Monday, August 16, 2010

காதல் சொல்ல வந்தேன்....

காதல் சொல்ல வந்தேன்!!


இந்த வெள்ளிக்கிழமை மூணு படம் ரீலீஸ் ஆச்சுனு உங்களுக்கு
தெரியாதது இல்ல...எனக்கு ஒரே குழப்பம் என்ன படத்துக்கு போறதுன்னு.
சரி கடைசியா யுவனையும் பூபதி பாண்டியனின் நகைச்சுவையையும் நம்பி மாயாஜால்க்கு வண்டியை விரட்டினேன். பரவாயில்லை எதிர்ப்பார்த்ததை
விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் ஒரு நாப்பது பேரு இருந்து இருப்பாங்க...நான் எங்கே அஞ்சு ஆறு பேரு கூட சேர்ந்து படம் பார்க்க போறோமோ என்று ஒரு திங்கிங்கில் தான் போனேன்.

வழக்கத்துக்கு மாறாக ஜோடிகளை விட சேவல்களே அதிகம் காணப்பட்டன.
அதனால் தியேட்டர் நொறுக்ஸ் பற்றி சொல்லவே வேணாம்..அதுக்கு முன்னாடி நாம படத்தை பத்தி கொஞ்சமாவது பேசுவோம்...

கதையின் நாயகன் பாலாஜி...கனா காணும் காலங்களில் முத்திரை
பதித்தவர்.பட்டாளம் படத்தில் கூட நல்ல ரோல் பண்ணி இருப்பார்.
பாலாஜி நல்லாவே பண்ணி இருக்கார். ஏன் பாலாஜிக்கு டப்பிங் குரல்னு தெரியல...மேக்னாக்கு தாராள மனசுனு படத்தை பார்த்தவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கதைக்கு ஏற்ற சரியான தேர்வு தான் மேக்னா.
ஆனா ஜூனியர் பையன் கூட இந்த நெருக்கம் ஆகாது மேக்னா அக்கா.
இப்படி நெருக்கம் காட்னா யாருக்குதான் லவ் வராது??...


சபேஷ் கார்த்திக் தான் படத்தையும் நமக்கு நேரத்தையும் ஒட்ட
காமெடி செய்து இருக்கிறார். டைமிங் காமெடிகள் நன்றாகவே
இருந்தது. அதுவும் அந்த ஆனந்தராஜ் "ஹாப்பி ராஜ்" கஜினி மியூசிக்கும்,
அந்த சிங்கும் சிரிக்க வைக்கிறார்கள்.சுந்தர்ராஜன் அப்பாவாக வருகிறார்.
ஆர்யா சிறப்பு தோற்றத்தில் ஒரே சீனில் டாக்டர்ஆக வந்து போகிறார்...
ஆர்யா வர்ற சீன் நல்லாவே இருந்தது...அதுவும் அவர் சாக்லேட் பற்றி
சொல்லும் செய்திகள் எனக்கு புதுசு...இப்பதான் எனக்கு தெரியுது ஏன்
நம்ம பசங்க பெரிய பெரிய பார் சாக்லேட் வாங்கி கொடுக்குறாங்கனு...



காதலை ஏன் சொன்ன??

ரெண்டு வயசு பெரிய பொண்ணோட பார்த்தவுடனே காதல் வந்தது
சரி...அவதான் தம்பினு சொன்ன பிறகும் ஏன் காதலை சொல்லணும்...
சத்தியமா இந்த படத்தை பார்த்த எந்த ஒரு லவ் பீலிங்க்ஸ்ஸும்
வரவில்லை என்பதே உண்மை எரிச்சல் தான் வந்தது. அதுக்காக படம் மொக்கையானு கேட்டா அப்படி எல்லாம் சொல்ல முடியாது. இது ஒரு
டைம் பாஸ் படம்... யுவன் சாங்க்ஸ், காமெடி மற்றும் படத்தின் நீளம்
(வெறும் ரெண்டு மணி நேரம் தான்) இவையெல்லாம் படத்துக்கு ப்ளஸ்...
முதல் பாதி வேகமாய் போனாலும் ரெண்டாவது பாதியில் ஆடி மாசம்
ஸ்பீக்கர் மாதிரி பாலாஜி சொன்னதே சொல்லி கொண்டிருப்பது கொஞ்சம்
சலிப்பை வரவைக்கிறது....!!


