சியில் சிரித்து கொண்டு தான் பார்த்தனர். நானும் என் நண்பனும் சிரிச்சு ரசிச்சு பார்த்தோம்.... உங்களுக்கு பொழுதே போகலைனா இந்த
படத்துக்கு போலாம்....ஆனா திகில் படம்னு நீங்க நினைச்சு போன
நானோ இயக்குனரோ பொறுப்பல்ல !!


ஆனந்துபுரத்து வீடு : பழைய வீடு தான்,பாக்கறவங்க பாக்கலாம் !!


தியேட்டர் நொறுக்ஸ்:

# லோக்கல் தியேட்டர் போன தான் சீட் மேலே காலை போடுற
பிரச்சனைனு பார்த்தா இங்கயும் அதே பிரச்சனை... பின்னாடி இருந்த ஆன்டியிடம் காலை கொஞ்சம் மடக்கி வைங்க என்ற
பின்பு தான் நிம்மதி....!!

# சரி பின்னாடி இருந்து தான் தொந்தரவு வருது பார்த்தா....
முன்னாடி இருக்கிறவன் வேற படம் ஓட்டுறான்...என்னத்த
சொல்றது....

# நந்தாவின் நண்பராக வரும் சீரியல் நடிகர் தன் மனைவியை
கொஞ்சும் காட்சியில் தியேட்டரில் ஒரே கலகலப்பு....காரணம்
செம கேவலமா இருக்கும்....அவரின் மனைவி " I LOVE U
FOR THIS" என்று டிபன் கொண்டு வர போகும் கணவனிடம்
சொல்லும் போது தியேட்டரில் "ஐயோ" என்று செம சவுண்ட்....


இந்த விமர்சனம் பல பேருக்கு சென்று அடைய உங்கள்
பொன்னான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.


உங்கள்...



ஜெட்லி...(சரவணா...)

Friday, July 9, 2010

மதராசபட்டினம் - விமர்சனம்!!

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ......



நான் படத்துக்கு போறது முன்னாடி என்ன லவ் ஸ்டோரி தானே...
பெருசா என்ன இருக்க போது வெள்ளைக்காரியை ஆர்யா லவ்
பண்ணுவார் ரெண்டு டூயட் இருக்கும் வெள்ளைக்காரங்க கூட
சண்டை இருக்கும் என்று நினைத்து கொண்டு தான் போனேன்....
ஆனால் படத்தில் வரும் ஜீவன்( நான் அவனில்லை ஜீவன் இல்லை!!) ,உயிரோட்டம் படம் உண்மையிலே சூப்பர் தான்.
முக்கியமா டைமிங் காமெடிகள்,சில காட்சிகள் பார்த்தால்
தலையில் ஜிவ்வ்னு ஏறுமே, அந்த மாதிரி பல காட்சிகளில்
படத்தில் இருக்கிறது.


முதலில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தை பாராட்டனும்.
தொடர்ந்து நல்ல படங்கள் என்பதை விட வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள்...தொடரட்டும் அவர்களது பணி. அப்புறம் நம்ம இயக்குனர் விஜய்...சான்ஸ்ஏ இல்லை..... ஒரு பீரியட் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்வது சாதாரண விஷயம் இல்லை... அதில் விஜய் வெற்றி கொட்டி கட்டி இருக்கிறார்.

என்ன சொல்றது...?

படம் லண்டனில் தொடங்குகிறது...வயதான ஏமி அவர்களுக்கு
1947 இல் ஆர்யா கொடுத்த தாலி ஒன்றை அவரிடம் சேர்க்க 2010
இல் சென்னை வருகிறார்...அப்படியே படம் பின்னோக்கி போகிறது..
அப்புறம் அப்படியே கடந்த காலமும் நிகழ் காலமும் மாறி மாறி
கதை போகிறது.... இதுக்கு மேல நீங்க தியேட்டர்ல பார்த்துக்குங்க...


செல்வகுமார், இவர் தான் இந்த படத்தின் ஹீரோ..அதாங்க ஆர்ட்
டைரக்டர். பழைய சென்னையை நம் முன் காட்டி இருக்கிறார்.
சில இடங்களில் கிராபிக்ஸ் தெரிந்தாலும் ஒண்ணும் பெருசா
பிரச்சனை இல்லை. அடுத்து நிரவ் ஷா, அவரை பத்தி நான்
சொல்ல வேண்டியது இல்லை... பக்கா பக்கா...!! ஜி.வி இசையில்
மேகமே, வாம்மா துரையம்மா, ஆருயிரே, காற்றிலே பாடல்கள்
சூப்பர். பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
உணர்ச்சிபூர்வமான காட்சிகளுக்கு இவரின் பின்னிணி இசை
நன்றாக இருக்கிறது.


