Monday, August 9, 2010

பாணா காத்தாடி

பாணா காத்தாடி - கிழிஞ்ச காத்தாடியா??




படம் ரீலீஸ் அன்னைக்கு போறது தான் முதல்ல ப்ளான், வேலை
காரணமாக போக முடியவில்லை. திங்கள் கிழமை தான் ப்ரீ என்பதால் பாணா போலாமா இல்ல ப்ரேடடர் போலாமான்னு ஒரே குழப்பம்... சரி பாணா போலாம் என்று தியேட்டர் லிஸ்ட் பார்த்தால் எல்லாமே தூரம்...சரி மாயாஜால் போலாம் அப்படின்னு முடிவு பண்ணா 120 ரூபாய் கொடுத்து போனுமா என்று யோசித்தேன்... இருக்கவே இருக்கு நம்ம சாய் சாந்தி 80 ரூபாய் தான் டிக்கெட் என்று போனேன். சாய் சாந்தியில் 80 ரூபாய் அதிகம் தான்!!



யார் ஹீரோ...??

படம் ஆரம்பிச்சு இருபது நிமிஷத்தில் எனக்கு ஒரே குழப்பம்...
அது யார் ஹீரோ என்பதே...கருணாசா இல்லை அதர்வாவா
என்று. முதல் இருபது நிமிஷம் கருணாஸ் தான் வருகிறார்.'
கருணாஸ் டைமிங் காமெடியில் உண்மையிலே பிச்சு உதறுகிறார்.
கருணாஸ் அண்ட் கஜேந்திரன் காமெடி ரசிக்கும் படியா இருக்கு.
முக்கியமா அந்த சட்டை பாக்கெட்டில் காசு மேட்டர் வந்தாலே
தியேட்டரில் சிரிப்பொலி கேட்குகிறது,


அடுத்ததா மனசில் நிக்கறது அதர்வா அம்மாவாக வரும் மௌனிகா..
செம ஆக்டிங்...பக்கா லோக்கல் அம்மா... தன் மகனை போலீஸ் பிடிச்சுட்டு போய்டுச்சு என்றவுடன் தன் பையனை பற்றி சொல்லும் காட்சி உண்மையில் செம...!! நம்ம பிரசன்னா உண்மையில் நன்றாக பண்ணி இருக்கிறார். ஒரு படம் நடிச்சு ஹிட் ஆனாலே நம்ம ஹீரோக்கள் பண்ற அலும்பு தாங்க முடியல...ஆனா இந்த விசயத்தில் கண்டிப்பா பிரச்சானவை பாராட்ட வேண்டும்...


சமந்தா...சமந்தா....


சமந்தா உண்மையிலயே ரொம்ப சூப்பர்ஆ இருக்காங்க...ஆனா
நடிப்பு தான் என்ன விலைனு சில இடத்தில் கேட்குறாங்க...
இருந்தாலும் நாம மன்னிச்சு விட்ருவோம்.... காலம் காலமா
நம்ம தமிழ் சினிமாவில் வருகிற நாயகி வேடத்தில் தான்
வர்றாங்க...!!


அதர்வா... என் கூட முதுகலை பட்டம் படிச்ச பையன் ஒருத்தன்
நோஞ்சான் மாதிரி இருப்பான், ஆனா குரல் சும்மா கனீர் கனீர்னு
இருக்கும்... அதே மாதிரி தான் அதர்வா குரலும்..இது அவருக்கும்
ப்ளஸ்ஸும் மைனஸ்ஸும் கூட.... குப்பத்து தமிழை கஷ்டப்பட்டு
பேசுகிறார் என்று படத்தை பார்த்தாலே புரியும்...!! மற்றபடி
டான்ஸ் எல்லாம் நோ சான்ஸ்....!!


முதல் பாதி அப்படி அப்படினு போகுது...ஆனா அந்த பைத்தியம்
பிடிக்குது சாங் ஒரு மினி இன்டெர்வல் மாதிரி தான் இருந்தது.
அதுக்கு அப்புறம் தான் இன்டெர்வல் வந்தது வேற விஷயம்...
இன்டெர்வல் ட்விஸ்ட் கொஞ்சம் மொக்கையா தான் இருந்தது
இல்ல சிறுபிள்ளைதனமா இருந்ததுனு கூட சொல்லலாம்...!!