காதல் சொல்ல வந்தேன் : சரியான ஜோடியா பார்த்து சொல்லி இருக்கலாம்!!


தியேட்டர் நொறுக்ஸ்:

# மாயாஜால் இன்னொரு ஆராதனா தியேட்டராக மாறி கொண்டு வருகிறது...
சுத்தம் சுத்தமா இல்லை...நம்ம அரசு பேருந்தில் சீட்டில் தலைக்கு ஒரு வெள்ளை துணி கருப்பாய் இருக்குமே அது போல் இங்கே பேப்பரில் வைத்து...எத்தனை நாள் ஆச்சுனு தெரியல...சீட்டில் ஒட்டடையா இல்லை அந்த பேப்பர்ஆ என்று ஒரே குழப்பம்....!! அதே போல் படம் ஆரம்பித்த ரெண்டு நிமிடத்தில் படம் நின்று விட்டது...இதை பார்த்த நம்ம ஆட்கள் " படம் விட்டாங்க வாயா போவோம்"என்று கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.நான் போனது ஸ்க்ரீன் எட்டில் புது ஸ்க்ரீன்ஏ இந்த லட்சணம்....இதில் வேறு இன்னும் நான்கு புதிய ஸ்க்ரீன்கள் வரபோதாம்....இனி மாயாஜால் போவதை கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கணும்...

# பாலாஜி கதை சொல்ல ஆரம்பிப்பார்..."நான் சந்தியாவை எப்போ பார்த்தேன்?"..

இங்கே நம் குடிமகன் கத்தி "யாரை கேட்குற..."


# இன்டெர்வல் ப்ளாக் தான் படத்தில் மிக பெரிய காமெடி...கிட்டத்தட்ட
தியேட்டரில் அனைவரும் சிரித்து விட்டனர்...ஆனா அது காமெடி காட்சி
அல்ல ட்ராஜடி காட்சி....ஆனா காமெடி ஆகி போச்சு...


# நண்பர்கள் குழுவாய் வந்தவர்கள் ரெண்டாவது பாதி மொக்கையை பார்த்துட்டு இருக்கும் போதே "டேய் வெளியே போய் கிரிக்கெட்ஆவது பார்க்கலாம்டா..."என்று சொல்லி கொண்டிருந்தார்.

# ஒரு காட்சியில் பாலாஜி "இப்ப என்ன பண்ணலாம்??" என்று கேட்பார்..
இங்கே நம்ம ஆள் " நாம எந்திருச்சி வெளியே போலாம்..." என்றார்..செம டைமிங்...


# ரெண்டாவது பாதியில் காலேஜ் டி.சி. வாங்க சுந்தராஜன்,பாலாஜி அவரது
அம்மா மூவரும் ஓவர் பீலிங்க்ஸ்...அதுவும் அம்மா பேசறது எல்லாம் முடியல...பின்னாடி இருந்த நம்ம ஆள் "ஒக்காளி ஓவர்ஆ பண்றாங்க மச்சான்..." என்று நண்பரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


# கரெக்ட்ஆ அன்புள்ள சந்தியா பாட்டு வரதுக்கு முன்னாடி ரெண்டாவது
ரோவில் இருந்த குடிமகன் நினைவிருக்கும் வரை பாட்டை எடுத்து விட்டார்
"சந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா..."னு தியேட்டரே சிரிப்பில் மூழ்கியது.


# மேக்னா ஒரு காட்சியில் பாலாஜியிடம் "ஊருக்கு போறேன்..." என்பார்...
வெறுப்பில் இருந்த ஒரு நபர் " போய் தொலை சனியனே..." என்று
கத்தினார்...


# கடைசி காட்சியில் பஸ் டிரைவரிடம் தான் வந்து பஸ் முன் விழும்
போது பிரேக் போட்டுருங்க அண்ணே என்று பாலாஜி சொல்வார்...
இங்கே சைடில் இருந்தவர்..."டேய் அது கவர்மன்ட் பஸ்டா....நீ சத்தியமா
காலி...ஏதோ தண்ணி வண்டினா கூட பரவாயில்லை...."
என்று உரக்க
கத்தினார்...மீண்டும் சிரிப்பலை...