மற்ற ஹீரோக்கள் எல்லாம் கத்தி, தூப்பாக்கினு தூக்கிட்டு அலையும் போது ஆர்யாவை இப்படி பார்ப்பதில் ஒரு பெரும் மகிழ்ச்சி. மல்யுத்த வீரனாக, ஏமியின் காதலனாக என்று அதிகம் பேசாமல் அசத்தி இருக்கிறார் மனுஷன். குறிப்பா ஏமி டெல்லி போய்ட்டாங்க என்றவுடன் அவர் கண்ணில் இருந்து வருமே கண்ணீர்..... செம...! ஆர்யா அண்ட் கோ இங்கிலீஷ் கற்று
கொள்ளும் காட்சியும் நல்ல காமெடி.

இங்கிலீஷ்காரி நாயகியா...ஏதோ வத்தல் தொத்தல்லை போடாமல்
கும்முன்னு ஒரு பெண்ணை போட்டு இருக்கிறார்கள். ஏமி, கொள்ளை
அழகு... பின்னாடி இருந்த ரோவில் ஏமியை திரையில் காட்டினாலே
பெருமூச்சு விட்டு கொண்டிருந்தனர். ஏமி நல்லாவும் நடிச்சு இருக்காங்க.... மறந்துட்டியா?? என்று ஆர்யா கற்று வந்த இங்கிலீஷை கேட்கும் போது செம பீலிங். அவங்க ஆர்யா கூட சேராம போனது எனக்கும் வருத்தமே...படத்தில்!!


நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பாலாசிங், கிஷோர் இவர்கள் பிளாஷ்பேக்கில்
ஆர்யாவுடன் வருவார்கள்....சின்ன சின்ன காட்சிகள் என்றாலும்
வசனத்தில் நல்ல ஆழம் இருக்கிறது. பாஸ்கர் சுதந்திரம் கிடைச்சு என்ன ஆகபோகுது என்று பேசும் வசனம், பாலாசிங் நாசரிடம் மல்யுத்தம் வைத்து என்ன பண்ணுவது என்று நிறைய சொல்லி கொண்டே போகலாம் . லொள்ளு ஜீவா, பாலாஜி, குமாரவேல் என்று கிழவி ஏமியுடன் ஆர்யாவை தேடும் காட்சிகளில் வருவார்கள்.... ஜீவாவின் டைமிங் காமெடி வேலை செய்து இருக்கிறது.... பாலாஜி அந்த ஓவியர் காம்போ சூப்பர்...!! கொச்சின் ஹனீபா பத்தி சொல்ல மறந்துட்டேன்.....அவர் இடத்தை நிரப்ப யாரும் வர முடியாது...!!



அந்த வெள்ளைக்கார போலீஸ், பிளேன் பறந்தலே குண்டு போட
போறாங்க என்று சொல்லி கொண்டே ஓடும் நபர், வாத்தியார்,
நம்ம வெண்ணிலா அப்பு குட்டி, ஆர்யாவும் ஏமியும் படகில்
உட்கார்ந்து பேசும் போது அதை பார்த்து கொண்டே போகும்
கிழவர் என்று சின்ன சின்ன விஷயத்திலும் விஜயின் உழைப்பு
தெரிகிறது....!!


படம் முதல் பாதி ஒன்றரை மணி நேரம் ஓடியது...நேரம் போனதே
தெரியவில்லை...ரெண்டாவது பாதி ஒரு மணி நேரம் மேல் ஓடியது,
சில இடங்கள் மட்டுமே வேகதடையாக இருந்தது. ஆனால் அந்த
காற்றிலே பாட்டுக்கு தியேட்டரில் செம கைதட்டு... கிளைமாக்ஸ் தான் எல்லாரும் நினைத்தது போலவே தான் வரும்...ஆனா அது தான் நல்ல முடிவு. நீண்ட நாள் கழித்து உணர்வுபூர்வமான காதல் படம் பார்த்த திருப்தி. சிரிக்க ரசிக்க மலைக்க கண்டிப்பா பார்த்தே ஆக வேண்டிய படம் மதராசபட்டினம்.


மதராசபட்டினம் - ரவுண்ட் அடிக்க கிளம்புங்க......!!