ரெண்டவாது பாதியில் கொஞ்சம் கொஞ்சமா நம்ம பொறுமையை
இயக்குனர் சோதனை செய்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
ஆள் ஆளுக்கு புத்தி மதி மற்றும் வாழ்க்கை தத்துவங்களை
அள்ளி விடுகிறார்கள்...அதுவும் அதர்வா மொட்டை மாடியில்
அள்ளி விடும் தத்துவம் செம காமெடி... சமந்தா நண்பி பேசும்
மழலை தமிழ் ஐயோ முடியலை சாமி ரகம்..!!


கடைசியில் வரும் ஐட்டம் சாங் எதுக்குனு ஆண்டவனுக்கே வெளிச்சம்...சரி அதில் வரும் ஐட்டமாவது நல்லா இருக்கானு பார்த்தா..சுத்தம்... கேவலமா இருந்தது...ஏதோ சுண்ணாம்பு அடிச்சு பூசின மாதிரி.... முமைத்கான் போட்டிருந்தா அருமையா இருந்து இருக்கும்...இல்லனா அவங்க அக்காவையாது போட்டு இருக்கலாம்...!! ஐட்டம் சாங்கில் சொல்றேன்...!!

(இது தான் முமைத் கான் சிஸ்டர்... சப்யர் கான்...ஏதோ என்னால் முடிந்த பொது அறிவு தகவல் மக்களுக்கு...!! )




சரி கிளைமாக்ஸ் வருவோம்... என்ன நடக்கும் என்று ஒரு
எதிர்ப்பார்ப்பு இருந்தாலும்...இப்படி நடந்து போச்சேனு ஒரு
சோகம் வந்தாலும்.. ஓரளவுக்கு தான் மனசை டச் பண்ணிச்சு...
அதுக்கு காரணம் அதுக்கு முன்னாடி வந்த நாடகதனமான
காட்சிகளால் இருக்கலாம்....! பாணா காத்தாடி ஒரு டைம்
பாஸ் படம் தான் என்றாலும் சில விஷயங்களில் சலிப்பு
வருகிறது...கருணாஸ் மட்டும் இல்லைனா காத்தாடியை
காப்பாத்தி இருக்கறது ரொம்ப கஷ்டம்... பார்க்கறவங்க
பாக்கலாம்...!!


பாணா காத்தாடி - சூஸ்திரம் மட்டும் சரியில்லை...!!


தியேட்டர் நொறுக்ஸ்:


# படத்துக்கு போறதுக்கு முன்னாடி நம்ம சாந்தி தியேட்டர்
பக்கத்தில் இருக்கிற கடையில் பூரி சாப்பிட்டேன்... படத்தை
விட பூரி நன்றாகவே இருந்தது... பூரி சாப்பிடாவாவது படத்துக்கு
போங்கப்பா...




# ஒரு காட்சியில் அதர்வாக்கு காதல் வந்தவுடன் தெரு லைட்
மற்றும் அவங்க வீட்டு கூண்டு பல்பு எல்லாம் தானாக எரியும்...
இதை கண்ட நம்ம ஆளு...

" யார்டா லைட்டை போட்டது..."

என்று கத்த ஆரம்பித்து விட்டார்...


# மப்பில் வந்த நண்பர்கள் குரூப்பில் ஒருவர் இன்டெர்வல் லைட் போட்டவுடன் தான் எழும்பினார்...அவர் நண்பர்களிடம்
கேட்ட கேள்வி

"பாணா காத்தாடி படமா மச்சி ஓடுது...??"


# முரளி ஒரு காட்சியில் வந்து...அதர்வாவிடம்

"லவ் வந்தா உடனே சொல்லிடுங்க... இல்லனா இதயத்தில்
ஓட்டை விழுந்துடும்...நான் இன்னும் காலேஜ் படிச்சுட்டு
இருக்கேன்" என்பார்... தியேட்டரில் நல்லா ரெஸ்பான்ஸ்...


# அதே காட்சியில் அதர்வா தன் கனத்த குரலில் சமந்தாவிடம்

"இது வரைக்கும் என் பெர்த்டேவை இப்படி கொண்டாடினது
இல்லை..." என்று பீலிங்க்ஸ் ஆக பேசுவார்...

இங்கே நம்ம ஆட்கள்..."டேய் போதும்டா.."என்று கத்த ஆரம்பித்து
விட்டனர்.

# படம் விட்டு வெளிய வரும் போது ஒருவர்

"கிழிஞ்ச காத்தாடி மாதிரி இருக்கு இது தான் பாணா
காத்தாடியா" என்று நண்பரிடம் சொல்லி கொண்டு வந்தார்..

