கதைனு பார்த்தீங்கனா ரொம்ப சிம்பிள் தான். சாதாரணமா சொல்லிடலாம்
அப்பாவை கொன்னவனை பழி வாங்குற கதைனு...ஆனா திரைக்கதையை
அவ்வளவு சாதாரணமா யாரும் சொல்லிட முடியாது என்று மீண்டும்
நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ஆனா இவர் முதல் பாதி
கொண்ட போன அழகு செம..செம...செம...! முதல் பாதிக்கு சம்பந்தமே
இல்லாம ரெண்டாவது பாதியை அப்படியே ஒரு கிரைம் ப்ளஸ் ஆக்சன்
ஆக படைத்து இருக்கிறார் இயக்குனர்.
கார்த்தி மீண்டும் தன் படத்தில் காமெடியன் தேவையே இல்லை என்று
நக்கல் அடித்து வெளுத்து கட்டி இருக்கிறார் மனுஷன். காஜல் அகர்வாலை
கண்டதும் காதல் கொள்கிறார்...அனைத்தையும் வெளிப்படையாக
பேசுகிறார். குறிப்பா அந்த குப்பத்து தாதாவுடன் அவர் பேசும் காட்சிகள்
உண்மையிலே நல்ல டச். ஓசியில் கிடைக்கும் பொருளில் கூட விலை
உயர்ந்த ரகத்தை தேர்ந்துடுப்பது என பிச்சு உதறி இருக்கிறார். சண்டை
காட்சியில் செம அதிரடி...செம எக்ஸ்பிரசன்....!!
காஜல் அகர்வால் கிட்ட பெரிய மாற்றம் தெரியுது...வழக்கம் போல தான்
வராங்க...வேற ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல. அடுத்து முக்கியமா சொல்ல
வேண்டிய நபர் ஜெயபிரகாஷ், நிஜமான மிட்டில் கிளாஸ் அப்பாவை போல்
வருகிறார். கார்த்திக்கும் அவருக்கும் இருக்கும் அந்த பாசம் எல்லாமே
நல்லா இருந்தது. காஜலுடன் உங்க அப்பா காதல்க்கு ஓகே சொன்னாரா??
என்று ஜெயபிரகாஷ் கேட்கும் இடமும் அதன் பின் அவர் விளக்கமும்
செம.....!! படத்தில் ஒரு உயிரோட்டம் இருக்கு...
படத்தில் வேறு விஷயங்கள் பத்தி சொல்லனும்னா கண்டிப்பா எடிட்டிங்
பத்தி சொல்லணும்...கடைசி சண்டை காட்சிகளில் எடிட்டிங் செம...
அப்புறம் நம்ம யுவன் பத்தி சொல்லவே தேவை இல்லை...கலக்கி
இருக்கிறார். எனக்கு ஒரே ஒரு குறை "ஒரு மாலை நேரம்" பாட்டு
திரையில் வரவில்லை....
பாஸ்கர் ஷக்தி வசனங்கள் பல இடங்களில் சிரிப்பு வருகிறது. கார்த்தி சொல்லும் "எல்லாரும் விட்டு கொடுத்து வாழ்வாங்க...நீங்க தோசையை
சுட்டு கொடுத்து வாழ்றீங்க..."போன்ற டைமிங் காமெடி வசனங்கள்
நன்றாகவே இருந்தது. கேமரா வேலை எல்லாம் பக்கா...!! அந்த
அஞ்சு பசங்களும் பார்க்கவே டெர்ரர்ஆ இருக்காங்க....ஒரு பையன்
நந்தா படத்தில் சின்ன சூர்யாவாக வருவாரே நல்லா பண்ணி இருக்கிறார்...
கடைசி சண்டையில் ரேணிகுண்டா படத்தில் கார்த்தி போய் வெளுத்தா
எப்படி இருக்கும் அது போல் இருந்தது.....