தியேட்டர் நொறுக்ஸ்:



# ஒரு காட்சியில் படகோட்டி ஒருவனது கையை பிடித்து
ஏமி படகில் ஏறுவார்...இதை கண்ட அந்த போலீஸ்துரை
படகோட்டி கையை மிதித்து கொண்டு படகில் ஏறுவார்...
இதை கண்ட நம் இளைய சமுதாயம்...

" டேய் நாதாரி....பொறம்போக்கு..."

" பொறாமை பிடிச்சவனே..."

என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள்..இன்னும் அசிங்கமா திட்டினாங்க அதையெல்லாம் பதிவு பண்ணா ப்ளாக் நாறிடும்.


# போலீஸ் நிலையத்தில் ஆர்யாவிடம் அந்த போலீஸ்துரை
" இந்த தடவை நீ தப்பிச்சிட்ட அடுத்த தடவை உயிரோட போக மாட்டே..." என்று ஆர்யாவை மிரட்டுவார். அதற்கு ஆர்யா


" நானும் அதே தான் சொல்றேன்.." என்ற காட்சிக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.


# சென்ட்ரல் ஸ்டேஷன் காட்சியில் நம்மூர் போலீஸ் ஆர்யாவை
தூப்பாக்கி முனையில் பிடித்து வசனம் பேசி கொண்டிருப்பார்... அப்போது பின்னாடி இருந்த காலேஜ் பசங்க...

" நம்ம ஊரு போலீஸ் மச்சி...பத்து ரூபாய் கொடு விட்ட்ருவார் ..."

# பின்னாடி இருக்கையில் படம் பார்த்தவருக்கு இங்கிலீஷ் நாயகி
என்றதும் உதட்டு முத்தம் வரும் என்று நீண்ட நேரம் எதிர்ப்பார்த்தார்...ஆனா ஏமி ஒரு காட்சியில் சென்ட்ரல் மணி கூண்டில் படுத்து கொண்டிருக்கும் போது இங்கிலீஷ் பாடல் பாட ஆரம்பித்து விடுவார்...இதை கேட்ட நம்மாளு...

"என்ன இது சின்ன பிள்ள தனமா இருக்கு...கிளுகிளுப்பு வரும்னு
பார்த்தா பாடிக்கினு இருக்க..."

இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய உங்கள் ஓட்டினை
போட்டு ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்....

நன்றி

ஜெட்லி...(சரவணா)

Wednesday, July 7, 2010

கில்மானந்தாவின் அஜால் குஜால் சிந்தனைகள்

ஆனி 23 சிறப்பு கில்மா சிந்தனைகள்:


ஹோ...கில்மா ஜே ரவ....

பக்த கோடிகளே...நமது குரு கில்மானந்தா, டி.வி.யில் அனன்யா வரும் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தை பார்த்ததில் இருந்து தனது பெயரை அனன்யாதாசன் என்று மாற்றி கொள்ள சிந்தித்து வருகிறார் என்பதை இங்கே பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம் !! இந்த தீவிர சிந்தனையிலும் அவர் நமக்கு அளித்த அருளுரைகள், தெளிவுரைகள் எல்லாம் உங்கள் பார்வைக்கு......

கில்மானந்தாவின் பிட்மொழிகள் அல்லது ரீமிக்ஸ் பொன்மொழிகள்
அல்லது சிந்தனைகள்னு கூட வைத்து கொள்ளலாம் :

# டாஸ்மாக் முன்னாடி பித்த வாந்தி எடுத்தாலும்
உலகம் உன்னை குடிச்சிட்டு வாந்தி எடுக்கறான்னு தான் சொல்லும்!!!

# நயன்தாரா, த்ரிஷானு சொன்னா உதடுகள் ஒட்டாது
பாவனா, முமைத் கான்னு சொன்னா தான் உதடுகள் ஓட்டும்!!

# ஹாப்(half) அடிச்சவன் மட்டையாகாதான் வேணும்...
அதுக்கு அப்புறமும் ஆம்லேட் சாப்பிடுறவன் ஆப்பாயில் போட்டே
ஆகணும்...!!என்பதே உலக நியதி....

*******************



கில்மானந்தாவின் வாழ்க்கை தத்துவங்கள்:

# தலையிலே வழுக்கை விழுந்தா கவலைப்படுறோம்
அதுவே இளநீரில் வழுக்கை விழுந்தா சந்தோஷப்படுறோம்....!!

# நைஸ் தோசைக்கும் கல்தோசைக்கும் ஒரே கிண்ணம் மாவுதான்...
ஆனா அதை நாலு சுத்து எக்ஸ்ட்ரா சுத்துனதான் நமக்கு எக்ஸ்ட்ரா
காசு கிடைக்கும்...!!