"ஒவ்வொரு மனுசனக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்...":


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள்
வாக்கினை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்...

நன்றி

ஜெட்லி...(சரவணா...)

20 comments:

Unknown said...

//இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள்
வாக்கினை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்..//

இதுதான் சூப்பர்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது..,

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணன் உ.த ரொம்ப நல்லாயிருக்கேன்னு சொல்லி இருந்தாரேப்பா? நீயும் கேபிளும் கிழிச்சு இருக்கீங்க? அது சரி.. ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்..:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் பாக்கலாமா தல?

செ.சரவணக்குமார் said...

அந்தப் பூரிக்கு நானும் ரசிகன் நண்பா..

உங்கள் விமர்சனத்தில் மிகவும் ரசிப்பது தியேட்டர் நொறுக்ஸ்களைத்தான் இதிலும் அசத்தியிருக்கிறீர்கள்.

vasu balaji said...

saravanukku repeattu:)

cheena (சீனா) said...

அன்பின் ஜெட்லி

விமர்சனம் அருமை - பாக்கலாமா வேண்டாமன்னு யோசிச்சுக்கிர்ட்டு இருக்கேன் - பாப்போம் - விதி யார வுட்டது

நல்வாழ்த்துகள் ஜெட்லி
நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

vottu pottachchu

ஜெட்லி... said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
அண்ணன் உ.த ரொம்ப நல்லாயிருக்கேன்னு சொல்லி இருந்தாரேப்பா? நீயும் கேபிளும் கிழிச்சு இருக்கீங்க?
//


படம் பரவாயில்லை அண்ணே....
தியேட்டர் நொறுக்ஸ்இல் நான் மத்தவங்க
பீலிங்க்ஸ்ஐயும் சொன்னேன்...!!

ஜெட்லி... said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படம் பாக்கலாமா தல?

//

பொழுதே போகலைனா பார்க்கலாம்.....அவ்வளவு மோசமில்லை...

ஜெட்லி... said...

@ கே.ஆர்.பி.செந்தில்


@ SUREஷ் (பழனியிலிருந்து

நன்றிங்க....

ஜெட்லி... said...

@ செ.சரவணக்குமார்

@ வானம்பாடிகள்


நன்றி..

ஜெட்லி... said...

//cheena (சீனா) said...
அன்பின் ஜெட்லி

விமர்சனம் அருமை - பாக்கலாமா வேண்டாமன்னு யோசிச்சுக்கிர்ட்டு இருக்கேன் - பாப்போம் - விதி யார வுட்டது


//

ஹா ஹா....


@T.V.ராதாகிருஷ்ணன்


நன்றி

விக்னேஷ்வரி said...

ஆமா, பாணா காத்தாடின்னா என்ன அர்த்தம்...

பிரபல பதிவர் said...

//(இது தான் முமைத் கான் சிஸ்டர்... சப்யர் கான்...ஏதோ என்னால் முடிந்த பொது அறிவு தகவல் மக்களுக்கு...!! )
//
தம்பி ஐ லைக் யுவர் எஃபர்ட்ஸ்....


செய்யற வேலை ரசிச்சி தெளிவா செய்யறதுல நீ, உ.த அண்ணாச்சிக்கு போட்டியா வருவ..

Mohan said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது.

@ விக்னேஷ்வரி!

பாணா காத்தாடின்னா 'பெரிய காத்தாடி' ன்னு அர்த்தம்.நன்றி வவ்வால்

Starjan (ஸ்டார்ஜன்) said...

விமர்சனம் படிச்சிக்கிட்டே இருக்கலாம் போல.. அப்ப படம் சுமார்தானா..

Raghu said...

பூரி எங்க‌ சாப்ட்டீங்க‌ ஜெட்லி? சாந்தி தியேட்ட‌ர் வ‌ளாக‌த்துல‌ இருக்க‌ற‌ ச‌ர‌வ‌ண‌ ப‌வ‌னா?

ஜெட்லி... said...

Anaivarukum nandri..SYSTEM repair aagi pochu. .etho velinaatu sathiNu ninaikiraen...ippo o.c.phoneLa irunthu anupuraen. . .ragu saravana bavan ila tasmac pakkathil irukum tea kadai..

DR said...

//--இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள்
வாக்கினை செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம்...--//

என்னே ஒரு கலை நயம் மிக்க வரிகள்...