படம் மொத்தம் ரெண்டு ஹவர் பத்து நிமிஷம் தாங்க ஓடுது....டைம் பாஸ்
கியாரண்டி. நிறைய பேர் வைலன்ஸ் அதிகம்னு சொல்றாங்க..ஆனா எனக்கு
அப்படி ஒண்ணும் தெரியலை...இதோட வைலன்ஸ் அதிகமா எல்லாம் படம்
பார்த்து இருக்கோம். எனக்கு என்னமோ படத்தோட கிளைமாக்ஸ் சரினு
தான் தோணுது... நான் பார்த்த தியேட்டரில் கொஞ்சம் மிக்சட் ரெஸ்பான்ஸ்
தான்... எனக்கு படம் பிடிச்சுருக்கு....முதல் பாதிக்காக இன்னொரு தடவை
கூட பார்க்கலாம்....!!
நான் மகான் அல்ல - வெற்றி மகான்...
தியேட்டர் நொறுக்ஸ்:
# ஒரு காட்சியில் காஜலின் தோழி ஒருத்தி பசங்களை பத்தி தப்பு
தப்பாக சொல்வாள்,,,அதாவது பத்து ரூவா டிக்கெட் எடுத்துட்டு கையில்
கோக் வைத்து கொண்டு சீன் போடுவார்கள் என்று.....
இங்கே நம்ம ஆட்கள்...
" நீ மட்டும் என்ன,உங்க வுட்ல சோறே இல்லை ஆனா பிட்சா தான் கேட்பே ,,,"
என்று நண்பர்கள் பட்டாளம் கூறி கலாய்த்து கொண்டார்கள்.
# காஜலை பார்த்து உன் வயசென்ன என்று ஜெயபிரகாஷ் கேட்பார்...
கிழே இருந்து நம்ம ஆள் செம சவுண்டில்...
"நாப்பது அஞ்சு..." என்று கத்தினார்.
அதற்கு காஜல் "22 " என்பார்...
தியேட்டரில் ஒரு வித அதட்டல் சவுண்ட் கிளம்பியது,....
# "வ" குவாட்டர் கட்டிங் படத்தின் ட்ரைலர் போட்டாங்க....சத்தியமா சில
காட்சிகள் புரியலை...இன்னும் ரெண்டு மூணு தடவை பார்த்தா தான்
புரியும்னு நினைக்கிறேன். காரணம் செம பாஸ்ட். படம் கண்டிப்பா
வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன். நண்பர்களுடன் சைதை
ராஜில் ஓரம்போ போன நினைவு இன்னும் மனதின் ஓரத்தில் தங்கி
இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
அதென்ன "வ"... குவாட்டர் கட்டிங் அடிச்ச பிறகு வாந்தி வரும் சவுண்டா...?? இல்லை நான் தான் தப்பா படிச்சிட்டேன்னா??
# தல மங்காத்தா டிசர் போட்டாங்க..... என்ன சொல்றது....சத்தியமா
ஒன்னுமே கேட்கலை...அவ்வளவு விசில், கத்தல். ஆனா அதிக
பில்ட் அப் மாதிரி தான் இருக்கு. அத்தனை குண்டும் சுவத்தை
மட்டும் தான் ஓட்டை போடுது கடைசியில் டீ கப் நொறுங்குது...
தல என்ன சொன்னார்னு கூட கேட்க முடியல...மங்காத்தானு
தான் சொல்லி இருப்பாரு நினைக்கிறேன்....
இந்த விமர்சனம் பல பேரை சென்று அடைய ஓட்டு போடவும்...
பின்னூட்டத்தில் சந்திப்போம்...
நன்றி
ஜெட்லி...(சரவணா...)
22 comments:
movie தேறிடும்ங்கறீங்க..... ஓகே!
ஜெட்லி சொன்ன பார்க்க வேண்டியதுதான்.
சரி தல இந்த சண்டே பார்த்துருவோம் ...... தியேட்டர் நொறுக்ஸ் இன்னும் செமைய எழுதி இருக்கலாம்
நேத்து நைட் பார்த்துட்டேன் தல..
வழக்கம்போல் கார்த்தி கலக்கல்..