# நம்ம வாழ்க்கையே ஒரு கட்டிங் தான்... தலையிலே முடி அதிகமான சலூனுக்கு போய் கட்டிங் பண்ண போறோம். டெய்லர் கிட்ட நாம வாங்குன துணியை கொடுத்தா அவர் கட்டிங் பண்ணி தைக்கிறார்,ரோட்ல போகும் போது போலீஸ்க்காரன் புடிச்சா அவருக்கு ஒரு கட்டிங் கொடுக்கணும்....
அப்படியே நைட் கடுப்பா இருந்தா டாஸ்மாக்கில் போய் கட்டிங்
சாப்பிட்டு வரலாம். கட்டிங்கை கேவலமா நினைக்க கூடாது, கட்டிங் போடுவதால் நாட்டில் சமுதாய ஒற்றுமை வளர்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது என்பது குறிப்பிட தக்கது.

*****************

கில்மானந்தாவின் குவாட்டர் கட்டிங் அடித்த பின் தந்த தெளிவுரை உங்கள் பார்வைக்கு:

மீண்டும் அதே கிரி படம் தான்.... பாடல் வேறு...

" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."
" டேய்.... டேய்.... டேய் கையை வச்சிக்கினு சும்மா இருடா..."

இந்த பாட்டில் பல பேர் டபுள் மீனிங் இருக்குனு சொல்கிறார்கள் அது சரிதான் பக்தர்களே.... நம் வாழ்க்கைக்கு தேவையான, பொக்கிஷமான டபுள் மீனிங் மட்டுமே இருக்கு.....

"டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா..."


அதவாது ரீமாசென் அர்ஜுனிடம் "டேய் நீ வச்சி இருக்கிற நம்பிக்கையை மட்டும் நம்பு... வேற யார் என்ன சொன்னாலும் சும்மா இரு" னு சொல்றாங்க அது தான் இந்த பாட்டின் முதல் வரி அர்த்தம்...மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.....வேணும்னா இன்னொரு அர்த்தம் கூட சொல்லலாம்... அது இசையமைப்பாளர் இமானை பார்த்து சொல்லுவதாக கூட இருக்கலாம்....
" டேய் கையை வச்சிக்கிட்டு சும்மா இருடா....ஏன் ரீமிக்ஸ்னு
போட்டு மக்களை கொல்ற" அப்படின்னு வேணும்னா இன்னொரு அர்த்தம் இருக்கவும் வாய்ப்பு இருக்கு.....!!


****************************

கில்மா பன்ச்:

" தத்தியா இருந்தா நீ பட்டர்....
உஷாரா இருந்தா நீ பெட்டர்...!!"

****************************



விளம்பரம் :


கில்மானந்தாவின் அஜால் குஜால் அருளுரை, தெளிவுரை, விளக்கவுரை மற்றும் மூட்ஸ் உறை தற்போது டி.வி.டி.யிலும் கிடைக்கிறது...விலை வெறும் ஆயிரம் ரூபாய் தான்.!!


(பி.கு) நல்ல வெளிச்சத்தில் எடுத்த ரெண்டு புத்தம் புதிய பிட் இணைக்கப்பட்டுள்ளது.

இல்லை எங்களுக்கு பிட் படம் மட்டும் போதும் என்பவர்கள் 999 ரூபாய் டி.டி. அனுப்பினால் போதும்.... !!



கில்மானந்தாவுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது...
நீ கேளேன் ப்ளாக் மட்டுமே தலைமை அலுவலகம் என்பதை
தெரிவித்து கொள்கிறோம்...நீங்க பாட்டுக்கு கில்மானு கடை
பேர் போட்டிருக்குனு போனால் நாங்கள் பொறுப்பல்ல...!!

********************

எனக்கும் கில்மானந்தாவுக்கும் நடந்த சிறு உரையாடல்...

கில்மா : சிஷ்யா, இன்னும் நீ பௌர்ணமி நாகம் பார்க்கவில்லையா??

ஜெட்லி : இல்லை சாமி...அது தெலுங்கு படம் டப்பிங்..அதான் போகல.....

கில்மா : அடேய்... அதில் நம்ம முமைத்கான் நடித்துள்ளார்டா....

ஜெட்லி : அதுக்காக எல்லாம் போக முடியாது சாமி...

கில்மா : டேய் சொன்ன கேளு,எனக்கு ஒரு உதவி மட்டும் செய்.. முமைத்கான் இந்த படத்தில் பாம்பாக வருகிறாராம்....பாம்பு சட்டையை உரிக்குதா இல்லையானு மட்டும் பார்த்துட்டு வந்து சொல்லுப்பா.....!