# கிளைமாக்ஸ் காட்சியில் பாலாஜி இறந்தவுடன் பின்னாடி இருந்த
நண்பர்கள் குழு..."சக்சஸ்..சக்சஸ்..சக்சஸ்.." என்று பெரும் கூச்சல்
போட்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்து
கொள்ளுங்கள்....

# படம் பார்த்துட்டு வண்டி எடுக்க வந்தா...பாருங்க சைட் மிர்ரர் கதியை..

ஆனா இந்த அளவுக்கு எல்லாம் வளைச்சு இது வரைக்கும் பார்த்தது
இல்லை....இந்த தடவை முதல்லே பார்த்துட்டேன்...சில தடவை பார்க்காமலே வண்டி எடுத்து விட்டு கொஞ்சம் தட்டு தடுமாறி மாற்றுவேன்....
என்னத்த சொல்றது போங்க....


இந்த விழிப்புணர்வு பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை
போடுமாறு கேட்டு கொள்கிறேன்....


ஜெட்லி...(சரவணா...)

28 comments:

ILLUMINATI said...

//"டேய் அது கவர்மன்ட் பஸ்டா....நீ சத்தியமா
காலி...ஏதோ தண்ணி வண்டினா கூட பரவாயில்லை...."//

ஹாஹா... செம கமெண்ட். :)
உங்க தளராத உள்ளத்தை பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருக்குது.

பின்னோக்கி said...

வம்சம் பார்க்கலையா ?. அதுக்குத்தான் முதல் விமர்சனம்னு நினைச்சேன்.

அகல்விளக்கு said...

சக்ஸஸ்... சக்ஸஸ்... சக்ஸஸ்...

செம டைமிங் மாமே.....

:)

ஜில்தண்ணி said...

பாட்டுல ஹீரோயின பாக்கும் போதே நினச்சேன்...அதே தானா

ரைட்டு :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st half ok. 2nd half not good. Gundu paiyan ok. Muttai thedura seen sema comedy

Thenammai Lakshmanan said...

காதல் சொல்ல வந்தேன் : சரியான ஜோடியா பார்த்து சொல்லி இருக்கலாம்!!//

ஹாஹாஹா சூப்பர் மச்சி..
படம் எடுத்தவன் பார்த்தா தொலைஞ்சீங்க..

யோ வொய்ஸ் (யோகா) said...

கார்த்திக் பாடிய பாட்டுக்காக பார்க்கவிருக்கிறேன்.

அந்த பாடலை பாடி காட்ட சந்தியா என்னும் பெண்ணொருத்திய தேடி கொண்டிருக்கேன், கிடைத்தால் சொல்லவும்

vasu balaji said...

நொறுக்ஸ் நறுக்ஸ்:)

VISA said...

whistle.....to JETLI

Chitra said...

# கிளைமாக்ஸ் காட்சியில் பாலாஜி இறந்தவுடன் பின்னாடி இருந்த
நண்பர்கள் குழு..."சக்சஸ்..சக்சஸ்..சக்சஸ்.." என்று பெரும் கூச்சல்
போட்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்து
கொள்ளுங்கள்....


.....என்ன ஒரு கொலைவெறி? நான் டைரக்டர் பற்றி சொன்னேன்.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

KUTTI said...

ஜெட்லி மாமா,

கலக்கறீங்க...


மனோ

Kazhudhai said...

////# கடைசி காட்சியில் பஸ் டிரைவரிடம் தான் வந்து பஸ் முன் விழும்
போது பிரேக் போட்டுருங்க அண்ணே என்று பாலாஜி சொல்வார்...
இங்கே சைடில் இருந்தவர்..."டேய் அது கவர்மன்ட் பஸ்டா....நீ சத்தியமா
காலி...ஏதோ தண்ணி வண்டினா கூட பரவாயில்லை...." என்று உரக்க
கத்தினார்...மீண்டும் சிரிப்பலை...

# கிளைமாக்ஸ் காட்சியில் பாலாஜி இறந்தவுடன் பின்னாடி இருந்த
நண்பர்கள் குழு..."சக்சஸ்..சக்சஸ்..சக்சஸ்.." என்று பெரும் கூச்சல்
போட்டு சந்தோசத்தை பகிர்ந்து கொண்டார்கள் என்றால் பார்த்து
கொள்ளுங்கள்....////

ippadi thaan climaxa pottu udaikkanum vimarsanamnra perla.

Starjan (ஸ்டார்ஜன்) said...

விமர்சனம் ரொம்ப நல்லாருக்கு..