பாத்துருவோம் ,,
thala climax fight excellent. Appadiye para parannu irunthathu
நீங்க படம் நல்லாயிருக்குன்னு சொன்னா படம் நல்லா ஓடிடும். அப்புறம் அந்த வ... மேட்டர் புரியலை. என்ன படம் அது ?
ஜெட்லியின் டேஸ்ட் பெருவாரியான தமிழக மக்களின் டேஸ்ட். அதால இந்தப் படத்தைப் பாத்துடலாம்னு இருக்கேன்.
பாத்துருவோம்
//டம்பி மேவீ said...
சரி தல இந்த சண்டே பார்த்துருவோம் ...... தியேட்டர் நொறுக்ஸ் இன்னும் செமைய எழுதி இருக்கலாம்
//
தியேட்டரில் நடந்தது தான் அண்ணே எழுத முடியும்.....
அடுத்த தடவை ட்ரை பண்றேன்....
//அப்புறம் அந்த வ... மேட்டர் புரியலை. என்ன படம் அது ?
//
சிவா நடித்து வெளிவர இருக்கும் படம்,,,
ஓரம்போ ஜோடி இயக்குனர்கள் இயக்கிய படம்ங்க....
பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்....
படம் பார்த்தே ஆகணும் .!!
கண்டிப்பா பார்த்துடறேன் சரண். விமர்சனம் கலக்கலா இருக்கு...
பிரபாகர்...
hi FRIEND,
yesterday itself i watched this movie..i like it very much...2nd half is really super it brings me a fear,,,,
ரேணிகுண்டா படத்தில் கார்த்தி போய் வெளுத்தா
எப்படி இருக்கும் அது போல் இருந்தது
i have this same thought....
அப்ப படம் பாக்கலாம்னு சொல்றீங்க.. சரிப்பா..
ஆனா..
//# "வ" குவாட்டர் கட்டிங் படத்தின் ட்ரைலர் போட்டாங்க....சத்தியமா சில
காட்சிகள் புரியலை...இன்னும் ரெண்டு மூணு தடவை பார்த்தா தான்
புரியும்னு நினைக்கிறேன். காரணம் செம பாஸ்ட். படம் கண்டிப்பா
வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன். நண்பர்களுடன் சைதை
ராஜில் ஓரம்போ போன நினைவு இன்னும் மனதின் ஓரத்தில் தங்கி
இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
அதென்ன "வ"... குவாட்டர் கட்டிங் அடிச்ச பிறகு வாந்தி வரும் சவுண்டா...?? இல்லை நான் தான் தப்பா படிச்சிட்டேன்னா??
# தல மங்காத்தா டிசர் போட்டாங்க..... என்ன சொல்றது....சத்தியமா
ஒன்னுமே கேட்கலை...அவ்வளவு விசில், கத்தல். ஆனா அதிக
பில்ட் அப் மாதிரி தான் இருக்கு. அத்தனை குண்டும் சுவத்தை
மட்டும் தான் ஓட்டை போடுது கடைசியில் டீ கப் நொறுங்குது...
தல என்ன சொன்னார்னு கூட கேட்க முடியல...மங்காத்தானு
தான் சொல்லி இருப்பாரு நினைக்கிறேன்....
//
ஒன்னும் பிரியல....
//ஓசியில் கிடைக்கும் பொருளில் கூட விலை
உயர்ந்த ரகத்தை தேர்ந்துடுப்பது//
:-)
விமர்சனம் நன்றாக இருக்கிறது!
ரெண்டு ஹவர்
நல்ல விமர்சனம்... நாம்ம பக்கம் வந்து ஒரு கமண்டு போடுங்க... வாழ்த்துக்கள்
படத்தை விட உங்க விமர்சனம் டாப்
ஜெட்லி எப்பவுமே நா ரசிக்கறது தியேட்டர் நொறுக்ஸ் தான்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
அன்பின் ஜெட்லி
அருமையான விமர்சனம் - இன்னிக்குப் படம் பாக்கறதா இருக்கேன் - நல்வாழ்த்துகள் ஜெட்லி
நட்புடன் சீனா
Post a Comment