********************************

அனைவரும் வருக...!!


கில்மானந்தாவின் தலைமையில் மஹாயாகம் நடக்க இருக்கிறது...
நாட்டு மக்களுக்காக நடக்கும் இந்த யாகத்தில் கலந்து
தீட்சை பெற அனைவரையும் கனத்த பர்சுடன் அழைக்கிறோம்...


தீட்சை வேண்டுபவர்கள் கனமான பர்சுடன் வரவேண்டும் இல்லையேல் கிரவுண்ட் உள்ளே அனுமதி கிடையாது!!

இத்தருணத்தில் மீண்டும் அனைவரும் ஒரு முறை கில்மா
மந்திரத்தை சொல்லுங்கள்...

ஹோ...கில்மா ஜே ரவ.... (ரவ பிடிக்கலைனா இட்லி,
பொங்கல் கூட சொல்லலாம்...)



இந்த வாழ்க்கை தத்துவங்கள், சிந்தனைகளை படித்து பல
பேர் பயனடைய உங்கள் பொன்னான வாக்கினை போடுமாறு
கேட்டு கொள்கிறோம்...


இப்படிக்கு தலைமை சிஷ்யன்

ஜெட்லி...(சரவணா...)







Friday, July 2, 2010

வெளுத்து கட்டு - எதிர் வீட்டு பார்வை.

வெளுத்து கட்டணும்டா அவன....




இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்து சத்தியமா நான் வெளுத்து கட்டு படத்துக்கு போகலங்க...ஏதோ எங்க ஏரியா தியேட்டரில் படம்
போகுதுன்னு போனேன்.... அங்க தான் நான் புரட்சி இயக்குனர்
சந்திரசேகரின் மாஸை பார்த்தேன்.... கிழே படத்தை பாருங்கள்....



ச்சே ச்சே...தப்பா கணக்கு போட்டுடாதிங்க.... கிட்ட தட்ட மூணு
ரோ புல் ஆச்சி. தியேட்டர் காரங்க வெளியே பேனர் வைக்காதது
தான் கூட்டம் வராததுக்கு காரணம்னு தப்பா நினைச்சு அவசரம் அவசரமா 11.30 மணிக்கு பேனர் ரெடி பண்ணிட்டு இருந்தாங்க.... பாவம் என்ன பேனர் வச்சி என்ன ஆக போகுது... குவாட்டரும் பிரியாணியும் தரேன்னு சொன்னா கூட யாரும் வர்ற மாதிரி தெரியலை....!!


படத்தோட கதை, காட்சி, திரைக்கதை, என்று எந்த ஒரு தமிழ்
சினிமாவிலும் இது வரை வந்ததில்லை....ஆனா பல தமிழ்
சினிமாவில் வந்ததை சுட்டு போட்டு ஆறி போன தோசையை
கொடுத்து இருக்கிறார்கள். முக்கியமா பருத்திவீரன் படத்தை
சந்திரசேகர் நிறைய தடவை பார்த்து இருப்பார் போல...
முதல் பாதி முழுவதும் பருத்தி வீரன் பாதிப்பு தான்....!
இதையும் மீறி தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க ஒரே
காரணம் ஏ.சி. மட்டுமே....!!

************************


முன்னாடி எல்லாம் நான் விமர்சனம் எழுதும் போது மொக்கை
படத்தை பார்த்தா ஒரு பன்ச் எழுதறது உண்டு....அது இது தான்
ஏகன் படத்தில் அஜித் சொல்லும் பன்சை நான் மாற்றி எழுதுவேன்...

"மொக்கை படம் பார்க்கறது என் தப்பு இல்லை....
அது படம் எடுத்தவன் தப்பு...."னு


ஆனா என் ஆர்குட் நண்பன் மதன் திரும்பவும் ஒரு பன்ச் வச்சார்
அது...

"மொக்கை படம் பார்க்கறது உன் தப்பில்ல...ஆனா மொக்கை
படம்னு தெரிஞ்சு போற பாரு அது தான் உன் தப்பு" னு

அந்த தப்பு தான் இப்ப திரும்பவும் நடந்திருக்கு!!

************************


முதல்ல தமிழ் சினிமாவில் ரெண்டு விஷயம் தடை பண்ணனும்...

