Monday, August 9, 2010

சாமுராய், எந்திரன் , டயலாக்.......!!

சாமுராய் :


நீண்ட நாட்கள் கழித்து டி.வி.யில் ஒரு படத்தை இன்டெர்வல்க்கு பிறகு படம் முடியும் வரை பார்த்தேன் என்றால் அது சாமுராய் தான். இன்டெர்வல்க்கு முன்னாடி ஏன் பார்க்கலைனா வேலை தான் காரணம். பல பேரு சொல்வாங்க சாமுராய் மொக்கை படம்னு.... ஆனா முழுசா மொக்கைனு சொல்ல முடியாது. படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சொல்ல வந்த கருத்து சரி என்றாலும்...வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்தாலும்... படத்தின் எடிட்டிங் ரொம்ப மோசம்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

சாமுராய் நான் இளங்கலை படிக்கும் போது ரீலீஸ் ஆச்சு. எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் தான் படம் பார்த்தேன். படம் பார்க்கும் போதே கடைசி கட்ட காட்சிகளில் எனக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. அதே போல் படத்தின் வசனங்கள் நச். படத்தின் மிக பெரிய பலம் ஹாரிஸ் தான். அவரின் பின்னணி இசையும் குறிப்பாக அந்த மூங்கில் காடுகளே பாட்டும் நோ சான்ஸ்.

படம் பார்த்த பிறகு என் கல்லூரியில் நண்பர்களை ஒட்ட அடிக்கடி இந்த படத்தில் வரும் ஜோசியர் காமெடி வசனத்தை மாற்றி மாற்றி சொல்லி கலாய்ப்போம்...அது " வெறும் அம்பு தான் நீ...அதை விட்ட வில்லன் யார்னு எனக்கு தெரியும்" என்பதே.படம் ஓடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முன் வந்த அஜித் நடித்த சிடிசன் படமும் ஒரு காரணம். ஆனா ரெண்டு படத்துக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கு அது ரெண்டுமே அவுட் என்பது மட்டுமே!!

இந்த படத்தில் வரும் சில பல சம்பவங்கள், வசனங்கள் நம் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்றது ஆகும். தெய்வாவிடம் தியாகு கூறும் அனுபவ மொழிகள் நன்றாக இருக்கும். இந்த தடவை படம் பார்க்கும் போது கடைசியில் மிக பெரிய (ஆ)தப்பு ஒன்றை கண்டுபிடித்தேன் அது கடைசியில் எங்கோ காட்டில் நாசர் விக்ரம் அண்ட் கோ..வை விட போகும் போது தீடிர் என்று அனிதா வந்து நிற்பார்... என்ன கொடுமை சார் இது...!!

ஆனால் இன்னொரு தடவை இந்த படத்தை டி.வி.யில் போட்டாகூட திரும்பவும் நான் பார்ப்பேன். எனக்கு இந்த படத்தில் வரும் உயிரோட்டம் மிகவும் பிடிக்கும்.... உதராணமாக...விக்ரம் சின்னி,விக்ரம் நாசர், விக்ரம் ஜெயா ரே, விக்ரம் அனிதா இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் நன்றாக இருக்கும்.ஆனா இந்த படத்தில் அவங்க இயற்ற சொன்ன சட்டம் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.....

*******************************

டயலாக் :

எக்மோர் டாஸ்மாக் நண்பர்கள் கூட்டத்தில் இருவர்...

" மச்சி நாட்டுல என்ன என்னமோ கண்டுப்பிடிக்கிறாங்க...ஆனா சரக்கு அடிச்சா வாசனை வராத மாதிரி சரக்கு கண்டு பிடிக்க மாட்டறாங்களே"

"மாமே நம்ம ஊர்ல சரக்கு அடிச்சா போதை வராத மாதிரி வேணும்னா கண்டுப்பிடிப்பாங்க....வாசனை வராத மாதிரி எல்லாம் ஹுஹம் "

###################

ரெண்டு ப்ளாகர்ஸ் பேசி கொண்டது...

"நீங்க இன்னும் நல்லா ட்ரை பண்ணா முன்னாடி வரலாம்..."

" எதுக்கு முன்னால... ட்ரெயின் முன்னாடியா இல்ல லாரி முன்னாடியானு தெளிவா சொல்லுங்க ..."

**************************************

எந்திரன் :

முதல் தடவை கேட்கும் போது பாட்டு கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது...ஆனா இப்போ திரும்ப திரும்ப கேட்டுகிட்டு இருக்கேன்... முக்கியமா புதிய மனிதாவும்...,அரிமா அரிமாவும்.... இப்பவே படம் பார்க்கும் ஆர்வம் வந்தாலும்...இவ்ளோ பெரிய பில்ட் அப் வோட படம் வருதே என்று ஒரு ஓரமா அரிக்குது... படம் வந்ததுக்கு அப்புறம் ரஜினி சன் மியூசிக்ல லைவ்ல வர்ற நாளை ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கேன்...அதே மாதிரி தியேட்டர் தியேட்டரா போவரோ என்று சந்தேகமும் இருக்கு...ஆனா ஒரே சந்தோசம் ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்...!!

ஜெட்லி... (சரவணா...)