ஜெட்லி... said...

@ ILLUMINATI

@அகல்விளக்கு

@ஜில்தண்ணி - யோகேஷ்

@வானம்பாடிகள்


@VISA

@Starjan ( ஸ்டார்ஜன் )


நன்றி..

ஜெட்லி... said...

// பின்னோக்கி said...
வம்சம் பார்க்கலையா ?. அதுக்குத்தான் முதல் விமர்சனம்னு நினைச்சேன்.

//


வேலை கொஞ்சம் வந்திருச்சி...அதனால போக முடியல...
பார்க்கணும்...

ஜெட்லி... said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


சரியா தான் சொல்றீங்க......



@தேனம்மை லெக்ஷ்மணன்


நானும் அதையே தான் சொல்றேன்....

ஜெட்லி... said...

@ யோ வொய்ஸ் (யோகா)


யோ....என்ன இது....விட்டா படத்தில் அந்த சபேஷ் கார்த்திக் பண்ற
வேலை கொடுத்துருவீங்க போல....ஆளை விடுங்க....

ஜெட்லி... said...

@ Chitra


பார்த்தா அப்படி தெரியலையே...


@ MANO

மாமாவா...?? என்னாது இது.....

ஜெட்லி... said...

@ Kazhudhai

//ippadi thaan climaxa pottu udaikkanum vimarsanamnra perla.
//


படத்தில் பெரும் மொக்கையே கிளைமாக்ஸ் தான்....
ஆனா நான் சொன்ன மாதிரி வராது...முடிஞ்சா படத்தை
பார்த்து தெரிஞ்சிக்குங்க அண்ணே...

shortfilmindia.com said...

m.. மாயாஜால் மோசமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது.. புது ஸ்கிரின் ஆரம்பிச்சாலும் அது அப்படித்தான்.

ஆண்டவன் கட்டளை ! said...

கிளைமாக்ஸ்...?
வெற்றி - தோல்வி ?
பாசிடிவ் - நெகடிவ் ?
பூபதியோட பாசிடிவ் எனெர்ஜி மிஸ்ஸிங்...
காரணம் - இது முன்னாடியே வரவேண்டியது...
2005 ல முடிவான கதை...
படத்துக்கு ரிலீஸ் டேட் ரொம்ப முக்கியம...
காதல் சொல்ல போயி...
சாதல் சொல்ல வேண்டியது...
எல்லாம் நேரம் தாண்ணே.........

Anonymous said...

//..."சக்சஸ்..சக்சஸ்..சக்சஸ்.." //
நூறு ரூபாய் மிச்சம்!

thanks Jetli

Raghu said...

மாயாஜாலும் மொக்கையாயிடுச்சா?!

Unknown said...

விமர்சனத்தை விடவும் தியட்டர் நொறுக்ஸ் பிரமாதம் ..

Ramesh said...

ஹஹ்ஹஹ்ஹா..சக்சஸ் சக்சஸ் சக்சஸ்...பிரமாதம்........

Kazhudhai said...

/////படத்தில் பெரும் மொக்கையே கிளைமாக்ஸ் தான்....
ஆனா நான் சொன்ன மாதிரி வராது...முடிஞ்சா படத்தை
பார்த்து தெரிஞ்சிக்குங்க அண்ணே...////

ரைட்டு விடுங்க. உங்கள மாதிரி மொக்கைய தாங்குற மனதிடம் எனக்கு கெடயாது. ஆனா மொக்கையோ....நல்ல படமோ......எல்லாவனும் கொஞ்சமாது கஷ்டப்பட்டுத் தான் படம் எடுக்குறானுங்க. அதான் சொன்னேன். க்ளைமாக்ச சொல்லிடிங்கலோன்ர ஒரு அக்கறைல.

RamkiPrabhu said...

mayajala maintanence suthama yilla....local theatre paravala pola yirukku...yippadiye pona seekkiram mooda vendiyadhudhan

சாமக்கோடங்கி said...

எவனோ ஒருத்தன் உங்க கண்ணாடிய தல வார உபயோகிச்சிருக்கான்..

அப்புறம் அந்தக் கண்ணாடிய அப்படியே வெச்சு வண்டி ஒட்டுநீகன்னா, எதுக்கால வர்றவங்க தங்களோட முகத்தப் பாக்க உதவியா இருக்கும்..