# நாயகி சொன்னவுடன் கடலில்,அருவியில்,சாக்கடையில் குதிப்பது
அதன் பின் நாயகி அழுது புரண்டு நாயகனை தேடும் போது
அவர் அஞ்சு நிமிஷம் கழிச்சு மேல வர்றது....

# அப்புறம் நாயகி ஒரு மீசை, அல்லது ஒரு பேய் முகமூடி
போட்டு நாயகனிடம் காட்டும் போது அவர் சிரிப்பது அப்புறம்
அந்த மீசை,மூகமூடியை கழட்டியவுடன் நாயகியை பார்த்து
பயப்படுவது.....

தயவு செய்து யாரும் இப்படி இனிமே எடுக்காதிங்க நானும்
ரெண்டு வயசில் இருந்து இதை பார்த்துட்டு வரேன்...இந்த
ரெண்டு அற்புத காட்சிகளும் இந்த படத்திலும் இருக்கிறது
என்பது படத்துக்கு பெரிய பலம்.

யாரை வெளுத்துகட்டுறார்....

வெளுத்துகட்டு.... ஹீரோ பத்து வயசில் நாயகிக்கு தாலி
கட்டுறார்... இருபது வயசில் கோவில் கட்டுறார்... அப்புறம்
சென்னைக்கு வந்தவுடன் துணியை மாற்றி கட்டுகிறார்....
அவ்ளோ தான்.....

படத்தில் ஒன்னுமே நல்லா இல்லையானு கேட்கலாம்....
சில காட்சிகள் கொஞ்சம் புதுசா இருந்தது...பல காட்சிகள் அரத
பழசா இருந்தது. புதுமுக கதிர் அருந்ததியை அருவி காட்சியில்
நன்றாக மோப்பம் பிடித்தார்.பாட்டி கூல்ட்ரிங்க்ஸ் சீன் நல்லா இருந்தது. ஒரு பையன் எம்.ஜி.ஆர் பாட்டை மாற்றி பாடுவது நன்றாக இருந்தது.... !!ஆனா இது எல்லாம் விட பட கடைசியில் தலைவலி வருது பாருங்க... முடியலைங்க...!

இந்த படத்தை பார்த்தா நம்ம ராஜ்கிரண் என்ன சொல்லி இருப்பார்னு பார்ப்போம்.....


" தக்காளி... ஒரு படத்துக்கு காசு கொடுத்து டிக்கெட் எடுத்தா
இருவுது படத்தை காட்டறாங்க.... இங்க பாரு வேட்டியே
மடிச்சேன்னு வை...தக்காளி..எலும்பை உருவி படையல்
போட்டுருவேன்....சோலையம்மா மசாலா ரெடி பண்ணி வை..!!"


ஜெட்லி பன்ச்:

வெளுத்துகட்டு - வெளுத்து கட்டிட்டாங்க படம் பார்த்தவங்களை!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# ஒருத்தர் நான் டிக்கெட் எடுத்துட்டு வரும் போது சிரிச்சார்...
ஒரு வேளை பட சம்பந்த ப்பட்ட ஆளா இருக்குமோனு டவுட்
வந்தது....படம் பார்த்த இருபது நிமிஷத்தில் அது கன்பார்ம்
ஆச்சி... அவர் ஒருத்தர் தான் படம் முழுவதும் கைதட்டி
ரசிச்சார்.....

# நாயகி நாயகனிடம் "நான் என்ன சொன்னாலும் உடனே
செய்வியா..." "என்ன புள்ள செய்யணும் இப்பவே சொல்லு"
படம் பார்த்து கொண்டிருந்த ஆட்டோகார நண்பர்...

"ஏம்மா பெட்ரோல் விலையை தம்பிகிட்ட சொல்லி குறைக்க
சொல்லுமா...."

# ஆட்டோகார நண்பர்கள் இந்த காவியத்தை பார்த்து விட்டு

" சவாரி போயிருந்தா 200 300 கிடைச்சுருக்கும்பா...."

இன்னொரு நண்பரை பார்த்து

" படம் சூப்பர்ஆ இருக்கும்னு கூட்டிட்டு வந்தாண்டா.... வெளியே
வாடா நீ தான் முதல் டெட் பாடி....."

என்று நண்பரை கலாய்க்க ஆரம்பித்தார்....

# இன்டெர்வல் அப்போ...ஒருத்தர்..."ஆப்பரேட்டர்... செகண்ட் ஹாப்
வேற ஏதாவது நல்ல படத்தை போடுங்க..." என்று கத்தினார்...
அனைவரது முகத்திலும் புன்னகை...