24 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படம் ஓடாததற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதற்கு முன் வந்த அஜித் நடித்த சிடிசன் படமும் ஒரு காரணம்.//

என்னைப் பொறுத்தவரை அது ஒன்றே ஒன்றுதான் காரணம். அஜித் போடும் மாறுவேடங்கள் அந்தப் படத்திற்கு மட்டும் அல்லாமல் அடுத்த படத்திற்கும் சேர்த்து ஆப்பு வைத்தது. மற்றபடி ஆட்களை கடத்துவது தகவல் பரிமாறுவது எல்லாம் மிக நன்றாகவே இருக்கும். அநேகமாக இந்தக் கதையை சுட்டு மிக வேகமாக சிட்டிசன் எடுத்து வெளியிட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படம் வந்ததுக்கு அப்புறம் ரஜினி சன் மியூசிக்ல லைவ்ல வர்ற நாளை ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கேன்..//

இப்படித்தான் பொதிகைல ஒருமுறை வந்தார். என்ன ஆச்சுன்னு நினைச்சுப் பாருங்க

Ramesh said...

என்னளவில் சாமுராயில் குறைகள் இருந்தாலும்..நிச்சயம் உயிரோட்டமான படம்..எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

Mohan said...

சாமுராய் படம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் வரும் லொக்கேஷன்களெல்லாம் மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக அந்த மலை கிராமம்.படத்தினோட ஃபிளாஷ்பேக்கினால்தான் படம் ஓடவில்லையோ என்று தோன்றுகிறது.

Unknown said...

//" மச்சி நாட்டுல என்ன என்னமோ கண்டுப்பிடிக்கிறாங்க...ஆனா சரக்கு அடிச்சா வாசனை வராத மாதிரி சரக்கு கண்டு பிடிக்க மாட்டறாங்களே"//


இதுவும் கடைசியில் தலைவரைப் பற்றி யோசித்ததும் டாப்...

Mohamed Faaique said...

"படத்தினோட ஃபிளாஷ்பேக்கினால்தான் படம் ஓடவில்லையோ என்று தோன்றுகிறது" சிடிசன் ப்ளஷ்பக்'இல் இருந்த தாக்கம் இந்த படத்தில் இருக்கவில்லை. சிடிசன் இன்று வரை நன் பார்த்த மறக்க முடியாத படம்.

Vijays said...

நீங்கள் இன்னும் கிளிமஞ்சாரோ பாடலை கேட்கவில்லை என்று நினைக்கிறேன்

எஸ்.கே said...

நல்லாருக்கு சார் நல்லாருக்கு!
உங்க பதிவெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

RamkiPrabhu said...

Thalaiva...BAANA Kathadi..review podalaya....

முத்து வசந்தன் said...
This comment has been removed by the author.
முத்து வசந்தன் said...

///ஆனா ஒரே சந்தோசம் ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்.. ///

சன் பிச்சர்ஸ் படத்துக்கு அவரு என் கலைஞர் டிவில போய் ஜட்ஜ் ஆக போக போறார்???.. நீங்க சொன்ன காரணம் இது இல்லையே???

ஜெட்லி... said...

@SUREஷ் (பழனியிலிருந்து)

சில சமயம் கதை லீக் ஆகி விடுவதுண்டு...
அது மாதிரி ஆகி இருக்கலாம்...!!
ரஜினி தம் அடிச்சுட்டே பேட்டி தந்தாரே அப்பதானே...

ஜெட்லி... said...

@ரமேஷ்


same pinch....


@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)


நன்றி சார்...

ஜெட்லி... said...

@Mohan


இருக்கலாம் மோகன் சார்....
ஜெயா ரே கூட ஒரு டூயட் பாட்டு இருந்தா
அவங்களோட காதல் இன்னும் நல்லா புரிஞ்சு
இருக்கும்... ஆனா எனக்கு பிளாஷ்பேக் கூட
பிடிச்சு இருந்தது...

ஜெட்லி... said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றி அண்ணே....


@Mohamed Faaique


ஆமாம்...சிடிசன் பிளாஷ்பேக் நன்றாக தான் இருக்கும்...

ஜெட்லி... said...

@Vijays


கேட்டேன் நண்பரே...
பதிய மறந்து விட்டேன்...
அதுவும் சூப்பர் பாட்டு தான்...

ஜெட்லி... said...

@எஸ்.கே

நன்றி அண்ணே...



@RamkiPrabhu


இன்னைக்கு போறேன் ராம்கி...
பார்த்துட்டு வந்து சொல்றேன்...

ஜெட்லி... said...

@முத்து வசந்தன்


நீங்க சொன்ன காரணம் தான்....
நமக்கு அதில் ஒரு சந்தோசம்னு சொன்னேன்
அவ்வளவு தான்....

VISA said...

poalaam RIGHT....poatu thaaku.

ஸ்ரீராம். said...

எங்க ஏரியா ஜெயந்தி தியேட்டரில் தான் படம் பார்த்தேன்..."//

எங்கே இருக்கு?

ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்...!"//

என்ன காரணம்?

சிநேகிதன் அக்பர் said...

சாமுராய் படத்தின் அனைத்து பாடல்களும் பிடிக்கும்.

//ரஜினி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு எல்லாம் ஸ்பெஷல் ஜட்ஜ் ஆக போக மாட்டார் என்பதே.....என்ன காரணம்னு உங்களுக்கே தெரியும்...!!//

என்ன காரணம். என்ன காரணம்.

DRACULA said...

nice post thalaivar

Prasanna Ramachandran - PXR said...

Jaya sheel and not Jaya Ray thala