# இன்டெர்வல்க்கு பின் ஒரு காட்சியில் இரு பெண்கள் பிக்னி
உடையில் வருவார்கள்..அதை பார்த்தா பின் சீட்டுகாரர்
"அம்பது ரூபாய்க்கு இது போதும்டா ..." என்று டிக்கெட்
அமௌன்ட்டை கூறினார்.

# இனிமே டாக்டர்ங்க தூக்கம் வராத நோயாளிக்கு இந்த படத்தோட
டிக்கெட்டை கொடுத்து அனுப்ப வாய்ப்பு இருக்கு....சும்மா கண்ணு
சொருவுது....!!

# ஒரு மொக்கை சீனில் கலாய்க்க சிலர் கை தட்டினர்...நான்
உடனே விசில் அடித்தேன்...முன்னாடி இருந்தவர்..." தம்பி
சும்மா இருப்பா...ஏற்கனவே தலை வலிக்குது..நீ வேற...!" என்று
ரொம்ப டச்சிங்கா சொன்னார்.


# இன்டெர்வல் காட்சியில் நாயகனும் நாயகியும் மாறி மாறி
அழுவாங்க... " இந்த படத்தை பார்த்துட்டு நாங்க தான் அழுவனும்..."
என்று சொல்லிகொண்டே கதவை நோக்கி போனார்.

# ஒரு காட்சியில் வரும் வசனம்

"நல்ல வேலை நம்மை தேடி வராது...நாமதான் தேடி போனும்" என்று
நாயகன் ஒருவருக்கு அட்வைஸ் செய்வார்...இதை பார்த்த நம்ம
ஆளு....

" நல்ல படம் நம்மளை தேடி வராது...நாமதான் வேற தியேட்டர்
போனும்..." என்று டைமிங்காக அடித்து விளாசினார்.

# ஒரு ஷேர் ஆட்டோகாரர் படத்தின் இன்டெர்வல் நடுவே நண்பர்களிடம்

"நாம ஆளுக்கு நூறு ரூபாய் போட்டு 1500 பேர் சேர்ந்து ஒரு மாசத்தில் இதை விட நல்ல படம் எடுப்போம்டா"....

இன்டெர்வல் அப்போ நிறைய விளம்பரங்கள் வந்தது...

" சீக்கரம் படத்தை போடுங்கப்பா...."


" யோவ்...படத்தை விட இதுவே மேல்யா..." என்றார் அவரின்
நண்பர்.....

# படம் ரொம்ப லோ பட்ஜெட் போல.....ஒரு காட்சியில் ரோட்டில்
போறவர் ஷூட்டிங் பார்க்கும் ஆர்வத்தில் குறுக்கே வந்தாலும்
அவரை ஓரமாக இழுக்கும் காட்சி கூட பதிவாகி இருந்தது...
ஏன் டைரக்டர் சார்...சந்திரசேகர் சார் பிலிம் ரோல் கம்மியா
தான் கொடுத்தாரா??....


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்கினை போடுமாறு கேட்டு கொள்கிறோம்....

ஜெட்லி...(சரவணா...)

Thursday, July 1, 2010

தமன் கல் உடைக்கிறார்(ராக்ஸ்) !!

அய்யனார் மற்றும் அரிது அரிது பாடல்கள் குறித்து ஒரு பார்வை.



முதல்ல தமன் பத்தி சொல்லணும்.... சிந்தனை செய் படத்தின் பாடல்களை நான் இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்குறேன்....
அதே போல் ஈரமும்.... முன்தினம் பார்த்தேனே நல்ல பாட்டு
தான் ஆனா படம் பார்த்த பிறகு பாடல்களை கேட்க தோன்றவில்லை.....!!

அய்யனார் : ஆதி, மீரா நந்தன்.



அய்யனார் கிராமத்து கதை. தமன் கிராமத்து கதைக்கு எப்படி
இசை அமைத்து இருப்பார் என்று ஒரு ஆர்வம் இருந்தது.
பாடல்கள் கேட்ட பின் தமன் அந்த ஆர்வத்தை எதிர்ப்பார்ப்பை
நிறைவாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.


குத்து குத்து - பாடல் : நா.முத்துக்குமார்.


உண்மையிலே பாட்டு செம குத்து.... முதல் தடவை கேட்கும் போதே
நம்மை அறியாமல் தாளம் போடும் வைக்கும் பாடல். அதே போல்
பாடல் வரிகளும் உண்மையிலே செம... ப்ருஸ் லீ மற்றும் வேல்முருகன் பாடியுள்ளனர்....

"குத்து குத்து கும்மாங்குத்து...சாம்பல் தானே மிச்ச சொத்து..."

என்ன ஒரு விஷயம்னா சில சமயம் கேட்கும் போது சிந்தனை
செய் படத்தில் வருமே அச்சமில்லை பாட்டு மாதிரி இருக்கும்....
இருந்துட்டு போட்டும் அது ஒண்ணும் பிரச்சனை இல்லை....


பனியே பனியே - தாமரை


இந்த பாட்டில் தொடர்ந்து ஒரு டியூன் வரும் அது நல்லா இருந்தது...
அப்புறம் பாட்டு வரி எனக்கு சரியா கேட்கலை.... ரஞ்சித் பாடி
இருக்காரு...எப்பவுமே தமன் ரஞ்சித் கூட்டணி களை கட்டும்...
ஆனா இந்த பாட்டு அப்படி இல்லன்னு தான் சொல்லணும்...


பச்சை கிளி - விவேகா

ராகுல் நம்பியார், உண்மையில் நல்ல வாய்ஸ்... தமன் இந்த பாட்டில்
எனக்கு கிராமத்து படத்துக்கும் பாட்டு போட தெரியும் என்று அடித்து
ஆடி இருக்கிறார். நல்ல பாட்டு நல்ல வரிகள்....கேட்க தூண்டும்
மற்றுமொரு பாடல்.


ஆத்தாடி ஆத்தாடி - நா.முத்துகுமார்.

அக்மார்க் தமன் பாட்டுனா இது தான். செம பீட். இந்த பீட் எங்கோ
கேட்டது போல் இருந்தாலும்...பாட்டின் வேகம் சூப்பர் பாஸ்ட்.
நவீன் பாடியுள்ளார். கண்டிப்பா இந்த வருடத்தின் சிறந்த பாடல்களில்
வர்ற வாய்ப்பு இருக்கு. அதே போல் வரிகளும் நோ சான்ஸ்.

" ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி...
உன்னைதேடி உன்னைதேடி திசை மாறி போனேன்டி...."


அய்யனார் - தீம் .


இதிலும் ஒரு பீட் வரும் தட தட தடனு நல்ல இருந்தது....


ஆக மொத்தத்தில் அய்யனார் பாட்டை கேட்டவுடன் படம் எப்படி
இருக்கும் என்ற ஆர்வமும் வந்து விட்டது.... நீங்களும் கேட்டு
பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்....!!


**********************

அரிது அரிது....


இந்த படம் முழுவதும் வெளிநாட்டில் எடுத்து இருப்பதாக
படித்த நினைவு. நாயகி நாயகன் இருவருமே புதுமுகங்கள்.
கண்டிப்பா பாடல்கள் மேற்க்கத்திய பாணியில்
தான் இருக்கும் என்று முதல் பாட்டை கேட்டேன்....

அழகாய் சிரித்தயாட... என்று வித்தியாசமா இருந்தது....
எப்படி சொல்றதுனு தெரியல... ஒரு ஹான்டிங்கா இருந்தது....

ஆனா அடுத்து அடுத்த பாடல்கள் ஒண்ணும் புரியலை...
ரசிக்கவும் முடியலை....சில பாடல்கள் என்ன பாடுருங்கானு
கூட தெரியலை.....படம் பார்க்கும் போது சப் டைட்டில்
போட்டால் நலம்......

இன்னொரு பாட்டு ஊ..லாலலி..னு...முதலில் சரக்கு அடிச்சுட்டு வாந்தி எடுத்த சவுண்ட் வருமே அந்த மாதிரி ஸ்டார்ட் ஆச்சு...சரி நல்லா இருக்கும்னு நினைச்சா சுத்தம்.....!!


எனக்கு மேற்க்கத்திய இசை பிடிக்காதுனு இல்ல...நான் குளிர்
நூறு டிகிரி படத்தின் பாடல்களுக்கு ரசிகன்....ஆனா அரிது அரிது
படத்தின் பாடல்கள் சுத்தமாக ஈர்க்கவில்லை....ஒரு வேளை
கதை வெளிநாட்டில் நடப்பதால் தமன் இந்த மாதிரி போட்டு
இருக்காரோ என்னவோ.....

ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம் அரிது அரிது பாடல்களை
நான் இனிமே கேட்பது மிகவும் அரிது....!! தமன் அரிது அரிதுஇல்
கல் உடைக்கவில்லை!!


இந்த இடுகை பல பேரை சென்று அடைய உங்கள் பொன்னான
வாக்குகளை செலுத்துங்கள்....

ஜெட்லி...(சரவணா...)